தளபதிகள் தவறு செய்வதில்லை!
அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது
அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை.
அவர்கள் செய்கிற எதிலும்
சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும்
தவறான அனைத்தும் மற்றவர்களுடையதாகவும்
உரிமைப் படுத்தப் படுகின்றன.
அதைவிடவும், மற்றவர்கள் செய்கிறவற்றிலும்
சரியானவற்றின் வழிகாட்டலுக்கான உரிமையும்
அவர்களையே சாருகிறது.
தவறானவற்றைப் பகிர பலருங் காத்திருக்கின்றனர்.
எனவே, அவர்கட்கு
எல்லோரையுந் திருத்திக் கொண்டிருக்க முடிகிறது.
என்ற போதும்,
அதே தவறுகள், நாள் தவறாமல்
திரும்ப திரும்ப நிகழ்கின்றன.
ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு தவறும்
அவர்கட்கன்றி மற்றவர்கட்கே உரித்தாகுகின்றன.
அவர்கள் தவறுகளே செய்வதில்லை, ஏனெனில்
அவர்கள் தளபதிகள்.
தளபதிகள் தவறுகள் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை.
ஒரு தளபதி ஒரு தவறு மட்டுமே செய்ததாகத்
தெரியவரும்போது
எல்லாத் தவறுகளும் அதே தளபதிக்கு உரித்தாகும்
என்பதால், எவருமறியத்
தளபதிகள் தவறு செய்வதில்லை. தவறுகளை ஏற்பதுமில்லை.
நம் தமிழ் இணையத்- தள-பதிகளுந்தான்.
– சி.சிவசேகரம்.
சரியாப்போச்சு, கவிஞரே இது தேவையா உங்களுக்கு…பாருங்க சீரங்கநாதனும் தமிழரங்கநாதனும் 10 பார்டு சீரியல் எழுதி உங்கள கிழிக்க போறாங்க.. வினவு மறுபடியும் சிக்கிட்டீங்களே?????
இதப்படிங்க மொதல்ல !!!!!!!!!!!!!!!!!!!! ‘ தமிழரங்க எசப்பாட்டு’ _______________________________________________________
வினவாதே மூடு !
இன்னும் வெட்டவும் புரளவும் தலைகள் இருக்கின்றன.
புதைப்பதற்கு சவுக்கந் தோப்புக்களும்
எலும்பும் கிடைக்காமல் எரிப்பதற்கு சுடலைகளும்
எங்கள் கண்காணிப்பில் தான்
வினவு என்பது வீண் வார்த்தை
அடங்கிப் போ ஆசான்கள் வருகின்றார்கள்.
எந்தக் கற்களையும் புரட்டிப் பாராதே
நாளைய புரட்சிக்காரர்கள் அங்கும் பதுங்கியிருக்கலாம்.
வீண் வம்பு பேசாதே வினவாதே விலகிப்போ
காட்டிக் கொடுக்கும் தோழனா நீ ?
புதியதாய் இனியொரு வியூகம் அமைப்போம்
வினவுவோர் எல்லாம் தூர விலகுங்கள்
கொலைக்களங்கள் தாண்டி வந்ததால்
எங்கள் கைகளிலும் சிவப்பு
இது தான் உங்களுக்கு வெறுப்பு என்றால்
வழிவிடுங்கள் தூ! தூய்மைவாதிகளே
விடுதலையின் விரோதிகளைச் சரித்தபோது
விழுப்புண்கள் சொரிந்த இரத்தம் நமது கைகளிலும்
சொல்லிவிட்டுப் போகின்றோம் சுயவிமர்சனமாய்
விலகுங்கள் வீணர்களே மக்கள் என்ன அறிவாளிகளா?
!!!!!!!!!!!!!!!!!!
எப்புடி?
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6598:2009-12-30-12-50-38&catid=43:2008-02-18-21-37-26
தளபதிகளும் தவறு செய்வர்!
Written by விருந்தினர் Wednesday, 30 December 2009 13:48 அரசியல்/சமூகம் அகிலன்
E-mail Print PDF
எழுத்து (பெருப்பிக்க – சிறுப்பிக்க)
பெருப்பிக்கசிறுப்பிக்க
தளபதிகளும் தவறு செய்வர்!
அரசின்
படையின்
பாடசாலையின்
பல்கலைக்கழகத்தின்
இணையதளத்தின் – ஏன்
உலகின் ஒவ்வொன்றின்
அதிபதிகளும்
தவறுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள் அல்லவே!
சிவகேரம் எனும்
“பேர்”-ஆசிரியர் – இதை
சமூக விஞ்ஞானத்தில்
காணலையோ?
இனியொரு நாவலனுக்கும்
தேசம்நெற்றின் ஜெயபா(வ)லனுக்கும்
இவர்களின் இன்னோரன்னோருக்கும்
சாமரை வீசுகின்றார்!
தேசம்நெற்றில் – உங்களை
உங்களைப் போன்றோரை
உங்கள் தமிழ் இணையத்-தள-பதி
கீபோட்
சொகுசு மார்க்சிஸவாதி என்கின்றார்
நீங்களும், – நாவலனும்,
ஜெயபாலனும், – மே 18-காரர்களும்
புலிகளிடம் கோருவதையே,
ரயாகரன் – தமிழரங்கத்தில்
உங்களிடம் – உங்கள்
இணைத்-தள-பதிகளிடம்
கோருகின்றார். – இதில்
தவறென்ன கண்டீர் – கீபோட்
சொகுசு – மார்க்சிஸப்
“பேர்”-ஆசிரியரே!
அண்ணன் கேள்விக்குறி சொன்னது போல மெகா சீரியல் உறுதிதான் போலிருஃக்கிறது… ஏங்கெல்சே! ஏங்கெல்சே! 🙁
நீங்கள் தீர்க்கதரிசி தான் போங்கள்.
தரையில் போட்ட தொப்பி எத்தனை தலைகட்குப் பொருந்துகிறது!
ஆசையாக அணிந்து கொள்கிறார்கள்.
ஆளை விடுங்கள்.
ஓஹோ அப்படியா சேதி!!
அப்படியென்றால்… ஒருவழியாக…
“தளபதிகளும்” தவறுகள் செய்வார்கள்
என்பதை ஏற்றுக்கொண்டு விட்டார்களா
நமது இணையத் தளபதிகள் ?
அப்படி என்றால் இதற்கு பெயர் தான் சுயவிமர்சனமா ?
அல்லது சுயவிமர்சனத்திற்குள் இருக்கும் விமர்சனமா
அல்லது விமர்சனம் என்கிற பெயரில் வைக்கும் எதிர் விமர்சனமா ?
