தமிழ்நாட்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத பெண்களின் கருவறை நுழைவுக்கனவு – நனவாகுமா?

கருவறை  திருப்பணியில் ஈடுபட பெரு வேட்கையுடன் பயிற்சி முடித்தப் பெண்கள் காத்திருக்கிறார்கள்! தமிழ்நாட்டு திமுக அரசு வழக்கை விரைவு படுத்தி பெண்களின் அர்ச்சகர் கனவை நனவாக்குமா?

2023 ஆம் ஆண்டு  பார்ப்பனர் அல்லாத 3 பெண்கள் (ஆண்கள் 91)  திருவரங்கம் பயிற்சி பள்ளியில் இளம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் அர்ச்சகர் பணி நியமன வழக்கு நிலுவையில் உள்ளதால்  அவர்களுக்கு பணி நியமன ஆணையும், இந்து அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர் பயிற்சியும் வழங்கப்படாமல் உள்ளது.

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை மூலம் ஆறு இடங்களில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளிகள்  நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சி முடித்தவர்கள் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் அர்ச்சகர்களாக பூஜை உள்ளிட்ட சமய சடங்குகளில் ஈடுபடுவார்கள்!

படிக்க : உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு!

மூன்றுபெண்களில் ஒருவர் ரஞ்சிதா(வயது 25) தஞ்சை மாவட்டத்தைச்சேர்ந்த இவர் பிஎஸ்ஸி விஸ்வல் கம்யூனிகேஷன் முடித்த பட்டதாரி.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த இளம் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ள கிருஷ்ணவேணி தனது சொந்த மாவட்டத்திலேயே வீட்டு நிகழ்ச்சிகளில் பூசாரியாக பணி செய்து வருகிறார்.

அடுத்தவர் சென்னை நகரில் ஒரு நகைக்கடையில் வேலை முடிந்து புறப்பட தயாராக இருந்த ரம்யா. (கணிதத்தில்  முதுகலை  பட்டம் பெற்றவர்)

அர்ச்சகர் வேலைப்பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது?

எனது கேள்வி ஒன்றே ஒன்றுதான்! கருவறைக்குள்  அர்ச்சகராக சென்று பூஜை நடத்த எப்போது அனுமதி கிடைக்கும்?   என்கிறார்.

தனது  தோழி கிருஷ்ணவேணி மூலம் அர்ச்சகர் பயிற்சிக்கு வந்ததாக கூறும் இவர்  பெற்றோரும் உற்றோரும் அர்ச்சகராக உற்சாகப்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறார்!

ரம்மியாவின் கணவர் “ பெண்கள் அர்ச்சகராவதை  இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? என்று ஆதங்கப்படுகிறார்!

ரம்மியா தொடர்கிறார்…மற்றும் “என்னைப்பற்றி தவறாக பேசும் எவரொருவரையும் நிறுத்தச்சொல்ல முடியாது” என்கிறார்.

“கருவறையில் பெண்கள் சென்று பூஜை செய்வதை எல்லோரும் எதிர்பார்க்கின்ற ஒன்றுதான்” எனது அம்மாவும்  காத்திருக்கிறார்.

ரம்மியாவின் தந்தையும், அவரது கணவரும் கிராம பூசாரிகளாக பணிசெய்வதை அச்சமயம் கூறினார்.

‘தமிழரசி’  ஆகம கோவில்களில் பட்டியல் சாதி பூஜை செய்ய முடியாது; அப்படி அந்த வாய்ப்பு கிடைத்தால் அதற்காக நான் காத்திருக்கிறேன் என்கிறார்.

ஆனாலும் நீண்ட காலம் காத்திருக்க முடியாது;  ஏற்கனவே ஓராண்டு கடந்து விட்டது என்கிறார்.

கிருஷ்ணவேணி கிராம பூசாரியாக வாழ்க்கையை  தொடர முடிவு செய்துள்ளார்.  ஆனால் கிராமங்களில் எனது அப்பா தாத்தா என்ன செய்தார்களோ அதை நான் செய்ய விரும்பவில்லை.

அறநிலைத்துறை அளித்த ஆகம பயிற்சி மற்றும் அர்ச்சகர் பயிற்சியை வைத்து கிராமங்களில் பூஜை செய்ய  வற்புறுத்தப்படுகிறேன் -என தனது ஆதங்கத்தைப்பதிவு செய்கிறார்.

கடவுளுக்கு பூஜை செய்ய தங்களை ஆண்டு முழுவதும் அர்ப்பணித்துக் கொள்ள முடிவெடுத்து சித்தமானவர்களுக்கு- பெற்ற அர்ச்சகர் பயிற்சி அனைத்தும் பயனற்று போய் விடுமோ?

அதை எப்போது பயன்படுத்த போகிறோம் ?என தெரியவில்லை என்கிறார்!

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர்களும் – சக மாணவர்களும்  பயிற்சியின் போது உற்சாகமூட்டி உதவி செய்தனர்.

சென்னையில் ஒரு செல் பேசிக் கம்பெனி பணியை துறந்துவிட்டு பயிற்சிப்பள்ளியில் சேர்ந்த இவர் அதற்கு முன்பு வரை எந்த திட்டமும்- எந்த சிந்தனையும் இல்லாமல் தான் இருந்துள்ளேன் என்கிறார்.

எங்கள் கிராமத்தில் நாங்கள் சாதியினால் புறக்கணிக்கப்படுவதை அர்ச்சகராவதன் மூலம் மாற்ற முடியும் என நம்புவதாக கூறுகிறார்.

எங்கள் குடும்பம் தன்மதிப்போடு வாழ விரும்புகின்றது;   அர்ச்சகர் பயிற்சியை விரும்பித்தேர்வு செய்தது அதனையொட்டித்தான் என்று உணர்வுப்பூர்வமாக பேசுகிறார்.

