Friday, November 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 46

ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா? | மீள்பதிவு

ratan‘‘டன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம், நம் நாட்டு தரகுப் பெருமுதலாளி ரத்தன் டாடா. பன்னாட்டு முதலாளியாக வளர்ந்துவிட்ட டாடாவிற்குக் கடனா? அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா? இதைக் கேள்விப்படும்பொழுது இந்திய மக்களுள் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்படலாம். இதைவிட அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், டாடா தனது கடனை அடைக்கச் செய்திருக்கும் தகிடுதத்தங்கள்தான்!

டாடாவின் இந்தக் கடன் துயரம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் இந்தியாவின் டாடா நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான “கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே விலைக்கு வாங்கியது. முதலாளித்துவ வியாபாரக் கலாச்சாரத்தின்படி, ரத்தன் டாடா தனது சொந்தக் கைக்காசைப் போட்டு இந்தத் தொழிற்சாலைகளை வாங்கவில்லை. சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்களை டாடா கைப்பற்றியது. கோரஸை வாங்கிய டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலையில் 450 கோடி அமெரிக்க டாலர் கடனும் (23,850 கோடி ரூபா) ஜாகுவர் கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலையில் 15,900 கோடி ரூபா கடனும் விழுந்தது.

ரத்தன் டாடா இந்த இரு ஏகபோக நிறுவனங்களையும் வாங்க முட்டிமோதிக் கொண்டிருந்தபொழுதே, இந்தியாவைச் சேர்ந்த சில பொருளாதார அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தின் போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவ்வளவு விலைக்கு இந்த அந்நிய நிறுவனங்களை வாங்கத் தேவையில்லை என அவருக்கு அறிவுரை சொன்னார்கள். ஆனால், டாடா நிறுவன அதிகாரிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் கைகோர்த்துக் கொண்டு, அறிவுரை சோன்ன பொருளாதார நிபுணர்களை, “உலகமயத்தைப் புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகள்” எனச் சாடினார்கள். இந்த ஏகபோக நிறுவனங்களை டாடா கைப்பற்றியதை, இந்தியா வல்லரசாகிவிட்டதன் வெளிப்பாடாக ஊதிப் பெருக்கிய இந்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் டாடா கடன் வாங்குவதற்குப் பக்கபலமாக நின்றது.

ரத்தன் டாடா, இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதலபாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது.


படிக்க: டாடா குழுமத்தின் கோரமுகம் -1


இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, அர்ஜெண்டினா நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள், டாடாவின் “கோரஸ்” இரும்பு உருக்காலையுடன் போட்டுக் கொண்டிருந்த 10 ஆண்டுக் கால வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், கோரஸ் ஆலையை விற்க வேண்டிய அல்லது மூடவேண்டிய நிலைக்கு டாடா தள்ளப்பட்டார். பட்ட காலிலே படும் என்பது போல, இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடுவும் நெருங்கியது.

டாடா, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளைப் போல சூதுவாது தெரியாத அப்பாவியா? ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே தனது கடனை அடைக்கும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.

“நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை மீட்பதற்கு   இங்கிலாந்தின் வங்கிகளிலிருந்து 50 கோடி பவுண்ட் கடனும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியிலிருந்து 34 கோடி பவுண்ட் கடனும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்; இல்லையென்றால், இந்த நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அனுமதியுங்கள்” என டாடா இங்கிலாந்து அரசிடம் பேரம் பேசினார். டாடா, தனது கடனை அடைக்க இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிணையக் கைதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இந்த மிரட்டலின் பொருள்.

இந்த பேரத்தின் முடிவில் டாடா, ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடமிருந்து 17.5 கோடி பவுண்ட் கோடி கடனாகப் பெற்றுக் கொண்டார். இந்தக் கடனை வழங்குவதற்கு கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதனை டாடா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து அரசின் தலையைத் தடவிய டாடா, அடுத்து இந்திய மக்களைக் குறி வைத்தார். கடனை அடைக்க முடியாமல் டாடா தலை குனிந்தால், அது இந்தியாவிற்கே ஏற்பட்ட தலைகுனிவாகும் என உருவேற்றிய இந்திய அரசு, டாடாவின் கடன் பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கியது. இந்திய அரசு வங்கியும் அதன் பத்து துணை வங்கிகளும், டாடா இந்திய நிதிச் சந்தையிலிருந்து 4,200 கோடி ரூபா கடன் திரட்ட துணை நின்றதோடு, இந்தக் கடன் முழுவதற்கும் தாங்கள் உத்தரவாதமளிப்பதாகவும் உறுதி கூறின. டாடா இந்த 4,200 கோடி ரூபாயை, ஜாகுவார் கார் நிறுவனத்தை வாங்குவதற்கு பட்ட கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.


படிக்க: டாடா குழுமத்தின் கோர முகம் -2


மேலும், இந்த கார் தொழிற்சாலையைத் தூக்கி நிறுத்துவதற்காக லேண்ட் ரோவர் கார்களை இந்திய இராணுவத்தின் தலையில் கட்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து 5,800 கோடி ரூபா அளவிற்கு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளவும், அதனைத் தனது சர்வதேசக் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய நடுத்தர வர்க்கத்திடம் டாடாவின் “நானோ” காரை வாங்குவதற்கு இருந்த ஆசையையும், தனது கடனை அடைப்பதற்கு நரித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா. டாடாவின் நானோ காருக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 10 தொடங்கி ஏப்ரல் 25 வரை நடந்தது. “காரை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் விலை முந்நூறு ரூபா. வங்கிக் கடன் மூலம் காரை முன்பதிவு செய்யும்பொழுதே காருக்கான முழுத் தொகையையும் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் பெயரில் டாடா நிறுவனம் வசூலித்து விடும். அந்தத் தொகைக்கான வட்டியாக கார் மாடலை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 2,03,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு மூலம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,500  கோடி ரூபாயை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளது.

‘‘டிமாண்டில்” உள்ள காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும்பொழுது, அக்காரின் விலையில் நான்கில் ஒரு பங்கைத்தான் முன்பணமாகச் செலுத்தும் வழக்கமும், குலுக்கலில் கார் கிடைக்காதவர்களுக்கு அம்முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும் வழக்கமும்தான் நடைமுறையிலிருந்து வருகிறதாம். ஆனால், டாடாவோ, பாம்பு-கீரிச் சண்டையைக் காட்டப்போவதாகக் கூறியே அப்பாவிகளிடம் காசு பறித்துவிடும் மோடி மஸ்தான் போல, நானோ பிரியர்களிடம் முழுத் தொகையையும் வசூலித்து விட்டார்.

இந்த 2,03,000 நானோ பிரியர்களுக்கும் கையில காசு வாயில தோசை என்றபடி உடனே கார் கிடைத்துவிடாது. இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இலட்சம் பேருக்கு 2010-ஆம் ஆண்டில்தான் கார் கிடைக்கும். மீதிப் பேருக்கு 2011-ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஒரு நானோ காரைத் தயாரிப்பதற்குப் பல்வேறு வரிச் சலுகைகளின் மூலம் 60,000 ரூபாயை மானியமாக ஏற்கெனவே டாடாவிற்கு வழங்கிவிட்டார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்பொழுது இந்திய நடுத்தர வர்க்கத்திடமிருந்து எவ்வித ஈடும் இன்றி, வெண்ணிலையாக 2,500 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டுள்ளார், டாடா.

இந்த 2,500 கோடி ரூபாயும் டாடாவின் கடன் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படக் கூடும். டாடா தனது கடனை அடைக்க 2,03,000 இந்தியர்களின் சட்டைப் பைக்குள் கையை விட்டுள்ளார். நடிகர்-நடிகைகள் தங்களது கவர்ச்சியைக் காட்டி அப்பாவி ரசிகர்களை வீழ்த்துவதைப் போல, டாடா தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு இருக்கும் கவர்ச்சியைக் காட்டி, இந்திய நடுத்தர வர்க்கத்தை வீழ்த்தியிருக்கிறார். இந்த வேசித்தனத்திற்கு இந்திய அரசும், இந்திய அரசு வங்கியும் மாமா வேலை பார்த்துள்ளன.

டாடா இப்படி ஊரான் பணத்தை விழுங்குவது புதிய விசயமல்ல. இந்தியப் பொதுத்துறை நிறுவனமாக இருந்த விதேஷ் சன்சார் நிகாமை (வீ.எஸ்.என்.எல்.) ரத்தன் டாடா கைப்பற்றியபொழுது, அந்நிறுவனத்தின் சேமிப்பாக இருந்த 1,000 கோடி ரூபாயை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தனது தொலைத்தொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்றக் கடத்திக் கொண்டு போனார், அவர். வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே!


புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2009 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



பாசிச இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம்! | படக்கட்டுரை

0
அக்டோபர் 7, 2024 அன்று காஸாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தின் போது இந்தியாவின் புது தில்லியில் ஒரு எதிர்ப்பாளர் பாலஸ்தீனியக் கொடியை அசைத்தார்.
அக்டோபர் 7, 2024 அன்று காஸாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தின் போது இந்தியாவின் புது தில்லியில் ஒரு எதிர்ப்பாளர் பாலஸ்தீனியக் கொடியை அசைத்தார்.

காசா மீதான பாசிச இஸ்ரேலில் இன அழிப்புப்போர் ஓராண்டு கடந்ததை நினைவு கூறும் விதமாக, இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் அக்டோபர் 6,7 தேதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

புது தில்லியில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சுமார் 150 போர் அமைதிப் பேரணி நடத்தினர்.

