முகப்புகாங்கிரசின் ‘சிக்கனம்’ ஊரை ஏய்க்கும் வக்கிரம்!
Array

காங்கிரசின் ‘சிக்கனம்’ ஊரை ஏய்க்கும் வக்கிரம்!

-

காங்கிரசின் ‘சிக்கனம்’ ஊரை ஏய்க்கும் வக்கிரம்!

பிர்லா மாளிகையில் தங்கிக் கொண்டு காந்தி எளிமையாகக் காட்சியளித்ததும்; ‘மகாத்மா’வை எளிமையானவராகக் காட்டுவதற்கு காங்கிரசுக்கு ஏற்பட்ட செலவு குறித்து காங்கிரசு கட்சித் தலைவர்களுள் ஒருவரான சரோஜினி நாயுடு அங்கலாய்த்துக் கொண்டதும் நாம் மறந்து போன பழைய வரலாறு.  “காங்கிரசு கட்சி எம்.பி.க்கள் தங்கள் சம்பளத்தில் 20 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வார்கள்” எனக் கட்டளையிட்டிருப்பதன் மூலம், காங்கிரசுக்கே உரித்தான அந்தப் போலித்தனத்தை மீண்டும் நமக்கு நினைவூட்டியிருக்கிறார், சோனியா காந்தி.

இந்தக் கட்டளைக்கு அடிபணிந்து, அதுவரை ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து கொண்டு “மக்கள் சேவை” ஆற்றிவந்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், அத்துறையின் துணை அமைச்சர் சசிதரூரும், தங்களின் ஜாகையை அரசு பங்களாக்களுக்கு மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.  அமைச்சர் வந்து தங்கப் போவது தெரிந்து அரசு பங்களாக்கள் ஐந்து நட்சத்திர விடுதி அறைகளைப் போல பளபளவென அரசு செலவில் மாற்றப்பட்டிருக்கலாம்.  கத்தி போய் வாள் வந்தது டும் டும் என்ற கணக்கில் எப்பேர்பட்ட எளிமை! எப்பேர்பட்ட சிக்கனம்!

 • இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சம்பளம்  ரூ.16,000.
 • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தொகுதிப்படி ரூ.20,000.
 • நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொழுது  வழங்கப்படும் தினப்படி ரூ.1,000.
 • நாடாளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சல் செலவுகளுக்காக  மாதந்தோறும் வழங்கப்படும் அஞ்சல்படி ரூ.5,000.
 • அமைச்சர்களின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு-வெளி நாட்டுப் பயணங்களுக்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.160.76 கோடி.
 • அமைச்சர்களின் பங்களாக்களைப் பளபளவென மாற்றியமைப்பதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் செலவிடப்பட்ட  தொகை ரூ.93.5 கோடி.
 • சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட  முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்காக  2006-07 ஆம் ஆண்டில் செலவிடப்பட்ட தொகை ரூ.154.32  கோடி.
 • தமிழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் மற்றும் படிகள் ரூ.50,000.

இந்திய மக்களில் 70 சதவீதம் பேர் அன்றாடம் பெறும் தினக்கூலியே வெறும் இருபது ரூபாய்தான்.  அவர்கள் அரைப்பட்டினியாய் முழுப்பட்டினியாய் வாழ்க்கையை ஓட்டும்பொழுது, நமது ‘மக்கள் பிரதிநிதிகள்’ பொதுப் பணத்தில் மகாராஜாக்களைப் போல பவனி வருவதை மேலேயுள்ள பட்டியலைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.

இந்திய மக்கள் இப்படி வறுமையில் உழல்வது இப்பொழுதுதான் தெரிய வந்தது போல மன்மோகன் சிங்கும், சோனியாவும் சிக்கனமாக நடந்து கொள்ளும்படி கட்டளை போடுகிறார்கள்.  அக்கட்டளையை அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சரே (சசிதரூர்) நக்கல் செய்கிறார்.  நாய் வாலை நிமிர்த்தினாலும், ஆளும் கும்பலும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும் பொதுப் பணத்தில் மஞ்சள் குளிப்பதை மாற்றிவிட முடியுமா?.

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

 1. Indian M.P. Salary 42,000 Office Expense 14,000, Train Ticket Free, Delhi to any where Indian Flight free, M.P Hostel Free, Electricity cost 50000 unit free, Free Local call 170000 unit Free Two Cylinder Gas Free,

 2. http://www.hindu.com/2009/10/08/stories/2009100853730800.htm
  The winter of our austerity

  P. Sainath

  Growing numbers of elected representatives fund their poll campaigns with corporate backing. And growing numbers of people with a big business background have ventured directly into the electoral arena.

  Corporate Affairs Minister Salman Khurshid’s call for restraint, however mild, on the CEO feeding frenzy at the compensation trough, seems the least objectionable statement made by a Minister in months. (Contrast this, for example, with the Agriculture Minister’s warning that people should accept a further rise in food prices and blame it on drought. Or with a senior member of the Union Cabinet grumbling about the Prime Minister’s austerity drive. How much money will it save if we give up first class air travel, he wanted to know.) But Mr. Khurshid’s words were enough to spook the captains of industry into whines of protest which will steadily get stronger.

  “We can hardly say we will shut our eyes to the salaries the CEOs are going to take,” said Mr. Khurshid, hoping that companies would refrain from handing out vulgar salaries. An equally mild wish expressed by the Prime Minister in 2007 saw the media come down on Manmohan Singh like they never had before. “The Prime Minister wants CEOs to create wealth for the nation. Then he wants them to take pay cuts.” That was a slogan put up by a Mumbai newspaper on huge hoardings.

  This time, the media were slow off the blocks in going after Mr. Khurshid. After all, between Dr. Singh’s faux pas and Mr. Khurshid’s mild protest was a Great Recession. And to say “the Market will decide” isn’t enough, any more. In 2008, the Market decided to jump off a cliff taking much of the world with it. That didn’t stop CEOs in the United States from taking home billions in bonuses in a year they ran the globe into the ground. In fact, more CEOs got hikes rather than cuts in 2008, as an AFL-CIO study pointed out in April this year. In India, while millions lost their jobs and livelihoods, CEOs didn’t fare too badly. (How can they, in a country where the Union budget alone gives the corporate world subsidies of Rs.700 crore every day in tax write-offs and concessions? See The Hindu, August 15, 2009). It wasn’t the market which decided that $6 million of public money be gifted to the corporate sector each hour on average, it was the government. The government can though, with few qualms, cap the daily wage paid to hungry workers at NREG sites at Rs.100. That, for 100 days only — and those days to be shared by the members of each household.

  So the clichés of the Market lack that warm, righteous glow they had before the meltdown. But as big business re-asserts itself, the media will find their voice. Mr. Khurshid is about to find out whose voice that is, loud and clear, if he didn’t already know. And he surely knows the power of corporate links to large sections of the political class. The two highest-paid CEOs in the country managed to save Dr. Singh’s previous government from falling in the July 2008 trust vote. And only recently, much of a whole session of Parliament went to discussing the fight between the same two CEOs. Mr. Khurshid’s comments, however, at least make for a debate on ‘austerity,’ its practice by the political class and big business — and the ever-closer bonding between the two.

  Growing numbers of elected representatives fund their poll campaigns with corporate backing. And growing numbers of people with a big business background have ventured directly into the electoral arena. The links get stronger, the reps get richer. And there is much entrepreneurial joy and success.

  While the CEOs top the charts by miles, the vulgarity Mr. Khurshid fears also consumes much of the political class. Take for instance, the 42 MLAs re-contesting this time in Haryana’s polls. On average, their assets have increased by around Rs.48 million each since 2004. A nice 388 per cent leap. That is to say, each of them added Rs.800,000 a month to their wealth in their last term. Or over Rs.1,100 for every hour that they were MLAs (for five years). A healthy rate of growth. Maybe we need a constitutional amendment requiring every Indian to serve as MLA for one term at least. It could be the biggest poverty reduction programme ever undertaken. (I mean across all States. It might be slightly chaotic if every citizen was required to be a member of the Haryana Assembly.)

  These and other fascinating insights abound in the reports put out by the National Election Watch on the Assembly polls in three States. (October 13 is the voting day.) NEW is a coalition of over 1,200 civil society groups across the country that also brought out excellent reports on these issues at the time of the Lok Sabha polls in April-May. Its effort to bring such data to the voting public is spearheaded by the NGO, Association for Democratic Reforms (ADR).

  Those who won the last time and seek re-election have led by example. The 388 per cent rise in assets per MLA in Haryana is but an average. Break it up and you find some stirring success stories. The top four MLAs clocking the best growth rates, all of them from the Congress, saw their assets increase by over 800 per cent. Imagine what they might have achieved had there been no austerity drive. The numero uno in this list has a rags to riches story. Starting from humble beginnings of less than a lakh, his wealth has risen 5,000 per cent. Inspiring. And perhaps one of the reasons — together with a love of democracy — why far more have been inspired to contest this time in this State than five years ago. The number of candidates is 20 per cent higher than it was in 2004.

  Of 489 contestants whose poll affidavits NEW was able to study, 251 — 51 per cent, or every second candidate — was worth well over Rs.10 million. Though it must be conceded that those at the lower end of the crorepati chain see their assets swollen by crazy real estate rates. And as yet, these are just candidates. The crorepati ratio will go up after the results, when much of the plebeian element gets weeded out. This is not to say the austerity school has no following in Haryana. Some candidates have declared stunningly low assets. A couple of them say they’re worth less than Rs.3,000 and one, poor lamb, has declared zero assets of any kind.

  In Maharashtra, compared to 2004, there has been a 60 per cent increase in political parties contesting elections. Also, a 33 per cent increase in candidates. NEW has thus far studied the affidavits of 880 of over 3,500 candidates seeking election to the State legislature. It found that almost one in every four candidates is a multi-millionaire. (Here too, though, there are a daring few claiming zero assets.) NEW has so far seen less than a third of candidate affidavits — and already located 212 crorepatis. Over half of these are from the four major parties, with the Congress (42) heading the austere list. The BJP, the Shiv Sena and the NCP all have 29 each among candidates surveyed. The MNS (21) and the BSP (11) don’t do too badly either. All these numbers will swell when all their affidavits are studied.

  Around 52 per cent of Haryana’s 90 sitting MLAs were multi-millionaires. That beats rich Maharashtra where just over one in three (37 per cent) makes the cut. But Maharashtra outclasses Haryana in the number of sitting MLAs with pending criminal records: 45 per cent to 31 per cent. (It might be worthwhile for NEW to correlate criminal records with crorepati status. Even if that takes more time).

  And finally, there are those who get elected to serve the CEO cause, bringing us back to the political class-corporate nexus. The present government of Maharashtra, for instance, has handed over 5 airports (including 601 hectares of land) for Rs.63 crore to a single corporation, as Imtiaz Jaleel’s excellent report on NDTV shows. A price so low that even most of the State government’s own departments opposed it. It would likely be difficult to get 601 hectares in the desert for that sum. The government’s brilliant defence is that it has not privatised an inch — just leased out the airports. Yup, for 95 years for that pittance, to the Anil Ambani group. Work out the math yourselves. I hope it doesn’t get any more austere than this, though.

  Printer friendly page
  Send this article to Friends by E-Mail

  • //How can they, in a country where the Union budget alone gives the corporate world subsidies of Rs.700 crore every day in tax write-offs and concessions? See The Hindu, August 15, 2009). It wasn’t ///
   Tax write offs gives a wrong picture, as if govt is giving cash subsidy to industry. Net tax revenue of govt has multiplied by several times since tax rates were drastically slashed from 1991 reforms. We must compare the total tax revenue generated before and after this ‘subsisdy’
   ; while i agree with P.Sainath;s data and info and humanitarianism, it is impossible not to conlcude that he is nuts when it comes to economic analysis and interpretation of data. He writes about trillions of ‘lost’ revenue post 1991 tax reduction. highest tax rate in India was at some 98 % in 1971. Does he want to get back to those glorious times ? in this matter he doesn;t know what he is talking about. and his conclusions about Indian billionares and rural poverty is crazy. But for this new rich and growth, things would be even more terrible in rural India with no extra money with govt to spend on agri. hence no one is impressed by this kind of logic..

 3. வினவு,

  இந்தத் தளத்தில் ஒரு தேடு பொறியை இணைத்தால் வசதியாக இருக்கும். முக்கியமான பின்னூட்டங்கள் பலவற்றை தேடி எடுப்பதற்குள் டவுசர் கிழிந்து விடுகிறது.

  • தோழர் பாயாசம், வலது பட்டையில் கூகிள் தேடுபொறி சேர்த்திருக்கிறோம், பயன்படுமா?

   • முன்பே சேர்த்திருந்தீர்களா? அடப்பாவமே.. எனது கண்ணுக்கு புலப்படமாலேயே போய்விட்டது… 🙂 மிக்க நன்றி

 4. காங்கிரசு கட்சித் தலைவர்களுக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையை மூடி மறைக்க, இவர்கள் அமுல்படுத்தும் கேவலமான கொள்கையினால் மக்களுக்கு எற்படும் அவலங்களுக்கு இப்படி கோவ‌ணம் பத்தாது போர்வை வேண்டுமே.

 5. இந்த மாத பு ஜ இன்னும் இணையத்தில் கிடைக்க வில்லை.ஆவலோடு காத்திருக்கிறோம்

 6. சி பி எம் சட்ட மன்ற உறுபிணர்கள் தான் இச் சம்பல உயர்வை எதிர்தார்கள்..
  வேறு யாரும் இதை எதிர்கவில்லை..

 7. //இந்திய மக்களில் 70 சதவீதம் பேர் அன்றாடம் பெறும் தினக்கூலியே வெறும் இருபது ரூபாய்தான். /// இல்லை. இது உண்மையல்ல. 20 ரூ உணவிற்கு மட்டும்தான். இதர செலவுகளை சேர்க்கவில்லை. மேலும் இதை பற்றி சர்ச்சை தொட்ர்கிறது : Er. . . just how poor is India?

  http://www.rediff.com/money/2008/sep/04poor.htm

 8. ஒரு தகவலுக்காக…

  முன்குறிப்பு : தீபாவளியை கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது. துணிக்கடைகளில் கூட்டம் பிதுங்கி வழிவதும், எந்த பக்கம் திரும்பினாலும், முதலாளிகள் தங்கள் பொருளை விற்று தீர்ப்பதற்கு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ரயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிரம்பிவிட்டன. இடம் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிறார்கள். ஆங்காங்கே தீபாவளிக்காக வாங்கப்படும் வெடிகள் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. நிற்க.

  தீபாவளி – தமிழர்களின் திருவிழா அல்ல! ‘இந்துக்களின்’ திருவிழா.

  பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்

  – பண்பாட்டு துறை ஆய்வாளர் தொ. பரமசிவன், மேலும் தொடர http://socratesjr2007.blogspot.com/2009/10/blog-post.html

 9. இந்தப் பதிவில் சொல்லப் பட்டிருக்கும் புள்ளி விவரங்கள் மிக பழமையானவையோ என்று சந்தேகம் எழுகின்றது. கடந்த வருடத்தில் உறுப்பினர்களுக்கு கொடுத்த சம்பள உயர்வு இதில் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரிய வில்லை. மேலும், இன்னும் கொஞ்சம் நிறைய தகவல்களை கொடுத்திருக்கலாம்.

 10. முட்டள் வட இந்தியனை விட, ஜே.ஆரிடம் ஏமாந்த முட்டாள் ராஜீவை விட, பாரில் டான்ஸ் ஆடிய சோனியாவை விட, நாராயணன்களை விட, கருநாக கருணாவை விட, நதிகளை இணைக்க வேண்டாம் என்று சொல்லிய ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள் ராகுலை விட சீனாக்காரன் எவ்வளவோ மேல்.

 11. //இந்திய மக்களில் 70 சதவீதம் பேர் அன்றாடம் பெறும் தினக்கூலியே வெறும் இருபது ரூபாய்தான். //

  சும்மா பொய் சொல்லாதீங்க. காலம் மாறி போச்சு……….பஞ்சர் ஒட்ட minimum 20 rs ஆகும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க