மகாராஷ்டிரம்: காவி, காக்கி, சாதி மூன்றும் ஒரே நிறம்!
இடைநிலைச் சாதிகளின் மேட்டுக்குடியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராகக் கவுரவக் கொலைகள் நடத்துவதுடன், இந்துவெறி அமைப்புகளின் முன்னணியில் நின்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தையும் நடத்துகிறார்கள்.
ஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்!
ஈழத்தமிழன படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! நூரம்பர்க் போர்க் குற்ற விசாரணையைப் போன்றதொரு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுப்போம்!
”இப்படியொரு சோகத்தை நான் கண்டதேயில்லை”
கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.
பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.
ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!
வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.
இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதீய ஜனதாவின் அழைப்பு!
"என் பெண்ணை எதுவும் செய்து விடாதீர்கள். நான் பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்று அவள் இந்துக்களிடம் கெஞ்சினாள். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். பிறகு ஒருவர் பின் ஒருவராக பத்து பேர் அவளைக் கற்பழித்தார்கள்.
இத்தாலி வீரர்கள் தப்புவதற்கு ரூட்டு போட்டது யார்?
இத்தாலி அரசுக்கு இப்படி ஒரு ஆலோசனை கொடுத்து அதற்கேற்ப இந்திய நீதிமன்றங்களை உபயோகித்திருப்பது எல்லாம் கொட்டை போட்ட ரா மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் என்பதில் சந்தேகமில்லை.
ஈழம் : தேவை முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை!
உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்புவதற்கு மாறாக, ராஜபக்சேக்களின் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகளின் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப் போராடுவதுதான், சிரமமானது என்றாலும் அவசியமானது, உறுதியானது, சரியானது.
ஜக்கி வாசுதேவை ஆதாரங்களுடன் தோலுரிக்கும் சவுக்கு !
ஜக்கி வாசுதேவ் மோசடியாக எப்படி ஒரு ஆன்மீக தொழிலதிபரானார் என்பதை, அரசு ஆணைகள், புகைப்படங்கள் என விரிவான ஆதாரங்களுடன் சவுக்கு வெளியிட்டிருக்கும் இந்தக் கட்டுரையை படிப்பதோடு பரப்புமாறும் பரிந்துரைக்கிறோம்.
பா.ஜ.க-காங் கூட்டணி அரசுக்காக அப்சல் குரு கொலை – அருந்ததி ராய்
காஷ்மீர் மதராசாக்களில் கொட்டும் சவுதி அரேபிய (சவுதி அரேபியா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு ) பணத்தை இந்த அரசாங்கம் கண்டும்காணாமல் இருக்கும் மர்மத்தை எப்படி புரிந்து கொள்வது?
‘ஆண்மையை நிலைநாட்டிய’ பொறுக்கிக்கு என்ன தண்டனை?
'அவனை நீதிமன்றத்தில் தண்டிக்க முடியா விட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால், என் அடிமனதில் குமுறிக் கொண்டிருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டேன்' என்றார் அப்பெண். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
தினமலர் கஞ்சா அடித்து விட்டு எழுதுகிறது!
தமிழ்நாட்டில் உண்மையின் உரைகல் என்ற முத்திரையுடன் வெளியாகும் பார்ப்பனியத்தின் ஊதுகுழலான தினமலர் ஹைதராபாத் குண்டு வெடிப்பு தொடர்பாக வெளியிட்ட இரண்டு செய்திகளை வினவு வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சரா, ரவுடியா ?
“நான் ஹரியானாவின் மகாராஜா. என் ஏரியாவிலேயே பிரச்சனை பண்ணுவதற்கு உங்களுக்கு என்ன தைரியம்!" என்று முழங்கினாராம் ஹூடா.
அக்கிரகாரம், சேரியைப் பிரித்த அரசியல்வாதி யார்?
திருவரங்கரத்து ஐயங்கார் பெண்ணை ஒரு பறையருக்கும், இப்படி நாயுடு, முதலியார், ரெட்டியார், செட்டியார் வகையறாக்கள் வன்னியர், தேவர், பள்ளர், நாடார் என்று கலந்தாலும் கூட 'இந்துக்கள்' ஒற்றுமையாக ஒன்றிணையலாமே? யார் தடுத்தது?
“தூக்கத்தை கெடுத்த திருமணம்!”
ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்படி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் - இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.