“ஒவ்வொரு நாளும், மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு இல்லை. அவர்கள் பட்டினியால் வாடுகிறார்கள்” என்று ஆர்வலர் பாவனா சர்மா கூறினார்.

“படுகொலையை நிறுத்து” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி, 52 வயதான சர்மா, ஆயுத விற்பனை உட்பட இஸ்ரேலுக்கு இந்தியாவின் ஆதரவைக் கண்டிப்பதாகக் கூறினார்.

ஹமாஸ் கொடிகளை அசைத்து, கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உருவப்படங்களை ஏந்தியவாறு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான ரமல்லாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.

அனைத்து வயதினரும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த சுமார் 400 போர் “புரட்சியில் நம்பிக்கை இழக்க மாட்டோம்” என்ற முழக்கத்தின் கீழ் அணிவகுத்தனர்.

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில், இஸ்ரேலின் உயர்மட்ட இராணுவ கூட்டாளியுமான வாஷிங்டனை(அமெரிக்கா) இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு கோரி அமெரிக்காவின் தூதரகத்திற்கு வெளியே அக்டோபர் 6 அன்று 1,000-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில், நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்திற்கு நடந்து சென்றனர்: “இஸ்ரேல் ஒரு இனவெறி நாடு!” என்று முழக்கமிட்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 7-ஆம் தேதி பேர்லினின் க்ரூஸ்பெர்க் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கலைக்க ஜேர்மன் போலீசு கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்.

கோட்பஸ்ஸர் டோர் சதுக்கத்தில் “இஸ்ரேலுக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்து”, “இனப்படுகொலைக்கு முடிவு கட்டு” மற்றும் “சுதந்திர காசா” போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர்.

பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, காஸா மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் 41,900-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

000

அக்டோபர் 7, 2024 அன்று பாகிஸ்தானின் லாகூரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களை எதிர்த்து பேரணி நடத்தினர்.
அக்டோபர் 7, 2024 அன்று பாகிஸ்தானின் லாகூரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களை எதிர்த்து பேரணி நடத்தினர்.
அக்டோபர் 7, 2024 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் நடந்த போராட்டத்தின் போது மறைந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படங்களுடன் பாலஸ்தீனியர்கள் சுவரொட்டிகளை வைத்துள்ளனர்.
அக்டோபர் 7, 2024 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் நடந்த போராட்டத்தின் போது மறைந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படங்களுடன் பாலஸ்தீனியர்கள் சுவரொட்டிகளை வைத்துள்ளனர்.
2024-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காசா பகுதியில் நடந்த போரின் ஒரு வருடத்தை நினைவுகூரும் பேரணியின் போது, ​​கடந்த மாதம் பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட நஸ்ரல்லாவின் ஹிஸ்புல்லா கொடிகளையும் சுவரொட்டிகளையும் ஏமனில் உள்ள சனாவில் ஆயிரக்கணக்கான ஹூதி ஆதரவாளர்கள் உயர்த்தியுள்ளனர்.
2024-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காசா பகுதியில் நடந்த போரின் ஒரு வருடத்தை நினைவுகூரும் பேரணியின் போது, ​​கடந்த மாதம் பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட நஸ்ரல்லாவின் ஹிஸ்புல்லா கொடிகளையும் சுவரொட்டிகளையும் ஏமனில் உள்ள சனாவில் ஆயிரக்கணக்கான ஹூதி ஆதரவாளர்கள் உயர்த்தியுள்ளனர்.
அக்டோபர் 7, 2024 அன்று ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா பாதசாரி கடவைக்கு அருகில் நடந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்டோபர் 7, 2024 அன்று ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா பாதசாரி கடவைக்கு அருகில் நடந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்டோபர் 6, 2024 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெள்ளைத் துணியால் மூடப்பட்ட பொம்மைகளை எடுத்துச் சென்ற போராடும் மக்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பெரிய உருவத்தின் மீது நடந்து சென்றனர்.
அக்டோபர் 6, 2024 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெள்ளைத் துணியால் மூடப்பட்ட பொம்மைகளை எடுத்துச் சென்ற போராடும் மக்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பெரிய உருவத்தின் மீது நடந்து சென்றனர்.
ஸ்பெயினின் பார்சிலோனாவில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்பெயினின் பார்சிலோனாவில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மொராக்கோவின் ரபாத் நகரத்தில் பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனான் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மொராக்கோவின் ரபாத் நகரத்தில் பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனான் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜேர்மனியின் பெர்லினில், தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களின் நினைவு தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​போராடும் மக்கள் மீது போலீசு அடக்குமுறையை ஏவுகிறது.
ஜேர்மனியின் பெர்லினில், தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களின் நினைவு தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​போராடும் மக்கள் மீது போலீசு அடக்குமுறையை ஏவுகிறது.
பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் அக்டோபர் 5, 2024 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் வழியாக அணிவகுத்துச் செல்கின்றனர்.
பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் அக்டோபர் 5, 2024 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் வழியாக அணிவகுத்துச் செல்கின்றனர்.
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் துருக்கி, அங்காராவில் துருக்கி மற்றும் பாலஸ்தீனக் கொடிகளை அசைத்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் துருக்கி, அங்காராவில் துருக்கி மற்றும் பாலஸ்தீனக் கொடிகளை அசைத்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
அக்டோபர் 7 அன்று லெபனானின் தெற்கு துறைமுக நகரமான சிடோனில் காசா மீதான இஸ்ரேலின் போரின் ஓராண்டு நினைவேந்தலின் போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டன. ”பாலஸ்தீனத்தை கைவிட மாட்டோம்” என அந்த பேனரில் எழுதப்பட்டுள்ளது.
அக்டோபர் 7 அன்று லெபனானின் தெற்கு துறைமுக நகரமான சிடோனில் காசா மீதான இஸ்ரேலின் போரின் ஓராண்டு நினைவேந்தலின் போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டன. ”பாலஸ்தீனத்தை கைவிட மாட்டோம்” என அந்த பேனரில் எழுதப்பட்டுள்ளது.

சந்துரு
நன்றி: அல் ஜசீரா

அக்டோபர் 6: உலகம் முழுவதும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்!

0
இத்தாலியின் ரோமில் நடந்த போராட்டத்தில் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடி ஒருவர்.
இத்தாலியின் ரோமில் நடந்த போராட்டத்தில் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடி ஒருவர்.

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலில் இன அழிப்புப் போர் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் காசா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தக்கோரி, அக்டோபர் 6 அன்று உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பேரணி நடைபெற்றது.

வாஷிங்டனில், DC இல், 1,000 க்கும் மேற்பட்டோர் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலுக்கு ஆயுதம் மற்றும் இராணுவ உதவிகள் வழங்குவதில் முதன்மையான நாடு அமெரிக்காவாகும். இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உதவிகள் வழங்குவதை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஒரு நபர் தீக்குளிக்க முயன்றார், அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசு தீயை அணைப்பதற்குள் அவரது இடது கை எரிந்தது.

படிக்க : இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்துத் தீக்குளித்த அமெரிக்க ஊடகவியலாளர்

காசாவில் இதுவரை 42,000 பாலஸ்தீன மக்களை கொடூரமாக கொலைசெய்துள்ளது பாசிச இஸ்ரேல். இந்த கொலைபாதக போரை உடனடியாக நிறுத்தக்கோரி, ஐரோப்பா-ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா-அமெரிக்கா ஆகிய கண்டங்களின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ரோமில் நடந்த பாலஸ்தீனிய ஆதரவு போராட்டம் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தது, டஜன் கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசார் மீது பாட்டில்கள் மற்றும் பட்டாசுகளை வீசியதால், அவர்கள் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளால் பதிலடி கொடுத்தனர்.

லண்டனில் நடந்த “பாலஸ்தீனத்திற்கான தேசிய அணிவகுப்பில்”, “பொதுமக்கள் மீது குண்டுவீச்சை நிறுத்து” என்ற கோஷங்கள் “லெபனானை கைவிட்டு விடுங்கள்” என்ற முழக்கங்களுடன் இணைந்தன.

நியூயார்க், சிட்னி, புவெனஸ் அயர்ஸ், புது தில்லி மற்றும் கராச்சி உள்ளிட்ட நகரங்களில் வார இறுதியிலும் திங்களன்றும் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் திட்டமிடப்பட்டன.

000

அயர்லாந்தின் டப்ளினில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் ஒரு பதாகை மற்றும் கொடிகளை வைத்துள்ளனர்.

000

ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.

000

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் பேரணி.

000

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் பாலஸ்தீன ஆதரவு பேரணியின் போது பாலஸ்தீனிய மற்றும் இந்தோனேசியக் கொடிகளை ஏந்தியிருந்தனர்.

000

அமெரிக்காவின் வாஷிங்டன், டிசியில் உள்ள வெள்ளை மாளிகை அருகே பாலஸ்தீன ஆதரவு பேரணியில் தீக்குளிக்க முயன்ற நபர்

000

கிரீஸின் மத்திய ஏதென்ஸில் மக்கள் பேரணியில் பாலஸ்தீனக் கொடியை அசைத்தனர்.

000

பாலஸ்தீன ஆதரவாளர்கள் மத்திய லண்டன், UK வழியாகச் செல்லும்போது கொடிகளை அசைத்து, பலகைகளை ஏந்தியபடி உள்ளனர்.

