Monday, August 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 781

வேசி… அறம்… அனுபவம்..!

அப்போது நான் கோவையில் சர்வீஸ் என்ஜினியராகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்த காலம். சாயங்காலம் எல்லா கால்சும் முடித்து விட்டு, இரவு பத்து மணிக்குத்தான் வீட்டுக்கு கிளம்புவேன். அப்படியே பைக்க ஓட்டீட்டு காந்திபுரம் போய், ஒரு பாதாம் பால் அடிக்கிறது வழக்கமாகி விட்டது. அது ஒரு தகரப் பெட்டிக்கடை. வெளியில் நின்றுதான் பாதாம் பால் குடிக்க வேண்டும். முதல் நாளே அவளைக் கவனித்தேன். கடையை விடத் தள்ளி கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும் வெளிச்சம் குறைந்த பகுதியில் நின்றிருந்தாள். அந்த சூழ்நிலைக்கு கொஞ்சம்கூட பொருந்தாமல் தெரிந்தாள். நடுத்தர வயதிலும் பலமான மேக்கப். வழக்கு மொழியில் சொன்னால் செமகட்டை. நான் பார்ப்பது தெரிந்ததும் என்னைப் பார்த்து சிரித்தாள். எனது ஆறாவது அறிவுக்கு உடனடியாகப் புரிந்தது.

“”டே ராசப்பா!….. எஸ்கேஏஏஏப்..” அவசரமாக பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு பைக்கை உதைத்தேன். அன்று இரவு என் கனவில் மேக்கப் சுந்தரி சிரித்து விட்டுச் சென்றாள்.

மறுநாள் மாலை ஆக ஆக ஒரு வேலையும் சரியாக ஓடவே இல்லை. ஒரே பரபரப்பாக இருந்தது. பாதாம் பால் வேறு நல்ல சுவையாக இருந்து தொலைத்தது. “”என்னடா! பத்து நாள் கக்கூஸூ போகாதவன் மாறி மூஞ்சிய வச்சுட்டு திரியுற?” நண்பன் வேறு நக்கலடித்தான். எனது குறுகுறுப்பு அதிகரித்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் “”டே ராசப்பா! இது உனக்கு ஒரு சவால்டா. உன்னோட ஒழுக்கத்தோட பலம் இவ்வளவுதானா? இன்னிக்கு பால் சாப்பிட போற, ஆனா திரும்ப அதை பாக்க மாட்ட…ஓகே?”

சரியாக 9.59க்கே பாதாம் பால் கடைக்கு ஆஜர். முதலில் எதிர்ப்புறமாகத் திரும்பி நின்று கொண்டே குடித்தேன். “சனி’தான் நம்ம மச்சானாச்சே! சாதாரணமாகத் திரும்புவது போல திரும்பினேன்.

அவள் எதிர்பார்த்திருந்தாள் … ! அதே கூப்பிடும் சிரிப்பு. என் உள்காயத்தை மறைத்துக்கொண்டே “”சே! இதுக்கு பிச்சை எடுக்கலாம்..” என்று சத்தமாகச் சொன்னேன். சட்டென்று அவள் முகம் சுருங்கியது, எனக்கு திருப்தியாக இருந்தது. கடைக்காரனுக்கு பணத்தைக் கடாசி விட்டு, பைக்கை கதறவிட்டு கிளம்பினேன். அவளை முறைத்துக் கொண்டே கடந்து சென்றேன்.

ஆயிற்று, இப்படியாக ஒரு வாரம் கடந்தது. ஒரு நாள் இரவு அதே பால்கடை. கொஞ்ச தூரத்தில் அதே அவள். இப்போதெல்லாம் அவள் என்னை பார்ப்பதில்லை. அதான் யோக்கியன் வேஷம் போட்டாச்சே! அந்த நேரத்தில் ஒரு சாராய பார்ட்டி என்னைக் கடந்து சென்றது. பாடிக்கொண்டே அவளைப் பார்த்ததும் நின்றது. ஒரு மாதிரியாக இளித்தபடியே “”யேய் வாடி” என்றது. “”முன்னூறு” உணர்ச்சியே இல்லாமல் காய்கறி விலை சொல்வது போல் சொன்னாள். எனக்கு சுவாரசியமானது. இவள்தான் நான் கண்ணால் பார்த்த முதல் விபச்சாரி. இதுவே நான் காதில் கேட்ட முதல் பேரம். இருக்காதா பின்னே?

“”ஹா… தாரன்! வாடி மொதல்ல”

“”இங்கியே குடு”

“”ஓ! தர்லன்னா வரமாட்டியா? வாடின்னா..” சொன்னபடியே கையைப் பிடித்து இழுத்தது சாராயக்கடை.

“”கட்டித்தீனி! உட்றா கையை” சீறினாள் அந்தப் பெண்.

சாராயம் சூடேறி விட்டான். ஒன்றும் பேசாமல் ஓங்கி ஒரு அறை விட்டான். சாலையில் யாரும் இல்லை. நானும், பாதாம்பால் கடைக்காரனும்தான் இருந்தோம். கடைக்காரன் முகத்தில் ஒரு மாற்றமும் காட்டாமல், “தம்ளர் கழுவுவதே வாழ்க்கை இலட்சியம்’ போல கழுவிக்கொண்டிருந்தான். இதற்குள் நாலைந்து அடி விழுந்து விட்டது. உதடு கிழிந்து ரத்தம் வேறு கொட்ட ஆரம்பித்தது. சேலை முந்தானையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான்.

எனக்கு பொறுக்க முடியவில்லை. சாராயம் வேறு சோதாவாகத் தெரிந்தானா, இவன்கிட்ட காட்டாம வேற எவன்கிட்ட காட்டுவதாம், என் வீரத்தை! விடுவிடுவென்று சென்றேன்.

“”டேய் மயிரு… கைய எடுறா. நான் முன்னாடியே காசு குடுத்துருக்கேன். நீ மூடிட்டு போயிரு. இல்ல மூஞ்சிய பேத்துருவேன்” எனக்கே எனது குரல் சத்தமாகக் கேட்டது. சாராயம் இதை எதிர்பார்க்கவில்லை. என்னை அண்ணாந்து பார்த்தான். நான் அவனை விட அரை அடி உயரம். சப்த நாடியையும் ஒடுக்கிக் கொண்டு தள்ளாடியபடியே நகர்ந்து விட்டான்.

நான் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தேன். மேக்கப் முழுவதும் கலைந்து உதட்டில் ரத்தம் வழிய கோரமாய் இருந்தாள். “”ரொம்ப தேங்க்ஸூ தம்பி” என்றாள். கண்ணில் நீர். அவள் “தம்பி’ என்று விளித்தவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்துக்கொண்டே “”பரவாயில்லைங்க. பாருங்க இந்த மாறி வேலை செய்யறதுனாலதான இப்படியெல்லாம் நடக்குது?” அட்வைசுத் தண்ணியை அள்ளிவிட இதை விடவா நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். பின்னே நாமெல்லாம் எப்ப காந்தி தாத்தா ஆகறது?

ஆனால் என் அட்வைசை அவள் லட்சியம் செய்யவில்லை. “”தேங்ஸூ தம்பி” என்று என்னிடம் சொன்னபடியே ரோட்டில் ஓடிய ஒரு ஆட்டோவை அழைத்தாள். என்னைத் திரும்பிப் பார்த்தபடியே சென்று ஏறிக்கொண்டாள். ஆட்டோ ஒரு நிமிடம் போகாமல் நின்றான். நானும் வருவேன் என்று எதிர்பார்த்தான் போல. அவள் போகச்சொன்ன பின்னரே ஆட்டோவைக் கிளப்பினான்.

அன்றிரவு என் காதுகளில் “தம்பி’ என்ற வார்த்தை ஓலித்துக் கொண்டே இருந்தது. தூக்கம் கோவிந்தா. அதிகாலை மூன்று மணிக்கு முடிவு செய்தேன் “”இன்றிலிருந்து பாதாம் பால் விஷப்பரிச்சை ஓவர்”.

ஒரு மாதம் இப்படியே ஓடிவிட்டது. ஒருநாள் மாலை தற்செயலாக பழைய மேம்பாலம் அருகே வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது அவளைக் கவனித்தேன். மேம்பாலத்தின் கீழ் இருந்து வேக வேகமாக ஓடி வந்தாள். அதே அவள். கடைசியாகப் பார்த்த அதே கோலம். மேக்கப் கலைந்து கன்னம் வீங்கி அலங்கோலமாய் இருந்தவள், கையை வீசி வண்டியை நிறுத்தினாள். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள். கொஞ்சம் தொலைவில் பேண்ட்டை இடுப்புக்கு இழுத்தபடியே ஒரு காண்டாமிருகம் ஓடி வந்து கொண்டிருந்தது. அந்த உருவமே எனக்கு பயத்தை உண்டாக்கியது. ஆனாலும் மறைத்துக்கொண்டே வண்டியில் இருந்து இறங்கப் பார்த்தேன். அதான் ஒரு முறை ஒரு சோதாவிடம் ஹீரோ ஆகித் தொலைத்து விட்டிருந்தேன். இப்போது பின்வாங்கவா முடியும்?

“”தம்பி வேண்டாம்பா! அது போலீஸூ, நீ வண்டிய எடு.”

நல்லவேளை முதலிலேயே சொல்லி காப்பாற்றினாள். கியரை மாற்றி வண்டியைக் கிளப்பினேன். பின்னால் தொத்திக் கொண்டாள். நன்றாக இடைவெளி விட்டு உட்கார்ந்து கொண்டாள். அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது!

“எங்கீங்க?’

“புதூரு’

வேறு பேச்சே இல்லை. புதூர் வந்ததும் நாலைந்து சந்து பொந்துகளில் திருப்பச் சொன்னாள். ஒரு குடிசையின் முன் இறங்கிக்கொண்டாள். வண்டிச் சத்தம் கேட்டு ஒரு ஓமக்குச்சி வெளியே வந்தான். “”சார் உள்ளாற வாங்க” குழைந்து கொண்டே கூப்பிட்டான். “”யோவ் நா அதுக்கு வரல. அந்தம்மாவப் பாரு மூஞ்சி கிழிஞ்சி வந்துருக்காங்க” அவன் அவளுடைய காயத்தை லட்சியம் செய்யவில்லை. “”என்னடி இன்னிக்கு கஸ்ட்டமரு இல்லியா?”

“”போலீஸூ தொல்ல, வா அப்புறம் பேசிக்கலாம்” அவள் உள்ளே போக எத்தனித்தாள். அவன் இளித்தபடியே என்னிடம் வந்தான். சுர்ரென்று வந்தது எனக்கு. “”டேய்…” அதற்குள் அவள் குறுக்கிட்டாள். “”தம்பி என்னிய இங்க உடத்தான் வந்திச்சு. நீங்க போங்க தம்பி. நீ உள்ளார வாய்யா”

புதூரிலிருந்து வீடு வரும் வரை ரத்தம் வழிந்த அவள் முகத்தை நினைத்துக் கொண்டே வந்தேன். “”என்ன வாழ்க்கை! கண்டவன்கிட்ட அடி வாங்கி, உதை வாங்கி, நூறோ எரநூறோ சம்பாதிக்க கண்டவனோட படுத்து, நோயோட வாழ்ந்து நோயோட செத்து, நோய பரப்பி, குடும்பமில்லாம சாக்காலத்துல கூட நிம்மதி இல்லாம செத்து, அப்படியும் சாகும்போது பக்கத்துல யாரும் இல்லாம தனியா செத்து..”

இரவு இரண்டு மணிக்கு அம்மா கேட்டாள், “”இன்னிக்கு எவன்கிட்டடா அடி வாங்கிட்டு வந்த, தூங்காம பொரண்டுட்டு இருக்க?” என்னிடம் பதில் இல்லை.

இரண்டு நாள் போயிருக்கும். காலையில் வழக்கம் போல கால்ஸ் போகாமல் கட் அடித்து விட்டு ரயில்வேசுக்கு எதிரே உள்ள பேக்கரியில் உட்கார்ந்து டீ அடித்துக் கொண்டிருந்தேன். “”தம்பி..” நிமிர்ந்தேன். தையல் போட்ட உதட்டுடன் அவள். சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் தெரிந்தவர்கள் இல்லை.

“”நல்லாருக்கீங்களா?” என்ன ஒரு கேள்வி!

“”..ம்ம் இருக்கேன் தம்பி. நீங்க இங்க பக்கத்துல தான் வேலை செய்யறீங்களா?”

“”ஆமாங்க. அந்தாளு உங்க ஊட்டுக்காரருங்களா?”

“”ம்”

“”வேலைக்கெல்லாம் போறதில்லீங்களா?”

“”கல்யாணத்துக்கு மின்னாடி போய்ட்டிருந்தாரு. இப்ப இல்ல.”

“”உங்களுக்கு பசங்க புள்ளைங்க இருக்குதுங்களா?”

“”ஒரு புள்ளயிருக்குது தம்பி.”

சப்ளையரிடம் அவளுக்கும் சேர்த்து டீ சொன்னேன்.

அவளிடம் கேட்டேன், “”ஏங்க! அவுசாரி வேல செய்யறீங்களே! கூச்சமாவே இல்லீங்களா? இதுக்கு ஏதாச்சும் கூலி வேலைக்கு போலாமே?”

“”எந்தூர்ல தம்பி கூலி வேலைக்கு அம்பது ரூவாக்கு மேல தர்றாங்க? அதுல சோறு காச்சறதா? இல்ல எம் பொண்ண படிக்க வக்கிறதா? அவளுக்கு அந்த அம்பது ரூவாக் காசுல கல்யாணங்காச்சி நடத்தறதா?”

“”அதுக்கு, ஊரக்கெடுத்து சம்பாரிச்ச காசுல திங்கறது தெரிஞ்சா அவளுக்கு குளுகுளுன்னு இருக்குங்களா?”

“”யாரு தம்பி ஊரக்கெடுக்கறது. அது ஏற்கனவே கெட்டுதாங் கெடக்குது. எங்கிட்ட வர்றவனெல்லாம் நாங் கெடுத்துதான் எங்கிட்ட வர்றானா? மின்னாடியே கெட்டதனாலதான் எங்கிட்ட வர்றான். யோக்கியனுக்கு அவுசாரிகிட்ட என்ன வேல? மொதல்ல ஒன்னு தெரிஞ்சுக்க, காலையில பட்டையோட ஊட்டவுட்டு கௌம்பி, நாளெல்லாம் காந்தி வேசம் போட்டுட்டு சாயந்திரமா எம்மேல கைய வைக்கறவனயா, நீ யோக்கியனுங்குற? ஊட்டுல பொண்டாட்டிய வச்சுட்டு எங்கிட்ட வர்றவன், நானில்லீன்னா பக்கத்தூட்டுப் பொம்பளைய கைய புடுச்சு இளுப்பான். பக்கத்தூட்டுக்காரிக பாதுகாப்பா இருக்காளுகன்னா அதுக்கு நாந்தான் காரணமாக்கும்.”

“”அவனுகள உடுங்க. நீங்க பண்றது பாவத்தொழில் இல்லீங்களா?”

“”எது தம்பி பாவம்?”

“”பல பேரோட படுக்குறது பாவமில்லீங்களா?”

“”நீங்க மனசுக்குள்ளாற பண்றதெல்லாம் நா வெளியில பண்றேன். வேறென்ன தம்பி வித்தியாசம்?” பலநாள்களுக்குப் பிறகு மீண்டும் செருப்படி. டீ வந்தது. டீயைக் குடித்துக்கொண்டே கேட்டேன்.

“”அப்படீன்னா அவுசாரித்தனம் புண்ணியம்னு எந்த சாமி, எந்த புக்குல சொல்லுச்சுங்க?”

சிரித்துக் கொண்டே சொன்னாள், “”சாமி எந்தப் புக்கும் எளுதல தம்பி. எளுதுனதெல்லாம் எல்லா சவுரியமும் இருந்த உங்கள மாறி ஆளுங்கதான் தம்பி. பாவ புண்ணியத்த புக்குல எளுதுனவன எங்க சேரில பத்து நாளு இருந்து பாக்கச் சொல்லு. திரும்பி வந்து கொல பண்றது கூட தப்பில்லைன்னு இன்னொரு புக்கு எளுதுவான். அப்ப நீங்கெல்லாம் கொல பண்ணக் கௌம்பீருவீங்களா? உடுங்க தம்பி! அவிங்கவிங்க நாயம் அவிங்கவிங்களுக்கு. ஆனா ஒன்னு புரிஞ்சுக்கங்க. நீங்க பாக்காத கேக்காத வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு. அதுல வாழற மனுசனுங்களும் உங்க ஒலகத்துலதான் இருக்காங்க. உங்களுக்கு தெரியாது புரியாதுங்கறதுக்காக அதெல்லாம் பொய்யின்னு ஆயிராது. ஒங்க நாயம், பாவம், புண்ணியம் இதெல்லாம்வுட வாழ்க்க பெரிசு தம்பி”

“”நா.. வாரந் தம்பி” என்றபடியே டீக்காசை அவளே கொடுத்து விட்டு எதிர்ப்புறம் நின்ற பேருந்தை நோக்கி வேகமாக சென்றே விட்டாள். மதியம் வரை அசையாமல் பேக்கரியிலேயே உட்கார்ந்திருந்தேன். ஆங்கில ஹிந்து மிஷனரி பள்ளியில் படித்து, வாரந்தோறும் பஜனை சொல்லி, கோக்பெப்சி கலாச்சாரத்தில் வாழ்ந்து வந்த எனக்கு, வாழ்க்கை குறித்தும், பாவ புண்ணியம் பற்றியும் வேசி ஒருத்தி பாடம் நடத்திச் சென்றாள். உண்மைச்சூடு தந்த அதிர்ச்சியில் வெகுநேரம் உறைந்திருந்தேன்.

இப்போதெல்லாம் பாதாம் பால் சாப்பிடுவதில்லை. நீண்டநாள் கழித்து சாப்பிட வேண்டும் போல இருந்தது. பைக்கை காந்திபுரம் விட்டேன். அதே கடை. ஆர்வமாய் இருட்டுப் பகுதியைப் பார்த்தேன். அவள் இருந்தாள். பாசாங்கில்லாமல் சிரித்தேன். அவளும் சிரித்தாள். அது அழைப்பின் சிரிப்பல்ல. நட்பின் சிரிப்பு. இன்றைக்கு பால் கூடுதல் சுவையாக இருந்தது.

காசைக் கொடுத்துவிட்டு வண்டியைக் கிளப்பினேன். கோவையின் மார்கழிக் குளிரில் உடல் நடுங்கியது. பனியடர்ந்த சாலையில் மெர்க்குரி வெளிச்சம் தெளிவைக் கொடுத்துக் கொண்டிருந்தது. தவறில்லாத ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டது போல மனம் நிறைவாக இருந்தது. அன்று கனவுகள் இல்லாமல் தூங்கினேன்.

________________________________

· கார்க்கி
_________________________________

வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்!

சதீஷ் குமார், சடலமாக...
சதீஷ் குமார், சடலமாக...

மனித உரிமை ஆர்வலரும், போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது.

சட்டப்படிப்பு படித்துள்ள 24 வயதேயான சதீஷ்குமார், கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று இரவில் வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில், மறுநாள் காலை திருமங்கலம் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்தார், சங்கரசுப்பு. அதன் பிறகு அண்ணாநகர் டி.சி.யைச் சந்தித்தும், கமிஷனர் திரிபாதியைச் சந்தித்தும் முறையிட்டுள்ளார். இதற்கிடையே 9ஆம் தேதியன்று சதீஷ்குமாரின் செல்போனை எடுத்துப் பேசிய ஒரு போலீசுக்காரர், ஐ.சி.எப். வடக்கு காலனி ஏரிக்கரையில் மோட்டார் சைக்கிள் அருகே இந்த செல்போன் கிடந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர், ஜூன் 10ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத் தில் ஆட்கொணர்வு மனுவை சங்கரசுப்பு தாக்கல் செய்துள்ளார். திருமுல்லைவாயில் போலீசு நிலையத்தின் போலீசு ஆய்வாளர்களான கண்ணன், ரியாசுதீன் ஆகியோர் தனது மகனைக் கொலை செய்திருப்பார்கள் என்று சந்தேகம் உள்ளதாகவும், ரியாசுதீனின் வீடு ஐ.சி.எப். ஏரிக்கரை பகுதியில்தான் உள்ளது என்பதால், அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்த வேண்டும் என்றும் சங்கரசுப்பு தனது ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பிறகு நீதிமன்றம் சிறப்புக்குழு அமைத்துத் தேடுமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. அந்த ஏரியில் 13ஆம் தேதிவரை தேடிப் பார்த்து ஏதும் கிடைக்கவில்லை என்று இக்குழு தெரிவித்தது. 13ஆம் தேதியன்று “மக்கள் டிவி’’யின் செய்தியாளர்கள் இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது, அந்த ஏரியில் வெங்காயப் பூண்டு செடிகளுக்கு மத்தியில் ஒரு சடலம் மிதப்பதைப் பார்த்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்க, அதன் பின்னரே அழுகிய நிலையில் சதீஷ் குமாரின் சடலம் மீட்கப்பட்டது. சங்கரசுப்பு தனது ஆட்கொணர்வு மனுவில் தெரிவித்திருந்ததைப் போலவே, ஐ.சி.எப். ஏரிக்கரையில் சதீஷ்குமாரின் சடலம் கிடைத்திருப்பதிலிருந்து கூலிப்படையை ஏவி இக்கொலையை போலீசு ஆய்வாளர்களான கண்ணனும் ரியாசுதீனும் செய்திருப்பார்கள் என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.

போலீசு ஆய்வாளர்களான கண்ணனும் ரியாசுதீனும் விசாரணைக் கைதிகளைக் கொடூரமாக வதைத்துப் பணம் பறிப்பதில் பேர்போனவர்கள். கும்மிடிப்பூண்டி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வான சுதர்சனத்தைக் கொலை செய்த வட நாட்டைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்ற கொள்ளைக்காரனைப் பிடிக்க உ.பி. மாநிலத்துக்குப் போன இவ்விரு போலீசுக்காரர்களும் அவனைப் பிடிக்க முடியாமல், அவனுடைய அண்ணன் மகன்கள் இருவரைப் பிடித்துச் சித்திரவதை செய்து, பின்னர் போலி மோதலில் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளாவர்.

திருமுல்லைவாயிலைச் சேர்ந்த அருண்குமார் என்பவரைத் திருட்டுக் குற்றம் சாட்டிச் சட்டவிரோதமாக அடைத்து வைத்து இவர்கள் சித்திரவதை செய்து பணம் பறித்து வந்தனர். இந்நிலையில் அருண்குமாரை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துமாறு ஆட்கொணர்வு மனுவை சங்கரசுப்பு தாக்கல் செய்ததோடு, இவ்விரு காக்கிச்சட்டை கயவாளிகளின் அயோக்கியத்தனத்தைத் திரைகிழித்தார். இவ்விருவருக்கும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, இவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த இவ்விரு போலீசுக்காரர்களும் “உனக்குக் குடும்பம் இருப்பதை மறந்துவிடாதே” என்று சங்கரசுப்புவை மிரட்டியதோடு, வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளனர். எனவே, இவர்கள்தான் இக்கொலையைச் செய்துள்ளனர் என்று சங்கரசுப்பு மட்டுமின்றி, உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களும் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

சதீஷ்குமார் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பிறகுதான், சில நாட்கள் கழித்து அவரது உடல் ஏரியில் வீசப்பட்டுள்ளது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதியன்று கீழ்ப்பாக்கம் மருத்துவனையில் பிரேதப் பரிசோதனை நடந்த போது 500க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களும் சமூக ஆர்வலர்களும் திரண்டு போலீசுத் துறை ரவுடிகளைக் கைது செய் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, கொலைகாரப் போலீசுக்கு எதிராக முழக்கமிட்டபடியே சதீஷ்குமாரின் இறுதி ஊர்வலத்தை நடத்தினர். இப்படுகொலைக்கு எதிராக வழக்குரைஞர்கள் உடனடியாக ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்த பிறகே, இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடனேயே சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் தனது முதற்பணி என்று அறிவித்தார் ஜெயலலிதா. ஜெயா ஆட்சி என்றால் வரம்பற்ற அதிகாரத்துடன் போலீசு கொட்டமடிக்கும் என்பதை முந்தைய அவரது ஆட்சிகள் மட்டுமின்றி, தற்போது சதீஷ்குமாரின் படுகொலையும் அண்மைக்காலமாக பெருகிவரும் கொட்டடிக் கொலைகளும் நிரூபித்துக் காட்டுகின்றன. பாசிச ஜெயா ஆட்சியில் வழக்குரைஞர்களுக்கே இந்தக் கதி என்றால் சாமானிய மக்களின் கதி என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை. கொலைகார போலீசுக்காரர்களையும், இப்பயங்கரவாதச் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ள போலீசு அதிகாரிகளையும் கைது செய்து, பகிரங்க விசாரணை நடத்தித் தூக்கிலிடவும், போலீசு பயங்கரவாதத்தை வீழ்த்தவும் உழைக்கும் மக்கள் போராடுவதே இன்றைய உடனடித் தேவையாக உள்ளது.

_______________________________________________________

புதிய ஜனநாயகம் – ஜூலை 2011

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

காங்கோ சிறுகதை: கடன்

”அந்தப் பொடிசு முகம் சுளித்தது “”அய்யே, நல்லால்லே கருப்பி.”

“”ஏய் வாண்டு, இந்தச் சாத்துக்குடி எவ்வளவு இனிப்பு தெரியுமா?” ஒரு சுளையை எடுத்து நன்றாகச் சப்பிச் சாப்பிட்டுக் காட்டினாள் கார்மென். பொடிசு முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கார்மெனை கருப்பி என்று தான் கூப்பிடுவான் அந்தப் பொடிசு வில்லியம்ஸ். கார்மென், ஆப்பிரிக்கப் பழங்குடிப் பெண். வேலைக்காரி. அவள் எசமானனும், எசமானியும் பிரெஞ்சுப் பணக்காரர்கள்.

“”நல்ல கண்ணுல்லே… நான் கண்ண மூடித் தொறக்குறதுக்குள்ள லபக்குனு முழங்கிடுவியாம்…” கார்மென் மறுபடி கெஞ்சினாள்.

வில்லியம்ஸ் அக்குடும்பத்தின் ஒரே ஒரு செல்லப் பையன். அவனுக்குத் தனி அறை. கார்மென் இந்த அறையில்தான் அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

சுவர்க் கடியாரம் இரவின் 7 மணியை இசைத்தது. வீட்டுக் கூடத்தில் எசமானி, எசமான், அவர்கள் நண்பர்களின் பெருங்கூட்டம். கொஞ்ச நேரம் இரைச்சல், கொஞ்சநேரம் மயான அமைதி. சீட்டுக் கச்சேரி ஓடிக் கொண்டிருந்தது.

கார்மென் கண்டிப்போடு சொன்னாள்: “”நீ சாப்பிடலேன்னா அம்மா கிட்டேதான் சொல்லப் போறேன்.” சொல்லேன் என்பது போல முகம் காட்டிச் சிணுங்கினான் வில்லியம்ஸ். வலுவந்தமாக வில்லியம்ஸின் வாயைத் திறந்து ஒரு சுளையை உள்ளே தள்ளினாள். எது நடக்கக் கூடாதோ, அது நடந்தது. “ஓ’ என்று ஒப்பாரி வைத்தான் வில்லியம்ஸ்.

வீட்டுக் கூடத்திலிருந்து எசமானி ஓடிவருவது தெளிவாகக் கேட்டது. “”ஏய் கார்மென், என்ன செஞ்ச எரும?” சீட்டாட்டம் தடைப்பட்ட கோபம் அவளுக்கு.

“”அம்மா, சாப்பிட மாட்டேங்கிறாம்மா.”

“”பாவம் பச்சக் குழந்தயப் பலவந்தம் செஞ்சியா அறிவு கெட்டவளே. வில்லியம்ஸ், ஒனக்கு திராட்ச பிடிக்குமில்லே, சாப்பிடுறியா? ஏய் கார்மென், குழந்தயத் தொந்தரவு செய்யாம திராட்சயக் குடு.”

வில்லியம்ஸ் திராட்சையைச் சப்பிச் சப்பி உறிஞ்சிக் கடித்து வேகமாக விழுங்கினான். என்னைக்காவது ஒருநாள் ஒரு கொத்து திராட்சை சாப்பிட வேண்டும் என்று நினைத்தாள் கார்மென்.

மணி ஏழரைக்கு விரைந்தது. அடுத்தது, வில்லியம்ஸ{க்கு உடைமாற்ற வேண்டும்; அதற்கடுத்து, படுக்கை.

கார்மெனின் அவசரம் வில்லியம்ஸ{க்குப் புரியாது, புரியவில்லை. வேகவேகமாக நடையை எட்டிப் போட்டாலும் மெகெலெகெல்லேவில் இருக்கிற அவள் வீட்டுக்குப் போவதற்கு குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு மேல் பிடிக்கும். கார்மென் பதறினாள்.

வில்லியம்ஸ் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான். “கருப்பி, ஒரே ஒரு பாட்டு கருப்பி’ அன்றைக்குப் பார்த்து ஒன்று, இரண்டு, மூன்று பாட்டுகளுக்குப் பிறகே வில்லியம்ஸ் கண் அசந்தான். முடுக்கிய ரேடியோப் பெட்டி போல கார்மென் பாடிக் கொண்டிருந்தாளே தவிர, அவள் நினைப்பு எங்கோ இருந்தது.

வில்லியம்ஸ் கொழுகொழுவென்று வளர்ந்தான். இவள் மகன் டேவிட் பாவம் எத்தனையோ முறை சாவை எட்டிப் பார்த்துவிட்டுக் காத்திருக்கிறான். பெரிய ஆளுங்கபோல இப்போதே வில்லியம்ஸ் வேலைக்காரர்களிடம் வேலை வாங்குகிறான். அந்தச் சட்டை வேண்டாம், இந்த டவுசர்தான் வேணும், இந்த நீலத்தொப்பிதான் வேணும், பிஸ்கட் வேண்டாம் கேக்தான் வேணும். உடனே பார்க் போகணும் எல்லாம் கேட்பான். பாவம் டேவிட், வாயைத் திறந்து எதுவும் கேட்க மாட்டான். வெளிஆட்கள் வீட்டில் இருந்துவிட்டால் ரொம்பக் கூச்சப்படுவான்.

டேவிட்டையும் பாசம் கொட்டி வளர்க்க வேண்டும் என்றுதான் கார்மென் ஆசைப்பட்டாள். ஆனால் அது வெறும் ஆசைதான். உலகம் இருக்கிற இருப்பில் அது கனவுதான். கார்மென் டேவிட்டை எண்ணி வருந்தினாள்.

அன்று காலை வேலைக்குப் போகவேண்டுமா என்றுதான் கார்மென் யோசித்தாள். முந்தின நாள் ராத்திரிபூரா டேவிட் அழுதுகொண்டேயிருந்தான். அடிக்கடி வயிற்றைப் பிடித்துக் கொண்டான் “வலிம்மா வலிம்மா’ என்று முனகினான். வாந்தி. பேதி. மூன்று முறை வாந்தி எடுத்தான். முதல் முறை வாந்தி எடுத்ததும் “இப்ப பரவாயில்லம்மா’ என்று சொன்னான். ஆனால் வாந்தி அடங்க வில்லை. மூன்றாவது முறை அவனது சின்னஞ்சிறு வயிறு உள்ளுக்குள் இழுத்து ஓங்கரிக்க, பச்சையாக தண்ணியாக வாந்தி எடுத்தான். மூச்சு துரத்தி வாங்கியது, நெற்றியில் வியர்வை துளிர்த்தது. அவனைச் சமாதானப் படுத்துவதற்குப் பதிலாக கார்மென் இடிந்து போனாள். ஏற்கெனவே பறிகொடுத்த இரண்டு குழந்தைகள் நினைப்பு நெஞ்சுக்குள் திரண்டு இறுக்கியது.

வளாகத்தின் இன்னொரு கோடியிலிருந்த அம்மாவைக் கூப்பிட்டு அனுப்பலாமா? அனுப்பலாம்தான். பீதியில் கார்மென் திகைத்தாள். ஏதோ ஒருவழியாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அம்மாவைக் கூப்பிட்டால் அவள் உடனே குடும்ப மாந்திரீகக் கிழவனிடம் டேவிட்டைத் தூக்கிக் கொண்டு போய்விடுவாள். கார்மெனுக்கு விருப்பமில்லை.

எசமான் வீட்டில் செய்வதுபோல “இங்கிலீஷ் வைத்தியமே’ நல்லது என்று நினைத்தாள். முந்திய இரண்டு குழந்தைகளையுமே அந்த மாந்திரீகச் சூனியக் கிழவன்தான் விழுங்கிவிட்டான். சடங்குகள் அவள் செல்வங்களைக் காப்பாற்றவில்லை. ஒவ்வொரு சாவும் ஒரு மாதச் சம்பளம் அளவுக்கு கடனைக் கூட்டியதுதான் மிச்சம். எங்கேயாவது வழியில் பார்த்தால், “”நீ உன்னோட அம்மா சொன்ன பயல கல்யாணம் கட்டிகிடலே, அதான் குத்தம். உனக்குச் சொன்னாப் புரியாது. பட்டுத்தான் கத்துக்குவே.” என்பான் கிழவன்.

