1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 22 | 1988 அக்டோபர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 21 | 1988 செப்டம்பர் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இன்று (மார்ச் 14, 2025) பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின் 142-ஆவது நினைவு நாள். விஞ்ஞான சோசலிசத்தை தோழர் எங்கெல்ஸ் அவர்களுடன் இணைந்து நிலைநிறுத்திய மார்க்சின் வாழ்வை நினைவுகூரும் வகையில் ”ஹென்ரி வோல்கவ்” எழுதிய ”மார்க்ஸ் பிறந்தார்” என்ற நூலின் இறுதிப் பகுதியை வெளியிடுகிறோம்.
***
மார்க்ஸ் பிறந்தார் (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும்
உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
முடிவுரை
அவருடைய பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும்! – பிரெடெரிக் எங்கெல்ஸ் (1)
ஜென்னி மார்க்ஸ் மரணமடைந்து ஒரு வருடத்துக்குப் பிறகு, 1883 மார்ச் 14-ம் தேதியன்று கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” (2) என்று எங்கெல்ஸ் எழுதினார்.
மார்க்சின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருடைய இலட்சியம், அவருடைய கருத்துக்கள் மனிதகுலத்துக்குப் பெரு நிதியாகும். அதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூற இயலாது.
லண்டனில் உள்ள காரல் மார்க்சின் நினைவிடம்.
மனிதகுலக் கலாச்சாரத்தின் மொத்த வரலாற்றிலுமே மார்க்சியத்துடன் எந்த அளவிலாவது ஒப்பிடக் கூடிய ஒரு நிகழ்வு ஏற்பட்டதில்லை. அது வரையிலும் தத்துவஞானிகள் உருவாக்கிய தத்துவங்கள் ஒரு சிறு குழுவின் உடைமையாக மட்டுமே இருந்தன. அத்தத்துவங்கள் யதார்த்தத்தின் தனித்தனியான அம்சங்களை விளக்கின, அல்லது உலகத்தைக் கருத்தியலாக எடுத்துக்காட்டின.
அவர்கள் தமது உறுதியான நம்பிக்கைகளுக்கு ஏற்ப இதுவரையிலும் உலகத்திலிருந்த எல்லாவற்றையும் விளக்க முற்பட்டார்கள். தாங்கள் கூறுவதே முடிந்த முடிவு, மற்றவர்கள் இவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இத்தத்துவ ஞானிகளின் ஊகங்கள் எத்தகைய சாயலைக் கொண்டிருந்தாலும் வரலாற்று உணர்வின்மையும் வறட்டுக் கோட்பாட்டுவாத அணுகுமுறையும் அவை அனைத்துக்கும் பொதுவான குறைபாடுகளாகும்.
இச்சிந்தனையாளர்களின் தத்துவங்கள் யதார்த்தத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இயக்கவியல் விதிகளுக்கு ஏற்ப வாழ்க்கை தடுக்க முடியாதபடி முன்னேறிக் கொண்டிருந்த பொழுது உலகத்தை வெல்லப் போகின்றன என்று எதிர்பார்த்த கோட்பாடுகள், தோன்றிய உடனே காலாவதியாகிவிட்டன.
“தத்துவம் என் நண்பரே நரை கண்டது, வாழ்க்கை எனும் கற்பகத்தரு பசுமையானது!” (கேதே ஃபாவுஸ்டு)
இது கேதேயின் மணிமொழி. யதார்த்தத்தின் மெய்விவரங்களை, யதார்த்தத்தின் தற்காலிக நிகழ்வின் ஏதாவதொரு அம்சத்தைப் பிரதிபலிக்காமல் யதார்த்தத்தின் மெய்யான வளர்ச்சியை, அதன் நிரந்தரமான, தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் பிரதிபலிக்கின்ற தத்துவம் தோன்றிய பொழுது இந்த மணிமொழி தன்னுடைய உறுதியான தன்மையை இழந்தது.
கண்களை மூடியிருந்த துணிகள் அகற்றப்பட்டன, வறட்டுக் கோட்பாட்டுச் சிந்தனையின் தப்பெண்ணங்கள் கைவிடப்பட்டன. முதன்முறையாக உலகம், விசும்பிலும் காலத்திலும் அதன் நிரந்தரமான வளர்ச்சியின் பல்தொகுதி மற்றும் முரண்பாடுகள் அனைத்துடனும் துல்லியமாக அப்படியே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. இத்தத்துவத்தின்படி இயற்கையின் வளர்ச்சியின் ஆக உயர்ந்த கட்டமாக மனித சமூகம் தோன்றுகிறது, திட்டவட்டமான, அறியப்படக் கூடிய இயற்கை – வரலாற்று விதிகளின் அடிப்படையில் அது முன்னேற்றமடைகிறது.
யதார்த்தத்தை அறிகின்ற முறையியலின் நோக்கிலிருந்து மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக வரையறுப்பதென்றால் அதன் முரணில்லாத வறட்டுச் சூத்திரவாத எதிர்ப்பையும் முரணில்லாத வரலாற்றுணர்வையுமே குறிப்பிட வேண்டும்.
மார்க்சியத்தின் இந்தச் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்சும் எங்கெல்சும் இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றைப் பற்றித் தங்களுடைய கருத்துக்களின் அமைப்பை முழுமையாக விளக்குகின்ற நூல்களை, “மார்க்சியத்தைப் பற்றிய வினாவிடை” நூல்களை எழுதவில்லையே என்று வியப்படைகிறார்கள். அவர்களில் சிலர் இத்தகைய “வினாவிடை நூல்களை” எழுதுவதற்கு முயற்சியும் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியின் பலன் கொச்சையான மார்க்சியமே.
ஏனென்றால் மார்க்சியம் என்பது எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்கெனவே தயாரித்த பதில்களைத் தருகின்ற தத்துவமல்ல, பிரபஞ்சத்தைப் பற்றிய தத்துவ ரீதியான மாதிரிப்படிவமல்ல, “கட்டாயமான” வரலாற்றுத் திட்டமல்ல. நிரந்தரமான வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உட்படுகின்ற ஒன்றை அறிகின்ற முறையே மார்க்சியம். அது சமூக உறவுகளைப் புரட்சிகரமாகத் திருத்தியமைக்கும் செயல்திட்டம், அத்தகைய சீரமைப்புப் போராட்டத்துக்கு அது ஆயுதம்.
மார்க்சுக்கு முன்பே கூட மனிதனுடைய அறிவு பல இயற்கை நிகழ்வுகளையும் விதிகளையும் விஞ்ஞானரீதியாக விளக்கியிருக்கிறது; ஆனால் சமூக உறவுகளின் துறையில் கடந்தகாலச் சிந்தனையாளர்கள் இருட்டில் அலைந்து கொண்டிருந்தார்கள். எல்லாச் சமூக நிகழ்வுகளையும் முற்றும் விளக்கிக் கூற முடியும் என்ற பொய்யான கோரிக்கைகளை மார்க்சியம் நிராகரித்தது. ஆனால் அவற்றை ஆராய்வதற்கு நம்பகமான, சரியான வழியைக் காட்டியது.
ஆகவே சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி முதன்முறையாக முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் அமைக்கப்பட்டது. மனிதகுலத்தின் வரலாற்றில் புரட்சிகரமான கொந்தளிப்புக்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன; ஆனால் மார்க்சுக்கு முன்பு உண்மையிலேயே புரட்சிகரமான உலகக் கண்ணோட்டம் என்பது கிடையாது. இப்பொழுது பெருந்திரளான மக்களின் புரட்சிகரமான இயக்கமும் புரட்சிகரமான சிந்தனையும் ஒன்றாகச் சேர்ந்தன. மார்க்சியம் வரலாற்றின் “உந்துவிசையாக” மாறி, அதனை வேகப்படுத்தியது.
மார்க்சியக் கருத்துக்கள் பரவிய வேகத்தைப் பற்றி வியப்படையாதிருக்க இயலாது. கம்யூனிஸ்டு அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் ‘கம்யூனிஸ்டு சங்கத்தில்’ சில டஜன் உறுப்பினர்கள் இருந்தார்கள். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதல் வெகுஜன, போர்க்குணமிக்க அமைப்பாகிய சர்வதேசத் தொழிலாளர் சங்கம் 1864-ல் நிறுவப்பட்டது. கம்யூனிசம் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச இயக்கமாக மாறத் தொடங்கியது. 1871-ல் பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடத்திய புரட்சிகரமான போராட்டத்தின் மூலம் கம்யூனிசக் கருத்துக்களை அமுலாக்குகின்ற முதல் வீரமிக்க முயற்சியைச் செய்தது. அது ஏற்படுத்திய பாரிஸ் கம்யூன் மூன்று மாத காலம் நீடித்தது.
முதலாவது அகிலத்தின் குழந்தையான பாரிஸ் கம்யூனின் அனுபவத்தைப் பொதுமைப்படுத்திய மார்க்ஸ் அதை ஒரு புதிய ரகத்தைச் சேர்ந்த அரசாக, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக, உழைப்பின் பொருளாதார விடுதலை தொடங்கக் கூடிய ஒரே அரசியல் வடிவமாகக் கண்டார். உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது பாட்டாளி வர்க்க அரசின் கடமை என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். கம்யூன் அதிகாரவர்க்க உணர்ச்சியை வேரோடு அகற்றுவதை, எல்லா அரசு ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளையும் பெருந்திரளான மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதை, கம்யூன் தன்னுடைய நடவடிக்கைகளுக்குப் பெருந்திரளான உழைக்கும் மக்களை ஆதாரமாகக் கொள்வதை மார்க்ஸ் வரவேற்றார்.
மார்க்சும் எங்கெல்சும் தங்களுடைய வாழ்க்கையின் இறுதியில் உலகப் புரட்சிகர இயக்கத்தின் கேந்திரமாக மாறிக் கொண்டிருந்த ருஷ்யாவை நோக்கி மென்மேலும் அதிகமான கவனத்தைச் செலுத்தினார்கள் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். மார்க்சின் மூலதனம் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நாடு ருஷ்யா. பாட்டாளி வர்க்கம் வெற்றியடைந்த முதல் நாடும் ருஷ்யாவே.
ஐரோப்பிய வரலாற்றில் புதிய திருப்புமுனை ருஷ்யாவில் நடைபெறுகின்ற சம்பவங்களுடன் இணைந்திருக்கும் என்று மார்க்ஸ் ஸோர்கேக்கு எழுதினார். “ருஷ்யாவிலுள்ள நிலைமைகளைப் பற்றி அதிகாரபூர்வமல்லாத மற்றும் அதிகாரபூர்வமான ஆவணங்களை (இவை வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடியவை, பீட்டர்ஸ்பர்கிலிருக்கும் நண்பர்கள் மூலம் இவை எனக்குக் கிடைத்தன) நான் ஆராய்ந்திருப்பதன் அடிப்படையில் ருஷ்யா ஒரு மாபெரும் கொந்தளிப்பின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது, அதற்குரிய எல்லாக் கூறுகளும் தயாரிக்கப்பட்டுவிட்டன எனக் குறிப்பிடுவேன்”(3) என்று மார்க்ஸ் எழுதினார்.
ருஷ்ய சமூகத்தின் அதிகாரபூர்வமான பகுதிகள் அனைத்தும் பொருளாதார மற்றும் அறிவுரீதியாக முற்றிலும் நசிவு நிலையில் இருக்கின்றன என்று எழுதிய மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: “இதுகாறும் எதிர்ப்புரட்சியின் உடைக்கப்படாத அரணாகவும் சேமப்படையாகவும் இருந்து வந்திருக்கும் கிழக்கில் இம்முறை புரட்சி தொடங்குகிறது.”(4)
ருஷ்யப் புரட்சியைப் பார்க்கின்றவரை தான் உயிரோடிருக்க இயலும் என்று மார்க்ஸ் நம்பினார். பாட்டாளி வர்க்க வெற்றிகள் ஏற்படப் போகின்ற தருணத்தையும் அவை எவ்வளவு அண்மையில் இருக்கின்றன என்பதைப் பற்றியும் மதிப்பிடுங்கால் மார்க்சும் எங்கெல்சும் சற்றுத் தவறு செய்திருக்கலாம். ஆனால் இத்தவறுகள் புரட்சியைத் “துரிதப்படுத்த வேண்டும்” என்ற எண்ணத்தினால் ஏற்படவில்லை. அத்தகைய பிளான்கிவாத அணுகுமுறை அவர்களுக்கு முற்றிலும் அந்நியமாகும். “இத்தகைய தவறுகள், புரட்சிகரச் சிந்தனை மேதைகள் செய்த தவறுகள்…. அதிகாரபூர்வமான மிதவாதத்தின் அலுத்துப்போன அறிவைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக மேன்மையானவை, மகத்தானவை, வரலாற்று ரீதியில் அதிகமான பயனுள்ளவை, உண்மையானவை”(5) என்று லெனின் முற்றிலும் சரியாக மதிப்பிட்டார்.
விளதிமிர் இலியிச் லெனின் (உலியானவ்) சிறுவயது புகைப்படம்.
மார்க்ஸ் மரணமடைந்த வருடத்தில் நெடுந்தொலைவுக்கு அப்பால், ஸிம்பீர்ஸ்க் என்ற ருஷ்ய நகரத்தில் விளாதிமிர் உலியானவ் என்ற பதின்மூன்று வயதுப் பள்ளி மாணவன் ஏற்கெனவே புரட்சிகர ஜனநாயக நூல்களைப் படிக்கத் தொடங்கியிருந்தான். அவன் பதினைந்தாம் வயதில் மார்க்சின் மூலதனத்தைப் படித்து முடித்தான். அவன் சீக்கிரத்தில் ருஷ்யாவில் மார்க்சியத்தை எழுச்சியுடன் பரப்புவோனாகவும் புரட்சிகரத் தொழிலாளர் கட்சியின் அமைப்பாளனாகவும் மாறினான்.
மார்க்சியக் கருத்துக்களைப் படைப்புத் தன்மையுடன் வளர்ப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஒரு புதிய சகாப்தம், அதே சமயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையிலும் கம்யூனிஸ்டு அறிக்கையில் எடுத்துக் கூறப்பட்ட புதிய உலகத்தை நிர்மாணிப்பதிலும் புதிய சகாப்தம் விளதிமிர் இலியிச் லெனின் (உலியானவ்) பெயருடன் இணைந்திருக்கிறது.