000

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் ஒருவர் கொடியை அசைத்தார்.

000

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியின் போது போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

000

ஈக்வடாரின் குய்ட்டோவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் மக்கள் கலந்து கொண்டனர்.

000

வெனிசுலாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கராகஸில் உள்ள ஐநா அலுவலகத்தை நோக்கி வெனிசுலா மக்கள் பேரணி நடத்தினர்.

000

மெக்சிகோவின் மெக்சிகோ சிட்டியில், அதன் முதலாம் ஆண்டு நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் ரெஃபார்மா அவென்யூவில் கூடினர்.

000

போர் எதிர்ப்பு மற்றும் இனப்படுகொலை போராட்டங்களின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மக்கள் அணிவகுப்பு நடத்துகிறார்கள், மேலும் தங்கள் கோரிக்கைகளைத் தொடரவும், இஸ்ரேல் மீது ஆயுதத் தடை விதிக்கவும், காசா, லெபனான் மற்றும் ஏமன், டெட்ராய்ட், யு.எஸ்.

000

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் பாலஸ்தீன மற்றும் லெபனான் கொடிகளை ஏந்திய ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

000

கனடாவின் டொராண்டோவில் உள்ள யோங்கே மற்றும் டன்டாஸ் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.

000

பிரான்சின் பாரிஸில் காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேலிய தாக்குதல்களை நடத்துவதற்கு மக்கள் ஒன்று கூடினர்.

000

மலேசியாவின் கோலாலம்பூரில் காசா மற்றும் லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பேரணி நடத்தினர்.

000

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் பாலஸ்தீன மற்றும் லெபனான் கொடிகளை ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி.

000

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் பாலஸ்தீன மற்றும் லெபனான் கொடிகளை ஏந்தியபடி மக்கள் திரண்டனர்.

000

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மக்கள் ஒன்று கூடினர்.

000

சந்துரு
நன்றி: அல் ஜசீரா

தி.மு.க அமைச்சர்களும் சாம்சங் நிறுவனமும் செய்திருக்கும் கூட்டுசதி

திமுக அமைச்சர்களும் சாம்சங் நிறுவனமும் செய்திருக்கும்
கூட்டுசதியை வன்மையாக கண்டிக்கிறோம்

ன்று (07-10-2024) மாலை 3 மணி அளவில் திமுக அமைச்சர்கள் TRP ராஜா, தா மோ அன்பரசன், வி சி கணேசன் மூவர் முன்னிலையில் நமது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழு தோழர் அ சவுந்தரராஜன், இ முத்துக்குமார், சங்க நிர்வாகிகள் எல்லன், மாதேஷ், மோகன்ராஜ், பாலாஜி, ஹாசிம், சிவனேசன், சுபாஷ் உள்ளிட்ட 9 பேர் குழு பேச்சு வார்த்தை நடத்தியது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் எங்கள் சங்கத்தோடு பேசுவதற்கு நிர்வாகம் சம்மதிக்க வேண்டும்; அரசின் முன்னால் பேச்சுவார்த்தை நடத்த அரசு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்; தொழிற்சங்க உரிமைகளை ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய முடியாது என்று நமது நிலையை திட்டவட்டமாக தெரிவித்தோம். மேற்கண்ட நமது கோரிக்கைகள் குறித்து சாம்சங் நிர்வாகத்திடமும் முதலமைச்சரிடமும் நாளை தெரிவித்துவிட்டு எங்கள் முடிவை சொல்லுகிறோம் என்று அமைச்சர் த மோ அன்பரசன் அவர்கள் தெளிவுபட சொன்னார்.

நாம் வெளியே வந்து விட்டோம். பேச்சு வார்த்தையில் நடந்த அனைத்து விஷயங்களும் ஊடகங்கள் முன்னால் நமது தரப்பில் தெரிவிக்கப்பட்டன.

நாம் வந்த பிறகு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அமைச்சர்களும் சாம்சங் நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருக்க கூடிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஆவணத்தை சாம்சங் தொழிற்சாலையில் இருந்து முன்கூட்டியே அழைத்து வரப்பட்ட ஒரு சில அப்பாவி தொழிலாளிகளை கையில் வைத்துக்கொண்டு சாம்சங் நிறுவனமும் அமைச்சர்களும் ஒரு உடன்பாடு ஏற்பட்டதாகவும் அந்த செய்தியை ஊடகங்களுக்கு சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டது என்று அமைச்சர் அலுவலகங்களில் இருந்து அறிக்கையில் வெளியிடப்படுகின்றன. இதை எல்லா ஊடகங்களும் சமீபத்தில் வெளியிட்டுள்ளன. மேலும் தொழிற்சங்க போராட்டம் குறித்தும் தலைவர்கள் குறித்தும் அவதூறு செய்திகளை சாம்சங் நிர்வாகம் திட்டமிட்டு உருவாக்கி செய்து வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் பின்னால் கார்ப்பரேட் நிறுவனமும் அமைச்சர்களும் உடந்தையாக பகிரங்கமாக செயல்பட்டது என்பது தொழிலாளிவர்க்க வர்க்க போராட்டத்தில் திமுக அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம் கருங்காலித்தனம்.

பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கிறபோது, அவர்கள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டு நாளை சொல்கிறோம் என்று சொன்ன இந்த அமைச்சர்கள் புறவழியான சதி திட்டத்தின் மூலம் நிர்வாகத்துக்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதாக  செய்திவெளியிடுவது குழப்பம் ஏற்படுத்துவதாகும். சாம்சங் நிறுவனம் மற்றும் அமைச்சர் பெருமக்களின் இந்த இழிவான செயலை சிஐடியூ வன்மையாக கண்டிக்கிறது. நம்முடைய வீரம் செறிந்த வேலைநிறுத்தம்  போராட்டம் தொடரும். நாளை போராட்ட பந்தலில் தொழிலாளர்கள் குடும்பத்தோடு சங்கமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இ முத்துக்குமார்,
தலைவர்,
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ)


முகநூலிலிருந்து… முத்துக்குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் அக்டோபர் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் மக்கள் போராட்டங்கள் மூலம் இஸ்ரேலின் இனஅழிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவோம்!
  • பெண்கள் மீது தொடுக்கப்படும் பாசிச பயங்கரவாதம்!
  • மறுகாலனியாக்கம்: பெண்கள் மீதான அறிவிக்கப்படாதப் போர்
  • ஹேமா குழு அறிக்கை: திரைத்துறையில் நிறுவனமயமாகியிருக்கும் பாலியல் வன்முறை
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களின் சேமிப்பான ரூ. 10 இலட்சம் கோடியை களவாடும் மோசடி
  • அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
  • காஞ்சிபுரம் சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் வெல்க!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



அக்டோபர் 7 – காசா மீதான இனப்படுகொலை | இஸ்ரேலையும் ஏகாதிபத்தியங்களையும் முடக்குவோம்! தோழர் ரவி

அக்டோபர் 7 – காசா மீதான இனப்படுகொலையை இஸ்ரேல் துவங்கிய நாள்
இஸ்ரேலையும் அதற்கு உதவும் ஏகாதிபத்தியங்களையும் முடக்குவோம்!

தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
9444836642.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

மக்கள் போராட்டங்கள் மூலம் இஸ்ரேலின் இனஅழிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவோம்!

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் தொடங்கி ஓராண்டாகிவிட்டது. பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 42,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 97,000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தற்போது, இஸ்ரேலின் போர்வெறி லெபனானையும் அழிக்கத் தொடங்கியுள்ளது. பாலஸ்தீன மக்கள் கொன்றொழிப்பதற்கு எதிராகப் போராடிவந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ருல்லாவை படுகொலை செய்தது; பொதுமக்கள் பயன்படுத்தும் “பேஜர்”, “வாக்கி-டாக்கி”- களை வெடிக்கச் செய்து கொலை செய்தது; ஏவுகணை தாக்குதல் நடத்துவது என லெபனானிலும் ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்து வருகிறது, இனவெறி இஸ்ரேல் அரசு.

ஒருபுறம், மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் ஊடகங்களும் இஸ்ரேலை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இஸ்ரேலின் இனஅழிப்பு போருக்கு முன்னின்று உதவிக் கொண்டிருப்பதாலேயே இப்போர் ஓராண்டாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதிலும், சரிந்துவரும் தனது ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக உலகம் முழுவதும் போர் முனைகளை தீவிரப்படுத்திவரும் அமெரிக்கா, இஸ்ரேலின் இனஅழிப்பு போரை மூன்றாம் உலகப்போராக உருவாக்குவதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்து வருகிறது. இதன் பின்னணியில் இருந்துதான், இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு ஐ.நா. மன்றத்திலேயே லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளை ஒழித்துக் கட்டுவோம் என பகிரங்கமாக அறிவிக்கிறார். எனவே, இஸ்ரேலின் இன அழிப்பு போரை இனியும் தொடர அனுமதித்தால், அது ஒட்டுமொத்த உலக மக்களையும் பேரழிவை நோக்கி இட்டு செல்வதற்கே வழிவகுக்கும்.

இன்னொருபுறம், “அக்டோபர் 7” பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரின் ஓராண்டு நிறைவையொட்டி, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பாலஸ்தீன கொடிகளை கையில் ஏந்தி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டங்களில் “காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வா!” என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன. உண்மையில் இப்போராட்டங்கள்தான் பாசிச இஸ்ரேலையும் அதற்கு துணைநிற்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களையும் குலைநடுங்கச் செய்கின்றன. இப்போராட்டங்களை இஸ்ரேலின் இன அழிப்பு போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டும்.