அவர்கள் சிபாரிசு செய்த பயல் கிட்டோங்கா. அரசாங்கத்தில் கார் டிரைவர் வேலை. அங்கே அவனுக்கு எசமான் அவனே. வேலைக்குப் போய் வீடு வந்தால் சொந்தமாக வாங்கிப் போட்டிருந்த ஒரு மளிகைக் கடை, ஒரு சாராயக் கடை இரண்டையும் ஓர் எட்டிப் பார்த்து வரவும் கவனிக்கவுமே நேரம் சரியாக இருக்கும். கார்மென் வேலைக்கெல்லாம் போக வேண்டாம் வீட்டோடு ராணி போல இருக்கலாம். அவர்கள் இப்படிச் சொன்னார்களே தவிர அதற்குப் பின்னால் சங்கதி வேறு மாதிரி. அவனுக்கு ஏற்கெனவே இரண்டு பெண்டாட்டிகள், ஒருத்தி மளிகைக் கடைக்கு, இன்னொருத்தி சாராயக் கடைக்கு. கார்மென் வந்தால் வீட்டோடு மூன்றாவது பெண்டாட்டியாக இருக்கலாம்.

இப்போது கார்மென் இருக்கிற கதியே வேறு. அவள் மலைபோல் நம்பிக் காதலித்தவன் டேவிட்டையும் சேர்த்து மூன்று கொடுத்துவிட்டு, மூன்றாம் சுமை கொடுத்த பிறகு ஏமாற்றி சென்று விட்டான். அந்த வட்டாரத்தை விட்டே ஓடிவிட்டான். திரும்பி வருவான் என்று கொஞ்ச நாள் நம்பிக்கையோடு காத்திருந்தாள். அப்புறம் வேறு திருமணத்தையே வெறுத்து டேவிட்டைக் காப்பாற்றினால் போதுமென்று எல்லா ஆசைகளையும் அடக்கிக் கொண்டுவிட்டாள் கார்மென்.

டேவிட் ஏதோ கூப்பிட்டான். அவள் மடியில் தலை வைத்துத் தூங்க வேண்டுமாம். “தனியா இருக்க பயமா இருக்கும்மா’ என்று கெஞ்சினான். விடியும்வரை தாங்குவானா, தெரியவில்லை அவளுக்கு. எசமானி போல இருந்தால், ஃபோனிலேயே டாக்டரைக் கூப்பிடலாம், அவசரம் என்றால் டாக்டரின் வீட்டுக்கே கூட கார் போட்டுக் கொண்டு ஓடலாம். ஏழைகள் என்ன செய்ய முடியும்?

மருந்துக் கடைகளை இந்நேரம் அடைத்திருப்பார்கள். அரசு ஆஸ்பத்திரிக்குப் போகலாம், போனால், “நேரம் காலம் கெடயாதா உங்களுக்கெல்லாம்’ என்று அந்த ஆண் நர்ஸ் வள்ளென்று எரிந்து விழுவான். தனியார் வெள்ளைத்தோல் டாக்டர்கள் ராத்திரி நேரத்தில் ஏழைக் கருப்பர்களை பங்களா கேட்டுக்குள்ளேயே விடமாட்டார்கள். கார்மெனின் கற்பனை சட்டென்று நின்றது அந்த டாக்டர்களுக்குக் கொடுக்க காசு ஏது?

மிரண்டு போனாள் கார்மென். டேவிட்டை இழுத்து அணைத்து எடுத்து மடியில் கிடத்திக் கொண்டாள். டேவிட்டைப் பார்ப்பதும், அவனோடு கொஞ்சி விளையாடிய நாட்களை நினைவில் வருடுவதும், தூக்கமும் விழிப்பும் கலந்த ஒரு பயணமாக அவள் எங்கெங்கோ போனாள்.

விடியற்காலை. திடுமென விழித்துப் பார்த்தாள் டேவிட், பாவம் குழுந்தை, சுருட்டிப் போட்ட துணிபோல வாடிக் கிடந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவளுக்கு வேறு வழி இல்லை அவனை அப்படியே விட்டுவிட்டு என்றும்போல காலையில் நேரமே எழுந்து வேலைக்கு ஓடவேண்டியதுதான். எசமானிக்கு டாணென்று காலை ஏழரைக்கு அவள் கூப்பிடும் குரலுக்கு கை அருகே கார்மென் வேண்டும்.

இரவு சரியாக உறங்காததால் கார்மெனுக்கு அசதி. ஆனால் படுக்கையிலேயே கிடக்க முடியாது. வேலைக்கும் போக விருப்பமில்லை. அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போய் டேவிட்டுக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்து கொண்டு விட்டால் நல்லதென்று அவள் மனசு துடித்தது. எப்போது டேவிட்டுக்கு உடம்பு சுகமில்லாமல் போனாலும் அவனைத் தனியே விட்டு விட்டுப் போக அவள் விரும்ப மாட்டாள். ஆனால் விரும்பியபடி நடந்ததே யில்லை. அப்போதெல்லாம் துடித்துத் துடித்துக் களைத்துப் போய்விடுவாள்.

ஒருமுறை அவனை பங்களாவுக்குத் தன்னோடு அழைத்துப் போக விரும்பினாள் கார்மென். “”என் மகன் வில்லியம்ஸைப் பாக்கறதுதான் உன் வேலை. உன் பையனப் பாக்குறதுக்கு நான் சம்பளம் போடலே” என்று எச்சரித்து மூஞ்சியைத் திருப்பிக் கொண்டாள் எசமானி.

டேவிட்டை அப்படியே விட்டுவிட்டுப் போனாலும், அம்மாவோ, உறவுக்காரப் பெண்களோ வைத்தியம் பார்க்காமல் அப்படியே விட்டுவிட மாட்டார்கள் என்று கார்மெனுக்குத் தெரியும். பழங்குடிகளின் மனசில் குடும்பம் என்றால் எல்லோரும்தான், அது மிக மிகப் பெரியது. எது எப்படி நடந்தாலும் எந்த ஒரு குழந்தையையும் எப்போதும் தனியாக விட்டுவிட மாட்டார்கள். ஆனாலும் கார்மென் மனதில் கொஞ்சம் சந்தேகம்தான். தாய் வளர்ப்புபோல மற்றது இருக்காது, அதிலும் நாம் பெற்றெடுத்த குழந்தைகள் உடம்பு சுகமில்லாத போது அதிகம் நம்மைத் தேடும் என்பாள் கார்மென்.

இந்த மாசத்தில் மட்டும் இரண்டு முறை வேலைக்குப் போகவில்லை. ஒருமுறை, சேர்ந்தாற்போல இரண்டு நாள் ஜூரம் பாயில் கிடந்தவன் எழவே இல்லை. ரெண்டாவது முறை, ஒரு சாவுக்குப் போய் விட்டாள். எசமானி சீறுசீறென்று பாய்ந்து விட்டாள்.

அவளுக்கு என்ன சொல்லி எப்படி விளக்குவது? என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்துவிட்டாள். இந்த வெள்ளப் பன்னிகளுக்கு நெனப்பே நாங்க சோம்பேறிங்கறதும், அதனாலதான் வேலைக்கு வரமாட்டேங்குறோம்ங்கறதும்தான்.

டேவிட்டுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தும் இன்று கார்மென் வேலைக்குப் போனாள். உச்சி வெயில் நேரத்தில் அவள் தங்கை செய்தி கொண்டு வந்தாள். டேவிட்டுக்கு மருந்து வாங்கிக் கொடுத்துவிட்டார்கள், பயமில்லை. கார்மெனுக்குத் துணுக்கென்றது. இந்தப் பணத்துக்கு எப்படிச் சரிக்கட்டுவது? என்னவோ செய்யலாம், என்ன செய்தாகிலும் டேவிட் குணமாகிவிடணும்.

எஜமானியின் சீட்டாட்டம் இன்னமும் முடியவில்லை. அவள் எப்ப வருவது, எப்ப பணம் கேட்பது, எப்ப வீடு போய்ச் சேருவது? வில்லியம்ஸ் ஆழ்ந்து தூங்கி விட்டான். கார்மென் சமையலறைப் பக்கம் போய் கிழட்டுக் காவலாளி பெர்டினான்டிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவரிடம் மனசைக் கொட்டினால் பாரம் குறைந்து விடும்.

ஒருவழியாக எசமானி அங்கு வந்தாள். “”என்ன கார்மென், இன்னமுமா வீட்டுக்குக் கிளம்பலே?”

பணம் வேண்டுமென்று எப்படிச் சொல்வது கார்மென் திக்கினாள், தடுமாறினாள். “”இல்லம்மா… வந்து… கொஞ்சம் பணம் வேணும்….”

“”என்ன, மறுபடி கடனா? பத்து நாளைக்கு முன்னதானே வாங்கினே…”

“”பையனுக்கு உடம்பு சுகமில்ல, மருந்து வாங்கணும்மா….”

“”நல்லா இருக்குது உங்க கத… நா ஒன்னும் இங்க பொதுச்சேவ செய்யலே, புருசன் இல்லாம அவ அவ குழந்தையப் பெத்துக்குவீங்க, அத வச்சுக் காப்பாத்த மட்டும் முடியாது… ஏங்கிட்ட பணத்துக்கு ஓடி வந்துடுவீங்க…”

“”அம்மா அது தொரைமார் பேசற பேச்சும்மா…” கார்மென் துணிந்து பதில் சொல்லிவிட்டாள். ஆனால் அதை வளர்க்க விரும்பவில்லை. இப்போதைக்கு காசு வேணுமே?

“”அப்படிச் சொல்லு. உம் பையனுக்குச் சுகமில்லேங்கிறே. என்னைக்கு நீ எம்பேச்ச கேட்டிருக்கே? அவனுக்கு ஒழுங்கா சோத்தப் போடுன்னு எத்தன முறை தலைப்பாடா அடிச்சிக்கிட்டிருப்பேன்… முதல்ல அதச் செஞ்சியா?”

“”இல்லம்மா… வந்து…”

“”என்ன இல்லயும் நொள்ளயும். வெறுமனே கிழங்கு மாவக் காச்சி அவன் வயித்துல திணிப்பே… ஒங்களுக்கு வேற என்ன தெரியும்?”

“”நீங்க வில்லியம்ஸ{க்கு விதவிதமா ஊட்டுறீங்களே, அப்படியா நாங்க செய்ய முடியும்?” இப்படி கார்மென் பதில் சொல்லவில்லை, மனதில் நினைத்துக் கொண்டாள்.

“”இப்ப எங்கிட்ட காசு இல்லே. உங்களப்போல ஆளுங்களுக்கு என்னைக்குத்தான் ஒறைக்கும்? பணம் மரத்துலயா காய்க்குது? கொஞ்சமாவது பணத்தச் சேத்து வெக்கணும்னு உங்களுக்கு எட்டாதா?”

எசமானி கத்திக் கொண்டிருந்தாள். இவர்கள் வேகமாக பிரெஞ்சு மொழி பேசும் போதெல்லாம் கார்மெனுக்கு ஒன்றும் புரியாது. முழிப்பாள். வெறுமனே தலையைத் தலையை ஆட்டுவாள். இப்போதும் அப்படித்தான் செய்தாள். அதுவே எசமானியை இளக்கி விடுமோ? தெரியவில்லை. அவள் அறைக்குப் போய் கொஞ்சம் ஆஸ்பிரின் மாத்திரை கொண்டு வந்து கொடுத்தாள். அடுத்த நாள் கொஞ்சம் பணம் தருவதாக வாக்கு கொடுத்தாள்.

நாளைக்குக் கொடுத்து என்ன பயன்? நாளைக்குக் கொடுப்பாளென்பதும் என்ன நிச்சயம்?

ஒருவழியாக கார்மென் வீட்டுக்குக் கிளம்பினாள். கருப்பர்கள் குடியிருக்கிற மெகெலெகெல்லேவுக்கு அவள் போக ஒரு மணிநேரம் போல ஆகிவிடும். வழியேற குழம்பிக் குழம்பிப் பல சிந்தனை. எங்கிருந்தோ டேவிட் கூப்பிடுவது போலிருந்தது. நடையை எட்டிப் போட்டாள்.

“”பாவம் டேவிட்! பெரியவனானால் என்னைக் காப்பாற்றுவான். பெரியவன் ஆனால் அவனுக்கு என்மீது பாசம் இருக்குமா? இப்படி விட்டுவிட்டுப் போய்விடுகிறாளே பாவி என்று இப்போது சபித்துக் கொண்டிருக்கிறானோ? எனக்கு இங்கிலீஷ் வைத்தியத்தில்தான் நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஒருவேளை அம்மா இன்னக்கி ராத்திரி மாந்திரீகனைப் பார்க்க நிர்ப்பந்தம் செஞ்சா, போகவேண்டியதுதான்” கார்மென் அலைபாய்ந்தாள்.

எசமானிக்கென்ன? சேமிப்பு, மருந்து என்று எதைவேண்டுமானாலும் சொல்லுவாள். அவள் கிடக்கிறாள். மாசம் 100 ரூபாய் சேக்கணும்னா நடக்கிற காரியமா? கைக் கடியாரம் வாங்கினதுக்காக இதே எசமானியம்மா மாசாமாசம் கெடுபிடியா பணம் பிடிக்கிறா. இது இல்லாம ஊருக்குள்ளே சீட்டுப் பணம் கட்டணும். மீத மிச்சம் என்ன இருக்கு? மாசம் பூரா நான் செலவு செய்யிற பணம் எசமானி அம்மாவுக்கு ஒருநாள் சாப்பாட்டுச் செலவுக்குக் காணாது.

தெருக்களில் அனேக தெரு விளக்குகள் எரியவில்லை. இருட்டு வழிந்தோடியது. எதிரே வந்த கார்கள் முழு வெளிச்சமும் வாரி இறைத்துக் கண்களைக் குருடாக்கின. பின்னால் வந்த வாகனங்களோ மோதுவதுபோல அருகே தாண்டிப் போயின. யாரும் ஏற்றிக் கொள்ளவில்லை இத்தனைக்கும் கார்மெனைப் போல கருப்பர்கள்தான் டிரைவர்கள். இன்றைய உலகத்துல அவனவன் பாடு அவனுக்கு.

நாளைக்கு எசமானி பணம் கொடுக்கணும் கொடுப்பாளா? கார்மென் மறுபடி மறுபடி யோசித்தாள்.

வீடு சமீபமாக வந்தபோது பெண்களின் ஒப்பாரி வேகமாக வந்து தாக்கியது. ஐயோ டேவிட். மருந்து, மாந்திரீகன் எட்டாத இடத்துக்கு டேவிட் போய்விட்டானா, ஐயோ.

கார்மெனுக்கு கண்கள் இருண்டன.

_______________________________________________________

ஹென்றி லோபேஸ்

“”கோடை நாட்களின் இரண்டு இரவுகள்”
ஆப்பிரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பு, 2003.

என்.பி.டி. தேசியப் புத்தக நிறுவனம், புதுடெல்லி வெளியீடு.
ஆங்கிலம் வழி தமிழில்: புதூர் இராசவேல்
_______________________________________________________

கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்!

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 5

இன்று உலகில் அதிக குற்றங்களை செய்பவர்களை உடைய நாடு என்பது கிறிஸ்தவ நாடுகளாய்த்தான் உள்ளது. லட்சிய மற்ற வாழ்க்கையை வாழ்ந்து வரும் அந்நாட்டு மக்கள் போதை, காமம் ஆகியவற்றுக்கு உட்பட்டு நம்பிக்கையற்ற வாழ்க்கை நடத்தி வருவதுடன் சமுதாய சீர்கேட்டிற்குக் காரணமாய் இருந்து வருகிறார்கள். இசுலாம் நாடுகளில் ஜனநாயகம் என்பது மருந்திற்குக் கூட இல்லாத நிலை. ஒரு நாடு ஒரு நாட்டை ஏப்பம் விட்டு வருகிறது. இசுலாத்தால் உலகத்தில் சமாதானத்திற்குப் பதில் சகிப்பற்ற தன்மையும் யுத்தமும்தான் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படுமானால் அது கிறித்தவ நாடான அமெரிக்காவின் ஆதிக்க வெறியாலோ, அல்லது உலகம் முழுவதும் இசுலாம் மயமாக்க விரைந்து செயல்பட்டு வரும் முசுலீம் நாடுகளாலோதான் ஏற்படும். இது உலக சமாதானத்திற்கு ஆபத்தையே ஏற்படுத்தும்.

 

–  ‘மதமாற்றத் தடைச்சட்டம் ஏன்?’

இந்து முன்னணி வெளியீடு. பக்:42.

”மேலை நாடுகளில் உள்ள பெண்கள் யார் அழைத்தாலும் சோரம் போவார்கள். ஆண்கள் காமவெறியுடன் குடி, கூத்து என்று அலைகிறார்கள். இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுக்குக் காரணம் கிறித்தவ மதம். இசுலாமிய நாடு என்றால் கோமேனி, சதாம் உசேன், இடி அமீன், கடாஃபி, ஜியாவுல் ஹக், தாலிபான், பின்லேடன் போன்ற சர்வாதிகாரிகள், பயங்கரவாதிகள்தான் நினைவுக்கு வருவார்கள். இதற்குக் காரணம் முசுலீம் மதம்.இவற்றுடன் ஒப்பிடும் போது நம் நாட்டின் ஜனநாயகம், அகிம்சை, உயர்ந்த பண்பாடு ஆகியவற்றின் அடிப்படை இந்து மதம்தான்.” இவைதான் இந்நூற்றாண்டு முழுவதும் இந்தியச் செய்தி நிறுவனங்கள் உருவாக்கி வரும் பொதுக்கருத்துக்கள். இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட விசமப்பிரமச்சாரம்தான் மேற்கண்ட இந்துமத வெறியர்களின் அவதூறு.

இது உண்மைதானா என்று பரிசீலிப்பதற்கு இவர்கள் கூறுகின்றன ஜனநாயகம், உயர்ந்த பண்பாட்டை இந்து மதமும் இன்றைய இந்தியாவும் கொண்டுள்ளதா என்பதைப் பார்போம்.

இந்து மதம் ஜனநாயக மதமா?

முதலில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. மதம் என்ற வகையில் உள்ள ஆன்மீக விசயங்களைவிட, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சட்டதிட்டங்களே அதனுடைய சாரம். நேற்றும் இன்றும் இந்திய வாழ்வின் பல நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அந்தச் சாரத்தின் அடிப்படையே ஜனநாயக மறுப்புதான்.

சாதி, மொழி, இன, பாலியல் ஒடுக்குமுறைதான் இந்து மதத்தின் நான்கு வேதங்கள். இம்மையில் மட்டுமல்ல மறுமையில் கூட உழைக்கும் மக்களுக்கு விடுதலை கிடையாது என்று கூறும் மதம் இது மட்டுமே. வாழ்க்கை முறை, சட்ட திட்டம், தண்டனை அனைத்தும் பார்ப்பன – சமஸ்கிருத இலக்கியங்கள் முழுவதிலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இலக்கியத்தில் மட்டுமல்ல, இன்று வரை நடைமுறையிலும் இவை இந்திய உழைக்கும் மக்களை மூழ்கடித்தே வந்திருக்கின்றன. இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்த கொடூரமான வாழ்க்கை விதிகள் பைபிளிலோ, குர்-ஆனிலோ நிச்சயம் இல்லை.

இந்து மதம் ஒழுக்கமான மதமா?

வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும், புராணங்களின் காமவெறி வக்கிரங்களும் இவர்களின் ஒழுக்கத்தைப் பறைசாற்றுகின்றன. ஓடிப்போன சங்கராச்சாரி, கம்பி எண்ணி காலஞ்சென்ற பிரேமானந்தா முதல் கிராமத்தின் குறி சொல்லும் சாமியாடி வரை, இந்து மதத்தின் ஒழுக்கத்தைப் பறைசாற்ற அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறார்கள்.

அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரன் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும்  ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய ஒரே மதம் இந்து மதம்தான், இத்தகைய கேவலத்தை உலக மதங்கள் எவற்றிலும் பார்க்க முடியாது என்கிறார் அம்பேத்கர்.

சரியோ, தவறோ ஒரே வகையான ஒழுக்கத்தை தத்தமது மதங்களில் இருக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என ஏனைய மதங்கள் கூறுகின்றன. ஆனால், இந்து மதம் மட்டுமே சாதி – வருணத்திற்கேற்றபடி ஒழுக்கம் சட்ட திட்டங்களை மாற்றி அமல்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக மேல்சாதி – வருண ஆண்கள் எல்லா சாதிப் பெண்களையும் பெண்டாளலாம்; கீழ் சாதியினரைக் கொலை செய்யலாம்; வரையறை இல்லாமல் சொத்து சேர்க்கலாம் – தானம் பெறலாம் – கொள்ளையடிக்கலாம்; இந்த ‘சலுகைகள்’ கீழ் சாதியினருக்குக் கிடையாது என்பதோடு இவற்றுக்கு உட்பட்டே வாழவேண்டும். மீறினால் மரணதண்டனை. இது புராணக் கதையல்ல என்பதையே கோபாலகிருஷ்ண நாயுடுக்களும், ரன்பீர் சேனாக்களும் நிரூபித்து வருகின்றனர்.

இந்து மதம் அகிம்சையான மதமா?

பிற மதங்கள் வாயளவிலாவது அகிம்சையைப் போதிக்கின்றன. குறைந்த பட்சம் தன் மதத்தினரிடையேயாவது அகிம்சையைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றன. ஆனால், இந்து மதம் மட்டுமே தன் மதத்தினர் மீதே வன்முறை – பயங்கரவாதத்தை ஏவிவிடுகிறது. தர்மம் என்ற பெயரில் நியாயப்படுத்துகிறது. சம்பூகன், ஏகலைவன், நந்தன் ஆகியோரைப் பிரதிநிதிகளாகக் கொண்டுள்ள சூத்திர – பஞ்சம மக்கள்தான் இந்துமத வன்முறைக்குப் பலியானவர்களின் சாட்சியங்கள்.

இந்தியா பண்பாட்டுச் சீரழிவு இல்லாத நாடா?

பிஞ்சுக் குழந்தைகளுக்கு இன்றுவரை திருமணம் நடத்தும் இராஜஸ்தான் மாநிலம் இந்தியாவில்தான் இருக்கிறது. மூன்று லட்சம் குழந்தைகளை வைத்து சிறார் விபச்சாரத்தில் உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பெற்ற நாடும் இதுதான். எயிட்ஸ் தடுப்புப் பிரச்சாரத்திற்கு அதிகம் செலவழிக்கும் ஆசிய நாடும், எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவுவதில் முதல் நிலையிலுள்ள நாடும் இந்தியாதான். பெண் சிசுக்கொலை, கட்டி வைத்து எரிக்கப்படும் கலப்பு மணக்காதலர்கள், ஸ்டவ் வெடித்துச் சாகும் மருமகள்கள், உடன் கட்டை ஏற்றிக் கொல்லப்படும் இளம்பெண்கள், உலகின் பழம்பெரும் விபச்சார நிறுவனமான தேவதாசி முறை ஆகியவற்றின் உறைவிடம் இந்தியாதான்.

மேலவளவுப் படுகொலை, தாழ்த்தப்பட்டவரின் இரத்தத்தில் பெயர் எழுதும் ரன்பீர் சேனா, முசுலீம்களின் தலைகளை விதைத்துப் பயிரிடப்பட்ட பகல்பூரின் காலிஃபிளவர் வயல்கள், சிறுநீரகங்களை அறுத்துக் கொடுத்துக் கடன் வாங்கும் நெசவாளர்கள், கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயிகள் – இவற்றினை உலக வரலாற்றில் பார்ப்பது சிரமம். இந்தியப் போலீசின் உதவியோடு லாக்கப் கொலை – கற்பழிப்பிலும் இந்தியாவே முதலிடத்தில் வருகிறது. மேலும் தொழுநோய், காசநோய், யானைக்கால், பெரியம்மை, பார்வையற்றோர், ஊழல் இவற்றிலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கின்றது.

இந்தியா ஜனநாயக நாடா?

பல இசுலாமிய நாடுகளை ஒப்பிடுகையில் இங்கே பெயரளவில் ஜனநாயகம் இருப்பது உண்மைதான். ஆனால், ‘பெயரளவில்’ என்ற பொருள்தான் மிகவும் முக்கியம். இப்படி பெயரளவு ஜனநாயகம் கிடைப்பதற்குக் காரணம் இந்து மதப் பாரம்பரியம் அல்ல. பார்ப்பனிய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி – தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, மன்னர் எதிர்ப்பு மற்றும் ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் தவிர்க்க இயலாத விளைவாகத்தான் இந்த ஜனநாயகம் கிடைத்தது. இந்த ஜனநாயகத்தைப் பற்றி பெருமையடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஜனநாயகப் போராட்டங்கள் அனைத்தையும் எதிர்த்தே வந்திருக்கிறது.

இவர்களும், இவர்களின் முன்னோடிகளும், காங்கிரசில் இருந்த பார்ப்பன – மேல்சாதி வெறியர்களும், தேவதாசி ஒழிப்பு, விவாகரத்து சட்டம், வைக்கம் போராட்டம், தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம், இந்து சிவில் சட்டம் அனைத்தையும் வன்மம் கொண்டு எதிர்த்ததே இந்நூற்றாண்டின் வரலாறு. எனவே இந்துமத வெறியர்களை ஓரளவுக்கேனும் முறியடித்ததால் கிடைத்ததே இந்தப் பெயரளவு ஜனநாயகம். இவர்களை முழுமையாக வீழ்த்தும் போதுதான் உண்மையான ஜனநாயகம் கிடைக்க முடியும். ஆனால், ‘ஜனநாயகம்’ பேசும் இந்து மதவெறியாளர்களின் நோக்கம், இசுலாமிய நாடுகளைக் காட்டி இங்கேயும் பெயரளவு ஜனநாயக உரிமைகளை ரத்து செய்வதுதான்.

இந்தியா பயங்கரவாதத்தைப் பரப்பாத நாடா?

பயங்கரவாதம் என்பது யாரோ சில தீவிரவாதிகள் பாலத்துக்கோ, பிரதமருக்கோ குண்டு வைப்பது மட்டுமல்ல. உண்மையில் அரசு ஏவிவிடும் பயங்கரவாதத்தின் எதிர்விளைவுதான் பிரதானமானது. கலவரங்கள் அதிகமில்லாத குஜராத்தில் 15,000 பேர் தடா சட்டத்தில் கைதானது, பஞ்சாபில் 25,000 இளைஞர்கள் கொல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்தது, காஷ்மீரில் காணாமல் போனவர்களைத் திருப்பித் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களைக்கூட காக்கை குருவி போல சுட்டுக்கொல்வது, வடகிழக்கில் போராளிகளையும், ஆந்திரா – பீகாரில் நக்சல்பாரி புரட்சியாளர்களையும் போலி மோதலில் சுட்டுக் கொல்வது, பஞ்சாப், ஈழம், வடகிழக்கு, காஷ்மீரில் போராடுகின்ற குழுக்களை உடைத்து கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, மனுக் கொடுக்க வந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களையும், நாக்பூர் கோவாரி பழங்குடியினரையும் அடித்துக்கொன்றது, வீரப்பன் தேடுதலைச் சாக்கிட்டு அதிரடிப்படை கிராமம் கிராமமாகப் பெண்களைக் கற்பழித்தது – இவையெல்லாம் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் நடத்திய சில பயங்கரவாதங்கள்.

மேலை நாடுகள், இசுலாமிய நாடுகளின் நிலை

எனவே மேலை நாடுகளும், இசுலாமிய நாடுகளும் நம்மைவிட உயர்ந்த நிலையில் இருக்கின்றனவா? இல்லை என்கிறோம். இந்தியாவில் உள்ள சீரழிவுகள், பிரச்சினைகன் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. இசுலாமிய நாடுகள் பலவற்றில் ஜனநாயகம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணம் மதம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மன்னனையும், நிலப்பிரபுக்களையும், திருச்சபையையும் எதிர்த்த மக்களின் போராட்டத்தினால்தான் மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் வந்தது. இப்படிப்பட்ட போராட்டம் நடைபெறாத இசுலாமிய நாடுகளில் ஷேக்குகளும், இராணுவச் சர்வாதிகாரிகளும் ஆண்டு வருகின்றனர். இவர்கள்தான் தமது சர்வாதிகாரத்தைத் தக்க வைத்து, ஜனநாயகத்தை மறுப்பதற்கு மதத்தை முகமூடியாகப் பயன்படுத்துகின்றனர். போராட்டம் நடைபெற்ற துருக்கி, எகிப்து போன்ற நாடுகளிலும், முன்னாள் சோசலிச நாடுகளான சீனா, ரசியாவில் உள்ள இசுலாமியப் பகுதிகளிலும் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டது.

பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு முக்கியமான காரணம் ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கி வரும் சமூக நிலைமைகள்தான். மேல்நிலை வல்லரசுகளின் உலக மயமாக்கத்தால் உலக மக்கள் மீது சொல்லொண்ணாத் துயரம் திணிக்கப்பட்டு வருகிறது. தொழில்துறை உற்பத்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பங்குச் சந்தை, தகவல் தொடர்பு, காப்பீடு, வங்கி, நிதி, கேளிக்கை, நுகர்பொருள், திரைப்படம் போன்ற சேவைத் துறைகளை வைத்தே பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. இவற்றின் சமூக விளைவாக பணவெறி, நுகர்வுவெறி, தனிநபர் வாதம், சூதாட்டம், பாலியல் சுற்றுலாக்கள், காமக் களிவெறியாட்டங்கள் போன்ற பண்பாட்டுச் சீரழிவுகள் இசுலாமிய – நாடுகளை உள்ளிட்டு உலகம் முழுவதும் பரவி வருகின்றன.

இந்து மதவாதிகளைப் போல கிறித்தவத் திருச்சபைகளும், அரபு ஷேக்குகளும் இத்தகைய சீரழிவுகளை எதிர்ப்பதாக நடிக்கின்றனர். சாதாரண மக்கள் ‘ஒழுக்கம்’ தவறினால் கடுந்தண்டனை வழங்கம் அரபு ஷேக்குகள் தங்கள் சொந்த வாழ்வில் கேட்பாரில்லாத கேளிக்கை வெறியர்களாக உள்ளனர்.

ஆனால், மத ஒழுக்கம்தான் சீரான ஒழுக்கம் என்றும், அதிலிருந்து பிறழ்வதுதான் சீரழீவு என்றும் எல்லா மதவாதிகளும் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக கிறித்தவம் கருச்சிதைவையும், இசுலாம் பர்தா அணியாமையையும், இந்துமதம்  விதவை மறுமணத்தையும் சீரழிவு என்கின்றனர். அதேசமயம், இத்தகைய பிற்போக்கு மதங்கள் அனைத்தும் விபச்சாரம், அழகிப்போட்டி போன்ற முதலாளித்துவச் சீரழிவுகளையும் சேர்த்தே எதிர்க்கின்றன. ஆனால், முதலாளித்துவத்தின் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு, பிற்போக்கான மத ஒழுக்கம் மாற்றாக முடியாது. இரண்டையும் களையக்கூடிய சனநாயகப் பண்பாடுதான் மாற்றாக விளங்க முடியும் என்கிறோம்.

அடுத்து, இசுலாமியத் தீவிரவாதத்தை சில நாடுகளும், குழுக்களும் ஆதரிப்பது உண்மைதான். ஆனால், அவற்றுக்கு அடிப்படையாக இருந்து பயங்கரவாதத்தைப் பல நாடுகளில் தூண்டிவிடுவது, பிறகு அதை அடக்குவதாகக் கூறி தலையிடுவது, ஆக்கிரமிப்பு செய்வது, குண்டு பொழிவது போன்றவையெல்லாம் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் கைங்கரியங்களே. ரசியாவை எதிர்த்துப் போரிட தாலிபானுக்கு ஆயுத உதவி செய்து, தேச பக்தர்கள் என்ற பட்டமும் கொடுத்த அமெரிக்கா இன்று அவர்களைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்று சீறுகிறது. உலகிற்கு சமாதான உபதேசம் செய்யும் வாத்திகன் திருச்சபை இந்த அமெரிக்க பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது.

சீரழிவுகளை எதிர்த்துப் பாரதப் பண்பாட்டைக் காப்பதாகக் கூறும் ஆர்.எஸ்.எஸ். கூட்டமும் வாத்திகனின் அடியொற்றி, அமெரிக்காவையும் அதன் இந்தியத் தரகு முதலாளிகளையும் ஆதரிக்கின்ற எடுபிடியாகத்தான் இருக்கிறது. கிளிண்டனின் இந்திய வருகையின் போது, நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து உபசரித்தது இவர்களின் பக்திக்கு ஒரு உதாரணம். பாபர் மசூதியை இடித்த கையுடன் ராமஜன்மபூமி முக்தி மோர்ச்சாவின் தலைவர் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில், ‘முசுலீம்களிடமிருந்து இந்துக்களையும், உலகையும் காப்பாற்ற அவதரித்த நவீன கிருஷ்ணபகவானே’ என்று உருகுகிறார்.

இத்தகைய அட்சர சுத்தமான கேவலமான அடிமைகள், இசுலாமிய நாட்டு மக்களை அடக்கி ஆட்டம் போடும் அரபு சேக்குகள் பெற்றுள்ள உரிமையை பார்ப்பன – பனியா கும்பலுக்கும் பெற்றுத்தர விரும்புகிறார்கள். மேலை கிறித்தவச் சீரழிவு, இசுலாமிய பயங்கரவாதம் என்று மதச்சாயம் பூசி அவதூறு செய்வது இதற்காகத்தான்.

– தொடரும்

____________________________________________________________

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

கர்நாடகாவில் “சாமி சத்தியமா” காமெடி காட்சிகள்!

14

ஞ்சுநாதர் இப்போது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். கருநாடகத்தின் தர்மஸ்தலாவில் அமர்ந்து கொண்டு தானுண்டு தனது தருமப் பரிபாலனம் உண்டு என்று சிவனேயென்று இருந்த மஞ்சுநாதருக்கு சநாதன தருமத்தின் காவலர்களான பாரதீய ஜனதாவின் வடிவில் இப்போது  பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதர்மம் தலையெடுத்து தர்மம் தலைசாயும் போதெல்லாம் சம்ஜௌதா, நாண்டெட், மாலேகான் பாணியில் ஆர்.டி.எக்ஸ் அவதாரம் எடுக்கும் பாரதீய ஜனதாவே இந்த சோதனைக்கு மூலகர்த்தா என்பதால் தான் மஞ்சுநாதர் கடப்பாறையை விழுங்கியவர் கணக்காக விழித்துக் கொண்டிருக்கிறார்.