இந்த பதிவு புரிவதற்கு, பின்னணியில் பல பதிவுகள் ஒளிந்திருக்கின்றன. ஒன்று வினவு சில குறிப்புகள் கொடுக்க வேண்டும். அல்லது புரிஞ்சா புரிஞ்சுக்கோ! புரியலையா அடுத்த பதிவு போய்க்கோ! என்ற அளவில் அடுத்த பதிவுக்கு நகருகிறேன்.
நொந்தகுமாரன், நீங்க ஒத்துவராத மறுமொழிகள் பக்கத்த பாக்கலயா?
அரைடிக்கெட்,
ஒத்துவராத மறுமொழிகள் லிஸ்ட்ல என் பின்னூட்டம் போயிரும் சொல்றீகளா! புரியலன்னு சிம்பிளா சொன்னேன். அது ஒத்துவராம போகுமா! காளமேகம் அண்ணாச்சி தோழர் சொல்ற மாதிரி, நாம மன்னிக்கனும் நான் கொஞ்சம் டியூப்லைட் தான்.
அட நீங்க வேற, நான் இந்த பின்னூட்டத்த பாக்கலயான்னில்ல கேட்டேன், ஆரம்ப புள்ளி இங்க https://www.vinavu.com/2009/12/11/moved-comments/#comment-14036
நொந்தகுமாரன், கேள்விக்குறி அப்படி விலாவாரியாக எழுதியும் புரியலை என்றால் என்ன செய்வது?
ஹைய்யோ ஹைய்யோ இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா ?
பல பதிவுகளுக்கு ஒரே கவிதையில் பதிலளித்துவிட்டார் தோழர். கம்யூனிஸ்டுகள் தவறுகள் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் மட்டுமே சுயவிமர்சனம் செய்துகொள்கிறார்கள். குட்டி முதலாளிகளோ தவறுகளே செய்வதில்லை எனவே அனைவரையும் விமர்சிக்கிறார்கள்.
தோழர் சிவசேகரத்துக்கு,
எம்மைப்போன்றவர்களுக்கு உங்கள் கட்டுரைகள் மிகவும் பயன்படுகின்றன தொடர்ந்து எழுதுங்கள்.
அண்ணாச்சி சூப்பர்லிங்ஸஃ சிவசேகரம் எழுதுனது கவிதை அதை கட்டுரைன்னு போட்டது மட்டுமல்லாம குட்டையும் பட்டுனு உடைச்சிட்டீகே
காளமேகம் அண்ணாச்சி
என்னண்ணாச்சி நம்மளப்பாத்து இப்படிச் சொல்லிட்டிய ?
அது கவிதயின்னு புரிஞ்சிக்கிட்டுதாம்ண்ணாச்சி படிச்சேன்.
அவுக நெறைய கட்டுரைகளும் எழுதனும்ன்னு தாம் அப்படிச்சொன்னேன்.
என்னைய விடுங்கண்ணாச்சி சம்பந்தப்பட்ட அவிய இத கட்டுரையின்னு புஞ்சிக்கிட்டு பத்து பதில் பதில் கட்டுர எழுதாம இருந்தாச்சரி தான். என்னவோய் நாஞ்சொல்றது சரி தானே ?
ஐயா, அர்த்தம் புரியலையே!
யாருங்க அந்த இணையத்- தளபதிகள்?????????
யார் அந்த இணையத்தளபதிகள் என விழி பிதுங்குவோர் இந்தக் கவிதையின் முதல் மறுமொழியில் தம்பி சூப்பர்ஸ்டார் கேள்விக்குறி எழுதிய வரிகளில் இரண்டு பெயர்கள் வருகின்றன, அதை உத்து பாக்கவும். அதில் நாதன் என்ற வார்த்தையை எடுத்துவிட்டால் இணையத்தளபதிகளின் பெயர்களை யாரும் புரிந்து கொள்ளலாம். அதுக்கப்பிறகும் புரியலேன்னு சொல்லுத ட்யூப்லைட்டுகளை எந்த ஆண்டவனாலும் காப்பத்தது கஷ்டம்டே!
காளமேகம் அண்ணாச்சி,கேள்விக்குறி வரும்போதெல்லாம் கரெக்டா அவருக்கு பக்கமேளமா நீங்களும் வந்துற்றீங்களே எப்புடி?
ஆபிசுல வேலவெட்டி இல்லாம மானிட்டரை பாத்துகிட்டு சும்மா சும்மா ரெப்ரஷ் பண்ணிகிட்டு இருந்தா யாரும் யாருகூட வரலாம், பக்கமேளமாக வரலாம், சைடா, ஜால்ராவா வரலாம். அதுல உமக்கென்ன பொறாமை? தம்பி கேள்விக்குறி விவாதிப்பதில் ஒரு சூப்ர் ஸஃடார் என்பது எமது எண்ணம். அதை உள்ளது உள்ளபடி சொன்னால் உமக்கேன் வந்து ஆமை? மருதா பணிவும், பணிதலும் மெச்சத்தக்க பண்புகள்.இணையத்தில் பல மருதன்கள் உள்ளனர். நீர் அதில் யார் எனத் தெரிவிக்க இயலுமா? வந்துதான் வந்தீர் இணையத் தளபதிகள் பத்தி கருத்த சொல்லாமலேயே போவது ஏனோ?
தோழர்!
கடந்த ஆண்டு வினவு தளத்தில் வெளிவந்த கட்டுரைகள் இலக்கிய மொக்கை போன்ற புத்தகங்களாய், புத்தகக்காட்சி நேரத்தில் விற்பனைக்கு கிடைத்தது. இவ்வாண்டும் அதுபோல புத்தகங்கள் வெளிவருமா?
தோழர் யுவகிருஷ்ணா, இந்த ஆண்டு தோழர் கலையரசன் எழுதிய ஆப்ரிக்க தொடர், டி.அருள்எழிலன் எழுதிய கச்சத்தீவு கட்டுரை, வெண்மணி மற்றும் புதியகலாச்சாரம் தோழர்கள் எழுதிய ஜெகத்கஸ்பார் கட்டுரைகள் தனித்தனி நூலாக கீழைக்காற்று சார்பில் வெளிவருகின்றன. மொத்தத்தில் வினவில் வந்த கட்டுரைகளை வைத்து மூன்று நூல்கள் வெளிவருகின்றன.
தோழர் வினவு! சென்ற ஆண்டைப்போல இந்த ஆண்டும் அந்த புத்தகங்களின் விலை கடுமையாக இருக்குமா? சென்ற ஆண்டு நம் புத்தகங்கள் விலை மிக அதிகமாக இருந்தது. 50 பக்க புத்தகத்தின் விலை 25 ரூபாய் என்கிற அளவிற்கு! பரிசீலிக்கவும்
அவர்கள் மட்டும்தானா அப்படி? எல்லோருமே தத்தமது முதுகை……கொள்வது நலம் என்றே நினைக்கின்றேன்.
