Friday, November 14, 2025
மாணவ சமுதாயத்தின் நலனில் அக்கறையுள்ள நீதிபதியாக இருந்திருந்தால் துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டத்தில் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கையெழுத்திடலாம் என்று இருக்கிறதா? என்று கேட்டிருக்க வேண்டும்.
ஷோபாப்பூரில் குடியிருப்பவர்களுக்கு தங்களது வாழ்க்கை நிலைமை மீது கசப்புணர்வே மிஞ்சியிருக்கிறது, “எங்கள் குழந்தைகளை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் சமூகம் ஒரு தலித் மருத்துவரை ஏற்றுக்கொள்வதில்லை எனக் கூறுகின்றனர் அம்மக்கள்.
ரூபாய் நோட்டுக்களில் கவர்னர் கையெழுத்து இல்லையென்றால், அது கள்ள நோட்டு. அதேபோல் படித்து வாங்கும் பட்டத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லையென்றால் அது போலியானது.
திருச்சி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மதில்களுக்கும் பரந்து விரிந்த கட்டிடங்களுக்கும் மத்தியில் சிலம்பு மற்றும் கத்திச்சண்டைக்கான பயிற்சிகள் நடப்பதாக தகவல் கிடைக்கிறது. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போல இங்கும் பயிற்சியளிக்கப்படலாமென சந்தேகம் எழுகிறது.
ஒட்டுமொத்த சமூக உழைப்பின் அனுபவத்தை வெறும் இயந்திரங்களாக அடித்துவிட்டு மனிதர்களை சக்கைகளாக தெருவில் வீசி விட்டிருக்கிறது முதலாளித்துவம்.
வளரும் குழந்தைகளுக்கு பிஞ்சிலேயே இந்துத்துவ நஞ்சைப் புகட்டுவது என்பதை ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான ஆரோக்கிய பாரதி தனது செயல்திட்டமாக கொண்டுள்ளது.
துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி, பேராசிரியர் வேலைக்கு 50 லட்சம், உதவி பேராசிரியர் வேலைக்கு 30 லட்சம். தகுதி, திறமை, பணி அனுபவம் எதுவும் தேவையில்லை, பணம் இருந்தால் பதவி. பல்கலைக் கழகங்களில் வரலாறு காணாத ஊழல் முறைகேடுகள் நடந்தது நாள் தோறும் அம்பலமாகி வருகின்றன.
நாங்கள் முதலில் இங்கு வந்தபோது, நீலக் கண்களும் பொன்னிறமுடைய கைநிறையப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள் நிறைந்த நகரம் லண்டன் என்று எண்ணியிருந்தோம். எங்களைப் போன்ற மற்ற ஏழை மக்களும் இங்கிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.
படிக்கும் மாணவரின் முழுக்கை சட்டையும், பைத்தியக்கார விதிகளால் கிழிக்கப்பட்டது. கழுத்தணியும், காதணியும் பாதணியும் கூட பறிக்கப்பட்டது.எச்சரிக்கை விதிகளால் எல்லா கயிறுகளும் அறுக்கப்பட்டது. ஆனால், பூணூல் கயிறு?
“எத்தனையோ நோயாளிகள், குறிப்பாக ஏழைகள், தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு கடைசியாக… ‘எங்களை வலியில் தவிக்க விடாதீர்கள்…. எங்கள் சாவுக்காக அமைதியாக காத்திருந்து செத்துப் போகிறோம்’ என்று சொல்கிறார்கள்”.
அண்ணா பல்கலைக்கழகமும், சென்னை பல்கலைக்கழகமும் இந்த மே மாதத்தில் பட்டமளிப்புவிழா நடத்தவுள்ளனர். மாணவர்கள் அந்த பட்டங்களை வாங்கினாலும் துணைவேந்தரின் கையெழுத்து இல்லாமல் தரப்படும் பட்டமானது குப்பை காகிதத்திற்கு சமமானது.
பெண்களின் சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் அதிகரிக்க பாக்சிங் பயிற்சி உதவியுள்ளது. “நான் முன்பெல்லாம் நிறைய வெட்கப்படுவேன். ஆனால், பாக்சிங் கற்றுக் கொள்ள துவங்கிய பின் எனக்கு நிறைய தன்னம்பிக்கை பிறந்துள்ளது.
பாடுபட்டு பாடுபட்டு பஞ்சடைந்த விழிகளும், பசி நிரம்பிய வயிறுகளும் போராடிப் போராடி வாங்கித் தந்த உரமான நாள் அல்லவா இந்த மே நாள்! ஒருவர் போயின் ஒருவர் வருவர், ஒருவர் மாயின் ஒருவர் எழுவர், எனும் கம்யூனிச கால் தடத்தின் அரசியல் நடையில் ஆவடி வீதிகள் ஆக்சிஜன் பெற்றன..
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை வீடியோவாக வைத்திருக்கிறோம். நீங்கள் கூறிய படி நடக்கவில்லை என்றால்... என ஒரு பெண் அங்கே திரண்டிருந்த போலீசைப் பார்த்து கூறியது,
கடந்த 28.04.2017 அன்று டாஸ்மாக்கை எங்கும் திறக்க விடாமல் மக்களைக் கொண்டு, விரட்டியடித்ததால் சாராயப்பாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு ஊரைவிட்டே டாஸ்மாக் ஓடி விட்டது.

அண்மை பதிவுகள்