முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

-

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!
பல்லக்கிலிருந்து இறக்கிவிடப்பட்ட பார்ப்பனியம் போலீசு பாதுகாப்புடன் நடையை கட்டுகிறது

திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவிலில் 1993ஆம் ஆண்டு ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதே கோவில் முன்பு பெரியார் சிலை இடிக்கப்பட்ட போது ராமனது படத்தை எரித்த போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. தற்போது இந்தக் கோவிலில் மேலும் ஒரு பார்ப்பன ஆதிக்கத்தை தோழர்கள் முறியடித்திருக்கின்றனர்.

கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களின் போது 3 நாட்கள் பிரம்ம ரத மரியாதை என்ற ஒரு கேவலம் நடக்கும். இதன்படி வேதவியாசபட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சக அய்யங்கார் பட்டர்களை, யானை முன்னே செல்ல மாலை குடை தீப்பந்தம் ஆகியவற்றுடன் பல்லக்கில் அமர வைத்து மனிதர்களே தூக்கிச்செல்வதுதான் பிரம்ம ரத மரியாதை. பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது.

இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் ‘பாதந்தாங்கிகள்’ (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். “கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு” என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார்.

இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வ்ழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்.

கோவில் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உதவிட வேண்டியும், “இவ்வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டு பட்டருக்கு எதிராக வாதாட அனுமதிக்க வேண்டும்” என்று நீதி மன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் வாதாடினர்.

வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் கைசிக ஏகாதேசியான கடந்த வியாழக்கிழமையன்று (17/11/2010) கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் பல்லக்கில் தூக்கிச்செல்ல பாதுகாப்பு தரக்கோரி காவல்துறையிடம் பார்ப்பன பட்டர்கள் அனுமதி கோரினர். இந்த மனுதர்ம கோரிக்கைக்கு இந்துமதவெறி அமைப்பு வானரங்கள் பலவும் கும்பல் சேர்த்துக் கொண்டு ஆதரவளித்தன.

இவ்விசயத்தில் கோவில் பிரகாரத்தில் பல்லக்கு தூக்க தடை விதித்து வெளியில் சொந்தமாக தூக்கிச்செல்லலாம் என காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

“மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, எவ்விடமாக இருந்தாலும் சமூக குற்றமே! எனவே கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல கோவிலுக்கு வெளியிலும் பல்லக்கு தூக்க அனுமதிக்க முடியாது. இது மனுதர்ம விதிப்படி மனிதர்களை விட தான் உயர்வானவன் என பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள முனைவதை அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்து, மீறினால் தடுத்து நிறுத்துவோம்!”,  என மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி மற்றும் ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் ராஜா உள்ளிட்ட தோழர்கள் பட்டர்கள் மற்றும் காவல்துறையினரை எச்சரித்தனர்.

இந்நிலையில் திருவரங்க கோவில் ரெங்கா கோபுரம் முன்பாக தோழர்கள் குவிய துவங்கினர். இதை கண்டவுடன் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பட்டரின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலுக்கு வெளியில் பிரம்ம ரத ஊர்வலம் நட்த்த ஏதுவாக நூற்றுக்கணக்கான காவலர்களை இறக்கி, மனித உரிமை பதுகாப்பு மைய தோழர் வழக்குரைஞர் போஜகுமார் மற்றும் ம.க.இ.க தோழர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போராட்ட்த்தை தடுக்க காவல் துறை முயன்றது.

வழக்கமாக கவுசிகப் புராணம் பாடிய பின் அதிகாலை 5.20க்கு கோவில் முன் வாசல் வழியாக சொந்த காசைப் போட்டு தயாரித்த பல்லக்கில் பவனி வருவதற்க்கு ஏற்ப்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், ம.க.இ.க தோழர்களால் தான் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்து அஞ்சி நடுங்கி கோவில் நிர்வாகம் அளித்த மாலை,சந்தன,குடை மரியாதைகளை ஏற்க மனமில்லாமல் பின் வாசல் வழியாக(வடக்கு வாசல்) காவல்துறை உதவியுடன் தப்பி ஓடினார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமும் நகைப்புடன் அதிசயத்தும் போயினர்.

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!
என்னா லுக்கு !

பல நூற்றாண்டுகளாக கடவுள் உண்டென்றும் அந்த கடவுளுக்கு நிகரானவன் தான் என்றும் ஆணவத்துடன் இருக்கும் பார்ப்பனக் கொழுப்புக்கும், ஆதிக்கத்துக்கும் பெயர் போன திருவரங்கத்தில் “சூத்திர, பஞ்சம, பெண்கள், குழந்தைகளை உள்ளிட்ட மக்களை அணிதிரட்டி ம.க.இ.க தோழர்கள் 1993ல் நடத்திய “கருவறை நுழைவு போராட்டத்தின்” வெற்றியை தொடர்ந்து இன்று மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, வெளியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு பட்டர்களின் பிரம்ம ரத மரியாதை எனும் அவமரியாதை முடிவுக்கு வந்தது.