கீர்த்தணாரம்பத்திலே கருநாடகத்தில் முதன் முறையாக இராம ராச்சியத்தை அமைப்பதில் வெற்றி கண்ட பாரதிய ஜனதாவின் எடியூரப்பா, சீரோடும் சிறப்போடும் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ் காண்டீபத்திலிருந்து சீறிப் பாய்ந்த இராம பாணங்கள் குத்திக் கிழித்ததில் கருநாடகத்தின் சகல துறைகளிலும் ஊழல் சீழ் வடிந்து ஆறாய் ஓடத் துவங்கியது. ‘இதென்னடா நமக்கு வந்த சவால்’ என்று கங்கை ஆறே பொறாமை கொண்டது. நடக்கும் தேட்டையில் தனக்கான அவிர் பாகம் தடைபட்டுப் போனதைக் கண்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஹெச்.டி. குமாரசாமி நெற்றிக் கண்ணைத் திறந்தார். ஊடகங்களில் எடியூரப்பாவின் காவிக் கோவணத்தை உருவி அம்மணக்கட்டையாக நிறுத்தினார்.

பாவப்பட்ட ஏழைகளான ரெட்டி சகோதர்களின் ரொட்டிச் செலவுகளுக்கு பெல்லாரி மாவட்டத்தையே தூக்கிக் கொடுத்த எடியூரப்பா சில பெட்டிகளை குமாரசாமியின் வாயில் திணித்து ஆறுதல்படுத்த முடியுமா என்று முயற்சித்துள்ளார். அவ்விடத்தில் வாய் கொஞ்சம் பெரிது என்பதாலோ என்னவோ பேரம் படியவில்லை. அதைத் தொடர்ந்து குமாரசாமி சற்றும் மனம் தளராமல் எடியூரப்பா தன்னிடம் நடத்திய பேரத்தை பகிரங்கமாய் அம்பலப்படுத்தி விட்டார். இது நடந்தது கடந்த பதினாறாம் தேதி. அப்போது அவர், தான் எடியூரப்பாவின் குடும்பத்தார் அடிக்கும் கொள்ளைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால் எதிர்காலத்தில் அவரது கட்சியோடு பாரதிய ஜனதா கூட்டணி அமைக்கும் என்றும், பணம் கொடுப்போம் என்றும் எடியூரப்பா ஆசை காட்டியதை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

தான் ஆட்டிய வெள்ளைக் கொடியைக் கிழித்து மலம் துடைத்து தன் முகத்திலேயே அப்பி விட்ட சோகத்தை மறைத்துக் கொண்ட எடியூரப்பா, தனது நேர்மையை நிரூபிக்க குமாரசாமியை ஒரு சவாலுக்கு அழைக்கிறார். சவால் என்றதும் நீதி மன்றம் வழக்கு என்பதெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வரக்கூடும் – முதலில் அதை ரப்பர் வைத்து அழித்துப் போடுங்கள். நாம் பேசிக் கொண்டிருப்பது சாதா ராஜ்ஜியத்தைப் பற்றியல்ல – ராம ராஜ்ஜியத்தைப் பற்றி.

சரி விஷயத்துக்கு வருவோம். மேற்படி சவால் என்னவென்றால், குமாரசாமி தான் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மையென்று தர்மஸ்தலாவில் இருக்கும் மஞ்சுநாதரின் முன் கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய வேண்டியது. தான் சொல்வதே சரியானது என்று எடியூரப்பாவும் சத்தியம் செய்ய வேண்டியது. இதில் யார் சொன்னது பொய்யோ அவரை தண்டிக்க வேண்டிய பொறுப்பு மஞ்சுநாதரைச் சேர்ந்தது.

எடியூரப்பா, ஜெயலலிதா போன்றவர்களுக்கெல்லாம் சாமியும் சத்தியமும் சர்க்கரைப் பொங்கல் போலத்தான். இவரே இப்படி ஏற்கனவே பல கோயில்களில் பல்வேறு சத்தியங்களையும் ஹோமங்களையும் செய்துள்ளவர் தான். அது தான் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்கிறார்களே. இன்றைக்கு ஒரு சாமியோடு கூட்டணி வைத்து இன்னொரு சாமிக்கு அல்வா கொடுத்து விடலாம், நாளை வேறு ஒரு சாமியோடு கூட்டணி வைத்து மொத்தமாக எல்லோருக்குமே அல்வா கொடுத்து விடலாம். இது தான் எடியூரப்பா ஜெயலலிதா போன்றவர்களின் அசட்டுத் துணிச்சலுக்குக் காரணம்.

எடியூரப்பா -குமாரசாமி
குமாரசாமி - எடியூரப்பா

ஆனால் இந்த முறை விசேஷம் என்னவென்றால், குமாரசாமியைப் பார்த்து ‘துண்டைப் போட்டுத் தாண்ட ரெடியா’ என்று எடியூரப்பா அடித்த  சவால் அரசுப் பணத்தில் அடித்ததாகும். மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து தான் எல்லா பத்திரிகைகளிலும் அரைப்பக்க அளவில் விளம்பரம் கொடுத்தார். ஒருவேளை என்றாவது ஒருநாள் ஆர்.எஸ்.எஸ் கும்பல் சொல்வது போல் இராம ராஜ்ஜியம் மட்டும் அமைந்து விடுமானால் நீதிமன்றங்களை எல்லாம் இழுத்து மூடிவிடுவார்கள்.

 

ஹிந்து சநாதன தருமத்தின் அடிப்படையில் தீமிதித்தல், கற்பூரம் அடித்தல், குழந்தையைப் போட்டு தாண்டுதல், நாக்கில் சூடு போட்டுக் கொள்ளுவது, சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது என்பன போன்ற வருண தருமத்தின் அடிப்படையிலான விசாரணை முறைகளும் தண்டனை முறைகளுமே கோலோச்சும்.

எடியூரப்பா சிலைமுழுங்கி என்றால் குமாரசாமி மலைமுழுங்கி. எனவே, அவரும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் சவாலை கடந்த பதினெட்டாம் தேதி ஏற்றுக் கொள்கிறார். இதுவும் ஊடகங்களில் விமரிசையாக வெளியாகிறது. இந்தியாவின் ஐ.டி தலைநகரம் இப்படி ஐந்தாம் நூற்றாண்டு பிராணிகளின் பிடியில் இருப்பதைப் பார்த்து ஊரே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இப்படியாக எடியூரப்பாவும் குமாரசாமியும் துண்டைப் போட்டுத் தாண்டுவதற்கான நாளாக 27-ம் தேதி குறிக்கப்பட்டது.

இந்த ஆன்டி கிளைமேக்ஸை ஒரிஜினல் சத்தியவான் (ISO 2000:9001) எடியூரப்பா எதிர்பார்க்கவில்லை. ஒரு விஷயம். சீனியர் கவுடாவும் ஜூனியர் கவுடாவும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அரசியல் நடைமுறையான பில்லி சூனியங்கள் மற்றும் பூஜை புனஸ்காரங்களில் போதுமான அளவுக்குக் கரைகண்டவர்கள் தான். அவர்கள் நடத்திய பல்வேறு ஹோமங்களையும் பூஜைகளையும் பார்த்து மிரண்டு போன எடியூரப்பா ஏற்கனவே ஒருமுறை ‘ கவுடா குடும்பம் எனக்கு சூனியம் வச்சிட்டானுக’  என்று புலம்பியிருக்கிறார். இங்கே தான் இந்தியப் போலி ஜனநாயகத்தின் உண்மையான மாண்பு வெளிப்படுகிறது. இவர்களுக்குள் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவதில் போட்டி நடப்பதில்லை. மாறாக, குட்டிச்சாத்தானை யார் முதலில் கைக்குள் போட்டுக் கொள்வது என்பதில் தான் போட்டியே நிலவுகிறது.

சம்பந்தப்பட்ட நாளன்று தர்மஸ்தலாவின் மஞ்சுநாதர் ஆவலோடு ஜமுக்காளம், சொம்பு சகிதமாக காத்துக் கொண்டிருந்த நிலையில் எடியூரப்பா தனது சத்தியத்தைத் திரும்ப வாங்கிக் கொள்கிறார். புனிதமான பல்வேறு மடங்களைச் சேர்ந்த மட சாமியார்களும், புனிதத்துக்கே புனிதமாக விளங்கும் பாரதிய ஜனதா தலைவர் கட்காரியும் தன்னிடம் வேண்டிக் கொண்டதை அடுத்து தான் சவாலில் இருந்து பின் வாங்குவதாக எடியூரப்பா அறிவித்து மஞ்சுநாதரின் பஞ்சாயத்து சொம்பில் மூத்திரம் அடித்து விட்டார்.

ஊருக்கே தர்ம நாட்டாமையாக விளங்கிய ‘மஞ்சுநாதர் இப்போது என்னைத் தீர்ப்பு சொல்ல விடுங்கடா’ என்று புலம்பிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. பில்லி சூனியமும் துண்டைப் போட்டுத் தாண்டும் ஜனநாயக நடைமுறையும் மண்ணைக் கவ்வியதை அடுத்து ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவக்கான எடியூரப்பா இப்போது குமாரசாமிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாகச் சொல்லியிருக்கிறார். சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே கண்டிருக்கும் நாம்  இவையிரண்டுக்கும் வேறுபாடே இல்லையென்கிறோம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

அரசியல் பிரச்சினைகள் என்றில்லை; தனது அரசின் மேல் எழும் ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்களுக்கு இவர் அளிக்கும் பதில் – ‘இதெல்லாம் பில்லி சூனிய வேலை’ என்பது தான். ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வர் அறிவியல் பூர்வமாகச் சிந்திக்க மறுக்கிறார் என்பதோடு பில்லி சூனியத்தையே தனது சகல பூஜைகளுக்கும் காரணமாக முன்வைக்கிறார். நாளை ஒருவேளை இராம ராஜ்ஜியம் அமைந்து விடுகிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள். விலைவாசி உயர்வுக்கும், வேலையில்லாப் பிரச்சினைகளுக்கும் சுடுகாட்டு முனி தான் காரணம் என்பார் இராம கோபாலன். அதற்கு ஒரு சாந்தியாகம் செய்து விட்டால் போதும் என்று எடுத்துக் கொடுப்பான்  ஜெயேந்திரன். ஆர்.எஸ்.எஸ் சொல்லும் இராம ராஜ்ஜியம் என்பது இப்படித் தான் இருக்கும் நண்பர்களே. அதன் ஒரு சின்ன ட்ரைலர் தான் கருநாடகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அம்பானியின் பிரம்மாண்ட ஊழல்!

27
கிருஷ்ணா கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் எண்ணெய் கிணறு
கிருஷ்ணா கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் எண்ணெய் கிணறு

 

த்திய கணக்குத் தணிக்கை அதிகாரி மீண்டும் ஒரு ஊழல் பூதத்தை அடையாளம் காட்டியுள்ளார். சென்ற வருடம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக வெளியான CAGன் அறிக்கையிலிருந்து எழுந்து வந்த பூதத்தையே எப்படி அடக்குவது என்று தெரியாமல் மத்தியில் ஆளும் காங்கிரசு பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய CAG அறிக்கையிலிருந்து கிளம்பியுள்ள கே.ஜி பூதத்தை சர்வகட்சிகளும் மௌனமாய் இருப்பதன் மூலம் மக்களின் கவனத்திலிருந்து மறைத்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் எண்ணை துரப்பணம் செய்யவும் ரிலையன்ஸ், கெய்ன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் மாபெரும் ஓட்டைகள் இருப்பதாகவும், அதன் வழியே புகுந்து புறப்பட்டுள்ள முகேஷ் அம்பானி, அரசுக்கும் மக்களுக்கும் பட்டை நாமம் சாற்றியிருப்பதாகவும் இப்போது வெளியாகியிருக்கும் CAG அறிக்கையின் முன்வரைவு கூறுகிறது.

குறிப்பாக கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் இயற்கை எரிவாயு வயல்களை கண்டுபிடிக்கவும், அதற்காக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், ஆரம்பத்தில் ரிலையன்ஸ் செய்யவிருப்பதாக ஒப்புக் கொண்ட மூலதனச் செலவைக் காட்டிலும் இரண்டே வருடத்தில் மும்மடங்கு அதிகமாக செலவு செய்ததாக கள்ளக்கணக்கு எழுதியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் போடும் போது ஒப்புக் கொண்ட அளவுக்கு எரிவாயு ரிசர்வ் இல்லை என்று சொல்லி செலவு செய்ததாக அவர்கள் காட்டிய தொகையையும் அரசிடம் இருந்தே கறந்துள்ளனர். இது இந்த ஊழலின் ஒரு அம்சம்.

இதில் இன்னொரு அம்சமும் உள்ளது. அதாவது, எரிவாயு கண்டுபிடிக்க (to be explored) வேண்டிய பகுதிகள் என்று குறிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட (discovered)  பகுதிகள் என்று போர்ஜரி வேலையும் செய்துள்ளது ரிலையன்ஸ். கிருஷ்ணா கோதாவரி சுழிமுனையில் இயற்கை எரிவாயு ரிசர்வ் இருப்பதை உறுதி செய்து கொண்ட அரசு, அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிடம் கொடுக்கிறது. இதில் ஐந்து சதவீத பகுதியில் மட்டும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்த ரிலையன்ஸ், அருகில் உள்ள மற்ற பகுதிகளில் தானே எரிவாயுவைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி அப்பகுதிகளையும் அமுக்கிக் கொண்டிருக்கிறது.

இவ்விவகாரத்தில், அரசுக்கும் தனியாருக்கும் இடையேயான ஒப்பந்தம் என்பது உற்பத்திப் பகிர்வின் (PSC – Production-sharing contract) அடிப்படையில் லாபப் பகிர்வு இருக்கும் என்றும், அதில் மூலதனச் செலவுக்கு ஏற்ப லாப விகிதங்கள் பகிர்ந்து கொள்ளப் படும் என்றும் குறிப்பிட்டிருப்பதால் தான் ஊழல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு, நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கிறது.  இந்த மோசடிகளுக்கெல்லாம் பெட்ரோலியத் துறை அதிகாரிகளும் அமைச்சரும் உடந்தையாக இருந்ததாகவும் அறிக்கை சொல்கிறது.

தற்போது நடப்பில் இருக்கும் உற்பத்திப் பகிர்வு அடிப்படையிலான ஒப்பந்தங்கள் ஊழலுக்கு வழிகோலுவதால், இதற்கு மாற்றாக உற்பத்தியின் அடிப்படையில் ராயல்டி விதிப்பது சரியாக இருக்கும் என்று கணக்குத் தணிக்கை அதிகாரி பரிந்துரைத்துள்ளார். மேலும், செனற் ஆண்டு வெளியான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழலைப் போல் அல்லாமல், இந்த ஊழலில் மக்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை கணிக்க முடியவில்லை என்றும், ஆனால் அதே நேரம் இந்த ஊழலின் அளவு முந்தைய ஊழல்களைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்றும் கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆயினும் சில சுயேச்சையான கணக்கீடுகள், இந்த ஊழலின் அளவு சற்றேரக்குறைய 2ஜி அலைக்கற்றை ஊழலின் அளவை ஒத்திருக்கலாம் என்று தெரிவிக்கிறது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

கணக்குத் தணிக்கை அதிகாரியின் வரைவு அறிக்கை வெளியாகி மத்தியில் ஆளும் காங்கிரசு கும்பல் படுகேவலமாக அம்பலமாகி நிற்கும் இந்த நிலையை பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா தனது சொந்த அரசியல் நலனுக்காகக் கூட பயன்படுத்திக் கொள்ள முனையவில்லை. காங்கிரசோடு சேர்ந்து கிழிந்திருப்பது அம்பானியின் கோவணமும் தான் என்பதால் பெயரளவுக்கு முனகிவிட்டு அடங்கிவிட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியான போது சம்பிரதாயமாகவாவது சாமியாடிய போலி கம்யூனிஸ்டுகள் இப்போது ‘பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு’ என்கிற ரீதியில் இந்த ஊழலைப் பற்றி கருத்துத் தெரிவித்து முடித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

ஏற்கனவே கிருஷ்ணா கோதாவரி எரிவாயு வர்த்தகத்தில் அம்பானி சகோதர்களுக்குள் குத்துவெட்டு நடந்த போது அதில் தலையிட்டு பஞ்சாயத்துப் பேசி தீர்த்து வைத்ததே சுப்ரீம் கோர்ட்டு தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் கம்பெனி  எரிவாயுவுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ததாக அனில் அம்பானி ஆந்திர அரசு மற்றும் உர அமைச்சகங்கள் குற்றம் சாட்டிய போது தலையிட்ட காபினெட் குழுவும் உச்ச நீதிமன்றமும் முகேஷுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியிருந்தன.

ஆக, ஊழல் சட்டபூர்வமானது என்பதைக் கடந்து, வளங்களைத் திருடிச் செல்வதில் முதலாளிகளுக்கு ஏதாவது பிரச்சினையேற்பட்டால் அதை பைசல் பண்ணிவிட நீதிமன்றமும் அரசுமே தயாராய் நிற்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

சமீப நாட்களாக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்து வரும் முதலாளித்துவ ஊடகங்களோ, இதைப் பற்றி எதுவும் பேசாமல் மயான அமைதியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஒரு செய்தியாகக் குறிப்பிடும் போது கூட, உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதால் தான் ஊழல் நடந்து விட்டது என்றும், கணக்குத் தணிகை அதிகாரி முன்மொழிந்திருக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டால் பிரச்சினை தீர்ந்தது என்பது போலும் சொல்கிறார்கள்.

பொதுவாக ஒவ்வொரு முறை ஊழல் வெளியாகும் போதும் அதைப் பற்றி தனித்தனியே விவாதிப்பதும், அதில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி வாய்கிழியப் பேசி விட்டு, அப்போதைக்கு கையில் மாட்டும் யாராவது ஒரு பலியாட்டின் தலையில் பாவக் கணக்கை எழுதி வைத்து விட்டு அடுத்த ஊழலுக்குக் காத்திருப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் வாடிக்கையாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரமுக்கு ஒரு ராசா, காமன்வெல்த்துக்கு ஒரு கல்மாடி என்று ஏற்கனவே மாட்டிக் கொண்ட பலியாடுகளைப் போல் இதற்கும் இனி ஒரு பலியாடு கண்டுபிடிக்கப்படுவார். பார்வையற்ற நான்குபேர் யானையைத் தடவிப் பார்த்துப் புரிந்து கொள்ள முயல்வதைப் போன்றே இவர்களின் அணுகுமுறையும் இருக்கிறது.

இந்த ஊழல்கள் அனைத்திலும் ஒரு இணைப்புக் கண்ணி இருப்பதை இவர்கள் திட்டமிட்டே மறைக்கிறார்கள். மக்களையும் அவ்வாறு பார்த்துப் புரிந்து கொள்ள விடுவதில்லை. இப்போது வெளியாகியிருக்கும் ஊழலைப் பொருத்தவரையில் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஓட்டை என்பது ஒரு விளைவு தான் – இந்த விளைவுக்கான காரணம் வேறு.

தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கிய ஆரம்ப காலத்தில் – ஏன் இன்றும் அதியமான் போன்றவர்கள் கூட – அதற்கான காரணமாக முன்வைக்கப் பட்டது பொதுத்துறையின் திறமையின்மை. இவர்கள் முதலீடு செய்யும் பலமும், தொழில் நுட்பத் திறனும், வாடிக்கையாளார் சேவையிலும் பொதுத்துறை நிறுவனங்கள் பலமடங்கு பின்தங்கியிருப்பதாகவும், இதனால் தான் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும், இதற்குத் தனியார்களை அனுமதிப்பதே ஒரே தீர்வு என்றும் சொன்னார்கள்.

ஆனால், இந்தியாவின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணை வயல்களையு இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடிப்பதிலும் எண்ணை துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது.  அப்படியிருக்கும் போது, தனியார் பகாசுரக் கம்பெனிகளான ரிலையன்ஸுக்கும் கெயின்ஸுக்கும் பிரிட்டிஷ் கேஸுக்கும் இந்த ஒப்பந்தத்தை அளிக்க வேண்டிய தேவை ஏன் வந்தது எங்கிருந்து வந்தது?

ஊழல் பிறக்கும் இடம் இது தான். இப்போது அம்பலமாகியிருக்கும் ரிலையன்ஸ் ஊழல் என்பது எதார்த்தத்தில் பிரதானமான ஊழலின் நடைமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு முறைகேடு. பிரதானமான ஊழல் அப்படியே இருக்கும் போது இந்த நடைமுறைக் கோளாறையே மொத்த ஊழலாகப் பார்க்கச் சொல்வதென்பது ஆபத்தானது மட்டுமல்ல – மக்களை ஏமாற்றுவதும் கூட. இதைத் தான் அண்ணா ஹசாரே உள்ளிட்ட திடீர் ஊழல் எதிர்ப்புப் போராளிகள் செய்கிறார்கள்.

ஆக, நாட்டுக்கும் நாட்டு மக்களும் சொந்தமான இயற்கை வளங்களைக் கூறு போட்டு உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கும் படையல் போட்டு வைத்து விட்டு அதைப் பொறுக்கித் தின்ன வரும் முதலாளிகளுக்கு இடைஞ்சல் இல்லாத நடைமுறையை மேற்கொள்வது தான் ஊழலற்ற நல்ல நிர்வாகம் (good governance) என்கிறார்கள். இந்தக் கூச்சலில் வளங்கள் கொள்ளை போவதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே அண்ணா ஹசாரே போன்ற கோமாளிகளின் கூத்துகள் பயன்படுகின்றன.

ஆக, உண்மையாகவே ஊழல் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் – அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் தேசபக்தியும் கொண்டவர்கள், அதற்கு ஊற்றுமூலமாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியதைத் தவிற வேறு வழியொன்றும் இல்லை என்பதற்கு நேரடி சாட்சியாய் ரிலையன்ஸ் ஊழலே இருக்கிறது.

______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

சரசம், சாடிஸம், சாரு நிவேதிதா!

211

நடந்தது என்ன? – ஒரு சுருக்கமான அறிமுகம்!

படிப்பு முடித்த ஒரு இளம்பெண்.  வேலை பார்க்க வெளியே செல்ல முடியாத சூழ்நிலை, இணையம் மூலமாக சிறிய அளவில் டி.டி.பி போன்றதொரு வேலை  எடுத்து செய்பவள். கட்டுப்பெட்டியான குடும்ப வாழ்க்கையில் வெளியே தொடர்பு கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது இணையம். கணினிப் பெட்டியில் அந்தப்பெண் நேரம் செலவிடுவதை குடும்பத்தினரும் தடை செய்யவில்லை. கணினியில் பொழுதை செலவிடுவது வீட்டுச் சிறையை மீறுவதாக இல்லாததுதான் அந்த அனுமதிக்கு காரணம்.  இப்படித்தான் அவளது இணைய வாழ்க்கை தொடங்குகிறது.

ஆரம்பத்தில் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டும், பின்னர் முக நூலில் – பேஸ்புக்கில் – தனி கணக்கு ஒன்று ஆரம்பிக்கிறாள். சிறு கவிதைகளையும், தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறாள். நட்பு வட்டம் விரிகிறது. பேஸ்புக்கில் சாருவின் வாசகர் வட்டம் அறிமுகமாகிறது , அதில் இணைந்து அங்கே கருத்துகளை எழுதுகிறாள். பெண் அதுவும் இளம்பெண் என்பதினாலேயே தான் இத்தனை சீக்கிரம் முகநூலில் பிரபலமாகியிருக்கிறோம் என்பதை அந்த பேதைப் பெண் உணர்ந்திருக்கவில்லை.

இதனால் அந்த பெண்ணோடு நட்புக் கொண்டவர்கள் அனைவரும் ஜொள்ளர்கள் என்று பொருளல்ல. ஆனால் பொது வெளியில் செயல்படும் ஒரு பெண் இந்த சமூக யதார்த்தத்தை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய அனுபவமோ, முதிர்ச்சியோ, வழிகாட்டலோ இல்லாததால் அந்தப்பெண் இதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறாள். அவள் ஒரு இளம்பெண் என்று வாசகருக்கு உணர்த்துப் பொருட்டே அர் விகுதி போடாமல் அள் விகுதி போட்டு எழுதுகிறோம்.

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா

சாரு ஒரு பிரபலமான எழுத்தாளர் என்பது மட்டும் அதுவும் இணையத்தின் மூலம்தான் அந்தப் பெண்ணுக்குத் தெரியும். அவர் எழுதிய எதையும் அந்தப் பெண் படித்ததில்லை. பின்னர் சாரு அந்தப் பெண்ணின் ஒரு கவிதையைப் பாராட்டி தனது தளத்தில் வெளியிடுகிறார். மெல்ல மெல்ல உரையாடவும் செய்கிறார். அவர் என்ன மாதிரியான வக்கிரமான ஆபாசமான உரையாடல் நடத்தினார் என்பதை தமிழச்சியின் பதிவுகளும், ஆதாரங்களும் தெரிவிக்கின்றன. இங்கும் அதன் ஸ்கீரீன் ஷாட் போட்டிருக்கிறோம். இந்த உரையாடல்கள் சாரு செய்தபவைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை ஊட்டி இந்த விசயத்தை வெளிவர முயற்சி செய்த தோழர் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்! இது குறித்து முன்னரே தெரிந்திருந்தாலும் வேலை காரணமாக உடன் வினவில் எழுதவில்லை.

அந்தப் பெண்ணோடு வக்கிர உணர்வுடன் சாரு நடத்திய பொறுக்கித்தனத்தை யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது மட்டுமே இங்கு விசயமல்ல. இந்தப் பொறுக்கித்தனம் என்ன மாதிரி ஆரம்பித்து எங்கே சென்றது என்பதை பருண்மையாக ஆய்வு செய்தால்தான் அதன் விகாரத்தை உணர முடியும்.

இடையில் இந்த இலக்கியப் பொறுக்கிக்கு அடியாள் வேலை செய்யும் சில ஜென்மங்கள் அப்படி ஒரு பெண்ணே இல்லை என்று ஒரு பிரச்சாரத்தை கிளப்பி சாருவை காப்பாற்ற முனைகிறார்கள். இதில் துளியும் உண்மை இல்லை. தமிழச்சி உதவியுடன் நாம் அந்தப் பெண்ணுடன் பேசினோம். அவளது பேஸ்புக் கணக்கிற்குள் சென்று அனைத்தையும் பார்வையிட்டோம். இங்கும் சில ஆதாரங்கள் இணைத்திருக்கிறோம். (படங்களை பெரியதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மேலும் சிலர் அந்தப் பெண்தான் சாருவை மாட்டிவிட வேண்டும் என்று வலை விரித்ததாக அவதூறு செய்கிறார்கள். அதுவும் உண்மையல்ல. வலை விரித்தது அதாவது வக்கிரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முனைந்தது சாருதான்.

சாரு நிவேதிதாஅந்தப் பெண்ணின் கவிதையை சாரு ஏன் பாராட்டி எழுத வேண்டும்? இது வழக்கமாக ஒரு பிரபலம் ஒரு புதிய எழுத்தாளரை அல்லது எழுத விரும்பும் ஒரு வாசகியை ஊக்குவிக்கும் செயல் அல்ல. சாருவின் மனதில் ஏதும் தெரியாத இந்தப் பெண்ணை ‘பயன்படுத்திக்’ கொள்ளவேண்டும் என்ற திட்டத்தோடு, வெகு சாமர்த்தியமாக அந்தப் பாராட்டை உள்நோக்கத்தோடு எழுதும் நோக்கம் இருக்கிறது. இத்தனைக்கும் அந்தப் பெண் உலகப் புகழ்பெற்ற கவிதை எதையும் எழுதியிருக்கவில்லை.

அதிகாரத்தில் இருக்கும் ஆண்களின் பொறுக்கித்தனங்கள்!

ஆண்கள் அனைவரும் பொறுக்கியல்ல. ஆனால் உழைத்துப் பிழைக்கும் ஆண்களை விட அதிகாரத்தில் அதுவும் முறைகேடான வழியில் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், பணத்தையும் வைத்திருப்பவர்களிடத்தில் இந்தப் பொறுக்கித்தனம் ஊற்றெடுப்பதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன. சாரு அத்தகையவர்களில் ஒருவர்.

மோனிகா லிவின்ஸ்கி விவகாரத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். வெள்ளை மாளிகையில் பகுதி நேரமாக பணியாற்றி வந்த அந்த இளம் பெண்ணிடம், அவளுக்கென்று நல்ல நிரந்தர வேலை கிடைக்க ஏற்பாடு செய்திருப்பதாக ஆசைகாட்டித்தான் பில் கிளிண்டன் பாலியல் வன்முறை செய்கிறார். அமெரிக்க அதிபர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் செய்த அந்த பொறுக்கித்தனம் பின்னர் விசாரணை கமிஷன் வரைக்கும் சென்றாலும் ஊடகங்களைப் பொறுத்த வரை அது ஒரு சென்சேஷனாக மாற்றப்பட்டு நீர்த்துப் போனது. இங்கு நாம் பார்க்க வேண்டியது வெள்ளை மாளிகையில் பணியாற்றும் பெண்கள் கூட இந்த அதிகாரப் பொறுக்கிகளை எதிர்கொண்டே பணியாற்ற முடியும் என்பதே.

நமது பல்கலைக்கழங்களில் முனைவர் படிப்புக்கு ஆய்வு செய்யும் பெண்களின் கையறு நிலை குறித்து நீங்கள் அறிவீர்களா? அவர்களில் சிலர் கைடுகளை ‘திருப்தி’ படுத்தினால்தான் முனைவர் பட்டத்தை பெற முடியும். பெண் போலீசாக இருந்தாலும் கூட அதிகார ஆண் போலீசின் வக்கிரங்களை எதிர்கொண்டே வாழ முடியும். கட்டிடம் கட்டும் மேஸ்திரி கூட தன்னிடம் வேலை செய்யும் சித்தாள் பெண்களை வேலை வாய்ப்பை காட்டியே பணிய வைப்பது சாதாரணமில்லையா? தனியாக 24 மணிநேர கிளினிக் நடத்தும் பணக்கார மருத்துவர்களும், பெரிய மருத்துவமனையின் பணியாற்றும் மருத்துவர்களும் தங்களது செவிலியர்களை இப்படி நடத்துவதற்கு தடையில்லாத வாய்ப்பு இருக்கிறதே? திரையுலகிலோ வாய்ப்பு தேடும் பெண்கள் அனைவரும் இப்படி ‘ஒத்துழைத்தால்தான்’ ஒரு நடிகையாக மாற முடியும்.

இந்தப் பெண்கள் தங்களது வாழ்க்கை, குடும்ப நிலை, வேலையில் தொடரவேண்டிய கட்டாயம் காரணமாக இந்தப் பொறுக்கித்தனங்களை சகித்துக் கொண்டு குமுறலோடு கடந்து செல்கிறார்கள். அந்தக் குமுறல் வெடிக்கும் போது மட்டுமே நாம் இந்தப் பொறுக்கிகளை அறிய முடியும். அப்படித்தான் சாரு இப்போது பிடிபட்டிருக்கிறார்.

ஆக இணையம் துவங்கி வெள்ளை மாளிகை வரை அதிகாரத்தில் உள்ள சில பொறுக்கிகள் தங்களது அதிகாரம் வழங்கியிருக்கும் வாய்ப்புகளை வைத்து தம்மிடம் பணியாற்றும் பெண்களை கொத்திச் சென்றுவிடலாம் என்றுதான் அலைகிறார்கள். அது தவறல்ல, தவறு என்று பிடிபட்டாலும் அதிகார வசதி கொண்டு சுலபமாக வெளியேறி விடலாம் என்பதுதான் அந்தப் பெண்கள் மிகவும் சுலபமாக வன்முறைக்குள்ளாக்கப்படும் சாத்தியத்தை வழங்குகிறது.

சாருவின் பாராட்டும், விமரிசனங்களும் பச்சையான சுயநலத்திற்கே!

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு தனது பிரபலத்தை வைத்து ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடக்க வேண்டுமென்ற திட்டத்தோடு அப்படி பாராட்டி எழுதுகிறார். அந்தப் பாரட்டை பெரிய அங்கீகாரமாக கருதி அந்தப் பெண்ணும் தனது பக்கத்தில் பகிர்கிறாள். வாழ்த்துக்கள் குவிகின்றன. உண்மையில் அந்தப் பிரபலமான எழுத்தாளரது பாராட்டிற்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா என்று அந்தப் பெண் குழந்தைத்தனமாக எண்ணியிருக்கிறார். அடிமைகளின் உலகத்தில் அடிமைகளோடு அடிமையாக வாழும் எந்தப் பெண்ணுக்கும் இத்தகைய பாராட்டுகள் நிச்சயம் பெரிய விசயமாகத்தான் இருக்கின்றது.

ஆனால் இந்த பிரச்சினை என்று அல்ல சாரு பாராட்டும், அல்லது விமரிசிக்கும் அத்தனைக்கும் உள்நோக்கங்கள் உண்டு. அவை எதுவும் கொண்ட கொள்கையின்பால் நெறிபிறழாத சத்திய ஆவேசங்களிலிருந்து தோன்றுவதில்லை. திராவிட இயக்கம், தி.மு.க இரண்டையும் வசைபாடுவதில் தொடங்கி கோமியத்தின் சிறப்புக்களை வியந்தோதி பார்ப்பனியத்திற்கு பாராட்டு வாசிப்பது வரை பல்லிளிக்கும் சாருவின் துக்ளக் கட்டுரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். துக்ளக் என்ற வலதுசாரி பிற்போக்கு பார்ப்பனியப் பத்திரிகையில் பணம் வாங்கிக் கொண்டு எழுதும் சாரு, சோ ராமசாமியின் ஆசனவாய் போன்று பேசுவதில் என்ன கொள்கை வெங்காயம் இருக்க முடியும்?

