கூடங்குளம் அணு உலையை மூடு!
வெறியாட்டம் போடும் போலீசை திரும்பப் பெறு!
ம.க.இ.க, பெ.வி.மு தோழர்கள்
சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு
கருப்புக் கொடி!
திருச்சி விமான நிலையத்திலிருந்து சீரங்கத்துக்கு ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது, வரும் வழியில் டோல்கேட்டில் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள். அம்மாவை வரவேற்பதற்காக சென்று கொண்டிருந்த அ.தி.மு.க பொறுக்கிகள், தோழர்களைச் சூழ்ந்து கொண்டு மிருகத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க ரவுடிகளுக்கு தோழர்களைப் பிடித்துக் கொடுக்கும் வேலையினை கியூ பிரிவு போலீசு எலும்பு தின்னிகள் செய்தனர். கட்டையால் மண்டையில் தாக்கப்பட்ட பெண் தோழர்கள் ரத்தம் வழிய போராட்டத்தை தொடர்ந்தனர்.
எத்தனை பேர் சூழ்ந்து கொண்டு அடித்தபோதிலும் எதிர்த்துப் போராடிக் கொண்டே முழக்கமிட்டார்கள தோழர்கள். அம்மாவின் கண்ணில் கருப்புக் கொடி பட்டுவிட்டால், தங்கள் கதி அதோகதிதான் என்பதால், நடுக்கம் கொண்ட பேடிகளான அதிமுகவினரும், போலீசும் தோழர்களை அமுக்கிக் கைது செய்தனர். சுமார் 25 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஊடகங்களுக்குத் தெரியாமல் தடுத்துவிட வேண்டும் என்ற அதிமுக அடிமைகளின் முயற்சி பயனற்றுப் போனது.
கூடங்குளம் இடிந்தகரை மக்களுடைய போராட்டத்தை ஆதரித்தும் பாசிச ஜெ அரசின் போலீசு ஆட்சியை எதிர்த்தும் தங்களது போராட்டம் தொடரும் என்று ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளும் அறிவித்திருக்கின்றனர்.
____________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- இடிந்தகரை மக்களுடன் கரம் கோர்ப்போம்!
- கூடங்குளம் நகரில் போலீசு நடத்திய வெறியாட்டம் – உரையாடல்!
- கூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் !!
- உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்!
- கைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு!
- இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்!
- அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’!
- கூடங்குளம்: ரயில் மறியல், துப்பாக்கி சூடு, சாலை மறியல்…..
- கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
- கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
- கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
- நேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை நேரடி ரிப்போர்ட்!
- மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!
- கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
அதிமுக காலிகளை எதிர்த்து துணிவுடன் போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!
மக.இ.க.ஏன் கூடங்குளத்திற்கு எதிரான இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடாது…நீங்கள் மட்டும் போராட்டக்குழு அமைத்து போராடுவதை விடஅனைத்து மக்களையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செய்தால் வெற்றி சாத்தியமாகலாம் அல்லவா….அதற்கான முயற்சியை செய்யலாம் அல்லவா…
“ஊடகங்களுக்குத் தெரியாமல் தடுத்துவிட வேண்டும் என்ற அதிமுக அடிமைகளின் முயற்சி பயனற்றுப் போனது.” எந்த ஊடகத்தில் வெளிவந்ததற்கு மகிழ்ச்சி கொள்கிறீர்கள் என்பதை சொல்ல முடியுமா ?
சேல்,
எனக்குத் தெரிந்து
நக்கீரன் இணையதளத்தில் வந்திருக்கிறது
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=82521
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=82518
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=82517
தட்ஸ் தமிழில்
http://tamil.oneindia.in/news/2012/09/13/tamilnadu-jaya-visit-srirangam-today-161331.html
மாலை தினசரிகள் அனைத்திலும், வார இதழிலும் வரும்.
கூடங்குளத்தில் வந்து பார்க்க இயலாத முதல்வர் செயலலிதாவுக்குச் சீரங்கத்தில் மட்டும் பாசம் பொங்கியதோ! அறிவியல் தொடர்பான வினாக்களுக்கு விடை தராத முதல்வர் வீதி வீதியாய் உலா வருவது ஏனோ?
தற்போது தோழர்களின் நிலை என்ன? DPI முற்றுகையில் இருந்தே அந்த பார்ப்பனப் பன்றிக்கு நம் அமைப்புகள் மீது ஏற்ப்பட்டுள்ள பயம்தான் அப்போது போலிஸ் வன்முறையாக வெளிப்பட்டது. தோழர்கள் விரைவில் காவலில் இருந்து வெளி வருவது அவசியம்
சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் திருச்சியில் இப்படி நடக்குமென்று. சிறை சென்ற தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
கிடா வெட்டு தடைச்சட்டத்தை திசைமாற்றி வெட்றியடைய செய்தமாதிரி இதையும் கண்ணில்படுமாரு திட்டமிட்டுக்கவெண்டும்.தோழர்களுக்கு புரட்சிகர வாழ்துகள்