இவ்வெற்றி நிகழ்வினை மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து, திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு (இந்த சிலை இந்து மத வெறியர்களால் சிதைக்கப்பட்டபோது உடனடியாக மக்களை திரட்டி தேசிய நாயகன் என்று இந்து வெறியர்களால் அழைக்கப்படும் ராமன் படத்தை செருப்பால் அடித்தும், படத்தை கொளுத்தியும் ம.க.இ.க போராடிய பின் மீண்டும் நிறுவப்பட்டது) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,

“தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்!
பெரியாரின் வாரிசுகள் என்பதை நிலைநாட்டுவோம்!”

என விண்ணதிர முழக்கமிட்டு கொண்டாடினர்.

இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள்.

ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் ’கைப்புள்ள கதைபோல்’ ’கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!’ என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர்.  ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது.

அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை. அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள்.

பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள்.

எது எப்படியோ அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை உயர்நீதிமன்றமும் பட்டர்களின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது “அயோத்தி அல்ல”, தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

போராடிய தோழர்களுக்கு வினவின் வாழ்த்துக்கள்!!

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

______________________________________

தகவல், புகைப்படங்கள்: ம.க.இ.க, திருச்சி.
______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

 

 

 

 1. ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு!!…

  அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தமிழர்கள் தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது….

 2. பார்பனியத்தைக் கொல்லைப் புறமாக ஓட வைத்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

 3. […] This post was mentioned on Twitter by வினவு, karthick. karthick said: RT @vinavu: ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! https://www.vinavu.com/2010/11/20/srirangam-pallaku-battar/ […]

 4. வேத வியாசர் மீனவ சமூகத்தவர் என்று தான் பாரதக் கதை சொல்லுகிறது. இத்தனை காலமும் தவறுதலாக ஒரு பார்ப்பனர் சுமக்கப்பட்டார்.
  பிராயச்சித்தமாக இனிக் கொஞ்சக் காலத்துக்கு ஒரு மீனவ சமூகத்தவரைப் பார்ப்பனர்கள் சுமப்பார்களா?

 5. தொடர்ந்து சீரங்கம் பார்பனர்களின் கொழுப்பை அடக்கிவரும் மக இகவினருக்கு வாழ்த்துக்கள்

  இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு

 6. இந்த மனித உரிமை மனித உரிமை ன்னு சொல்றாங்களே அந்த கருமம் தான் இங்க இந்தியாவில் அறவே இல்லையே, ஆனா நம்ம சீனாவில் அது ரொம்ப கொள்ளை மலிவு விலையில் ஏராளமா கிடைக்குதாமே நம்ம செல்வாக்க பயன்படுத்தி அங்கேருந்து இறக்குமதி பண்ணி இங்க விநியோகம் பண்ணலாமே.

  • என்னது – China-ல மனித உரிமை நிறைய இருக்கா? ப்பூபூபூபூ… Comedy பண்ணாதிங்க.

  • சீனாவுல கம்யூனிச அரசாங்கம் போய் முதலாளித்துவ திரிபுவாதிகள் ஆட்சிக்கு வந்து 20 வருசம் ஆச்சு .. சீனாவ இன்னும் எத்தன வருசத்துக்கு பிடிச்சு தொங்கிக்கிட்டு இருப்பதாக உத்தேசம் ?.. கொஞ்சம் வரலாறு படிச்சிட்டு வாங்கோன்னா …

   பல்ப் கண்டுபிடிச்சவர் பேரு வச்சிட்டு இப்படி பல்ப் வாங்குறியே நைனா ?..

 7. பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்பவர்கள் தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் அறிக்கைப் போர் நடத்தினாலும் அதை களத்தில் நின்று முறியடிக்கும் எதிர்வினையாக இருப்பது ம க இ க மட்டும்தான் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தோழர்களுக்கும், அவர்களுடன் களத்தில் நினற அத்தனை பேர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த அறிக்கைப் போர் (இவற்றிலும் நேர்மை இல்லாதது வேறு விசயம்) வீரர்களில் ஒரு சில தமிழினவாத அமைப்புகள், திக, போலிகம்யூனிஸ்ட்டுகள் வரை ம க இ க கார்ட்டூன்கள், பாடல்களை திருடி அவர்களின் நிகழ்சசிகளில் அரங்கேற்றித்தான் வருகிறார்கள். மக்களை அவர்கள் ஏமாற்றலாம். ஆனால் மக்கள் இவர்களை இனம் காண்பார்கள்.

 8. //ஏனெனில் இது “அயோத்தி அல்ல”, தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.//