19-ம் நூற்றாண்டு விஞ்ஞானக் கம்யூனிசத்தின் தத்துவம் பிறந்த நூற்றாண்டு என்றால் 20-ம் நூற்றாண்டு ஒரு புதிய சமூகத்தின், “பரிபூரணமான மனிதாபிமானம் என்ற கம்யூனிச சமூகத்தை” நிர்மாணித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் குடும்பம் பிறந்த நூற்றாண்டாகும்.
நமது யுகத்தில் சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல. சோவியத் யூனியனைச் சுற்றித் திரண்டிருக்கின்ற பல நாடுகளில் சோஷலிசம் யதார்த்தமாகிவிட்டது. அங்கே ஒரு புதிய சமூகம் உருவாக்கப்பட்டது. அந்தச் சமூகத்தில் சுரண்டலும் சமூக ஏற்றத்தாழ்வும் மனிதனுடைய தகுதியைக் குறைக்கின்ற எல்லா வடிவங்களும் ஒழிக்கப்பட்டுவிட்டன. அங்கே நெருக்கடிகள் இல்லாத பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது, உழைக்கும் மக்களின் பொருளாயத சுபிட்சம் தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது, அதனைத் தொடர்ந்து அவர்களுடைய கலாச்சார நிலையும் ஆன்மிக வளமும் அதிகரிக்கின்றன. அங்கே விஞ்ஞான, மார்க்சிய-லெனினிய உலகக் கண்ணோட்டத்தை வழிகாட்டியாகக் கொண்ட உழைக்கும் மக்கள் சமூக நிகழ்வுப் போக்குகள் அனைத்தையும் தாமே இயக்குகிறார்கள். தனிமனிதனுடைய சர்வாம்ச, வரம்பற்ற வளர்ச்சியே, “முன்பே முடிவு செய்யப்பட்ட மட்டங்களுக்குச் சம்பந்தமில்லாமல் அனைத்து மனித சக்திகளின்”(6) வளர்ச்சியே அந்தச் சமூகத்தின் குறிக்கோளாக இருக்கிறது.
சோஷலிச நாடுகளின் வளர்ச்சி, பலத்தின் முன்னேற்றம், அவை பின்பற்றுகின்ற சமாதானம் மற்றும் பதட்டத்தணிவுக் கொள்கைகளின் ஆக்கபூர்வமான விளைவு மனிதகுலத்தின் சமூக முன்னேற்றத்தின், உலகப் புரட்சிகர நிகழ்வுப் போக்கின் முக்கியமான போக்காக இருக்கின்றன. ஏகாதிபத்தியம், ஏகபோகங்கள், காலனியாதிக்க எச்சமிச்சங்கள் ஆகியவற்றை எதிர்த்து சமாதானம், தேசிய சுதந்திரம் மற்றும் சோஷலிசத்துக்காக நடைபெறும் போராட்டத்தில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் மக்கள் மென்மேலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்போராட்டத்தில் அவர்களுடைய பாதையில் ஒளி பாய்ச்சுவது மார்க்சிய-லெனினியத் தத்துவமே. முதலாளிவர்க்க சித்தாந்திகள் மார்க்சியத்தை “மறுப்பதற்கும்” “அழிப்பதற்கும்” தங்கள் முழுச் சக்தியையும் தொடர்ந்து செலவிடுகிறார்கள். அவர்கள் மார்க்சியத்துக்குப் பதிலாக இன்றைய அற்பவாதிகள் விரும்புகின்ற வேறு தத்துவங்களை நிறுவுவதற்கு முயற்சி செய்கிறார்கள்; விஞ்ஞான சோஷலிசத்துக்குப் பதிலாக மார்க்சும் எங்கெல்சும் தம் காலத்தில் கூர்மையாகக் கிண்டல் செய்த “மிதவாத சோஷலிசத்தை” நிறுவப் பாடுபடுகிறார்கள்.
இம்முயற்சிகள் அனைத்தும் வீணாகி வருவதை நாம் பார்க்க முடியும். மார்க்ஸ் சுட்டிக்காட்டிய திசையில் வரலாறு தடுக்க முடியாதபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகக் கம்யூனிஸ்டு இயக்கம் மென்மேலும் வலிமையடைந்து கொண்டிருக்கிறது.
நம் காலத்தில் சமூக மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகமான வேகத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாபெரும் முக்கியத்துவத்தைக் கொண்ட புதிய அரசியல் சம்பவங்களும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் நடைபெறுவதைப் பற்றிப் படிக்கிறோம். சமூக முன்னேற்றத்துடன் இணைந்து மார்க்சியத் தத்துவமும் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அது புதிய உண்மைகளைப் பொதுமைப்படுத்தி உலகத்துக்குப் புதிய வானங்களைக் காட்டுகிறது. தத்துவஞானமும் சமூக ஆராய்ச்சியும் தங்களுடைய சாதனைகளைப் பற்றித் திருப்தி கொண்டு வெகுஜன எளிமையை நோக்கமாகக் கொண்டால் அவை வறட்டுச் சூத்திரவாத, கோட்பாட்டுவாதப் படுகுழியில் விழுந்து விடும்.
மார்க்சிய-லெனினியம் வாழ்க்கையை விட்டு விலகுவதில்லை, குறுங்குழுவாதக் கோட்பாட்டின் வரையரைக்குள் தன்னை அடைத்துக் கொள்வதில்லை. மனிதகுலத்தின் மொத்தக் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பொதுமைப்படுத்தி விமர்சன ரீதியில் புத்தாக்கம் செய்வதை அடிப்படையாக கொண்ட மார்க்சியம் மனிதகுல மேதைகளின் மகத்தான சாதனைகளைத் தன்வயமாக்கிக் கொண்டு மேலும் வளர்ச்சி அடைகிறது.
மார்க்சின் துணிவு மிக்க, படைப்பாற்றலுடைய, புதியனவற்றைத் தேடுகின்ற சிந்தனை இன்றைய உலகத்தில் வாழ்கிறது, தொடர்ந்து போராடுகிறது. அது விஞ்ஞானி, தத்துவஞானி, அரசியல்வாதி ஆகியோரது பணியில் பங்கெடுக்கிறது. வாழ்க்கையிலும் சமூகப் போராட்டத்திலும் ஒவ்வொரு நபரும் தனக்குரிய இடத்தைப் பெறுவதற்கு அது உதவி செய்கிறது. அது சமூகத்திலிருந்து எல்லாவிதமான கசடுகளையும் அகற்றுவதற்கு, மனித குலத்தினருக்கு துன்பங்களையும் யுத்தங்களையும் வறுமையையும் பசியையும் அநீதியையும் ஒழிப்பதற்கு உதவி செய்கிறது.
இந்த பூமியில் மனிதனுடைய மாபெரும் தகுதிகளுக்கேற்ற சிறப்பான வாழ்க்கையை அமைப்பதற்கு அது உதவி செய்கிறது.
குறிப்புகள்:
(1) Karl Marx and friedrick Engles, SelectedWorks in 3 volumes, Vol. 3, Moscow,1976, p. 163. (2) Marx, Engles, Selected correspondence, p. 340. (3) Marx, Engles, Selected correspondence, p. 289 (4) Ibid. (5) V. I. Lenin, Collected Works, Vol.12, p. 378. (6) Karl Marx, Grundrisse der Kritik der Politischen Okonomie, Dietz Verlag, Berlin, 1953, s. 387.
இந்தியா முழுவதும் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலுக்கு, நீண்ட காலமாகவே சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது, தமிழ்நாடு.
இருப்பினும், சாதி மற்றும் மத மோதல்களை உருவாக்குவதற்கான முயற்சியை அக்கும்பல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரியில் இந்து – கிறித்தவர் இடையிலும், கோவையில் இந்து – இஸ்லாமியர் இடையிலும், நெல்லையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆதிக்கச் சாதியினருக்கும் இடையிலும் முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி, இஸ்லாமியர், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல்களை நடத்திய இக்கும்பல், தற்போது திருப்பரங்குன்றத்தைக் குறிவைத்து தனது சதி வேலைகளை அரங்கேற்றி வருகிறது.
“இந்துக்கள் மனதைப் புண்படுத்திவிட்டனர்”, “முருகன் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற இஸ்லாமியர்கள் முயற்சிக்கின்றனர்”, “நாங்களும் வெள்ளிக்கிழமை பன்றி வெட்டுவோம்”, “தர்காவுக்குச் சொந்தமான கொடிமரத்தில் தீபம் ஏற்ற வேண்டும்”, “தர்காவை மலையிலிருந்து அகற்ற வேண்டும்”, “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என்றெல்லாம் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த அண்ணாமலை, எல்.முருகன், எச்.ராஜா, இந்து முன்னணியைச் சேர்ந்த காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்ட சங்கிகள் கடந்த இருமாத காலமாக தொடர்ந்து மதவெறியைக் கக்கி வந்தனர்.
ஆனால், திருப்பரங்குன்றம் பகுதி மக்களின் மதநல்லிணக்கப் பாரம்பரியமும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டங்களும் இக்கும்பலது கனவைத் தகர்த்தெறிந்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்த மதவெறிக் கும்பல்தான், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இதனைக் கையாண்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில், அதிகார வர்க்கத்தில் ஊடுருவியிருக்கும் சங்கிகளைப் பயன்படுத்தி, தற்போது தனது கலவரத் திட்டத்தை விரைவுபடுத்துகிறது. அதன் ஓர் அங்கமாகத்தான் கடந்த இரண்டு மாத காலமாக, மதுரையில் மதவெறியூட்டும் நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறது.
மலை யாருக்கு சொந்தம்?
திருப்பரங்குன்றம் மலையில் சொத்துரிமை தொடர்பான பிரச்சினை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே எழுப்பப்பட்டது. 1920-ஆம் ஆண்டு இரயில்வே பாதைகள் அமைக்கவும் குவாரிகள் அமைக்கவும் திருப்பரங்குன்றம் மலையைக் கையகப்படுத்தும் முயற்சிகளை பிரிட்டிஷ் அரசின் வருவாய்த்துறை மேற்கொண்டது. இதற்கு எதிராக, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேவஸ்தானம் கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் தர்கா நிர்வாகமும் மனுதாரராக இணைக்கப்பட்டது.
கீழமை நீதிமன்றத்தின் முதன்மை கூடுதல் நீதிபதியாக இருந்த பி.ஜி. இராம ஐயர் 300-க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, 21 சாட்சிகளை விசாரித்தார். 25-08-1923 அன்று அவர் வழங்கிய தீர்ப்பில், நெல்லித்தோப்பு, அதில் உள்ள புதிய மண்டபம், நெல்லித்தோப்பிலிருந்து பள்ளிவாசல் வரை உள்ள படிக்கட்டுகள், பள்ளிவாசல் மற்றும் கொடிமரக் கம்பம் ஆகியவை இஸ்லாமியர்களின் சொத்தாகும் எனவும், மலையின் பிற பகுதிகள் மற்றும் கிரிவலப் பாதை, முருகன் கோயில் தேவஸ்தான நிர்வாகத்திற்குச் சொந்தமானவை எனவும் குறிப்பிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அது வருவாய்த்துறைக்குச் சாதகமாக முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து, அன்றைய உச்சநீதிமன்றமான இலண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலில் (Privy Council) 25-08-1923 அன்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், பி.வி. இராம ஐயர் வழங்கிய தீர்ப்பினை உறுதிப்படுத்தி, 12-05-1930 அன்று உத்தரவு வழங்கப்பட்டது.
அதன் பின்னர், தர்காவில் வழிபாடு நடத்தவும், உணவு சமைப்பதற்கும் தேவையான நீரை சிவன் கோயில் (காசி விசுவநாதர் கோயில்) சுனையில் இருந்து எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். கோடைக்காலங்களில் நீரின் அளவு குறைவதால், இருதரப்பினருக்கும் இடையே சிறு மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதனால், தர்கா நிர்வாகம், தர்காவிற்குச் சொந்தமான இடத்திலேயே சுனை கட்டும் பணியை மேற்கொண்டது.
இதை எதிர்த்து, சுனை கட்டுமிடம் கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என அறிவிக்கக் கோரி, கோயில் நிர்வாகம் சார்பாக 1975-ஆம் ஆண்டு மதுரை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே. சுப்பிரமணியன், முந்தைய 1920-ஆம் ஆண்டு பி.ஜி. ராம ஐயர் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், வழக்கில் குறிப்பிடப்பட்ட இடம் தர்காவிற்கே சொந்தமானது எனவும், சுனை கட்ட தடை போட முடியாது எனவும் 22-11-1978 அன்று தீர்ப்பளித்தார்.
மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தர்காவிற்குச் சொந்தமான இடங்களைக் கோயிலுக்கு சொந்தமானவை என அறிவிக்க முயன்றது. ஆனால், அனைத்துத் தீர்ப்புகளும் தர்கா நிர்வாகத்திற்கு ஆதரவாகவே வந்துள்ளன.
ஆனால், 1931-ஆம் ஆண்டு லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில் முழு மலையும் முருகனுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டதாக எச்.ராஜா உள்ளிட்ட சங்கிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் தமிழ்நாட்டின் அயோத்தியா?
இந்தியாவின் தொல்லியல் அடையாளங்களில் ஒன்றாக இருந்த பாபர் மசூதி, 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இராமன் அங்கு பிறந்தார், அவ்விடத்தில் இராமன் கோயில் இருந்தது என்ற பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டமைத்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல், கரசேவை நடத்தி மசூதியை இடித்தது.
இதையே முன்மாதிரியாக வைத்து, நாடு முழுவதும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பிரச்சாரங்களைத் தொடங்கின. திருப்பரங்குன்றம் மலையும் இப்போது அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவேதான், “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என்று எச்.ராஜா திமிர்த்தனமாகப் பேசித் திரிகிறார்.
திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்வதற்காக வெளியூர்களிலிருந்து ஆட்களை திரட்டிவந்து பா.ஜ.க. நடத்திய போராட்டம்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு மேலே, 50 அடி உயரத்தில் 300 ஆண்டுகள் பழமையான தீபமேற்றும் பீடம் உள்ளது. தமிழ்நாடு முழுவதுமிருந்து வரும் பக்தர்கள் அங்கு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். ஆனால், “தர்காவிற்குச் சொந்தமான கொடிமரம் அமைந்துள்ள பகுதியில்தான் தீபம் ஏற்ற வேண்டும், அது இந்துக்களின் நம்பிக்கை” என்று கூறி, ஆர்.எஸ்.எஸ்-இன் வானரப்படைகளில் ஒன்றான “இந்து பகத் சன சபை”யின் தலைவர் வி.தியாகராஜன் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1994-இல் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெ. கனகராஜ், 1930-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பே இறுதியானது என்றும், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் இந்தப் பகுதியின் பாதுகாப்பை போலீசுத்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் 24-11-1994 அன்று உத்தரவிட்டார்.