பூக்காரி கதையில் சந்தனமுல்லையை வன்மத்தோடு தூற்றிய நர்சிமை அப்போது சாரு கண்டிக்க வில்லை. ஏனெனில் நர்சிம்மிடம் சரக்கு பார்ட்டியில் கலந்து கொண்ட சில அல்பங்கள் – அவைகள் சாருவுக்கும் அல்பங்கள் – அப்போது நர்சிமை கைவிடவில்லை என்பதால் சாருவும் கண்டு கொள்ளவில்லை. இப்போது அந்த அல்பங்கள் ஏதோ பிசினஸ் தகராறு வந்த உடன் நர்சிமை கைழுவியதும் சாருவும் கை கழுவுகிறார்.

தனது சரோஜாதேவி புத்தகங்களை வெளியிடுவதற்கு கனிமொழியும், அந்த நூல்களை லைப்ரடி ஆர்டரில் மனுஷ்ய புத்திரன் மூலம் உள்ளே தள்ளுவதற்கு கனிமொழியின் கட்சியும் தேவை என்றால் பாராட்டுவார். ஆனால் இன்று ஊரே கனிமொழி கைதை காறித் துப்பும் போது தானும் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு துப்புவார். புரட்சித் தலைவி போன்ற ஒரு திறமையான முதலமைச்சரை தமிழகம் கண்டதில்லை என்று சோ வகையறாக்களோடு பாராட்டுவார். சரக்கடிப்பதற்கு தவிர வீட்டை விட்டு இறங்காத இந்த நபர் கேராளவில் ஏதோ பெரிய சமூகப் போராளி போன்று திட்டமிட்டு ஏமாற்றி வருகிறார்.

நித்தியானந்தா கம்பீரமாக உலா வந்த போது தனது தளத்தில் படம் போட்டு பூசை செய்தவர், ரஞ்சிதா வீடியோ வந்ததும் நல்ல பிள்ளையாக படத்தை எடுத்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக கும்முவதில் என்ன நேர்மை இருக்கிறது? பொறுக்கி நித்தியானந்தாவை பொறுக்கி சாரு நிவேதிதா பாராட்டிய போது பணம், அழகான ஆசிரமப் பெண்கள், ஆசிரமத்திற்கு வரும் பெரிய குடும்பத்தின் நட்பு என்ற லவுகீக சமாச்சாரங்கள் காரணமாக இருக்கின்றன. பின்னர் ஊர் முன் அந்த சாமியார் அம்பலப்பட்ட போது அதை சரசம் சல்லாபம் சாமியார் என்று எழுதி காசு பார்க்கும் சந்தர்ப்பவாதம் யாருக்கு வரும்?

இதனால்தான் மீண்டும் சொல்கிறோம். சாரு பாராட்டி எழுதுபவைகளும், திட்டி எழுதுபவைகளும் அனைத்தும் பச்சையான சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட, குறிப்பான ஆதாயம் எதிர்பார்க்கும் சந்தர்ப்பவாதங்கள் என்கிறோம். அப்படித்தான் அந்தப் பெண்ணின் கவிதைக்கு சாரு பாராட்டு தெரிவித்த விசயம். தென் அமெரிக்க கவிதைகளில் திளைத்திருப்பதாக கூறும் சாருவின் கண்ணுக்கு இங்கே அந்தப் பெண்ணின் கவிதை தெரியவில்லை, அவளது இளம் வயதுதான் தெரிகிறது. எதுவும் தெரியாத அந்த இளம் வயதை வளைக்கலாம் என்ற பொறுக்கித்தனம்தான் நெஞ்சுக்குள் ரீங்காரமிடுகிறது.

தனது பிரபலத்தை முன்வைத்து சாரு விரித்த ஆபாச வலை!

( குறிப்பு: படங்களை பெரியதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும். சாருவுக்கும் அப்பெண்ணுக்கும்  நடந்த உரையாடலில் சில பகுதிகளை மட்டும் வெளியிடுகிறோம். பெண்ணின் அடையாளத்தை காக்கும் பொருட்டு தோழர் தமிழச்சியின் படம் பேஸ்புக்  புரொபைலில் தோன்றும் படி மாற்றப்பட்டுள்ளது, பெயரும் தமிழ் பொண்ணு என்று மாற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பேஸ்புக்கிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கீரின்ஷாட்டுகளே. இவை போலியானவை என்று புரளி பரப்புவர்கள் தாராளமாக எமது மீது வழக்கு தொடுக்கலாம், உரிய முறையில் அதை எதிர்கொள்வோம் )

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்

ஆரம்பத்தில் மரியாதையாக பேசும் சாரு முதல் தூண்டிலாக தனது எழுத்தை அந்தப் பெண் படித்திருக்கிறாளா என்று கேட்கிறார். அவள் படிக்க ஆசை என்று சொன்னதும் புத்தகம் அனுப்பி வைக்கவா என்று கேட்கிறார். வழக்கமாக சாருவின் தளத்தில் இரண்டு விசயங்கள் இருக்கும். ஒன்று கிசுகிசு அக்கப் போர்கள், இரண்டு எழுத்துக்காக தன்னை ‘அர்ப்பணித்திருக்கும்’ சாருவின் சுய சொறிதல்கள். அதிலும் தன் எழுத்தை படிக்காமலேயே யாரும் பேசக்கூடாது என்று சாரு பல முறை சத்திய ஆவேசம் துடிக்க ஆடியிருக்கிறார். ஒரு சரோஜா தேவி எழுத்தாளனுக்கு இருக்கும் இத்தகைய சத்திய ஆவேசத்தை உலகில் எங்கும் காணமுடியாது. இங்கு கவனிக்க வேண்டியது மற்றவர்கள் படிக்கவில்லை என்று விசுவாமித்திர கோபம் காண்பித்த சாரு அந்தப் பெண் எதுவும் படிக்கவில்லை என்றதும் அதிர்ச்சி கொள்ளவில்லை. ஆனால் அதில் வேறு ஒரு நோக்கம் இருந்திருக்கிறது.

சாருவின் புனைவுகளுக்குள் இருக்கும் பொறுக்கித்தனம் அவரது நடத்தையிலும் இருக்கிறது, இரண்டும் வேறல்ல!

அந்த பெண்ணை எப்படியும் வளைக்க வேண்டும் என்ற கங்கணத்தோடு வலையை விரித்த சாரு, எதற்காக தனது நாவலை அந்த பெண் படிக்க வேண்டும் என்று விரும்ப வேண்டும்? இங்குதான் படைப்பாளி வேறு படைப்பு வேறு அல்ல என்பது நிரூபணமாகிறது. இது தெரியாத இலக்கிய குருஜிக்கள் சாருவின் நாவல்களை ரசிப்பது வேறு, அவரது பொறுக்கித்தனத்தை கண்டிப்பது வேறு என்று தத்தளிக்கிறார்கள்.

சீரோ டிகிரி, ராசா லீலா, தேகம், எக்சிஸ்டென்சியிலிசமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் அத்தனை நாவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் பாலியல் வக்கிரங்கள், அதிலும் பிரபலங்களின் கிசுகிசு கதைகளாகவே நிறைந்திருக்கும். சாருவின் நெருங்கிய நண்பர் அந்துமணி இரமேஷின் வாரமலரில் துணுக்கு மூட்டையாக வரும் கிசுகிசுத் துணுக்குகள் இங்கு குறுங் காவியமாக நீண்டிருப்பது சரோஜா தேவி இரசிகர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதம்தான். இணையத்தில் இருக்கும் எந்த படிப்பும், அக்கறையும் இல்லாத நடுத்தர வர்க்க, மேட்டுக்குடி லும்பன் பிரிவினருக்கு சாருவின் கிசுகிசு கிளுகிளுப்பு கதைகள் ஒருபெரிய வடிகாலாக இருக்கிறது. இவர்கள்தான் சாருவின் இரசிகர்கள்.

அந்த பெண்ணை நிச்சயம் வளைக்க வேண்டும் என்று விரும்பிய சாருவுக்கு அவரது நாவலே கைகொடுக்கிறது. ஆம். ஸீரோ டிகிரியை அந்தப் பெண் படிக்கும் போது, விடலைப்பருவத்தை தாண்டாத அந்த வயது நிச்சயம் கிளர்ச்சி அடையும் என்பது சாருவின் கணிப்பு. அதனாலேயே வலிந்து போய் தனது புத்தகம் அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்கிறார். தனது நாவல் ஒரு உண்மையான இலக்கிய ரசனையையோ, வாழ்க்கையின் விரிந்த களத்தை அடையாளம் காட்டும் பேரிலக்கியமோ இல்லை, அது ஒரு இளம் பெண்ணின் மனதை வெகுவாக கிளர்ச்சியூட்டும் சமாச்சாரம்தான் என்பதும் சாருவுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த எளிமையான விசயம் உலக இலக்கியத்தை கற்றுத் கரை தேர்ந்ததாக பிலிம் காட்டும் இலக்கிய குருஜிகளுக்கு தெரியவில்லை என்பது அனுதாபத்திற்குரியது.

மேலும் ஒரு படைப்பாளியின் அடிப்படையான தத்துவ நோக்கிற்கு முரணாக எந்தப் படைப்பும் தன்னிச்சையாக, சுயேச்சையாக தோன்றி விடுவதில்லை. ஒரு பாத்திரத்தையோ, கதையையோ புனையும் இலக்கியவாதி அந்த பாத்திரம் கோரும் யதார்த்தத்திற்கு உண்மையாகவே புனைவை பின்னுகிறான் என்றாலும் அது அவனது அடிப்படையான அறநெறிகளுக்கு பொருத்தமாகவே தோன்றும். மேலும் இந்த கலை இயங்கு விதி சாருவின் புனைவகளுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒன்று. சாருவின் புனைவுலகத்தில் கூடா உறவுகளையும், பாலியல் இச்சைக்காக கட்டற்று அலையும் மனிதர்களும் சாருவின் ஆழ்மன அஸ்திவாரத்தின் பலத்திலேயே எழுகிறார்கள்.

அதனால் இன்றைய சாருவின் பொறுக்கித்தனமும், அவரது நாவல்களும் வேறு வேறு அல்ல. ஆகவேதான் தனது வக்கிரத்திற்கு நிச்சயம் தனது நாவல் துணை புரியும் என்று தெரிந்தேதான் நாவலை அனுப்புவதாக கூறுகிறார். அது தெரியாமல் ஒரு பிரபலமான எழுத்தாளர் தன் மீது கொண்ட அன்பினால் தனது நாவலை அனுப்புவதாக பேசுகிறாரே என்று அந்தப் பெண் மகிழ்கிறாள். இந்த உலகில் பாராட்டு, அன்பு, பரிசு அத்தனைக்கும் பின்னே இத்தனை வக்கிரமான உணர்ச்சிகள் இருக்குமென்று அந்தப் பேதைப் பெண்ணுக்கு எப்படித் தெரியும்?

ஆபாச வக்கிரத்தால் அப்பாவிப் பெண்ணை மிரட்டிய கதை!

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்

சாருவே பாராட்டி விட்டாரே என்று அவரது லும்பன் கூட்டமும்  அந்தப் பெண்ணுக்கு பாராட்டைக் குவிக்கின்றது. இதன் பிறகு தான்தான் அந்தப் பெண்ணை பாராட்டி பிரபலமாக்கினேன் என்ற உரிமையோடு சாரு மெல்ல மெல்ல அநாகரிகமாக பேச ஆரம்பிக்கிறார்.

மேலும் தனது செல்பேசி எண், மின்னஞ்சல், பேஸ்புக் பாஸ்வோர்டு அனைத்தையும் அளிக்கிறார். அந்த அளவுக்கு அவள் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று காட்டுவதற்காக அத்தனை பிரயத்தனங்களையும் செய்கிறார். பைனான்ஸ் கம்பெனி நடத்தும் ஏமாற்றுக்காரன் ஆரம்பகால மாதங்களில் டபுள் வட்டி கொடுத்தெல்லாம் பில்டப் கொடுப்பது போல சாருவும் அதே வழிமுறைகளை கையாள்கிறார்.

பிரபலம் ஒருவரால் பாரட்டப்பட்டிருக்கிறோம் என்ற செய்நன்றிக்காக அந்தப் பெண் ஆரம்பத்தில் அதை எப்படி எதிர்கொள்வது என்று தவித்திருக்கிறாள். பின்பு அதை திசை திருப்பும் விதமாக சாருவின் மகன், மனைவி என்று பேச்சை மாற்றப் பார்க்கிறாள். நாம் நண்பர்கள் இல்லையா, இதுபோல பேசக்கூடாதே என்று கெஞ்சுகிறாள், அதுவும் பலிக்காத போது தனக்கு காதலன் இருக்கிறான் என்றொரு பொய்யைப் சொல்கிறாள்.

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்அப்போதும் கூட சாரு தனது பொறுக்கித்தனத்தை மறைக்கும் விதமாக “அந்த சாட்டுகளை எல்லாம் அழித்துவிடு” என்கிறார். இதற்கு மேலும் இவரை ஒன்றும் செய்ய முடியாது என்று அந்தப்பெண் அவரிடமிருந்து நீங்குகிறாள். உரையாடலை துண்டிக்கிறாள். இப்படி ஒரு இளம்பெண் தன்னிடம் படியவில்லையே என்று வெறியேறிய அந்த பொறுக்கி அந்தப் பெண்ணை வெளிப்படையாக திட்டி ஒரு பதிவு எழுதுகிறார். அதில் பேஸ்புக்கில் பெண் படத்தை போட்டுவிட்டு பிரபலமாகிறாள், செக்சுவல் ஸ்டார்வேஷன் உள்ள தமிழ்நாட்டில் அனைவரும் நாக்கைத் தொங்கப் போட்டு அலைகிறார்கள் என்று அந்த பெண்ணுக்குள்ள பிரபலத்தை கேலி செய்து, இங்கு அறிவார்ந்த உரையாடலுக்குத்தான் அனுமதி என்று அந்தப் பெண்ணை துண்டிக்கிறார். மேலும் இந்த மாதிரி பெண்களெல்லாம் விரைவில் கல்யாணம் ஆகி சென்று விடுவார்கள் என்று வேறு பிலாக்கணம் வைக்கிறார்.

பாலியல் வக்கிரத்துக்காக அலையும் ஒரு இலக்கியப் பொறுக்கி தன்னிடமுள்ள கயமைத்தனத்தை மறைத்து விட்டு முழுத் தமிழகத்தையும் பாலியல் வறட்சி உள்ள பிரதேசமாக ஏன் வைய வேண்டும்? அந்தப் பெண்ணுடன் கடலை போட்டு வக்கிரத்தை கொட்டிய போது தெரியாத அந்தப் பெண்ணின் மொக்கை எழுத்துக்கள் இப்போது மட்டும் தெரியும் மர்மம் என்ன? வேறு ஒன்றுமில்லை. தனது அந்தப்புர ராஜ்ஜியத்தில் ஒரு சேவைப்  பெண்ணாக வரவேண்டியவள் மறுக்கிறாள் என்றதுமே அவளைப் பற்றி திட்டி அவளது பெயரை டாமேஜ் செய்யுமாறு எழுதுவது இன்றென்ன புதிதாகவா நடக்கிறது? சமூகத்தில் இப்படி பெண்கள் இப்படி பணிந்து போகவில்லை என்றால் பஜாரி என்று  தூற்றப்படுவார்கள். இணையமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

அந்தப் பெண்ணின் கையறு நிலை!

இவையெல்லாம் வெறும் ஏழு நாட்களுக்குள் நடந்த சம்பவம். ஏப்ரல் 22 அப்பெண் சாருவுக்கு தன்னை வாசகியாக அறிமுகம் செய்துகொண்டு சாட் மெசேஜ் அனுப்புகிறாள், மே 30 அன்று அதற்கு சாரு பதில் எழுதுகிறார். பின்னர் இரண்டு நாட்கள் பொதுவாக பேசிவிட்டு இதில் ஜூன் 6,7,8 நாட்களில்தான் படிப்படியாக பாலியல் வக்கிரங்களை சாரு அரங்கேற்றுகிறார்.  ஜூன் 8 சாருவின் வக்கிரம் உச்சத்தை அடையவும் சாட் நிறுத்தப்படுகிறது.  பின்னர் தனக்கு நெருக்கமாக உள்ளூர் தோழிகளிடம் அந்தப் பெண் இந்த பொறுக்கித்தனத்தை பகிர்ந்து கொள்கிறாள். அவர்களோ அந்தப் பொறுக்கியை மறந்து விட்டு வேறு வேலையைப் பார்க்குமாறு சமாதானப்படுத்துகிறார்கள். சமாதானமாகாத அப்பெண் பேஸ்புக் மூலமாக தமிழச்சியை  தொடர்பு கொண்டு நடந்ததை விவரிக்கிறாள். தமிழச்சியும் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பேசி உறுதியாக நின்று இதை எதிர்க்குமாறு அறிவுறுத்துகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழச்சி இந்த பொறுக்கியை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார். இவை அனைத்தும் எங்களது கவனத்திற்கும் வந்தது. நாங்களும் அனைத்தையும் பருண்மையாக பரிசீலித்து விட்டே இந்தப் பொறுக்கியின் கயமைத்தனத்தை வினவில் அம்பலப்படுத்துகிறோம்.

இந்த அளவிற்காவது அந்தப் பெண் இந்தப் பொறுக்கியை பொதுவெளியில் அம்பலப்படுத்துவதை பாராட்ட வேண்டிய நேரத்தில் வேலை வெட்டி இல்லாத ஜென்மங்கள் அந்தப் பெண்ணை  குற்றவாளியாக தூற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது சாரு அந்த வக்கிரத்தை காட்டிய போதே இந்தப் பெண் கடுமையாக எதிர்க்கவில்லையாம். அதனால் அவளுக்கும் இதில் விருப்பம் இருந்திருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டும் இந்த அல்பங்கள் இதன் மூலம் சாருவை குற்றவாளி இல்லை என்று விடுவிக்கின்றது.

பொது வெளியில் பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதன் அரிச்சுவடி கூட இந்த அறிவற்ற ஆனால் திமிர் கொண்ட மொக்கைகளுக்கு தெரியவில்லை. மேட்டுக்குடிப் பெண்ணோ, இல்லை உழைக்கும் வர்க்கத்து பெண்ணோ தனது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான முறை பாலின வன்முறைகளின் யதார்த்தங்களை சந்திக்கிறார்கள். மார்பை மறைத்துக் கொள்வதற்காக துப்பாட்டாவையும், சேலையையும் இழுத்து விடுவதையே அவர்களது கைகள் அனிச்சை செயலாக அன்றாடம் செய்கின்றன.

பேருந்திலோ, கூட்டத்திலோ ஒரு கயவன் மார்பையோ, இடுப்பையோ கசக்கிவிட்டு சடுதியில் மறைந்து விடுவான். நடந்த வக்கிரத்தை எண்ணி அதிர்ச்சியுறும் அந்தப் பெண்கள் அதை வெளியே தெரிவிக்க முடியாமல் தங்களுக்குள்ளேயே குமைந்து கொண்டு குமுறுகிறார்கள். இதற்கு என்ன எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்று வழிதெரியமால் தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு மறந்து போக முயற்சிக்கிறார்கள். இதை வீட்டிலோ, நட்பு வட்டத்திலோ தெரிவித்தால் “நாம்தான் இத்தகைய கயவர்களை புறக்கணிக்க வேண்டும், துஷ்டனைக் கண்டால் தூரவிலகு ” போன்ற உபதேசங்கள்தான் நிச்சயம் வரும்.

சாருவிடம் சிக்கிக் கொண்ட அந்த பெண் ஏன் ஒரு சோக முத்திரை மட்டும் போட்டாள், எதிர்த்துக் கேட்கவில்லை என்று ஆண்குறித்திமிருடன் கேட்கும் அந்த ஜன்மங்கள் அந்த வாதத்தை நீட்டித்தால் என்ன வரும்? ” உன்னால் எதிர்ப்புக் காட்ட முடியவில்லையா, அந்த இடங்களுக்ககுள் போகாதே, இணையத்திற்குள் வராதே, வந்தாலும் யாருடனும் பேசாதே, செல்பேசி எண்ணை யாருக்கும் கொடுக்காதே, யாருடனும் சாட் பண்ணாதே,” இவற்றைத்தான் அவர்கள் சொல்ல முடியும்.

இதன் நீட்சிதான் எந்தப் பெண்ணுக்கும் இணையம், செல்பேசி எதுவும் தேவையில்லை, வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்ற அடக்குமுறைச் சிந்தனை. மிகவும் கட்டுப்பெட்டியான குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் இதை வைத்து தனது அடையாளத்துடன், ஆதாரங்களுடன் போலீசிடம் புகார் கொடுத்திருந்தால் இந்நேரம் சாரு சிறையில் இருப்பது உறுதி. செக்சுவல் ஹராஸ்மெண்ட் சட்டப்படி சாருவின் இந்த பொறுக்கித்தனத்தை நிச்சயம் தண்டிக்க முடியும்.

ஆனால் எந்தப் பெண் அப்படி முன்வருவாள்? இது அவளது தனிப்பட்ட கோழைத்தனமில்லை. சமூகம் அப்படித்தான் எல்லாப் பெண்களையும் நடத்துகிறது. பொதுவெளியில் அப்படி ஒரு பெண் அடையாளங்களுடன் புகார் கொடுத்தால் அவள் ஏதோ ‘கற்பி’ழந்து விட்டதாகவே பல ஆண்கள் கருதுகிறார்கள். இதற்கு அஞ்சியே எந்தப் பெண்ணும் தனக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து வெளியே பேசுவதில்லை. அப்படி அவள் வெளியே பேசினால் ஆதரிக்க வேண்டிய சமூகம் தூற்றும் போது எந்தப் பெண்தான் என்ன செய்ய முடியும்? இதுதான் சாரு போன்ற பொறுக்கிகளுக்குப் பலம். சாருவை ஆதரிக்கின்ற அல்பங்களுக்கும் இதுவேதான் பலம். அதனால்தான் அந்த பெண்ணை குற்றவாளியாக்கி சாருவை தப்ப வைக்க நினைக்கிறார்கள்.

பொறுக்கித்தனத்திற்கு பதில் அடிமைத்தனமா?

மிகவும் ஆபாசமாக பேசி அந்தப் பெண்ணை இணையத் தொடர்பில் வைத்துக் கொண்டே மாஸ்டர்பேஷன் – சுய இன்பம் – செய்திருக்கும் அந்த பொறுக்கியின் ஆணித்தரமான நம்பிக்கை என்னவாக இருந்திருக்கும்? எப்படியும் இந்த இளம் பெண் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண், இதை யாரிடமும் தெரிவிக்க மாட்டாள், அதனால் நமது இமேஜை காப்பாற்றிக் கொண்டே இத்தகைய கீழ்த்தரமான காரியங்களில் ஜாலியாக ஈடுபடலாம் என்பதுதான் சாரு போன்ற பொறுக்கிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அந்த நம்பிக்கைக்கு தமிழச்சி மூலம் வேட்டு வைத்திருக்கும் அந்தப் பெண்ணின் தைரியத்தை பாராட்ட மனமில்லாமல் அவளையே குற்றவாளியாக்குவது என்ன நியாயம்? இந்த அநியாயத்தை செய்யும் பதிவர்கள் யாரும் தமது மனைவிமார்களையோ, சகோதரிகளையோ இணையத்தில் அனுமதிப்பவர்கள் இல்லை. முக்கியமாக எந்த பதிவர் சந்திப்புக்கும் அவர்களது வீட்டு பெண்களை அழைத்து வருவதில்லை. குறைந்த பட்சம் அவர்கள் தமது மனைவிமார்களை பொறுக்கி சாருவுக்கு அறிமுகம் கூட செய்து வைக்கமாட்டார்கள். இல்லையென்பவர்கள் தமது மனைவிமார்களின் செல்பேசி எண்களை சாருவுக்கு கொடுத்து பேசச்சொல்லி உற்சாகப்படுத்தலாமே? செய்வார்களா?

இவர்களின் மனதில் ஓடும் கருத்து பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டுமென்பதுதான். போராடுவதற்கு வழியில்லாமல் அஞ்சி வாடும் பெண்களை தைரியமூட்டி போராடவைப்பதற்கு பதில் அவள் இன்னும் அஞ்சி அடிமையாக வாழ்வதைத்தான் இந்த யோக்கிய சிகாமணிகள் விரும்புகிறார்கள். ஒரு வேளை அந்தப்பெண் இந்த பிரச்சினையை போலீசுக்கு கொண்டு சென்று அதன்மூலம் புதிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள் என்றால் அப்போது இதெல்லாம் தேவையா என்று வகுப்பும் எடுப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண் பொதுவெளிக்கு வந்து கஷ்டப்படக்கூடாது என்பதும் இவர்களது மறு பக்கக் கருத்து. ஆக, சாரமாக சொல்வது என்னவென்றால் பெண்கள் அடிமைகளாக இருக்க மட்டுமே விதிக்கப்பட்டவர்கள் என்பது இவர்களது ஏகோபித்த கருத்து. பாலியல் வன்முறையை எதிர்த்து ஒரு பெண் வாயைத் திறந்தாலும் தப்பு, வாயை மூடி உள்ளுக்குள்ளேயே குமுறினாலும் தப்பு.

கனிமொழியையே ‘மடக்கிய’ சாரு முன் அந்தப்பெண் எம்மாத்திரம்?

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்கனிமொழியின் அரசியல் தவறுகளை விமரிசிப்பது வேறு, அவர் பெண் என்பதினால் அவரை ராசாவுடன் தொடர்பு படுத்தி பேசுவது வேறு. இரண்டாவது பச்சையான வக்கிரம். ஆனால் இந்த வக்கிரத்தை உருவாக்கி ஒரு அரசியல் கலாச்சாரமாக மாற்றியது தி.மு.கதான் என்பதால் இப்போது அவர்களே அவர்கள் உருவாக்கிய சீரழிவுக்கு பலியாகியிருக்கிறார்கள். ஆனால் பொறுக்கி சாரு தான் கனிமொழியுடன் ஆழமான காதல் கொண்டிருந்தேன் என்று சொன்னதை என்னவென்று சொல்ல? இவ்வளவிற்கும் ஒரு கூட்டத்தில் கனிமொழி, சாரு தனது இலக்கிய தந்தை போல என்று வேறு பேசியிருக்கிறார். கனிமொழியின் அரசியல் பிரபலத்தை பயன்படுத்திக் கொண்ட சாரு தனது பொறுக்கித்தனத்தை நிலைநாட்ட கனிமொழி என்ற பெண்ணையும் பயன்படுத்தியிருக்கிறார்.

வலையுலகில் தி.மு.கவிற்காக வெக்க மானம் ரோசம் இல்லாமல் வேலை பார்க்கும் சிலதுகள் இதற்காகக் கூட சாருவை கண்டிக்கவில்லை என்றால் இவர்களுக்கு கட்சி விசுவாசத்தை விட பொறுக்கி விசுவாசம் அதிகம் என்று தோன்றுகிறது. இப்படி கனிமொழியையே வளைத்துப் போட்டவர் எனும் போது அந்த இளம் பெண் நிறைய பயந்திருக்கிறாள். இத்தகைய வலுவான மேலிட தொடர்பு கொண்ட பிரபலமான எழுத்தாளரை துண்டித்து விட்டு எப்படி வெளியேறுவது என்று அவள் யோசித்திருக்கிறாள்.

திருநங்கைகளை உணர்ச்சியற்ற அலிகள் என்று பேசிய சாருவின் பின்நவீனத்துவ தரம்!

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு ஊனமுற்றவர் என்பதால் கால்களைப் பற்றி நிறைய கவிதை எழுதியிருக்கிறார் என்பது போல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். ஜெயமோகன் நூல் ஒன்றை வெளியிட்ட உயிர்மை கூட்டம் ஒன்றின் மேடையில் இருந்த சாரு அந்த புத்தகத்தை கிழித்து விட்டு ஜெயமோகனை திட்டி பேசியதும் பின்னர் தனது தளத்தில் எழுதியதையும் நீங்கள் அறிந்திருக்க கூடும். மாற்றுத்திறனாளி என்ற பிச்சைக்கார மனிதாபிமானத்திற்காக மனுஷ்ய புத்திரனின் கவிதையை ஆராதிக்கத் தேவையில்லை என்று அறம் பொங்க சாமியாடிய சாருவைக் கொண்டு பலருக்கும் தங்களது மனிதாபிமானம் குறித்து ஒரு குற்ற உணர்வு வந்திருக்கும்.

இது போக விளிம்பு நிலை மக்களின் பரிவுக்காக சாரு எழுதியவை ஏராளம். தனது சொந்த பின்னணி கூட அத்தகைய விளிம்பு நிலை வாழ்க்கையால் ஆனது என்று கூட அவர் நிறைய புளுகியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் சில வருடங்கள் தான் ஆண் விபச்சாரியாகக் இருந்திருப்பதாகவும் சொல்லியருக்கிறார். இத்தகைய புரூடாக்களில் உண்மை கொஞ்சமாகவும், பொய்கள் அதிகமாகவும் இருக்குமென்பது சாருவை கொஞ்சம் அறிவோடு படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளும் விசயங்கள்தான். ஆனால் இங்கே சுட்டிக்காட்டுவது சாரு நிறைய பொய்கள் சொல்லுகிறார் என்று அந்த விவரப்பிழைகளை காட்டுவது அல்ல. மாறாக சாருவுக்கு பின்நவீனத்துவம் ‘பரிதாப்படும்’ விளிம்பு நிலை மக்களின் அவலம் குறித்து  மயிரளவுக்கு கூட தெரியாது என்பதோடு, கிஞ்சித்தும் அனுதாபமும் இல்லை என்பதுதான்.

அதனால்தான் “ஏண்டி நீ அலியாடி , உனக்கும் பீலிங்ஸ் இருக்கும் இல்ல ” என்று தனது வக்கிர சாட்டுக்களில் அவர் பேசியிருக்கிறார். திருநங்கைகள் குறித்து சாதாரண வாசகர்களே மரியாதையுடன் உணரும் காலத்தில் ஒரு எழுத்தாளன், அதுவும் தன்னை தமிழின் ஒரே ஒரு ஒரிஜனல் பின்நவீனத்துவத் தமிழன் என்று அடிக்கடி சுயப்பெருமை பேசும் ஒருவர் இப்படி பேசியிருக்கிறார் என்றால் என்ன பொருள்? சாரு பேசும் விழுமியங்கள், கலகங்கள் எதுவும் உண்மையல்ல. அவர்  பெண் பொறுக்கித்தனத்திற்காக எழுதும் ஒரு சரோஜா தேவி எழுத்தாளர். அதனால்தான் திருநங்கைகளைப் பற்றி இப்படி ஒரு மட்டமான வருணணையை போட முடிகிறது. நிறைவேறாத காமும்  தீர்த்துக் கொள்ள முடியாத கோபமும் உச்சத்தில் இருக்கும் போதுதான் ஒரு மனிதனின் உண்மையான சுபாவத்தை நாம் அறிய முடிகிறது. அந்த வகையில் பொறுக்கி சாருவையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

சாருவின் வக்கிரம் அவரது தனிப்பட்ட படுக்கையறை சமாச்சாரமா?

சாரு இத்தனை ஆதாரங்களுடன் பிடிபட்டாலும் ஒரு சிலர் கூச்சநாச்சமே இல்லாமல் அவருக்கு இமேஜ் பில்டப் வேலை செய்கிறார்கள். இவர்கள் பொறுக்கி சாருவே நினைத்திராத கருத்துக்களையெல்லாம் சோறு தண்ணி இல்லாமல் கண்டு பிடித்து எழுதுகிறார்கள். அதில் ஒன்று இது சாருவின் படுக்கையறை சம்பந்தப்பட்ட விசயமாம். அதில் யாரும் எட்டிப் பார்க்க கூடாதாம். நல்லது, இந்த சலுகையை நாம் சாருவுக்கு மட்டும்தான் வழங்க வேண்டுமா? கருவறையை காம பூஜை அறையாக்கிய தேவநாதன், காமகோடி மடத்தில் பக்தைகளை நுகர்ந்த காஞ்சி ஜெயேந்திரன், ரஞ்சிதாவுடன் ஆட்டம் போட்ட நித்தியானந்தன் எல்லா பொறுக்கிகளுக்கும் அது அவர்களது படுக்கையறை சம்பந்தப்பட்டதுதானே, பின் ஏன் அவர்களை திட்டுகிறீர்கள்?

கணவனே ஆனாலும் மனைவி விரும்பாமல் அவளை தொட முடியாது. அவளை எப்போதும் அடிக்கவும் முடியாது. இவையெல்லாம் பேமிலி ஹராஸ்மெண்ட், செக்சுவல் ஹராஸ்மண்ட் சட்டப்படியே குற்றங்கள்தான். என் மனைவியை நான் வன்புணர்வேன், அடிப்பேன் என்று சொல்வதற்கு கூட எந்தக் கணவனுக்கும் உரிமை இல்லை. மேலும் சாரு இங்கே தனது மனைவியிடனோ, இல்லை காதலிகளுடனோ பேசவில்லை. அதிலும் இந்த உரையாடல்கள் எதுவும் காதலின் பாற்பட்டது இல்லை. இவை அப்பட்டமான பாலியல் வெறியைக் கொண்ட பொறுக்கித்தனங்கள்.  அதிலும் தனக்கு அறிமுகமாகும் புதிய வாசகியிடம்தான் சாரு இந்த பொறுக்கித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த வக்கிரத்தை தனிப்பட்ட உரிமை என்று நாம் சலுகை வழங்கினால் அதை பெண் போலீசை வேட்டையாடும் ஆண் போலீசு அதிகாரிகளுக்கும், வெள்ளை மாளிகையில் வலை விரிக்கும் அமெரிக்க அதிபர்களுக்கும், சித்தாள்களை வைத்து வேலை செய்யும் ஒரு மேஸ்திரிக்கும் கொடுக்க முடியும். ஊர் மேயும் ஆண்களது பொறுக்கித்தனங்கள் அவன்களது தனிப்பட்ட படுக்கையறை விசயம் என்றால் இந்த உலகில் நாம் எந்த வன்புணர்ச்சிக்கும் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி பழங்குடி பெண்கள், அந்தியூர் விஜயா, விழுப்புரம் ரீட்டாமேரி அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் மீதான காரக்டர் அசாசினேஷன்!