மனித மனங்களை விரைந்து கவர்ந்துகொள்ளும் வல்லமையை மதம் கொண்டுள்ளது. அனைத்து மதங்களும் இம்மையை துறந்து மறுமையை தேடிக்கொள்ளும் மார்க்கத்தையே போதிக்கின்றன. இதன்வழி பார்க்கும்போது இவ்வுலகம் தவறு, இங்கு தோற்றம்பெறும் உயிர்களும் தவறானவை என்றாகிறது. இதில் தளபதியென்ன? தமிழ் இணையத் தளபதிகளென்ன? தமிழ் தளபதிகளென்ன? நான் உட்பட அனைத்துமே தவறானவை.
தவறான இனமொன்றை ஒழுங்குபடுத்த முயற்சித்த தலைவனை தறித்துவிட்டு முடிவுதேடி ஓடுகிறோம்.
ஐயா, ஒன்னும் புரியவில்லைங்களே சாமி…..ஆழமான அர்த்தம் இருக்கிறது என்று தெரியுது யாராவது கொஞ்ச சொல்லுக சாமி.
போர்-“ஆசிரியர்” பெரி-துவக்க…
புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்
அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்
வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்
ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட
காவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்
நாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர்
அஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று
ஈழம் தன் குடிகளைக் கூஉய்க்,
துப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய
கோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம்
குனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.
வஞ்சம் செய்தார் கல்வியர் நந்திக் கடல் அமைய
குடிவளம் கவர்ந்தார் கறைஎன் கோயாம்?
வன்னிக் குடிஅழித்தார் பொய்யும் சூதும்
வஞ்சம் செய்வோர் வடிவுஎன் கோயாம்?
விடுதலை வேட்கையும் தாயின் கனவும் இழந்தே
சரண் புகு ஒளித்தார் முகம்என் கோயாம்?
இன்புற தம்மக்காள் இடர்எரி அகம்மூழ்கத்
துன்புறா இலாபங்காண் முறுவல் வெண்பேய்கள் போல்
மன்பதை அழிந்து ஒளிய,போர்-ஆசிரியர் தவறிழைப்ப,
புதல்வரை இழந்தேன்யான் அவலம்கொண் டழிவலோ?
கல்விச்செம்மையின் இகந்தகோல் கல்வியர் தவறிழைப்ப,
இம்மையும் இசைஒரீஇ,இனைந்து “உம்பால்” ஏங்கி அழிவலோ?
இணைய-தளபதிகள் சூதுரைத்து எவர்மாண்டார்?
“எங்கணாஅ!”பொங்கி எழுந்தாயோ பொழிகதிர்த்
திங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுது நீஇப்போ பயன் யாது?
அடங்கு நீ சடங்கு முடித்து, அமுதூட்டப் படிப்புண்டு;
சிவசிவா!ஈழவக் கூத்தினுள் வந்தீண்டும்
ஆயக்கல்வியர் எல்லீருங் கேட்டீமின்;
பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;
செங்கதிர் சேகரா!மாசுகொள் மனிதரா நாம்?-
தவறறியாரோ அல்லர்;கடுப்பாய் உரைத்தேன் காண்!
கொடுங்கோலும்,போர்க்குடையும்,
வன்னிநிலத்து மறிந்து வீழ்தரும்
நங்கோன்-தன் கொற்றவாயில்
ஒற்றாடல் நடுங்க,நடுங்கும் உள்ளமும்;
இரவு வில்லிடும்;பகல்மிக் குண்டுவிழும்
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
“வருவதோர் துன்பம் உண்டு”
தேசியத் தலைக்கு யாம் உரைத்தும் நின்றதன் நடுவே;
நீ சிரஞ்சொடுக்கித் தாழ்ந்தது எங்கே?சொல் சேகரரே-சொல்!
ப.வி.ஸ்ரீரங்கன்
28.12.09
ஒண்ணும் புரியலியே!
மேலும் கீழும் கோடுகள் போடு –அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித்திரிபவன் வார்த்தையிலே ஒரு உர்ப்படி தேறாது
மருதன், இப்பவாச்சும் புரியணுமே!
//தளபதிகள் தவறுகள் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை.ஒரு தளபதி ஒரு தவறு மட்டுமே செய்ததாகத்தெரியவரும்போதுஎல்லாத் தவறுகளும் அதே தளபதிக்கு உரித்தாகும்என்பதால், எவருமறியத்தளபதிகள் தவறு செய்வதில்லை. தவறுகளை ஏற்பதுமில்லை.நம் தமிழ் இணையத்- தள-பதிகளுந்தான்.//
அருமையான வரிகள்.
நம்மைத் தவிர மற்றவர்க்கு என்று நினைப்பதை விடுத்து நாமும் ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொள்வத நல்லது.
கவிஞருக்குப் பாராட்டுக்கள்.
இரயாகரனுக்கும் சிறிரங்கனுக்கும் அந்தாதி ஒன்றுக்கு அடி எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். தொலைந்தீர்கள்.
m
கோவிச்சிக்காதீங்க அண்ணாச்சி,உங்களுடைய பின்னூட்டங்கள்ள அதிகமா கேள்விக்குறிக்கு பக்கமேளமா இருந்ததினால கேட்டுட்டேன். ஒருவேளை நான் கேட்டது தவறா இருந்தா மன்னிக்கவும்.
முதலில் நான் என் முதுகை பார்ப்பதற்கு முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். அந்த இரு இணைய தளபதிகளைப் பற்றி எனக்கு அவ்வளவா தெரியாது அண்ணாச்சி. தெரியாததைப் பற்றி கருத்துச் சொல்வது அநாகரிகம்னு நினக்கிறேன். நீங்க என்ன நினக்கிறீங்க. நான் சொல்றதுல ஏதாவது தவறு இருக்கா அண்னாச்சி.
தளபதிகள் தவறு செய்வதில்லை! enbathai
தோழர் தவறு செய்வதில்லை! entru sonna romba nanna irukkum …
தளபதி enbathai தோழர் entru mattri padithal romba thamasha irukku ,
Kadasi varai entha தளபதி nnu solla villai ILAYA தளபதி ya, ILLA Chinna தளபதி ya illa Kadasi தளபதி !??? valka தளபதி sorry enakku ORE THALAVALI , ITHALLAM namma THALAVEETHI
Please see comment 1.2 by author.
இந்தியாவில் நக்சல்பரி எழுச்சிக்கு பிறகு கம்யுனிச கட்சிகளின் போக்கில் தெளிவான முரண்பாடுகள் வந்தது போல் , புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு ஈழ போராட்ட அமைப்புகளிடையே முரண்பாடுகள் தோன்றுவதாக எண்ணுகிறேன்.
