இலங்கையின் கொலைக்களங்கள் – 2: முழுமையான தமிழ் விளக்கத்துடன் !
முழு நிகழ்ச்சியின் தமிழாக்கம் - வருணணை, நேர்காணல், விளக்கம், அனைத்தும் இடம்பெற்றுள்ளது. தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு இது உதவும், உங்கள் நட்பு வட்டத்தில் இதை விரிவாக கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.
ஈழத்தமிழ் ரத்தம் – புத்தரின் எலும்பு – ராஜபக்சேவின் பக்தி!
இலங்கைக்கு போர் உதவிகளோடு மதப்புனித உதவிகளையும் இந்திய அரசு செவ்வனேயும், செலவழித்தும் செய்து வருகிறது.
ஈழமா , பதவியா – பாமகவின் பாசப் போராட்டம் !
அன்புமணி ஒரு துணை அமைச்சர் பதவியாவது கிடைத்து விடாதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு டெல்லிக்கு ஃபிளைட் பிடித்து போயும் எதுவும் விழாமல் வெறுங்கையோடு மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
சத்தீஸ்கர் : ‘அறம்’ பேசும் தலைவர்கள் !
ஊழல் பேர்வழிகளும், பாசிசத்தின் தயவில் வீரம் பேசும் தலைவர்களும் ஜனநாயகம் குறித்தும், தைரியம் குறித்தும் சிரிக்காமல் பேசுவதுதான் நம்மை அச்சுறுத்துகிறது.
ஈழம் : ரங்கநாதன் தெருவில் பெண்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!
அதிரடியாகவும் முன் அனுமதி பெறாமலும் பெ.வி.மு. தோழர்கள் நடத்திய இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தால், அரசியல் கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து அங்குதான் நடத்திக்கொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்திக்கும் போலீசின் முகம், கொஞ்சம் மாறித்தான் போயிருந்தது!
“நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்!
திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம்
ஈழம்-இந்தியா-தேர்தல் புறக்கணிப்பு !
ஈழத்தின் மீதான போரை வழிகாட்டி நடத்தி வருவது இந்திய அரசுதான் என்பது இன்று தெளிவாகவே அம்பலமாகிவிட்டது. இந்தியா இந்தப் போரை ஏன் வழிநடத்த வேண்டும்? அதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்? என்ற கேள்விகளுக்கான உண்மையான பதிலைத் தமிழக மக்கள் தெரிந்துகொண்டால்தான், இந்தப் போரை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை மிகச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும்.
வை.கோ., நெடுமாறன் போன்றோர் இலங்கை விரித்த வலைக்குள் இந்தியா சிக்கிக் கொண்டுவிட்டதாக நெடுங்காலமாகக் கூறி வருகிறார்கள். ‘வல்லரசாக’ வளர்ந்து வரும் இந்தியா, ஒரு குட்டி...
மன்மோகன் – ராஜபட்சே கொடும்பாவி எரிப்பு
திருச்சி: சனவரி 30 அன்று திருச்சி தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தோழர். சேகர் தலைமையில் பெண்கள் விடுதலை முன்னணி, ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் காந்தி மார்க்கெட நான்கு வழிசாலையை மறித்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்பகுதியின் போலீசு ஆய்வாளர் மறியலை நடத்தவிடாமல் தடுக்கவே கைகலப்பும் மோதலும் நடந்தது. ஆத்திரம் கொண்ட பெண் தோழர்கள் ஆய்வாளரை முற்றுகையிட்டனர். நிலைமை மோசமாவதைக் கண்ட போலீசு பின்வாங்கியது. காலை 10.15 முதல் நான்கு வழிச்சாலை மறிக்கப்பட்டதால் நகரின் போக்குவரத்து பாதிக்கப் பட்டதெனினும் மக்கள் யாரும் முகம்...
இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?
இந்த ஆவணப்படம் நமது அரசியல் வழிமுறையில் சரியானதை ஏற்கவும், தவறானதை நிராகரிக்கவும் பயன்பட வேண்டும். மாறாக அது வெறுமனே மனிதாபிமான இரங்கலாக சிறுத்துப் போனால் அதனால் எந்தப் பயனுமில்லை.
ஈழம்: துயரங்களின் குவியல்!
இப்போது இதை எழுதுவதுவதை விட அந்த பதட்டமான நிமிடங்களில் உயிர் போகும் வேதனையாக இருந்தது. குண்டடிபட்டு உயிர் போனால் பரவாயில்லை. கை, கால் ஊனமாக ஓடவும் முடியாமல்,
ஈழம் : திருச்சியில் புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!
தமிழ் மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வோடு விளையாடும் இத்தகைய போக்குகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரித்து ம.க.இ.க., பு.மா.இ.மு மற்றும் தோழமை அமைப்பினர் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது!
இறுதி வெற்றி பெறவேண்டுமானால் மக்கள் அரங்கிலும், அரசியல் அரங்கிலும் போராட்டங்கள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற வேண்டும். அதை எள்ளி நகையாடும் அரசியலற்ற கோமான்களின் கையில் இந்தப் போராட்டம் சிக்கிவிடக்கூடாது. தற்போதைய நிலைமை அத்தகைய அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து!
முள்ளிவாக்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு கண்காணிப்பு முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகின்றனர். இப்படி தட்டிக்கேட்க ஆளின்றி இலங்கை அரசு நடத்திவரும் அட்டூழியங்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஆத்திரத்தை தோற்றுவித்து அவர்களும் மேலைநாடுகளில் தொடர்ச்சியாக போராடி வந்தனர். இது இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவு நெருக்கடியைத்...
ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்… ஆரம்பம்!!
இந்தியாவில் காந்தியை பின்பற்றுபவர்களும் சரி, இலங்கையில் புத்தரின் பெயரால் ஆட்சி செய்பவர்களும் சரி இருசாராருமே எங்களின் இரத்தத்திலும், கண்ணீரிலும்தான் அதிக சந்தோசம் காண்பார்கள் போலும்.
ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள் !
இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன. கை கால்களை இழந்து, முடமாகி, படுகாயமுற்று,மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் வதைபடும் மக்களை பார்த்த வண்ணம் இருக்கிறோம். பாலஸ்தீன் போல உலகநாடுகளின் கவலைக்குரிய பிரச்சினையாக ஈழம் இருக்கவில்லை. இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான...