  பெரியாரின் வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள்

 9. பார்ப்பனிய கொடுங்கோண்மைக்கு எதிரான போராட்டங்களில்
  முன்னோடியாகத் திகழ்வதோடு தொடர் வெற்றிகளைக் காணும்
  திருச்சி ம.க.இ.க மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்
  தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  1993 கருவறை நுழைவுப் போராட்டம். முதற் கட்ட
  போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து
  பேருந்துகளிலும், தொடர் வண்டிகளிலும், லாரிகளிலும் திருச்சி
  நகரை நோக்கி வந்தத் தோழர்களைக் காவல் துறை வழிமறித்து
  திருப்பி அனுப்பியதும்; திரும்பாதவர்களைக் கைது செய்ததும்;
  காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவி ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் பங்கேற்று கைதான தோழர்களும்; திருச்சி வரலாற்றிலேயே முதன் முறையாக ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டிருந்த காக்கிச் சட்டைகளும்; கைப் பேசி வசதி இல்லாத அக்கால கட்டத்தில் போராட்டத்தை மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்த தோழர்களின் திறமையும்; இரண்டாம் கட்டப் போராட்டத்தில் பார்ப்பன இந்து முன்னணிக் காலிகளின் தாக்குதலுக்குள்ளாகி இரத்தம் சிந்தி கருவரைக்குள் நுழைந்து வரலாற்று சாதனை புரிந்த இரண்டு பெண் தோழர்கள் உள்ளிட்ட இருபத்திரண்டு தோழர்களின் கட்டுக் கோப்பும்-நெஞ்சுறுதியும்; அ.திமு.க வைச் சேர்ந்த திருவரங்கம் M.L.A சூத்திரவாள் R.சௌந்திரராஜன் தலைமையில் பார்ப்பணர்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டமும்; அன்றே இதற்கு எதிராக சத்திரம் பேருந்து நிலையத்தில் தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டமும்; பட்டர்களைத்தவிர பிற பார்ப்பனர்கள் உள்ளிட்ட வேறு யாரும் நுழைய முடியாத கருவரைக்குள் நுழைந்து சாதனை படைத்தமைக்கு நன்றி தெரிவித்து நூறு ரூபாய் நோட்டை உண்டியலில் திணித்த ஒரு சாதாரண பார்ப்பணரின் ஆதரவும்; ம.க.இ.க நடத்தியது வன்முறைப் போராட்டம் என திருச்சி பாலக்கரை பொதுக்கூட்டத்தில் பச்சையாய் வசைபாடிய தி.க.தலைவர் வீரமணியின் ‘வீரமிகு எழுச்சி’ வசையுரையும்; வழக்கு திருச்சி ஐந்தாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்த போது வரிசையாக நின்ற போராளிகளைப் பார்த்து இவாளெல்லாம் யார் என்றே தெரியாது என்று
  பல்டியடித்த பட்டர்களின் வாக்கு மூலமும் இக்கட்டுரையைப் படித்த பிறகு என் கண்முன்னே ஒரு படக்காட்சியாய் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

  அன்று வீழ்த்தப்பட்ட பட்டர்களின் கொட்டம் இன்று
  புதைக்கட்பட்டிருக்கிறது. மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்
  தோழர்களே.

 10. it is a real revolution.
  as usual there is no news in the newspaper.
  now Tamil Nadu see another revolution. the GOD himself come to a marriage and filed the
  affidavit -that he [GOD] BELIEVE THE NON BELIEVER, even though , the non believer never accept the Existence of the God Himself.
  the whole Tamil Nadu praise those who done this impossible thing.

 11. வாழ்த்துக்கள் தோழர் வினவு,
  ///ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் ’கைப்புள்ள கதைபோல்’ ’கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!’ என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர்.///

  தோழர் அசுரன் பெயரில்
  தி.க கலகத்தை செர்ந்த
  அசுரன் என்பவரின் ப்ளாக்கில் வெளியாகியிருந்தது அதை பார்த்த பிறகுதான்
  இரண்டு அசுரர்கள் இருப்பது தெரிய வந்தாது

 12. // ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது “அயோத்தி அல்ல”, தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.//

  உண்மையான பெரியார் வாரிசுகள் நாம் என்று மீண்டும் நிரூபித்தாகிவிட்டது, ஆளும் கும்பல்களின் அடிவருடியான கீ.வி. யை என்னவென்று சொல்வது……………
  பார்ப்பனத் திமிர் அடக்கிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

 13. Hello frnz …i’m a person who feels Humanity nd Humans are more important than any other thing in the universe.Don’t say u hv 2 destroy brahmins..bcuz there are many brahmins who are secular and hv kindness towards all.i say so bcuz my frnd z brahmin..he is so kind n helpful 2 all…i agree some idiots still dominate that mentality in brahmins must be destroyed and YES, Congrats to Frndzz for doin tht yet again in srirangam…HUMANE is Important. How is it just for a human 2 carry another ?? WELL DONE FRIENDZ…Hats off

 14. பார்ப்பன கீர்ப்பன விசயத்துக்கெல்லாம் நான் வரலை..

  இப்படி இறக்கி விட்டது நல்ல முடிவு. கடவுளை தூக்கினால் சரி (நான் ஆத்திகன்) இவர்களை எதற்குத் தூக்கணும்?

  எல்லோரும் ரொம்ப டென்ஷன் ஆகிட்டாங்க போல.. படத்தை பார்த்தால் தெரியுது 😀

 15. நல்ல செய்தி. ஆணவம் பிடித்தவர்களையும அகம்பாவம் பிடித்தவர்களையும் இப்படித்தான் அசிங்கபட வைக்கவேண்டும் (shame shame pappu shame). யாராவது எனக்கு ம க இ க என்பதன் விரிவாக்கம் சொன்னால் தெரிந்துகொள்வேன். துநிச்சல்மிக்கவர்கள் நம் நாட்டில் குறைவு, அவர்கள் யார் என்று என்னை போன்றோருக்கு தெரியவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

  • ம.க.இ.க – மக்கள் கலை இலக்கிய கழகம்.
   பு.ஜ.தொ.மு – புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
   பு.மா.இ.மு – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
   வி.வி.மு – விவசாயிகள் விடுதலை முன்னணி
   பெ.வி.மு – பெண்கள் விடுதலை முன்னணி
   ம.உ.பா.மை. – மனித உரிமை பாதுகாப்பு மையம்

 16. போராட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
  தி.க வுடனான சகோதர யுத்தம், உங்களுக்கு பெருமை ஏற்பதாக இல்லை!

  • தி க வுக்கும் நம்ம ம. க.இ.க வுக்கும் ஏணி வச்சா கூட எட்டாது,

   தி க ஒரு பிழைப்பு வாத அரசியல் இயக்கம், எத்தனை தி க வினர் தங்கள் வீடுகளில் பெண்களை சமமாக நடத்துகிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம். உருக்கு தான் இவர்களின் பொய் உபதேசம். உண்மையில் அவர்களால் ஒன்னும் செய்யமுடியாது.

  • தமிழகத்தில் பெரியாரின் பங்களிப்பை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்றால் பெரியார் சிலைக்கு மாலை போட்டுத்தான் ஆகவேண்டும். பெரியார் சிலைக்கு மாலை போடுவது என்பது வெறும் வணங்கிவிட்டு வரும் சம்பிரதாய சடங்கிற்காக அல்ல. பார்ப்பனியத்திற்கு எதிரான அவரது கருத்துக்களை உயிர்ப்பிக்க. ஒரு வேளை பெரியார் சிலைக்கு மாலை போடாமலே அப்பணியைச் செய்யமுடியுமென்றால் அந்த வழியை தாராளமாக நீங்கள் முன் வையுங்கள் தமிழகத்திற்கு.

 17. மிக சரி. மனிதனை மனிதன் சடங்கிற்காக சுமப்பது ரிக்க்ஷா போல தான்.
  நம்ம சென்னை சௌகார்பேட்டை சேட்ஜிக்கள் இன்னும் ரிக்ஷாக்களை பயன்படுத்துவதற்கு ஒரு போராட்டம் தேவை.

 18. பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்கிய, அவர்களை பின் வாசல் வழியாக ஓட விட்ட ம. க. இ. க மற்றும் ம.உ.பா.மை தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள், நான் அந்த சமயத்தில் அங்கு இருந்து அந்த காட்சியை பார்க்க முடியாமல் போனதை எண்ணி வருத்தம்தான்.

  ஏன் என்றால் அப்போது ஸ்ரீ ரங்கநாதர் வந்து பட்டர்களை தூக்கிக்கொண்டு போயிருக்கலாமே ஏன் வரல, அப்படி ஒரு ஆளே இல்ல.

  இது பெரியார் வாரிசுகள் வாழும் பூமி, இனி அனைத்து கோவில்களிலும் நடக்கும் அநீதிகளை முறியடிப்போம், தமிழகம் பார்ப்பனர்களின் கல்லரை என்பதை நிரூபிப்போம்.

  தொழர்கலுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்,……….

  நன்றி………..

 19. வினவு வில் கட்டுரைகள் எல்லாம் விழிப்புணர்வு உண்டாக்குகிறது.மிகவும் நன்றி.ரமண மகரிஷி தனது ஆசிரம சொத்துகளை தனது தம்பிக்கு எழுதி வைத்தாராமே அது பற்றிய சரியான விபரங்கள் எழுத முடியுமா.குமுதத்தில் வரும் கட்டுரை படிக்கும் போது இந்த எழுத்தாளர்கள் தங்களுக்கு பலன் இருந்தால் தவறான தகவல்களை கூட எழுதி மக்களை திசை திருப்பி வழி நடத்தி விடுகிறார்கள்என தோன்றுகிறது.தயவு செய்து உண்மை கூற முடியுமா?

 20. this is very unfortunate incident in the DK’s rule that all our rights to perform poojas in all temples in TN is slowly going down

  we want devotional service only

  why do you interfere in all this?

  kawsika yekadesi is called solla vandha ekaadesi…..

  innum vaikunda yekadesi irukku…………………enna aaga poradho andha perumaalukku dhaan velicham……….ivaa panra akramathukku mudive illayaa

  en ipdi naanga paatukku santhama pooja panradhula ipdi raaksha shaa maadiri manna podarel……………..perumal ungala elaam manika maatar

  narayana narayana

 21. //ஏனெனில் இது “அயோத்தி அல்ல”, தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.//

  பெரியாரின் வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள்

  the same thing happens in sriperumbudhur Ramanuja temple too, Every year. Can Ma.Ka.E.Ka Help fixing it? Please… lets all give a Big Hand..

 22. ம க இ க மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மைய்ய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

 23. //எது எப்படியோ அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு//

  சூத்திரர் அல்லாமல் பார்ப்பனர் தோள்களில் உலாவந்தால் பரவாயில்லையா. ஏனென்றால் மார்கழியில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இராப்பத்து அரையர் சேவை முடிந்து கடைசியில் 4000 பாசுரங்களும் பாடிய அரையருக்கும் இந்த பிரம்மரத மரியாதை due. இப்பவே சொல்லிட்டா தேவலையா இருக்கும்.

 24. பெரியார் பிறந்த நாளைக்கு மட்டும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடும் போலி கறுப்புச்சட்டைகள்,கலர் வேட்டிகள் மத்தியில் பெரியார் கூறியதை போராடி நடைமுறைப்படுத்தி அன்றைக்கே மாலை அணிவித்து கொண்டாடும் வீரம் ம.க.இ.க.வினரின் சரியான நேர்மையான அரசியலை வெளிப்படுத்துகிறது. பார்பனர்களின் கோட்டை என்று வர்னிக்கப்படும் ஸ்ரீரங்கம் தகர்க்கப்பட்டு விரைவில் உழைக்கும் மக்களின் திருவரங்கமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. களத்தில் இறங்கி போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்…..

 25. really i am very happy to know that there is a full stop to brhamanism in spite of their political power and support of the hierarchical structure.
  pain and unjust suffering unite the people in agony.
  your agitations and manifestations are to be brought to the limelight
  when all the political parties run a separate tv for themseves why can’t MKIK run

 26. really i am very happy to know that there is a full stop to brhamanism in spite of their political power and support of the hierarchical structure.
  pain and unjust suffering unite the people in agony.
  your agitations and manifestations are to be brought to the limelight
  when all the political parties run a separate tv for themseves why can’t MKIK run a separate channel to propagate the counter ideology against brahmanism, globalisation, privatisation and liberalisation. you may start the ground work

  rose

  • MKIK cannot get even deposit if they stand in 2011 elections….

   single constituencylayaavadhu jeichuptu vandhu pesungoda brahminsim pathi…..ungalaavaale ungala support panna maataa

   navagraha kovil, thirukadvur elaam poi paarungo……yethana per ungala vaa vandhu bhakthiyoda queuela ninnu darisnanam panraa…………..aiyappan kovilkku maalaa pottundu avaa avaa shethraadanam panraa ungalavaala dhaan solren

   chumma 10 per senrdhu kodiya puduchundu oru website create pannitelnaa periya aal aagiduvelaa neenga?

   mudhala electionla jeingo apparm indha websitela vandhu vetti kadha pesalaam…..

   indha lakshnathula oru magaanubaavar MKIK Channel venumnu ketturkar…..yoi orutharum paaka maataa unga channela………………….saayaraksha velela dapaanguthu pottundu irupel ungala elaam yaar satta panraa

   constitutuional failure in Tamil Nadu….356 pass panungo……people’s religious rights have been deprived off mercilessly by this Government’s anti hindu policy……

   Vandhe Matharam ! Raghupahi Raghava Raajaa Raam pathitha Paavana Seetha Raam

   Jai Sree Ram!!!!!!!!!!!!!!!!!

   Sivan Sothu kuula naasam!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   Jaya maami please epdiyaavahdu jeichundungo…………

 27. பார்ப்பனிய ஆதிக்கத்துக்கெதிராக போராடி அதில் வெற்றியும் பெற்றிருக்கும் மகஇகவினருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  மனுதர்மத்தை நிலைநாட்டும், பார்ப்பனரின் செயல்கள் இன்னும் பல இடங்களில் நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால் இவைகளை ஒழித்து உண்மையான மனித நேய சமுதாயத்தை தமிழகத்தில் படைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை இதுபோன்ற போராட்டங்களின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது..

 28. அதிமுக ஆட்சியின் போது பார்ப்பன ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசியபோதே தெரியவில்லையா இன்றைய திக தலைமையின் இலட்சணத்தைப் பற்றி. பெரியார் ஆரம்பித்த ஒரு அமைப்பு இப்படி ஆட்சி மாற்றத்திற்கேற்ப மாறி மாறி பேசும் பச்சோந்திகளின் கைகளில் சிக்கியது வேதனை அளிக்கிறது.

  • enna daa ambi apdi jayalalitha maami aakshila kurai kandute?

   kovila anna dhaanam nadakalayaa?

   bhajana, yagam, kumbhaabhishekam nadakaliyaa

   engalavaa naanaa dhaan irundhom

   ippo vandhu raakshashaa yagatha nasam pandrelaa……aadungo aadungo aadra varaikum

 29. Your subject and feelings are more appreciated. There should be a bit of decency in the language. Do not use caste to scold people. Practice like this should be banned and condemned where scolding people by their caste is unacceptable. Hope hereafter you write in a much refined language.

  -Kadher, Oslo, Norway

 30. The article makes a “MOUNTAIN” about a “MOLEHILL” citing communism a dead idea (read ANIMAL FARM). All the “Chuthirans” had to do was refuse to take such jobs. The brhamins should beashamed of themselves. My father told me in 1940’s, I was a child then, “the only time a man carries me is to the cremation grounds”.
  A few decades ago (I am an old Tamil) I had met a Finnish old man, he was a sailor. His ship stopped in Capetown harbor and the sailors jumped out to rush to nearest bar for beer. There were rickshaws for hire pulled by Zulus (africans). Each sailor got into one and one cried out, “Last one in has to pay for the beer”. The Finn was upset that his Zulu puller was old and slow. He jumped out, put the old man on the set and pulled the rickshaw. He was the first to reach the bar. The African police (whites) came and arrested him. The captain had to fetch him back to the ship.

