நோக்கியாவைத் தொடும் கைகள் தாலியையும் விடாது பிடித்திருக்கின்றன. மவுசை இயக்கும் விரல்கள் அதற்கு ஆயுத பூசையையும் செய்கின்றன. மல்டி மீடியாவை களிக்கும் கண்கள் ஆதிக்க சாதி திமிரை விடாது கொண்டிருக்கின்றன.
இன்று ஹசாரேயை கைவிட்டு விட்டனர் என்று கூட சொல்லமுடியாது. பழைய பில்டப் கொஞ்சம் குறைந்திருக்கிறது. சிலர் விமரிசனம் வேறு செய்கிறார்கள் என்பதுதான் ஜெமோவின் மனக்குமுறல்
கற்பையும் விபச்சாரத்தையும் போற்றும் இந்து மதமும், இந்திய சமூகமும்தான் இந்த இரண்டு பெண்களின் மறைவுக்கு காரணம் என்றால் சண்டைக்கு வருவீர்களா? பதட்டப்படாமல் இந்த கட்டுரையை படியுங்கள்.
ரூபர்ட் முர்டோச் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.
வங்கியின் வெளியே நின்றபடி ஒலிப்பெருக்கியில் "நான் இந்த வங்கியின் அதிகாரிகளை மக்கள் சார்பில் கைது செய்ய வந்திருக்கிறேன். நீங்களாகவே வந்து சரணடைந்துவிடுங்கள். உங்களுடைய உயிருக்கு எந்த பாதிப்பும் வராது"
ஐஸ்வர்யாவுக்கு திருமணம் முடித்ததில் இருந்து மாமியார் போல 'அடியே இன்னுமா மசக்கை ஆகலை' என்று இவர்கள் செய்த விசாரணைகளை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள், ஒரு வழியாக அந்த நாளும் வந்தது
இவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
விஷ்ணுபுரத்து சொம்பு தூக்கிங்க வேட்டி கட்டிகிணு, ரசவடை போட்டு விருந்து வைச்சு கூட்டம் நடத்துறானுவ. சாநி சொம்புங்க கோட் சூட்டு மாட்டிகிணு சரக்கு பார்ட்டியோட கூட்டம் நடத்துராணுவ. ஒருத்தன் ஆச்சாரம், இன்னொருத்தன் அல்ட்ரா மாடர்னு பாத்து ஏமாறீதிக. ரெண்டுபெரும் ஒண்ணுதான். தெரியாதவன் வாயில மண்ணுதான்.
டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்
ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால் வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும் சரத்குமார் வாழும் நாட்டில், ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.
ஜெனியின் தனிமையை ஜெஸியால் மட்டும் தான் தீர்க்க முடிந்தது. இவளது சிறு வயது துணி மணிகளை ஜெஸிக்கு அணிவித்து அழகு பார்ப்பாள். விலை உயர்ந்த சென்ட் பாட்டில்களை ஜெஸியின் மேல் பீய்ச்சி அடிப்பாள். ஜெஸியோடு பேசிக் கொண்டிருப்பாள்; கதை சொல்வாள்; பாடிக் காட்டுவாள்; சில சமயம் ஆடிக் கூட காட்டுவாள்.
’’நாங்கள் டிக்கெட் இல்லாமல்தான் பயணம் செய்யப் போகிறோம். நீங்களும் வாருங்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்...’’
ஒரு தும்மலுக்காக அல்லும் பகலும் புலம்பித் தீர்த்து, தன்னைத்தானே சித்திரவதை செய்து மாண்டு போன ஒரு அற்பவாதியைப் பற்றிய கதை இது. அது என்ன தும்மல் பிரச்சினை? கதையைப் படியுங்கள்...........
கன்னியாகுமரி கிராமத்தில் பிதுங்கி வழியும் சுற்றுலா லாட்ஜூகளுக்குப் பின்னால் கடலைத் தழுவி வாழ்ந்து கொண்டிருக்கும் வாவுத்துறை, கன்னியாகுமரி மீனவர் கிராமங்களுக்குப் போன அனுபவப் பதிவு