குறிப்பாக, இஸ்ரேலின் இன அழிப்பு போருக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து உதவிக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசை எதிர்த்து இந்திய உழைக்கும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



வான வேடிக்கையும் பிக் பாக்கெட்டும் | கவிதை

வான வேடிக்கையும் பிக் பாக்கெட்டும்

விதவிதமாய்
பறக்கின்றன
சுகோய்
ரபேல்
பன்னாட்டு விமானங்கள்
இந்திய மானத்தை
காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன

கல்லா கட்ட முடிவெடுத்துவிட்டால் கார்ப்பரேட்டுகளுக்கு மானமென்ன
வெட்கம் என்ன?

வித விதமாய்
சுழல்கின்றன
வண்ணங்களை
அள்ளித் தெளிக்கின்றன

பல்லாயிரம் போலீஸ் பாதுகாப்பு

சிறு கடைகள்
மீன் கடைகள்
மீனவர்கள்
வியாபாரிகள்
புறக்கணிப்பு

உழைக்கும் மக்களைப் புறக்கணித்து
யாருக்கு
வான வேடிக்கை ?

நம்முடைய
வேதனைகளும் சோதனைகளும் தான்
அவர்களுக்கு
வான வேடிக்கை

ஒக்கி புயலில்
தத்தளித்த மீனவர்களை
காப்பாற்றாத விமானப்படைகளும்

துப்பாக்கிச் சூட்டிலிருந்து
காப்பாற்றாத
கடற்படைகளும்

மண்ணை
நீரை
வான்வெளியை
நஞ்சாக்கிய
வேதாந்தா –
கார்ப்பரேட்டிடமிருந்து
மக்களைக் காப்பாற்றாத ராணுவமும் போலீசும்

குட்டிக்கரணம்
போட்டுக்
கொண்டிருக்கின்றன

மாணவர்கள்
மீனவர்கள்
பெண்கள்
சிறு தொழில்
வியாபாரிகள்
அனைரையும்
புதைகுழியில்
தள்ளிவிட்டு
வான வேடிக்கைகளை
பார்க்கச் சொல்கிறார்கள்

காஷ்மீரின்
ஆசிபா முதல்
கதுவா உன்னாவ்
வரை எத்தனையோ
அரியலூர் நந்தினிகள்
அனைவரும்
தேசபக்த புதைகுழியில்
முனகுகிறார்கள்

காஷ்மீரமும் மணிப்பூரும்
எரிவது நிற்கவில்லை
பற்ற வைத்தவர்கள்
அல்லவா
வான வேடிக்கை காட்டுகிறார்கள் !

வரிசையாய்
நில்லுங்கள்
ஜிஎஸ்டியில் கேள்வி கேட்போரைக் காலில் விழ வைத்த கதைகளை
மறந்துவிடுங்கள்

பாரத் மாதா கி ஜெய்
என்று முழக்கமிடுங்கள்
லூப்சாலையின்
மீன் கடை நாற்றம் இனி இருக்கப் போவதில்லை

வெடி மருந்துகளின்
வாசனையில்
வாயைப் பிளந்து வானவேடிக்கையில் வாழ்வோம்
வாழ்க்கை
பிக்பாக்கெட்
அடிக்கப்பட்டதை
மறந்தபடி.


தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



லெபனான் மக்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலின் பாசிச பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்!

05.10.2024

லெபனான் மக்களை கொன்றொழிக்கும்
இஸ்ரேலின் பாசிச பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்!

கண்டன அறிக்கை

மெரிக்கா உள்ளிட்ட பல ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டணியோடு பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து கைப்பற்றி 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை கொன்றொழித்த பாசிச இஸ்ரேல் அரசு, தற்பொழுது லெபனானை அழிக்கத் தொடங்கியுள்ளது.

40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்தும் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை படுகாயமுறச் செய்து பாலஸ்தீனத்துக்கு சொந்தமான அந்த பாலஸ்தீனர்களை முற்றிலும் அழித்துக் கொண்டிருக்கிறது.

இந்த அநீதிக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராடி வருகிறார்கள்.

பணக்கார இஸ்லாமிய நாட்டின் அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது சின்னஞ்சிறு நாடான லெபனான் இஸ்ரேலின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து நின்றது. அதன் விளைவாக அந்த நாட்டின் மீது மிகப்பெரிய பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது பாசிச இஸ்ரேல்.

ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ருல்லா படுகொலை, போராளிகள் பயன்படுத்திய பேஜர் கருவிகளில் வெடி மருந்தை நிரப்பி ஆயிரக்கணக்கான இடங்களில் வெடிக்கச் செய்தது என லெபனானில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது.


படிக்க: லெபனான் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாசிச இஸ்ரேல் | மக்கள் அதிகாரம் கண்டனம்


ஐநா மன்றத்தில் லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளை ஒழித்து கட்டுவோம் என்று இஸ்ரேலின் அதிபர் நெதன்யாகு கொக்கரித்த போது ஐ.நா. மன்றம் வாயை மூடி அமைதியாகவே இருந்தது. இப்போது பெயரளவில் அமைதிப் பேச்சுவார்த்தை என ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

தற்போது நடைபெற்று வருவது போர் அல்ல; அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டணியுடன் தன்னை பாதுகாத்துக் கொண்டு சின்னஞ்சிறிய ஏழை நாடுகளை அழித்துக் கொண்டிருக்கும் பாசிச இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கையே.

பாலஸ்தீனம் இல்லாமல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது, லெபனான் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஈரானையும் அழிப்பதற்கு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் முனைந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டு மூன்றாவது உலகப் போரை உருவாக்குவதற்கான எல்லா வேலைகளிலும் அமெரிக்காவும் இஸ்ரேலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கூட்டாளி நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை பாசிச இசுரேல் அரசு உளவு பார்த்த நிகழ்வுகள் எல்லாம் வெளியே வருகின்றன. உலக நாடுகள் யாவற்றுக்கும் அடங்காத எல்லா நாடுகளிலும் தங்களுடைய உளவாளிகளை ஊடுருவி ஆட்டம் காண வைக்கும் பாசிச இசுரேல் அரசு ஒழிக்கப்பட வேண்டும்.

எப்போதும் இல்லாத வகையில் பாசிச மோடி அரசு, பாசிச இஸ்ரேலுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் இஸ்ரேல் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு, இஸ்ரேலின் நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் முடக்கப்பட வேண்டும்.

அது மட்டுமே பாலஸ்தீனர்களுக்கும் லெபனான் மக்களுக்கும் நாம் கொடுக்கும் ஆதரவாக இருக்க முடியும். நம்முடைய கண்ணீரும் கருணையும் ஒருபோதும் பயன் தராது.

நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலின் அலுவலகங்களையும் பொருளாதார நிறுவனங்களையும் முடக்குவோம் !

பாலஸ்தீன, ஈரான் மக்களுக்கு தோள் கொடுப்போம் !


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் | மக்கள் கருத்து

அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் | மக்கள் கருத்து

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



காசா: அப்பாவி பாலஸ்தீன மக்களை கொலைசெய்யும் பாசிச இஸ்ரேல் | படக்கட்டுரை

0

காசாவில் அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காசா நகரின் துஃபா சுற்றுப்புறத்தில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனிய குடும்பங்களுக்கு தங்குமிடம் வழங்கும் பள்ளியின் மீது மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது. இங்கு குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், இரண்டு தனித்தனி இஸ்ரேலிய தாக்குதல்கள் தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவிலும், காசா நகரத்தின் ஜெய்டவுன் புறநகர்ப் பகுதியிலும் ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

படிக்க : இஸ்ரேல் தாக்குதல்: சிரியாவில் அகதிகளாக தஞ்சமடையும் லெபனான் மக்கள் | படக்கட்டுரை

அதேபோல், என்கிளேவின் தெற்கில் உள்ள கான் யூனிஸில், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. பயங்கரவாத இஸ்ரேல் இராணுவம், உயிரை கையில் பிடுத்துக்கொண்டு செய்வதறியாது அலைந்துகொண்டிருக்கும் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்து வருகிறது.

ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பிற சிறிய பிரிவுகளின் ஆயுதப் பிரிவுகள் தனித்தனி அறிக்கைகளில், காசாவின் பல பகுதிகளில் இயங்கும் இஸ்ரேலியப் படைகளை டாங்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள், மோட்டார் குண்டுகள் மற்றும் வெடிக்கும் சாதனங்கள் மூலம் தங்கள் போராளிகள் தாக்கியதாகக் கூறினர்.

லெபனானில் இஸ்ரேல் தரைவழி நடவடிக்கையை ஆரம்பித்தபோது, காசா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. அதன் பராட்ரூப்பர்களும் கமாண்டோக்களும் ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லாவுடன் தீவிரமான சண்டையில் ஈடுபட்டதாகக் கூறினர்.

ஹெஸ்பொல்லாவின் தலைமைக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய பேரழிவுகரமான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டது.

படிக்க : லெபனான், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் | புகைப்படக் கட்டுரை

“காசாவில் ஆக்கிரமிப்பு அதன் கொலையைத் தொடரும் அதே வேளையில், உலகத்தின் பார்வை இப்போது லெபனான் மீது உள்ளது. குறைந்த பட்சம் இன்னும் பல மாதங்களுக்கு போர் தொடரும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று காசா நகரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சமீர் முகமது (வயது 46) கூறினார்.