இதையெல்லாம் மதிக்காத பாசிச கும்பலோ, கொடிமரம் அமைந்துள்ள பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை அப்பகுதி மக்களிடையே விதைக்க முயற்சித்து வருகிறது.
அண்மையில் கூட, செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், “1931-ஆம் ஆண்டு தீர்ப்பின்படி, தர்கா அமைந்துள்ள 33 சென்ட் இடம் மட்டுமே தர்காவிற்குச் சொந்தமானது. கோயிலுக்குச் சொந்தமான இடத்திலுள்ள (தர்கா) கொடிமரத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். கடந்த 30 ஆண்டு காலமாக இந்துக்களின் உரிமை பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு, நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகையைத் தடைசெய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தொழுகைச் செய்வதைத் தடுக்க முடியாது எனவும் அந்த வழக்கில் எவ்வித இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் 27-06-2023 அன்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.
இவ்வாறாக, 1920 முதல் 2023-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் சிக்கந்தர் தர்கா, பள்ளிவாசல், கொடிக்கம்பம் அமைந்துள்ள மலையுச்சி, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது என்பது சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காமல், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறான பரப்புரையைத் திட்டமிட்டே செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாகத்தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளே இதுவரை பலியிடப்படாதது போலவும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாகவும், முருகன் மலையை சிக்கந்தர் மலையாக்க முயற்சிகள் நடப்பதாகவும் கதையளந்து, கலவரம் நடத்த முயற்சிக்கிறது இந்து முன்னணி கும்பல்.
இந்துக்களும் கிடா வெட்டும் சிக்கந்தர் தர்கா:
கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய அரிட்டாபட்டியைச் சேர்ந்த மக்கள், டங்ஸ்டன் திட்டம் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த, கிடா வெட்டுவதற்காக சிக்கந்தர் தர்காவிற்குச் சென்றனர். அப்போது அங்கு கிடா வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, திருப்பரங்குன்றம் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவ்வாறு சென்ற மக்கள் இஸ்லாமியர்கள் அல்ல, இந்துக்கள்தான்.
எனவே, திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அமைந்திருப்பது பற்றியோ, அங்கு ஆடு, கோழி பலியிடுவது பற்றியோ அப்பகுதி இந்து மக்கள் யாரும் புகார் அளித்ததில்லை. இந்து மக்களும் இணைந்தே அங்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர் என்பது யாவரும் அறிந்த விசயம்.
ஆனால், இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பலானது அயோத்தியில் கலவரம் செய்து பாபர் மசூதியை இடித்ததைப் போல, திருப்பரங்குன்றத்திலும் அரங்கேற்ற வேண்டுமென 30 ஆண்டு காலமாக வெறிகொண்டு அலைகிறது. ஆனால், இந்து – இஸ்லாமிய மக்களின் மதநல்லிணக்கத்தை அக்கும்பலால் உடைக்க இயலவில்லை. இத்தகைய ஒற்றுமைதான் இந்துத்துவப் பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்காக இருக்கிறது. அதைத் தகர்ப்பதன் ஊடாகவே தமிழ்நாட்டில் வேருன்ற முடியும் என்பதை உணர்ந்து, வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறது.
முருகனுக்கு எதிரி, இஸ்லாமியர்களா? இந்து முன்னணியா?
தொல்குடித் தமிழ் மக்களின் கடவுளான முருகனை, சுப்பிரமணியன் என பெயரை மாற்றி சைவக் கடவுளாகவும் வேதக் கடவுளாகவும் மாற்றியது பார்ப்பனக் கும்பல். இப்படி கடவுளைத் திருடியவர்கள்தான், “திருப்பரங்குன்றம் என்ன கசாப்புக் கடையா?” என்று இப்போது கேள்வியெழுப்புகின்றனர்.
குறிஞ்சி நிலத் தலைவனான முருகனை, வேட்டைக் கடவுளாகவே மக்கள் வழிபட்டு வந்தனர். அதனால், முருகன் கோயில் மட்டுமல்ல, கருப்பசாமி, பதினெட்டாம்படி கருப்பு, பாண்டி முனி, அம்மன் கோயில்கள் உள்ளிட்ட நாட்டார் தெய்வங்களுக்கும் ஆடு, கோழி பலியிடுவதுதான் நமது தமிழ் மரபு – வழிபாட்டு முறை. இந்து முன்னணியும் பா.ஜ.க-வும் கூறும் சைவ வழிபாட்டு முறை ஒருபோதும் தமிழர்களின் வழிபாட்டு முறையாக இருந்ததில்லை.
இந்தப் பண்பாட்டுப் பின்புலத்தில்தான் முருகனும் சிக்கந்தரும் இணக்கமாகவே இருந்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் அனைவரும் தாயும் பிள்ளையுமாகவே பழகி வருகின்றனர். எனவே, திருப்பரங்குன்றத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது கலவரம் நடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள இந்து முன்னணி-பா.ஜ.க. பாசிச கும்பல்களைத்தான், சிக்கந்தர் தர்காவை அல்ல.
மதுரையிலுள்ள அரிட்டாப்பட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைக் கடந்த ஆண்டு அறிவித்தது மோடி அரசு. அந்தத் திட்டம் அமையவிருக்கும் பகுதியானது பல்வேறு மலைகளையும், நாட்டார் வழிபாட்டுத் தலங்களையும், பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலத்தையும், தமிழர் பண்பாட்டின் அடையாளங்களையும் உள்ளடக்கியது. அவை அனைத்தையும் அழித்து, வடநாட்டு அகர்வாலுக்குத் தாரைவார்க்க முயன்றதும், வளர்ச்சித் திட்டம் என்று ஆதரித்ததும் இதே ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ.க. கும்பல்தான்.
அங்குள்ள மலைகளில் ஆண்டிமலை எனும் முருகன் மலையும் ஒன்று. இப்போது திருப்பரங்குன்றம் முருகனைக் ‘காப்பாற்றத்’ துடிக்கும் எச்.ராசா, எல்.முருகன், அண்ணாமலை, காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்ட யாரும், ஆண்டிமலையிலுள்ள முருகனைக் காப்பாற்ற வரவில்லை. அப்பகுதி மக்களின் போராட்டமே முருகனையும், கருப்பனையும், அம்மன் கோயில்களையும் பாதுகாத்தது. அகர்வாலுக்காக, அரிட்டாப்பட்டி முருகனையும் கருப்பனையும் அழிக்கத் துணிந்த இந்தக் கும்பல்தான், இப்போது சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி வெட்டுவதால் முருகனின் புனிதம் கெடுகிறது என கதையளக்கிறது.
இதேபோல், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் பெரும்பாலானவை மார்வாடி – சேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளன. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள புதுமண்டபத்தில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு செயல்பட்டுவந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக தீயில் கருகி சேதமடைந்தன. அந்த மண்டபம் புனரமைக்கப்பட்ட பிறகு, 200 ஆண்டுகளாக அங்கு கடைகளை நடத்திவந்த உள்ளூர் வணிகர்கள், சேட்டு-மார்வாடிகளால் வேறு இடத்திற்கு விரட்டப்பட்டனர். கோவை, திருவண்ணாமலை, திருப்பூர் போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிலைதான்.
திருப்பரங்குன்றம் கோயிலைப் பார்ப்பனமயமாக்கி முருகனை அபகரித்ததுபோல், மலையைச் சுற்றியுள்ள கடைகள், வணிக வளாகங்களை அங்குள்ள அதிகாரிகளின் துணையுடன் மார்வாடி – சேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் முயற்சியில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல் தற்போது ஈடுபட்டுள்ளது என்பதே உண்மை.
அது மட்டுமின்றி, சிக்கந்தர் தர்காவில் ஆடு வெட்டக்கூடாது என இப்போது சொல்லும் இந்து முன்னணி கும்பல், திருப்பரங்குன்ற மலை சமணர் மலை, ஆகையால், மார்வாடிகள் மனம் நோகக் கூடாது என்பதற்காக, மலைக்குக் கீழே இருக்கும் கருப்பு கோயிலிலும், அம்மன் கோயிலிலும் ஆடு வெட்டக்கூடாது என்று தடுக்கும். பின்னர், திருப்பரங்குன்றத்தில் இறைச்சியே சாப்பிடக்கூடாது என்றும் விரிவுப்படுத்தும்.
இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க., இந்து முன்னணி கும்பலுக்கு எதிராக பேசுபவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. சிலர், “மக்களிடம் பிரச்சினை இல்லை. அறநிலையத்துறைதான் பிரச்சினையாக இருக்கிறது. எனவே, அறநிலையத்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும்” என்கின்றனர்.
இன்னும் சிலர், “இந்த விவகாரத்தில் இந்து முன்னணியின் பிளவுவாத அரசியலுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. எனவே, பெரும்பான்மை இந்து மக்களுடன் இஸ்லாமியர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். எத்தனையோ தர்கா இருக்கும்போது இந்த இடத்தில் ஆடு வெட்டவில்லை என்றால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது” என்கின்றனர்.
இந்த பிரச்சினை இந்துக்கள்-இஸ்லாமியர்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல. மக்கள் விரோத இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலுக்கும், பெரும்பான்மை மக்களுக்கும் இடையிலான பிரச்சினை என்பதை முதலில் உணர வேண்டும். இந்தக் கும்பல் குறிவைத்திருப்பது இஸ்லாமியர்களை அல்ல. மதுரையின் மத நல்லிணக்கத்தைப் பேணிவரும் பெரும்பான்மை இந்து மக்களையும், அவர்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமையையும், பண்பாட்டையும்தான். இவற்றை அழித்து பார்ப்பனியமயமாக்குவதும், மக்களைப் பிளவுபடுத்துவதுமே அவர்களின் நோக்கம். பகுத்தறிவு, மத நல்லிணக்கம், முற்போக்கு, ஜனநாயகம் என பன்முகத்தன்மை கொண்ட தமிழ்நாட்டில், பார்ப்பனியக் கலாச்சாரத்தைத் திணிக்கும் நீண்டகாலத் திட்டத்தின் ஒருபகுதியே இது.
மேலும், அம்பானி, அதானி, அகர்வால் போன்ற முதலாளிகளுக்கு ஒட்டுமொத்த நாட்டையும் படையல் போட்டுக்கொடுப்பதும், இதற்கு எதிராக மக்களை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்துவதும்தான் இவர்களது நோக்கத்தின் விளைவு. இந்த செயல்திட்டத்தைத்தான் காலங்காலமாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் நாடெங்கும் செயல்படுத்தி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், இக்கும்பல் நடத்திய இத்தகைய பிளவுவாத கலவரங்களுக்கு மணிப்பூரும் ஒடிசாவும் ஜார்க்கண்டும் இரத்த சாட்சியங்களாக இருக்கின்றன.
எப்படியேனும் சாதி-மதவெறிக் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டில் தளம் அமைக்க முயன்றுவரும், பார்ப்பன பாசிச கும்பலின் அடுத்தகட்ட நகர்வுதான் திருப்பரங்குன்றம். தாமதிக்காமல் திருப்பியடிக்க வேண்டிய தருணம் இது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் கிளப்பும் மதவெறி – சாதிவெறிக்கு எதிராக, தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும், மதவெறி எதிர்ப்பு மரபையும் முன்னிறுத்துவோம். பார்ப்பனக் கும்பலால் களவாடப்பட்ட முருகனை மீட்போம். அவர்கள் இலக்கு வைத்துள்ள கருப்பன், அய்யனார், அம்மன் உள்ளிட்ட நாட்டார் தெய்வங்களைக் காப்போம். ஆடு, கோழிகளைப் பலியிடும் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவோம்! பார்ப்பன பாசிஸ்டுகளின் கல்லறை தமிழ்நாடு என்பதை நிலைநாட்டுவோம்!
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிடுவதை எதிர்த்து இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பல், மதுரை போலீசு மேற்கொண்டுவரும் கலவர முயற்சிகளைத் தொடர்ந்து அக்கும்பலின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதத்தில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றன.
★ இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கவும் மதுரையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், “மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி 3-ஆம் தேதியன்று, அக்கூட்டமைப்பு சார்பாக, ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் செஞ்சட்டையுடன் எமது தோழர்கள் திரளாக கலந்துகொண்டு உரையாற்றியது ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்தது.
சென்னை: தமிழ்நாட்டில் கலவரம் செய்ய முயலும் பா.ஜ.க. சங்கி எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு போலீஸ் தலைமை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
★ குறிப்பாக, பிப்ரவரி 4-ஆம் தேதி இந்துமதவெறிக் கும்பலின் பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்படுத்தும் விதமாக, மதுரையில் இயங்கிவரும் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் அமைப்புகளின் சார்பாக, திருப்பரங்குன்றம் மக்களிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்ட காணொளி மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. திருப்பரங்குன்றத்தில் மக்கள் மத ஒற்றுமையுடன் பழகிவரும் உண்மையைப் போட்டுடைத்தது. பல, சமூக ஊடகங்கள், இந்தக் காணொளியைத் தமது சொந்தக் காணொளியாக எடுத்துப் பரப்பின. இவை பத்து லட்சக்கணக்கான மக்களிடம் சென்று சேர்ந்தது. புரட்சிகர அமைப்புகளின் இந்த முன்முயற்சிமிக்க நடவடிக்கையானது, இந்துமதவெறிக் கும்பலின் பிரச்சாரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. பிப்ரவரி 4-ஆம் தேதி எச்.ராஜா கிளப்பிய மதவெறிக் கூச்சலை இந்தப் பரப்புரை மட்டுப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.
இத்துடன், இந்தப் பிரச்சினையை விளக்கி, மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு தமக்கேயுரிய மதுரை வட்டார வழக்கில் வெளியிட்ட காணொளி பல்லாயிரக்கணக்கான மக்களிடம் வீச்சாகப் பரவியது. தோழரின் உரையானது, மக்களின் இறைச்சி உண்ணும் உணவுப் பழக்கத்தைத் தடுக்க மார்வாடி-சேட்டுகளின் ஆதரவில் இந்து முன்னணி கும்பல் களமிறங்கியிருப்பதைக் கூர்மையாக அம்பலப்படுத்தியது.
★ சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிடுவதைத் தடுத்து அந்த இடத்தை, ‘தாவா’க்குரிய இடமாக மாற்றிடும் சதி என்பது நீண்ட நாட்களாக திட்டமிட்டு நடந்த சதியாகும். அரசு அதிகாரத்தில் ஊடுருவியுள்ள அதிகாரிகள், மார்வாடி-சேட்டுகள், இந்துமுன்னணி-பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டு மேற்கொண்ட நடவடிக்கையாகும்.
இசுலாமிய மக்கள் தர்காவில் ஆடு பலியிட்டு வணங்கும் மரபைத் தடுத்து நிறுத்தி, பிரச்சினையைத் தொடங்கி வைத்தது, திருப்பரங்குன்றம் போலீசு ஆய்வாளர் மதுரை வீரன்; அதனை உறுதிப்படுத்தி, இந்து முன்னணி கும்பலுக்கு தீனிப்போட்டது, திருமங்கலம் கோட்டாட்சியர் கண்ணன். இந்தப் பிரச்சினையில் மதக்கலவரத்தைத் தூண்டும் விதத்தில், 144 தடை உத்தரவையும் மீறி இந்து முன்னணி-பா.ஜ.க. மதவெறி கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஒப்புதல் கொடுத்தது, தமிழ்நாடு அரசின் தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர்தான்.
அரசு அதிகார வர்க்கத்தில் ஊடுருவியுள்ள இந்த அதிகாரிகளை அம்பலப்படுத்தும் விதமாக, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என்று மதவெறிப் பிடித்துக் கொக்கரித்த எச்.ராஜாவைக் கைது செய்யக் கோரியும் மதுரையில் இயங்கிவரும் ம.க.இ.க., பு.மா.இ.மு., மக்கள் அதிகாரம் அமைப்புகள் தலைமையில், ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து, மதுரை போலீஸ் ஆணையரிடமும், சென்னையில் மக்கள் அதிகாரம் தலைமையில், சென்னை போலீஸ் தலைமை இயக்குநரிடமும் பிப்ரவரி 10-ஆம் தேதி மனு கொடுக்கப்பட்டது. இத்துடன், மதக்கலவரத்தைத் தூண்டும் விதத்தில் இந்து முன்னணியால் இணையத்தில் வெளியிடப்பட்ட பாடலை நீக்கக் கோரியும் முறையிடப்பட்டது.
மக்கள் அதிகாரத்தின் இந்த நடவடிக்கையானது ஜனநாயக சக்திகள் பலரும் பிரச்சினையின் பரிமாணத்தை உணர்த்துவதாக இருந்தது.
மக்கள் அதிகாரத்தின் இந்த நடவடிக்கையின் மூலமாகத்தான் ஜனநாயக சக்திகள் பலருக்கும் பிரச்சினையின் பரிமாணம் தெரியவந்தது.
★ எனினும், இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பலின் மதவெறிப் பிரச்சாரம் ஓயவில்லை. மேலும், மக்கள் அதிகாரத்தின் இம்முயற்சியின் விளைவாக, இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த மதவெறிப் பாடல் உடனடியாக நீக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் இன்னொரு மதவெறிப் பாடல் வெளியிடப்பட்டது. பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் மதவெறியைத் தூண்டும் வகையில் பேசினார்.
உடனடியாக, இராமசீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மற்றொரு மதவெறிப் பாடலையும் இணையத்தில் இருந்து நீக்கக்கோரியும் பிப்ரவரி 17, 18 தேதிகளில், மதுரையிலும் சென்னையிலும் ஜனநாயக சக்திகளைத் திரட்டி மதுரை மாவட்ட ஆட்சியர், போலீஸ் தலைமை இயக்குநரிடம் மக்கள் அதிகாரம் தோழர்களின் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
★ மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் செய்த, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களைப் போலீசு தடுத்ததைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பாக உடனடியாகக் காணொளி வெளியிடப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில், பூசாரி ஒருவர் ஆடு பலியிட்டு வணங்கியதைச் சேட்டு ஒருவன் திருட்டுத்தனமாக வீடியோ பதிவு செய்து, சமூக ஊடகங்களில் மதவெறிப் பிரச்சாரம் செய்தான். இவனது நடவடிக்கையை உடனடியாக அம்பலப்படுத்தியும், இந்த சேட்டைக் கைது செய்யக் கோரியும் மக்கள் அதிகாரம் சார்பாக காணொளி வெளியிடப்பட்டது.
★ மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை ஒட்டி மதுரை அண்ணாநகர் பகுதியில் பிரச்சாரம் செய்த ம.க.இ.க., மக்கள் அதிகாரம் தோழர்களைத் தடுக்க முயற்சித்தது, மதுரை போலீசு. போலீசின் இந்த நடவடிக்கையைத் தோழர்கள் உறுதியாக எதிர்த்துப் போராடினர். இதன்விளைவாக, அப்பகுதியில் சூழ்ந்திருந்த மக்களும் தோழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இதனால், செய்வதறியாமல் திகைத்த போலீசு பின்வாங்கிச் சென்றது. சரியான அரசியலை முன்வைத்து, உறுதியான தெளிவான போராட்டத்தை மேற்கொள்ளும் போது மக்கள் ஆதரவை வென்றெடுக்க முடியும் என்று தோழர்களின் இந்தப் போராட்ட அனுபவம் உணர்த்தியது. போலீசுடன் தோழர்கள் மேற்கொண்ட போராட்ட காணொளி சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கில் பரவியது மட்டுமின்றி, மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது.
தமிழ்நாடு மக்களை இழிவுபடுத்திய பா.ஜ.க. ராமசீனிவாசனை கைது செய்யக்கோரியும், மதவெறியைக் கிள்ப்பும் இந்து முன்னணி பாடலை தடை செய்யக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மக்கள் அதிகாரம் தோழர்கள் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனு அளித்தனர்.
புரட்சிகர அமைப்புகளின் அடுத்தடுத்த இந்த நடவடிக்கைகளின் விளைவாக, இணையத்தில் இருந்த மற்றொரு மதவெறிப் பாடலும் நீக்கப்பட்டது மட்டுமின்றி, இந்து முன்னணி கும்பலின் இணையவெளி மதவெறிப் பிரச்சாரம் அடங்கியது.
★ “அரிட்டாப்பட்டியையும் ஜல்லிக்கட்டையும் மீட்டோம்! முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்!”, “இந்து முன்னணி-பி.ஜே.பி. கும்பலை விரட்டியடிப்போம்!” ஆகிய முழக்கங்களின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்தப் பிரச்சாரம் தொடங்கியது முதல், “முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்!” ஆகிய முழக்கங்கள் ஜனநாயக சக்திகளிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. இதுதான் இந்து முன்னணி கும்பலுக்கு சரியான பதிலடி என்று பாராட்டினர். இந்த முழக்கத்தைத் தமது சொந்த முழக்கமாகக் கருதி தோழர்களிடமிருந்து பிரசுரங்களை வாங்கி விநியோகம் செய்தனர். பலரும் தாமாக முன்வந்து நிதி உதவிகளைச் செய்தனர்.
மதுரை: இந்து முன்னணியின் மதவெறிப் பாடலை தடை செய்ய வலியுறுத்தியும் எச்.ராஜாவை கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தியும் மதுரை போலீஸ் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதேவேளையில், தமிழ்நாடு போலீசோ மதுரை, விருதாச்சலம், கோவை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. மதுரையில் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் போர்க்குணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோழர்களுடன் ஜனநாயக சக்திகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த மூன்று பகுதிகளிலும் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர்கள் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களுக்கு வாழ்த்துகளையும் போராட்டத்திற்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.
சென்னை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் போலீசு அனுமதி அளித்த வகையில், ஜனநாயக சக்திகள் பெருவாரியானோரின் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்கள் எழுச்சிகரமாக நடந்தன.
★ ஜனநாயக சக்திகளைத் திரட்டி புரட்சிகர அமைப்புகள் மேற்கொள்ளும் இந்தப் போராட்டங்கள் முதல் சுற்றுப் போராட்டங்களே. கலவரங்களை நடத்தி மதுரையை ஆக்கிரமிப்பது, அதன் மூலமாக, தமிழ்நாட்டை கைப்பற்றுவது, இந்த மதவெறிக் கும்பலின் நோக்கமாகும். அதற்கான துருப்புச் சீட்டுதான் திருப்பரங்குன்றமாகும்.
இந்த மதவெறிக் கும்பலை விரட்டியடிப்பது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இதற்கு, மக்கள் அதிகாரம் தலைமையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டங்கள் ஒரு தொடக்கமாகும்.
திருப்பரங்குன்றத்தில் இருந்து இந்து முன்னணி – பா.ஜ.க. கும்பல் விரட்டியடிக்கப்படும் வரை இந்தப் போராட்டங்கள் ஓயாது!
தகவல்:
மக்கள் அதிகாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
மதுரை.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 20 | 1988 செப்டம்பர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட அரியநாயகிபுரம் கிராமத்தில் செங்கல் சூலையில் வேலை செய்யும் தங்க கணேஷ், மாலதி தம்பதியின் மூத்த மகனான தேவேந்திரராஜா பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று (10/03/25) காலை 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அரியநாயகி புரத்தில் இருந்து பேருந்தில் சென்ற பறையர் சாதியைச் சேர்ந்த தேவேந்திரராஜாவை பக்கத்து ஊரான கெட்டியம்மாள்புரம் கிராமத்தில் உள்ள தேவர் சாதியைச் சேர்ந்த மூன்று பேர் (18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள்) கெட்டியம்மாள்புரம் கிராமத்தில் பேருந்து நிற்கும் போது பேருந்திலிருந்து இறக்கி, அருகிலிருந்த பேருந்து நிறுத்தம் அருகே கூட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமும், முதுகில் பல இடங்களில் வெட்டப்பட்டும், இடது கையில் 3 விரல்கள் துண்டிக்கப்பட்டும், வலது கை மணிக்கட்டில் வெட்டப்பட்டும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தேவேந்திரராஜா அனுமதிக்கப்பட்டார். தற்போது ஆபரேஷன் முடிந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடந்த சம்பவம் கேள்விப்பட்டு மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் கின்ஷன் மற்றும் தோழர்கள் மருத்துவமனைக்குச் சென்று, தேவேந்திர ராஜாவின் அப்பா தங்க கணேஷ் அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தோம்.
கடந்த மாதம் நடைபெற்ற கபடி போட்டியில் கெட்டியம்மாள்புரம் அணியை, அரியநாயகிபுரம் அணி வென்றுள்ளது. கபடி விளையாட்டில் ஆர்வமுடைய தேவேந்திரராஜா இந்த போட்டியில் கலந்து கொண்டார். வெற்றியைக் கொண்டாடியுள்ளார். இதனை சாதி ரீதியாகப் பார்த்த, ஆதிக்கச் சாதி வெறி தலைக்கேறிய மேற்கண்ட மூவரும் இன்று தேவேந்திரராஜாவை பைக்கில் பின்தொடர்ந்து சென்று வெட்டியுள்ளனர்.
தென்மாவட்டங்களில் சாதி வெறி தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. நாங்குநேரி சின்னதுரை வெட்டப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வை உண்டாக்கியது. ஆனால் கைது, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றைத் தாண்டி அரசு நிர்வாகம், சாதிவெறியைத் தடுக்க இப்பகுதியில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இதுபோன்ற சாதிவெறித் தாக்குதல்கள் தற்போதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த சாதிவெறி தாக்குதலுக்கு எதிரான அரசின் நடவடிக்கையும் பத்தோடு பதினொன்றாக நடந்து முடிந்து விடும் என்பதாகவே நிகழ்வுகள் காட்டுகின்றன. இதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுப்பதாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டோர், ஜனநாயக சக்திகள், போராடும் அமைப்புகள் ஓரணியில் திரண்டு களமிறங்கி, முற்றிலும் சாதிரீதியான வன்கொடுமைகள் நடப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 19 | 1988 ஆகஸ்டு 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 18 | 1988 ஆகஸ்டு 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னால், குழந்தையின் கண்முன்னேயே தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்ணின் கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்றதை அறிந்து இரவில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு காமவெறிப்பிடித்த மிருகங்கள், பத்து மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி குழந்தையின் தாயான இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், அச்சத்தையும் விதைத்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமும் குற்றமிழைத்த மிருகங்ககளும் ஆதிக்கச் சாதியான தேவர் சாதியை சேர்ந்தவர்கள். ஆனால், பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களுக்கு ஆதரவாக எந்தவொரு தேவர் சாதி சங்கமும் இதுவரை குரல் கொடுக்கவில்லை. மாறாக, குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாக அவர்கள் பக்கமே நிற்பதாக தெரிகிறது.
குழந்தையின் உயிரை பணயமாக வைத்து ஒரு தாயை வல்லுறவு செய்யும், தன் இச்சையை தீர்த்துக் கொள்ளும் அளவிற்கு மனித சமுதாயம் மிருகத்தை விட கேவலமாக மாறியுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கஞ்சா, மது போதையின் பின்னணியில் இக்குற்றம் நடைபெற்றுள்ளது.
மற்றொரு சம்பவத்தில் மயிலாட்துறை மாவட்டம் சீர்காழி அருகே 16 வயது சிறுவன் நான்கு வயது குழந்தையை வன்புணர்வு செய்ய முயற்சிக்க, அக்குழந்தை கத்தி அழுததால் குழந்தையின் தலையில் சிறுவன் கல்லால் தாக்கியுள்ளான். இக்கொடூரமான தாக்குதலில் அக்குழந்தை பலத்த காயமடைந்ததுடன் குழந்தையின் ஒரு கண் சிதைந்துள்ளது.
மகாராஷ்டிராவில் பேருந்துக்கு காத்திருந்த பெண்ணை ஒருவன் ஏமாற்றி ஆளில்லா பேருந்தில் வைத்து வன்புணர்வு செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இக்குற்றத்தில் ஈடுபட்டவன் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளதாக போலீசு தெரிவித்திருக்கும் நிலையில், அம்மிருகம் இச்சமூகத்தில் சுந்ததிரமாக சுற்றித் திரிந்துள்ளது.
இதுமட்டுமின்றீ, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் கைது, 70 வயது முதியவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது என அன்றாடம் வெளியாகும் பாலியல் குற்றங்கள் குறித்தான செய்திகள் நெஞ்சை பதைபதைக்கச் செய்கின்றன. நாமும் இச்செய்திகளை இயல்பாக கடந்து செல்ல பழகிக்கொண்டோம். பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படலாம், சிறுவன் முதல் வயதான ஆண் வரை எவரொருவரும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதற்கான சூழலை நோக்கி தள்ளப்படலாம் என்கிற மிக அபாயகரமான சூழல்தான் இன்று சமூகத்தில் நிலவுகிறது.
ஒரு குளிர்பானத்தை குடித்துவிட்டு அதன் போத்தலை தூக்கி எறிவது போல, ஒரு பெண்ணையும் பார்க்கும் நுகர்வு கலாச்சாரத்தை ஏகாதிபத்தியம் நமக்குள் விதைக்கிறது. எது அத்தியாவசியம், எது அனாவசியம் என அறியாமல் நாமும் தொடர்ந்து நுகர்ந்து, இறுதியில் இந்த நுகர்வுவெறிக்கு நாமே பலியாகி பிறரையும் பலியாக்குகிறோம்.
நுகர்வுவெறி உள்ளிட்ட பண்பாட்டு, பொருளாதார காரணங்களால் நாடு மீண்டும் மறுகாலனியாக்கப்படுகிறது. இதற்கு ஏற்ப ஆளும் வர்க்கம் தனது பாசிச சட்டங்களை அமல்படுத்துகிறது. சமீபத்தில் இயற்கைக்கு மாறான உடலுறவால் கணவனால், மனைவி கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், ‘கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது’ என்கிற வகையில் தீர்ப்பளித்துள்ளது. ஆணுக்கு பெண் அடிமை, ஆணின் சொத்து பெண் என்கிற பார்ப்பன மனுநீதியின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது, பாலியல் குற்றவாளிகளுக்கு தேசியக் கொடி வரவேற்பு கொடுப்பது வரை இவையெல்லாம் பா.ஜ.க-வின் இந்துத்துவ பாசிச ஆட்சியில் சாதாரணமாக நடைபெறுகிறது. இவை பாசிசக் கும்பல் கனவு கானும் இந்துராஷ்டிரமானது பெண்களுக்கு எதிரானது என்பதற்கான சான்றுகளாகும். பாசிசக் கும்பலை வீழ்த்தாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை என்பதை மேற்கூறிய சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன.
பிக்பாஸ்கள் நமது வீட்டின் தாழ்வாரத்திலேயே கடை விரிக்கின்றன. ஆபாச இணையதளங்கள் இளம் சிறார்களின் பார்வைக்கு எளிதாக கிடைக்கின்றன. கஞ்சா, போதைப்பொருட்கள் பள்ளி மாணவர்களிடையே இயல்பாக புழங்கும் பண்டமாகிவிட்டது. மது, அத்தியாவசியப் பொருள் போல் 24 மணி நேரமும் கிடைக்கிறது. இவையனைத்தும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தூண்டுகோலாக இருக்கின்றன.
ஆபாச இணையதளங்கள், டேட்டிங் செயலிகள், கஞ்சா, மதுபோதைகளை தடை செய்யாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது. இவற்றை தடை செய்வதற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்தவும் பெண்கள், ஜனநாயக சக்திகள் உள்ளிட்ட அனைவரும் களப்போராட்டத்தை கட்டியமைக்க வேண்டியது அவசியம். இவற்றின் மூலமாகவே மக்களுக்கான ஜனநாயகத்தை நாம் வென்றெடுக்க முடியும்.
(இப்பதிவு முதலில் மார்ச் 8, 2019 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்டது.)
***
மிக நீண்ட நாட்களாக பெண்கள் சார்ந்த இந்த தினத்தைப்பற்றி எழுத வேண்டும் என்றும் நினைத்தேன். சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த எனது கண்ணோட்டத்தின் நீட்சியே இக்கட்டுரை.
இன்று நாம் கொண்டாடும் மகளிர் தினத்தில், கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகுப் போட்டி என பல போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்படுகின்றன. ஊடகங்களும், வர்த்தக நிறுவனங்களின் மூலம் பெண்கள் பயன்படுத்தும் பொருளுக்கு தள்ளுபடியுடன் கூடிய வாழ்த்துகளை கூறுகின்றன. இதைத்தான் கார்ப்பரேட்டுகள், “ஊடகங்களின் மூலம் சந்தைப்படுத்துதல்” என நமக்கு சொல்லி தருகின்றன. இதுதான் உண்மையில் மகளிர் தினமா ?
இல்லை.. உண்மை அதுவல்ல. மகளிர் தினம் குறித்து அறிய அதன் தோற்றத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். 1910-ம் ஆண்டு, டென்மார்க் தலைநகரில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் கிளாரா ஜெட்கின் தலைமையிலான உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில், பெண்களின் பிரச்சினைகளுக்கு சோசியலிஸ்ட் பார்வையுடன், உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் 1917-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். இந்தப் புரட்சிகர தினமே உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான ஆண்களும் கலந்துகொண்டனர். ஆணும் பெண்ணும் சேர்த்தேதான் மகளிர் தினத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது கருத்தும்கூட.
இதை முன்னெடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தீம் (Theme) முன்னெடுக்கப்படுகிறது. அதில் இந்த ஆண்டுக்கான தீம் #BalanceforBetter என்பதாகும். ஆணும் பெண்ணும் சமம் என்கிறது. Gender Equality (பாலின சமத்துவம்) என்பது கல்வி, கடமை, வேலை வாய்ப்பு, உரிமை என எல்லாம் இருவருக்கும் ஒன்று என்பதே.
ஆனால், எதார்த்தத்தில் சமூகம் அப்படியானது அல்ல; அது பெண் என்பவளை உடல் சார்ந்தவளாகவும், அவளது உழைப்பை பயன்படுத்தி கொள்ளவும் மட்டுமே பார்த்து வருகிறது. தற்போது இது மாறிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது தவறு.
இந்தியாவில் ஆண்கள் சராசரியாக 7 மணி நேரமும், பெண்கள் 9 முதல் 11 நேரம் வரை உழைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு சொல்கிறது. இதில் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளை கணக்கில் கொள்வதில்லை என்கிறது. ஆனால், ஆணோ பெண்ணோ யார் எதைச் செய்தாலும் அது வேலையே. ஆனால், நம் சமூக அமைப்பு இதிலிருந்து வேறுபடுகிறது. உலக பாலியல் பேத பட்டியலில் (Global Gender Gap Index) ஆய்வறிக்கை 149 நாடுகள் கொண்ட பட்டியலில் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 108-வது இடத்தை பெற்றுள்ளது. இதே போன்று மற்றுமொரு ஆய்வில் உலகில் சமத்துவத்தை பாதுகாக்கின்ற நாடுகளில் முதலிடத்தில் பெல்ஜியம் அதைத் தொடர்ந்து டென்மார்க், பிரான்ஸ், லட்டவியா, லக்ஸ்சம்பர்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள்தான் முன்னிலையில் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. அதில் பிரான்ஸ் அபரித வளர்ச்சியை கொண்டுள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.
பெண்களின் பாதுகாப்பு
பெண்கள் என்றவுடன் அவர்களின் பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில், பெண்களின் பாதுகாப்பு பற்றிய ஆய்வின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உலகில் பெண்கள் வாழ்வதற்கு மிக மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. போர் சூழ்ந்து உள்ள ஆப்கானிஸ்தான், சோமாலியா, பாகிஸ்தான், காங்கோ போன்ற நாடுகள் கூட நம்மைவிட பின்னால் இருக்கின்றன. இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, பெண்களின் மீதான பாலியல் வல்லுணர்வு, அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடான ஒன்று.
பெண் கல்வி
பாதுகாப்பு இப்படி இருக்கையில் பெண் கல்வி கேள்விக்குறியாக மாறிவருகிறது. மாணவி அனிதாவின் டாக்டர் கனவைக் காவு வாங்கிவிட்டு ‘பேட்டி படோ’ என்கிறது மத்திய அரசு. உள்நாட்டு உற்பத்தியில் ஜி.டி.பி.யில் 6 சதவிதத்தில் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று கோத்தாரி கல்விக்குழு பரிந்துரைக்கிறது. ஆனால், 2013-14 ஆண்டு 0.71 சதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்பட்டுவருகிறது. அதை ஆளும் மத்திய அரசு 0.45-யாக மேலும் குறைத்துள்ளது. இப்படி கல்வியும் அடிபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது. இதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே.
பள்ளி கட்டிடங்களில், கழிவறைகள் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்பு இல்லாமல் பெண் உயர் கல்வி இடைநிற்றலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போது சத்துணவையும், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட முட்டை போன்ற புரதச்சத்து கொடுக்ககூடிய உணவுகளை தவிர்க்கக்கூடிய தனியார் NGO-விடம் கொடுக்க அரசு முயன்று வருகிறது. மேலும், கடந்த மாதம் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்து எதிர்ப்புகள் கிளம்பியபின் அதை ரத்து செய்தது. இந்த ஆண்டு மட்டுமல்லாமல் வரும் ஆண்டும் பள்ளிக் கட்டமைப்பை, ஆசிரியர் மேம்படுத்தல், புதிய கற்றல் முறை போன்று கற்றலை மேம்படுத்த வேண்டுமே தவிர குழந்தைகளின் தலையில் சுமையை ஏற்றுவது தவறு.
இவ்வாறு செய்வதன் முலம் பெண் கல்வியை கேள்விக்குறியாக்குகிறது. இப்படி மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் செயல்படுகிறது அரசு. ஆனால், இதற்கெல்லாம் மாறாக கேரளா இடதுசாரி அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றி வருகின்றனர்.
பெண்களின் வேலை மற்றும் ஊதியம்
உலக அளவில் இந்தியாவில்தான் ஊதிய பாகுபாடு பெரும் அளவில் இருப்பதாக International Labour Organization (ILO) 2018-19 ஆண்டின் ஆய்வு அறிக்கை Business Standard இதழில் கடந்த நவம்பர் மாதம் வெளி வந்துள்ளது. 73 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் பெறவில்லை எனவும் அது 34% ஆண்களை விட பெண்கள் குறைந்த ஊதியத்தை வாங்குகின்றனர் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிலும் பகுதி நேர வேலை செய்யும் 16% பெண்கள், ஆண்களை காட்டிலும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். இப்படி கல்வித்துறையில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வரும் வேளையிலும் இந்த இடைவெளி தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டு 20%-ஆக இருந்த இருந்த பாலின ஊதிய இடைவெளி (Gender Wage Gap ), இந்த 2018-19-ம் ஆண்டும் தொடர்கிறது.
இப்படி கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இச்சூழலில் மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் நம் உரிமைகளை கோரி …
(இப்பதிவு முதலில் மார்ச் 8, 2021 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்டது.)
***
ஒரு புரட்சியின் கொண்டாட்டம்
மகளிர் தினம் அல்லது உழைக்கும் மகளிர் தினம் என்பது சர்வதேச ஆதரவுக்கான நாள் மற்றும் உழைக்கும் பெண்களின் பலம் மற்றும் அமைப்பை மறுபரிசீலனை செய்யும் நாளாகும்.
ஆனால் இது பெண்களுக்கு மட்டும் உரிய சிறப்பு தினம் அல்ல. மார்ச் 8-ஆனது உலகின் அனைத்து தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், ரசிய தொழிலாளர்களுக்கும், உலக தொழிலாளர்களுக்கும் நினைவுகூரத்தக்க வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 1917-ம் ஆண்டு இந்த நாளில் மாபெரும் பிப்ரவரி புரட்சி வெடித்தது. பீட்டர்ஸ்பெர்கின் உழைக்கும் பெண்கள்தான் அப்புரட்சியைத் துவங்கினார்கள். அவர்கள்தான் ஜார் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக பதாகைகளை உயர்த்த முடிவு செயதனர். எனவே பெண்கள் தினம் நமக்கு இரட்டை கொண்டாட்டமாகும்.
ஆனால் இது அனைத்து தொழிலாளர்களுக்கான பொது தினம் எனும்பட்சத்தில் ஏன் மகளிர் தினம் என்று அழைக்கிறோம்? பிறகு ஏன் உழைக்கும் பெண்களையும், விவசாயப் பெண்களையும் மையப்படுத்தி சிறப்பு கொண்டாட்டங்களும், கூட்டங்களும் நடத்துகிறோம்? இது உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமையையும் ஆதரவையும் மறுதலிக்காதா? இதற்கெல்லாம் விடைகிடைக்க வேண்டுமென்றால் பெண்கள் தினம் எப்படி உருவானது என்பதையும், அது எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது என்ற வரலாற்றையும் நாம் பின்நோக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மிகப்பல வருடங்கள் அல்ல, ஒரு பத்து வருடத்திற்கு (1909-10) முன்பாகதான் பெண்களுக்கான சம உரிமை என்ற கேள்வியும் மற்றும் ஆண்களோடு பெண்களும் அரசு நிர்வாகத்தில் சரிசமமாக பங்கெடுக்க முடியுமா? என்பது குறித்தும் காராசாரமான விவாதங்கள் நடத்தப்பட்டன. அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் வர்க்கம், உழைக்கும் மகளிரின் உரிமைகளுக்காக போராடியது. ஆனால் முதலாளிகள் இவ்வுரிமைகளை ஏற்கத் தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் உழைக்கும் மக்களின் வாக்கினை பலப்படுத்துவதென்பது முதலாளிகளின் நலன்களுக்கு எதிரானது. ஆகையால் அனைத்து நாடுகளிலும் அவர்கள் உழைக்கும் பெண்களுக்கு உரிமைகள் வழங்கும் சட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடையாக இருந்தனர்.
வட அமெரிக்க சோசலிஸ்டுக்கள் விடாமுயற்சியுடன் தங்களுடைய ஓட்டுரிமை கோரிக்கையினை வலியுறுத்தினர். 28.02.1909 அன்று அமெரிக்க பெண் சோசலிஸ்ட்டுக்கள், உழைக்கும் பெண்களுக்கான அரசியல் உரிமை கோரி நாடு முழுவதும் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தினர். இதுதான் முதல் மகளிர் தினம். எனவே மகளிர் தினத்தினை துவங்கிய பெருமை அமெரிக்க உழைக்கும் மகளிரையே சாரும்.
1910-ம் ஆண்டு நடைபெற்ற உழைக்கும் மகளிரின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில், கிளாரா ஜெட்கின் அவர்கள், உலகளவிலான மகளிர் தின ஒருங்கிணைப்பு குறித்த கேள்வியை முன்வைத்தார். அம்மாநாட்டில், ஒவ்வொரு வருடமும், அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென்றும், அது ”பெண்களின் ஓட்டுரிமை, சோசலிசத்திற்கான போராட்டத்தில் நமது வலிமையை ஒருங்கிணைக்கும்” என்ற முழக்கத்தின் கீழ் இருக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.
