Thursday, June 13, 2024
பகத்சிங், காங்கிரசின் துரோகத்தால் அணைக்கப்பட்ட விடுதலைத் தீயை விசிறி எழச் செய்த சூறாவளி. விடுதலைப் போராட்ட உணர்வை இளைஞர்களின் இதயத்தில் விதைத்திட தன் மரணத்தையே செயல்திட்டமாக மாற்றிக் கொண்ட போராளி.
இராமப்பிரம்மத்தின் புதல்வரான தியாகையர் தெலுங்கு நாட்டுக்குப் போனதில்லை. தெலுங்கு பாட்டைக் கேட்டதில்லை. கேட்டதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு. தமிழ் இசை முறை.
சங்கு சக்கரங் கதிகலங்கிடச் சனாதனத்தின் குலைநடுங்கிட கங்கை வார்குழல் 'திங்குதிங்'கெனச் சைவாதீனம் பதை பதைத்திட அசுர கானம் முழங்குகின்றது அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.
இதைக் கேட்கும் போது 'நாம் போடும் வெள்ளைச் சட்டை, எத்தனையோ உழைக்கும் மக்களின் வியர்வையின் பலன்' என்ற குற்ற உணர்வு எழாதவர்கள் இருக்க முடியாது.
இன்று மெரினாவில் போராட்டத்தைக் கலைத்து விட்டதாக அரசு கருதலாம். ஆனால் மக்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டனர். அந்த மாணவர்கள் மீண்டும் வருவார்கள். மெரினா மீண்டும் உதயமாகும்.
அடிமைத்தனம் - வருணதருமம் - இந்து ராஷ்டிரம்; பரப்பிரம்மம் - அத்வைதம்'' என்று நாடகமாடியவர்களிடமிருந்தும, ஆடிக் கொண்டிருப்பவர்களின் இதயத்திலிருந்தும் சிம்பனி ஊற்றெடுக்க முடியாது.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இசையில் பாரதிதாசன் பாடல் குறுந்தகடில் இடமபெற்ற" பாரடா உனது மானிடப் பரப்பின்" பாடலுக்கு மெரினா காட்சிகளை இணைத்திருக்கிறம். பாருங்கள்... பகிருங்கள்...
கீரை வடை, வத்தக்குழம்பு, அக்காரவடிசல் போன்ற வழக்கமான அக்கிரகார அயிட்டங்கள் கடுமையாக சாதகம் புரிய வந்துள்ள வித்துவான்களுக்கும் தொடை தட்ட வந்திருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் போதிய தெம்பை வழங்குகின்றன.
புத்தார்வத்தை நோக்கிய எத்தனத்தில் சலிக்காமல் ஈடுபடும் வாழ்வின் ஓர் மாலையில், ஸ்ரேயா கோஷலின் பாடல்களோடு கைகோர்த்து லயிக்கும் போது, அழகும் வலிமையும் இணைந்து எழுகின்ற உயிர்ப்பான இசையருவியை விரும்பாதவர் யார்?
இதுதான் முதலாளித்துவம் ஒரு மைக்கேல் ஜாக்சன் என்ற கலைஞனை உருவாக்கி பின் கொன்ற கதை.
ஆனானப்பட்ட அப்பரே கூட அல்சர் பிரச்சினைக்காக சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர்தானே! அல்சருக்கு மருத்துவரைப் பார்க்காமல் மதத்தை ஏன் மாற்றினார் என்று இந்து அபிமானிகள் கேட்க மாட்டார்கள் அல்லவா?
கோவன்... தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும்.
இந்துஸ்தானி வந்தே மாதரம், பாப் வந்தே மாதராக உருமாறியதெப்படி?
தூக்கம் வந்துருச்சி அப்பா இன்னும் வரவில்லை. எங்கே அவர் விழுந்து கிடப்பாரோ தெரியல.அப்பாவை கெடுத்துட்டியே அம்மா. இந்த கடைய மட்டும் யாராச்சு மூடுனாக்க தேவல.
உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை இடியாய் பிளந்ததே நக்சல் பரி - மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி.

அண்மை பதிவுகள்