அடுத்து பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்களை காரக்டர் அசாசினேஷன் செய்வது உலகமெங்கும் உள்ள வழிமுறையாக இருக்கிறது. ஐ.எம்.எஃப் எனப்படும் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த ஸ்ட்ராஸ் கான், அமெரிக்க ஓட்டல் ஒன்றில் ஒரு ஹவுஸ்கீப்பிங் பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்ய முயன்றார். இப்போது அந்த வழக்கை எதிர்கொள்ள ஸ்ட்ராஸ் கான் சட்ட ஏற்பாடுகளை செய்திருப்தோடு  ஒரு கருத்து பரப்பும் நிறுவனத்தை (PR) பணம் கொடுத்து அமர்த்தியிருக்கிறார். அந்த நிறுவனத்தின் வேலை என்ன? அந்த ஹவுஸ்கீப்பிங் பெண்ணை காரக்டர் அசாசினேஷன் செய்வதுதான். அந்தப் பெண்ணுக்கு எப்படி ஐந்து மொழிகள் தெரியும், உலக நிறுவன தலைமை நிர்வாகி அறைக்கு அவள் ஏன் வந்தாள், அவளது பழைய உறவுகள் என்ன என்று மொத்தமாக அவளை ஒரு விபச்சாரி/கைகாரி போல சித்தரிப்பதற்கு முயன்று வருகிறார்கள். இவை அனைத்தும் ஊடகங்களிலும் வருகின்றன.

அங்கே காசு வாங்கிக் கொண்டு செய்யும் வேலையை இங்கே காசு வாங்காமல் சில அல்பங்கள் செய்கின்றனர். அவர்களில் ஒரு சில பெண்களும் உண்டு. இதை நர்சிம் விவகாரத்திலேயே பார்த்திருக்கிறோம். அன்று நர்சிமிடம் தண்ணி அடித்தவர்கள், நர்சிம் ஒரு அகமதாபாத் ஐ.ஐ.எம், ஃபோர்டு கம்பெனி வி.பி, வெள்ளையாக இருக்கும் பார்ப்பனர் என்று மேட்டுக்குடி விசுவாசத்தால் நட்பு கொண்டவர்கள் சிலர் முல்லை மீதான கிசுகிசுக்கள் அவதறூகளை கிளப்பி விட்டார்கள் அல்லது நர்சிமை பொதுவெளியில் கண்டிக்காமல் அமைதி காத்தார்கள். அதே போல சாந்தி மீதான புனைவு பிரச்சினையிலும்  சாந்தியை தொடர்ந்து தரக்குறைவாக சித்தரித்து வருகிறார்கள். இத்தகைய சுலபமான ஆயுதம் இப்போதும் இவர்களிடத்தில் இருக்கிறது. மெல்ல மெல்ல அப்படி கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண் ஒரு ஒழுக்கங்கெட்டவள் என்று இவர்கள் சுலபமாக பழி சுமத்துவதோடு சம்பந்தப்பட்ட ஆண் பொறுக்கிகளை காப்பாற்றவும் நினைக்கிறார்கள். அதன் மூலம் ஊர் மேயும் ஆண்கள் எல்லாம் தப்பு செய்தவர்கள் அல்ல, அதற்கு பலியாகும் பெண்கள்தான் தவறானவர்கள் என்பது இவர்களது வாதம். இதை சமூகத்தில் பரவலாக பார்க்கிறோம். கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு இளம் விதவை மறுமணம் செய்வதை கிராம சமூகம் எதிர்க்கும். அப்படி செய்தால் அவள் உடம்பு சூட்டிற்காக விபச்சாரியாக மாறிவிட்டாள் என்றும் பேசுவார்கள். மாறாக அந்தப் பெண் அந்த கிராமத்தின் ஒரு ஆதிக்க சாதி ஆணுக்கு வைப்பாட்டியாக இருந்தால் அதை அனுமதிப்பார்கள். இத்தகைய பிற்போக்குத்தனத்தின் தொடர்ச்சிதான் பாதிக்கப்பட்ட பெண்ணை விபச்சாரி என்று சித்தரிப்பது. இது இணையத்திலும் தொடர்கிறது.

இந்த வக்கிரம் சாருவின் ஆட்டோ பிக்ஷனாம்! அட்றா செருப்பால!

பொறுக்கி சாருவின் கூஜாக்கள் அடுத்து வைக்கும் அல்லது வைக்கப் போகும் வாதம் என்னவென்றால் சாரு தனது புனைவுகளில் சொந்த அனுபவங்களை ஒளிவு மறைவு இன்றி முன்வைக்கிறார், இந்த தைரியம் எந்த எழுத்தாளனுக்கும் இல்லை என்றும் இதன் மூலம் அந்த அப்பாவிப் பெண்ணை அப்படி ஒரு சோதனைக்கு உட்படுத்திருக்கிறார் என்றும் இவர்கள் விளக்கமளிப்பார்கள். கேட்டால் இதுதான் ஆட்டோ பிக்ஷன் என்கிறார்கள். சரி, இந்த ஆட்டோ பிக்ஷனுக்கு யார் அனுமதி கொடுப்பது?

நான் ஒரு நாவல் எழுதும் திட்டத்தில் இருக்கிறேன். அதற்கு ஒரு பரிசோதனை செய்து பார்க்க விரும்புகிறேன். அதன்படி சாரு நிவேதிதாவின் வலது கையை வெட்டிவிட்டு அவர் ஒரு மாற்றுத் திறனாளியாக எப்படி படைப்பாளி வாழ்க்கையை நடத்துகிறார் என்று அறிய விரும்புகிறேன், சம்மதிப்பார்களா? அல்லது சாருவே ஒரு இளம் பெண் ஒருத்தியை நேரடியாக வன்புணர்ச்சி செய்து அந்த அனுபவத்தை எழுத நினைக்கிறார் என்று வைப்போம். இதற்கு சாருவின் கூஜாக்கள் ஏற்பாடு செய்வார்களா? இல்லை தங்களையே சோதனைக்கு உட்படுத்த சம்மதிப்பார்களா?

ஒரு பொறுக்கி பட்டவர்த்தனமாக இப்படி ஒரு இளம்பெண்ணிடம் வக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறான். அதைக் கண்டிக்க துப்பில்லாத ஜன்மங்கள் என்னவெல்லாம் யோசித்து நியாயப்படுத்துகிறார்கள்? இத்தகைய கூட்டம் இருப்பதுதான் சாருவின் பலம். அவர் என்ன அயோக்கியத்தனத்திற்கும் தயாராக இருப்பதற்கு இந்த பொறுக்கி வாசகர் கூட்டம்தான் காரணம். சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ய முடியவில்லை என்று கொதித்த சில பொறுக்கிகள் அந்தப் பெண்ணின் கண்ணை குருடாக்கிவிட்டு செல்கிறார்கள். இணையத்திலும் இதுதான் கருத்தளவில் நடக்கிறது.

சாருவின் குற்றம் சபலமா இல்லை திட்டமிடப்பட்ட பொறுக்கித்தனமா?

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள்சாரு ஏதோ கொஞ்சம் சபலப்பட்டு தப்பு பண்ணிவிட்டார், எனவே இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுங்கள் என்று சில மனிதாபிமானிகள் கூறலாம். ஆனால் நடந்திருப்பது சபலமல்ல, திட்டமிட்ட பாலியல் வன்புணர்ச்சிக்கான முயற்சி. சபலப்படுவது என்பது எல்லா ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் நடக்கும் விசயம்தான். கண நேரத்தில் அந்த தவறுகள் நடந்து பின்னர் வாழ்க்கை முழுவதற்கும் தொடருகின்ற குற்ற உணர்ச்சியாக அவர்களிடத்தில் நீடிக்கிறது. இதைக்கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் சாரு ஏதோ சபலப்பட்டு இதை ஒரு விபத்து போன்று செய்ய வில்லை. திட்டம்போட்டு பொறி வைத்து பிடித்து தனது வக்கிரத்தை காட்ட முயன்றிருக்கிறார். அதனால்தான் இன்னும் திமிராக இது ஒரு அவதூறு என்று சுலபமாக மறுத்துவிட்டு போகிறார். ஆகவே சபலம் வேறு, வக்கிரம் வேறு. சபலத்திற்க்கு ஆட்படுபவர்களை நாம் மன்னிக்கலாம். பொறுக்கிகளுக்கு தண்டனைதான் கொடுக்க வேண்டும். மன்னிப்பு அல்ல.

கேரளாவில் புகழ்பெற்ற கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. அவர் வீட்டில் இருக்கும் போது ஊறுகாய் விற்கும் ஒரு இளம்பெண் வருகிறாள். அவளிடம் சபலப்படும் சுள்ளிக்காடு தவறாக நடக்க முயற்சிக்கிறார். அந்தப் பெண்ணோ அவரை அடித்து விட்டு திட்டுகிறாள். “தான் உடலை விற்றுத்தான் வாழ வேண்டுமென்றால் ஊறுகாய் விற்க வந்திருக்க வேண்டியதில்லை” என்று சீறுகிறாள். பிறகு அவர் புகழ்பெற்ற எழுத்தாளரான சுள்ளிக்காடு என்று அடையாளம் காண்கிறாள். அவளது கல்லூரி காலங்களில் இதே எழுத்தாளரின் மனைவியோடு பேசுவதற்கு சென்றிருக்கிறார்.

தவறு செய்த சுள்ளிக்காடு பின்னர் கூனிக்குறுகி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார். அந்தப் பெண்ணும் ஆத்திரத்தில் அடித்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறாள். யாரிடமும் இதை சொல்ல மாட்டேன் என்றும் கூறுகிறாள். பின்னர் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு கூட சுள்ளிக்காடு செல்கிறார். முக்கியமாக “சிதம்பர நினைவுகள்” எனும் அவரது சுயசரிதை நூலில் இந்த சம்பவத்தை விவரிக்கிறார். இத்தகைய தைரியம் எத்தனை பேருக்கு வரும்? சபலப்படுபவர் அடையும் குற்ற உணர்வும், அதை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறையும் சுள்ளிக்காடு விசயத்தில் காண்கிறோம். மேலும் பொதுவெளியில் அனைவர் முன்னும் அதை உரக்கச் சொல்லியிருக்கும் அவரது நேர்மையை புரிந்து கொள்ள முடியும்.

சபலப்படுவன் யாரும் வன்புணர்ச்சி செய்வதில்லை. ஒருவேளை அந்த சபலம் வன்புணர்ச்சி என்று மாறும் போது அது திட்டமிட்ட குற்றமாக மாறுகிறது. அதற்கு மேலும் அது ஒரு பாலியல் விபத்தாக இருக்காது. ஆனால் பொறுக்கி சாரு சபலப்படும் டைப் அல்ல. மற்ற நேரங்களில் வேறு சிந்தினையில் இருப்பவர்கள் எப்போதாவது பாலியல் வேட்கை குறித்து நினைக்க முடியும். ஆனால் 24மணிநேரமும் அதே சிந்தனையில் இருக்கும் சாரு இங்கே சபலப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. இது திட்டமிட்ட பாலியல் வக்கிரம் என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம்.

இப்போது என்று அல்ல, இதற்கு முன்னரே கூட சாரு ஒரு சந்தர்ப்பவாத பொறுக்கிதான்!

“சாரு நிவேதிதா ஒரு மலிவான பத்தி எழுத்தாளர், புனைவுகள் எழுதும் படைப்பாளி அல்ல” என்பதுதான் சாரு குறித்த ஜெயமோகனது சாரமான விமரிசனம். அதனால்தானோ என்னமோ ஜெயமோகனது தளபதிகள் சிலர் கூட இப்போது சாருவுக்கு சொம்பு தூக்குகிறார்கள். இந்தியாவில் பெப்சி கோக் இடையே பெரும் வணிகச் சண்டை இருந்தாலும், தரக்குறைவு காரணமாக கோக் கம்பெனி திண்டாடிய போது பெப்சி அதை தீர்க்க ஆலோசனை சொல்லியிருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது.

நம்மைப் பொறுத்தவரை சாரு என்பவர் ஒரு இலக்கிய பொறுக்கி. ஜெசிகா லாலைக் கொன்ற மனுசர்மா, மாநகரங்களில் குடித்து விட்டு பி.எம்.டபிள்யு காரை ஓட்டி  சிலரைக் கொன்ற மேட்டுக்குடி குலக்கொழுந்துகளுக்கும் சாருவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. மேலும் தற்போது இந்த இளம்பெண்ணுடன் சாரு நிகழ்த்திய வக்கிரத்திற்காக மட்டும் அவரை நாம் பொறுக்கி என்று விளிக்கவில்லை. அவரது சாரமே பொறுக்கித்தனம்தான். அதை நித்தியானந்தா விவகாரத்திலேயே பார்த்துவிட்டோம்.

பணத்திற்காகவும், மேல்மட்ட தொடர்பிக்காகவும் நித்தியானந்தாவின் ஊடக மாமாவாக வேலை பார்த்த சாரு அதற்காக எந்த அளவுக்கு கீழே இறங்கி படு பிற்போக்குத்தனமாக  எழுதியிருக்கிறார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். பின்னர் வீடியோ வந்த உடன் நல்ல பிள்ளை போல கட்சி மாறியதையும் பார்த்து விட்டோம். இவையெல்லாம் வெறுமனே சந்தர்ப்பவாதம் என்று அழைத்தால் அந்த வார்த்தையே வெட்கம் கொள்ளும். இதற்கு சரியான பெயர் பொறுக்கித்தனம்தான். மேட்டுக்குடி லும்பன்கள் தமது அதிகாரம், அந்தஸ்து, பிரபலம் காரணமாக இந்த உலகமே நாம் தின்று முடிக்க படைக்கப்பட்டிருக்கிறது என்ற திமிரான மனோபாவம் கொண்டவர்கள். எளியோரை அவர்கள் அணுகும் விதமே இல்லை மிரட்டும் தோரணையே இவர்களது சுபாவத்தை எளிமையாக புரியவைத்து விடும். சாரு அப்படி இப்போது புரிய வைத்திருக்கிறார்.

சாருவின் சொந்த வாழ்க்கையில் உண்மையான காதல் இருக்க முடியுமா?

புத்தக கண்காட்சிக்கு தன் மனைவி அவந்திகாவை அழைத்து வந்தால், ஆண்கள் கண்களாலேயே துகில் உரித்து விடுகிறார்கள்… கூட்டத்தில் கண்ட இடத்தில் உரசி அவமதிக்கிறார்கள்… தமிழ்நாடு செக்ஸ் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது… என்று அறச்சீற்றத்துடன் ஆசனவாய் வெடிக்க குரல் எழுப்பிய சாரு, அதே பொறுக்கித்தனத்தை செய்திருக்கிறார். தன் மனைவிக்கு வக்கிரம் பிடித்த ஆண்களால் ஆபத்து வருகிறது என ஒட்டுமொத்த தமிழ்ச்சூழலையே குறை சொன்ன அதே சாருதான் தமிழக பொறுக்கிகளின் தலைவனாக, ரோல் மாடலாக, செக்ஸ் வறட்சியின் பிதாமகனாக இருக்கிறார்.

தனது மனைவியை பக்தி, கோவில், சாமியார் என்று அடக்க ஒடுக்கமாக நடத்தும் இந்த பொறுக்கியின் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? அறுபது வயதில் ஒரு இளம்பெண்ணை இப்படி படுத்தியிருக்கும் இந்த நபர் தனது சொந்த மனைவையை எப்படி அணுகியிருக்க முடியும்? கணவன் மனைவி உறவில் எந்த அளவுக்கு உண்மையான காதல் இருக்குமோ அந்த அளவுக்கு இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் அங்கே உண்மை இல்லாமல் ஆண் தரப்பில் பொறுக்கித்தனம் இருந்தால்? இங்கே நாம் சாருவின் தனிப்பட்ட வாழ்க்கை இழுத்திருப்பதாக சில அசட்டு அம்பிகள் ஆவேசப்படலாம். இல்லை. நன்கு கவனித்துப்பாருங்கள், ஆபாச சாட் அனுப்பி தனது தனிப்பட்ட வாழ்க்கையை கேலிக்குள்ளாக்கியிருப்பது நிச்சயம் சாருதான், நாமல்ல.

சாரு எப்போதும் எதிலும் வெளிப்படையாக பேசுவதாக சில இரசிக குஞ்சுகள் அவ்வப்போது விசில் அடிப்பார்கள். யோனிப்பருப்பை ‘வலிக்காமல்’ கடிக்க நினைக்கும் இந்த விகாரத்திற்கு பின்னர் அவரது மனைவி கருத்தை உண்மையாக சாரு எழுதுவாரா? தில்லிருப்பவர்கள் பதில் சொல்லட்டும். இல்லையேல் வாயை மூடிக் கொண்டு போகட்டும்.

சாருவின் குடும்ப வாழ்க்கை மட்டுமல்ல, அவரது நட்பு வட்டாரத்தையும் கொண்டு இதை விளங்கிக் கொள்ளலாம். சாருவின் ஆத்மார்த்த நண்பன் தினமலர் அந்துமணி இரமேஷ், ஆன்மீக குருவான நித்தியானந்தா, நிரந்தர புரவலரான நல்லி குப்புசாமி ஆகியோரும் பொறுக்கித்தனத்திற்கு பெயர் பெற்றவர்கள்தான். அவர்களெல்லாம் பணபலத்தை வைத்து அந்த பொறுக்கிதனத்தை அனுபவிக்கும் போது சாரு தனது இலக்கிய பலத்தை வைத்து அனுபவிக்க நினைக்கிறார். ஒரு வேளை சாரு மட்டும் தி.மு.க அல்லது அ.தி.மு.க மந்திரியாக இருக்கும் பட்சத்தில் தெருவுக்கு ஒரு பெண் பாதிக்கப்படுவது நிச்சயம். அந்த வகையில் சாரு அரசியலுக்கு செல்லவில்லை என்பதால் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இணையத்தில் சாரு போன்ற பொறுக்கிகளை கண்டித்தால்தான் இங்கே உண்மையான நட்பும், உறவும் சாத்தியம்!

ஆணும் பெண்ணும் பார்க்கக் கூடாது, நேரில் பேசக்கூடாது என்பதில் தொடங்கி ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் இந்த சமூக அமைப்பில் அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் பழகவும்,பேசவும், ஏன் காதலிக்கவும், திருமணம் செய்யவும் கூட இந்த இணைய ஊடகம் வாய்ப்பளிக்கிறது. சாருவைப் போன்ற பொறுக்கிகள் அதிகரித்தால் இந்த முற்போக்கான அம்சங்கள் மறைந்து பழைய கட்டுப்பெட்டித்தனங்கள் எழுந்து ஆக்கிரமிக்கும். இப்போது  கூட பல இணையப்புலிகள் தமது மனைவிமார்களுக்கு தெரியாமல், தெரிவிக்காமல்தான் இணையத்தில் புழங்குகின்றனர். மனைவிகள் இங்கே வரக்கூடாது என்று தடையும் செய்திருக்கின்றனர்.

சாருவின் பொறுக்கித்தனத்தை தவிர்க்க வேண்டுமானால் பெண்கள் இந்த ஊடகத்திற்கு வரக்கூடாது என்பதுதான் ஆணாதிக்க கூஜாக்கள் விரும்புவது. சாருவின் பொறுக்கித்தனமே கூட அந்த நிலையைத்தான் தோற்றுவிக்கும். எனவே சாருவின் குற்றத்தை பொதுவெளியில் கண்டித்து இத்தகைய பொறுக்கிகள் மறக்க முடியாதபடி பாடம் புகட்டும்போதுதான் இணையத்தில்  கண்ணியமான நட்புக்களை நாம் வளர்க்க முடியும். இல்லையேல் இங்கே ஒரு ஆணும் பெண்ணும் இயல்பாக பேச முடியாது என்ற சூழலே நிலவும்.

இப்போது இந்தப் பிரச்சினை தெரியவந்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவளைக் கண்டித்திருக்க வேண்டும். ஒருவேளை இணைய வாய்ப்பு கூட பறிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இத்தகைய பிரச்சினைகளை நேரில் எதிர் கொண்டு போராடமல் இருப்பது இது போன்று மேலும் பல குற்றங்கள் நடப்பதற்கு காரணமாகுமென்பதை அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம். அந்த வகையில் அந்தப் பெண்ணும், அந்தக் குடும்பமும் இதனால் வேதனை அடையத் தேவையில்லை. இதை எதிர்த்து போராடமல் இருந்திருந்தால்தான் வாழ்க்கை  முழுவதும் வேதனை கலந்த  குற்ற உணர்வு பின்தொடரும்.

பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் பொறுக்கி சாருவை கண்டிக்க வேண்டும். இணையவெளியை பெண்கள் சுதந்திரமாக செயல்படும் வெளியாக மாற்ற முன்வர வேண்டும்.

சாருவுக்கு என்ன தண்டனை என்பதை அவரே கூறுகிறார்!

சென்ற ஆண்டு காமராசர் அரங்கில் நடந்த சாரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கினை திட்டி சாரு நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறார். அதில் மிஷ்கினது பேச்சைக் கேட்ட குழந்தைகள் அதிர்ச்சி அடைந்ததாம். இப்படி தப்பான விசயங்கள் பேசிய மிஷ்கின் செக்ஸ் பற்றி ஏதுமறியாத அந்தக் குழந்தைகளை மென்டல் ரேப் செய்துவிட்டாராம். இதற்கு ஆயுள்தண்டனை கொடுத்தால் கூடதவறில்லை என்றும் சாரு எழுதியிருக்கிறார். எனில் புதிதாக அறிமுகமாக ஒரு இளம் வாசகிக்கு சாரு செய்திருக்கும் பொறுக்கித்தனத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? சாருவோ அவரது கூஜாக்களோ கூறுவார்களா?

காத்திருக்கிறோம். இல்லையேல் முடிவு செய்வோம்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!

50
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
ஆதிமூலம்

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.

இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.

“”வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்” என்று ஆரம்பித்தார். “”பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்? இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன். உள்ள “தண்ணி நிக்கிதா’ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காதே…” என்று உதவி கேட்கிறார்.

“”மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க?” ஏதோ… நானும் கேள்விகள் கேட்டேன்.

“”பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி (மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு. கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழியில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்கு ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.”

“”எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?”

நகர சுத்தி தொழிலாளர்கள்“”எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?ன்னு எங்காளுங்க கேழி (வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி. ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு. ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துக் கெடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சாப் போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக் கூடாதெலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடியத் தொறந்தாப் போதும், ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும். பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியதுதான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம். சாதாரணத் தண்ணியா அது. காதெல்லாம் சும்மா “கொய்ய்ய்ய்ய்ங்’ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்ன பண்றது? சோறு துன்னாவணுமே!

எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே… அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதனாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.”

“”இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்.”

_________________________________________
— நன்றி: திங்கள் சத்யா
_________________________________________

சிறுகதை:மட்டப்பலகை!

“செந்தில், இன்னைக்கு முள்ளம்பன்றி ஓவர் சூடு. விஷ் பண்ணா வழக்கமான ஒரு பிளாஸ்டிக் ஸ்மைல் கூடக்காணோம். வேகமா ரூமுக்கு போயிருக்கு.. பாத்து இருந்துக்க.”

“என்னைக்குதாண்டா அவன் நார்மலா இருந்துருக்கான்? நேத்து கூட ரிசப்சனிஸ்ட குதறி எடுத்துட்டான். எந்தப்பக்கம் புடிச்சாலும் குத்திக் கொடையறாண்டா! சரியான பேரு… முள்ளம்பன்றின்னு யார்ரா வச்சது?’

“முன்னால உன் சீட்ல இருந்துட்டு விட்டா போரும்னு ஓடுனார்ல அந்த சம்பத் வெச்ச பேரு… சரி போய் சிஸ்டத்த ஆன் பண்ணு!’

“யோவ் எங்கய்யா ரமேஷ்?’ எக்சிகியூடிவ் சந்தானத்தின் குரல் அதட்டலாக விழ தூக்கிவாரிப் போட்ட மாதிரி கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்த ரகுபதி  “தோ, ஃபாக்ஸ் மெஷின்கிட்ட இருக்காரு!” என்று பதட்டத்துடன் எழுந்தான். இன்றைக்கு ரமேஷ் தொலைந்தான் என்று, மற்றவர்களின் கைகளும் கீபோர்டில் நடுங்கின.

“யெஸ் சார்!’ ரமேஷ் வணக்கத்துடன் வரவேற்க, ”என்னய்யா ஆளப் பாத்தவுடனே சீன் போடற.. நேத்து படிச்சுப்படிச்சு சொல்லிருக்கேன். அந்தக் கொட்டேசனை முடிச்சுட்டுப் போன்னு.. நீபாட்டும் மயிராட்டம் ஆறரைக்கெல்லாம் கிளம்பிட்ட.” வெடுக்கெனத் தலைக்கேறிய கோபத்துடன், மற்றவர்களையும் திரும்பிப் பார்த்துக் கொண்ட ரமேஷ், அவமானத்தால் மனம் குன்றி அதே வேகத்தில் மரத்துப் போனான்.

‘இல்ல சார்! ஒர்க்க முடிச்சுட்டேன் பைனலா பிரிண்ட் அவுட் எடுக்கறதுதான் பாக்கி” அவன் பேசி முடிப்பதற்குள், ”நோ எக்ஸ்பிளனேசன்.. டயத்துக்கு நீ எழுந்திருச்சுப் போக இது என்ன கவர்மெண்ட் ஆபீசா? அங்க கூட இப்ப ஆப்பு வெச்சுட்டான். பர்ஸ்ட் யூ ஸ்டிரிக்ட்லி பாலோ தி டிசிப்ளின்!” கட்டிவைத்து அடிப்பது போல இருந்தது குரல்.

“பாவி! தினம் எட்டுமணி வரைக்கும் உன் இழவ எடுத்துட்டுத் தான போறேன், நேத்து ஒரு ஒன்றரை மணிநேரம் முன்ன போனதுக்கு இவ்வளவு அவமரியாதையா! இது ஆபிசா இல்லை வதை முகாமா?’ எனப் பதிலுக்கு கத்த வேண்டும் போல இருந்தது. மனக்கண்ணில் தோன்றிய வீட்டு நிலைமைகளும், எட்டாயிரம் சம்பளமும் அவனது கோபத்தை இரத்தத்திலேயே வைத்துப் புதைத்தது.

அதோடு எக்சிகியூடிவ் விடுவதாயில்லை.. ரமேஷை சாக்கு வைத்து பொதுவாகப் பேச ஆரம்பித்து விட்டான், ‘திஸ் ஜாப் ஈஸ் நாட் கிரியேட்டட் பார் யூ! திஸ் ஆப்பர்ச்சுனிடி இஸ் கிவன் பார் அஸ், மைன்ட் இட் ஜென்டில்மேன்!’ கிரேக்க அடிமைகளிடம் அதன் எஜமானன் சாட்டையைச் சொடுக்கிப் பேசுவது போல இருந்தது அந்தச் சூழ்நிலை. எல்லோரும் ஒரு கணம் பீதியுடன் திரும்பிப் பார்த்தனர். எக்சிகியூடிவ் விரும்பியதும் அதைத்தான்.

‘ஜென்டில்மேன் எல்லோருக்குமே சொல்றேன்.. படாத பாடுபட்டு பத்துவருசத்துல கம்பெனியை வளர்த்திருக்கோம்.. கம்பெனியோட குரோத்துக்கு ஏத்த மாதிரி உங்க குவாலிட்டியும் இருக்கணும்.. தலைக்கு, உடம்புக்கு ஏத்தமாதிரி கைகளும் வளரணும் இல்லையா! கம்பெனி டார்கெட்டுக்கு ஏத்தமாதிரி உங்க வொர்க்கிங் கெபாசிட்டி இருக்கணும். உங்க சௌகரியத்துக்காக டோண்ட் டிஸ்டர்ப் அண்ட் டெஸ்ட்ராய் அவர் குரோத்.. புரிஞ்சுக்குங்க. சரியா அஞ்சு மணிக்கு மூட்டையக் கட்டிக்கிட்டு எழுந்திருச்சிரணும். தினம் லேட்டா வரணும்னு உங்க லேசி வொர்க்கிங் கல்ச்சருக்கு இங்க இடமில்லை! இதே மத்த ஆபீசா இருந்தா மூணுபேரை வச்சி வொர்க் லோடு தருவான்! இங்க பத்து பேரை வெச்சிருந்தும், யுவர் ஒர்க் ஈஸ் நாட் சேட்டிஸ்பாக்டரி! சும்மா கம்ப்யூட்டர், பிரிண்டர் மட்டும் புதுசா இருந்தா போதாது.. ப்ளீஸ் பில்டப் யுவர் பிரைன் நியூலி.. அண்டர்ஸ்டேண்ட்!’.

இமைப்பதைத் தவிர வேறு எந்த எதிர்வினையும் புரியாமல் எலக்ட்ரானிக் குருவிகளைப் போல அசையாமல் கேட்டுக் கொண்டனர் ஊழியர்கள்.

“சே! இப்படி ஒரு பிழைப்புத்தேவையா? என்று தனித்தனியாக மனதுக்குள் நொந்துகொண்டனர். ‘டூ யுவர்டு யூட்டி’ என்று போகும் போதும் ஓர் ஆணியைக் காதுக்குள் அறைந்து விட்டுசென்றான் எக்சிகியூடிவ்.

அவன் நகர்ந்து விட்டதை உறுதிசெய்து கொண்டு, மெல்ல முனக ஆரம்பித்தான் ரமேஷ். ‘என்ன மனுசன்யா இவன்! ரெண்டு நாளைக்கு முன்ன கூட எட்டு மணிக்கு வந்து ஒரு கொட்டேசனைக் கொடுத்து அடிக்கச் சொன்னான்.. மறுவார்த்தை இல்லாமல் செஞ்சு கொடுத்துட்டு, எட்டே முக்காலுக்குத்தான் கிளம்பினேன்.. வெரி  ஃபைன், வெரி ஃபைன்னு தட்டிக் கொடுத்துட்டு.. “ரமேஷ் ஏன் தெரியுமா உன்கிட்ட வந்து வேலையைக் கொடுக்கிறேன். நீ சின்சியரா செய்வ. ஒர்க்கும் நீட்டா இருக்கு வெரிகுட்னு’ சொல்லிட்டுப் போனாய்யா! இன்னிக்கு வந்து என்னமா பேசுறான் பாத்தியா.. ரொம்ப பயங்கரமான ஆளுப்பா!’

‘பின்ன, என்னதாம்பா நீ புரிஞ்சு வச்சிருக்க.. பெரிய்ய படிப்பெல்லாம் படிச்சுருக்கீங்க! இது கூடவா புரியல. எனக்குத் தெரியாது அந்த ஆளப் பத்தி…”பாவி! தினம் எட்டுமணி வரைக்கும் எத்தன வருஷமா இந்த ஆபிஸ்ல பியூனா குப்ப கொட்டறேன். எல்லாம் அப்படித்தாம்பா.. காரியம் ஆவணும்னா வயித்துப்புள்ள நழுவுற மாதிரி பேசுவான். காரியம் முடிஞ்சதுன்னு வெச்சுக்க, கொரங்குப் புடிதான்! நான்தான் நாலு எழுத்து படிக்காத ஆளு…இங்க வந்து மாட்டிக்கிட்டேன்னு பாத்தா! ஹூம்! படிச்சுவங்களுக்கும் இதே கதிதானா? நானாவது பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை எதுத்துப் பேசுவேன். எதுத்துக் கேட்டுக் கேட்டுதான், இப்ப நைட் லேட்டானா சாப்பாடு துட்டு தர்றானுவ.. இப்புடியே இருந்தா எதுவும் பேசாம தலைய குனிஞ்சுகினு கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆட வேண்டியது தான். அழுவுற புள்ளதான் பால் குடிக்கும். ஹூக்கும்!’ அலட்சியமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார் பியூன்.

“பார்ரா! பியூனுக்குக் கூட நாம எளக்காரமாப் போயிட்டோம். என்னமா பேசிட்டுப் போறான் பாரு.. நாம கல்லுடைக்கிற மாதிரி கொத்தடிமை வேலையாட்டம் கீ போர்டை அடிக்கிறோம். அவன் என்னடான்னா கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆடறோம்னு நக்கல் பண்ணிட்டுபோறான், எல்லாம் நம்ம விதிடா’

“டோண்ட் வொர்ரி ரமேஷ், நாம வேற என்ன பண்ண முடியும்? எல்லார்கிட்டயும் போயி சொல்லிக்கிட்டு இருக்காத. எவனாவது போட்டு வேற குடுத்துருவான். மெல்ல வேற ஜாப் ஆப்பர்சுனிட்டிய தேடிக்கிட்டு இந்த நரகத்தவிட்டு ஓட வழி பாத்துக்க வேண்டியதுதான். பியூன் சொல்றதுலயும் தப்பில்ல! இப்படியே ஆத்திரத்த அடக்கி அடக்கி ஆறு வருஷம் வேலை பாத்தம்னு வெச்சுக்க! பி.பி. எகிறி மேலோகம் போக வேண்டியதுதான். நெட்ல வேற எடத்தப் பாப்போம்” அவர்களுக்குள் சமாதானம் தேடிக் கொண்டு, வேலையில் மூழ்கினார்கள்.

“என்னய்யா ஆபிசு இது, குறுக்குத்தடுப்பு வெய்யுன்னு வாயால சொல்லிட்டா போதுமா? சொன்ன சாமான்கள வாங்கித் தரல, எப்புடி வேலை செய்யறது? அதுக்குதான் கையில காச குடு நான் பாத்துக்குறேன்னேன்.. பாரு! கல்லு இருநூறு சொன்னா, நூத்தம்பதுதான் வந்துருக்கு என்ன! எம்பல்லை வச்சுப் பூசறதா? மணலும் பத்தல, கலவ எப்படி போடறது? அப்புறம் கொத்தனார் சரியா போடலன்னு எங்களக் குத்தம் சொல்ல வேண்டியது! ”எரிச்சலாய் பேசிக்கொண்டே கரணையில் எடுத்த சிமெண்ட் கலவையை செங்கல்லின் முகத்தில் கோபமாய் வீசினார் கொத்தனார்.

“அந்தாளு, யாரையும் நம்ப மாட்டாருப்பா! நம்ப என்னாத்த சொன்னாலும் அவுரா ஒரு எஸ்ட்டிமேட் போடுவாரு. நமக்கென்ன இருக்குறத வெச்சுபூசி வுடு.. ஆன வரைக்கும் வேலயப்பாரு!..” பியூன் கொத்தனாரை மெல்ல பதப்படுத்தினார்.

“எஸ்ட்டிமேட் போட அவரு என்ன கொத்தனாரா? தெரிஞ்ச வேலைய செய்யணும்.. இப்ப நான் போயி அது என்னசொன்ன… எச்சு கூட்டியா எதையோ கூட்டியா, அந்த வேலைய நான் போய் செஞ்சா ஒத்துக்குவியா? நான் கொத்தனாரு, தோதா பொருள் என்ன வேணும்னு எனக்குதான் தெரியும். அதப்போயி நீ மாத்திப் போட்டா எப்படி? நல்ல ஆளுய்யா அந்த ஆளு, இங்க கொண்டாந்து என்ன இழுத்துட்ட பாரு! உன் மூஞ்சிக்காக பாக்குறேன்.. எங்களுக்கென்ன இந்த மடம் இல்லன்னா எத்தனையோ சந்த மடம்.. இந்த சிமெண்ட் வேற… உன் ஆபிசரு மூஞ்சிய மாதிரியே… எங்கனாச்சும் ஒட்டுதா பாரு.. இது என்ன வாங்குனதா? எங்காவது அள்ளிக்கிட்டு வந்ததா?”

“யோவ்! நீ வேற. அவரு ஆபிசுக்கே எக்சிகியூட்டிவ்யா! நீ பாட்டுக்கும் மானாங்கானிக்குப் பேசுற.. அந்தாளு வந்துற கிந்துற போறான்.. ஏதேது என் வேலைக்கும் உல வெச்சுரவ போலருக்கே! பேசாம சும்மாங்கானிக்கும் செஞ்சுட்டுப் போயா!..’ பியூன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

“நீயே சொல்லு.. சொன்னா சொன்னமாதிரி நடக்கணும். முட்ட வுடுற கோழிக்குதான் நோவு தெரியும்! வேண்டிய பொருள் இல்லாம வேல செய்யறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?.. மாணிக்கம், உனக்குத் தெரியாது. இவனுங்கெல்லாம் பேச்சுலயே வெண்ணை எடுக்குற பசங்க.. ச்சீப்பா முடிக்கணும், வேலையும் டாப்பா இருக்கணும்னா எப்படி?”

கலவையைக் கிளறுவதை விட பக்கத்தில் நின்று பேச்சு கொடுத்தால், கொத்தனார் வாயை கிளறிக்கொண்டே இருப்பார் என்ற பயத்தில், ஏதாவது விபரீதமாக நடந்து விடப் போகிறது என்ற பதட்டத்தில், “பாத்துக்கிட்டே இரு! இதோ வந்துர்றேன்” என்று நழுவிச்சென்றார் பியூன்.

மணி ஆறு ஆனது. “என்ன வொர்க்ஃ பினிஸ்சா’ என்று ஆவலுடன் வந்த எக்சிகியூடிவ், கொத்தனார் பொருட்களை ஓரங்கட்டுவதைப் பார்த்து அதிர்ச்சியானார், “”என்ன கொத்தனார் எல்லாத்தையும் ஏறக் கட்றீங்க?”
“பின்னே, மணி என்ன ஆகுது?”

கைக்கடிகாரத்தை ஸ்டைலாகத் திருப்பிய எக்சிகியூடிவ் “”என்ன ஜஸ்ட் சிக்ஸ், ஆறுதான் ஆகுது” என்றார்.

“ஆறாகுதல்ல அவ்வளவுதான்! வேல டைம் முடிஞ்சு போச்சு சார்! இனிமே நாளைக்குதான்.”

“எல்லாம் முடிஞ்சுருச்சு, ஜஸ்ட் கால்வாசி சுவர்தானே! இன்னிக்கே பூசிட்டா வேலயும் முடிஞ்சுரும். ஆபிசும் நாளைக்குப் பாக்க நீட்டா இருக்கும்… ”குரலைத் தாழ்த்தி எக்சிகியூடிவ் பேசினான். எப்பொழுதும் பிறரை அதட்டியே வேலை வாங்கிப் பழகிய எக்சிகியூடிவ் இப்படி தாழ்ந்து பேசியதை, ஆவலுடன் பார்த்தும் பார்க்காத மாதிரி ரசித்துக் கொண்டிருந்தனர் ஊழியர்கள்.

“சார்! இதோ பாருங்க! கோடி ரூபா கொட்டிக் கொடுத்தாலும் ஆறு மணிக்குமேல வேலை செய்யறதில்ல! மனுசன்னா ஒரு அளவுக்குதான்.. ஒரு டயத்துக்குதான் வேலை.. கல்லா மண்ணா ஒரே எடத்துல குந்திக் கெடக்க… நாளைக்கு ஆஃப் டேல வேல முடிஞ்சிரும், யோவ் மணி கரணைய கழுவு.. ‘பேசிக் கொண்டே தனது எண்ணத்தை அமல்படுத்திக் கொண்டிருந்தார் கொத்தனார்.

“ஏம்ப்பா! இதுக்குப் போயி இன்னொரு நாளா? வேண்ணா ஓவர்டைம் மாதிரி சேத்து துட்டு வாங்கிக்க. சாப்பாட்டுக் காசும் தர்றேன்.. ஒரேயடியா முடிச்சுடலாம்ல?” இதம்பதமாக கொத்தனாரை இணங்க வைக்க முயற்சியெடுத்தான் எக்சிகியூடிவ்.

“இப்படியெல்லாம் ஒரேயடியாவேல பாத்தா, ஒரேயடியா எங்க கதையும் முடிஞ்சுரும்! சும்மா நீ குடுக்குற துட்டுக்காக பொழுதுக்கும் நாங்க சாகமுடியாது சார். நாங்களும் மனுஷங்கதான். போய் மத்த வேலைய பாக்கணும். இங்கேர்ந்து நா இப்ப சிங்கபெருமாள் கோயில் போயாகணும்.. நாங்க என்ன சிட்டியிலியா குடியிருக்கோம்.. வேற என்ன சார். பேசிக்கிட்டே! நாளைக்கு வர்ட்டா? இல்ல கணக்க முடிச்சுக்கிட்டா?”

“என்னப்பா இப்படி ரஃபா பேசற? சரி வேலயத் தொடங்கியாச்சு..நாளைக்கு வா வா..” சலித்துக் கொண்டு எச்சரிக்கையாய் வார்த்தையை விட்டார் எக்சிகியூடிவ். மற்ற ஊழியர்கள் தன்னைப் பார்க்கிறார்களா என்பதைக் கவனித்துவிட்டு வேகமாக அறைக்குள் சென்று விட்டான் எக்சிகியூடிவ்.”

“அவங்களுக்கென்ன, வேல முடிஞ்சா போதும்.. மத்தவனும் மனுஷன் தானேன்னு நெனச்சாதானே.. இன்னிய பொழுதுக்கும் நாம வேலை செஞ்சாலும், எந்த மொதலாளியும் திருப்திப்பட மாட்டான். நீ வாடா மணி..” என்று சித்தாளைக் கூப்பிட்டவாறு மட்டப்பலகையை ஒரு ஓரமாக எறிந்தார் கொத்தனார். உணர்ச்சி பெற்றது போல அதுவும் துள்ளிப்போய் ஓரமாய் விழுந்தது.

கம்ப்யூட்டர் மவுஸை வெறுப்புடன் வருடியபடி, மட்டப் பலகையையே ஆசையுடனும், ஏக்கத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தன ஊழியர்களின் விழிகள்.

_______________________________________________

துரை. சண்முகம்
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

மயிருக்குச் சமம்!

மயிறுநக்கீரனில் ஒரு செய்தி படித்தேன். ஆந்திர எல்லையிலிருக்கும் திருவள்ளூர் மாவட்டக் கிராமங்களில் வாழும் ஏழைப்பெண்கள் அதிலும் தலித் பெண்கள், சிலர் வறுமை காரணமாக தம் முடியை விற்று வருகின்றனராம். ஒரு அடி கூந்தலின் விலை 100 ரூபாய். பெண்களிடம் முடி கொள்முதல் செய்து சென்னைக்கு அனுப்பும் தரகர்கள் கிராமங்களில் அலைகிறார்களாம். சென்னையில் இம்முடிகளுக்கு சாயம் தீட்டி வெளிநாடுகளுக்கு அழகான சவரிகளாக ஏற்றுமதி செய்கிறார்களாம். அடர்த்தியான ஒரு கிலோ கூந்தலின் விலை 5000 ரூபாயாம்.

சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை கூந்தலைப் பற்றித்தான் எத்தனைக் கவிதைகள்! பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்ற பிரச்சினையை நக்கீரனும், இறையனாரும் இன்றைக்கும் ஒலிபெருக்கி வைத்து விவாதித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். தம் கூந்தல் மீது பிற ஆடவரின் கை படுவதைக்கூட கற்புள்ள பெண்கள் ஒப்புவதில்லை என்கிறது பழந்தமிழ் இலக்கியம். அந்த அளவுக்கு கூந்தலின் மகிமை இங்கே வேர் பிடித்துள்ளது.

துரியோதனன் வீழ்த்தப்பட்ட பின்புதான் அவிழ்த்த கூந்தலை அள்ளி முடிப்பேன் என்ற பாஞ்சாலி சபதம் மகாபாரதப் போரின் துவக்கம். மலரின் வாசமும், கள்ளின் போதையும் கொண்ட சீதையின் கூந்தலில் இராவணன் மயங்கினான், மடிந்தான் என்று தன் ஒப்பாரியில் மண்டோதரி புலம்புவதாய் கம்பராமாயணம் பாடுகிறது. இப்படி இதிகாச நாயகிகளின் கதைகளும் கூந்தலைத் தழுவியே செல்கிறது.

சிங்கத்துக்கு பிடரி, மயிலுக்குத் தோகை, சேவலுக்கு கொண்டை, யானைக்கு தந்தம் என எல்லா ஜீவராசிகளிடையேயும் ஆண் உயிரினங்கள் மட்டும் “அழகாய்’ வலம் வர, மனித இனத்தில் மட்டும் பெண் “அழகான’ கூந்தலோடு வலம் வருவதாய் சிலாகிக்கிறார் ஒரு சமகாலக் கவிஞர்.

இப்படிக் கற்புக்கும், அழகுக்கும், கதைப்பாடலுக்கும் அடையாளமாய், அடிநாதமாய் அறியப்பட்ட கூந்தல்தான், ஒரு பெண் விதவையானதும் அவளிடமிருந்து இரக்கமின்றிப் பறிக்கப்பட்டது. மேல் சாதி விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் நேற்றுவரை நமது சமூகத்தில் இருக்கத்தானே செய்தது? இந்தக் கூந்தல் பறிப்பின் நோக்கம் அவளை யாரும் விரும்பக்கூடாது, அழகு அவளை அண்டக்கூடாது என்பதுதான். அழகு அசிங்கம் என்ற இரு துருவங்களை நோக்கியும் பெண்ணைத் தள்ளுவதற்கு ஆணின் கையில் சிக்கிய ஆயுதம் கூந்தல்.

இப்படி புராண காலத்தில் பிடித்த முடியை ஆணாதிக்கம் இன்னமும் விடவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்கள் அடைமழை போலப் பெய்யும் காலமிது. அழகு நிலையங்கள் பெண்களின் அழகு குறித்த கவலையை அன்றாடப் பிரச்சினையாக்கிவிட்டன. அழகின்மையின் ஆபத்துக்களை அச்சுறுத்தும் விதத்தில் உணரவைத்து அழகை விற்று வருகிறார்கள்.

அதில் கூந்தலுக்கான விதவிதமான எண்ணெய்களும், பசைகளும், தைலங்களும் நூற்றுக்கணக்கில் சந்தையில் இருக்கின்றன. காத்திருக்க முடியாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடனே முடியை நட்டுத்தரும் ஆடம்பர அறுவைச் சிகிச்சைகளையும் “அறிவியல்’ வளர்த்திருக்கிறது. ஆக, பெண்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு தமது நேரத்தையும், பணத்தையும், கவலையையும் கூந்தலுக்காகச் செலவழிக்கின்றனர். அன்றும் இன்றும் கூந்தல் கவலையிலிருந்த தப்பிப் பிழைத்த பெண்கள் அநேகமாக இல்லை.

இதனால்தான் திருவள்ளூர் மாவட்டப் பெண்கள் கூந்தலை விற்கும் செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆயினும் உலகமயம் என்ற நாணயத்தின் மறுபக்கம் இப்படித்தான் இருக்க முடியும் போலும்! வழக்கமான உணவு வகைகளை ருசித்துச் சலித்து உலக ருசிகளுக்காக அலைபாயும் நாக்குகள் பெருகிக் கொண்டிருக்கும் காலத்தில்தான் “இரண்டு ரூபாய் அரிசி’ வாக்குகளை அள்ளித் தருகிறது. குளோனிங் முறையில் மனிதனையும் அவனுடைய உறுப்புகளையும் பிரதி எடுத்துவிட முடியும் என்று அறிவியல் முழங்கும் காலத்தில்தான் கருப்புச் சந்தையில் சிறுநீரகம் விற்பனையாகிறது.

தேசிய வளர்ச்சி விகிதம் பத்து சதவீதம் என்று ப.சிதம்பரம் கொட்டி முழங்கிக் கொண்டிருக்கும் அதேகாலத்தில்தான் மளிகைக்கடன் அடைப்பதற்காகப் பெண்களின் கூந்தல் கொய்யப்படுகிறது. நாட்டை முன்னேற்றுவதற்காக “மக்களை மொட்டையடிப்பது’ என்ற உவமானம் அதன் நேர்ப்பொருளிலேயே இப்போது உண்மையாகி விட்டது.

மூன்றடிக் கூந்தலை முன்னூறு ரூபாய்க்கு விற்ற பெண்களின் வாழ்க்கை கூறும் செய்தி என்ன? வறுமையின் முன் கூந்தல் தன் மரபுவழி மகிமையை உதிர்த்து விட்டது என்பதா? அல்லது தேசிய வளர்ச்சி வீதம் என்பது ஏழைப் பெண்களின் மயிருக்குச் சமம் என்று புரிந்து கொள்வதா?

________________________________________

புதிய கலாச்சாரம், ஜூன் 2007
________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!

 

தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக!

தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக!

இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்ற வெள்ளையர் இலண்டனில் துறைமுக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து தரும் ஒரு தரகு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஓரிரு வருடங்களாக தொழிலில் நட்டத்தைச் சந்தித்து வந்த வில்லியம்ஸ் அதிலிருந்து மீள தனது நண்பரொருவரின் ஆலோசனைப்படி கேரளாவிலிருக்கும் ஒரு சாமியாரைச் சந்திக்க முடிவு செய்கிறார். ஆலோசனை தந்தவர் இலண்டனில் வாழும் ஒரு என்.ஆர்.ஐ மலையாளி. கேரளாவின் கோட்டக்கல்லில் சிவா சிரிங்க ஆஸ்ரமத்தை நடத்தி வந்த ஞானசைதன்யா என்ற சாமியாரை வில்லியம்ஸ் குடும்பத்துடன் சந்திக்கிறார்.

வில்லியம்ஸின் தொழில் சிக்கலுக்கு ஞானசைதன்யாவின் ஆன்மீகத் தீர்வு என்ன? வில்லியம்ஸின் மகள் அமரந்தா முற்பிறப்பில் சைதன்யாவின் மனைவியாக இருந்தவளாம். இப்பிறப்பிலும் அந்த உறவு தொடர்ந்தால்தான் வில்லியம்ஸின் பிரச்சினை தீருமாம். இதை அந்த வெள்ளையர் ஏற்றுக்கொண்டு தனது மகளை சாமியாருக்கு மணமுடிக்கிறார். சீர் வரிசையாக பதினைந்து இலட்சம் பணமும், டாடா சஃபாரி காரும் கொடுக்கப்படுகிறது. நாலைந்து மாதம் குடும்பம் நடத்திய பிறகு சாமியாரின் சித்திரவதை தாங்காமல் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி ஆசிரமத்திலிருந்து தப்பித்து போலீசாரிடம் புகார் கொடுக்க தற்போது சாமியார் சிறையில்!

சாமியாரின் பூர்வாசிரமப் பெருமைகள் என்ன? சுதாகரன் என்ற பெயர் கொண்ட அந்தச் சாமியார் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மூவரைக் கொன்ற ஒரு கொலை வழக்கில் பதினான்காண்டுகள் சிறையிலிருந்து பின்னர் ஆசிரமம் ஆரம்பித்து ஞானசைதன்யாவாக அவதாரம் எடுத்தவர்.

வில்லியம்ஸின் கதையை நம்ப முடிகிறதா? சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நாகரீக உலகில் வாழும் ஒரு பணக்கார வெள்ளையரது குடும்பம் ஒரு பக்கா கிரிமினலிடம் ஏமாந்ததை என்னவென்று சொல்ல? இதை வெறும் முட்டாள்தனம் என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது.

மாறிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன், வாழ்க்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் மாறாத மயக்கத்தை இணைத்து, “ஆன்மீகத்தை அண்டினால் உடனடிப் பயன் கிடைக்கும்’ என்று நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம்பிக்கையூட்டும்படி மக்களிடம் உபதேசிப்பதுதான் காலத்திற்கேற்பப் புதுப்பிக்கப்படும் மதத்தின் இரகசியம். மதத்தைச் சுரண்டல் லாட்டரி போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.

கோடிகளில் புரளும் ஆன்மீக வர்த்தகம்

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்

இந்தியாவில் உலகமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருபது ஆண்டுகளில் தரகு முதலாளிகள் மட்டும் செழிக்கவில்லை, பல பணக்காரச் சாமியார்களும் தலையெடுத்திருக்கிறார்கள். இவர்களின் வர்த்தக மதிப்பு நீங்கள் எதிர்பாராத அளவிலானது.

பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி. டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஆண்டு வர்த்தகம் 350 கோடி. நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு 300 கோடி.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் 400 கோடி. பணக்காரர்களுக்காக மட்டும் சில ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி. இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். இவர்களின் சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம். எடுத்துக்காட்டாக அமிர்தானந்த மாயியின் சொத்து மதிப்பு மட்டும் 1200 கோடியைத் தாண்டுகிறது.

பங்காரு சாமியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர். ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சாயிபாபா ஆசிரமங்களின் மதிப்போ சில ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள். மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள், ரஜினீஷின் ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே “குணமாக்கி’ நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.

அமெரிக்காவில் வெள்ளையர்க ளுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத்தரும் தீபக் தாக்கூர், இந்தியாவின் ஆன்மீகப் “பெருமையை’ மேற்குலகில் பல மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்து ஒரே நேரத்தில் ஆன்மீகவாதியாகவும், இளம் தலைமுறையின் தொழில் முனைவராகவும் விளங்குகிறார்.

ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்குவதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.

“”எல்லாவற்றையும் இலவசமாக செய்வோமென்று நாங்கள் வாக்குறுதி ஏதும் தரவில்லை. அது சாத்தியமில்லை. வணிகரீதியில்தான் நாங்கள் இயங்க முடியும்” என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஒத்துக்கொள்கிறார் பாபா ராம்தேவ். “”நாங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனம் போலத் தான் இயங்கமுடியும், எங்களை நாடி வரும் பக்தர்களுக்குரிய தரமான வசதிகளை நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது” என்று வர்த்தகரீதியாகச் செயல்படுவதை நியாயப்படுத்துகிறார் ரவி சங்கர்.

வாழ்வின் நெருக்கடி சாமியார்களின் வளர்ச்சிப்படி

ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்

ஆன்மீக குருஜீக்களின் ஆசிரமங்கள் பன்னாட்டு நிறுவனங்களைப் போல பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மெல்லவும், விரைவாகவும், இடத்திற்கேற்ப அரித்தும் அழித்தும் வரும் புதிய பொருளாதாரக் கொள்கை நடுத்தர மக்களுக்கு சில வழிகளில் தற்காலிகமாகவேனும் முன்னேற்றத்தைக் காட்டி வருகிறது. ஆயினும் இது ஒரு பாதிதான். மறுபாதியில் அந்த முன்னேற்றம் வாழ்க்கையில் புதுப்புதுச் சிக்கல்களை அன்றாடம் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

செலவு பிடிக்கும் உயர் கல்வி, மருத்துவ மற்றும் காப்பீட்டுச் செலவுகள், உயர்ந்து வரும் வீட்டுக்கடன் வட்டி, வாழ்க்கைத்தரத்திற்காக வாங்க வேண்டிய வாகனக் கடன்கள் எல்லாம் சேர்ந்து அச்சுறுத்துகின்றன. ஒரு நாளில் நடைபெறும் பங்குச்சந்தையின் குறியீட்டெண் வீழ்ச்சியோ, ரியல் எஸ்டேட்டின் மதிப்புச் சரிவோ இலட்சக் கணக்கான நடுத்தர வர்க்கத்தினரின் சில ஆண்டு நிம்மதியைக் குலைக்க போதுமானது.

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஏ.எஸ், மருத்துவபொறியியல் படிப்புகள் அரசு பதவிகள், வங்கி வேலைகள், தனியார் நிறுவன உயர் பதவிகள், அதி வருவாய் கிடைக்கும் கணினித் துறையின் முக்கியப் பதவிகள் முதலானவை எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. ஆயிரக்கணக்கான துணை இயக்குநர்கள் துணை நடிகர்கள் மத்தியில் ஒரு சிலருக்குத்தான் வெள்ளித்திரையின் கடாட்சம் கிடைக்கும்.

எனினும் அனைவருக்குள்ளும் “வாழ்வின் உச்சத்தைத் தொட்டுவிடமுடியும்’ என்ற மாயை நீக்கமற நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இலக்கு உருவாக்கும் ஆசை, ஆசை ஏற்படுத்தும் போட்டி, போட்டிக்குப் பின்னான தோல்வி… இறுதியில் சித்தத்தின் சமநிலை சீர் குலைகிறது. கிடைக்காத வாழ்க்கை மாயமானாக ஓடுகிறது. கைக்கெட்டிய வாழ்க்கையோ கறிக்கடையைச் சுற்றி வரும் நாய்போல ஏக்கத்தில் உழல்கிறது.

சமூக இயக்கத்திற்கான உற்சாகத்தைத் தரவேண்டிய ஓய்வு, பரபரப்பாய் பசி அடக்கி பிணியெழுப்பும் நொறுக்கு தீனியாகியிருக்கிறது. வாழ்வின் முன்னேற்றத்தை, பண்பாட்டை கனவு கண்டு, நனவில் படைக்கத் தூண்டவேண்டிய பொழுதுபோக்கு என்பது வக்கிரத்தின் வடிகாலாகப் பரிணமித்திருக்கிறது. மனிதனின் உழைப்பு நேரத்தை மிச்சப்படுத்தி ஓய்வு தந்து அவனது ஆளுமை பரிணமிக்க உதவ வேண்டிய நவீனத் தொழில் நுட்பமோ எதிர்த்திசையில் பயன்படுகிறது. உழைப்பின் சுமையை சகிக்கவொண்ணாதவாறு கூட்டுகிறது.

நகர வாழ்க்கை, பரபரப்பு, வேகம், போட்டி, பொறாமை, சதி, வஞ்சகம்,வெறி, வக்கிரம், இயலாமை, பதட்டம், மன அழுத்தம், மனச்சிதைவு, இரத்த அழுத்தம், முதுமையில் வரவேண்டிய சர்க்கரை நோயும் மாரடைப்பும் இளமையையே காவு கேட்பது…… என முடிவேயில்லாமல் அலைக்கழிக்கிறது வாழ்க்கை என்ற இந்த நச்சுச் சுழல். வாழ்வின் பிரச்சினை சிந்தனையில் சீர் குலைந்து, உடல் நலிவாய் வெளிப்பட்டு, “என்னை மீட்பார் யாருமில்லையா’ என்று புலம்புகிறது, குமுறுகிறது, அழுகிறது, வெடிக்கிறது, சில வேளை தற்கொலையிலோ, வேறு வகை வன்முறைகளிலோ முடிகிறது.

இருப்பினும் ஆகப் பெரும்பான்மையினர் இந்த விஷச்சூழலிலிருந்து சிறிதாகவோ, பெரிதாகவோ பணம் செலவழித்து கடைத்தேறிவிட முடியும் என்ற நம்பிக்கையை நவீன ஆன்மீக ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. நடப்பில் சாதாரணமாகவும், கனவில் அசாதாரணமாகவும் வாழும் நடுத்தர வர்க்கம் இந்த ஆன்மீகச் சந்தையின் வலையில் சிக்கிக் கொள்வதற்குக் காத்திருக்கிறது. தங்களது தனித்துவத்தை மார்க்கெட் செய்துகொள்ளும் திறமை மட்டுமே ஆன்மீகவாதிகளுக்குத் தேவைப்படுகிறது. அவர்கள் தனிநபர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் காட்ட வேண்டியதில்லை.

சாமியார்களின் தனித்துவம் சோப்புக்கட்டிகள் பலவிதம்!

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

மஹரிஷி மகேஷ் யோகியின் சீடராக இருந்த ரவிசங்கர் பிரிந்து வந்து, “வாழும் கலை’ என்ற கவர்ச்சிகரமான “கான்செப்ட்’ஐ உருவாக்கி ஸ்ரீஸ்ரீ ரவி சங்கராக தனது பேரரசைப் பரவச்செய்தார். தியானம், யோகம், அறிவுத் திறன் வகுப்புக்கள் முதலானவற்றைக் கலந்து ஒரு புதிய கட்டமைப்பில் பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும் புதிய சோப்புக்கட்டி போல அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றார். இவரது குருவான மரித்துப் போன மகேஷ் யோகி மேலை நாடுகளில் மணிக்கு சில ஆயிரங்கள் டாலர் கட்டணத்தில் ஆழ்நிலை தியானத்தைக் கற்றுக்கொடுத்து பிரபலமானார். இதே சரக்கை ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஏற்ப விற்று, அவர்கள் மூலம் புகழ் பெற்றார் தீபக் தாக்கூர்.

ஒத்த பெயர் கொண்ட ஷிர்டி சாயி பாபாவின் மகிமையைப் பயன்படுத்திக்கொண்டு பஜனைகள் மூலமும், பல நூறு கோடி நன்கொடையின் சிறு பகுதியை தர்ம காரியங்கள் செய்தும், முக்கியமாக மாஜிக் வழியாக லிங்கங்கள், மோதிரங்கள், நகைகளை வினியோகித்தும் பெயர் பெற்றார் சாயி பாபா. இவரது சிறிய நகல்தான் தற்போது கடலூர் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் பிரேமானந்தா.

சாயி பாபாவின் சத்ய நகர் ஆசிரமத்தில் சில ஆண்டுகள் தங்கி பின்பு கேரளாவில் தனி ஆசிரம் ஆரம்பித்தவர் அமிர்தானந்த மாயி. மற்ற குருமார்களைப் போல வாய் சாமர்த்தியம் இல்லாத மாயியை அம்மன் போல அலங்காரம் செய்து, பக்தர்களைக் கட்டிப் பிடிக்கும் டெக்னிக்கைப் பயன்படுத்திப் பிரபலமடைய வைத்தார்கள். கடந்த 30 ஆண்டுகளில் மாயி அரவணைப்பால் “ஆன்மீக ரீசார்ஜ்’ செய்யப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாம்.

வட இந்தியாவில் யோகாசனத்தையும், ஆயுர்வேத மருந்துகளையும் வைத்து எய்ட்ஸைக் கூட குணப்படுத்த முடியும் என்று பிரபலமானவர் பாபா ராம்தேவ். இதை அறிவியலும், மருத்துவர்களும் உண்மையல்ல என்று நிராகரித்து விட்டாலும் மக்களை புற்றீசல் போல இழுப்பதில் ராம்தேவ் தோல்வியடையவில்லை. ஆஸ்ரம் பாபு, சுதன்ஜி மகாராஜ், மற்றும் முராரி பாபு முதலானோர் டெல்லியின் பண்ணை வீடுகளில் பணக்காரர்களுக்கு மட்டும் தலைக்கு ரூபாய் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் வாங்கிக்கொண்டு ஆன்மீக வகுப்பு நடத்துகிறார்கள். முடிந்தபின், இதே பண்ணை வீடுகளில் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் கேளிக்கைக் கூத்துக்களை நடத்துவது வழக்கம்.

90ஆம் ஆண்டு இறந்து போன ரஜனீஷ் சாமியாரின் நிறுவனம் முன்பு போல் வீச்சாக இயங்கவில்லை என்றாலும் செக்ஸ் குரு என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரஜனீஷீன் புத்தகங்கள், ஒலிஒளிக் குறுந்தகடுகள் பல பத்து மொழிகளில் இன்றும் கிராக்கியுடன் விற்கப்படுகின்றன. செக்ஸ், நிர்வாணம், தியானம், யோகம் முதலியவற்றைக் கலந்து பிரபலமான ரஜனீஷின் பக்தர்களில் வெளிநாட்டவர் அதிகம். வாழ்வின் வற்றாத இன்பங்களைத் தேடி அலைந்த மேலைநாட்டவருக்கு இவர் வடிகாலாகத் திகழ்ந்தார்.

நடனம், பஜனை, கிருஷ்ண வழிபாடு மற்றும் ஆச்சாரமான பார்ப்பன பண்பாட்டை முன்னிறுத்திய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் 80,90களில் உச்சத்தை அடைந்தது. இவர்களுக்கும் உலகெங்கும் கிளைகள் உண்டு. இயற்கை வாழ்வு, யோகம், தியானம் முதலானவற்றை முன்னிறுத்தி ஈஷா யோக மையத்தை நடத்தி புகழ் பெற்றவர் ஜக்கி வாசுதேவ். “வாழ்க வளமுடன்’ என்ற முத்திரையுடன் பிரபலமானவர் வேதாத்ரி மகரிஷி.

மேல் மருவத்தூரின் பங்காரு சாதரணமக்களை ஈர்க்கும் வண்ணம் சிவப்பாடை, பெண்கள் பூசை, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம், வருடம் முழுக்க சடங்குகள் என்று வளர்ந்திருக்கிறார். மேல் மருவத்தூர் சென்றால் நோய் தீரும், திருமணம் நடக்கும், வியாபாரம் செழிக்கும் என்று பல கதைகளை பக்தர்களே இலவசமாய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வசதியான தனிநபர்களின் மன அமைதி, மகிழ்ச்சி, கலைத் தவங்கள் என்று பிரபலமானது பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம். சங்கர மடம் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை. கல்லூரிகள், மருத்துவமனைகள் போக அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், முதலாளிகள் முதலான மேல்மட்டத்தின் பிரச்சினைகளைத் தேர்ந்த தரகன் போல தீர்த்து வைத்து தனி சாம்ராச்சியத்தையே உருவாக்கியவர் ஜெயந்திரர்.

நற்செய்திக் கூட்டங்களில் “முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள்’ என்று சாட்சியங்களை சொல்ல வைத்து, பெரும் மக்கள் கூட்டத்தை நம்பவைத்து பெயரெடுத்தவர் டி.ஜி.எஸ் தினகரன். தொலை பேசி எண்ணில் பிரச்சினைகளைச் சொல்லி கட்டணத்தை அனுப்பி வைத்தால் பிரார்த்தனை செய்து தீர்ப்பதற்கென்றே ஒரு பெரும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். பரிசுத்த ஆவியை எழுப்பி, அதை வைத்து ஒரு பல்கலைக் கழகத்தையும் சேர்த்து எழுப்பியிருக்கிறார்.

இந்தியாவில் பள்ளிக்கூடங்களை விட கோவில்களும் சாமியார்களும் அதிகம். எனவே, பட்டியலை இம்மட்டோடு நிறுத்திக் கொள்வோம். சாமியார்களில் பழைய பாணி சாமியார்களை விட நவீன பாணி சாமியார்களுக்கு மவுசு அதிகம். இருப்பினும் இரண்டு பாணிகளும் சொல்வது ஒரே மாதிரியான விசயங்களைத்தான்.

“”குரங்கு போல தவ்விச் செல்லும் மனதை கட்டுப்படுத்துங்கள், அதற்கு தியானம் செய்யுங்கள், மனதை வழிக்குக் கொண்டு வர உடலைக் கட்டுப்படுத்துங்கள், அதற்கு யோகாசனம் செய்யுங்கள், பேராசைப் படாதீர்கள், கிடைத்ததைக் கொண்டு வாழுங்கள், சைவ உணவு உண்டு, இயற்கையோடு ஒன்றி வாழுங்கள், வருவாயில் சிறு பகுதியையாவது தர்மம் செய்யுங்கள், பொறாமை, அகங்காரம், கோபம் முதலியவற்றை விட்டொழியுங்கள், செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், உலகுடன் அன்பு எளிமை அழகுடன் உறவு கொள்ளுங்கள்”, முதலான பொத்தாம் பொதுவான விசயங்களைத்தான் அனைத்து குருமார்களும் ஓதுகின்றனர். இது போக சாமியார்களின் மகிமைகளை பக்தர்களே கண் காது மூக்கு வைத்து ஊதிப்பெருக்கிப் பிரச்சாரம் செய்வதும் இயல்பாக நடக்கிறது.

ஆன்மீக “அமைதியும்’ அறிவியல் உண்மையும்!

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட் !உண்மையில் பக்தர்கள் தங்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை மேற்கண்ட சாமியார்களின் விதவிதமான முறைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமா? பலராலும் பூடகமாக வியந்தோதப்படும் ஆன்மீகத்தின் பொருள் என்ன? பல்வேறு முறைகளில் பயிற்சி செய்யப்படும் யோகா முறை ஒரு மனிதனுக்கு நிம்மதியைத் தருமா? நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட சாமியார்களின் உரைகளில் சீடர்களுக்கு தெளிவு பிறக்க வாய்ப்புள்ளதா?

“மனதைக் கட்டுப்படுத்துதல், கட்டுப்படுத்தினால் இறுதியில் பேரானந்தம்’ என்பது ஆன்மீகம் என்பதற்கு இவர்கள் தரும் இலக்கணம். மனதையே ஆன்மா, ஜீவன், உடலுக்கும் உயிருக்கும் அப்பாற்பட்டது என்றெல்லாம் கற்பித்துக்கொள்கிறார்கள். இத்தகைய அரூபமான விளக்கத்தில் உண்மையோ, பொருளோ இல்லை. அறிவியல்பூர்வமாக மனது என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒன்று. அதே சமயம் அதற்கென்று தனித்துவமான இடமும் உண்டு. ஆனால் அது தனியாய் பிறந்து வளர்ந்து செயல்படுவதில்லை. மனிதனின் உடற்கூறியலைக் கொண்டு குழந்தையின் மூளை இயல்பாக மனித மூளையாக உருவாகியிருந்தாலும் ஆரம்பத்தில் அது தன்மையில் விலங்குகளின் மூளையைப் போன்று சாதாரணமாகவே இருக்கிறது. புற உலகோடு கொண்டுள்ள தொடர்பால் மட்டுமே அது மனித மூளையின் செயல்பாட்டைப் பெறுகிறது.

உடலுக்கு வெளியே சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கையை, சமூகத்தை, முழு உலகைப் புரிந்து கொள்வதாலும், தொடர்பு கொண்டு வினையாற்றுவதன் வாயிலாகவும்தான் தனித்துவத்தைப் பெறுகிறது மனித மனம். சூழ்நிலையும், வாழ்நிலையும்தான் மனதின் அகத்தை வடிவைமைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. உணர்ச்சிகளாலும், அறிவுத்திறனாலும், மனிதர்கள் வேறுபடுவதன் காரணமும் இதுதான்.

மனதின் தோற்றமும், இருப்பும், செயல்பாடும் இவையென்றால் அதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? மனதின் பிரச்சினை என்பது மனிதனின் பிரச்சினை; மனிதனின் பிரச்சினை என்பது அவன் வாழ்வதற்காகப் புற உலகோடு கொண்டுள்ள தவிர்க்கமுடியாத உறவினால் ஏற்படும் பிரச்சினை. இத்தகைய பிரச்சினைகளினால் மனிதனிடம் இரண்டுவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று உடல் ரீதியானது. இரண்டாவது கருத்து ரீதியானது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தும் பிரிந்தும் வினையாற்றுகின்றன.

உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளில் மூளையும், அதனால் பாதிக்கப்படும் ஏனைய உடல் அங்கங்களும் அடக்கம். கருத்து ரீதியான பிரச்சினைகளை அவ்வளவு சுலபமாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூக உறவில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் மனிதன், பிரச்சினை வரும்போது சமூகத்தில் தனது இடம் குறித்த குழப்பமும், பயமும், அடைகிறான். இது முற்றும் போது சமூகத்தோடு முரண்படத் துவங்குகிறான். முரண்படுதலின் வீரியத்திற்கேற்ப அவனது சமூக வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

ஆக மனிதனது உடல் நலமும் அல்லது மூளை நலமும், சிந்தனை முறையும் ஒத்திசைந்து இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். ஆயினும் வர்க்க சமூகத்தில் இந்த ஒத்திசைவு குலைவது தவிர்க்க இயலாதது. வர்க்கப் பிளவுகளையும் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கும் இன்றைய உலகமயமாக்க காலம், மக்கள் ஆன்மீகத்தை நோக்கி ஓடுவதையும், சாமியார்கள் வாழ்க வளமுடன், வாழுவதே கலையென்று ஆடுவதையும் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும் மன நலன் மற்றும் சமூக நலன் இரண்டையும் சீரடையச் செய்வதற்குரிய பொருத்தமான மருந்துகள் சாமியார்கள் மற்றும் அவர்களது யோக முறைகளில் நிச்சயம் இல்லை. ஏன்?

வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனிதனும், மனதும் பாதிக்கப்படுகின்றனர் என்றால் மூளை பாதிக்கப்படுகிறது என்பதே சரி. கோபம், அச்சம், சலிப்பு, சோர்வு, விரக்தி, சோகம், பதட்டம், படபடப்பு, மன அழுத்தம், போன்றவை எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படக்கூடிய உணர்ச்சிகள். குறிப்பிட்ட காரணங்களால் இவை அடிக்கடி ஏற்பட்டு நாளடைவில் தொடர்ந்து நீடித்தால் மனம் மெல்லமெல்லச் சிதைவது நடக்கிறது. மனச் சிதைவின் விளைவால் மூளையில் உள்ள உயிர்ம வேதியல் சக்திகளின் சமநிலை குலைகிறது. இதன் தொடர் விளைவால் பல உடல் பிரச்சினைகளும், வாழ்க்கை மீதான விரக்தியும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வென்ன?

மூளை இழந்து விட்ட சக்திகளை திரும்பப் பெறுவதன் மூலமே புண்ணாண மூளையையும், மனதையும் நேர் செய்ய முடியும். அதை மனித உடலையும், நோய்க்கூறுகளையும் அறிவியல் பூர்வமாக கற்றுக்கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் கண்டுபிடித்துக் குணமாக்க முடியும். மாறாக, தியானம் செய்வதன் மூலமாக, மூளை இழந்த பௌதீக ரீதியான சக்திகளைப் பெறமுடியாது.

ஏனெனில், இது வெறும் கருத்துப் பிரச்சினையல்ல. உடல் நோய்வாய்ப்படுவது என்பது பொருளின் பிரச்சினை. பொருளுக்கு கருத்து மருந்தல்ல. எளிமையமாகச் சொல்வதாக இருந்தால் தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, எலும்பு முறிவு, மற்றும் எளிதில் குணப்படுத்த இயலாத எய்ட்ஸ் முதலான நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுகிறோம். இதை தியானம் செய்வதால் தீர்க்கமுடியாது. மனம் அல்லது மூளையின் பிரச்சினைகளும் அப்படித்தான்.

இருப்பினும், மனம் நோய்வாய்ப்படுவதற்கும், உடல் நோய்வாய்ப்படுவதற்கும் வேறுபாடு உண்டு. உணவின்மை, சத்துக்குறைவான உணவு, சுகாதரச் சீர்கேடுகள், நுண்கிருமிகள் முதலியவற்றால் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஆனால் மூளையோ, வாழ்க்கைப் பிரச்சினைகளால் குறிப்பிட்ட கருத்து நிலைக்கு தொடர்ந்து ஆட்படுவதால் சக்தியை இழந்து நோய்வாய்ப்படுகிறது.

இத்தகைய பலவீனமான மூளையால் உடலின் சமநிலை குலைந்து ஏனைய உடல் பாகங்களும் பாதிப்படைந்து, செயல்பாடு சீர்கேடு அடைகின்றது. பாதிப்படையும் மனதிற்குப் பின்னே இத்தனை உண்மைகள் இருக்கும் போது, சாமியார்கள் அடிமுட்டாள்தனமாக “குணப்படுத்துவேன்’ என்று திமிராகப் பேசுவது அயோக்கியத்தனம். நியாயமாக இவர்களை போலி மருத்துவர்கள் என்று கைது செய்து உள்ளே தள்ளுவதே சரி.

யோகா போன்ற முறைகளால் நோயைக் குணப்படுத்தமுடியும் என்பதுதான் மூட நம்பிக்கையே தவிர தன்னளவில் அவை ஒரு உடற் பயிற்சிக்குரிய நன்மையைக் கொண்டிருக்கின்றன. உடற்பயிற்சியால் ஒரு மனிதனின் உடல் நலம் பொதுவில் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உண்மைதான். இருப்பினும் இந்த ஆரோக்கியம் வெறும் உடற்பயிற்சியால் மட்டும் வந்து விடுவதில்லை. அது ஊட்டச் சத்து, சுகாதாரம், போதுமான ஓய்வு, உறக்கம் போன்றவையுடன் தொடர்புள்ளது. சுருக்கமாகச் சொன் னால் வசதி அல்லது வர்க்கம் சம்பந்தப்பட்டது.

அடுத்து, தியானம் என்பது மனம், அதாவது மூளையின் ஒரு பகுதிக்கு அல்லது செயல்பாட்டிற்குச் செய்யப்படும் பயிற்சியாகும். தியானத்தின் மூலம் மட்டுமல்ல, ஒரு நல்ல இசையைக் கேட்பதிலோ, ஒரு குழந்தையைக் கொஞ்சுவதிலோ, இயற்கைக் காட்சியுடன் ஒன்றுவதிலோ கூட மனம் பயிற்சியையும் ஓய்வையும் பெறமுடியும். இவை ஒவ்வொருவரின் விருப்பம், இரசனை, பண்பு, வாழ்க்கையைப் பொறுத்தது. ஆயினும் அழுத்திச் செல்லும் வாழ்க்கையின் இடைவெளிகளில் பலருக்கு இவை சாத்தியப்படுவதில்லை. அதனால் பிரச்சினை வரும்போது ஓய்வு பெறாத மனம் விரைவில் துவண்டு விடுகிறது.

மனதிற்கு அப்படிச் சிறப்பாகப் பயிற்சியையும், ஓய்வையும் தந்திருப்பவர்களுக்குக் கூட வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனது பாதிக்கப்படுவது நடக்கும். இதிலிருந்து மீள்வதற்கு மருத்துவமே பெருமளவுக்கு உதவும் என்பதையும் தியானம் உதவாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, மனதைச் சிதைத்து வதைக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளால் நோயுற்ற ஒரு மனிதனை எல்லா உளவியல் மருத்துவர்களாலும் குணமாக்கி விட முடியாது. “நான்’ எனப்படும் தன்னிலையை வைத்து வாழும் மனிதனின் அடிப்படை, உண்மையில் “நாம்’ எனும் சமூக மையத்தில்தான் சுழல்கிறது. அந்த மையம் மனிதர்களது விருப்பு, வெறுப்பின்படி அமைந்ததல்ல; அது சமூக உறவுகளால் பின்னப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தம் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் சமூக அறிவியல் கண்ணோட்டம் கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் இந்த நோயின் காரணத்தையே புரிந்து கொள்ள இயலும்.

வாழ்வின் சிக்கல்களை அருளுரைகள் தீர்க்காது!

முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்
முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்

ஆன்மீகமோ அதன் காரணங்களை அறியக்கூடாது என்பதில்தான் குறியாயிருக்கிறது. விதியும், வினைப்பயனும், மரணத்துக்குப் பிந்தைய சொர்க்கமும் நிகழ்காலத் துயரங்களுக்காக மதம் கட்டியமைத்த கற்பனையான எதிர்காலங்கள். கூடவே விதிக்கப்பட்ட வாழ்வை அல்லது அடிமைத்தனத்தைச் சகித்துக் கொள்வதற்கு மட்டுமின்றி அதனை ஆன்மீக ருசியுடன் இரசிப்பதற்கும் நவீன சாமியார்கள் கற்றுத் தருகிறார்கள். பக்தர்கள் தமக்குக் கிடைத்த வாழ்க்கையை இனிமையாக வாழுவதற்கு சாமியார்கள் தேனொழுகப் பேசுவதெல்லாம் ஆளும் வர்க்கம் அடக்கப்படும் வர்க்கத்திற்குச் செய்யும் உபதேசமேயன்றி வேறல்ல.

ஏற்றத்தாழ்வான, அநீதியான இந்தச் சமூக அமைப்பே மனிதர்களின் துன்ப துயரங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த அமைப்பை மாற்றாத வரை துயரங்களுக்கும் விடிவில்லை. ஆன்மீகவாதிகளோ இதற்கு நேரெதிராக நிலவும் சமூக அமைப்பைத் தக்க வைப்பதில்தான் கருத்தாயிருக்கிறார்கள். அதனாலேயே தனி மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வக்கற்றும் இருக்கிறார்கள்.

தங்களுக்கு வரும் கோடிக்கணக்கான நன்கொடைப் பணம் எத்தகைய வழிகளில் சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. ஒருவேளை, “”நேர்மையற்ற முறையில் வரும் பணத்தையும், கருப்புப் பணத்தையும் ஏற்கமாட்டோம்” என்று அவர்கள் அறிவித்தால் அடுத்த கணமே தெருவுக்கு வந்துவிடுவார்கள். ஆன்மீக நிறுவனங்கள் உயிர்வாழ்வதன் அச்சாணியே இதுதானென்றால் தனி மனிதனின் நன்னடத்தைக்கும், நிம்மதிக்கும் எப்படி வழிகாட்ட முடியும்?

பங்குச் சந்தையில் சில சமயம் இலாபமடையும் நடுத்தர வர்க்கம், பல நேரங்களில் இந்தச் சூதாட்டத்தில் சில இலட்சங்களையும் கூடவே நிம்மதியையும் இழக்கிறது. இவர்களுக்கு சாமியார்கள் என்ன தீர்வு தர முடியும்? “”பங்குச் சந்தை என்பது சூதாட்டம், அதில் முதலீடு செய்யாதீர்கள் என்று சாமியார்கள் கூறுவதில்லையே!” “”பேராசைப் படாதீர்கள், சிறிய அளவு இலாபத்துடன் திருப்தி அடையுங்கள், முதலீடு செய்யும் போது சற்று எச்சரிக்ககையாக இருங்கள்” என்றுதானே உபதேசிக்கிறார்கள்?

தற்போது துணை நடிகை பத்மாவின் பாலியல் லீலைகளை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக நாறடிக்கின்றன. இவரைப் போன்ற விளம்பர உலகில் இருக்கும் பெண்களுக்கு சாமியார்கள் என்ன நிம்மதியைத் தந்துவிட முடியும்? துகிலுரித்து தோலைக் காண்பிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இவர்கள் இத்தொழிலை தலைமுழுகினால் மட்டுமே நிம்மதி பெற முடியும் என சாமியார்கள் வழிகாட்டுவதில்லை. மாறாக, பல திரை உலக நடிகர்களைப் பக்தர்களாகப் பெற்று தமது விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்ற பிரிவினரைவிட ஊதியம் அதிகம் பெறுவதோடு ஊக்கத்தொகையாக பிரச்சினைகளையும் கணிசமாகப் பெறுகின்றனர். இரவுப் பணி, முடிவற்ற வேலைப் பளு, இரக்கமற்ற பணியிறக்கம், வேலை நீக்கம், பண்பாட்டுச் சீர்கேடுகள், நுகர்வு வெறி, தனிநபர் வாதம், வாழ்க்கை உறவுகள் நசித்துப் போதல், முதலியனவற்றால் அல்லலுறும் இவர்களுக்குத் தேவைப்படும் தீர்வென்ன? ஒரு துடிப்பான தொழிற்சங்கங்கத்தைக் கட்டியமைத்தால் குறைந்த பட்சமாக பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சுயமரியாதையுடன் பணியாற்றும் சூழலை உருவாக்கிக் கொள்ளலாம். ஊழியர்களை எந்திரம் போலத் தேய்த்துவரும் முதலாளிகளை அடக்கியும் வைக்கலாம்.

ஆயினும் இந்தத் தீர்வை எந்தச் சாமியாரும் தர இயலாது. மாறாக, ஊழியர்களின் இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் முதலாளிகள், சாமியார்களை வைத்து யோகா, ஆன்மீக வகுப்புக்களையும் நடத்துகின்றனர். மொத்தத்தில் கேளிக்கை என்ற மதுவை ஊட்டி, ஆன்மீகம் எனும் அடிமைத்தனம் கற்றுத்தரப்படுகிறது. தொழிற்சங்கத்தைக் கட்டாமல் இருக்க அடியாட்களை நியமிக்கும் “அநாகரிகம்’ தேவைப்படாமல், தற்போது அந்தப் பணியினை ஆன்மீகவாதிகளை வைத்தே முடித்துக்கொள்கிறார்கள் முதலாளிகள்.

அம்பலமானாலும் ஆன்மீக அடியாட்கள் வீழ்வதில்லை!

ஆன்மீக அடியாட்கள்

அதனால் சாமியார்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டுப் போனாலும் ஆளும் வர்க்கம் அவர்களைக் கைவிடுவதில்லை. ஜெயேந்திரனின் வண்டவாளங்கள் சந்தி சிரித்த பின்னும் ஊடகங்கள் அவரை சங்கராச்சாரியார் என்று மரியாதையுடன்தான் அழைக்கின்றன. சீடர்களை பாலியல் உறவு கொள்ளச் சொல்லி ரசித்துப் பார்ப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ரஜனீஷ் அமெரிக்கா சென்று ரோல்ஸ்ராய்ஸ் காரில் சென்றால் சமாதி நிலை அடைவதாக 96 கார்களை வாங்கிக் குவித்தார். வரி ஏய்ப்பு, இதர மோசடிகளுக்காக அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் இந்தியா வந்து செத்துப்போன ரஜனீஷின் அருளுரைகள் இன்றும் தமிழில் வெற்றிகரமாக விற்கப்படுகின்றன.

சாயிபாபா குழந்தைகளையும், இளைஞர்களையும் பாலியல் உறவுக்குப் பயன்படுத்தும் வக்கிரம் கொண்டவர் என்பதை இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையும், ஒரு ஆவணப்படத்தின் மூலம் டென்மார்க் அரசுத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதன் பொருட்டே ஐ.நா.சபை சாயிபாபா ஆசிரமத்துடன் சேர்ந்து செய்ய விருந்த நலப்பணித் திட்டங்களை ரத்து செய்தது. புட்டபர்த்தியில் பல பாலியல் வக்கிரக் கொலைகளும் நடந்திருக்கின்றன. ஆனாலும் சாயிபாபா இந்திய ஊடகங்களால் இன்றும் பூஜிக்கப்படுகிறார். முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் பாபாவின் பிறந்த நாளில் கலந்து கொள்கிறார். ஐ.நா.செயலர் பதவிக்குப் போட்டியிட்ட சசி தரூர் பாபாவின் மாஜிக் மோசடிகளை அற்புதங்கள் என்று புகழ்கிறார். கருணாநிதி தன் மனைவியை பாபாவின் காலில் விழச்செய்கிறார்.

மருத்துவக் கல்லூரி சீட்டுக்கு தலா 40 இலட்சம் வாங்கும் அமிர்தானந்த மாயியின் காலில் அத்வானியும், மத்திய அமைச்சர் அந்தோணியும் விழுகிறார்கள். மாயியின் வருமான வரி ஏய்ப்புக்கு அரசே வழி செய்கிறது. வேறெங்கும் வரிசையில் நிற்க விரும்பாத பணக்காரர்கள் மாயியின் “கட்டிப்பிடி’ ஆன்மிகத்திற்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.

விதர்பா பகுதியில் கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுவதற்குக் காரணம் அவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று திமிராகப் பேசும் இரவி சங்கரை தகவல் தொழில் நுட்ப யுகத்தின் குரு என்று பத்திரிக்கைகள் செல்லமாக அழைக்கின்றன.

அயோத்திப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்து நின்ற ராம்விலாஸ் வேதாந்தி, பைலட்பாபா, கீர்த்தி மஹாராஜ் முதலான சாமியார்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு, பலகோடி ரூபாய் கருப்புப் பணத்தைக் வெள்ளைப் பணமாக மாற்றித் தரும் மோசடியை சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சி கையும் களவுமாக அம்பலப்படுத்தியது. ஆயினும் சங்கபரிவாரங்கள் இச்சாமியார்களைக் கைவிடவில்லை.

அம்பலமாகும் சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை இவர்கள் செல்வாக்கிழந்தாலும் புதிய சாமியார்கள் களமிறக்கப்படுவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழக்கி விடப்பட்டிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நவீன சாமியார்கள்.

________________________________________

புதிய கலாச்சாரம், செப்டம்பர் 2007
________________________________________

தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

46

கேள்வி :
ஒரு இந்தியன் அவனது வாழ்நாளில் இரண்டு முறைதான் தேர்தலில் போட்டியிட முடியும்” என்று ஒரு சட்டம் அமலுக்கு வந்தால் எல்லா ஊழல்களும் உடனடியாக நிறுத்தப்படும். சமூகவிரோதிகளும் அரசியலுக்கு வரமாட்டார்கள். காரியவாதிகளும் அரசியலை தொழில் போல நினைத்து வர இயலாது.

என்னுடைய கேள்வி, இத்தகைய சட்டம் இந்தியாவில் வருவதற்கு வாய்ப்புண்டா?

– ஜெகன்

அன்புள்ள ஜெகன்,

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த நாராயண மூர்த்தி பதவி விலகிக் கொண்டு வேறு ஒருவரை நியமித்துள்ளார். இதுபோல பல முதலாளித்துவ நிறுவனங்களில் முக்கியமாக மேற்கத்திய நிறுவனங்களில் நடக்கின்றன. நிறுவனத்தை நடத்துவது வேறு ஆளாக இருந்தாலும் நிறுவனத்தின் பங்குகள் என்னமோ முதலாளிகளின் கையில்தான் குவிந்து கிடக்கின்றன. அந்த வகையில் அந்தந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது எல்லாம் இவர்கள்தான்.

அதே போல இந்தியாவில் தேர்தல்களில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை விட அவர்கள் எந்தெந்த வர்க்கங்களுக்கு ஆதரவாக, பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அந்த வகையில் இங்குள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களது கட்சிகள் அனைத்தும் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியங்கள், நிலவுடைமை வர்க்கங்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. காங்கிரசும், பா.ஜ.கவும், தி.மு.க – அ.தி.மு.கவும் முதலாளிகளது நலனுக்காகத்தான் கட்சிகளை நடத்துகின்றன.

அடுத்து நமது ஜனநாயக அமைப்பில் தேர்ந்தெடுக்க்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை விட நிரந்தரமாக இருக்கும் அரசின் உறுப்புகளுக்குத்தான் ( அதிகார வர்க்கம், நீதிமன்றம், போலீசு – இராணுவம்) அதிக அதிகாரம் இருக்கின்றன. தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சட்டங்களை இயற்றத்தான் முடியும். அதை அமல்படுத்துவது அரசு எனப்படும் மையமான உறுப்பைச் சேர்ந்த அதிகார வர்க்கம்தான்.

கருணாநிதி அரசு செய்தவற்றில் மக்கள் நலனுக்கானவற்றைத்தான் இப்போது ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா ரத்து செய்ய முடியுமே அன்றி முதலாளிகளுக்கு பாதகமாக எதையும் செய்ய முடியாது. சான்றாக தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ரத்து என்பது பள்ளி முதலாளிகளின் நலனில் குடிகொண்டிருக்கிறது என்பதால் சாத்தியம். ஆனால் தி.மு.க ஆட்சியில் அனுமதி பெற்று இங்கு வந்து தொழில் நடத்தும் பன்னாட்டு நிறுனவங்களை ஜெயலலிதா விரும்பினாலும் ரத்து செய்ய முடியாது.

அதேபோல பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் கனிம வளங்களையும் தனியாருக்கு விற்பது மட்டும்தான் மன்மோகன் அரசு செய்ய முடியுமே அன்றி உல்டாவாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க முடியாது. அமெரிக்கா திணித்திருக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைத்தான் காங்கிரசு அரசு செய்யுமே அன்றி அதை எதிர்த்து கருத்துக்கூட தெரிவிப்பதற்கு வழியில்லை.

ஆக அரசாங்கங்களின் இலட்சணம் இதுதான் என்றால் பின் ஏன் தேர்தல் போட்டிகள் இத்தனை பிரயத்தனத்துடன் நடக்கின்றன? தெரிவு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் அளவில்லாமல் சம்பாதிப்பதற்கு இந்த அமைப்பு வாய்ப்புகளை நல்கிறது. இதில் எதிர்க்கட்சி என்றால் கமிஷன் கம்மியாகவும், ஆளும் கட்சி என்றால் அதிகமாகவும் இருக்கும். இதை எதிர்பார்த்தே தேர்தல்களில் கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள். ஆளும் கட்சி என்றால் முதலாளிகளிடமிருந்து கணிசமாக கிடைக்கும் என்பது ஒரு யதார்த்தம். இதைத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலில் பார்க்கிறோம்.

அதே நேரம் அரசியல்வாதிகள் அடிக்கும் ஊழல், கொள்ளைகளை விட அதிகாரிகளும், முதலாளிகளும்தான் கணக்கில்லாமல் அடிக்கிறார்கள். இப்போது கோதாவரி எரிவாயு பேசினில் ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் தொகையை அரசுக்கு கொடுக்காமல் கைப்பற்றியிருக்கும் ஊழல் வெளிவந்திருக்கிறது. இப்படித்தான் அனைத்து ஊழல்களிலும் முதலாளிகளே முதன்மையாக இருக்கிறார்கள். ஆனால் இந்த முதலாளிகளே ஊடகங்களையும் கட்டுப்படுத்துவதால் அரசியல்வாதிகள் மட்டுமே மக்களிடம் வில்லன்களாக முன்னிறுத்தப்படுகிறார்கள்.

இதுதான் நிலைமை என்றால் தேர்தலில் போட்டியிடும் நபர்களின் தனிப்பட்ட பண்பு நலன்கள் எதுவும் பலனளிக்க போவதில்லை. ஒருவர் முழுமையான நல்லவராக இருந்தாலும் இந்த அமைப்பு முறையின் ஊழலை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. இது போக இப்போதே தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் போட்டியிடுவதற்கு தனித்தொகுதிகளை ஒதுக்குகிறார்கள். இதனாலெல்லாம் பெண்களும், தலித்துகளும் பலனடைந்திருக்கிறார்களா என்றால் இல்லை.

புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் இப்போது  காங்கிரசு என்று சுற்றி வரும் செல்வப்பெருந்தகை ஒரு கட்டைப்பஞ்சாய்த்து ரவுடி. அதன் மூலமே கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்தவர். தலித்துகளுக்கான தொகுதியில் இவர் தலித் என்பதால் போட்டியிட்டு வெல்வதால் என்ன பலன்? அது போல இன்று பல பஞ்சாயத்து இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அவர்களும் பதவிகளுக்கு வருகின்றனர். ஆனால் எல்லா இடங்களிலும் அவர்களது கணவன்மாரே தலைவர்கள் என்று அறியப்படுகிறார்கள், அழைக்கப்படுகிறார்கள். எனவே இத்தகைய தேர்தல் சீர்திருத்தங்களால் எந்தப் பலனும் இல்லை.

நீங்கள் சொல்வது போல ஒருவர் இரண்டுமுறை மட்டும்தான் போட்டியிட முடியும் என்று ஆக்கினாலும் அது ஊழல்பெருச்சாளிகளின் வாரிசுகளும், குடும்பத்தினரும் போட்டியிடுவார்கள் என்று மாறிவிடும். சான்றாக தங்கபாலு இரு முறை போட்டியிட்டு மூன்றாவது முறை போட்டியிட முடியாது என்றால் தனது மனைவியை களமிறக்குவார். மனைவிக்கு இரு முறை முடிந்தால் அப்புறம் வாரிசுகள், பினாமிகள் என்று இந்த ஆதிக்கம் சட்டத்திற்கேற்ப தொடரவே செய்யும்.

இப்போதே எல்லா அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசகளும் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கின்றனர். சோனியா, பைலட், முலாயம், லல்லு, சரத்பாவார், கருணாநிதி, வீரபாண்டி ஆறுமுகம், என்று டெல்லி முதல் சேலம் வரை குடும்பங்களே ஆதிக்கம் செய்கின்றன. இதற்கு மேல் நீங்கள் கோருவது போன்ற சீர்திருத்தத்தை இப்போதைக்கு கொண்டு வருவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பும் சாத்தியமில்லை. ஒரு வேளை மக்களுக்கு ஏதாவது ஒரு பொய்மான் மாற்றத்தை காண்பிப்பதற்க்காக கொண்டு வந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.

தேர்தல் கமிஷன் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் தேர்தல் அரசியலில் இருந்து மக்களின் பங்கேற்பை ரத்து செய்து கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கின்றனது. இது குறித்து தேர்தல் நேரத்தில் வெளியிட்ட கட்டுரைகளை பார்க்கவும். பலரும் இந்த தேர்தல் சீர்திருத்தங்களை மாபெரும் வெற்றி என்று பிழையாக பார்க்கிறார்கள்.

இறுதியாக நாம் முற்றிலும் உளுத்துப்போன இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையை தகர்த்துவிட்டு புதிய ஜனநாயக அமைப்பு முறை ஒன்றை உருவாக்க போராடுவதே சரி. அதுவரை எல்லா சீர்திருத்தங்களும் விழலுக்கிறைத்த நீர்தான்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை ஏற்றுக்கொள்! இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்!!

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 4

பிற்பட்டோர் மற்றும் ஹரிஜனங்கள், பழங்குடியினர் ஆகிய இந்துக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை வழங்கியுள்ளன. அவற்றைப் பிடுங்கி, மதம் மாறிப் போன முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வழங்குவது முறைகேடும், அநீதியும் ஆகும். இதனால் இந்துக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை குறைகிறது. பறி போகிறது. ஆகவே இந்தச் சலுகைகளை இந்துக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

– ”மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?”

இந்து முன்னணி வெளியீடு, பக்கம் – 45.

தீண்டாமையை ஏற்றுக்கொள்! இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்!! ந்துக்களின் இட ஒதுக்கீட்டை முசுலீம்களும் கிறித்தவர்களும் பிடுங்கிக் கொள்வதாகக் கூறும் இந்த அவதூறே உண்மைக்கு மாறான ஒரு மோசடியாகும். இன்று வரையிலும் தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டில் மதம் மாறியவர்களுக்கு இடமில்லை. தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களை, பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டில்தான் சேர்த்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட முசுலீம் மக்களுக்கு எதிலும் இடஒதுக்கீடு கிடையாது. ஒரு சில மாநிலங்களில் ஒரு சில முசுலீம் சாதிகளை மட்டும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் மதம் மாறுகின்ற முசுலீம், கிறித்தவ மக்கள், இடஒதுக்கீட்டுச் சலுகையை இழக்கிறார்கள் என்பதே உண்மை.

அடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் அனைவருமே வரலாற்று ரீதியாக ‘இந்துக்களாக’ இருந்தது கிடையாது. ‘சதுர்வர்ணம்’ எனும் பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர – வர்ண சமூக அமைப்பிலேயே பஞ்சமர்கள் இடம் பெறவில்லை. ஆங்கிலேயர் காலத்தில், அதுவும் முதல் சென்சஸ் கணக்கெடுப்பின் போதுதான் இம்மக்கள் இந்து மத்திற்குள் சேர்க்கப்பட்டனர். மேலும் பார்ப்பன  இந்து மதத்தின் சமூகக் கொடுமைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் எழுச்சியான போராட்டங்களும் வெள்ளையர் காலத்தில்தான் துவங்கின. இடஒதுக்கீடு கோரிக்கை பிறந்து பின்னர் அமலாக்கப்பட்டதின் அடிப்படை இதுதான்.

இத்தகைய இடஒதுக்கீடும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் சமூக விடுதலைக்காகத் தரப்பட்டதல்ல; மண்டல் கமிசன் குறிப்பிடுவதைப் போல உளவியல் ரீதியில் சற்று ஆறுதலைத் தருவதற்குத்தான். எனினும் இடஒதுக்கீடு என்ற சொல்லே சமூக வாழ்க்கையில் இடமில்லாமல் போன உழைக்கும் மக்களின் அவலத்தை அதாவது பார்ப்பன இந்து மதத்தின் கொடுமையைத்தான் குறிக்கின்றது. ஆதலால் இடஒதுக்கீடு பற்றிப் பேசுவதற்குக் கூட இந்து மதவெறியர்களுக்கு அருகதை கிடையாது. சாட்டையில் ரத்தம் தெறிக்க அடிப்பவனே புண்ணுக்கான மருந்தை சிபாரிசு செய்ய முடியாதல்லவா?

ஆங்கிலேயர் வருவதற்கு முன் உழைக்கும் மக்களை இந்து மதத்திற்கு வெளியே வைத்து ஆதிக்கம் செய்தார்கள். ஆங்கிலேயர் வந்தபின் இந்து மதத்திற்குள்ளே அடைத்து ஆதிக்கம் செய்ய விரும்புகிறார்கள் – அதுவும் முசுலீம் எதிர்ப்பு அடையாளத்தோடு. அதனால்தான் இந்து மதத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதியினர் பெற்ற இடஒதுக்கீட்டை முசுலீம்  கிறித்தவ மதங்கள் தட்டிச் செல்கின்றன என்று அவதூறு செய்கின்றனர். இன்னொருபுறம் இடஒதுக்கீடே கூடாது என்பதும், இடஒதுக்கீட்டை எதிர்த்து வட இந்திய மேல்சாதியினர் நடத்தும் கலவரங்களை முன்னின்று  நடத்துவதும் இவர்கள்தான்.