அலெக்சாந்த்ரா கொலந்தாய்
இவ்வருடங்களில், ஓட்டுரிமையை விரிவுபடுத்துவது, குறிப்பாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பதின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஜனநாயகமுடையதாக ஆக்குவதென்பது மிக முக்கிய நோக்கமாக இருந்தது. முதல் உலகப் போருக்கு முன்பே ரஷ்யா தவிர அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளிகள் ஓட்டுரிமை பெற்றிருந்தனர். இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தில் மகளிரின் பங்களிப்பு அவசியமாயிருந்தது என்பதுதான் முதலாளித்துவத்தின் மறுக்கமுடியாத நிதர்சனமாக இருந்ததது. ஒவ்வொரு வருடமும் ஆலைகளில், தொழிற்கூடங்களில் வேலையாட்கள், பணிப்பெண்கள் என வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. பெண்கள் ஆண்களுக்கு இணையாக உழைத்து நாட்டின் பொருளாதாரத்தை தமது கைகளால் உருவாக்கினர் என்றாலும் அவர்கள் ஓட்டுரிமையின்றி இருந்தனர்.
போருக்கு முந்தைய வருடங்களில் காணப்பட்ட விலைவாசி உயர்வு மிகவும் அமைதியான குடும்பப் பெண்களைக்கூட அரசியலில் ஆர்வம் காட்டவும், முதலாளித்துவ பொருளாதார கொள்ளைக்கெதிராக உரத்த குரலெழுப்பவும் முந்தித்தள்ளியது. ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ”குடும்பப் பெண்களின் எழுச்சி” அடிக்கடி வெடித்துக் கிளம்பும் நிகழ்வாக அதிகரித்துக்கொண்டே சென்றது.
கடைத்தெருக்களில் கடைகளை உடைப்பதும், முறையற்ற வணிகர்களை மிரட்டுவதும் விலைவாசியை கட்டுப்படுத்த உதவாது என்பதனை உழைக்கும் மகளிர் புரிந்துகொண்டனர். அரசாங்கத்தின் அரசியலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றும் அதனை சாதிப்பதற்கு உழைக்கும் வர்க்கம் ஓட்டுரிமையை விரிவுபடுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டுமென்பதையும் அவர்கள் புரிந்துகொண்டனர்.
உழைக்கும் மகளிருக்கான ஓட்டுரிமையை பெறும் நோக்கத்தில் அனைத்து நாடுகளிலும் மகளிர் தினத்தினை ஒரு போராட்ட வடிவமாக ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது. பொது நோக்கத்திற்கான போராட்டத்திற்கும், சோசலீச பாதாகையின் கீழ் உழைக்கும் மகளிரின் ஒருகிணைப்பினை மறுஆய்வு செய்வதற்கும் உலகளவிலான ஆதரவினை நல்கும் ஒரு நாளாக மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.
முதல் உலக மகளிர் தினம்
சோசலிச பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு வெறும் காகிதத்தோடு நிற்காமல், 1911 வருடத்தின் மார்ச் 19 தேதியன்று முதல் உலக மகளிர் தினத்தினை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நாள் பொத்தாம் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. 1848-ம் ஆண்டு மார்ச் 19 அன்று ப்ரஷ்ய மன்னன் ஆயுதமேந்திய மக்களின் போராட்ட வலிமையைக் கண்டு, பாட்டாளி வர்க்க எழுச்சிக்கு அஞ்சி பல வாக்குறுதிகளை அளித்தான். பெண்களுக்கான ஓட்டுரிமை போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென்றாலும், இந்த மார்ச் 19 நாளானது ஜெர்மன் பாட்டாளிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆகவேதான் இந்த நாளை உகல மகளிர் தின நாளாக தேர்ந்தெடுத்தனர்.
ஜனவரி 11-ம் தேதிக்குப் பிறகு ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் பெண்கள் தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்நாளில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை வாய்வழிப் பிரச்சாரங்கள் மற்றும் பத்திரிக்கைகள் மூலம் தெரியப்படுத்தினர். பெண்கள் தினத்திற்கு முந்தைய வாரத்தில் “ஜெர்மனியில் பெண்களுக்கான ஓட்டுரிமை” மற்றும் “ஆஸ்திரியாவில் பெண்கள் தினம்” என்ற இரு பத்திரிகைகள் கொண்டுவரப்பட்டன. மேலும் “பெண்களும் பாராளுமன்றமும்”, “உழைக்கும் பெண்களும் நகராட்சி நிர்வாகமும்”, “குடும்பப்பெண்களுக்கு அரசியலில் என்ன வேண்டியிருக்கிறது?” மற்றும் பல கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. அவைகள் அரசாங்கத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கான சம உரிமை குறித்து துல்லியமாக ஆய்வு செய்திருந்தன. மேலும் அனைத்து கட்டுரைகளும் பெண்களுக்கு வாக்குரிமையளிப்பதன் மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஜனநாயகமுள்ளதாக ஆக்க வேண்டியிருப்பதன் அவசியத்தை வலியுறுத்தின.
முதல் உலக மகளிர் தினம் 1911-ம் ஆண்டு நடைபெற்றது. அது அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றியது. ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மகளிர் தினத்தன்று கனல் தெறிக்கும் அலைகடலென பெண்கள் திரண்டனர். கிராமங்கள், நகரங்கள் என எங்கெங்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து அரங்கங்களும் நிரம்பிவழிந்தன. வேறுவழியின்றி ஆண் தொழிலாளர்களின் இருக்கைகளை விட்டுக்கொடுக்கச் சொல்லி கேட்க வேண்டிய நிலையை அது ஏற்படுத்தியது.
உழைக்கும் மகளிர் தங்களுடைய போர்குணத்தை காட்டிய முதல் காட்சியாக இவ்வுலக மகளிர்தினம் நிச்சயமாக அமைந்திருந்தது. மாற்றத்திற்காக ஆண்கள் வீட்டில் குழந்தைகளோடு இருந்தனர் மேலும் அவர்களுடைய மனைவிகள், குறிப்பாக குடும்பப் பெண்களாயிருந்த அவர்கள் கூட்டங்களுக்குச் சென்றனர். 30,000 பெண்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய தெருமுனை ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் பதாகைகளை அகற்ற முடிவு செய்தனர். பெண்கள் அதை எதிர்கொள்வதென முடிவு செய்தனர். இச்சம்பவத்தில் காவல்துறைக்கும் பெண்களுக்கும் ஏற்பட்ட மோதல் பாராளுமன்றத்தின் சோசலிஸ்ட் பிரதிநிதிகளின் உதவியோடு மட்டுமே இரத்தக் களறியாகாமல் முடிவுக்கு கொண்டுவரமுடிந்தது.
1917-ல் ரசியாவில் ஜார் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட சர்வதேச பெண்கள் தினப் பேரணி – பிப்ரவரி புரட்சியை பற்ற வைத்த நெருப்புப் பொறி
1913-ம் ஆண்டு உலக மகளிர்தினம் மார்ச் 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இத்தினம் உழைக்கும் மகளிரின் போராட்ட தினமாக நிலைபெற்றது.
அக்காலகட்டத்தில் சோசலிச புரட்சி குறித்த மிரட்சி முதலாளிகளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஆகையால் எந்த முதலாளித்துவ பாராளுமன்றமும் தொழிலாளிகளுக்கு கருணை காட்டவோ, பெண்களின் கோரிக்கைகளை ஏற்கவோ அல்லது பரிசீலிக்கவோ முன்வரவில்லை. ஆனால் மகளிர்தினம் இதனை ஓரளவுக்கு சாதித்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மகளிர் தினம் வியக்கத்தக்க பலன்களை அளித்தது. இது அரசியல் அறிமுகம் குறைவாகயிருந்த நமது சகோதரிகள் மத்தியில் போராட்ட வழிமுறையை உருவாக்கியது. அவர்களுடைய கவனம் பெண்கள் தின கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சுவரொட்டிகள், கைப்பிரதிகள் மற்றும் செய்தித்தாள்களை நோக்கி குவிந்தது.
அரசியல் பின்புலமற்ற பெண்கள்கூட “இது நம்முடைய தினம், உழைக்கும் பெண்களின் திருவிழா“ என்று நினைத்தனர். மேலும் கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் விரைந்து சென்றனர். ஒவ்வொரு பெண்கள் தினத்திற்குப் பிறகும் ஏராளமான பெண்கள் சோசலீச கட்சியில் இணைந்தனர். மற்றும் தொழிற்சங்கங்கள் வளர்ச்சியடைந்தன. அரசியல் உணர்வு மேம்பட்டது மேலும் அமைப்புக்கள் முன்னேற்றமடைந்தன.
உலக மகளிர் தினத்தையொட்டி ஜெர்மன் தோழர்கள் இங்கிலாந்து செல்வதும், இங்கிலாந்து தோழர்கள் ஹாலந்து செல்வதும் என பல்வேறு நாடுகளின் கட்சிகள், பேச்சாளர்களைப் பரிமாறிக்கொண்டனர். இவ்வொத்திசைவு, உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதற்கும், உழைக்கும் வர்க்கம் வலுப்பெறுவதற்கும் மற்றும் பாட்டாளிகளின் போராட்ட வலிமையை கூட்டுவதற்கும் வினையாற்றியது.
தீரம் மிக்க மகளிர்தினம், உணர்வு மேம்பாட்டையும், மகளிரை அமைப்பாக்குவதற்கும் உதவியாக இருந்தது. மேலும் உழைக்கும் வர்க்கத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக போராடுபவர்களின் வெற்றிக்கும் அது பங்காற்றியது என்பது தீரம் மிக்க ‘உலக மகளிர் தினத்தின்’ பலன்களாகும்.
ரஷ்யாவில் உழைக்கும் மகளிர் தினம்
ரஷ்ய பெண் தொழிலாளர்கள் முதன்முதலில் 1913-ம் ஆண்டு நடைபெற்ற “உழைக்கும் மகளிர் தினத்தில்“ பங்கெடுத்தனர். இது ஜார் மன்னனின் ஆட்சி உழைப்பாளிகளையும், விவசாயிகளையும் தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த கால கட்டமாகும். திறந்தவெளி ஆர்ப்பாட்டங்கள் நடத்தமுடியாத சூழல் இருந்தபோதும், மகளிர் தினத்தை உலக தினமாக அவர்கள் சிறப்பித்துக்காட்டினர். போல்ஷ்விக் ‘பிராவ்தா’ – மென்ஷ்விக் ‘லூச்’ ஆகிய சட்டபூர்வ உழைக்கும் வர்க்க பத்திரிக்கைகள் ‘உலக மகளிர் தினம்’ குறித்த சிறப்புக் கட்டுரைகள், உழைக்கும் மகளிருக்கான இயக்கங்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள், பெபல் மற்றும் ஸெட்கின் போன்ற தோழர்களின் வாழ்த்துக்களை பிரசுரித்தன.
கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்த இருண்ட காலத்திலும், கட்சியின் உழைக்கும் மகளிர் பெட்டோகிராட்டின் கலாஷ்கோவஸ்கி முனையத்தில் “மகளிர் கேள்விகள்“ என்ற ரகசிய பொது மன்றத்தை ஏற்பாடு செய்தனர். ஐந்து கோபெக்குகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டபோதும் அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் கட்சியின் உறுப்பினர்கள் உரையாற்றினர். ஆனால் இந்த உயிர்ப்பான ரகசியக் கூட்டத்தின் ஒரு கட்டத்தில் காவல்துறை தலையிட்டு, பல பேச்சாளர்களைக் கைது செய்ததால் முடிக்கப்பட்டது.
ஜார் மன்னரின் கடுமையான ஒடுக்குமுறையின் கீழிருந்த ரஷ்யாவில் “உலக மகளிர் தின“த்தில் திரளாக பெண்கள் கலந்துகொண்டதும், அந்த நாளை அங்கீகரித்த்தும் உலகத் தொழிலாளர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது ரஷ்ய எழுச்சியின் விடிவெள்ளியாகவும், ஜார் மன்னனின் சிறைகளும், தூக்குமேடைகளும், தொழிலாளர்களின் போராட்டங்களையும், போராட்ட உணர்வையும் அழிக்கவியலாமல் வலுவிழந்ததையே எடுத்துக்காட்டியது.
1914-ம் ஆண்டு ரஷ்யாவின் ‘உழைக்கும் மகளிர் தினம்’ மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட இரண்டு பத்திரிக்கைளும்கூட கொண்டாட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டன. நமது தோழர்கள் ஏற்பாடுகளில் கடும் உழைப்பைச் செலுத்தியபோதும் காவல்துறையின் குறுக்கீட்டால் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாமல் போனது. ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்ட தோழர்கள் ஜார் மன்னனின் சிறைகளுக்கும், பிறகு பலர் கடுங்குளிர் வடக்குபகுதிக்கும் அனுப்பப்பட்டனர். இது ‘உழைக்கும் மகளிருக்கு ஓட்டுரிமை’ என்ற முழக்கத்தை ‘ஜார் மன்னனின் எதேச்சதிகாரத்தை தூக்கியெறிவோம்’ என்ற அறைகூவலாக மாற்றியது.
ஏகாதிபத்திய போரின் தருணத்தில் உழைக்கும் மகளிர் தினம்
முதல் உலகப்போர் மூண்டது. அனைத்து நாடுகளின் உழைக்கும் வர்க்கமும் போரின் இரத்தத்தில் தோய்ந்திருந்தன. 1915 மற்றும் 1916-ம் ஆண்டுகளில் பிற நாடுகளில் “உழைக்கும் மகளிர்தினம்“ சாத்தியமற்றதாக இருந்தபோதும், போல்ஸ்விக் கட்சியின் கொள்கைகளையுடைய இடதுசாரி பெண் சோசலிஸ்டுகள், மார்ச் 8-ஐ போருக்கு எதிரான உழைக்கும் மகளிரின் ஆர்ப்பாட்டமாக மாற்ற முயற்சித்தனர். ஆனால் ஜெர்மனி சோசலிச கட்சியிலிருந்த துரோகிகள் அதனைத் தடுத்து நிறுத்தினர். நடுத்தர கொள்கையுடைய நாடுகளில், முதலாளிகளின் எண்ணங்களுக்கெதிராக உலக தொழிலாளர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மகளிர்தின கூட்டங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில், அத்தருணத்தில் பெண் சோசலிஸ்டுகளுக்கு கடவுச்சீட்டு மறுக்கப்பட்டது.
