கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
கூடங்குளம் அணு மின்நிலையம் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்குவதற்கு, அணு உலைகள் தொடர்பான பொய்களைப் பிரச்சாரம் செய்வது, போராட்டக் குழுவில் பிளவை உண்டாக்குவது, மதரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என அவதூறு செய்வது எனப் பலமுனைகளில் தாக்குதல் தொடுக்கப் படுகிறது
குடி: கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை!
1947 ஆகஸ்ட் 15 அன்று நிகழ்ந்த அதிகார மாற்றத்துக்கு பின்னர், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு செல்லும்போது, நில வருவாய்க்கு அடுத்தபடியாகக் குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது. இன்றைய தமிழக அரசின் வருவாய் நிலையும் குடி வழியாக வரும் வருவாயை நம்பியே இருக்கிறது.
மாருதி தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு கருத்தரங்கம் – வாருங்கள்!
சென்னை பூந்தமல்லியில் நாளை 20.11.2011 அன்று மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்தும் கருத்தரங்கம்! அனைவரும் வருக!!
பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!
இந்த விலை உயர்வினால் இனி உழைக்கும் மக்கள் மாத செலவில் 2000 ரூபாய் வரை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
சமகால அரசியலில் கருப்புப் பணம்!
சட்ட விரோதமாக நாட்டை ஏய்ப்பதற்கு நூற்றுக் கணக்கான கதவுகளை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கும் பணம் திறந்து விடுகிறது. பல லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்பிலான இணை பொருளாதார நடவடிக்கைகளை செலுத்துகிறது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?
கிங்பிஷர் விமான கம்பெனி காற்றில் கரைந்த கற்பூரமாய் ஆவியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து சாராய சாம்ராட் விஜய் மல்லையாவுக்கு இந்நேரம் போதை தெளிந்திருக்க வேண்டும்.
ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!
ஈமு கோழியின் இறைச்சி தொடங்கி இறகு வரை அனைத்தையும் விற்று இலாபம் பார்க்கலாம் என்ற விளம்பரத்திற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது.
தண்ணீர்க் கொள்ளையை தடுத்து நிறுத்திய மக்கள் போராட்டம்!!
மக்கள் திரள் போராட்டம் என்பது பகுதியளவிலும் நடைபெறக் கூடியது. பகுதி மக்களை ஒன்று திரட்டி அவர்களது இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களை தடுத்து நிறுத்த முடியும் என்பதை விருத்தாசலம் பகுதி மனித உரிமை பாதுகாப்பு மையம் சமீபத்தில் நிரூபித்திருக்கிறது.
வால்வோ தொழிலாளர்களின் போராட்டம்: தொழிலாளர் வர்க்கம் கற்கவேண்டியது என்ன?
பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டுவருகிறது. பெங்களூர் போன்ற பெரு நகரங்கள் அவற்றின் முதன்மை இலக்காக உள்ளன. தொழிலாளர் உரிமைகள், சட்டங்கள் எவற்றையும் மதிப்பதில்லை. மிகக் கொடியமுறையில் அவர்களை துன்புறுத்தி வருகின்றன.
நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்: நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி!
1947 தொடங்கி 2004 முடிய, ஏறக்குறைய 2.5 கோடி ஹெக்டேர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு, 6 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்
உழைப்பு சுரண்டலால் கசந்து போன பாதாம் பருப்பு!
பணக்காரர்கள் உண்டு மகிழும் "பாதாம் பருப்பிற்கு" பின்னால் திரைமறைவில் உள்ள குழந்தைகள் உழைப்பு சுரண்டலை விவரிக்கும் கட்டுரை
ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!
பேராசிரியரின் அறிவு மற்றும் சாதியச் சுரண்டலுக்குள்ளாகி, ஆய்வில் பெருவளர்ச்சியெதுவுமில்லாமல் கல்வி உதவித்தொகைக்காக நித்தம் போராடி, சமூகரீதியான உறவுகளையும் நட்புகளையும் இழந்து உள்நோக்கியாகி, குடும்பத்தினரால் 'சம்பாதிக்கத் துப்பில்லாதவன்' என்று முத்திரைகுத்தப்பட்டு, நிரந்தர வருமானமில்லாததால் திருமணம் என்ற கனவே கானல் நீராகி, எதிர்காலம் பற்றிய எந்த நம்பிக்கையுமற்று மனச்சிக்கலுக்கும் உள்ளாகி, செயல் வீரியமிழந்த நடைபிணங்களாகவே ஐஐடி ஆய்வுமாணவர்கள் வாழ்கின்றனர்.
குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!
மோடியை விவசாயத்தில் வளர்ச்சியைச் சாதித்தவர் என்றும் கொண்டாடுகின்றனர். விவசாயிகளுக்கு குஜராத் சொர்க்கபுரியா? மோடி அரசு விவசாயத்தில் அப்படி என்ன ‘புரட்சியை’ச் செய்துள்ளது?
இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்!
வெடிமருந்து நிரம்பிய கப்பல் தீப்பிடித்து எரிவதைப் போன்ற நிலைமையில்தான் இங்கிலாந்து உள்ளது என்பதை அங்கு நடந்த இளைஞர்களின் கலகம் எடுத்துக் காட்டியிருக்கிறது
வங்க தேசம்: கொத்தடிமை தேசம்!
ஏழை நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் எத்தகையதொரு சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி அவலத்தில் தள்ளப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் வாழ்நிலை, ஒரு வகைமாதிரியாக அமைந்துள்ளது.