காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும் துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசைரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது.
நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல... வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கெளரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம்.
தன் வீட்டுக்கு வரப்போகும் அந்த அதிசயமான, பயங்கரமான மனிதர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அவள் பயத்தால் செத்துக் செத்துத்தான் பிழைத்தாள். அவர்கள்தான் அவளது மகனையும் அந்தப் புதிய மார்க்கத்திலே புகுத்திவிட்டவர்கள்...
நான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா? இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன.
கொட்டாய்க்குள்ள இருந்தவங்க பூட்டிட்டாங்க. வந்தவன் கதவ முடிஞ்சமட்டும் அடிச்சு நொறுக்கிப்பார்த்துட்டு வெளிப்பக்கமாத் தாப்பா போட்டிட்டு நாலாப்பக்கமும் கொளுத்திட்டான்.
உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார். அவர் என்னைப் படாதபாடு படுத்தினார். உன் தாய் மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்டக் கூடாதா?
எத்தனை பேருக்கு பதட்டம்? தமிழகத்தின் முற்போக்கு முகம், ஆணாதிக்கத்தின் உள்ளே போய் வசதியாகப் பதுங்கிக் கொள்கிறது.
ஆலைச்சங்கு அலறிய அந்த அதிகாலையில் அவன் இறந்து போனான். சவப்பெட்டியில் திறந்த வாயோடும், வெறுப்பு நிறைந்து நெறித்துப் போன புருவங்களோடும் அவன் கிடந்தான். அவனது மனைவியும் மகனும் நாயுமாகச் சேர்த்து அவனைப் புதைத்தார்கள்.
உலகின் பழமையான பல்கலைக் கழகத்தை உருவாக்கியது ஒரு முசுலீம் பெண்மணி என்பது சங்கிகளுக்கும், மண்ணடி மார்க்கபந்துகளுக்கு மட்டுமல்ல இந்திய பொதுப் புத்திக்கும் கூட அதிர்ச்சியளிக்கலாம்.
தாழ்த்தப்பட்டவர்களை சாதிய ரீதியாக ஒடுக்குவதும், பெண்களை பாலியல்ரீதியாக ஒடுக்குவதும் வேறு வேறு அல்ல. இங்கு சாதிதான் பெண்ணடிமைத்தனத்திற்கு மிகப்பெரும் அடித்தளமாக இருக்கிறது.
மக்களின் சிந்தனையை வடிவமைக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் மக்கள் புரட்சி சாத்தியமா ? அலசுகிறது இக்கட்டுரை.
ஊர்ப் புறங்களை, நாட்டுப் புறங்களைப் பார்த்திருந்தாலும் அனைவர் பார்வையிலும் படாத மண்ணின் பண்பாட்டு அசைவுகள் தொ. பரமசிவன் கண்ணுக்கு மட்டும் தெரியும்.
"மிகவும் காலப் பொருத்தமான புத்தகம்" என்று அவர் (லெனின்) கூறினார், இது தான் அவருடைய ஒரே பாராட்டுதல். இது எனக்கு எவ்வளவோ பெரிதாக இருந்தது. - மாக்சிம் கார்க்கி.
சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம்.
வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணக் குழுவினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்.

