1915-ல் நார்வே நாட்டில் மட்டுமே ஓரளவு சமாளித்து மகளிர் தினத்தில் உலகளவிளான ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன, அதில் இரஷ்யா மற்றும் நடுநிலை நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அக்காலகட்டத்தில் ஜார் மன்னராட்சியின் ராணுவ ஒடுக்குமுறைக் கருவிக்கெதிராக, பெண்கள் தின ஒருங்கிணைப்பை இரஷ்யாவில் யோசிக்கக்கூட முடியாக நிலை இருந்தது.
அதன்பிறகு மிகச் சிறப்பான 1917-ம் ஆண்டு பிறந்தது. பசியும், பிணியும், போர் பயிற்சிகளும் பெண் தொழிலாளிகள் மற்றும் விவசாயப் பெண்களின் பொறுமையை உடைத்தெறிந்தன. 1917, மார்ச் 8-ம் நாள் (அன்றைய பிப்ரவரி 23) பெண்கள் தினத்தன்று பெண்கள் மிக தைரியமாக பெட்ரோகிராட் தெருக்களில் கூடினர். அப்பெண்களில் சிலர் தொழிலாளர்கள், சிலர் வீரர்களின் மனைவிகள். அவர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு ரொட்டி கோரியும் இரானுவத்திலிருந்து தங்களுடைய கணவர்களை திருப்பியனுப்பும்படி முழக்கமிட்டனர். இந்த உச்சகட்ட சூழலில் உழைக்கும் மகளிரின் போராட்டத்தில், ஜார் மன்னரின் பாதுகாப்பு படைகள் வழக்கமான ஒடுக்குமுறையை கையாளமுடியாமல், அலைகடலென திரண்டிருந்த மக்களின் கோபக் கனலை மிரட்சியுடனும் குழப்பத்துடனும் நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
1917-ம் ஆண்டின் உழைக்கும் மகளிர் தினம் வரலாற்றில் நினைவுகூரத்தக்கதாக மாறியது. அத்தினத்தில்தான் இரஷ்ய பெண்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தீப்பொறியை உயர்த்தினர். அது உலகம் முழுக்க பற்றியது. பிப்ரவரி புரட்சியின் துவக்க நாளாக அது அமைந்தது.
போருக்கான நமது அழைப்பு
பத்து வருடத்திற்கு முன்பு “உழைக்கும் மகளிர் தினம்” முதன் முதலாக பெண்களுக்கு அரசியல் சமத்துவம் மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் என்ற பிரச்சாரங்களை முன்வைத்து நடத்தப்பட்டது. இரஷ்ய மகளிர் இவ்வுரிமைகளைப் பெற்றனர். சோவியத் குடியரசில் உழைக்கும் பெண்களும், விவசாயிகளும் ஓட்டுரிமை மற்றும் குடியுரிமைகளை ஏற்கெனவே வென்றெடுத்துவிட்டதால் அவ்வுரிமைகளுக்காக போராடவேண்டிய தேவை எழவில்லை. இரஷ்ய தொழிலாளர்களும் விவசாய பெண்களும் சம உரிமையுள்ள குடிகளாகிவிட்டனர். அவர்களிடம் ஓட்டுரிமையும், சோவியத் மற்றும் பிற கூட்டுறவு அமைப்புக்களிலும் பங்கெடுக்கும் அதிகாரங்கள் உள்ளன. மேம்பட்ட வாழ்க்கையை எளிமையாக அடைவதற்கு உதவும் ஆயுதங்களாகிய இவைகளை அவர்கள் கைக்கொண்டிருந்தனர்.
ஆனால் உரிமைகள் மட்டும் போதாது. அவைகளை எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்க வேண்டும். ஓட்டளிக்கும் உரிமையை நம்முடைய பலனுக்கானதாக எப்படி ஆக்குவது என்பதை கற்கவேண்டும். இந்த இரண்டு வருட சோவியத் அதிகாரத்தில், நமது வாழ்க்கை முற்றிலும் மாறிவிடவில்லை. நாம் கம்யூனிசத்தை அடைவதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். அதே சமயத்தில் பழைய இருண்ட மற்றும் அடக்குமுறைகளைக் கொண்ட பழைமையான உலகாலும் சூழப்பட்டுள்ளோம். குடும்பச் சங்கிலி, வீட்டு வேலைகள், விபச்சாரம் போன்றவைகள் இன்னமும் உழைக்கும் பெண்கள் மீது கனத்துக்கொண்டுதான் இருக்கின்றன. உழைக்கும் பெண்களும் விவசாயப் பெண்களும் இவைகளிலிருந்து விடுபட்டு சமத்துவத்தை அடைய வேண்டுமென்றால் அது இரஷ்யாவை உண்மையான கம்யூனிச சமூதாயத்தை நோக்கி கொண்டுசெல்வதில் நம்முடைய உழைப்பைச் செலுத்தினால் மட்டுமே சாதிக்க முடியுமே தவிர வெறும் சட்டத்தால் இயலாது.
இதனை விரைந்து சாத்தியமாக்க நாம் முதலில் இரஷ்ய பொருளாதாரத்தை நேர்நிலைப்படுத்த வேண்டும். இதனைச் சாதிக்க அடிப்படையாக நம்முன் இரண்டு முதன்மைக் கடமைகள் உள்ளன. ஒன்று எஃகுறுதிகொண்ட அரசியல்படுத்தப்பட்ட தொழிலாளர் கட்டமைவை ஏற்படுத்துவது மற்றொன்று போக்குவரத்தை மறுசீரமைப்பு செய்வது. நம்முடைய தொழிலாளர்கள் துரிதமாக செயல்பட்டால் மிகவிரைவில் நீராவி எந்திரங்களைப் பெற்று மீண்டும் இரயில்களை இயக்கலாம். இதன்மூலம் உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் அவசியத் தேவையான ரொட்டியையும் விறகினையும் பெறலாம்.
போக்குவரத்தை மீட்பது கம்யூனிச வெற்றியை விரைவுபடுத்துவதாகும். கம்யூனிச வெற்றியுடன் பெண்களின் சமத்துவதும் வென்றெடுக்கப்படுகிறது. எனவே உழைக்கும் பெண்கள், விவசாயப் பெண்கள், தாய்மார்கள், மனைவிகள் மற்றும் சசோதரிகள் அனைவரும் இரயில்வே மற்றும் போக்குவரத்தை மறுசீரமைப்புச் செய்வதில் மற்றும் உணவு, விறகு மற்றும் மூலப்பொருட்களை கொணர்வதில் பாடுபடும் நமது தொழிலாளர்களுக்கு இருக்கும் சிரமங்களை போக்குவதற்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பதை இந்த உழைக்கும் மகளிர்தினத்தின் செய்தியாக முன்வைக்கிறோம்.
சென்ற வருட மகளிர் தினத்தின் முழக்கம் “அனைத்தும் செம்படையின் வெற்றிக்கு!“ என்பதாகும். தற்போது நமது உழைக்கும் மகளிரை நம்முடைய உழைப்பாளிகளின் ரத்தம் சிந்தா அணிவகுப்பின் பின்னால் அனிவகுக்க அழைப்பு விடுக்கிறோம். செம்படை ஒருங்கமைக்கப்பட்டதாக, ஒழுங்கமைக்கப்படதாக மற்றும் சுயதியாகம் செய்ய தயாராக இருந்ததால்தான் புற எதிரியை தோற்கடித்தது. தற்போது நமது ‘தொழிலாளர் குடியரசு’ உள்நாட்டு எதிரிகளான போக்குவரத்து இடப்பெயர்வு, பொருளாதார சூழல், பசி, குளிர் மற்றும் நோய்கள் ஆகியவற்றை வெல்லும். “நாம் அனைவரும் தொழிலாளர்களின் இரத்தம் சிந்தா முன்னனியின் வெற்றிக்கே! அனைவரும் அதன் வெற்றிக்கே!“
உழைக்கும் மகளிர் தினத்தின் புதிய இலக்கு
அக்டோபர் புரட்சி நமது பெண்களுக்கு சமத்துவத்தையும், ஆண்களோடு சமமான குடியுரிமைகளையும் வழங்கியது. சில காலத்திற்கு முன்புவரையில் மிகுந்த துரதிஷ்டவசத்திலும், ஒடுக்குமுறையிலும் இருந்த இரஷ்ய பெண் பாட்டாளிகள் தற்போது சோவியத் குடியரசில், பிற நாட்டு தோழர்களுக்கு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மற்றும் சோவியத் அதிகாரத்தை அமைப்பதன் மூலம் அரசியல் சமத்துவத்தை அடையமுடியும் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாளித்துவ நாடுகளில் இன்றும் பெண்கள் உழைப்புச் சுரண்டப்படுபவர்களாகவும், வாய்பற்றவர்களாகவும் இருப்பதால் அங்கு நிலைமை வேறாக உள்ளது. நார்வே, ஆஸ்திரேலியா, பின்லாந்து மற்றும் வட அமெரிக்கா போன்ற சில நாடுகளில் போருக்கு முன்பே பெண்கள் குடிமை உரிமை பெற்றனர் என்றாலும் அந்நாடுகளில் உழைக்கும் பெண்களின் குரல் பலவீனமாகவும், உயிர்ப்பின்றியும்தான் இருக்கின்றது.
ஜெர்மனியில், கெய்சர் தூக்கியெறியப்பட்ட பின்பு, சமரசவாதிகள் தலைமையில் முதலாளித்துவ குடியரசு அமைக்கப்பட்டது. அதில் 36 பெண்கள் பாராளுமன்றத்திற்குள் பங்கெடுத்தனர். ஆனால் அதில் ஒரு கம்யூனிஸ்ட் கூட இல்லை.
1919-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு பெண் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக முதன்முறையாக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால் அவர் யார்? ஒரு நிலச்சுவாந்தாரரும், மேல்தட்டு வர்க்கத்தைச் சோ்ந்த சீமாட்டியும் ஆவார் அவர்.
பிரான்சில் கூட பெண்களுக்கு ஓட்டுரிமையளிப்பது தொடர்பான கேள்வி எழுந்தது.
ஆனால் முதலாளித்துவ பாராளுமன்ற கட்டமைப்பில் உழைக்கும் பெண்களுக்கான இவ்வுரிமைகள் என்ன பலனைத் தரும்? அதிகாரம் முதலாளிகள் கையிலும், சொத்துடைமையாளர்கள் கையிலும் இருக்கும்போது எந்த அரசியல் உரிமையும், உழைக்கும் பெண்களை பழைமையான குடும்ப மற்றும் சமூக அடிமைத்தனத்திலிருந்து மீட்காது. இந்நிலையில் பிரான்சில் உழைக்கும் வர்க்கங்கள் மத்தியில் போல்ஸ்விக் கருத்துக்கள் மேலோங்கி வருவதால், பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கும் பெயரில் உழைக்கும் வர்க்கத்திற்கு மேலுமொரு பருக்கை தர முடிவு செய்தது.
அக்டோபர் புரட்சியின் அனுபவம் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளின் உழைக்கும் பெண்களுக்கு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மட்டுமே, சோவியத் அதிகாரம் மட்டுமே, முழுமையான நிரந்தரமான சமத்துவத்தை உத்திரவாதப்படுத்த முடியும் என்பதையும், கம்யூனிசத்தின் வெற்றி பல நூற்றாண்டுகால ஒடுக்குமுறைச் சங்கிலியை அறுத்தெறியும் என்பதையும் தெளிவுபடுத்தியது. இதற்கு முன்பு உழைக்கும் மகளிர் தினத்தின் இலக்கு முதலாளிகளின் பாராளுமன்றத்திற்கு முன்பு ஓட்டுரிமைக்கான போராட்டமாக இருந்தது. தற்பொழுது உழைக்கும் பெண்களை “மூன்றாம் அகிலத்தின்“ போராட்ட முழக்கங்களை நோக்கி அணி திரட்ட வேண்டிய புதிய இலக்கு பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. முதலாளிகளின் பாராளுமன்றத்தில் உழைப்பைச் செலுத்துவதற்குப் பதிலாக, இரஷ்யாவின் அழைப்பிற்கு செவிசாயுங்கள்“.
“அனைத்து நாடுகளின் உழைக்கும் பெண்களே!
உலகைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த பாட்டாளிவர்க்க முன்னனியை கட்டுவோம்!
முதலாளித்துவ பாராளுமன்றத்தை புறக்கணிப்போம்!
சோவியத் அதிகாரத்தை வரவேற்போம்!
உழைக்கும் ஆண்களையும் பெண்களையும் பிடித்திருந்த வேற்றுமைகளையும் – ஏற்றத்தாழ்வுகளையும் களைந்தெறிவோம்!
உலக கம்யூனிச வெற்றிக்காக தொழிலாளிகளுடன் இணைந்து போராடுவோம்!“
இந்த அழைப்பு முதலில் புதிய முறையின் முன்னோட்டத்திற்கு மத்தியில் ஒலித்தது. பனிப்போரில் இது கேட்கும் மற்றும் இது பிறநாடுகளின் உழைக்கும் பெண்களின் இதயத்தில் சுருதிமீட்டும். உழைக்கும் பெண்கள் இந்த அழைப்பைக் கேட்டு சரியானதென நம்புவார்கள். சிறிது காலத்திற்கு முன்புவரையில் எப்படியாவது தங்கள் தரப்பிலிருந்து சிலரை பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளாக அனுப்பிவிட்டால் அவர்களுடைய வாழ்க்கை எளிமையானதாகவும், மூலதன ஒடுக்குமுறை கடக்கக்கூடிய ஒன்றாகவும் ஆகிவிடும் என்று எண்ணியிருந்தனர். தற்பொழுது உண்மை அவர்களுக்குப் புரியும்.
மூலதன ஆட்சியை தூக்கியெறிவதும், சோவித் அதிகாரத்தை நிறுவுவதுமே உலகைத் துயரிலிருந்தும், உழைக்கும் பெண்களை அவர்களின் வாழ்க்கையை கடினமாக்கும் தாழ்மை மற்றும் சமத்துவமின்மையிலிருந்தும் மீட்கும். ஓட்டுரிமைக்காக நடத்தப்பட்ட “உழைக்கும் மகளிர் தினம்“ இன்று பெண்களுக்கான முழுமையான விடுதலைக்கானதாக, அதாவது சோவியத் மற்றும் கம்யூனிசத்தின் வெற்றிக்கான போராட்டமாக மாறுகிறது.
