பெட்ரோல் விலை உயர்வு : IOC அலுவலகம் முற்றுகை!
இன்று 29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அலுவலகம் முற்றுகை. அனைவரும் வருக!
விகடன்-மதன் லடாய்:அம்பிகளின் காரியவாதக் குடுமிபிடிச் சண்டை!
ஜெயா காலில் விழும் அதிமுக அடிமைகளாவது ஒரிரு கணங்கள் மட்டும்தான் அப்படி நடந்து கொள்கிறார்கள். ஆனால் மதன் போன்ற அறிவாளி அடிமைகளோ தங்களது முழு மூளையையும் பாசிச ஜெயாவுக்கு தாரை வார்த்திருக்கிறார்கள்.
நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!
காந்தியம் தலித்தியம், பெரியாரியம் என்ற பேச்செல்லாம் ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பதற்கு என்பது அம்பலமாகிவிட்ட, தேர்தல் ஜனநாயகமும் கிழிந்து கந்தலாகித் தொங்குகிற இவ்வேளையில் மாற்றுப் பாதை நக்சல்பாரி மட்டுமே
சத்தீஸ்கர்:கழிப்பறைக் காகிதமானது சட்டத்தின் ஆட்சி!
மாநிலத்தைக் கூறு போட்டு விற்பதற்கு எதிராகப் போராடும் பழங்குடியின மக்கள் மீது பாய்வதற்காகவே கட்டவிழ்த்துவிடப்பட்ட போலீசு, இப்பொழுது செக்கு எது சிவன் எது என்ற வேறுபாடின்றி, அனைத்துச் சட்டபூர்வ அமைப்புகள் மீதும் விழுந்து பிடுங்கி வருகிறது.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: இன்னுமொரு அரசு பயங்கரவாத அமைப்பு!
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் மூலம் மாநில அரசுக்கு போட்டியாக மைய அரசு களத்தில் குதிக்கிறது, தனது ஏரியாவில் ஒரு புதிய தாதா நுழைவதை விரும்பாத பழைய தாதாக்கள் கூச்சலிடுகிறார்கள்
‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?
’தமிழன் எங்கெல்லாம் போயிட்டான் தெரியுமா?!’ என்று சவடால் விடும் இந்தப் பேர்வழிகள் போயஸ் கார்டனைத் தாண்டி போக முடியாத மர்மம் என்ன..?!
வறுமைக்கோடு வரையறை: ஏழைகளை ஒழித்துக்கட்ட ஓர் எளிய வழி!
ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி நலத் திட்டங்களை ஒழிப்பதுதான், அரசின் திட்டமாக உள்ளது இந்த வறுமைக்கோடு வரையறை, ஆட்சியாளர்களின் வக்கிர புத்தியைத்தான் காட்டுகிறது
“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”
பேருந்துக் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என அடுத்தடுத்து மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்துவிட்டு, போதாக்குறைக்கு தற்பொழுது மின்கட்டண உயர்வு என்ற இடியையும் மக்கள் மீது இறக்கியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு.
பாசிச ஜெயாவின் பிராண்ட் இமேஜுக்கு 25 கோடி வெட்டி செலவு!
பாசிஸ்டுகள் எத்தனை வயதானாலும் தங்களது முகத்தை கட்டவுட்டிலோ , ஹோர்டிங்கிலோ, ஊடகங்களிலோ எப்போதும் பார்த்து மகிழ்வார்கள். இதில் சாதனை படைத்தவர் ஜெயலலிதா.
போலி சாமியார்-நல்ல சாமியார் பிழையான வழக்கு! (இறுதிப்) பாகம் 6
நித்தியானந்தா ஆதீனமாகக் கூடாது என்ற பிழையான கோரிக்கையை வைத்தால், நல்ல ஆதீனம், நல்ல சாமியார் என்ற முறையில் பார்ப்பனியத்தின் அநீதிக்கு துணை போன தவறினைச் செய்தவர் ஆவோம்.
நித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காரரா? பாகம் 5
நித்திக்கு தொண்டை முள்ளாக பாலியல் குற்றச்சாட்டு நிற்பதை மறுக்க முடியாது. தாராளமய சிந்தனை கொண்ட 'முற்போக்காளர்கள்' பலரும் இதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும்.
நித்தி: மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்! பாகம் 4
இந்து மதத்திற்கு எத்தனையோ சோதனைகள் இருக்கும் போது மயிரெல்லாம் ஒரு பிரச்சினையா என்று நித்தி கேட்பதில் நியாயம் இருக்கிறது. இவைதான் சைவ ஆதீன மகா சன்னிதானங்கள் கண்டு பிடித்த மரபு மீறல். எனில் எது மரபு ? எவை மரபு மீறல் ?
நித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்! பாகம் 3
பார்ப்பனியத்தின் தலைமை பீடமாக திகழ்ந்த சங்கர மடத்தை அவாள்களும் சரி, அவாள்களின் அரசியல் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸூம் சரி என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்? பாகம் 2
ஆட்டத்தை இருவரும் ஆடுகிறோம், என்னை மட்டும் தனிமைப்படுத்த நினைக்காதீர்கள் என்பதே நித்தியின் விமரிசனம். ஒரு வேளை நித்தி இதைக் கிளப்பவில்லை என்றாலும் பிரச்சினை இதுதான், யார் யோக்கியர்கள், எது அளவு கோல்?
நித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு? பாகம் 1
மதுரை ஆதீனமாக 'பிட்டுப் புகழ்' கார்ப்பரேட் சாமியார் நித்தியானந்தா நியமிக்கப் பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. தமிழகத்தில் செயல்படும் இந்துமதவெறி அமைப்புகளுக்கு இது ஒரு மரண அடிச் செய்தி.