“இஸ்ரேல் காசா, யேமன், சிரியா, லெபனான் ஆகிய இடங்களில் தனது படையை கட்டவிழ்த்து விடுவதால், அது இப்போது தெளிவாகத் தெரியவில்லை, மேலும் எதிர்காலத்தில் வேறு எங்கு இருக்கும் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்று மேலும் கூறினார்.

***

பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, நுசிராட்டில் இரண்டு வீடுகள் மீது இஸ்ரேலிய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.

***

நுசிராத் அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உடல்கள் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

***

இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு வரப்படுகின்றன.

***

ஹமாஸ் பயன்படுத்திய கட்டளை மையங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

***

நுசிராட்டில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இடத்தில் பாலஸ்தீனியர்கள் கூடினர்.

***

நுசிராட்டில் இஸ்ரேலிய தாக்குதல் நடந்த இடத்தில் காயமடைந்த ஒருவரை பாலஸ்தீனியர்கள் சுமந்து செல்கிறார்கள்.

***

நுசிராட்டில் இஸ்ரேலிய தாக்குதல் நடந்த இடத்தில் பாலஸ்தீனியர்கள் பலியானவரின் உடலை எடுத்துச் சென்றனர்.

***

டெய்ர் எல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தையின் உடலை ஒருவர் வைத்திருக்கிறார்.

***

சந்துரு
நன்றி: அல் ஜசீரா

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 600 பேர் கைது!

0

லகின் மிகப்பெரிய செமிகண்டக்டர் மற்றும் கம்ப்யூட்டர் சிப் உற்பத்தியாளர்களில் ஒன்றான சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சுமார் 600 பணியாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யூ தொழிற்சங்க உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதற்காக அக்டோபர் 1 அன்று தமிழ்நாடு போலீசுத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு வாரங்களாக, இந்தியாவில் உள்ள தென் கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராடும் தொழிலாளர்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்கள்?

ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை மற்றும் தொழிற்சங்கம் வைக்கும் அங்கிகாரம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள் சாம்சங் தொழிலாளர்கள்.

நாட்டிலேயே இரண்டாவது பெரியது சென்னையில் இயங்கும் சாம்சங் நிறுவனமாகும். இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் வருடாந்திர வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை இந்த ஆலை உருவாக்குகிறது. இது 12 பில்லியன் டாலர் ஆகும்.

போராட்டங்கள் எப்போது தொடங்கியது?

வேலைநிறுத்த போராட்டம் கடந்த செப்டம்பர் 9 அன்று தொடங்கியது. அன்று முதல் ஆயிரக்கணக்கான சாம்சங் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு தற்காலிக கூடாரம் அமைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினம் தினம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை போராட விடாமல் காவல்துறையினர் கைது செய்து தடுத்து வைப்பதாக தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. “செப்டம்பர் 9 முதல், குறைந்தது 10,000 தொழிலாளர்கள் போலீசால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்று EFE செய்தி நிறுவனத்திடம் தொழிற்சங்க உறுப்பினர் எஸ்.கண்ணன் கூறினார். இருப்பினும் பெரும்பாலானவர்கள் விரைவில் விடுவிக்கப்பட்டனர்.

இதுவரை, ஆலை நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்ததால், நிறுவனத்திற்கும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலையே நிலவிவருகிறது.

சாம்சங் எவ்வாறு எதிர்கொண்டது?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அச்சுறுத்தியுள்ளது சாம்சங் நிர்வாகம். இருப்பினும் அவர்களுடன் ஒருமித்த தீர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பித்தலாட்டம் செய்து வருகிறது.

தென் கொரிய நிறுவனம் இந்தியாவில் மற்றொரு தொழிற்சாலையை நடத்துகிறது, இது புது தில்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் அமைந்துள்ளது. நேஷனல் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் (NSEU) அங்குள்ள நிறுவனத்தின் 24% பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, சுமார் 31,000 உறுப்பினர்கள் உள்ளனர். இத்தொழிற்சாலைகளில் சாம்சங் ஊழியர்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தொடர்ந்து தங்கள் உரிமைக்காகவும் பல்வேறு கோரிக்கைகளுக்காவும் போராடிவரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் துணைநிற்க வேண்டியது அவசியம்.

சந்துரு
நன்றி: த வயர்

இஸ்ரேல் தாக்குதல்: சிரியாவில் அகதிகளாக தஞ்சமடையும் லெபனான் மக்கள் | படக்கட்டுரை

0

ஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக சுமார் 100,000 பேர் லெபனானில் இருந்து சிரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பு (UNHCR) தெரிவித்துள்ளது.

“லெபனானில் இருந்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பி சிரியாவிற்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ எட்டியுள்ளது” என்று செப்டம்பர் 30 அன்று X தளத்தில் ஐ.நா அகதிகள் அமைப்பு (UNHCR) தலைவர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களில் எல்லையைக் கடக்கும் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என ஐ.நா.வின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

படிக்க : லெபனான், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் | புகைப்படக் கட்டுரை

செப்டம்பர் 23 அன்று, லெபனானை உள்ளடக்கிய இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களின் கவனம் காசாவிலிருந்து விரிவடைந்து, ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா ஆயுதக் குழுவை தாக்குவதாக கூறியது. லெபனானில் ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களால் குழுவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா செப்டம்பர் 27 அன்று கொல்லப்பட்டார்.

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலால் கடந்த வாரத்தில் லெபனானில் 14 துணை மருத்துவர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

***

லெபனான் அகதிகள் சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடையிலான ஜூசியா எல்லைப்பகுதிக்கு வந்தடைந்தனர்

***

UNHCR-வின் கூற்று படி, போரினால் பாதிக்கப்பட்ட லெபனான் மக்கள் சிரியாவிற்கு இடம்பெயர்வது ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிவிட்டது.

***

Jdeidet Yabous எல்லையில் ஒரு சிரிய சிறுவன்.

***

UNHCR இன் படி, இஸ்ரேலிய தாக்குதல்களால் சிரியாவிற்கு தப்பிச் செல்லும் மக்களில் 80 சதவீதம் பேர் சிரிய நாட்டினர் மற்றும் 20 சதவீதம் பேர் லெபனானியர்கள்.

***

லெபனான் மக்கள், இஸ்ரேலிய குண்டுவீச்சிலிருந்து தப்பியோடி, சிரியாவின் Jdaidet Yabous இல் எல்லையை கடக்கும் போது.

***

லெபனானில் இருந்து இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பி சிரியாவிற்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ எட்டியுள்ளது.

***

லெபனானில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் Jdeidet Yabous இல் உள்ள எல்லைக் கடவை வந்தடைந்தனர்.

***

சந்துரு
நன்றி : அல் ஜசீரா

உள் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவும் தீர்வும் என்ன?

டந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி, பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியின (ST) சமூகத்தினரை துணைப் பிரிவுகளாக (Sub-Classification) வகைப்படுத்தி, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. நீதிபதி பேலா எம்.திரிவேதி தவிர மற்ற ஆறு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பாக, பட்டியல் சாதியினர் ஒரே மாதிரியான குழு (Homogenous) இல்லை. எனவே, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்குள் துணைப் பிரிவுகளை உருவாக்கி, உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் கிடையாது என்றும், அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பளித்தனர். மேலும், தீர்ப்பு வழங்கிய ஆறு நீதிபதிகளில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சுபாஷ் சந்திர சர்மா ஆகிய நான்கு பேர், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் ‘‘கிரீமிலேயர்’‘ (Creamy Layer) நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்றும் பரிந்துரைத்தனர்.

ஆதரவும் எதிர்ப்பும்:

இத்தீர்ப்பின் மூலம், பல்வேறு மாநில அரசுகள் பட்டியில் சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் அருந்தததியிருக்கான மூன்று சதவிகித உள் இடஒதுக்கீட்டிற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தி.மு.க. அரசு இதை வரவேற்றுள்ளது. தமிழ்நாட்டைப் போலவே, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர மாநில அரசுகளும் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளன.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி என பெரும்பான்மையான தலித் கட்சி தலைவர்களும், இயக்கங்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தேசிய தலித் மற்றும் பழங்குடி அமைப்புகளின் கூட்டமைப்பு (NACDAOR) உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்தது. பட்டியிலின மற்றும் பழங்குடியின மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பறிக்கக் கூடிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒன்றிய அரசு நிராகரிக்க வேண்டும்; பட்டியல், பழங்குடி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு குறித்து புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. அதேசமயம், உள் இடஒதுக்கீடு கேட்டு போராடிவரும் தலித் அமைப்புகள் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளன.

படிக்க : தமிழ்நாட்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத பெண்களின் கருவறை நுழைவுக்கனவு – நனவாகுமா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க., சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகள் இத்தீர்ப்பை வரவேற்றிருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன்,

‘‘உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மாநில அரசுகளுக்கான உள் ஒதுக்கீடு உரிமையும், கிரீமிலேயர் ஆகிய இரண்டும்தான் இங்கே மிக முக்கியமான பிரச்சனைக்குரியவை என்பதை நாம் உணர வேண்டும். தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் ஆந்திராவில் வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு வழங்கப்படுவது sub quota அதாவது… பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை. ஆனால் ஆந்திராவில் வழங்கப்படுவது sub class. இது பட்டியல் சமூகத்தை தனி அங்கமாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவது. எனவே பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையையே நசுக்கும் விதமாக இத்தீர்ப்பு அமைகிறது’‘ என்றார்.

மேலும், ‘‘பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இடஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிப்பதையும்; வருமான வரம்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும். மாநில அரசுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் வழங்குவதைத்தான் கடுமையாக எதிர்க்கிறோம். சாதி இந்துகளின் அரசுதான் இந்தியா முழுவதும் பல்வேறும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்த அதிகாரத்தை கொண்டு உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தலித் மக்கள் சிதறடிக்கப்படுவார்கள்’‘ என்றார். ஆனால், வி.சி.க-வின் இந்த நிலைப்பாட்டிற்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

நீண்ட மௌனத்திற்குப் பிறகு வாய்திறந்த காங்கிரசின் தேசியத் தலைமை, பட்டியல் வகுப்பின் துணைப்பிரிவு குறித்தான தீர்ப்பு தலித் சமூகத்திற்கு பெரும் பின்னடைவு என்றும், இடஒதுக்கீட்டை மெதுவாக முடிவுக்குக் கொண்டுவரும் பா.ஜ.க-வின் மறைமுக நோக்கத்தை இது காட்டுகிறது என்றும் விமர்சித்திருந்தது. ஆனால், கீரிமி லேயர் அடிப்படையில் மட்டுமே காங்கிரசு இந்த விமர்சனத்தை முன்வத்துள்ளது. இவ்வாறு நாடு முழுவதும், எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் ஆளுக்கொரு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அபாயம் என்ன?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முக்கியமான மூன்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, பட்டியல் சாதியினரை துணைப்பிரிவாக வகைப்படுத்துவது அவர்களை பிளவுபடுத்தி தலித் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்ற வாதம் பெரும்பான்மையான தலித் தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், இந்த வாதத்தை பெரும்பான்மையான ஜனநாயக சக்திகள் மறுக்கின்றனர். ஏனெனில், தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள உள் இடஒதுக்கீடு என்பது தலித் மக்களிடையே மிகவும் பின்தங்கியுள்ள, மற்ற பட்டியல் சாதி பிரிவினாராலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகக் கூடிய அருந்ததியின மக்களுக்குதான் மூன்று சதவிகித இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற பட்டியல் சாதி மக்களின் இடஒதுக்கீடு உரிமைக்கு எந்த பாதிப்பும் வராது, மேலும் அவர்கள் தனிப்பிரிவாக பிரிக்கப்படவில்லை. மேலும், 2009 முதல் கொடுக்கப்பட்ட இந்த உள் ஒதுக்கீடு (முன்னுரிமை அடிப்படையில்)  அருந்ததியினர்  சாதிகளைச் சேர்ந்த மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறிது முன்னேறுவதற்கு உதவி செய்துள்ளது என்று வாதங்களை முன்வைக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள உள் இட ஒதுக்கீடும் மற்ற மாநிலங்களில் கொடுக்கப்படும் உள் இட ஒதுக்கீடும் வெவ்வேறானவை. பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கொடுக்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு என்பது பட்டியல் சாதிகளை பல்வேறு பிரிவுகளாகப் பிரிவாக பிரித்து அவர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்குகிறது. சான்றாக,  ஆந்திராவில் (ஒன்றுபட்ட ஆந்திரா) சந்திரபாபு நாயுடு அரசு ‘‘மாதிகா’‘ சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று, பட்டியல் சாதிகளை ஏ, பி, சி, டி நான்கு துணைப் பிரிவுகளாக பிரித்து 1997-இல் இட ஒதுக்கீடு வழங்கியது.

இதை எதிர்த்து ஆந்திராவைச் சேர்ந்த ஈ.வி சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 341-ன் கீழ் பட்டியலிடப்பட்ட சாதிகள் (SCs) ஒரே மாதிரியான குழு; அதனுள் துணைப் பிரிவுகளை வகைப்படுத்த முடியாது; பட்டியல் சாதியினரைத் துணை பிரிவுகளாக பிரிப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டில்தான் தற்போது உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது.

பஞ்சாப் அரசும் பட்டியல் சாதியான வால்மிகி மற்றும் மசாபி-யை துணைப்பிரிவாக வகைப்படுத்தித்தான் இட ஒதுக்கீடு வழங்கியது. இதேபோல ஹரியானா, மகாராஷ்டிர என பல மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட உள் இடஒதுக்கீடு என்பது பட்டியல் சாதிகளை பல்வேறு துணைப்பிரிவுகளாக பிரிக்கும் விதமாகவே உள்ளது. இத்தகைய உள் இடஒதுக்கீட்டின் மூலம் ஒரு பிரிவில் உள்ள பற்றாக்குறையை இன்னொரு பிரிவு பூர்த்தி செய்ய ஒருபோதும் முடியாது. ஒரு பிரிவுக்குக் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் அதற்கு ஏற்றபடி பிரிவில் ஆட்கள் இல்லை என்றால், அந்தப் பணியிடமானது மற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செல்லாமல் பொதுப் பிரிவுக்குச் செல்லும். இதனால், பட்டியல் சாதியினரின் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

துணைப் பிரிவுகளாக பிரித்து உள் இட ஒதுக்கீடு கொடுப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட சாதிகள் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்படுகின்றன. ஏற்கனவே பண்பாடு, வாழிடம், மொழி ஆகியவற்றால் பிரிந்துள்ள தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள், நிரந்தரமாகவே தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள மற்ற சாதியினருக்கும் நமக்கும் சம்பந்தம் கிடையாது என்ற நிலைக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பட்டியலின ஓர்மையை ஒழித்துக் கட்டுவதற்கான சதியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

இரண்டாவது, அரசியலமைப்பின் 341-வது பிரிவின் படி, குடியரசுத் தலைவருக்குதான் குறிப்பிட்ட சாதி, இனம், பழங்குடி மக்களை பட்டியிலின சாதியாக அறிவிக்கும் அதிகாரம் உள்ளது. மேலும், ஒரு குறிப்பிட்ட பிரிவைச் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும் உரிமையுள்ளது. ஆனால், தற்போது மாநிலங்களுக்கு அவ்வதிகாரம் வழங்கப்படுள்ளதன் மூலம், மாநில அரசுகள் தங்கள் விருப்பம் போல் செயல்பட்டு, பட்டியலின மக்களைக் கூறு போடுவது, பட்டியலில் இருந்து ஒரு சாதியை வெளியேற்றுவது ஆகிய செயல்களைத் தன்னிச்சையாக செய்வதற்கு வழிவகுக்கும். ஓட்டுக்கட்சிகள் தங்களது தேர்தல் ஆதாயத்திற்காகவும், பட்டியல் சாதி மக்களை அணிதிரட்டுவதற்கும் துணைப்பிரிவை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வர். சான்றாக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானவில் பிரச்சாரம் செய்த மோடி, மாதிகா சாதியினரின் துணைப்பிரிவு கோரிக்கை நிறைவேற்றப்படும் என பேசினார். இதனால், மாதிகா சாதியைச் சேர்ந்த அமைப்பு பா.ஜ.க-விற்கு வாக்களிப்பதாகக் கூறியிருந்தது.

தற்போது ஒன்றியத்தில் பா.ஜ.க கும்பல் ஆட்சியில் இருப்பதால் இவ்வதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருப்பது நல்லதுதானே என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், பட்டியல் சாதிகளைத் துண்டாடுவதற்கான வாய்ப்பை, பா.ஜ.க கும்பலுக்கு முன்பை விட எளிமைப் படுத்துவதாகவே இத்தீர்ப்பு உள்ளது. பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களில் பட்டியலின மக்களுக்கு உரிமைகளைக் கொடுக்கிறோம் என்ற பெயரில் அச்சாதிகளை பிரித்து வைத்து உள் இட ஒதுக்கீடு அளித்தால் என்ன ஆகும்? தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற ஒரு பதத்தையே ஒழித்துக் கட்டி, அவர்களுக்குள் மேலும் ஒவ்வொருவரும் தனிப்பிரிவுகள் என்று சிந்திக்க வைப்பதற்கான தொடக்கம் இது.

இறுதியாக, துணைப்பிரிவு குறித்து தீர்ப்பு வழங்கும்போது எஸ்.சி., எஸ்.டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளார்கள். இந்த வழக்கின் மையப் பொருளுக்குச் சம்பந்தம் இல்லாமல் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர். இது பரிந்துரைதான், அதனால் பாதிப்பில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இதற்குப் பின்னால் பட்டியல் சாதி மக்களின் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான  நோக்கமே உள்ளது. இதற்கு முன்னரும் உச்ச நீதிமன்றம் பட்டியல் பிரிவினரின் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையைத் திணிப்பதற்கு முயற்சித்துள்ளது.

இட ஒதுக்கீட்டிற்கு வருமான வரம்பு நிர்ணயிப்பதைத்தான் கிரிமீ லேயர் என்கிறார்கள். நமது நாட்டின் அரசியல் அமைப்பு படி, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவுமே பின்தங்கி இருக்கிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மண்டல் குழு பரிந்துரைகள் பற்றிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடந்தபோது, பெரும்பான்மையான நீதிபதிகள் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் ‘கிரீமிலேயர்’ என்ற பொருளாதார அளவுகோல் வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.

இதனால், 1993-ஆம் ஆண்டு முதல் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஓ.பி.சி பிரிவினருக்கே கிரீமி லேயர் என்பது பொருந்தாது என்று ஏற்கனவே கூறப்பட்டுவரும் நிலையில், திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே உச்சநீதிமன்றம் இக்கருத்தைக் கூறியுள்ளது.

காவி கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணைபுரியும் உச்ச நீதிமன்றம்:

ஒருபுறம், ‘மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது’ என்று சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகிறது காவி கும்பல். கடந்த ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமது வாக்குவங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 15-லிருந்து 17 சதவிகிதமாகவும் எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மூன்றிலிருந்து ஏழு சதவிகிதமாகவும் உயர்த்தியது பா.ஜ.க. அரசு. மேலும், முஸ்லிம்களுக்கு இருந்த நான்கு சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்த பா.ஜ.க, அதை லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகா சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு தலா இரண்டு சதவிகிதமாக பிரித்து வழங்கியது. இதன்மூலம் ஒரேநேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைக் கிளறிவிடுவதோடு, கர்நாடகத்தில் மிகப்பெரிய வாக்குவங்கியைக் கொண்டுள்ள லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகர்களை தன் பக்கம் திரட்ட முயற்சித்தது.

படிக்க : அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

தற்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்தில் கணிசமான மக்கள் தொகை கொண்ட மாதிகா சாதியினருக்கு துணைப் பிரிவாக அங்கீகாரம் வழங்குவதாக பா.ஜ.க கூறுவதும், அம்மக்களை தனக்கான அடித்தளமாக மாற்றிக் கொள்வதற்குதான். இதன் மூலம், இதர பட்டியல் சாதியினரான மாலா போன்றோரிடம் வெறுப்பு அரசியலை மேற்கொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் உண்மையான நோக்கம் இட ஒதுக்கீட்டை முழுமையாக ஒழித்துக் கட்டுவதுதான். 1990-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட போது, இது ‘இந்துதேசத்தை பிளவுபடுத்தும்’ முயற்சி என்று கொதித்தது ஆர்.எஸ்.எஸ்,. மண்டல் கமிஷனுக்கு எதிராக வட மாநிலங்களை வன்முறைக் காடாக்கியது சங்கப்பரிவாரக் கும்பல். எந்த இட ஒதுக்கீடு இந்துதேசத்தை பிளவுபடுத்தும் என்று நஞ்சைக் கக்கியதோ, இன்று அதே இடஒதுக்கீட்டை இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.

எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பு தற்செயலான நிகழ்வு அல்ல, இந்துராஷ்டிரக் கனவை அடைவதற்கு மத-சாதி பிளவுவாத அரசியலை மேற்கொண்டு வரும் காவி கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணை புரிவதற்காகவே உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது என்று பார்க்க வேண்டியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு அருந்ததியருக்கே ஆபத்தானது!

பொதுவாக, இந்தியாவில் சுமார் 3,000 முதன்மை சாதிகளும் 25,000 துணைச் சாதிகளும் இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பட்டியலினத்தோர் என 72 சாதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஆதி திராவிடர் – பறையர், தேவேந்திரர்-பள்ளர், அருந்ததியர் என்னும் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடங்குவர். இவர்களில், அருந்ததியர் பிரிவுக்குள் ஏழு சாதிகள் உள்ளனர். 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டின் அடிப்படையில், இந்த ஏழு சாதிகளுக்கும் சேர்த்து மூன்று சதவிகித உள் இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. பிற பட்டியலினத்தோருக்கு அதாவது, சுமார் 65 சாதிகளுக்கும் சேர்த்து 15 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது.

தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பலரும் வரவேற்கின்றனர். ஆனால், உச்ச நீதிமன்றக் கருத்தின்படி பார்த்தால், அருந்ததியர் பிரிவுக்குள்ளேயே இட ஒதுக்கீட்டின் பலனை ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு சாதியினர் தான் அதிகமாக அனுபவித்து வருவோராக இருப்பர்; அப்பிரிவில் உள்ள ஏழு சாதிகளையும் பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு அடிப்படையில் வகைப்படுத்தினால் சிலர் ஏ மற்றும் பி பிரிவிலும், பலர் டி பிரிவிலும் வருவர். இவ்வாறு வகைப்படுத்தி உள் இட ஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், பறையர் – பள்ளர் ஆகிய சாதிகளில் உள்ளவர்களை ஒட்டுமொத்தமாக ஏ பிரிவில் வைக்க நேரிடும். அவ்வாறு செய்தால், பெருந்தொகையான – இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்திராத ஏழைகளையும், இட ஒதுக்கீட்டின் நன்மைகளை அனுபவித்தவர்களுடன் சேர்த்தே பாதிக்கும் வகையிலானதாக  அமையும். இது கிரீமி லேயர் கோட்பாட்டை விட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, இதுநாள் வரை ஒருகுறிப்பிட்ட பெரும்பிரிவின் கீழ் தங்களை அணிதிரட்டி வந்த இவர்களை நான்கைந்து குழுக்களாக கூறுபோடுவதாகவும் மாறிவிடும். இத்தகைய அபாயத்தைத்தான் வி.சி.க உள்ளிட்ட பலரும் முன்வைக்கிறார்கள்.

இது மட்டுமின்றி, சமூக – பொருளாதாரக் கணக்கெடுப்புகள், சாதிவாரிக் கணக்கெடுப்புகள் ஏதுமின்றி திடுமென இத்தகைய நடைமுறையைப் பின்பற்றச் சொல்லி உத்தரவிடுவதன் நோக்கத்தைப் பலரும் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். இதேபோலத்தான் இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில், எந்த வகையான ஆய்வுமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சாதியினருக்கான(EWS) 10 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் படிப்படியாக இட ஒதுக்கீட்டை இல்லாதொழிப்பதையே சங்கப்பரவாரக் கும்பல் இலக்காக வைத்துள்ளது. அதற்குத் துணைபுரியும் வகையிலேயே உச்ச நீதிமன்றத்தின் துணை வகைப்பாடு – உள் இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு அமைந்துள்ளது என்பதே நமது குற்றச்சாட்டு.

சர்வரோக நிவாரணியா இட ஒதுக்கீடு?

பட்டியல் – பழங்குடிகளாக இருந்தாலும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அவர்கள் எல்லாம் ஒரே தகுதி கொண்டவர்கள் அல்ல என்கிறது உச்சநீதிமன்றம். இது குறித்த பருண்மையான ஆய்வுகளின் மூலம் துணை வகைப்படுத்தலைச் செய்து, உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிறது. இதன் மூலம் பின்தங்கிய மக்களை முன்னேற்றும் கருவியாக இட ஒதுக்கீட்டை முன்னிறுத்த முடியுமென நினைக்கின்றனர் நீதிபதிகள்.

இன்னொருபுறத்தில், இட ஒதுக்கீட்டின் மூலம் ஒரு தலைமுறையச் சேர்ந்தவர் அரசு அதிகாரியாகவோ, பணக்காரராகவோ மாறுவதால் அவரது பொருளாதார நிலைமையில்தான் மாற்றம் ஏற்படுகிறதே ஒழிய, சாதிய நிலைமையில் அல்ல என்கின்றனர் கிரீமி லேயர் எதிர்ப்பாளர்கள்.

ஆனால், மேற்சொன்ன பிரிவினரது பிள்ளைகளும், இன்னும் இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத ஏழைகளின் பிள்ளைகளும் எப்படி ஒரே மாதிரியான போட்டியில் ஈடுபட முடியும்? எத்தனை தலைமுறைக்கு இட ஒதுக்கீடு கொடுத்தாலும் சாதிய நிலைமையில் மாற்றம் வந்துவிடுமா? சாதியின் காரணமாகவே, தன் சாதியிலேயே கீழ்நிலையில் உள்ளவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கிறார்களே இது நியாயமா? இதுவரை வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு என்ன தீர்வு? முன்னேறிய சாதிகளில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு வழங்கும் போது எங்களுக்கு என்ன நீதி? எனவே இட ஒதுக்கீட்டால் அடைந்துள்ள பொருளாதார முன்னேறத்தையும் கணக்கில் கொள்வது அவசியம் என்ற கருத்தை பிற்படுத்தப்பட்டவர்கள் முதல் பட்டியலினத்தவர்கள் வரையிலும் சிலர் முன்வைக்கிறார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இவையெல்லாம் நியாயமானவை என்றே தோன்றும். ஏனெனில், ஒவ்வொரு தரப்புக்கும் பொருந்தக் கூடிய நியாயங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்த வாதங்கள் எல்லாம், இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்புக்கான தீர்வாகவும், சாதி ஒழிப்புக்கான வழிமுறைகளில் ஒன்றாகவும், சமூக சமத்துவத்தைக் கொண்டு வரும் கருவியாகவும் கருதிக் கொள்வது என்ற அடிப்படைகளில் இருந்து எழுபவையே.

ஆனால், சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பை உறுதிசெய்வது இட ஒதுக்கீட்டின் நோக்கம் அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்கள் பிரிவினருக்கு, ஏற்கெனெவே இருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட அளவுக்கு சலுகை கொடுக்கவே இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. சாதிய ஆதிக்கத்தின் விளைவாக சமூகத்தில் நிலவும் குமுறல்களுக்கு தற்காலிக மருந்து; பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி மக்களில் கணிசமானோரை முன்னுக்குக் கொண்டு வருதல் என்ற வகையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமே இட ஒதுக்கீடு.

 பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தளமும் களமும் எவை?

