தேவயானி வழக்கை அமெரிக்கா ரத்து செய்தது ஏன் ?
சங்கீதா போன்ற சாமானியர்களுக்கு எங்கேயும் நீதி கிடைத்து விடுவதில்லை. அமெரிக்க எஜமான்களும் இந்திய ஏஜெண்டுகளும் நடத்திய அக்கப்போர் சண்டையில் அவர் ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
அசீமானந்தாவை காப்பாற்றத் துடிக்கும் பாஜக – காங்கிரஸ்
“பயங்கரவாத செயல்கள் தொடர்பாக எனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தேசிய புலனாய்வு ஆணையம் என்னை ஏன் கைது செய்யவில்லை?”
தரகு முதலாளிகளின் சேவைக்கு மோடி – ராகுல் போட்டி !
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையால் மக்கள் அவதிப்படும்பொழுது, மோடியும் ராகுலும் ஹைடெக் சிட்டி, பிராட் பேண்ட் இணைப்பு என ஜிகினா காட்டுகிறார்கள்.
பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா ?
காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.
மோடி : 24 X 7 தேசிய இம்சை !
பிகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்" என்றார் மோடி. பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது பீகார் வந்தார் ?
எழுவர் விடுதலை: ஜெயாவின் கபடத்தனம் காங்கிரசின் தமிழின விரோதம்
"இந்திய அரசு ஈழப்போராட்டத்தின் எதிரி" என்ற அரசியல் கருத்து எந்த அளவுக்குத் தமிழக மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டதோ, அந்த அளவுக்குத்தான் தூக்கு தண்டனை எதிர்ப்புக் குரலும் தமிழகத்தில் எழுந்தது.
பா.ஜ.க.விடம் பம்மும் தமிழினவாதிகள் !
இந்துமத வெறியர்களை நாம் தமிழின பகைவர்கள் என்று வரையறுக்கிறோம். என்றால் வைகோ, சீமான், பழ.நெடுமாறன் போன்றவர்களை தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அடிப்பொடிகள் என்றுதான் அழைக்க வேண்டும்!
ஆர்.எஸ்.எஸ்-ன் பாம் கா பத்லா பாம் – குண்டுக்கு பதில் குண்டு
சில இந்துக்களும் கொல்லப்பட்டவர்களில் இருக்கிறார்கள் என்று நீரா சுட்டிக் காட்டிய போது, “கடலையோடு சேர்த்து சில புழுக்களும் அரைபடத்தான் செய்கின்றன” என்று பழமொழி கூறியிருக்கிறார் பிரக்யா சிங்.
மூன்றாவது அணி – இந்தியாவின் விஜயகாந்த் அணி ?
யார் பிரதமர் எனும் போட்டியில் ஜெயலலிதா, முலாயம், நிதீஷ் என்று பல அரசர்களும், அரசிகளும் அணிவகுக்கும் போது சீட்டுப் போட்டு பார்க்கும் புரோகித வேலையை காரத் செய்யவிருப்பதால் கொஞ்சம் கஷ்டம்தான்.
மோடியின் குஜராத்தில் அசீமானந்தாவின் கிறித்தவ வேட்டை
நான் விரைவில் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் வந்த பிறகு, உங்கள் வேலையை பார்த்துக் கொள்கிறேன். நிம்மதியாக இருங்கள்” என்று மோடி தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா கூறுகிறார்.
அசீமானந்தா – ஒரு காவி பயங்கரவாதியின் வரலாறு
“இந்து மத வட்டத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நபரும் ஒரு நபர் குறைவு என்று மட்டுமில்லை, ஒரு எதிரி அதிகம் என்றும் பொருள்படும்”
மூவர் தூக்கு ரத்து – பார்ப்பன தினமலருக்கு மட்டுமா பிடிக்கவில்லை ?
தூக்கு மேடையிலிருந்து மூவர் காப்பாற்றப்பட்டிருந்தாலும், அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்பிய காரணங்கள் இங்கே நியாயமென்றும் நீதியென்றும் இன்னமும் ஆட்சி செய்கின்றன.
மிளகுத் தண்ணீர் ஜனநாயகம்
இந்தச் சண்டைகள் இல்லையென்றாலும் பாராளுமன்றம் ஒரு அரட்டை மடம்தான், பொழுது போக்கு ரோட்டரி கிளப்தான் என்பதில் மாற்றமில்லை.
ஆம் ஆத்மி பதவி விலகல் – எகிறுது டிஆர்பி பதறுது பாஜக !
பாரதிய ஜனதா கவலைப்படுமளவு அவர்களது ஆதரவுத் தளத்தை ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் குறிவைத்து தாக்கியது.
நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால்?
தனியார் முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதற்குத் தடையாக உள்ள அனைத்தையும் அகற்ற வேண்டும் என்பதே தனது பொருளாதாரக் கொள்கை என்று ராய்டர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சூடம் அடித்துச் சத்தியம் செய்தார், கேஜ்ரிவால்.