உடைமை மற்றும் மூலதன அதிகாரம் ஒழிக ! முதலாளித்துவ உலக மரபுகளான – ஏற்றத்தாழ்வு, உரிமையின்மை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவைகளை விட்டொழிப்போம்!
ஆண் பெண் உழைப்பாளர்களின் உலக ஒற்றுமையை முன்னெடுப்போம்!
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள்!
பாட்டாளிவர்க்கத்தின் இருபாலினரும்!
000
கட்டுரை தலைப்பு :உலக மகளிர் தினம் எழுதியவர் : தோழர் அலெக்சாந்த்ரா கொலந்தாய் முதல் பதிப்பு : மெழ்துனரோதின்யி தென், 1920 ஆங்கில மொழி பெயர்ப்பு : அலிக்ஸ் ஹோல்ட் 1972 தமிழாக்கம் : ச. மீனாட்சி (சமூக ஆர்வலர்)
பெண் விடுதலை பேசத்துவங்கி நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், பெண்கள் மீதான வன்முறைகள் நின்றபாடில்லை.
தினந்தோறும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள், சக மனிதர்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலை படம் பிடித்துக் காட்டுகிறது.
அரசின் போக்சோ சட்டமும், வன்கொடுமை வழக்கும், கண்காணிப்பு கேமராவும், திருமண வயது உயர்வும் பெண்களை பாதுகாக்கவில்லை.
எண்ணும் எழுத்தும் தான் கல்வி என்கிற பாடத்திட்டமானது முதலாளிகளிடம் கூலிவாங்கும் அடிமையாகத்தான் பெண்களையும் மாற்றுகிறது. இந்த கல்வியின் நோக்கம் சிந்திக்க வைப்பதல்ல. ஏன் படித்த பெண்கள் கூட சமூக புரிதலின்றி பெரும் சிக்கலில் மாட்டித் தவிக்கிறார்கள்.
அரசின் பெண் கல்வி – பெண்கள் முன்னேற்றம் என்பதெல்லாம் குறைவான கூலிக்கு வேலையாட்களை உருவாக்கும் நோக்குடையதேயாகும்.
புதிதாக முளைத்துள்ள இணையதளம் – ஆன்லைன் கல்விமுறை மாணவிகள் மீதான இன்னொரு தாக்குதலாகிவிட்டது!
ஆண்களின் தின்பண்டமாக காட்டும் ஆபாச சினிமா / வீடியோக்கள், TV போதை, ஊடக வக்கிரங்கள் இணையதளம் – செல்போன்… இவையெல்லாம் பெண்கள் மீது அதிகரித்துள்ள பாலியல் வன்முறைக்கு களம் அமைக்கின்றன.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு – நல்ல சிந்தனை, விழிப்புணர்வு, ஆண்களின் மனமாற்றம் என்று ஆளும் வர்க்க ஊடகங்கள் பேசி, எழுதி படம் காட்டி வருகிறார்கள். வன்முறைக்கான அடிப்படை அரசியல் – சமூக – அறிவியல் காரணிகளை பேசுவதில்லை. ஏன்?
ஜனநாயகம் பேசும் முதலாளித்துவம்; கட்டற்ற சுரண்டலுக்கு எளிதான இலக்காகவும், பாலியல் வக்கிரத்துக்கு தகுந்த இரையாகவும் பெண்களை பாவிக்கிறது.
முதலாளித்துவமானது இலாபம் என்பதை சமூக விதியாக்கிவிட்டது. இதனால், கிராமப்புற விவசாய சமூகத்தில் இருந்த பெண்களின் மீதான குறைந்தபட்ச மதிப்பீடு – அனுதாபம் கூட அழிந்து வருகிறது.
இலாபத்திற்காகவும் இன்பத்திற்காகவும் சுயநலனுக்காகவும் எதையும் செய்யலாம் என மனித உணர்வுகளை படுமோசமாக, மிருக நிலைக்கு கீழாக கார்ப்பரேட் உலகம் தள்ளிக்கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆண்டுதோறும் இலாப விகிதத்தை உயர்த்துவதால், விலைவாசி உயர்கிறது. கூலியாக வழங்கப்படும் பணத்தின் மதிப்பும் குறைந்து விடுகிறது.
பணத்தின் மதிப்பு குறைவதால் குடும்பச் செலவை ஈடுகட்ட பெண்கள், குழந்தைகளும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இயற்கை வளக் கொள்ளை, மானியங்கள் – கார்ப்பரேட் வரி குறைப்பு என அரசு கஜானாவையும் கொள்ளையடித்து விட்டு. அதன் பிறகு நேரடியாகவும் முன்பை விட அதிகமாகவும் பெண்களை உழைப்புச் சுரண்டலுக்கு கார்ப்பரேட் கும்பல் தயார்படுத்துகிறது.
மிகக் குறைந்த கூலிக்கு வேலையாட்களாக பெண்கள், குழந்தைகளையும் திட்டமிட்டு தள்ளுகிறார்கள். இது முதலாளித்துவ இலாப சுரண்டல் விதியாகும்.
பெண்களின் பாதிப்புக்கு காரணம் இயற்கை, விதி, தலையெழுத்து என அடக்கி, ஒடுக்கி வைப்பதை நியாயப்படுத்தும் சமூகமானது ஹார்மோன்களின் வளர்ச்சி – உடற்கூறியல் – அறிவியல் உண்மை குறித்து பேச மறுக்கிறது.
உற்பத்தி முறை, பணத்திமிர், அதிகார வெறி ஆண்களை வேட்டையாடும் மனநிலைக்கு தள்ளிவிட்டது. பெண்களை வேட்டையாடும் கொடூர மனநிலைக்கும் உற்பத்தி முறைக்கும் உள்ள தொடர்பினை பற்றி சமூக இயக்கங்கள், சிந்தனையாளர்கள் பேசுவதில்லை.
முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையில் உழைப்பிற்கேற்ற பங்கும் மரியாதையும் கிடைப்பதில்லை, அதன் காரணமாக சகமனிதர்களை ஏமாற்றுவதில் தொடங்கிய பழக்கம் சமூக பண்பாடாகவே மாறிவிட்டது, எனவே, ஆண்கள் எந்த குற்றவுணர்ச்சியும் இன்றி பெண்களை ஏமாற்றுகிறார்கள், சுரண்டுகிறர்கள்.
சமூக காரணங்கள்!
பழம்பெருமை பேசும் மதமும் ஜாதியும் பெண்களின் உரிமைகளை மறுத்து, பெண்களை அலங்கார – போகப்பொருளாக, குடும்பச் சொத்துக்களில் ஒன்றாக இருத்தி, இன்னொரு வீட்டு விலங்காகவும் 90% நீடிக்க செய்கிறது.
பிறந்த வீடு – பள்ளி – கல்லூரி – புகுந்த வீடு என்று பெண்கள் வாழ்க்கை சுருக்கப்பட்டிருப்பதால் ஆணாதிக்க சமூகத்தின் ஆபத்தான, கேடான போக்கினை அறியாமல் இருக்கின்றனர்.
பெண்கள் உயர்கல்வியும், மேன்மைமிக்க பதவிகளும் அடைந்திருந்தாலும் பாதிப்புகள் – அடக்குமுறைகள் பெருமளவு நீடித்தே வருகின்றது.
தொடரும் கார்ப்பரேட் – பாசிச உற்பத்தியில் பெண்களின் குடும்ப உழைப்பிற்கு உரிய பங்கும் வழங்குவதில்லை. மேலும், குழந்தைகளை (உற்பத்தி சக்திகளை) வளர்த்தெடுக்கும் – ஆண்களின் துணையாகவே கருதப்படுகிறார்கள்.
சுரண்டல் மிகுந்த எந்த சமூக அமைப்பும் மனிதர்களிடையே சமத்துவத்தை உருவாக்க முடியாது.
தீவிர உழைப்புச் சுரண்டலுக்காக சட்ட உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அதன் எதிர்விளைவாக மனிதர்கள் நாடோடிகளாக – ஒழுங்கற்ற – தான் தோன்றிகளாக மாற்றப்படுகிறார்கள்.
தீவிர கார்ப்பரேட் சுரண்டலுக்கு வசதியாக சமூக அமைப்பே சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்காக சீரழிவுகளை தண்டிக்காமல், மோசமான தீர்ப்புகள் மூலம் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
முன்பை விட அரசின் உறுப்புகள் நீதித்துறை – போலீசு என அனைத்தும் மக்களுக்கு எதிராகவும் ஒடுக்கும் கருவியாகவும் வளர்க்கப்படுகிறது.
இதன் மொத்த எதிரொலியாக சமூகத்தில் பலவீனமான பிரிவினராக கருத்தப்படும் பெண்கள் மீது பாலியல் வன்முறையாக நிகழ்த்தப்படுகிறது.
பெண்ணடிமைத்தனம் மிகுந்த சமூகத்தளமும், அதனை உள்ளடக்கிய அரசுக் கட்டமைப்பும் நீடிக்கும் வரை பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளும் தொடரும்…
அரசியல் காரணங்கள்!
அரசின் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்திய பிறகு பெண்கள் சந்திக்கும் பாதிப்புகளும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட்மயமாக்கலை வளர்த்து, பாதுகாப்பதே அரசின் நோக்கம், பெண்களைப் பாதுகாப்பதல்ல என்பதை தினசரி பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளே சாட்சியாகும்.
கல்வி, மருத்துவம், விவசாயம் – இயற்கை வளம், தொழில்துறை – பொதுத்துறை என எல்லாத் துறைகளிலும் கார்ப்பரேட்டைப் புகுத்திய அரசு பெண்களுக்கு எப்படி நன்மை செய்யும்? சிந்தியுங்கள்!
கார்ப்பரேட் சார்ந்த அரசுக் கட்டமைப்பு என்பதால் பெண்களுக்கு சிந்திக்கும்படியான கல்வி – பாடத்திட்டங்களை வழங்குவதில்லை, வழங்கப் போவதுமில்லை.
பெண்கள் மீதான தாக்குதலுக்கு அரசுக் கட்டமைப்பு முழுமையாக தீர்வோ- தண்டனையோ வழங்காது. குற்றங்களின் ஆணிவேரை அடையாளப்படுத்தியும் காட்டாது, காட்ட முடியாது!பெருகி வரும் பாலியல் குற்றங்களை தடுக்க வழக்கு – சிறைத்தண்டணையுடன் சொத்துக்களைப் பறிமுதல் செய்து தண்டிக்காமல் வாய்தா வழங்கி வேடிக்கை பார்க்கிறது, அரசு!
ஆகையால், டோட்டல் சிஸ்டத்தையும் (சமூகம்+மதம்+அரசு) புரிந்து கொண்டு வீதியில் இறங்கினால்தான் 75 கோடி பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய முடியும்.
தத்துவார்த்த காரணங்கள்!
மனித குல வரலாற்றில் மாறிக் கொண்டே வரும் பொருளுற்பத்தி முறை தான் மனிதர்களின் உணர்வு, சிந்தனை, ரசனை, கலாச்சாரம், நடை, உடை, பாவனை, ஆயுள் என சகலத்தையும் தீர்மானிக்கிறது என்று மார்க்சியம் சொல்கிறது.
மனிதனைத் தீர்மானிப்பதில் பொருளுற்பத்தி முறைதான் தீர்மானகரமான சக்தியாக உள்ளது. இதனைத் தொடர்புபடுத்தியதாக பாடத்திட்டங்கள் இல்லாததால் சுற்றியுள்ள ஆபத்தை உணர முடியாத நிலையில் பெண்கள் உள்ளனர்.
காய் – பழம், கிழங்கு, இலைகளை உண்டு மரங்களில் வாழ்ந்த மனிதன் விலங்கினங்களை ஒத்த உறவுகளிலேயே காணப்பட்டான்.
நதிக்கரை ஓரங்களில் நீர், நிலம் சார்ந்து – பயிரிட்டு வாழத் துவங்கிய மனிதனுக்கு உற்பத்தி – உழைப்பிற்கு சக மனிதர்களின் உதவிகள் தேவைப்பட்டது. அங்கு தான் உறவுகளின் தேவை ஏற்பட்டது. பொருளுற்பத்தியோடு தான் உறவுகள் தோன்றி வளர்ந்தது.
உற்பத்தியோடு ஏற்பட்ட வேலைப் பிரிவினையில் பெண்கள் வீட்டு வேலைக்கு ஒதுக்கப்பட்டார்கள் என்பது ஆணாதிக்க வரலாற்றின் துவக்க காலகட்டமாகும். (மாதவிடாய், பேறு காலத்தை கேடாக காட்டி விட்டார்கள்)
அங்கு உருவான தேவைக்கு மிஞ்சிய உபரி பொருட்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டவன் குழுத் தலைவன் என உருவெடுத்தான். அத்துடன் அதிகாரமும் (ஆணாதிக்கம்) உருவானது. பெண் அடிமைத்தனமும் தொடங்கியது
தீர்வுகள்!
பெண்கள் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதனை நேற்று – இன்று – நாளை என முப்பரிணாமத்தில் பார்த்து தீர்வு காண முயல வேண்டும். பிரச்சனைகளின் பரிணாம வளர்ச்சியையும் அதன் இயக்க போக்கையும் கவனிக்க வேண்டும்!
குறைந்தபட்சம் அறிவியல் பார்வை, நேர்மை, சுயகட்டுப்பாடு, சுரண்டல் – நுகர்வு வெறி – மூட நம்பிக்க – எதிர்ப்பு, திறமைக்கேற்ற 8 மணி நேர உழைப்பு, சமத்துவம், ஒழுக்கநெறி ஆகியவற்றைக் கொண்ட சோசலிச விழுமியங்களை பெண்கள் உயர்த்தி பிடிக்க வேண்டும்!
சோசலிசக் கொள்கையில்தான் பெண்களின் சமஉரிமையும், சுதந்திரமும், சமூக பாதுகாப்பும், விடுதலையும் அடங்கியுள்ளது என்பது சோவியத் ரசியாவில் நிரூபணம் செய்யப்பட்டது!
இன்றளவும் நிலம் அரசுடமையாக உள்ள வியட்நாமில் டைவர்ஸ் வழக்குகள் – சிவில் வழக்குகள் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை!
சமத்துவ – சோசலிச சமூகத்தில் தான் பெண்களின் மீதான சமூக மற்றும் குடுமப வன்முறைகள் தடுக்கப்பட்டு, பாலின சமத்துவம் உறுதிசெய்யப்படும்!
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 18 | 1988 ஜூலை 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய