privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?

சென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?

-

ர்மமான முறையில் மரணமடைந்த எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவி மோனிஷாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (27-01-2016) உத்தரவிட்டிருந்தது. இன்று (28-01-2016) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் மாணவி மோனிஷாவின் உடலை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் (அவரது சொந்த ஊர்) அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்யவிருந்தனர்.

இறந்து போன தங்களுடைய சக மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காகவும், தங்களது பிரச்சனை குறித்து வழக்குரைஞர்களை கலந்து பேசுவதற்காகவும் கள்ளக்குறிச்சியிலிருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்றை காலை சென்னை வந்தனர். அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்க புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாணவர்களை ஊரிலிருந்தே பின் தொடர்ந்து வந்த போலீசு மண்டபத்துக்கு வந்து இறங்கியவுடன் அனைவரையும் தடுப்புக் காவலில் கைது செய்வதாக அறிவித்திருக்கிறது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர் மில்டன் இதனைக் கடுமையாக ஆட்சேபித்து உதவி கமிஷனர் புகழேந்தியுடன் கடுமையாக வாதிட்ட பின்னரும் மாணவர்களை விடுவிக்க முடியாது என்று போலீஸ் அடாவடித்தனமாக மறுக்கிறது.

மூன்று மாணவிகளை கொன்றது மட்டுமின்றி அவர்களுடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைக் கூட தடுக்கும் அளவிற்கு இரக்கமற்ற கொடிய கூலிப்படையாக இந்த அரசும் போலீசும் செயல்படுகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

போலீசின் இந்த சட்டவிரோத கைதுக்கு எதிராக உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இன்று மதியம் விசாரணைக்கு வரும்.

தகவல்
கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
28-01-2016 காலை 10.30 மணி

  1. தான் அனுபவிக்க முடியாதவற்றையெல்லாம் நம் குழந்தைகள் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பசியோடு பழைய கஞ்சியை குடித்தும் பணத்தை சேர்த்து வைத்து பிள்ளைகளை படிக்க வைத்து அழகு பார்க்கிறார்கள் பெற்றோர்கள்,,

    பிள்ளைகள் படிக்க
    பட்டினியை சுமக்கும்
    தாய்மார்கள் ,
    ஆங்காங்கே
    அலைந்து திரியும்
    மேகமானவர்கள் ,
    காடுகளையும்
    மலைகளையும் தாண்டி
    உழைப்பில் நீரெடுத்து
    பசுமை பிள்ளைகள்
    வாடாமல் இருக்க
    வாழ்பவர்கள்,,

    பள்ளிக்கல்வியை முடித்ததும் எதையோ சாதித்தது போல சந்தோசமாய் புதிய சரணாலயத்தில் தஞ்சம் புகுந்த பறவைகளாய் கல்லூரியில் காலெடுத்து வைக்கிறார்கள் மாணவர்கள்,பதவி உயர்வு பெற்ற மனிதர்களை போல் ஆனந்தமாய் நண்பர்களோடு உலா வருகிறார்கள்,,

    காற்றில் அசையும்
    இலைகளாய்
    கல்லூரி மாணவர்கள் ,
    கனவுகளோடு
    கல்லூரி வாசலில்
    கூட்டம் கூட்டமாக
    துளிர்த்திடுவார்கள் ,
    உதிர்ந்து விடாத
    நம்பிக்கையுடைய
    வயிற்றில் வந்தவர்கள் ,,,
    ஆசைகளில்
    மிதந்து வரும்
    அலைகள் அவர்கள் ,
    உயர்ந்த
    லட்சிய கரைகளை தேடி
    உறுதியோடு போராட
    பிறந்தவர்கள் ,
    ஆம் இப்போது
    அவர்கள் இறந்தவர்கள் ,,

    தவறுகள் நடக்கும்போது மனிதம் உள்ள மனிதன் என்ற வகையில் அதை தட்டி கேட்போம் அதே போலதான் மாணவர்களும் கல்லூரியின் முறைக்கேடுகளை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள் அப்படி கேட்பவர்களையெல்லாம் குறித்து வைத்து துன்புறுத்தி பழியை தீர்த்துக் கொள்கிறார்கள் கல்லூரியின் அடியாட்கள். வேறு வழியின்றி அதிகாரிகளிடம் முறையிடுகிறார்கள் மாணவர்கள், மக்களுக்காக என்று சொல்லிக்கொண்டு நாடகம் ஆடிக்கொண்டிருக்கும் அரசாங்க அதிகாரிகள் தனியார் கல்லூரிகளிடம் பணத்தை வாங்கிக் கொட்டிக்கொண்டு எதற்கும் நடவடிக்கை எடுக்காமல் ஜடப்பொருளாய் மறைந்திருந்து சொகுசு வாழ்கையில் வேடிக்கை பார்க்கிறார்கள் , கடைசியாக களத்தில் போராட்டத்தை தொடங்குகிறார்கள் மாணவர்கள் ( மக்கள்) , ஆனால் நியாயத்துக்காக போராடுபவர்களின் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது ஒன்னு உசுரு போகும் இல்லையென்றால் வாழ்வாதாரங்களை அழித்து கஷ்டப்படும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள், இப்படி செய்வதால் மற்றவர்களையும் எந்த விசயத்துக்காகவும் போராடாமல் இருக்கும்படி பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்,இந்த நிலைதான் svs கல்லூரி மாணவர்களுக்கும் நடந்திருக்கிறது

    தரைமேல்
    போராடுகிறார்கள்
    என்று
    தண்ணீரில்
    தள்ளவிட்டார்களோ ?
    யார் அந்த பாவிகள்
    என்று கேட்டால் ,
    “கேடுகெட்ட
    இந்த அரசுதானையா”
    என்று சொல்லுமே
    அந்த ஆவிகள் ,,,

    ஆனால் எந்த அளவுக்கு பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் முயற்சி எடுத்தார்களோ ?அதை அப்படியே நரித்தனமாக பயன்படுத்திக் கொண்டு மனிதம் இல்லாமல் வேலை வாங்கித்தருவதாய் சொல்லி ஆசைகாட்டி லாபத்தில் மூட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் தனியார் கல்லூரிகள் , ஒரு வேலை சந்தர்ப்ப சூழ்நிலையால் பணம் கட்ட தவறும்போது பாம்புகளை போன்று விஷத்தை கக்கி மாணவர்களின் மன நிலையை கெடுப்பது மட்டுமில்லாமல் கொன்று குவித்து விடுகிறார்கள் . அந்த குடிசையில் கனவுகளோடு குடியிருக்கும் பெத்தவர்கள் பிள்ளைகளின் மரணச்சேதி கேட்டதும் அந்த உள்ளம் என்ன பாடுபடும் ,,

    எத்தனையோ
    மகிழ்ச்சி
    ஒலிகளை தாண்டி ,
    அழுகின்ற சத்தம்
    கேட்கிறது ,,,
    “பள்ளத்தை கண்டால்
    பயப்படுமே
    என்புள்ளை ” என்கிறது ,

    என்ன செய்வது இந்த சட்டம் , நீதிமன்றம் , அரசு எதுவுமே உழைக்கும் மக்கள் ஏழைகளுக்காய் இல்லையே இருந்திருந்தால் என்றோ அவர்கள் வளமான வாழ்கையை வாழ்ந்திருப்பார்களே ,அவர்களின் குறைகளுக்கு தீர்வு கிடைத்திருக்கும்,,

    எங்கு திரும்பினாலும்
    பணக்கார மனங்களின் மோசடி
    ஏழை உள்ளம்
    என்ன செய்யும் சொல்லுங்கள் ,
    எதிர்த்து நின்றாலும்
    அதிகார பலத்தால்
    அடித்து நொறுக்குகிறார்களே
    உடலெல்லாம்
    நசுங்கிய பிறகுதான்
    உயிர் கூட
    பிரிந்தது தெரியுமா ??,,,

    குற்றம் செய்தவர்கள்தான் அதிகாரிகளாகவும் அமைச்சர்களாகவும் பதவி வகிக்கிறார்கள் அதை தண்டிக்க வேண்டிய நீதிமன்றம் பணத்தை கொட்டி கொடுப்பவருக்காய் தீர்ப்பு சொல்லுகிறது,,

    குற்றங்களை சரியாய் தண்டிக்கவில்லை என்று உரிமையுள்ள நம்மக்கள் களத்தில் போராடினால் அவர்களை திட்டமிட்டு மிருகங்களை வேட்டையாடுவதுபோல் அடித்து நொறுக்குகிறார்கள்,,,

    அரசு ஆயுதங்கள்
    எல்லாம்
    அநீதிகளின் பிடியில்
    நீதிகள் எப்படி
    உயிர் பிழைக்குமையா ?,
    அதனால்தான்
    குறைகளுக்காய்
    போராடும்
    குடிசை மக்களை ,
    சிறைகளுக்குள்ளே
    சிதைக்கிறார்கள்,,

    தனியார் கல்லூரிகள் தானாக முளைத்ததில்லை அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகள் துணையோடு மனிதமில்லாத சுரண்டலில் பங்குபோட்டுக்கொண்டுதான் இதை நடைமுறைப்படுத்துகிறார்கள் , இதை நல்லபடியாக நடைமுறைபடுத்தி மூன்று மாணவிகளை கொன்று குவித்த கேடுகெட்ட கல்லூரிகளில் svsம் ஒன்று

    கட்டணத்தை கூட்டி
    காவு கேட்கும்
    கல்லூரிகள் ,
    அரசியல் பிரமுகர்களின்
    ஆசிர்வாதத்தோடு ,
    அடையாளமாய்
    கட்டடங்களை எழுப்பி ,
    அடாவடிப்
    பிச்சைகாரர்களாய்
    கொள்ளையடிக்கிறார்கள்,,,

    ஏழைகளின் பணமெல்லாம்
    சுவாகா செய்துவிட்ட
    ஸ்விஸ் யோகா கல்லூரி ,
    இயற்கை மருத்துவம்
    என்று சொல்லிக்கொண்டு
    செயற்கை மரணகுழியில்
    தள்ளிவிடுகிறார்கள்
    மாணவர்களை,,,

    மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்து மக்களுக்கு சேவை செய்வதற்காய் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நியமித்தது ஆனால் கடைசியில் இவர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளையடித்துக் கொண்டு மக்களை ஏமாற்ற எப்போதோ தொடங்கி விட்டார்கள் ,எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்குமெனில் அவர்களை மக்களின் எதிரியாய் சித்தரித்து காலி செய்துவிடுகிறார்கள்,,

    தடுக்கி விழுவதைப்போல
    இங்கே
    தற்கொலைகள் நடக்கிறது ,
    தரித்திரம் பிடித்த
    இந்த அரசாங்கத்தால்,,,

    படுத்த படுக்கையாய்
    அரசு அங்கங்கள் அனைத்தும்
    ஊழலில்
    செல்லரித்துப் போய்
    உயிர் போகும் நிலையில்
    இந்த கட்டமைப்பு ,,,,,
    பாலூற்ற வருமா
    பொதுநலப் புரட்சி ஒன்று ?,

  2. 1)அயோக்கிய அரசியல்வாதி, ஊழல் அதிகாரி, கல்வி வியாபாரிகள் முற்போக்கு கூட்டணி அமைந்துவிட்டது.

    2)மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல்துறையிடம் கடமை உணர்வு களவுபோய்விட்டது.

    3)”குழந்தைகளின் உயர் கல்வி” எனும் பெற்றோரின் அறியாமை கனவுக்கு, பாடுபட்டு சேர்த்த சொத்து, கல்வி கட்டணமாக கொள்ளை போய்விட்டது.

    4)கற்பித்தலில் விருப்பமில்லாத,ஒழுக்கமில்லாத கழிசடைகள் ஆசிரியராக வந்து விட்டார்கள்.

    ____

    இனி தமிழக கல்விநிலயங்களில் கல்வி கிடையாது. கொலைதான்.ஒப்பாரிதான் இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க