இன்னொரு கோணத்தில் , புலிகள் இருந்தவரை ஒரு பொதுவான ஆதரவையோ, எதிர்ப்பையோ புலிகளின் பால் காட்டி வந்த பலரும் அவர்களின் வீழ்ச்சிக்கு பிறகு பொதுவான சக்தியை, எதிரியை காண இயலாததால் , தமக்கு உள்ளேயே இருக்கும் முரண்பாடுகளை கவனிக்க தொடங்கி உள்ளனர் என நினைக்கிறேன்.
தோழரின் கவிதை அருமை…
Karunaharamoorthy.P
Posted on 12/29/2009 at 5:08 pm (Edit)
பொருத்தமான இடத்தில் மிகப்பொருத்தமான கவிதை.
எ
னக்கு அவரின்
பிறிதொருகவிதையான – அவர்களிடம் பிரம்பு இருந்தது அதனால் அடித்தார்கள்- என்கிற கவிதையையும் நினைவூட்டியது
இவ்விடம். எளிமையான என் நன்றிகள் தோழா !
Reply cocimen
Posted on 12/31/2009 at 9:53 am (Edit)
சி. சிவசேகரம் அவர்களின் “ஏகலைவன் பூமி” என்ற கவிதைத் தொகுப்பில் வரும் பின்வரும் கவிதையை படித்துப்பாருங்கள் கருணாகரமூர்த்தி. கருத்தாழமிக்க சுவாரசியமான கவிதை இது. நமது இணைய தளபதி(கள்) பாசிச சட்டம்பியாராகவே இருந்துவருகிறார்போலும்!
எல்லாந் தெரிந்தவன்
அவனை
ஒரு கலந்துரையாடலின் போது சந்தித்தேன்.
பெண் விடுதலை பற்றியும்
பெண்களின் சமத்துவம் பற்றியும்
நீளமாய் நிறையவே பேசினான்.
ஆணாதிக்கம், வர்க்கச்சுரண்டல், ஒடுக்குமுறை,
போராட்டம், புரட்சி, சோஷலிஸம்,
பொதுவுடமைப் புதுவுலகம்
பற்றியும் பேசினான்.
பெண்களின் பிரச்சனைகள்
கருத்தடை, கருக்கலைப்பு,
ஆண்களின் அடியுதை, நிந்தனைகள்,
பாலியல் வன்முறை, பலாத்காரப் பாலுறவு
தொடர்பாகப் பேசப்
பெண்கள் வாய்திறந்த போது
அவர்கட்கு எதுவுமே தெரியாது என்றான்.
புரட்சி வந்தவுடன்
எல்லாமே சரியாகி விடுமென்று
மேசையிலே
ஓங்கி அடித்து உரக்கக் கூவினான்.
பெண்களின் பிரச்சனைகள் பற்றி
எந்தப் பெண்ணையும் விட
அவனே
நன்றாக அறிவான்.
அவன் சொல்லும் புரட்சி வந்தபின்
எல்லாமே சரியாகி விடும்.
மாத விடாயும்
பிரசவ வலியுங் கூட
இல்லாது போய்விடும்.
ஏனென்றால், அவன்-
(ஏகலைவ பூமி – சி சிவசேகரம்)
புரட்சிகர நடவடிக்கைகளுக்கும் புரட்சிகரவால்சடவாலுக்கும் இடையேயான கதம்ப நிலையில் மக்களையும் புரட்சிகர வாய்ச்சடவால்களை ஏற்றுக் கொள்ளும் படி திணிக்கும் போக்கு எங்கும் காணப்படுகின்றது. இது குறிப்பாக தமிழக புரட்சிகர ஆலோசகர்கள்> மார்க்சீய அறிஞர்களும் ஆகும்.
வேறுதேசத்தின் சக்திகள் தோழமையுடன் இருப்பது ஒன்றும் புதினம் இல்லை. ஆனால் ஒரு கோட்பாடு சார்ந்து அதன்பாலான கருத்துக்களை முன்வைப்பது> விமர்சிப்பது என்பது ஒரு நிலையாகும்.
புலம்பெயர் மக்களின் வாழ்நிலை> வன்னி அவலத்தின் பின்னான மக்களின் வாழ்நிலை என்பது பற்றிய முன்னாய்வு எதுவும் இன்றி கருத்துக்கூறுகின்றதுடன் அதனையே நியமான நிலையாகவும் நிலைநிறுத்தப்படுகின்றது.
..
பதிந்தவர் ஆதி, January 01, 2010
திரிபுவாதம் அல்லது வலது சந்தர்பவாதம் என்பது ஒரு முதலாளித்துவ வர்க்க சித்தாந்த ஓட்டமே.இது வரட்டுவாதத்தை காட்டிலும் மேலும் அபாயமானது.
திரிபுவாதிகள்,வலதுச ாரி சந்தர்பவாதிகள் ,மார்க்சியத்திற்கு சொல்லளவில் சேவைசெய்கின்றனர்.அவர்கள் கூட வரட்டுவாதத்தைத் தாக்குகின்றனர். ஆனால்,அவர்கள்உண்மைய ில் தாக்குவது மார்க்சியத்தின் மிக அடிப்படை அம்சங்களையே ஆகும்.-தோழர் மாவோ.
திரிபுவாதம்,வலது சந்தர்பவாதம் இவற்றுக்கு எதிராக தத்துவார்த்த போராட்டத்தை முன்னெடுக்கும் தோழர் ரயாவுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை உயர்திப்பிடிப்போம்.
மீண்டும் மாவோவின் வார்த்தைகள்.”உறுதியாக இரு!தியாகத்திற்க்கு அஞ்சாதே!எல்லா இன்னல்களையும் கடந்து வெற்றி பெரு!!! http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6606:2010-01-01-09-09-36&catid=277:2009#comments
“புரட்சிகர நடவடிக்கைகளுக்கும் புரட்சிகரவால்சடவாலுக்கும் இடையேயான கதம்ப நிலையில் மக்களையும் புரட்சிகர வாய்ச்சடவால்களை ஏற்றுக் கொள்ளும் படி திணிக்கும் போக்கு எங்கும் காணப்படுகின்றது.” – முரளி
“…. அவர்கள் கூட வரட்டுவாதத்தைத் தாக்குகின்றனர். “- முரளி
ரயாகரனின் வறட்டுவாதத்தையும் வாய்ச்சடவால்களையும் பற்றி நினைவூட்டியதற்கு நன்றி.
கவிதை வேறு எதையோ பற்றியது போலல்லவா இருந்தது.
அன்பரே நானோ ஒரு தேசத்தின் மக்களின் நிலையில் இருந்து எழும் கோட்டுபாடு பற்றிய பிரச்சனை பற்றி எழுதுகின்றேன். நீங்களோ தோழர் ரயாவை திட்டுவதிலே இன்பம் கண்டுவிட்டுப் போங்கள். அது உங்கள் சுதந்திரம்.
எம் தேசத்தின் மக்களின் வாழ்நிலை> எடுக்கப்பட வேண்டிய வேலைகள்> கடந்தகாலம்:> இன்னும் பல விடயங்கள் பற்றி நாம் ஆய்வு நிலையில் தான் இருக்க வேண்டியிருக்கின்றது. இதற்கு அப்பால் தமிழக ஆலோசககள்> பெரியண்ணன்களின் அங்கீகாரம் என்பது கூட ஆரோக்கியமான நிலை இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டு:ம்
.
முன்னர் உங்களால் எழுதப்பட்டது “ஒரு தேசத்தின் மக்களின் நிலையில் இருந்து எழும் கோட்டுபாடு பற்றிய பிரச்சனை” யாகத் தெரியவில்லையே!
யார் யாரையோ திட்டித் தீர்ப்பதிலே தான் உங்கள் கவனம் இருந்தது.
பெரியண்ணன் Parisஇல் இருந்தாலும் சரி Chennaiஇல் இருந்தாலும் சரி
“பெரியண்ணன்களின் அங்கீகாரம்” யாருக்கும் தேவையில்லை.
மற்றவர்களுக்கு ஏதோ பட்டம் கட்டப் போய் முட்டாள்ஆகிப் போன உங்கள் முகத்தில் அசடு வழிகிறது. முதலில் அதைத் துடைத்துக் கொள்ளுங்கள்.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6616:vinavusuperlink&catid=277:௨௦௦௯
//நீங்கள் எந்த அமைப்பின் ஆதரவாளர் என்று கூறிக்கொள்கின்றீர்களோ, அவர்களுடன் எமக்கு அரசியல் ரீதியாக நீண்டகாலமாக உறவு உண்டு. அவர்கள் இதுவரை இப்படி எமக்கு எதிராக எதையும் அமைப்பு ரீதியாக முன்வைக்கவில்லை. ஏன் “கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து” கொண்டிருந்த எமது சர்வதேசிய கண்ணோட்டத்தையும் சரி, நாம் சர்வதேச உணர்வுடன் உதவிய எதையும், அவர்கள் இன்றுவரை நிராகரித்தது கிடையாது.
அவர்களின் ஆதரவாளராகிய நீங்கள் இந்த விவகாரத்தில் ஒரு பக்கமாக பக்கச் சார்புடன் தலையிடுவதன் மூலம், பிளவுவாத்தையும் கலைப்புவாதத்தையும் ஊதிப்பெருக்கி திணிக்கின்றீர்கள். இந்த விவகாரத்தின் பின், பருண்மையான பொருள் சார்ந்த விடையத்தை திரிக்கின்றீர்கள் அல்லது அதை தெரிந்து கொள்ள முனையாது ஒரு நிலைப்பாட்டை திணிக்கின்றீர்கள். அது எப்படி என்று பார்ப்போம்.//
//சரி ம.க.இ.க கட்சி ஆயுதப்போராட்டத்தை நடத்தாமல், மாவோயிஸ்ட்டுகளை விமர்சிக்க முடியுமா? நாம் முடியும் என்கின்றோம். மாவோயிஸ்ட்டுகள் மா.லெ.மாவோயிஸ்ட்டுகள் தான் என்பதால், விமர்சனத்தை பகிரங்கமாக வைக்க கூடாதா!? வைக்கலாம். இன்று ம.க.இ.க கட்சி இதை செய்ய அதற்குரிய அரசியல் காரணங்கள் எப்படி இருக்க முடியுமோ, அப்படிதான் எம் நிலையும். இங்கு புதிய ஜனநாயகக்கட்சி மா.லெ.மாவோயிசத்தை நடைமுறைக்குரிய தத்துவமாக கொண்டு ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தவில்லை. புலத்தில் திடீர் என இன்று மார்க்சியம் பேசுபவர்கள், காலத்தின் தேர்வுடன் கூடிய அரசியல் வியாபாரிகள். //
“நீங்கள் எந்த அமைப்பின் ஆதரவாளர் என்று கூறிக்கொள்கின்றீர்களோ, அவர்களுடன் எமக்கு அரசியல் ரீதியாக நீண்டகாலமாக உறவு உண்டு. அவர்கள் இதுவரை இப்படி எமக்கு எதிராக எதையும் அமைப்பு ரீதியாக முன்வைக்கவில்லை.”
ஒரு வேளை உங்களை அவர்கள்ஒரு பொருட்டாகவே கொள்ளததனலாக இருக்காதா?
சரி நீங்கள் கூறும் புதிய ஜனநாயக கட்சியை நாம் “பாட்டாளி வர்க்க கட்சி”யாக ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக இது மா.லெ.மாவோயிசத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கி உருட்டியவர்கள். “..ஆயிரம் தவறுகள் இருந்தாலும்” என்று கூறி, அவர்களுடன் நின்று இருந்தால், நாங்களும் குட்டிச்சுவர்தான். நாங்கள் மண்ணில் போராடிய காலத்தில் கூட இவர்களுடன் சோந்து வேலை செய்யும் வகையில் இவர்கள் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியாக இருந்ததில்லை. வர்க்கப் போராட்டங்களும், தியாகங்களும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு வெளியில் நடந்தது. இவர்கள் “மா.லெ.மாவோயிசத்தை” உருத்திராட்சைக் கொட்டையாக்கி செபம் செய்து கொண்டு இருந்தனர். ஒரு பாட்டாளி வர்க்க கட்சியாக இருக்காத கட்சியின் “..ஆயிரம் தவறுகள்” உடன் ஆதரிப்பது என்பது, அரசியல் அபத்தம். சரி ம.க.இ.க கட்சி ஆயுதப்போராட்டத்தை நடத்தாமல், மாவோயிஸ்ட்டுகளை விமர்சிக்க முடியுமா? நாம் முடியும் என்கின்றோம். மாவோயிஸ்ட்டுகள் மா.லெ.மாவோயிஸ்ட்டுகள் தான் என்பதால், விமர்சனத்தை பகிரங்கமாக வைக்க கூடாதா!? வைக்கலாம். இன்று ம.க.இ.க கட்சி இதை செய்ய அதற்குரிய அரசியல் காரணங்கள் எப்படி இருக்க முடியுமோ, அப்படிதான் எம் நிலையும். இங்கு புதிய ஜனநாயகக்கட்சி மா.லெ.மாவோயிசத்தை நடைமுறைக்குரிய தத்துவமாக கொண்டு ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தவில்லை. புலத்தில் திடீர் என இன்று மார்க்சியம் பேசுபவர்கள், காலத்தின் தேர்வுடன் கூடிய அரசியல் வியாபாரிகள். http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6616:vinavusuperlink&catid=277:2009
புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இக் கவிதைக்கும் என்ன தொடர்பு?