எனவே தாழ்த்தப்பட்டோரைத் தாழ்த்தியதும், பிற்படுத்தப்பட்டோரை பின்தங்க வைத்ததும் முசுலீம்களோ, கிறித்தவர்களோ அல்ல என்பதற்கு விரிவான அகழ்வாராய்ச்சி தேவையில்லை. அதேபோல மதமாற்றம் என்பது அல்லா – இயேசுவின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடவே நடந்தது என்பதையும் விளக்கத் தேவையில்லை.

அடுத்து மதமாற்றத்தையும், இட ஒதுக்கீட்டையும் இணைத்து இந்துமத வெறியர்கள் கவலைப்படும் மோசடியைப் பார்போம். பணம், பால் பவுடர், வளைகுடா வேலை என்று பொருள் உலக ஆசை காட்டி மதம் மாற்றப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-இன் நீண்டநாள் கோரிக்கை. ஆனால், இடஒதுக்கீடு என்ற பொருள் உலக ஆசையைக் காட்டி இந்து மதத்தில் இருங்கள், மதம் மாறாதீர்கள் என்று கேட்பது மட்டும் ‘லவுகீக’ விசயமில்லையா? அதிலும் கவனியுங்கள், ”இந்து மதத்தின் சாதி – தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து உங்களுக்கு விடுதலை தருகின்றோம். மதம் மாறாதீர்கள்” என்று அவர்கள் கோரவில்லை. இங்கேயே (அடிமையாக) இருங்கள், அப்போதுதான் இடஒதுக்கீடு சலுகைகள் தரமுடியும் என்று மிரட்டுகிறார்கள். இப்படி ஆன்மீகத்தினால் அல்ல பொருளாசையைக் காட்டித்தான், சமாதானத்தினால் அல்ல கிரிமினல் மிரட்டல்கள் மூலமாகத்தான் இந்துமதம் வாழ்கிறது என்பது அதன் யோக்கியதைக்கு ஒரு சான்று.

இருந்த போதிலும் இந்து மதத்திலிருந்து மதம் மாறிவிடுவதால் மட்டும் சாதிய இழிவுகள் போய் விடாது என்பதும் உண்மைதான். பணவசதி இருந்தும் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்சாதித் தெருவில் குடியிருக்க முடியாது. அவர்கள் செய்துவரும் அடிமைத் தொழிலும் பெரிதாக மாறிவிடவில்லை. மதம் மாறியதால் கிடைக்க வேண்டிய சமத்துவம் கேவலம் சுடுகாட்டில் கூட கிடைக்கவில்லை. திருச்சி கிறித்தவ இடுகாடு அதற்கோர் உதாரணம். கலப்புத் திருமணம் செய்வதால் கட்டி வைத்து அடிக்கப்படுவதும் நிற்கவில்லை. முசுலீம்கள் வாழும் அரியானாவின் சுதாக்கா கிராமம் அதற்கோர் உதாரணம். சாதிகள் எங்களிடம் இல்லை என்று தம் மதங்களின் புனிதக் கதைகளைப் பேசிவரும் இசுலாமும், கிறித்தவமும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

ஆங்கிலேயர்கள் போகும்வரை தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், 1950-இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்து மதமல்லாத ஏனைய மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என மாற்றப்பட்டது. அதன்பின் 1956, 1990-ஆம் ஆண்டுகளில் முறையே சீக்கிய, புத்த மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டும் என அதே சட்டம் திருத்தப்பட்டது. காரணம் மதம் மாறுவதினால் அம்மக்களுக்கு சமூக, பொருளாதார முன்னேற்றம் கிடைத்து விடவில்லை என்பதால் இத்திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள். எனில் இந்த உண்மை தாழ்த்தப்பட்ட கிறித்தவ – இசுலாமிய மக்களுக்கும் பொருந்தும்.

பார்ப்பனியத்தின் ஆன்மாவான சாதி – தீண்டாமையால் நலிவுற்றுத் திணறும் இந்தியச் சமூகத்தில், எந்த மதமும் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. எனவே, அந்த ‘ஆன்மா’ ஒழிக்கப்படும்வரை தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் அவர்களுக்கு  இடஒதுக்கீடு – மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்கிறோம்.

தொடரும்

____________________________________________________________

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?

72

ரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி!

அழகான தென்னிலங்கை கடற்கரையில் பிகினி உடையுடன் வெளிநாட்டவர்கள் உலாவுகிறார்கள். கொழும்பில் நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இரசிகர்கள் நாட்டுப்பற்றுடன் குதூகலமாக ஆர்ப்பரிக்கிறார்கள். இத்தகைய எழிலான காட்சிகளுக்கு அப்பால் கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிந்திக்கிடக்கும் இரத்தமும், இன்னமும் மறையாத மனிதப் பிணங்களின் கவுச்சி நாற்றமும் இதே நாட்டில்தான் இருப்பதென்பது  என்ன வகை முரண்?

இரு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியிலிருந்து புலிகளும் மக்களும் சிங்களப் படை தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பின்வாங்குகிறார்கள். நகரத்தில் இருக்கும் ஐ.நா சேவைக் குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று இலங்கை அரசு எச்சரிப்பதால் அவர்களும் கிளம்புகிறார்கள். ஐ.நா கட்டிட வளாகத்தின் இரும்பு கேட்டு பொத்தல்களில் கையை நுழைத்து “போகாதீர்கள்” என்று மக்கள் கதறுகிறார்கள். ஆனாலும் ஐ.நா அங்கிருந்து கிளம்புகிறது.

கிளிநொச்சியிலிருந்து வட கிழக்கு நோக்கி மக்களும் புலிகளும் இடம் பெயர்கிறார்கள். கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர். எந்த அடிப்படை வசதிகளுமின்றி நடைப்பிணங்களாய் செல்கிறார்கள். எந்த இடமும் பாதுகாப்பானதில்லை. எல்லா இடங்களிலும் ஷெல் அடிக்கிறது இலங்கை இராணுவம். பங்கரிலிருந்து அருகில் இருக்கும் அம்மாவின் பிணத்தை பார்த்து இளம்பெண்கள் கதறுகிறார்கள். பங்கரில் பதுங்கிக் கொண்டு வீடியோ எடுப்பவரை “வேண்டாம் வந்து பதுங்குங்கள்” என்று கத்துகிறார்கள். அழுவதற்கும் சீவனற்ற குரலில் அவர்கள் எழுப்பும் அவலக்குரல் நமது காதை அறுக்கிறது.

முதல் ஷெல் அடித்ததில் அடிபட்டு கிடக்கும் மக்களை உடன் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அடுத்த பத்து, இருபது நிமிடத்தில் இரண்டாவது ஷெல் அடிக்கும். காப்பாற்ற முயன்றால் அந்த நபர் காலி. பொறுத்திருந்து அரை மணிநேரத்திற்கு பிறகு சென்றால் அடிபட்டவர் இரத்தம் இழந்து இறந்து போயிருப்பார். காயம்பட்டவரை காப்பாற்றக்கூட இயலாமல் அழுது கொண்டு வேடிக்கை பார்க்கும் இந்த துயரத்தின் அவலம் யாரும் சகிக்க முடியாத ஒன்று.

தனது மகனை காப்பாற்ற முடியாத தந்தை கதறி அழுகிறார். இனி தனது வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் தன்னைத் தொடரும் என்கிறார். இலங்கை அரசால் பாதுகாப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும், மருத்துவமனைகளிலும் கூட ஷெல்கள் தொடர்ந்து தாக்குகின்றது. மருத்துவமனை என்றால் பெயருக்குத்தான். திறந்த வெளியில் மரக்கறிகளை கூறு கட்டி விற்பதைப் போல மனித உடல்கள் கொஞ்சம் உயிருடன் கொஞ்சம் மருந்துடன், இல்லை எதுவில்லாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆறு வயது பையனது காலை மயக்க மருந்து இல்லாமல் அறுத்து எடுத்தது குறித்து வாணி குமாரி வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்கால் வரை மருத்துவமனை பயணம் செய்த இடங்களிலெல்லாம்  சேவை செய்தவர் கடைசியில் இனி எதுவும் செய்ய இயலாது என்று மருத்துவருடன் வெளியேறியதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார். மருந்து இல்லாமல், அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனையின் நிலைமையை விவரிக்கும் அந்த நிர்வாகி அடுத்த காட்சியில் இலங்கை இராணுவத்தின் குண்டடிபட்டு பிணமாக கிடக்கிறார்.

இறுதிப் போரில் இரண்டு இலட்சம் மக்கள் மாட்டிக் கொண்ட நிலையில் அந்த எண்ணிக்கையினை வெறும் பத்தாயிரம் என்று இலங்கை அரசு சொல்கிறது. காரணம் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொல்வதற்கும் கொன்றதை மறைப்பதற்கும் அந்த பொய்க்கணக்கு கூறப்படுகிறது.

படத்தின் இடையிடையே மேற்குலகின் மனிதர்கள் எது போர்க்குற்றம் என்பதை நமக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இந்த பாடம் தெரிந்தவர்கள் அந்த குற்றம் நடக்கும் போது எங்கே போனார்கள் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. இறுதிப் போரில் இலங்கை அரசு மட்டுமல்ல புலிகளும்தான் குற்றமிழைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த இன அழிப்புப் போரை புலிகள் ஆரம்பிக்கவில்லை என்பதையும், அவர்கள் தற்காப்பு நிலையில் இருந்ததையும் இதற்த்கு மேல் எல்லா மேலை நாடுகளும் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடைசெய்திருக்கும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்னவாக இருக்கும்?

ஆனால் போர்க்குற்றம் புரிந்திருக்கும் இலங்கை அரசு இந்த விசயத்தை வைத்து மட்டும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறது. இந்தப் போரைப் பொறுத்த வரை இலங்கை அரசு, புலிகள் இருவரையும் ஒரே அளவில் வைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? புலிகள் குற்றமிழைத்திருப்பது உண்மையாகவே இருக்கட்டும். எனினும் இது தற்காப்பு நிலையில் எந்த பலமும் இன்றி போராடும் கையறு நிலையில் எழும் குற்றம்.

ஆனால் இலங்கை அரசோ எல்லா படையணிகளையும், ஆயுதங்களையும், இந்தியா மற்றும் மேற்குலகின் ஆதரவோடும் சட்ட பூர்வமாகவே குற்றமிழைத்திருக்கிறது. இரண்டும் ஒன்றாகாது. மேலும் புலிகள் ஏற்கனவே பயங்கரவாதிகள் என்று உலகநாடுகளால் தண்டிக்கப்பட்டவர்கள். இலங்கை அரசோ இந்தக் கணம் வரை குற்றவாளி என்று தண்டிப்பது இருக்கட்டும், ஒரு சட்டப்பூர்வ அறிக்கை கூட ஐ.நா, மேற்குலகில் இருந்து வரவில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகளில் சிறை பிடிக்கப்பட்ட புலிகள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகின்றது. கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக உட்கார வைத்து ஏதோ காக்கா குருவிகளை சுட்டு பழகுவது போல இலங்கை இராணுவ மிருகங்கள் சிங்களத்தில் அரட்டை அடித்தவாறே சுட்டுக் கொல்கின்றன. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்து கொல்கிறார்கள். காலால் பெண்ணுறுப்புகளை எட்டி உதைக்கிறார்கள். நிர்வாணமான பெண்ணுடல்களை டிரக்கில் ஏற்றும் போது “இதுதான் நல்ல ஃபிகர்” என்று மகிழ்கிறார்கள். இத்தகைய கொடூரமான மனநிலை கொண்டவன்தான் சராசரி சிங்கள இராணுவ வீரன் என்றால் முள்ளிவாய்க்காலின் அவலம் நாம் நினைத்ததை விட மிகக் கொடூரமாக இருக்குமென்பது மட்டும் உறுதி.

பாதுபாப்பு வளையங்களில் கைது செய்யப்பட்ட மக்களில், பெண்கள் பலர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதை ஒரு பெண்ணே வேறு வார்த்தைகளில் கூறுகிறார். பிணங்களையே வதைக்கக்கூடிய அந்த மிருகங்கள் உயிருடன் இருப்போரை என்ன செய்திருக்குமென்பது புரியாத விடயமல்ல.

சரணடைந்த புலிகளின் உயர்நிலைப் பொறுப்புகளில் இருந்த கேணல் இரமேஷ், நடேசன், புலித்தேவன் போன்றோர் கைது செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரிசையாக இருக்கும் புலிகளின் பிணங்களில் இரத்தச் சுவடோடு தெரியும் துப்பாக்கி துளைகள் அருகில் இலக்கு பார்த்து சுடப்பட்ட ஒன்று என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இத்தகைய குற்றங்கள் எதுவும் புலிகள் செய்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. அதிகபட்சம் புலிகள் தப்பி போகும் மக்களை சுட்டார்கள், சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தார்கள் என்றுதான் அதுவும் இலங்கை அரசு கொடுத்திருக்கும் காட்சி மூலம்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

இறுதியில் தென்னை மரத்தில் கட்டப்பட்ட ஒரு புலிப் போராளி சித்திரவதை செய்து கொல்லப்படும் காட்சி முத்தாய்ப்பாக இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு சான்று பகர்கிறது. ஆனால் இவை எதையும் இலங்கை இரசு ஏற்கவில்லை. மேலும் போர் முடிந்த சில நாட்களில் வந்த பான்கிமூன் அகதி முகாமில் ஒரு பதினைந்து நிமிடம் நின்று போஸ் கொடுத்து விட்டு பின்னர் ஹெலிகாப்டரில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு சென்றுவிட்டார். தற்போது வந்திருக்கும் ஐ.நா குழுவின் அறிக்கை கூட மேற்கொண்டு எதனையும் செய்யும் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

ஆரம்பக் காட்சியில் கிளிநொச்சி ஐ.நா அலுவலக கேட்டில் மக்கள் கதறும் காட்சியுடன் படம் முடிகிறது. இனியாவது சர்வதேச சமூகமும், ஐ.நாவும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

இந்தக் காட்சிகள் அனைத்தும் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்த வரை ஏற்கனவே பார்த்திருக்கும் ஒன்றுதான். ஆனால் முதன்முறையாக இந்தப் படத்தை பார்ப்பவர் எவரும் வலி நிறைந்த அதன் காட்சிகளின் நீட்சியாக மாறிவிடுவார்கள். இரும்பு மனம் படைத்தோரையும் இளக்க வைத்திடும் இந்தக் காட்சிகளைக் கண்டு துயரப்படாதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அந்தத் துயரம் வெறுமனே மனிதாபிமானமாக கரைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது என்பது ஒரு அச்சுறுத்தும் யதார்த்தமாக இருக்கும் போது அந்தக் கரைந்து போதல் இயல்பான ஒன்றுதானோ? ஏன்?

வெறுமனே உச்சு கொட்டுவதும், உயிரிழந்த ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அஞ்சலி செலுத்துவது மட்டும் போதுமானதாக இருக்க முடியுமா? பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளின் மூலம் பெற வேண்டிய, செய்ய வேண்டிய அரசியல் கடமைகள் என்ன என்பதுதான் பிரச்சினை. அதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச சமூகம் தண்டிப்பதற்கு என்ன தடை? ஐ.நா மற்றும் மேற்குலகின் அரசாங்கங்களிடம் தொடர்ந்து இது குறித்து பிரச்சாரம் செய்தால் போதுமானது என்பது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நிலை. இதன் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை. ஆனால் இது மட்டுமே போதுமென்பது சரியல்ல. சில பல அரசுகள், நாடுகள், பெரிய மனிதர்கள் இவர்களை வைத்தே அனைத்தையும் முடித்து விடலாம் என்பது மக்களை நம்பாத பேதமை மற்றும் காரியவாத நிலை.

ஆரம்பம் முதலே புலிகள் மக்களை பார்வையாளர்களாகவே வைத்திருந்தார்கள். மக்களை பங்கேற்பவர்களாக மாற்றுவதற்கு அவர்கள் என்றுமே முயன்றதில்லை. இராணுவ பலம் ஒன்றின் மூலமே விடுதலையை பறித்து விடலாம் என்ற புலிகளது அணுகுமுறை அதை விட பெரிய பலமான மக்கள் சக்தியை ஒரு மந்தைகளைப் போல நினைத்து ஒதுக்கியது. அதனால்தான் ஈழத்திற்காக எழுந்த பல்வேறு குரல்கள் புலிகளால் ஒடுக்கப்பட்டன. இதில் துரோகிகளை விடுத்துப் பார்த்தால் விடுதலைக்கு உண்மையிலேயே பாடுபட்டவர்கள் அதிகம். அரசியல் ரீதியில் அணிதிரண்டு போராட வேண்டிய மக்கள் புலிகளுக்கு சில உதவிகள் செய்ய மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

விடுதலை என்பது மக்கள் தமது சொந்த உணர்வில் போராடிப் பெற வேண்டிய இலட்சியம். அதை சில ராபின்ஹூட் வீரர்கள் மட்டும் சாகசம் செய்து பெற முடியாது. புலிகளின் இந்த தவறு இன்று புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கணிசமாக செல்வாக்கு செலுத்துகிறது. சமீபத்தில் இலண்டனில் அருந்ததிராய் பேசிய பொதுக்கூட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருக்கிறார்கள். இதில் பாதிப்பேர் வெள்ளையர்கள், 25% இந்தியர்கள், மீதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய அந்த நண்பரிடம் நான் ஆர்வமாக கேட்டேன், ஈழத்தமிழர்கள் எத்தனை பேர் என்று.

அதற்கு அவர் அதைச் சொல்வதற்கு குற்ற உணர்வாக உள்ளது என்று கூறிவிட்டு தலைகளை எண்ணிப் பார்த்து பெயர்களோடு சொன்னார். அதிக பட்சம் 15 பேர் இருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய் இலங்கை பிரச்சினை குறித்தும், சர்வதேச சமூகத்தின் மௌனம் குறித்தும் விரிவாகவே பேசியிருக்கிறார். எனினும் இந்தக் கூட்டத்தை ஈழத்தமிழர்கள் ஏன் புறக்கணித்தார்கள்? இல்லை அவர்கள் புறக்கணிக்கவில்லை. அதில் பங்கேற்க வேண்டுமென்பது அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை.

ஈராக் மீதான போரை எதிர்க்கும் மேற்குலக மக்களின் போராட்டம், பாலஸ்தீன் போராட்டம், மே தின ஊர்வலம் என்று எதிலுமே ஈழத்தமிழர்களை பெருந்திரளாக பார்க்க இயலாது. அவர்கள் பொது வெளிக்கு வருவது ஈழப்பிரச்சினைக்கு மட்டும்தான். இப்படி சர்வதேச மக்களது உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காமல், அப்படி ஒரு தோழமையை ஏற்படுத்தாமல் சர்வதேச அரசாங்கங்களுக்கு எப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும்?

மேலும் சர்வதேச அரசாங்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய நலனுக்காகவே செயல்படுகின்றன. அத்தகையவர்களிடம் எந்த விமரிசனமுமின்றி என் பிரச்சினையை மட்டும் தீர்த்து வையுங்கள் என்று மன்றாடுவது பாமரத்தனமானது மட்டுமல்ல சந்தர்ப்பவாதமானதும் கூட. ஆனால் சர்வதசே மக்களின் ஆதரவோடு நாம் போராடும் போது அது சரியான அரசியல் கடமையை கொண்டிருக்கிறது. நாம் இலட்சியத்தில் வெற்றி பெறுவது என்பது சரியான வழிமுறையைக் கொண்டிருக்கிறோமா என்பதுடனும் சம்பந்தப்பட்டது. ஏனெனில் விடுதலை என்பது திட்டவட்டமான வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதற்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

அடுத்து தமிழக நிலையைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் முன்னணியாளர்கள் இந்தப் போர் நடந்த வரலாற்றுச்சூழலை நினைவு கூற வேண்டும். இலங்கை அரசின் இரக்கமற்ற போரை இந்திய அரசு உற்ற துணைவனாகவும், வழிகாட்டியாகவும் நின்று நடத்தியது. இந்திய அரசை ஏற்றுக் கொண்டே இங்கிருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை எடுத்துப் பேசின. அந்த வகையில் மக்களிடையே எழுந்த தன்னெழுச்சியான போராட்டத்தை கருவறுத்தன.

பாராளுமன்றத் தேர்தலில் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறலாம் என்பதையே அ.தி.மு.கவும், பா.ம.கவும், ம.தி.மு.கவும் அப்போது முயன்றன. ஈழ மக்களின் பச்சையான எதிரி அப்போது ஈழத்தாயாக போற்றப்பட்டார். இப்போதும் புகழப்படுகிறார். புலிகளின் ஆதரவாளர்களோ, இல்லை தமிழின ஆர்வலர்களோ இந்தப் பிரச்சினையை சில பல லாபி வேலைகள் செய்து, சில பெரிய மனிதர்களை பார்த்து முடித்து விடலாம் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைக்கிறார்கள்.

சில கட்சித் தலைவர்கள் மனது வைத்தால் ஈழம் கிடைத்து விடும் அல்லது ஈழப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற அணுகுமுறை எவ்வளவு இழிவானது, மலிவானது? அந்த அணுகுமுறைதான் தற்போது பெரியார் தி.கவும், நாம் தமிழர் சீமானும் அம்மாவை மனமுருக பாராட்டும் கடைக்கோடி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்கு ஆதரவளித்தால் இவர்கள் மோடியையும், பால்தாக்காரேவையும், புஷ்ஷையும் கூட மனம் குளிர ஆதரிப்பார்கள். குஜராத் முசுலீம்களின் ஜீவ மரணப் போராட்டம், காஷ்மீரில் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் தொடரும் மக்களின் போராட்டம், தண்டகாரன்யாவில் நாடோடிகளாக அலைந்து கொண்டும் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பழங்குடியின மக்கள் இதெல்லாம் இந்த தமிழின ஆர்வலர்களுக்கு கிஞ்சித்தும் தேவையில்லாத விசயம். இவர்கள் யாரும் தமிழக மக்களை இலட்சக்கணக்கில் கூட வேண்டாம், ஆயிரக்கணக்கில் திரட்டி அரசுகளுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை கொடுக்கலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். அதனால்தான் தொடர்ந்து தேவன்களுக்காகவும், தேவதைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ ஆவணப்படம் நமது அரசியல் வழிமுறையில் சரியானதை ஏற்கவும், தவறானதை நிராகரிக்கவும் பயன்பட வேண்டும். மாறாக அது வெறுமனே மனிதாபிமான இரங்கலாக சிறுத்துப் போனால்  எந்தப் பயனுமில்லை. இந்த படத்தைப் பார்த்து நீங்கள் எவ்வளவு கண்ணீர் சிந்துகிறீர்கள் என்பதை விட செய்ய வேண்டிய அரசியல் கடமை குறித்தும் அதில் நீங்கள் பங்கேற்கும் துடிப்பும்தான் தேவையானது.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே?

17

முகமது யூனுஸ் - கிராமீன் வங்கி
முகமது யூனுஸ்

2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பங்களாதேஷைச் சேர்ந்த கிராமின் வங்கியின் நிறுவனர் முகமது யூனுஸ் அப்போது ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார் – “நான் உலகமயமாக்கலை ஆதரிக்கிறேன். இது தான் ஏழைகளுக்கான சரியான வாய்ப்பை வழங்குகிறது என்று கருதுகிறேன். எமது வங்கியின் குறுங்கடன்களின் மூலம் ஏழ்மையை அறவே ஒழித்து விட முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். ஏழ்மை ஒழிப்பு ஒன்று தான் தீவிரவாதப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று கருதுகிறேன்”

குறுங்கடன்களின் முன்னோடி என்று கருதப்படுபவர் யுனூஸ். அவரது கிராமின் வங்கி வழங்கிய குறுங்கடன்கள் மூலம் பங்களாதேஷில் பலரை ஏழ்மை நிலையிலிருந்து உயர்த்தியிருக்கிறார் என்றும், ஏழ்மை ஒழிப்புக்கு இது தான் மிகச் சிறந்த வழியென்றும் சர்வதேச அளவில் முதலாளித்துவ ஊடகங்கள் இவரை போற்றிப் புகழ்ந்து வந்தன. கிராமின் வங்கியின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளால் கவரப்பட்டு, இப்போது சர்வதேச அளவில் பல்வேறு வங்கிகளும் ‘வறுமை ஒழிப்பில்’ குதித்துள்ளன. நமது மகளிர் சுய உதவிக் குழுக்களின் ரிஷி மூலமும் இதுதான்.

பன்னாட்டு வங்கிகளுக்கு  உலக ஏழைகள் மேல் ஏற்பட்ட இந்த திடீர் பாசத்தின் மதிப்பு மட்டும் சுமார் 270 லட்சம் கோடிகள் (60 billion USD) என்று டெக்கான் க்ரானிக்கலில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இவர்கள் ஆப்ரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் வறுமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டு ஏழைகளை கடைத்தேற்றுவதில் மும்முரமாக இருப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் சொல்கின்றன.

தனிநபர்களுக்கோ அல்லது சுய-உதவிக் குழுக்களுக்கோ சிறிய அளவிலான தொகையைக் கடனாகக் கொடுத்து, அவர்களை சுயதொழில் செய்ய ஊக்குவிப்பதன் மூலம், அவர்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவது தான் குறுங்கடன்களின் நோக்கம் என்றும், ஏற்கனவே இதை பங்களாதேஷில் சாதித்துக் காட்டியது தான் கிராமின் வங்கியின் சாதனை என்றும் ஊடகங்கள் சொல்கின்றன. இந்த வகையில் வறுமையை ஒழித்த சாதனைக்காகத் தான் மொஹம்மத் யுனூஸுக்கு நோபல் பரிசு வழங்கபட்டது.

ஆனால் எதார்த்தத்தில் நிலவரங்கள் முற்றிலும் வேறு கதையைச் சொல்கின்றன.

மே மாத மத்தியில் பங்களாதேஷில் இருந்து வெளியாகும் ‘ஷப்தஹிக் 2000’ என்கிற ஏடு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. குறுங்கடன் எனும் பெயரில் சுமார் 30 – 40 சதவீதம் வரை அநியாய வட்டி விதிக்கும் கிராமின் வங்கி, தவணையைத் திருப்பிச் செலுத்த இயலாத ஏழைகளை அடியாட்களை வைத்து மிரட்டுவதையும் அப்படியும் தவணை தரமுடியாமல் தவிப்பவர்களின் கால்நடைகளைக் கவர்ந்து வருவதையும் பல ஆண்டுகளாக வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. மேலும், ஹிலாரி கிளின்டனின் பெயரில் ஹிலாரி ஆதர்ஷா என்கிற திட்டத்தைத் துவங்கிய கிராமின் வங்கி, ரிஷி பால்லி எனும் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கேயுள்ளவர்களுக்கு குறுங்கடன்கள் வழங்கி அவர்கள் வாழ்நிலைமைகளை முன்னேற்றி அந்தக் கிராமத்தையே ஒரு முன்னுதாரணமான கிராமமாகத் தாங்கள் மாற்றி விட்டதாக கிராமின் வங்கி பீற்றிக் கொண்டிருந்தது.

ஆனால் உண்மையில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த வழியில்லாமல் அக்கிராமத்தை விட்டே பலரும் ஓடியிருக்கிறார்கள் என்றும் எஞ்சியவர்கள் பசியாலும் பட்டினியாலும் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் விபச்சாரத்தில் இறங்க வேண்டிய நிர்பந்தத்தையும் கிராமின் வங்கியின் கந்து வட்டிக்கடன்கள் உண்டாக்கியதையும் ஷப்தஹிக் அம்பலப்படுத்தியது.

இது கிராமின் வங்கியின் கதை மட்டுமல்ல. நைஜீரியாவில் கிராமின் வங்கியைப் போன்றே குறுங்கடன் வழங்கும் LAPO (Lift above poverty organization) என்கிற வங்கி 100 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. மெக்சிகோவின் கம்பார்டமோஸ் என்கிற குறுங்கடன் வங்கியோ 70 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. தமது முதலீடுகளை ‘சமூக முதலீடு’ என்று கூறிக் கொள்ளும் இவ்வங்கிகள், எதார்த்தத்தில் கார்பொரேட் கந்து வட்டி கும்பலாகத் தான் செயல்பட்டு வருகின்றது.

இந்தியாவின் கிராமப்புரங்களில் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒரு வலுவான வலைப் பின்னலை ஏற்படுத்தி ஆழ ஊடுருவியிருக்கும் என்.ஜி.ஓக்கள் மூலம் கோடிக்கணக்கானோருக்கு இது போன்ற குறுங்கடன்கள் அளிக்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட சுயதொழில் துவங்க இந்தக் கடன்கள் பயன்படும் என்று சொல்லப்பட்டாலும், உலகமயமாக்கலின் விளைவாய்  கைவினைப் பொருட்களுக்கென்று சந்தையே இல்லாத ஒரு எதார்த்த நிலையில், இது அவசர ஆத்திரத்திற்கும் அத்தியாவசிய மருத்துவச் செலவுகளுக்குமே பயன்படுகிறது. திருப்பிச் செலுத்த இயலாத அநியாய வட்டிக்குத் தரப்படும் இக்கடன்களை வசூலிக்க குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் அடியாட்களையே பயன்படுத்துகிறார்கள்.

இரக்கமற்ற இந்த கார்பொரேட் கந்து வட்டி கும்பலின் கொடுமைகளையும் அதனால் விளைந்த அவமானங்களையும் தாங்க முடியாமல் ஆந்திர மாநிலத்தில் மட்டுமே 54 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இது அரசு காட்டும் கணக்கு தான் – எனவே உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாகவே இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தவணை கட்டமுடியாத ஒருவரின் 16 வயதே நிரம்பிய பெண்ணை விபச்சாரம் செய்தாவது பெற்றோர் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தியிருக்கிறார்கள். அவமானம் தாளாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். http://www.ibtimes.com/articles/77043/20101029/microfinance-deaths-sks-microfinance-spandana-asmitha-share-l-t-andhra-suicides-india-microfinance-d.htm

ஏழைகளைக் கசக்கிப் பிழிவதன் மூலம் ஏற்பட்ட குறுங்கடன் சந்தையின் அபரிமித வளர்ச்சியைக் கண்டு நாவில் எச்சில் ஊறிய சர்வதேச நிதிமூலதன கும்பலும் இப்போது இத்துறையில் வலுவாகக் காலூன்றியிருக்கிறது. LAPO அமைப்பின் பங்குதாரராக டச்சு வங்கி, கால்வர்ட் பவுன்டேஷன் போன்ற நிதிமூலதன முதலைகளே இருக்கிறார்கள். இரண்டாயிரத்தின் பிற்பகுதியில் உலகைக் கவ்விய சர்வதேசப் பெருமந்தத்தை அடுத்து, தாம் சூதாடிய களங்களையெல்லாம் சூரையாடி நாசப்படுத்திய நிதிமூலதனச் சூதாடிகள் இப்போது ஏழை நாடுகள் மீதும் வறியவர்கள் மீதும் கண்பதித்திருக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, விவசாயப் பொருட்களின் ஊகபேர வர்த்தகம், கனிமச் சந்தையின் ஊகபேர வர்த்தகம் என்று ஒவ்வொரு துறையையும் பெரும் வெட்டுக்கிளி கூட்டம் போல் தாக்கும் நிதிமூலதன சூதாடிகள், ஒவ்வொன்றாக நிர்மூலமாக்கி விட்டிருக்கிறார்கள். இந்தக் கும்பலின் லாபவெறியினால் நிர்மூலமாகி விட்ட ரியல் எஸ்டேட் பங்குச்சந்தை மற்றும் பிற ஊகபேர வர்த்தகச் சந்தைகள் அதிலிருந்து மீண்டெழும் வழி தெரியாமல் தவிக்கின்றன. இப்போது அனைத்தையும் கடந்து தமது நேரடி இலக்காக மூன்றாம் உலக நாடுகளையும் ஏழைகளையும் மாற்றியிருக்கிறார்கள். சர்வதேச நிதிமூலதனம் ஒரு சுருக்குக் கயிறு போல மொத்த உலகையும் இறுக்கி கொத்துக் கொத்தாய் அப்பாவி ஏழை மக்களைக் கொன்று குவித்து வருவதைத் தான் முதலாளித்துவ ஊடகங்கள் ஏழ்மை ஒழிப்பு என்று அலங்காரமான வார்த்தைகள் மூலம் நம்மிடம் பசப்புகின்றன.

குறுங்கடன்கள் மூலம் ஏழ்மையை ஒழிப்பதாகச் சொல்லிக் கொள்ளும்  இவர்கள் எதார்த்தத்தில் ஏழைகளையே ஒழித்துக் கட்டுகிறார்கள் என்பது இப்போது பட்டவர்த்தனமாக அம்பலமாகியிருக்கிறது. மூலதனத்திற்கு எல்லைகள் இல்லை என்பது தான் உலகமயமாக்கலின் அடிப்படை என்கிறார்கள் முதலாளித்துவதாசர்கள்;  அதனால்தான் அதற்கு இதயமும் இல்லை என்பதை இச்சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

நண்பர்களே இந்த யூனூஸ் நோபல் பரிசு வாங்கிய போது வறுமை ஒழிப்பு புரட்சி என்று பிரம்மாண்டமான விளம்பரத்தை உலக ஊடகங்கள் கொடுத்திருந்தன. இந்தியாவிலும் அதே மாதிரி புரட்சியை கொண்டு வரவேண்டுமென்று அப்துல் கலாம் முதல் அண்ணா ஹசாரே வரை பலரும் பிதற்றியிருக்கக் கூடும். ஆனால் இறுதியில் இந்த அமைதியான ஏழ்மை ஒழிப்பு புரட்சியின் முகம் அம்பலமாகியிருக்கிறது. இனி நோபல் பரிசு என்றால் உடனே வாய் பிளக்காமல் இருக்கவாவது அப்துல்கலாம் டைப் நடுத்தர வர்க்கம் முயலுமா?

மேலும் வாசிக்க

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: