உமாசங்கர் IAS சஸ்பெண்ட் !
சிறுசேமிப்புத்துறை ஆணையராக இருந்த உமாசங்கர் 21.7.2010 அன்று தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்காக பலிகடாவாக்கப்பட்டிருக்கும் உமாசங்கரைப் பற்றி சமீபத்தில்தான் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தோம்.
ஜெயா ஆட்சியின் போது சுடுகாட்டுக்கூரை ஊழலை வெளிக்கொணர்ந்த உமாசங்கர் மீது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் தி.மு.க அரசு ஆரம்பத்தில் உறவு கொண்டது. அதன்படி அரசு கேபிள் டி.வி இயக்குநராக நியமிக்கப்பட்டதும் மாறன் சகோதரர்களது சுமங்கலி டி.வியின் முறைகேடுகளுக்கு எதிராக உமாசங்கர் செயல்பட ஆரம்பித்தார்.
பின்னர் மாறன்களும் கருணாநிதி குடும்பமும் சேர்ந்து கொண்ட போது உமாசங்கர் வில்லனாக்கப்பட்டார். சுமங்கலி டி.வியை நாட்டுடமையாக்கவும், தயாநிதி மாறனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியதை மாறன்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாரில்லை. அதை தடுப்பதற்கு கருணாநிதியும் தயாரில்லை. பிரிவினை வந்த குறுகிய காலத்திலும் மாறன்களுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் நல்லுறவு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் உமா சங்கரை பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று சொல்லி விசாரிக்க ஆரம்பித்தார்கள். அதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்ற உமாசங்கர் தான் பழிவாங்கப்படுவதற்கான காரணத்தையும் தெளிவாகவே தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் வழியாக தண்டிப்பதற்கு காலதாமதம் ஆகுமென்ற காரணத்தைக் கூட தாங்கிக்கொள்ளாத தி.மு.க அரசு நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து தனது பாசிச வெறியை தணித்துக் கொண்டது. அவரை என்ன முகாந்திரத்தில் சஸ்பெண்ட் செய்தார்கள் என்பது எந்த நாளிதழிலும் வெளிவரவில்லை. விசாரித்தாலும் தெரியவில்லை.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டை விசாரிக்கலாமா என்பது நீதிமன்ற வழக்கில் உள்ளதால் அதன்படி இடை நீக்கம் செய்ய வாய்ப்பில்லை. மற்றபடி கிறித்தவ தலித்தான உமா சங்கர் தன்னை இந்து தலித்தாக பொய் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தார் என்று ஒரு பழைய புகாரை வைத்து இந்த இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இந்த புகாரை தூசிதட்டி எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த காலதாமதமே இது பொய் என்பதை தெளிவாகக் கூறுகிறது.
இரண்டு கழகங்களின் ஆட்சியிலும் நடந்த ஊழல் முறைகேடுகளை அவர் தடுக்க நினைத்ததால்இப்போது அவரே பொய்யான ஊழல் புகாருக்கு ஆளாகிவிட்டார். அதிகார வர்க்கமும், ஊடகங்களும் அவரைக் கொண்டு கொள்ளவில்லை.
___________________________________________________________
பதிவர் “சவுக்கு” சங்கர் கைது !
2008ஆம் ஆண்டில் அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும், இவரோடு அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவும் பேசிய தொலைபேசி பேச்சுக்கள் ஊடகங்களில் வெளிவந்தன.
தெரிந்தவர்களை ஊழல் புகாரில் காப்பாற்றும் முயற்சிகள் இதன் மூலம் வெளிவந்தன. வழக்கமாக அரசுக்கு எதிரானவர்களின் தொலைபேசி பேச்சுக்கள் வரும்போது அரசுக்கு ஆதரவானர்களின் பேச்சுக்கள் வெளிவந்தது கருணாநிதி அரசுக்கு கடும் எரிச்சலை தந்தது.
இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை குழுவின் அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த ஏ.சங்கர் என்பவர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதையும் செய்யப்பட்டார். பணி நீக்கம் செய்யப்பட்ட சங்கர், புழல் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு பிறகு பிணையில் வெளிவந்தார். இந்த வழக்கும், இவர் தொடர்பான பணி விசாரணையும் இப்போது நிலுவையில் இருக்கிறது.
சங்கர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழக மனித உரிமைக் கழகம் என்ற இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் “சவுக்கு” எனும் இணையத் தளத்தில் தி.மு.க அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வந்தார். குறிப்பாக காவல் துறை ஐ.ஜிக்கள் ஜாபர் சேட், சங்கர் ஜிவால் இருவரும், மற்றும் நக்கீரன் காமராஜ் போன்றவர்கள் திடீரேன பெரும் சொத்து சேர்த்ததையும், அதற்கு தி.மு.க அரசை பயன்படுத்தியதையும் விவரங்களோடு சவுக்கு இணைய தளம் எழுதி வந்தது.
தி.மு.க அரசால் பழிவாங்கப்பட்ட நிலையில் சவுக்கு இந்த புலனாய்வுகளை மற்ற ஊடகங்களில் இல்லாத அளவில் செய்து வந்தது. சவுக்கு தளத்திற்கு தகவல் தருபவர்களில் போலீசு, உளவுத்துறை, அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் அனைவரும் உண்டு. தனிப்பட்ட காரணங்களினால் கூட சம்பந்தப்பட்டவர்கள் இந்த தகவல்களை தந்திருக்கக்கூடும்.
சவுக்கு இணையதளம் குறிப்பாக பத்திரிகையாளர்களிடம் பிரபலமாகி வந்தது. அதனால் ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டவர்கள் எவரும் இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சங்கர் எழுதுவதை நிறுத்துவதற்கு அதிகார வர்க்கம் அடக்குமுறையை கையிலெடுத்திருக்கிறது.
நேற்று புதன்கிழமை காலை மதுரவாயிலில் மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்த ஒருவரை தாக்கியதாக சங்கர்மீது வழக்குப் பதிவு செய்து மதுரவாயல் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்திருக்கின்றனர். இது முற்றிலும் பொய் வழக்காகும். எந்த சட்டப்பிரிவுகளில் சுலபமாக பிணையில் வரமுடியாதோ அந்த பிரிவுகளில் வேண்டுமென்றே போடப்பட்ட பொய் வழக்குதான் இது.
மேலும் சங்கரை போலீசார் சித்திரவதை செய்திருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அவரது எழுத்து அம்பலப்படுத்தல்களை எதிர்கொள்ள முடியாத அதிகார வர்க்கம் இத்தகைய அதிகார துஷ்பிரயோகத்தை வைத்து அடக்க நினைக்கிறது.
_______________________________________________________________
உமாசங்கர் இரு கழக ஆட்சிகளின் ஊழலையும் எதிர்த்து நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் இன்று பழிவாங்கப்பட்டுள்ளார். பொதுவில் அரசு, அரசாங்கம் என்று இரண்டையும் நாம் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள், அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதிமன்றம், சிறை ஆகிய துறைகளை உள்ளடக்கியதுதான் அரசு. இதில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் அமைப்பு மட்டுமே அரசாங்கம். அவ்வகையில் அரசாங்கம் என்பது அரசின் ஒரு உறுப்பு மட்டுமே.
எல்லா அரசுகளும் குறிப்பிட்ட ஆளும் வர்க்கங்களின் நலனை வைத்தே செயல்படும். இந்தியாவில் அது முதலாளிகள், நிலப்பிரபுக்கள், பன்னாட்டுநிறுவனங்கள் அடங்கிய ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதியாக செயல்படுகிறது. இந்தியாவின் அரசு எந்திரம் முதலாளிகளின் நலனுக்காக செயல்படுவதை அன்றாடம் நாளிதழ்களில் வரும் பல செய்திகளிலிருந்து அறியமுடியும்.
இந்த எந்திரத்தில் ஒரு அதிகாரி நேர்மையாக செயல்படுவது என்பது ஆளும் வர்க்கம் விதித்திருக்கும் எல்லையை மீறாமல் இருப்பதுதான். அந்த எல்லையை மீறிவிட்டார் என்பதனாலேயே உமாசங்கர் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்ந்து செயல்படும் அரசு, நீண்ட கால நோக்கில் முதலாளிகளின் நலனுக்காக முரண்படாமலேதான் செயல்படுகிறது.
ஒரு வேளை முரண்பட்டால் அது முதலாளிகளின் நலனை மையமாக வைத்தே முடிவு செய்யப்படும். மாறன்கள் என்ற தரகு முதலாளிகளும், தி.மு.க என்ற கட்சி இப்போது தரகு முதலாளிகளைக் கொண்ட கட்சியாக மாறியிருக்கும் சூழலில் உமாசங்கரது நடவடிக்கை என்பது முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படும். அதனால்தான் ‘நேர்மையாக’ செயல்படுவதாக ஊடகங்களால் போற்றப்படும் சில அதிகாரிகள் கூட உமாசங்கருக்கு ஆதரவாக பேசவில்லை.
அரசியல்வாதிகளின் ஊழலைக்கூட எழுதிவிடலாம். ஆனால் அதிகாரவர்க்கத்தின் ஊழலை எழுதினால் அதை எதிர்கொள்வது சிரமம். ஏனெனில் அரசின் திட்டங்கள், கொள்கைகள், கண்காணிப்பு, வழக்கு தொடுத்தல், சிறையிலடைத்தல் முதலான அனைத்து அதிகாரங்களையும் அதிகார வர்க்கமே கையில் வைத்திருக்கிறது. இவர்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள் இல்லை என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இவர்களது அதிகார பலத்தின் வீச்சை புரிந்து கொள்ளலாம்.
ஜாபர்சேட்டின் ஊழல் முறைகேடுகளைப் பற்றி சங்கர் எழுதியிருக்கிறார் என்றால் அதை அந்த அதிகாரி சட்டத்தினால், ஜனநாயகப்பூர்வமாக எதிர்கொள்ளவில்லை. தனது மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விளக்கமும் சொல்லவில்லை. எளிமையாக ஒருபொய் வழக்கு போட்டு சங்கர் பிணையில் வராதபடி செய்து விட்டார்.
நக்கீரன் பத்திரிகை பாசிச ஜெயாவை எதிர் கொண்டு வளர்ந்தது எவ்வளவு உண்மையோ அந்த அளவு தி.மு.கவுக்கு ஜால்ரா கும்பலாக மாறியதனாலும் ஆதாயம் அடைந்திருக்கிறது. அதை சங்கர் அம்பலப்படுத்தியதும் தனது தி.மு.க ஆதரவு பலத்தினால் நக்கீரன் அதை எதிர்கொள்ளத்தானே செய்யும்? கேட்டால் நக்கீரன் காமராஜ் ரொம்ப நியாயமாக சங்கர் கைது செய்யப்பட்டதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று கூறுவார். இருந்தாலும் இந்தக் கைதினால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தவரும் அவர்தான் என்பதை அவரால் மறுக்க முடியுமா?
தி.மு.க அரசாங்கம் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசாக மாறி, அதன் தலைமையே பெரும் முதலாளிகளாக மாறிவிட்ட நிலையில் அதிகார வர்க்கம் முழுதும் அதன் அடியாளாகவே செயல்படும். அதன் விளைவுதான் உமாசங்கரையும், சங்கரையும் அதிகார வர்க்கம் தனது அதிகார பலத்தினால் தற்போது தண்டித்திருக்கின்றது. இனியும் தண்டிக்கும்.
இணையத்தில் எழுதுவதால் நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் ஆளாய் சங்கர் இருப்பார் என்று தோன்றுகிறது. எனினும் இந்த பட்டியல் சங்கரோடு முடிவடையாது. அல்லது எழுதும் மற்றவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்கு பணிந்து போவதா எதிர்கொள்வதா என்பது எழுதுபவர்களின் அரசியல் புரிதல், அர்ப்பணிப்பைச் சார்ந்தது. ஆனானப்பட்ட பழ கருப்பையா வீட்டுக்கே ஆட்டோ வரும்போது சங்கரெல்லாம் எம்மாத்திரம்?
இதனால் நாம் தளர்ந்து போவோம் என்பதுதான் அதிகார வர்க்கங்களின் கணிப்பு. அது பொய் என்று காண்பிப்பது நமது கையில். இல்லையேல் உமாசங்கர், சங்கர் வரிசையில் இன்னும் சிலர் சேரக்கூடும்.
ஆயினும் இதை அமைதியாக ஏற்கப் போகிறோமா? இல்லை இந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கப் போகிறோமா?
________________________________________________________________
[…] This post was mentioned on Twitter by வினவு and Logesh Kumar, ஏழர. ஏழர said: உமாசங்கர் IAS – பதிவர் சவுக்கு கைது http://bit.ly/9Zvu6T #vinavu MUST READ […]
நல்ல பதிவு. தைரியமாக எழுதியாதற்க்கு பாராட்டுக்கள். ஜெ. ஆட்சியில் கஞ்சா கேஸ் என்று பொய் வழக்குகளை நியாபகபடுத்துகின்றன. காவல்துறையினர் இத்தனை கீழ்தரமாக இறங்கிவிட்டனர். இங்கு பாசிசம் என்பது மிக மிக மறைமுகமாக, தந்திரமாக, அதிகம் வெளியே தெரியாமல் பரவி வருகிறது. தி.மு.க தலைமை எதற்க்கும் துணிந்தவர்கள் என்றே தோன்றுகிறது.
கைது கண்டிக்கத்தக்க ஒன்று.
அடுத்து வினவுதான்…
நண்பரே இன்று தான் சட்டம் தன் கடமையைச் செய்து விடக்கூடும் என்று வலைச்சரத்தில் எழுதி மை கூட காய்ந்து இருக்காது. அதற்குள் இந்த அக்கப்போரா?
http://blogintamil.blogspot.com/2010/07/4.html
:(((
வேற என்ன சொல்லி விடமுடியும்னு தெரியலை.
—
உங்கள் பதிவை ரீடர் வழி படிக்கிறமாதிரி முழு செய்தி ஓடையை (RSS FEED) கொடுக்கலாமே. முன்னமே இதுகுறித்து கேட்டிருந்தேன்.
தோழர் பாலபாரதி,
செய்தியோடையை முழுவதுமாக அளித்தால் அது செயலிழந்து போகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க இயலவில்லை
பீட்பர்னர் தளத்திலும் சரியான பதில் இல்லை. அதனால்தான் அப்படி தரவியலவில்லை.
சிரமத்திற்கு வருந்துகிறோம்.
தோழமையுடன்
வினவு
வினவு! நான் Feedly என்னும் firefox add-on பயன்படுத்துகிறேன். நன்றாகவே வாசிக்கமுடிகிறது.
சவுக்கு வெளிப்படுத்தும் விசியங்களை, தகவல்களை எந்த தமிழ் இதழிலும் அப்படியே பிரசுரிக்க முடியாத படி இங்கு சூழல். இந்த கட்டற்ற சுதந்திரம் இணையத்தில் மட்டும் தான் சாத்தியம். இணையம் மற்றும் அதை பயன்படுத்த கணனிகள் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் : இவை இந்தியாவில் சாத்தியமாக அடிப்படை காரணம் தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் தான். அவை அனுமதிக்கப்ட்டும் வரை, 80கள் வரை அரசின் கட்டுப்பாட்டில் தான் அனைத்து ஊடகங்களும் இயங்கு முடிந்தன. (அரசு விளம்பரங்கள், ந்யூஸ் பிரின்ட், லைனெஸ்குகளை நம்பித்தான் பிழைப்பே). இந்திரா காந்தி காலத்தில் தான் உச்சகட்ட கொடுமை.
தூர்தர்ஸன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ : இரண்டும் அரசின் பிரச்சார பீரங்களாகவே செயல்பட்டன. எதிர் கட்சிகள், மாற்று கருத்துகள் : இவைகளுக்கு அதில் இடமில்லை.
இன்று இணையம் அளிகும் கட்டற்ற சுதந்திரம் மட்டும் இல்லாவிட்டால், செய்திகளை எப்படி தைரியமாக, வெளிப்படையாக இப்படி வெளிப்படுத்த முடியும் ? தனியார் தொலைகாட்சி நிலையங்கள் அனுமதிக்கப்படும் வரையில் செய்தைகளின் தன்மையே வேறு விதமாக, மிக கட்டுபடுத்தப்பட்டு இருந்தன. அவை பற்றி சற்று பெரியவர்கள் தான் அறிவர்..
இது கட்டுரையின் மைய விவாதத்தை திசைதிருப்பும் என தோன்றுகிறது மற்ற பதிவுகளில் இதனை தொடரலாமே பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள்கொடுக்கும் விதமாக தொடரலாமே
ஆமா ஆமா கட்டற்ற சுதந்த்ரம்…அப்படியே அதியமானு ஒரு எப்.எம். ரேடியோ ஆரம்பிச்சு (யாரும் இன்னைக்கு அலைவரிசை வாங்கிக்கலாமே)..அதிலே..ஆண்டர்சன் தூக்கில் போடப்படவேண்டும் என்ற மெசேஜை பாடல்களுக்கு நடுவே மட்டும் ஒலிபரப்பிப் பார்க்க வேண்டும்..ரொம்ப போரடித்தால் போபாலில் ராஜீவின் கொலைக்கரத்தைப் பற்றி அதே எப்.எம்.இல் சென்சார் இல்லாத விவாதத்தையும் நடத்தணும்..
இதெல்லாம் நான் எழுதுறதால ஏதோ அதியமான், களி திங்கிறதுக்கு நான் ஆசைப்படுறேன்னு நீங்க நினைத்தால் அதுக்கெல்லாம் நானா பொறுப்பு?
உலகமயமாக்கலை தாங்கள் ஆதரிப்பதால் உங்கள் எண்ணம் அப்படி. தவறான புரிதல்
this comment is not for diverting the core issue. and hence no need for continuing this line. but, my point was, without internet (and not blocked like in Saudi or China), even this savukku would not be possible.
///உலகமயமாக்கலை தாங்கள் ஆதரிப்பதால் உங்கள் எண்ணம் அப்படி. தவறான புரிதல்/// No. it your ignorance that blinds you to the reality of this net where we are all able to discuss. if only govt BSNL alone is allowed in telecom till date, this would not be possible. o
தோழர்களை இந்த கைதைக் கண்டித்து குரல் எழுப்ப வழிகளையும் பரிந்துரைக்கலாம்….
அணைத்து தோழர்களும் சவுக்கின் கட்டுரைகளை அவர் அவர் வலை தளத்தில் மீண்டும் பதிவு செய்து
அணைத்து வாசகர்களுக்கும் சென்று சேர்க்கலாம். அப்பொழுது ஆளும் வர்க்கத்தினரால் ஒன்றும் செய்ய முடியாது.
செய்வீர்களா?
“இன்று இணையம் அளிகும் கட்டற்ற சுதந்திரம் மட்டும் இல்லாவிட்டால், செய்திகளை எப்படி தைரியமாக, வெளிப்படையாக இப்படி வெளிப்படுத்த முடியும்”
மகஇக வினர் தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்ய தடைவிதிக்கும் அரசு இணையத்திற்கு மட்டும் ஏன் கட்டற்ற சுதந்திரம் அளிக்கிறது, என்பது புரியவில்லையா? ஏனென்றால் இணையத்தில் வருபவர்கள் 90% ஆளும்வர்க்க அடிவருடிகள்.
//அளிக்கிறது, என்பது புரியவில்லையா? ஏனென்றால் இணையத்தில் வருபவர்கள் 90% ஆளும்வர்க்க அடிவருடிகள்.//
அட விடுங்க பாஸு.. நீங்க வேற சும்மாக் கிடந்த செறங்க சொறிஞ்சி விட்ட மாதிரி…
இப்போ என்னாகும் தெரியுமா?… சவுக்கு சங்கர் கைதை விட்டு விட்டு கருத்துச் சுதந்திரம் உ.தா.த. காலாத்தில் வளர்ந்திருக்கு என்று பேச ஆரம்பித்துவிடுவார்.
சவுக்கு சங்கரையாவது விட்டு வைங்கப்பா…
are you too one of those aduvarudihal ? Net servers are all over the world and sites can be hosted outside India. Tamilmanam is a good example. Indian govts cannot ban or block websites that easily (as the courts can stop them). unlike China or Saudi or any communist dictatorshiop nation. get that first and then you can yap about adivarudihal.
என்ன முரன்பாடு பாருங்கள். கட்டற்ற சுதந்திரம் வழ்ங்குவதாக சொல்லப்படும் இணையத்தில் எழுதியவருக்கு கிடைத்தது சிறை….
yes, that is in India. not Europe. the point is that no one could stop Savukku from publishing on the net. the full freedom still exists. what happened outside the net is different. or may be you want this freedom to blog on net curtailed as in many nations where dissent is suppresed more brutally. like in China, Saudi, N.Korea, etc.
and pray, how will you tolerate dissent after you establish your ‘revolutionary’ state of the workers ? Comrade Thalapathi, whom i met at marian meeting of bloggers clearly stated that the works of A.Marx, Leena Manimekkalai, Sankara Ramasubramaniam and other ‘revisionists’ would not be allowed in their dream state. that is a ‘committe’ will decide which books and works to be allowed for the people.
You people dare to talk about freedom and free speech.
//Net servers are all over the world and sites can be hosted outside India. Tamilmanam is a good example. Indian govts cannot ban or block websites that easily (as the courts can stop them). //
இங்க அவ்ர் என்ன சொல்ல வர்றாறுனாக்க, அரசை விமர்சனம் செய்யனும்னா முதல்ல பாஸ்போர்ட் வாங்கி பாரினுக்குப் போயிரனும், அங்கருந்துக் கிட்டே கட்டுரை எழுதனும்.
இதச் செய்யத் தெரியாத சவுக்கு சங்கர் தனது நடவடிக்கைகளுக்கு முன்பு அதியமானிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். கட்டற்ற சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துறது என்ற டெக்குனிக்கை கற்றுத் தந்திரருப்ப்பார்.
இதுல ஒரு தந்திரம் இருக்கு, புரட்சி செய்யிறவன் அந்த இடத்துல இருக்கனும், பாஸ்போர்ட் வாங்கி பாரின்ல இருந்து கட்டுரை எழுதுறவனுக்கு இங்க புரட்சி செய்ய முடியாது. கட்டற்ற சுதந்திரத்தை இணயத்த்தில் மட்டும் வழங்குவதன் மூலம் புரட்சியையும் நடக்க விடாமல் செய்த மாதிரி ஆச்சி, கட்டற்ற சுதந்திரம்னு பெருமை பேசினா மாதிரியும் ஆச்சி..
எப்புடி… ஒரே இண்டர்நெட்டுல ரெண்டு கனெக்சன்…
அசுரன்
//இன்று இணையம் அளிகும் கட்டற்ற சுதந்திரம் மட்டும் இல்லாவிட்டால், செய்திகளை எப்படி தைரியமாக, வெளிப்படையாக இப்படி வெளிப்படுத்த முடியும் ?//
ஸ்ஸாப்ப்பா முடியல்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே….
is this the original Asuran of poar-parai or one of the allakkaihal of Vianvu ?
ஒரிஜினல்தான்…
அதியமான் கொஞ்சம் நாகரீகமாக பேசுங்கள். வினவின் அல்லக்கைகள் வினவையும், தோழர்களையும் இழிவுபடுத்திவிட்டு வினவிலேயே பேசுவதற்கு கொஞ்சமாவது வெட்கப்படுங்கள். தோழர்கள் கேள்விகளால், கருத்துக்களால் உங்களை குடைந்தால் என்ன செய்யவேண்டும்? குத்துதே, குடுயுதே என்று சிவ சிவ என்று உங்களுக்குப் பிடித்த ஜோசியம் போன்ற அடிமுட்டாள்தனமான தொழிலை செய்யவேண்டியதுதானே? இங்கு வந்தால் கேள்விகள் வரத்தான் செய்யும். பதிலை கருத்துக்களால் சொல்வதுதான் சரியே தவிற வினவு அல்லக்கைகள் என்று காறித்துப்புவது நீங்கள் மெச்ச விரும்பும் கனடா ஜனநாயகமா தெரியவில்லை!
:))). funny that you speak about decency. you had no hesitation in calling me names in the past here. and yes, there are allakkaihal who use false names of to abuse anyone. ok. and i reply in kind. why should i allow myself to be insulted by cowards who hide in the annoymous world of internet.
///இங்கு வந்தால் கேள்விகள் வரத்தான் செய்யும். பதிலை கருத்துக்களால் சொல்வதுதான் சரியே தவிற வினவு அல்லக்கைகள் என்று காறித்துப்புவது ///
Tell that to your many comrade first. I quit arguing here some months back due to the abuse of such tenth rate allakaihaihal who were changing their ids constantly and indulging in personal attacks. I was sick of it and vowed never ever to comment here or read vinavu. may be i was wrong to break the pledge to myself. yes.
இந்த சென்டிமெண்ட் சீனெல்லாம் சிவாஜி படத்திலேயே நிறைய பார்த்துவிட்டோம். உங்களை அவன் இவன் என்று பேசியதால் தியாகுவைக் கண்டித்தோம். வினவின் அல்லக்கைகள் என்று வாசகர்களை கேவலப்படுத்துவதால் உங்களை கண்டிக்கிறோம். தப்பு செய்தால் தப்பு தப்புதான் என்று ஒத்துக் கொள்ளக்கூட நேர்மையற் உங்களைப் போன்றவர்கள் ஜனநாயகம் பற்றி பீற்றுவது சாத்தான் வேதம் ஓதுவதை நினைவபடுத்துகிறது. ஒருவர் தனது கருத்தை, அரசியல்பார்வையை, கண்ணோட்டத்தை மறைப்பதுதான் இழிவே தவிர பெயரை மறைப்பதல்ல. எங்களைப் பொறுத்தவரை கருத்தை மறைத்துக் கொண்டு ஒரிஜனல்பெயரில் வருபவர்களைத்தான் தவறானவர்கள் என்கிறோம்.
///. வினவின் அல்லக்கைகள் என்று வாசகர்களை கேவலப்படுத்துவதால் உங்களை கண்டிக்கிறோம்.///
வினவு,
பழச மறந்திட்டு வசதியா பேசறீங்க. கருத்துகளை முன்வைப்பதாலேயே, உமது தோழர்கள் பலரும் (அசுரன் உள்பட) எம்மை அடிவருடி, கைக்கூலி, பார்பனியவாதி. எடுபிடி என்ற பல ‘பெயர்களில்’ அன்புடன் விளித்த வரலாற்றை மறைத்துவிட்டு இப்படி ‘நடுநிலையாக’ பேசுகிறீர்களே !!!
பொறுக்க முடியாமல், ஒரு முறை நான் அன்னானிமஸ் (அனானி) என்ற பாணியில் ஒரு முறை பின்னூட்டம் இட்ட உடனேயே, ஏழர என்ற ‘வாசகர்’ உடனே அதை ‘தெரிந்து’ கொண்டு, ஏன் அதியாமான் இப்படி அனானி வேடம் என்றார் ? வினவு குழுக்கு ‘மட்டும்’ தெரிய வேண்டிய இந்த விசியம் எப்படி ஒரு பிரபல ‘வாசகர்’ உடனே அறிந்து கொண்டாராம் ? பல புனைப்பெயர்களில் வினவுவின் ‘அல்லக்கைகள்’ அல்லது ‘தோழர்கள்’ அல்ல்து வினவு வே புனைபெயர்களில் தனி மனித தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று உணர்ந்து கொண்டேன்.
கார்ல் மார்க்ஸ் என்ற பெயரில் தியாகு என்னை அவன் / இவன் என்று மட்டும் பேசவில்லை. படு கீழ்தரமாக பேசினார். (பழைய ‘பகையை’ அவர் மறக்கவேயில்லை என்றே தெரிகிறது. இன்று டிவிட்டரில் நட்புக்கரம் நீட்டுகிறார். அவரை இனி நம்பத் தயாராக இல்லை. ஆர்குட்டில் எம் நண்பர் பெயர்களை அறிந்து அதே பெயர்களில் போலி பின்னூட்டங்கள் இடுப்வர் என்ற பலத்த சந்தேகம் அவர் மேலும் இதர ‘தோழர்’கள் மேலும் உண்டு).
சுகுணா திவாகர் எம் நண்பர். சில ஆண்டுகளாக அறிவேன். கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை / அன்பு உண்டு. அவரை பற்றி அறிவேன். சுமார் 15 ஆண்டுகளாக தீவிரமான கொள்கை (மார்க்சிய / பெரியாரிய) பிடிப்போடு செய்லபடுவர் என்பதை அவரை அறிந்தவர்களுக்கு புரியும். நர்சிம் செய்த பெரும் தவற்றை ‘போதிய அளவில்’ கண்டிக்கவில்லை (அது என்ன போதிய அளவு ? )என்று காரணம் காட்டி, அவரை புதிய ‘அடியாள்’ என்று கூசாமல் தலைப்பிட்டு எழுதீனிர். பல ஆண்டுகள் கொள்கைபிடிப்போடு நேர்மையாக பணி புரிபவர், திடிரென ‘அடியாள்’ ஆகிவிட்டாரா ? இதுதான் ஸ்டாலின், மாவோ பாணி அடக்குமுறை. இரே நாளில் ஒரு நெடுநாளைய தோழர், ‘எதிரி’ ஆக முத்திரை குத்தி தண்டிப்பது. அதிகாரம் உங்கள் கைகளில் இருந்தால், ஸ்டாலின் அன்று தயங்காம்ல் செய்தது போல, இன்று சுகுணாவை உள்ளே தள்ளியிருப்பீர்கள்.
// பொறுக்க முடியாமல், ஒரு முறை நான் அன்னானிமஸ் (அனானி) என்ற பாணியில் ஒரு முறை பின்னூட்டம் இட்ட உடனேயே, ஏழர என்ற ‘வாசகர்’ உடனே அதை ‘தெரிந்து’ கொண்டு, ஏன் அதியாமான் இப்படி அனானி வேடம் என்றார் ? வினவு குழுக்கு ‘மட்டும்’ தெரிய வேண்டிய இந்த விசியம் எப்படி ஒரு பிரபல ‘வாசகர்’ உடனே அறிந்து கொண்டாராம் ? பல புனைப்பெயர்களில் வினவுவின் ‘அல்லக்கைகள்’ அல்லது ‘தோழர்கள்’ அல்ல்து வினவு வே புனைபெயர்களில் தனி மனித தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று உணர்ந்து கொண்டேன்.//
அதியமானின் ஆய்வு புல்லரிக்கிறது. நீங்கள் வேறுபெயரில் வந்தாலும் உங்கள் மெயில் ஐ.டி மற்றும் ஐ.பி எண்ணை வைத்து உங்களுக்கு தானியங்கி முறையில் ஒதுக்கப்பட்டிருக்கும் அந்த நீல டான்ஸ் பாப்பாவின் படம் தானாகே வந்துவிடும். வினவில் ஏகப்பட்ட -அவை உளறல் என்றாலும்- பின்னூட்டமிட்டிருக்கும் உங்களது அந்த நீலப்படம் பலருக்கும் மனப்பாடமாகயிருக்கும். மேலும் உங்கள் மொழி நடையை வைத்துக் கூட திறமையான வாசகர்கள் அடையாளம் காணக்கூடும். இப்படித்தான் கேள்விக்குறி தியாகுவின் ஆள்மாறாட்டத்தையும், நெத்தயடி முகமதின் ஆள்மாறாட்டத்தையும் கண்டுபிடித்தார்.
பூனை கண்ணை மூடினாலும் சரி சாபமிட்டாலும் சரி உலகம் இருண்டு விடும் என்ற சராசரி அற்பமனநிலையில் இருக்கும் உங்களுடன் தோழர் அசுரன் விவாதிப்பது எங்களுக்கு பெரும் மலைப்பைத் தோற்றுவிக்கிறது. அசுரன் அளவுக்கு பொறுமையை வினவுக்கும் கொடுக்க வேண்டுமென்பதற்காக நல்ல ஜோசியர் இருந்தால் சொல்லுங்கள், பரிகாரம் செய்கிறோம்.
அசுரன் சொல்றது நெசம்தான். அதியமானுக்கு புரிந்து கொள்வதில் சில விசேச பிரச்சனை
இருக்கு போல.. ஏனுங்க சார்
@@@@@நர்சிம் செய்த பெரும் தவற்றை ‘போதிய அளவில்’ கண்டிக்கவில்லை (அது என்ன போதிய அளவு ? )என்று காரணம் காட்டி, அவரை புதிய ‘அடியாள்’ என்று கூசாமல் தலைப்பிட்டு எழுதீனிர்.@@@@
இதுக்கா சார் எழுதுனாங்க… வெக்கமேயில்லாம ஈமெயில் பாஸ்வோர்ட திருடி, அவரு வெளியிடாத கட்டுரையோட டிராப்ட் காப்பியை அப்படியே வெளியிட்டது எந்தவகை நேர்மை ஐயா? இது அடியாள்தனமில்லையா? இதைத்தானே இந்த கட்டுரையில் வினவு விலாவாரியா எழுதியிருக்காங்க..
சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிமின் புதிய அடியாள் !!
ஆக இந்த காரணத்திற்காக அடியாள் என்று சொன்னதைக்கூட இத்தனூட்டு தமிழ் கட்டுரையை படித்து புரிந்து கொள்ள முடியாமல் உங்க இஷ்டத்துக்கு யூகிச்சு நீங்க பின்னூட்டம் போடுவதை பார்தால் இனிமேல் உங்களுடைய எல்லா பின்னூட்டங்களையும் வெற்று உளரல் என்று மற்றவர்கள் நினைக்க மாட்டார்களா?
யோசிச்சு பாருங்க
ஏழர,
ரொம்ப புத்திசாலித்தமா பேசறதா நினைப்பா ?
சுகுணா எதையும் ‘திருட’வில்லை. மாறாக சிவராமன் செய்தது நம்பிக்கை துரோகம். (நர்சிம் செய்த பெரும் தவற்றை யாரும் நியாயப்படுத்த முனையவில்லை என்பதும் அடிப்படை விசியம்). சிவராமன் செய்த துரோகம் பற்றி நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் எழுதிய முக்கிய பதிவு இது :
http://jyovramsundar.blogspot.com/2010/06/blog-post.html
///அந்த நீல டான்ஸ் பாப்பாவின் படம் தானாகே வந்துவிடும். வினவில் ஏகப்பட்ட -அவை உளறல் என்றாலும்- பின்னூட்டமிட்டிருக்கும் உங்களது அந்த நீலப்படம் பலருக்கும் மனப்பாடமாகயிருக்கும். //
i know that. but on that day, i was away and used a computer from a browsing centre. and i did not write much that day. just a brief line which is as anonymous as it can be. I know for sure that all these 7.k, Kelvikkuri, etc are all allakkaihal for Vinavu and who are ‘helped’ by the owners of this site in various ways for ‘attacks’.
And you haven’t asnwered my main point about the past record of your comrades in using chociest words and abuses against me ? You allowed that happily while you ‘condemn; me for using the term ‘allakkaihal’ here. that is neutral stand, isn’t it ? and some of your titles, and the objective poem that was published against Leena too are ‘decent’, in your view ? Let the readers decide what and who is ‘decent’. ok
///வினவில் ஏகப்பட்ட -அவை உளறல் என்றாலும்- பின்னூட்டமிட்டிருக்கும் உங்களது ////
எவை உளரல் என்று நீங்களே சொல்வது சிரிப்பை தருகிறது. இதுவரை உருப்படியாக, ஆதாரபூர்வமாக எதையும் மறுக்க இயலாத நீர், பல நூறு பதில்களை ‘உளரல் என்று ஒற்றை வரியில் நிராகரிப்பதுதான் மார்க்சிய விஞ்ஞான முறையோ ? வினவு செய்வது உளரல் என்று ஒற்றை வரில் நிராகரிப்பது எத்தனை மடத்தனமோ, அதே தான் இதுவும்.
இன்னும் சொல்லப் போனால் அசுரனக்கும் இருக்கும் விசிய ஞானம் கூட உமக்கு இல்லை என்று சொல்வேன். (அசுரனுக்கும் முழுமையா, ஒழுங்கா தெரிந்து கொள்ளும் தெளிவு கிடையாது என்பது வேறு விசியம்). நான் இங்கு பின்னூட்டம் இடுவது வாசகர்கள், பல மறைக்கப்பட்ட தகவல்களை, விவாத கோணங்களை அறிந்து கொள்ளட்டும் என்பதால் தான். not for your ‘enlightenment’, which is humanly impossible for any one.
///பூனை கண்ணை மூடினாலும் சரி சாபமிட்டாலும் சரி உலகம் இருண்டு விடும் என்ற சராசரி அற்பமனநிலையில் இருக்கும் உங்களுடன்//
:)))). actually this phrase suits you and your comrades most. you are the people who live in a dream world, interpreting the events with your coloured vision and refuse to look at history of the world (esp USSR and China and Korea) in a realsitic manner. Marxists / Communists exist all over the world. Most of them differ from your view about Stalin, Mao and many other issues. All historians and analysts around the world are now unanimous in their views about the terrible atrocities commited under Stalin, Mao and in many ‘communist’ naions. National archives of all those nations are now opened to dig up the truths about the past. All you can hark is about mis-information by US media during the cold war years. You do not have the moral courage to face truth and reality, with so much new proof being dug up over the recent years. And people of Russia and E.Europe certainly do not share your ‘views’ about their history.
and you call me ‘poonai kannai moodi kondual’ !!!!! Ironical and crazy.
இதென்ன கிறுக்குத்தனம் அதியமான்
@@@ஏழர, ரொம்ப புத்திசாலித்தமா பேசறதா நினைப்பா ?///
எழுதியது நான் ஏழர என்று பதில்.. 3 நாளாய் அசுரனிடம் ஆப்பு வாங்கியதன் அயற்சியா??
எப்படி வாய்கூசாமல் புழுகமுடிகிறது உங்களால்
@@@@@நர்சிம் செய்த பெரும் தவற்றை ‘போதிய அளவில்’ கண்டிக்கவில்லை (அது என்ன போதிய அளவு ? )என்று காரணம் காட்டி, அவரை புதிய ‘அடியாள்’ என்று கூசாமல் தலைப்பிட்டு எழுதீனிர்.@@@@
இப்பிட எழுதவேண்டியது.இது பொய் என்று நான் நிரூபித்தவுடன் அப்படியே ஜம்ப் பண்ணி எங்கோ போகவேண்டியது.. இதைத்தானே இத்தனை நாளாக செய்துகொண்டிருக்கிறீர். உங்களிடம் நேர்மை இருந்தால், இதை நிரூபியுங்கள் பார்க்கலாம்…
@@@@@நர்சிம் செய்த பெரும் தவற்றை ‘போதிய அளவில்’ கண்டிக்கவில்லை (அது என்ன போதிய அளவு ? )என்று காரணம் காட்டி, அவரை புதிய ‘அடியாள்’ என்று கூசாமல் தலைப்பிட்டு எழுதீனிர்.@@@@
உங்களால் முடியாது என்கிறேன் நான்!
கேள்விக்குறி,
கைதவறி ஏழர என்று வந்துவிட்டது. தமிழில் டைப் செய்ய இந்த கணனியில் போதிய வசதியில்லாததால், இந்த தடுமாற்றம். மேலும், எம்மை பொறுத்த வரை ஏழர, கேள்விக்குறி, மற்றும் இன்னபிற ‘தோழர்களுக்கு’ வித்தியசம் தெரியவில்லை.அடிக்கடி புதிய பெயரிகளிலும் தோன்று திடீர் தாக்குதல்கள் ! யாரும் பிளாகர் அய்டி அல்லது சொந்த இணைய தள விபரம் சொல்லாமல், வெறும் புணைப் பெயரில் விளையாடும் விளையாட்டு இங்கு அதிகம்.
சரி, சுகுணா பற்றி உமது அறிவு அவ்வளவுதான். சரி, நான் கேட்ட கேள்வி : உங்கள் கையில் அதிகாரம் இருந்தால் அவருக்கு என்ன தண்டனை அளிப்பீக ? வதை முகாமா ? ஒரே நொடியில் ஒரு நெடு நாளையா தோழர் (உண்மையிலேயே அவர் உங்க குழுவிற்க்கு தோழர்தான்) திடீரேன அடியாள் / துரோகி ஆகி, தண்டிக்க படும் வினோதமான நீதி. இதுதான் உங்களைப் போன்றவர்கள் கனவு கானும் சோசியலிச சர்வாதிகாரத்தில் பெரிய அளவில் நிகழும்.
பல்லாயிரம் உண்மையான தோழர்கள், அற்ப குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கி, (பல தடவைகள் பொய் குற்ற்ச்சாடுகள்) பல பத்தாண்டுகள் வதை முகாம்களில் அடைக்கப்ட்ட கொடுமையான வரலாறு முகதில் அறைகிறது. ஆனால்….
அசுரனிடம் நான் ஆப்பு வாங்கினேனா, அல்லது அவர் என்னிடம் ஆப்பு வாங்கினேனா என்று நீரே ‘தீர்ப்பு’ வழங்க வேண்டாமே. மவ்னமாக இங்கு படிகும் வாசகர்கள் அதை முடிவு செய்து கொள்ளட்டும்
@@@@உங்கள் கையில் அதிகாரம் இருந்தால் அவருக்கு என்ன தண்டனை அளிப்பீக ? @@@@
முதலில் பொய்யை அடித்து விடவேண்டியது அதை அம்பலப்புத்தியபின் இந்த மாதிரி எதிர்காலத்தை பற்றிய ஒருமொன்னைத்தனமான கேள்வி ..
அதியமான் ஜோசியம் உமக்குத்தான் தொழில் எமக்கல்ல… இப்போதைய பிரச்சனைக்கு எதிரகால தண்டனை பற்றி பேசும் அறிவிலியாக எனக்கு விருப்பமில்லை. மாறாக இன்று இழைக்கப்படும் அநீதிக்காக இன்றே போராட விரும்புகிறேன்!
///உங்கள் கையில் அதிகாரம் இருந்தால் அவருக்கு என்ன தண்டனை அளிப்பீக ?////
///செம்புரட்சி நடந்து உங்கள் தலைமையில் ஆட்சி நடந்தால் சிபிஎம், திரிபுவாதிகளை என்ன செய்வீர்கள்? ///////
இப்படியெல்லாம் கேட்குறதுனால, அவனுங்கள என்ன பண்ணுவோம்கிறது இருக்கட்டும், உன்னைய என்ன பண்ணுவோம்கிறது தான உன் பயம் என்று யாராவது யோசித்தால், அதை வன்’மை’யாக கண்டிக்கிறேன்!
பயமா அதுவும் எங்கள் அண்ணன் அதியமானுக்கா??
இத சொன்னவுடனே பாருங்களேன்! ஓடிவந்து நடக்காத விசயத்துக்கு எனக்கு எதுக்கு பயம்ன்னு விளக்கம் குடுப்பார்!
நடக்காத விசயம்ன்னா, எதுக்கு எதிர் பிரச்சாரம் பன்றே? ன்னு கேட்டா, ஒரு வேளை உங்க பிரச்சாரத்தால நடந்திருச்சின்னா என்று பயப்புடாமத்தான் பதில் சொல்வார் எங்க அண்ணூன்…………. 🙂
இக்சா மையத்தில் ஏப்ரல் 15 அன்று கூட்டம் நடத்தியவர்கள் இயற்றிய தீர்மானம் ஒன்றைத்தான் கருணாநிதி அரசு நிறைவேற்றி இருக்கிறது.
வன்மையாக கண்டிக்கப்படவேண்டும், இது குறித்து பதிவெழுகின்ற அனைத்து தோழர்களும் எழுதுதல் வேண்டும்.
http://www.anweshanam.com/
வினவு இதைப் பார்த்தாலே மனம் பதறுகின்றது.
ரத்தம் கொதிக்கின்றது…
தமிழர்களுக்கு மட்டும் ஏன் எங்கு சென்றாலும் இந்த இழி நிலை.
இதைப் பற்றி நம் அரசியல்வாதிகள் வாய் திறக்காமலும், எந்த நடவடிக்கையும்
எடுக்காமல் இருப்பதும் ஏன்.
இந்தக் கொடிய சம்பவம் பற்றிய தங்களது விரிவான பதிவு எதிர்பார்க்கின்றோம்.
இந்தத் தளத்தின் வலது முனையில் உள்ள வீடியோ இணைப்பைப் பார்த்து வீட்டுத்தான் இதை எழுதுகின்றேன்.
ithu oru nalla pathivu. intha arasu enthiram makkalukku ethiranathu. yar ithai ethirthalum intha arasu paainthu kutharum enpathu nirupikkap pattullathu.
தோழர்.சங்கர் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.வீட்டில் சென்று கைது செய்து விட்டு காவல் நிலையத்தில் இருக்கும்போதே அவர் மீது போலிசே புகார் தயார் செய்து கைதும் செய்திருப்பது அதிகார வர்கத்தின் அராஜகத்தை காட்டுகிறது.சங்கர் கைது சட்டவிரோதம் என்ற ஆள்கொணர்வு மனு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.நீதிமன்றம் என்ன செய்யபோகிறது என்று நாளை பார்ப்போம்.
intha arasu makkalukku ethiranathu enpathu ithilum niroopikkap pattullathu. yaraka irunthalum arasukku ethiranavarkalai intha arasu odukkum enpathu ithilum niroopikkap pattullathu.
he used his power to get job for his wife in an US-based MNC company.
சவுக்கு சதியால் கைது செய்யபட்டிருக்கிறார். அரசை எதிர்பவர் என்ற முறையில் அனைத்து பதிவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாக இதை கருத வேண்டும்.
கழகங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று ஒரு மகான் கூறியது நினைவுக்கு வருகிறது. இப்போது காங்கிரஸ்-ம் அதே குட்டையில்தான் இருக்கிறது. (கைப்பாவை : சி பி ஐ)
yes we should oppose this.
வன்மையாக கண்டிக்கப்படவேண்டும், இது குறித்து பதிவெழுகின்ற அனைத்து தோழர்களும் எழுதுதல் வேண்டும்.
வன்மையாக கண்டிக்கின்றோம். வினவு சொன்னபிறகுதான் சவுக்கு சென்று பார்த்தேன். அசத்தி இருக்கின்றார்.
கலக்கட்டீங்க (சவுக்கு) சங்கர் !!!!
பொறம்போக்குப் பொய்யர்கள் தான் இந்த அதிகார வர்க்கங்கள்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் என்று பொய்யான அல்லது போலியான சான்றிதல் கொடுத்தது அரசுவேலையில் இருப்பவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை அவசியம் அவசரமும்கூட .இதைப்பற்றி வினவு பகுதியில் விரிவான கட்டுரையை எதிர்பார்கிறேன்.
உலகின் முதல் பணக்காரன் ஆகத்துடிக்கும் இந்த கொள்ளை கூட்டத்தின் அதிகாரத்தால் பாதிக்கபட்டோர் பலர், சிலர் பற்றியே விபரம் தெரிந்திருக்கிறது, ஆனால் அனைத்தும் தெரிந்தும் இந்த கேடுகெட்ட கொள்ளை கூட்டத்தை ஆதரிக்கும் தொண்டர் படையை நினைத்து கோபப்படுவதா, பரிதாபப்படுவதா என தெரியவில்லை!
நண்பர்களே,
இது மாதிரி அநியாயமான செயலை வன்மையாக கண்டிப்பதோடு இல்லாமல் மேற்கொண்டு என்ன வழிகளில் தோழைரை மீட்க வேண்டும் என பதிவர்கள் அனைவரும் யோசித்து செயல்பட்டால் நல்லது.
அன்பு
IN MADURAI DHINABOOMI EDITOR ARRESTED BY MADURAI POLICE LIKE SANKAR BECAUSE OF THE ONLY REASON HE PUBLISHED THE NEWS AGAINST THE MADURAI GRANITE MAFIA P.R.P( TAMILNADU REDDY BROTHERS)ALAGIRI AND I.G.OF POLICE ALSO SUPPORTED THE P.R.P.WE SHOULD RAISE OUR VOICE AGAINST THIS ONE ALSO.
oru rooba arisiyum,ilavasa tv yum thangalai kappatri vidum endru ninaithu kondu irundhavargalukku, kadaisi nimida kuzappamtham tharpodhu nadaiperum kaithugal.edharkum oru yellai undu…… thotta.
:((
Enathu kandanangal !
only persons close to umashanker know how efficient and honest he was.he is more far more sincere and strict known to us.people like him deserve more from the public for whom he worked.it is sad for him to be born in india and that too in his community.i think he will be the first man to make a breakthrough against a government by his very own intelligence.let us be with him in creating a greater awareness against misusing peoples money.
இதுதான் கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ போலும். பதிவர்கள் அனைவ்ரும் இந்த காட்டு தர்பாருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அம்பலப்படுத்திய வினவுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
nermaiyai uzhaithu makkal panathai kaapaatrinaal ivvalavu kashtam oru ias adhgaarike varum endraal ini namadhu vottu maoistgalukke. jananayagam total waste.avar uyirodu irupadhe aacharyam thaan.
சவுக்கின் கைதை வன்மையாய் கண்டிக்கிறேன் வினவு .இதன் பெயர் தான் எழுத்து சுதந்திரமா
ஒரு காலத்தில் மனநிலை சரியில்லாதவர் என்று பொய்பிரச்சாரம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அதே உமாசங்கர்தானே? நான் முன்பு கூறிய அதே கருத்தையே இப்போதும் கூறுகின்றேன்: இதுநாள் வரையிலும் கொள்ளையடித்து சேர்த்த மக்கள் பணத்தை எப்படி பாதுகாப்பது என்ற கவலை கருணாநிதி குடும்பத்தை பிடித்து ஆட்டுகின்றது, எனவே நியாயம் பேசுபவர்களைக் கண்டாலே கருணாநிதிக்கு பேயைப் பார்த்தது போல கால் வழியே மூத்திரம் போகின்றது. ஆத்திரமும் கோபமும் இன்னும் அதிகரிக்கும் எனவே அடக்குமுறை ஆட்கடத்தல் அடிதடி பொய்வழக்கு எல்லாம் இன்னும் உச்சகட்டத்தை எட்டும். தமிழக மக்கள் இவற்றை சந்திக்க ஆயத்தமாக வேண்டும். (நக்கீரன் பத்திரிகை கருணாநிதி வீட்டு அடுப்படித் துணி ஆகி ரொம்ப நாள் ஆச்சு).
இக்பால்
கைதை வன்மையாக கண்டிக்கிறேன். இக்கைதுக்கு எதிராக எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சி என்றாலும் வினவில் தெரியப்படுத்தவும். கலந்து கொள்கிறேன். இப்படி பட்ட நிகழ்வுகளை முளையிலே கிள்ளி எரிந்து விட வேண்டும். இந்தியாவில் கருத்து சுதந்திரம் உள்ளதாம்! வெட்கக்கேடு!