நிச்சயமாக இலங்கையில் செயற்படும் ஒரே மார்க்சிய லெனினியக் கட்சி அதுவே.
அது பல இடர்கள் நடுவே முக்கியமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அவை என் வெல்லவில்லை என்பது இன்னொரு விடயம்.
போராட்டம் எதுவும் வெற்றிக்கான உத்தரவதங்களுடன் வருவதில்லை. இவையெல்லாம் இணையத்தளப் புரட்சி வீரர்கட்கு விளங்காது.
புதிய-ஜனநாயகக் கட்சி கொள்ளையடிப்பு போல புரட்சிகரமான வேலைகளையோ கொள்ளையடித்த பணத்தைச் சுருட்டிக் கொண்டு புலம் பெயர்வது போலவோ வீர தீரச் செயல்களைச் செய்யவில்லை என்பது உண்மை தான்.
குறுந் தேசியவாத அலையின் முன் அதனால் அதிகம் முன்னேறவில்லை. குறுந் தேசியவதத்துக்குச் சோரம் போன சில “இடது” அமைப்புக்கள் எதைச் சாதித்தன?
இன்று வரை, ஒவ்வொரு திருப்புமுனையிலும் புதிய-ஜனநாயகக் கட்சி எடுத்த நிலைப்பாடு சரியானதாகவே நிருபிக்கப் பட்டு வந்துள்ளது.
20 ஆண்டுகளாக பாரிஸில் குப்பைகொட்டிக்கொண்டிருக்கிற இணையத்தள புரட்சி வீரர்கள் தங்கள் சாதனைகளை வேண்டாம், பயனுள்ள செயல்களைச் சொல்லட்டும்.
மற்றவர்கட்கு மாசு கற்பிப்பதை விட அன்றும் இன்றும் எதைத் தான் செய்கிறார்கள்?
இனியும் அதையே தான் செய்வார்கள்.
//புலத்தில் திடீர் என இன்று மார்க்சியம் பேசுபவர்கள், காலத்தின் தேர்வுடன் கூடிய அரசியல் வியாபாரிகள்.//
பழைய அரசியல் வியாபாரிகட்கு இது ஒரு பிரச்சனை போலத்தான் தெரிகிறது.
குத்தகைக்கு எடுத்த வியாபரத்தில் தமது சரக்கு மதிப்பிழந்து வரும் போது மனச் சங்கடம் தான்.
மற்றான் சரக்கைத் திட்டாமல் நல்லதைத் தெரிந்து விற்றுப் பாருங்கள். பயன் கிடைக்கலாம். (உத்தரவாதம் இல்லை).
Subscribe to this comment’s feedபுதியதாய் அரசியல் புரிதலுக்கான மொழியில் தொடர்வோம்
பதிந்தவர் கலகம், January 07, 2010
இந்த விசயத்தைப் பொறுத்தவரை பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள். எப்படி தமிழகத்தில் ஒரு அமைப்பு இப்படித்தான் செயல் படவேண்டும் என்றூ வெளிநாட்டில் உள்ளவர்கள் வழிகாட்ட முடியாதோ அப்படித்தான் தோழர் இரயாவை அந்தக்கட்சியில் போய் சேருங்கள் என்பதும். தமிழகத்தில் இருந்து பார்க்கும் பலருக்கும் ஈழத்தின் வரலாறு முழுமையாய் தெரிய வாய்ப்பில்லை.
ஏன் இவர் புஜ கட்சி யோடு சேர வில்லை என்பதெல்லாம் எப்படி இயங்கியல் பார்வையாக இருக்க முடியும்.கேள்வியை கேட்பவர்கள் தனிப்பட்ட முறையில்(தோழமையை பேணுவதாக இருந்தால்) கேளுங்கள் . ஒரு குழுவில் ஏற்படும் மாற்றுக்கருத்துக்க���ை எப்படி மாற்ற முனைவீர்களோ அல்லது மாற்றிக்கொள்வீர்கள��� அப்படி செய்தல் தான் தேவை. இது தோழர் அனைவருக்குமே பொருந்தும்.
ஒரு அண்டை நாட்டு பாட்டாளி வர்க்கம் என்ற முறையில் இன்னொரு நாட்டு பாட்டாளி வர்க்கத்துக்கு கோரிக்கைதான் வைக்க முடியுமே தவிர கட்டளையிட முடியாது. ஒருவர் ஒன்றை விமர்சிக்க அக்கட்சியில் சேர்ந்துதான் ஆக வேண்டும் என்பதெல்லாம் இயங்கியல் பூர்வமான கண்ணோட்டமா என்று தெரியவில்லை.அவர் ஈழத்தின் பாட்டளி வர்க்க பிரதினிதியா என்பதைத்தாண்டி அந்த கண்ணோட்டத்தில் இருக்கிறரா? அப்படி எனில் நாம் எப்படி விமர்சனம் செய்ய வேண்டும்?
மண்ணில் செயல் படும் கட்சியினால் மட்டும்தான் புரட்சியையோ அல்லது சமூக மாற்றத்தையோ கொண்டுவரமுடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்ல���. அதனாலேயே மற்ற யாருக்கும் உரிமை இல்லை என்பதல்ல.
தோழர் இரயாவாகட்டும் மற்றதோழர்களாகட்டும��� தங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் மின்னஞ்சலில் கேட்பதுதான் சரி. அரசியல் ரீதியிலான தோழமை நீடிக்கும் வரை அந்த எண்ணம் இருக்கும் வரை வெளிப்படையான விவாதங்கள் தேவையற்றது. இப்படி வெளிப்படையான விவாதங்கள் தான் பதில் எனில் தோழமை உறவை எப்படித்தான் வளர்ப்பது?
முக்கிய பிரச்சினையே ஈழவிடுதலைக்கான மொழியும் தமிழாக இருப்பதுதான் அதுதான் எல்லையை தாண்டி பேசவைக்கிறது. ” தன் நாட்டுக்கான போராட்டத்தை மக்கள் தான் முன்னெடுக்கவேண்டும��� முன்னெடுப்பார்கள்,”
இரயா ம க இ கவை அப்போது பகிரங்கமாய் முத்துக்குமார் விசயத்தில் விமர்சனம் செய்தார்” என இது வரை பேசியதெல்லாம் விடுவோம். புதியதாய் அரசியல் புரிதலுக்கான மொழியில் தொடர்வோம்.ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்போம் கற்றல் தானே மார்க்சியம். ஏதேனும் தவறாக கூறியிருந்தால் தோழர்கள் கூறவும்.
தோழமையுடன்
கலகம்
…
இதனை தனிப்பதிவாக வினவில் விடுவீர்களா?
ஈழப்போராட்டம் அதன் தலைமையின் வழிகாட்டலில் எம்மக்களும், தேசத்தின் வளங்களும், போராட்டச் சக்திகளும் அழிக்கப்பட்டுள்ளது. இந்தவேளையில் நாம் எவ்வகையான பாதையை கடந்து வந்துள்ளோம் என்பதை விருப்புவெறுப்பு அப்பால் இருந்து நிதானமான ஆய்வை மேற்கோள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. நிர்ப்பந்தம் என்பது கூட எமது சுயவிருப்பத்தில் அமைந்ததும், மக்களின் எதிர்காலத்தை நோக்கிய விடியலுக்கான முன்நிபந்தனையாகவும் வைத்தே ஆரம்பிக் வேண்டும்.
ஆய்வு எங்கிருந்து தொடங்குவது
மொழியாடல் பற்றிய பிரச்சனை
மொழியாடல் சர்ச்சைக்குரியதாக இருப்பதையும் அவதானிக்க வேண்டியிருக்கின்றது. மொழியாடல் கூட வர்க்கம் தான் தீர்மானிக்கின்றது. உழைக்கும் வர்க்கம் சார்ந்த அணுகுமுறையை வழியுறுத்துவதும் போதும், ஆய்வை மேற்கொள்பவர்கள், எழுத்தாளர்கள் குட்டி முதலாளிய வர்க்கப் பின்புலத்தைக் கொண்டிருப்பதனால் மொழியாடலில் முரண்பாடு கொள்ளப்படுகின்றது. இதனையும் விவாதத்திற்குரிய அம்சமாக இங்கு வரையறுத்துக் கொள்ளல் தகும்.
ஆக இங்கு மொழியாடலை
ஆய்வின் தொடங்கம் எங்கிருந்து தொடங்குவது என்பது பற்றிய சர்ச்சை இருக்கின்றது. இந்தச் சர்ச்சை என்பது கூட அறிவியல் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
நடந்து முடிந்தவற்றில் இருந்து தொடங்குவது
எல்லாவற்றையும் தவிர்த்து இன்றைய நிலையில் என்ன செய்வது என்பதில் இருந்து தொடங்குவது
முன்னரே முடிவிற்கு வந்த கோட்பாடுகளில் இருந்து தொடங்குவது?
சமூக அமைப்பில் இருந்து தொடங்குவது? சமூக அமைப்பு என்கின்றபோது கொலனித்துவகாலத்திற்கு முன்னைய சமூகத்தில் இருந்து நந்திக்கரைவரையிலான வரலாற்றைக் கொண்டதாக இருப்பது சரியானதாகுமா?
நாம் செய்யப்வேண்டிய ஆய்வு என்பது முன்னையக் காலத்தைப் போல் அல்லாது ஒரு குறைப் பிரவசமானதாக இருக்கக் கூடாது என்ற நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.
குறிப்பாக இன்றைய நிலையில் இணையதளங்களில் விவாதிக்கப்படும் விவாதமுறைமைகளை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவையும் இன்றிருக்கின்றது. இந்தப் பரிசீலனை கூட மக்கள் நலன்சார் நிர்ப்பந்தத்தில் இருந்து தொடங்குதல் வேண்டும்.
ஈழச் சமூகத்தின் துர்ப்பாக்கிய நிலையை நாம் எவரும் இவ்வளவு சடுதியான முடிவிற்கு வரும் என்று நம்பியிருக்கவில்லை. இந்தச் சூழலில் நாம் நிதானத்தைக் கடைப்பிடிப்பது முக்கிய முன்நிபந்தனையாகின்றது.
மக்கள் இன்று திறந்த வெளிச் சிறையில் வாழ்கின்றனர். இவர்கள் தமது வாழ்வை (உறவுகளின் தயவு உட்பட) மற்றவர்களின் தயவை எதிர்பார்த்தே வாழ்கின்றனர்.
அரசபடைகளின் தயவு
உதவிநிறுவனங்களின் தயவு
உள்ளுர் அதிகாரவர்க்கத்தின் தயவு
அரசியல்வாதிகளின் தயவு
ஆட்சியாளர்களின் வாக்குகளின் நலனில் இருந்து வரும் சலுகைகளின் தயவு
கடன்கொடுப்பவனின் தயவு,
வட்டிவாங்குபவனின் தயவு
நித்தமும் நச்சரிக்கும் கடன் கொடுத்தவர் தயவு
சரீர பலம் கொண்டவர் தயவு
தன்னைப் பாதுகாக்க முடிந்தவர் தயவு
காணாமல் போனவர்களை கட்டுபிடிக்கத் தயவு
இருக்கின்றார்களா என்றியத் தயவு
இறந்தவருக்கு சடங்கு செய்யத்தயவு
தயவு தயவு தயவு
தயவுகள் அற்ற வாழ்வை நோக்கிய பயணத்தின் தயவு இன்று தேவையானது
சிந்திப்போம் அன்பர்களே
நாம் எழுதிக் கொண்டிருப்பது தனிப்பட்ட குடுப்பப் பிரச்சனையல்ல. இந்தச் சமூக அமைப்பில் எல்லாமே உள்ளடங்கிய நிலையில் இருந்துதான் பிரச்சனைகளை ஆராய வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் அகவுணர்வுக்கு உட்பட்ட நிலையில் கருத்துக்களையும், தீர்வுகளையும், தமது அகமுடிவுக் கோட்பாடுகளையும் முன்வைக்கலாம். ஆனால் போராட்டமே வாழ்க்கையாக கொண்ட மக்களின் தேவை என்பது நிச்சயம் மாற்றம் கொண்டே இருக்கின்றது.
இங்கு தனிநபர்களின் வீரவிளையாட்டுக்கள் பற்றிய கதையாடல்கள் அல்ல முதன்மையானது. அதே போல பிரமுகர்களின் இணைப்புக்கள் கூட சந்தர்ப்பவாத அரசியலின் ஒரு ஆரம்ப வடிவமே. இந்தச் சந்தர்ப்பவாத கூட்டு என்பதும் மீளவும் முள்ளிவாய்க்காலுக்கான ஒரு மடையாகவே கருத வேண்டும். இங்கு மக்கள் நலன் என்பதற்கு அப்பால் தனிநபர் இருப்பு என்பது முக்கியப்படுகின்றது. தனிநபர் இருப்பின் முக்கியத்துவம் என்பது மக்களுக்கான தேவையில் இருந்து வெளிப்பட்ட அம்சமாக கொள்ள முடிவதில்லை.
இவ்வாறான வரலாற்றுத் தவறுகளி;ல் இருந்து பாடம் கற்காது விடின் ஒரு அரசியல் முயற்சி தேவையே இல்லை. இதனை விட அடக்குமுறையாளனின் அடிமைத்தனம் மேன்மையானது. (அதாவது பாசீசத்தை விட முதலாளித்துவ ஜனநாயக அரசு முறைக்குள் இருக்கும் உரிமைகள் மேன்மையானதாகும். இதனையே அரச ஆதரவுக்குழுக்கள் அரசு மேன்மையானது என்று காதில் பூச்சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.)
மக்களின் வாழ்வு நிலையில் இருந்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என்பதே. இங்கு வர்க்க அரசியலை முன்னிறுத்தும் எழுத்துவடிவமும் போராட்டத்திற்கான விட்டுக் கொடுப்பற்ற விமர்சனங்களும் அவசியமான காலத்தில் சில நபர்களே இடையறாது செயற்பட்டிருக்கின்றார்கள்.
இன்று நிலை அப்படியல்ல. பற்பல சக்திகள் தம் நிலையில் இருந்து தாமே மேய்ப்பர்களாக இருப்பதாக முன்வந்திருக்கின்றனர். நல்லது.
இவர்கள் மக்களின் நலனில் இருந்து செயற்படுகின்றனரா? இதனை வரலாறு தீர்மானிக்குமாறு விட்டுவிடுவோம்.
இந்த உலகில் தனிமனிதனை விளம்பரம் செய்ய பல வழிகள் இருக்கின்றது. தனிமனிதர்கள் தம்மை விளம்பரம் செய்து கொண்டே போவார்கள். ஆனால் சிலர் மாத்திரமே மக்களின் நலன் கொண்டு தொடர்ச்சியாக இயங்குவார்கள். சரியான கருத்தை யார் வைத்திருக்கின்றார்களோ அவர்கள் பக்கமே புரட்சிகர சக்திகள் பின்னிப்பர்.
ஆக யார் சரியான கருத்தைக் கொண்டவர்கள், யார் சரியான சக்தி என்பதை நடைமுறை தீர்மானித்துக் கொள்ளட்டும்;.
மீளவும் தயவை நம்பி இருக்கும் மக்களின் விடிவிற்காக உழைப்பவர்களே இன்று அவசியானவர்கள்.
கவிதைக்கோ அது தொடர்பான கருத்துக்கட்கோ சம்பந்தா சம்பந்தமற்ற கருத்துக்கள் முரளியினவை. நிற்க.
யாருமே எந்த இணையத்-தள-பதியையும் இலங்கையில் செயற்படும் மார்க்சிய லெனினியக் கட்சியில் இணையக் கேட்கவும் இல்லை. அவர் மறுக்க வாய்ப்பும் இருக்கவில்லை .
இன்னமும் இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையையே சரிவரப் புரிந்து கொள்ளாமல் வாய்ச் சவடால் விடுவதும் தனி மனிதர் மீது சேறடிப்பதும் தான் சிலரால் நடத்தப்படுகிறது.
கேட்ட கேள்விகட்குப் பதில் இல்லை. ஆனல் மற்றவர்களை நிந்திப்பதற்கு மட்டும் குறைச்சல் இல்லை.
“இது வரை பேசியதெல்லாம் விடுவோம். புதியதாய் அரசியல் புரிதலுக்கான மொழியில் தொடர்வோம்.ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்போம் கற்றல் தானே மார்க்சியம். ஏதேனும் தவறாக கூறியிருந்தால் தோழர்கள் கூறவும்.” – கலகம்
இது நல்ல கருத்து. ரயா, முரளி, அசுரன், ஸ்ரீ ரங்கன் போன்றோர் தனிப்பட்ட தாக்குதல்களை கைவிட்டு, விடயங்களைத் திரிப்பதும் மனிதர்க்கும் அமைப்புக்களுக்கும் நோக்கம் கற்பிப்பதும் ஓயும் போது, பேசிய பலவற்றையும் எல்லாருமே விட்டுவிடலாம்.
“ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்போம் கற்றல் தானே மார்க்சியம்”.
உண்மை.
கற்பதற்கு மனிதருக்குத் தன்னடக்கம் தேவை.
எந்தத் தவறையுமே ஏற்காமல் மேலும் மேலும் வெறிபிடித்தவர்கள் போல வசையிலேயே இறங்கிக் கொண்டிருக்கும் வரை கற்பது கடினம்.
கற்க வேண்டியோரிடம் கலகம் வற்புறுத்திப் பேச வேண்டும்.
“இது வரை பேசியதெல்லாம் விடுவோம். புதியதாய் அரசியல் புரிதலுக்கான மொழியில் தொடர்வோம்.ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்போம் கற்றல் தானே மார்க்சியம். ஏதேனும் தவறாக கூறியிருந்தால் தோழர்கள் கூறவும்.” – கலகம்
//கற்க வேண்டியோரிடம் கலகம் வற்புறுத்திப் பேச வேண்டும்.//
இது நல்ல கருத்து
தோழர் ஜீரோ தாங்களும் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டுகிறேன்,
//கற்பதற்கு மனிதருக்குத் தன்னடக்கம் தேவை.//
தோழர் ஜீரா கோபப்படமாட்டீர்கள் என நம்புகிறேன்.
கற்பிப்பதற்கும் தன்னடக்கம் தேவை.
ஒரு ஆசிரியன் மாணவனாக இருக்க வேண்டும்.ஒரு மாணவன் ஆசிரியனாகவும் இருக்கவேண்டும் .
“கற்பிப்பதற்கும் தன்னடக்கம் தேவை.”
நிச்சயமாக. இதில் கோபிக்க என்ன இருக்கிறது?
ஒவ்வொரு துறையிலும் நான் மதித்த நல்ல ஆசிரியர்கள் மிகவும் தன்னடக்கமானவர்களே. மாணவர்களிடமிருந்து கேட்டறிவதற்கும் தவறுகளை ஒப்புக்கொள்வதற்கும் அவர்கள் கூசியதில்லை .
“ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்போம் ”
இதில் யாருமே கற்பிப்பதில்லை. ஒருவர் மற்றவர்களை அவதானித்தும் பிறர் கருத்துக்களை மதித்துமே கற்றல் நிகழ்கிறது. இது முக்கியமானது. இதைச் சொன்னதற்குக் கலகத்துக்கும் வலியுறுத்தியதற்கு விடுதலைக்கும் நமது நன்றிகள் உரியன.