இட ஒதுக்கீட்டின் மூலமாக, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் அனைவருக்குமான கல்வி – வேலைவாய்ப்பு எக்காலத்திலும் உருவாகாது. அவற்றை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. மக்கள் நல அரசு, ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டாலும் அனைவருக்குமான கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அரசுகளுக்கு எந்தவித அக்கறையும் இருந்ததில்லை. கல்வி உள்ளிட்ட அனைத்தும் கார்ப்பரேட்மயமாவதும், தொழில்கள் – பொதுத்துறைகளை நடத்துவதில் இருந்து அரசு விலகிக் கொள்வதுமான மறுகாலனியாக்கக் காலகட்டம் இது. அரசு உயர்கல்வி நிறுவனங்களை எல்லாம் தன்னாட்சி மயமாக்கி, கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் திசையில் அரசின் திட்டங்கள் போடப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளின் தேவைக்கேற்பவே தொழிற்துறை வேலைவாய்ப்பு என்றாகிவிட்ட நிலையில்,  அரசு ஊழியர்கள், அதிகாரிகளைக் கூட ஒப்பந்த முறையில் நியமித்துக் கொள்ளத் தொடங்கி விட்டன அரசுகள். இந்தச் சூழலில், இட ஒதுக்கீடு என்பதே பொருளற்றதாகி வருகிறது. இதையும் படிப்படியாக ஒழித்துக் கட்டும் நோக்கில் தான் 10 சதவிகித EWS ஒதுக்கீடு, பட்டியல் – பழங்குடிகளை துணை வகைப்படுத்தி உள் இட ஒதுக்கீடு என அடுத்தடுத்து காய் நகர்த்துகிறது ஒன்றிய அரசு.

படிக்க : லெபனான், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் | புகைப்படக் கட்டுரை

மாறிய இன்றைய சூழலுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு சாதியிலும், பிரிவிலும் உள்ள சிலருக்கு மட்டும் சலுகைகள் கிடைக்கின்றன, வேலைவாய்ப்பு கிடைக்கிறது என மற்ற அனைவரும் அங்கலாய்த்துக் கொள்வதால் என்ன பயன்? அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற இலக்கை நோக்கி நமது ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டியமைக்கா விட்டால் எதிர்கால சந்ததிக்கு நாம் விட்டுச்செல்ல என்ன மிச்சமிருக்கப் போகிறது? எதிரிகள் நமது ஒற்றுமையை, போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் எதையும், எந்த வகையான இனிப்பைத் தடவிக் கொடுத்தாலும் அதை இனங்கண்டு முறியடிப்பது அவசியம். இருக்கும் உரிமைகளைக் காக்கும் போராட்டமும், சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கான போராட்டமும் இணைந்தே பயணிக்க வேண்டும். வர்க்கப்போராட்டத்திற்கு மாற்று இட ஒதுக்கீடு என்று பேசிய காலங்கள் மலையேறி விட்டன; இட ஒதுக்கீட்டைக் காக்கவும் கூட வர்க்கங்களாக இணைந்து போராடிய வேண்டிய காலமே இது…

மதி

மக்கள் சீனக் குடியரசு – 75

மக்கள் சீனக் குடியரசு – 72 | மீள் பதிவு

தோழர் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நிலப் பிரபுக்களையும் பிற்போக்கு முதலாளிகளையும் ஏகாதிபத்திய தாசர்களையும் வீழ்த்தி மக்கள் சீனக் குடியரசை 75 ஆண்டுகளுக்கு முன்னர் 01-10-1949-ல் நிறுவியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1921, ஜூலை 1-அன்று துவங்கப்பட்டு 28 ஆண்டுகளில் ஒரு மகத்தான புரட்சியை சாதித்தது. புரட்சியை நோக்கிய பயணத்தில் பெரும் வெற்றிகள், பேரிழப்புகள் என அனைத்து சூழல்களையும் கையாண்டுதான், வெற்றிகரமாக புரட்சியை சாதித்தது.

டாக்டர் சன் யாட் சென் தலைமையிலான கோமிண்டாங் கட்சியுடன் இணைந்து பிற்போக்கு நிலப்பிரபுத்துவக் கும்பல் மற்றும் ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற தரகுமுதலாளித்துவ கும்பல் ஆகியோருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய முன்னணியைக் கட்டியது.

படிக்க : லெபனான், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் | புகைப்படக் கட்டுரை

சன் யாட் சென்னின் மறைவிற்குப் பிறகு கோமிண்டாங் கட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்த சியாங்–கே–ஷேக், கம்யூனிஸ்ட்களுடனான ஐக்கிய முன்னணியை சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டான்.

இக்காலகட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் கமிட்டியில் இருந்த சென்டு–ஷியுவினால் தலைமை தாங்கப்பட்ட வலது சந்தர்ப்பவாதக் கும்பல், ஐக்கிய முன்னணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பை முதலாளித்துவ கோமிண்டாங் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன் வைத்தது. சீனாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை கோமிண்டாங் தான் தலைமை தாங்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு இலாயக்கற்றது என்றும் முன் வைத்தது இந்தக்கும்பல்.

அதாவது முதலாளிகளின் தலைமையில், அவர்களுக்குக் கீழ் ஒரு வாலாக கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட்டு நிலப் பிரபுத்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறியது.

கட்சிக்குள் இருந்த இடது சந்தர்ப்பவாத சாங்குவா – டாவோ பிரிவினர் வெறுமனே தொழிலாளி வர்க்க இயக்கம் மட்டும் தனித்துச் செயல்பட வேண்டும் என முன் வைத்தனர்.

இந்த இரு தரப்புமே, யார் தலைமையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடக்கவேண்டும் என்பதில் எதிர் எதிர் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், சாராம்சத்தில் சீனாவின் நிலப்பிரபுத்துவத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் நேரடியாக சுரண்டப்படும் வர்க்கமும், பாட்டாளி வர்க்கத்தின் நேச சக்தியுமான விவசாய வர்க்கத்தினரை கண்டுகொள்ளாமல் விடுவதில் ஒரே நிலைப்பாட்டை எடுத்தன.

அப்போதுதான் தோழர் மாவோ, தொழிலாளி வர்க்கத் தலைமையில், விவசாயிகளை பிரதானமான நட்பு சக்தியாகக் கொண்டு அவர்களை அணிதிரட்டி சீனாவில் சிவப்புப் பிரதேசங்களை உருவாக்கி அதனை விரிவுபடுத்தி சீனப் புரட்சியை சாதிக்க முடியும் என்பதை முன் வைத்தார்.

மாவோ முன் வைத்த அந்தப் பாதை வெற்றியை சாதித்தது. சீனப் புரட்சி அக்டோபர் 1, 1949-இல் நிறைவுற்றது. ஆனால் 1926-ல் மாவோ இந்தப் பாதையை முன் வைத்த போது இந்த வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் இருந்திருக்க முடியாது. அன்று பிறரது கருத்தைப் போல் இதுவும் ஒரு கருத்து, அவ்வளவுதான்.

எனில், மாவோவினால் முன் வைக்கப்பட்ட வழி மட்டும் எப்படி வெற்றிபெற்றது ? ஏனெனில், அவர் தனது மூளையில் இருந்து அகநிலையாக இந்த வழியை முன் வைக்கவில்லை. சமூக எதார்த்தத்தை பரிசீலித்து – மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துதான் இந்த வழிமுறையைக் கண்டடைந்தார்.

1926-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், “சீன சமுதாயத்தில் வர்க்கங்களைப் பற்றிய ஆய்வு” (Analysis of the Classes in Chinese society) என்ற பெயரில் சீன சமூதாயத்தின் வர்க்க நிலைமைகளைப் பற்றிய பகுப்பாய்வை முன் வைத்தார். அதிலிருந்து சீனாவில் இருக்கும் வர்க்க முரண்பாடுகளை ஆய்வு செய்து, விவசாயிகளை திரட்டி, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான “புதிய ஜனநாயகப் புரட்சி” நடத்தப்பட வேண்டும் என்பதை முன் வைத்தார்.

படிக்க : “வினேஷ் போகத்” பாசிச கும்பலை நடுங்க வைத்த நெஞ்சுரம்

கட்சியில் இந்த வழிமுறை ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகும் கூட பலரது சந்தேகங்கள், எதிர்க்கருத்துக்களுக்கு பதில் சொல்லி அவர்களுக்கு தமது ஆய்வை உணரச் செய்யும் வகையிலான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி, கட்சியில் இருப்பவர்களின் மனப்பூர்வமான அறிவுப்பூர்வமான பங்களிப்பை சாத்தியப்படுத்தினார்.

அத்தகைய போராட்டங்களுக்கு, 1930-ம் ஆண்டில் மாவோ எழுதிய “சிறு பொறி பெருங்காட்டுத் தீயை மூட்டும்” எனும் ஆவணமே சான்று. இத்தகைய அரசியல்ரீதியிலான ஆய்வுப் பார்வையும் அமைப்புரீதியிலான ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் தான் சீனப் புரட்சியைச் சாதித்தது.

இன்று சீனா முதலாளித்துவ பின்னடைவை சந்தித்து பெயரளவிலான கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாலும், 1949-ல் நடைபெற்ற சீனப் புரட்சி அடித்தளமிட்டு வளர்த்த சோசலிச கட்டமைப்புதான் இன்று அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்கு பொருளாதாரம், அறிவியல், இராணுவம் என அனைத்திலும் முன்னேறியிருப்பதற்கான அடிப்படைக் காரணமாகும்.

சரண்