அர்ச்சகர் பயிற்சியில் சேர இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே  முடிவெடுத்ததற்காக சிறிதும் வருத்தப்படவில்லை,  என்றாலும் எனது எதிர்காலம் எந்த திசையில் செல்கிறது என்பதற்காக ஆச்சரியப்படுகிறேன் என்கிறார்.

ரம்யாவும் கிருஷ்ணவேணியும் போல் இல்லாமல் எனது தோழிகள் உயர் கல்விப்பயில சென்று விட்டனர்;

ரஞ்சிதா மேலும் தொடர்கிறார்…

அம்மா விவசாயத் தொழிலாளியாய் வேலைக்குச் செல்ல ; சகோதர சகோதரிகள் பட்டதாரிகளாக எவருமில்லை, ஆயினும்  எனது அர்ச்சகராகும் கனவில் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள்!

எனது பட்ட படிப்பிற்கு இருந்த வீட்டு சேமிப்பையெல்லாம்  அம்மா எனக்காக செலவழித்து விட்டார்.

எங்கள் கிராமத்தில் ஒரு கௌரமான வாழ்க்கைக்காகவும், அர்ச்சகர் பணியில் நியமிக்கப்பட்டால் தீண்டாமை ஒழிந்துவிடும் எனவும் நாங்கள் சிந்தித்தோம் என்கிறார் ரஞ்சிதாவின் அம்மா.

அனைத்து சாதியினரையும்  அர்ச்சகராக்கும் போராட்டம் என்பது இது முதன் முறை அல்ல!

தமிழ்நாடு அறநிலையத்துறை சட்டம் 1953- ன்  படி மரபுரிமையாக வரும் அர்ச்சகர் பணி நியமனத்தை ஒழித்து,  அனைத்து சாதியினரில் உள்ளவர்களும் அர்ச்சகராகலாம் என 1971 -இல்  திராவிட முன்னேற்றக் கழகத்தின்  சார்பாக தமிழக

முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சட்டம் இயற்றினார்.

ஆனாலும் உச்ச நீதிமன்றத்தின் தடையானையினால் இந்த சட்டம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் 2006 இல் பார்ப்பனர்- அல்லாதவர்களுக்கு முதன் முறையாக அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு; 2017-ல். இந்து அறநிலையத்துறை கோவில்களில் அண்ணா திமுக ஆட்சி காலத்தில் அட்சகராக பணிநியமனம் செய்யப்பட்டார்கள்.

இப்பொழுது வரை தகுதி பெற்ற 301 அர்ச்சகர்களில் 24  பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு அர்ச்சர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

2007-2008- ல் அர்ச்சகர் பயிற்சி பெற்ற முதல் குழுவில் 277  பேர்.

2022-2023  இரண்டாவது குழுவில் 94 பேர்.

2023 ஜூன் 23 திருச்செந்தூர் கோவில் ஆட்சியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில்,  கோவில் சமய சடங்குகள் பற்றி அறியாத பிராமணர் அல்லாதவரை இந்து- அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களில் அரசு பணி அமர்த்தி உள்ளது தவறு என்கின்றனர்.

அடுத்தமாதம் 2023 ஜூலையில்  தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இளம் அர்ச்சர்களாக பயிற்சி பெற்றவர்களை மூத்த அர்ச்சகர்களிடம் பயிற்சி மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது.

2023 செப்டம்பர் 25 அன்று உச்சநீதிமன்றம் “ஏற்கனவே உள்ள நடைமுறை தொடர வேண்டும்- மாற்றம் செய்யக்கூடாது (Status quo)  என ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதே 2023 அக்டோபர் வாக்கில்  திருச்சி மாவட்ட அர்ச்சகர்கள் கூட்டமைப்பு சார்பாக (Status quo) பார்ப்பனரல்லாதவர்கள்  ஆகம விதிப்படி அர்ச்சர்களாக கோவில்களில் நியமிக்க்கூடாது என மனு போட்டனர்.

படிக்க : அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

உச்ச நீதிமன்றத்தில் அர்ச்சகர் பணி நியமன வழக்கு நிலுவையில் உள்ளதால் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி ஆணையோ அல்லது கோயில்களில் அர்ச்சகர் பயிற்சியோ வழங்கப்படாமல் உள்ளது.

‘தி பிரிண்ட்’ இணையதள நேர்காணலில்  மாண்புமிகு சேகர் பாபு அவர்கள்…

“ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி முடித்தப் பெண்களுக்கு கோவில்களில் மூத்த அர்ச்சகர்களிடம் பயிற்சி மேற்கொள்ள அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது;

அரசுக்கு ஆர்வமில்லை யென்றால் அரசு நடத்தும் அர்ச்சகர் பள்ளிகளில் பெண்களை ஏன் சேர்க்க வேண்டும் “ என விளக்கமளித்தார்.

உச்சநீதிமன்றத்தில் சட்ட சிக்கல் தீர்ந்ததும் இந்து அறநிலையத்துறைக் கோவில்களில் பெண்களை அர்ச்சர்களாக பணிஅமர்த்துவோம், என்றார்!

கருவறை  திருப்பணியில் ஈடுபட பெரு வேட்கையுடன் பயிற்சி முடித்தப் பெண்கள் காத்திருக்கிறார்கள்!

தமிழ்நாட்டு திமுக அரசு வழக்கை விரைவு படுத்தி பெண்களின் அர்ச்சகர் கனவை நனவாக்குமா?

தினேஷ்
Courtesy: The Print – Prabhahar Thamilarasu  24September 2024.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க