நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து, சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதுகூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது நான் ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?
தன் வாழ்வில், வெளிச்சமில்லை, தகுந்த ஊதியமில்லை, வேலை நிரந்தரமில்லை, தாழ்வாரம் சொந்தமில்லை.., ஊருக்கு வெளிச்சம் தர, உழைக்கும் அந்த தொழிலாளர்க்கு, ஒராயிரம்.. நன்றிகள் !
விவசாயத்தையும் விவசாயிகளையும் செங்கால் நாரைகளையும் பைங்கால் தாவரங்களையும் விரட்டிவிட்டு வேதாந்தாவுக்கும் அதானிக்கும் விளைநிலங்களை இரையாக்கும் தனியார் மயம் தாராள கார்ப்பரேட் மயம்தான் நம் வாழ்வைக் கருக்கும்வன்மம்.
எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள். அவர்கள் அந்தக் கரடுமுரடான மார்க்கத்தில் செல்லும்போது நாங்கள் அவர்களைப் புறக்கணித்ததற்காக, எங்களைச் சரியானபடி அவர்கள் தண்டிப்பார்கள்.
புயல்பொதுவாகத்தான் அடிக்கிறது ஆனால்அது எப்போதும் ஏழைகளை மட்டுமே மீள முடியாமல் ஏன் வதைக்கிறது? இது இயற்கையின் ஏற்பாடா இல்லை ஏற்றத்தாழ்வான அரசியல் சமூக அமைப்பின் நிலைப்பாடா?
அந்தச் சனியன்கள் அவர்களை நேருக்கு நேராக விரட்டியது. எனினும் மலையைப்போல் நின்றார்கள். தம்பிகள்! கொஞ்சம் கூட அசையாமல் அஞ்சாமல் நின்றார்கள்...
அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள், பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள். ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்தது போல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.
இயக்குநர் முறுக்குதாஸும், எழுத்தாளர் சுயமோகனும், உதவி இயக்குநர்களும் கதை டிஸ்கசனில் அமர்கிறார்கள். ஹீரோ ஓபனிங் சீன். கள்ள வோட்டு அறம்….காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் ! நாடகம் - பாகம் 2
ஏதோ ஒரு கரிய பறவை தனது அகன்ற சிறகுகளை விரித்து உயர்த்திப் பறப்பதற்குத் தயாராக நிற்பது போலிருந்தது அந்தக் கூட்டம். அந்தப் பறவையின் அலகைப்போல் நின்றிருந்தான் பாவெல்….
பாவெல் தன் கையை உயர்த்திக் கொடியை ஆட்டினான். பல பேருடைய கைகள் அந்த வெண்மையான கொடிக்கம்பைப் பற்றிப் பிடித்தன. அவற்றில் தாயின் கரமும் பங்கெடுத்துக் கொண்டிருந்தது. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் பகுதி 27
காலையில் போலீஸ்காரர்கள் தொழிலாளர் குடியிருப்பு வட்டாரத்துக்கு வந்து, அந்த அறிக்கைகளைக் கிழித்தெறிவார்கள். சுரண்டியெடுப்பார்கள். ஆனால் மத்தியானச் சாப்பாட்டு வேளையில் புதுப்பிரசுரங்கள் காற்று வாக்கில் பறந்து போகிறவர் காலடியில் விழுந்து புரளும்.
ஆட்சியாளர்கள் மக்களின் மனத்தில் விஷத்தை ஏற்றிவிட்டார்கள். மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு கிளர்ந்தெழுந்தால், எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளிவிடுவார்கள். அவர்களுக்கு வெறும் நிலம்தான் வேண்டும்.
கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன்...
தனக்குச் சுகவாழ்வும் பெயரும் கிட்ட வேண்டும் என்பதற்காக. எவனொருவன் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களை விலைக்குக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீரவேண்டும். - மாக்சிம் கார்க்கியின் தாய் தொடர் பாகம் 24
இவர்களை பூர்ஷ்வா என்று சொல்வது ரொம்ப சரி; ரொம்பப் பொருத்தம். பூர்ஷ்வா என்றால் ஒன்றும் அறியாத பாமர மக்களை அடித்துச் சுரண்டி, அவர்களது இரத்தத்தையே உறிஞ்சிக் குடிப்பவர்கள் என்று பொருள்.