  By alienating the ruling North, the Tamils have lost footholds in Malaysia, Burma and now SriLanka. How many Brahmins are there, a very small minority ? You are upset they are educated but they are not wealthy.
  At last, scholarship is rewarded, many old styles of work have disappeared. Knowledge of sciences and sftware have opene jobs all over the world. Tamils are eerywhere, using there brains as the major selling source.
  Use your pages to help educate Tamils.
  Change and modernise the script by adopting the Roman letters. That is how our movies and products are sold even in the villages of Tamilnad.
  The deputy prime minister is a “Stalin” not a “Maran” or ar a “Nedunchzian” or even an “Agalwar”.
  Berating a small minority will not help the poor Chuthirans.
  If enough people give up on Ranganatha, the religious business will become bankcrupt. But it will not happen, proved not just in Tamilnadu but around the world, in Russia and China, despite the suppression. We all need some faith, may be completel irrational in a Darwinian age of intelligence. Like annadurai, you an go back to translating Bertrand Russell.

  • That was really haste to conclude ‘Communism’ as a dead idea, just bcos you read ‘Animal Farm’. You’ve been just another victim of the corporate conspiracy of the imperial west.

   Animal Farm was made a popular children book in the US libraries, thats why it is not surprising when we see Americans call ‘socialism’ an evil.

   Orwell was an English spy. You can google and find how meanly he spied his friends and fellow travellers including Charlie chaplin. His notes to the British intelligence included not only their political leaning, he commented on their characters and sexual orientations. Such a stupid, corrupt, rotten propagandist.

   I am sorry to say, but you should be ashamed to quote that book here.

   I recommend you to read this.
   https://www.vinavu.com/2010/11/08/spy-2/

  • “All the “Chuthirans” had to do was refuse to take such jobs.””
   It is as simple as that, is it?
   Don’t de daft.
   You haven’t the foggiest idea of what a struggle it is for those oppressed by caste to refuse some jobs. All the dice are loaded against them.

   The problem is not the individual Brahimin, but Brahiminism, which has invaded the thinking of much of society including the oppressed.

 31. இந்த தளத்தில் வரும் அனைத்து கட்டுரைகலும் ஹிந்து எதிர்ப்பு அல்லது பார்பன எதிர்ப்பு என்பது பற்றித்தான் உள்ளது. இதில் வரும் வாசகர்களும் ஒரே என்னங்கொண்ட வாடிக்கையாலர்கள்.
  மற்ற வலைதளங்கலை போல் க்ரிஸ்டியன், முஸ்லிம்கலுக்கு ஆதரவாக பினாமி பெயரில் இயங்கும் ஒரு வலைதளம்.அதனால் நீங்கள் இந்த மாதிரி எழுதவில்லையென்றால்தான் ஆச்சரியம்.இன்று பெரியார் பெயயரை சொல்லிக்கொண்டு உழைக்காமல் அரசு மானியத்திலும் இலவசத்திலும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு சிலபெர் செய்யும் மூலைச்சலவையினால் கலவரங்க்கல் செய்துகொண்டு இருப்பவர்கள் ” நாங்கள் தழ்த்தப்பட்டவர்கள் அல்ல, எங்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுத்து எங்களை இழிவு படுத்தாதிர்கள், நாங்களும் மற்றவர்கலை போல் நன்றாக படித்து, மதிப்பென் தர வரிசையில் உயர்கல்வியில் இடம் பெற்று, திறமையின் அடிப்படையில் உத்தியொகம் பெற்று எங்கள் வாழ்க்கையை நாங்கல் அமைத்துக்கொள்கிறோம்” என்று நீங்கள் சொல்லாதவரையில் உங்களுக்கு இதுமாதிரி பேச அருகதை கிடையாது. இட ஒதுக்கீடு கேட்டு உங்களை நீங்கள் தான் தாழ்த்திக்கொள்கிறீர்கள். மற்றவர்கள் மாதிரி ஆரோக்கிய போட்டியின் மூலம் வாழக்கற்றுக்கொள்ளுங்கள், அராஜகத்தால் அல்ல.

  • //உழைக்காமல் அரசு மானியத்திலும் இலவசத்திலும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு சிலபெர் செய்யும் மூலைச்சலவையினால் கலவரங்க்கல் செய்துகொண்டு இருப்பவர்கள்//

   கோயில்களிலும், பூசை புனஸ்காரம், கல்யாணம் கருமாதி என்றும் காசு சேர்க்கும் கூட்டத்தைச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

   அவர்கள்தானே கோயில் மான்யத்தில், ஆர் எஸ் எஸ் மூலம் கலவரம் செய்யும் கிராஸ் பெல்ட் கும்பல். அவர்களுக்கு இடஓதுக்கீடே கிடையாது என்பதை பின்னூட்டம் எழுதியவர் மறந்துவிட்டார் போல.

   • கிராஸ் பெல்ட் கும்பல் என்பது வனிகர், செட்டியார், கருமர், ஆசாரி இவர்களையும் சேர்த்தா? ஆர் எஸ்ஸ் எஸ்ஸ் என்பது தர்காப்பு இயக்கம் தானே தவிர, மற்றவர்களை ஆதிக்கம் செய்வது அல்ல. அவர்களை நீங்கள் உயர் ஜாதி அல்ல என்று சொன்னால் நீங்கள் தாழ்த்தப்பட்டவர் கிடையாது. பின் எதர்காக அரசாங்க ஒதுக்கீடுக்கு அலைகிரீர்கள்? ஜஸ்ட் பாஸ் செய்தால் போதும், உயர் கல்வியும், அரசாங்க உத்தியோகமும் நிச்சயம் யென்பதால்தான் அரசாங்க நிர்வாகங்கள், கம்பெனிகள் மிக கேவலமாகவும் நஷ்டத்திலும் இயங்குகிறது.படிப்பதற்கு மட்டும் தான் சலுகை, வேலை திரமையின் அடிப்படையில் என்றால் இந்தியா எப்போதே முன்னேறி இருக்கும்.அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் ஒரு பார்பனனுக்கு படிப்புதான் மூலதனம். இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு படிப்பைதவிர மற்ற அனைத்தும் மூலதனம்.உதாரனம்; காசு கொடுத்தால் கண்டவனுக்கு ஓட்டு போடுவது.

    • Swamy,

     Pichhu udharitel pongo…………..sabhaash!!!!!!!!!!

     Ivaa Maadiri Janmaakalukku elaam evlo sonaalum budhi varaadhu………..thirundhaadha case……

     neenga pesamaa manasa pottu alatikaadheer voi……….ivaalaala enna kazhata mudiyum………..pozhudhu pogamaa kattithtu oyattum vidungo………

     maargazhi maasam varudhu………..thiruppavai, thiruvembavai padippom nalla sitesla poi………….

     siva sivaa……………..ivaa elaam enna janmamo andha parameshwaranukku dhaan velicham

    • இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சலுகையல்ல.அது அவர்களின் உரிமை,அது மட்டுமல்ல நாடு முன்னேறுவதற்கு அவசியமானதும் கூட.

     ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறினால் மட்டுமே சாத்தியமாகும்.வெறுமனே உற்பத்தியை பெருக்குவதால் மட்டுமே பொருளாதாரம் முன்னேறி விடாது.உற்பத்தியான பொருட்கள் நுகரப்பட வேண்டும்.அதற்கு மக்களிடம் வாங்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.பெரும்பகுதி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும் நாட்டில் பொருளாதார முன்னேற்றம் என்பது குதிரை கொம்புதான்.அப்படி பின்தங்கிய மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து வரும் பணியில் இட ஒதுக்கீடு கணிசமான பங்களிப்பு செய்கிறது.அப்பன் செய்த தொழிலையே பிள்ளையும் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் முன்னேற்றம் சாத்தியமில்லை. வெள்ளையன் எந்த நிலையில் விட்டு சென்றானோ அப்படியே இருக்க வேண்டியதுதான்.

     கல்வியில் இட ஒதுக்கீடு கொடுப்பதால் தரம் தாழ்கிறது என்பதும் ஒரு மோசடியான வாதம். கல்லூரியில் நுழைவதற்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரப்படுகிறது. பாடத்திட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்.தேர்வு முறையும் ஒன்றுதான்.பிறகு எப்படி தரம் தாழும். அப்படி தரம் இல்லை என்றால் அதற்கு பாடத்திட்டமும் தேர்வுமுறையும்தான் காரணமாக இருக்க முடியுமேயன்றி மாணவர்களை குற்றம் சொல்லமுடியாது.

     இட ஒதுக்கீட்டின் கீழ் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்படுவதும் குறையாக சொல்லப்படுகிறது.தகுதிதேர்வுகளிலும் நுழைவு தேர்வுகளிலும் முன்னேறிய,நகர்ப்புற மாணவர்கள் எப்படி கூடுதல் மதிப்பெண் பெறுகிறார்கள்.பல லட்சம் உருவாக்கள் செலவில் தனிப்பயிற்சி பெற்றுதான் அந்த மதிப்பெண்களை ”ஈட்டுகிறார்கள்”.யாருக்கு வாய்ப்பு என்பதை மதிப்பெண்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டு விட்டால் ”காசுக்காரனுக்கு இட ஒதுக்கீடு” என்பதுதானே அதன் பொருள்.

     மேலும் கல்விக்காக அரசு செலவிடுவதும்,அரசு ஊழியர்கர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுவதும் யாருடைய பணம்.அது மக்களின் வரிப்பணமல்லவா.அந்த வரியை செலுத்தும் மக்கள் அந்த நிறுவனங்களில் இடம் பெற முடியாதென்றால் அது அநீதியல்லவா.

     ஆகவே கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அவசியமானது.அது மக்களுக்கு உரிமையானது.
     \\அரசாங்க நிர்வாகங்கள், கம்பெனிகள் மிக கேவலமாகவும் நஷ்டத்திலும் இயங்குகிறது//
     இதுதான் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது.ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல் செய்வதும் அமைப்பின் குறைபாடுகளுமே அதற்கான காரணங்கள்.இட ஒதுக்கீடு அல்ல.

    • \\ஆர் எஸ்ஸ் எஸ்ஸ் என்பது தர்காப்பு இயக்கம் தானே தவிர, மற்றவர்களை ஆதிக்கம் செய்வது அல்ல.//

     குண்டு வைத்தும் பல்லாயிரம் மதக்கலவரங்கள் நடத்தியும் முசுலிம்களையும் கிருத்துவர்களையும் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கும் ஆர்.எஸ்.எஸ்.எப்படிப்பட்ட இயக்கம் என்பதை உலகறியும்.பிள்ளையார் சிலை ஊர்வலங்களை மசூதிகளின் முன்பாக நிறுத்தி வைத்துக்கொண்டு ”பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு” என்று கூச்சலிடுவதும் பள்ளிவாசலை நோக்கி ஆபாசமான முறையில் சைகை காட்டுவதும் என்ன வகையான தற்காப்பு நடவடிக்கை. ஆர்.எஸ்.எஸ்.ஒரு மக்கள்விரோத இயக்கம் என்பதை நிறுவும் கட்டுரைகளுக்கான சுட்டிகள்.

     https://www.vinavu.com/2010/08/17/hindu-terrorist/
     இந்த கட்டுரையின் பின் இணைப்பான தொடர்புடைய பதிவுகள்.மற்றும்
     http://indiatoday.intoday.in/site/Story/105809/Top%20Stories/hindu-rashtra-saffron-terrors-hall-of-shame.html
     http://poar-parai.blogspot.com/2010/07/blog-post_18.html

 32. In Christanity who one completed the qualifications for a Father or Reverent he permits to work as a presbyter in Chruches and he conducts marriges and Funeral services, the same followed in Islam also, basic need the that person should be a X’tian or a Muslims. But in Hindu religion some particular people only permit to conduct marriges and other customs.

 33. உலகில் மனிதனை மனிதனாக வாழவைக்க தொடர்ந்து போராடும் என் சகோதர … வெல்ல வேண்டும் உன் போராட்டம் ,வெற்றி பெறுவோம் நிச்சயம்.
  அன்று முதல் இன்று வரை காட்டிகொடுத்தும் …கூட்டி….தொடர்ந்து அதிகார ஆட்சி பீடத்தில் இருக்கும் பார்ப்பன பன்னிகள ,,நீ கோமனதால் கொட்டையை தாங்கிக்கொண்டு கொள்ளைபக்கம் ஓடுவது தொடரும்.
  உனக்கு ரோசம் என்பதே கிடையாத,,,,எதற்காகவும் போராட மாட்டிய..??
  எப்படியாவது எங்கையாவது எதையாவது காட்டிகொடுத்து கூட்டிக்…..!! சுகம் அணிவிப்பதே உன் புலப்பா?….

  இப்படிக்கு
  உழைத்து ஏமாந்த மண்ணின் மைந்தன்

 34. Ahh what a great achievement. You say Human right voilation etc. In Srirangam Temple a big board it put NON HINDUS NOT ALLOWED, does any person has guts get that board removed. The person who say there is no GOD , No GOD are the firm beliver of GOD, because They think more of GOD. Nasthikas think more of GOD because they utter in each meeting that there is not No GOD. Does
  Any of the fellows have guts to poke the nose in Chirstian or Muslim rituals and stop it. Dont mistake recently our Muslim bretherns celebrated a festival in which they beat their own body . Can u stop it saying it is human right voilation. See the The temples have their own set of rules etc set up soem centuries ago. One thing please understand It is not DK or any other person , It was our Bhagavath Ramanuja who removed the untouchablity and allowed the people of all caste in Temple in Melkote for the first time and named them as Thirukulathar,
  It is not DK , or Bhaujan Samaj party. Ramanuja was the trendsetter to all this politicians.

  I hopegood sense prevails

  • Modern(?) thinker(??),
   If you can see the injustice inn the Srirangam Temple board prohibiting non-Hindus, will you dare to take up the cause and campaign against it?
   What are you protesting about? Is it about the state protecting such bigotry in the name of God? It does not seem so.
   Atheists do not waste time thinking about supernatural things. But any good person cannot idly watch ignorance and hatred and other forms of evil being propagated in the name of God. Why should it bother any “modern thinking” believer that non-believers may be thinking more about God? Is it fear that they may beat believers to the post in the race to ‘God’s kingdom” wherever it may be?
   Christianity and Islam, to their credit, do not preach that caste is God-given. They have their weaknesses, which are criticised, but Brahminism stinks most. It hurts us more than all other religions.
   I have great regard for Ramanuja, but he could not removed untouchablity despite his valiant effort. He only created a group of “low caste brahmins”
   It will be plain hypocrisy to hail Ramanuja and uphold the varna-based Brahminist values.

 35. The world cheapest and barbaric culture is living even in the civilised era in TamilNadu only.
  The TN CM self titled as MUTHTAMIZVITHAGAR.
  But he killed and dishonourMother Tamil thru his fans and slaves by rowdism while said BRHMARATHAM.
  Its not for Braminical Aryan Era.Its purly Honouring one and only Living ancient
  language in world Thatis MOTHER TAMIL. The Brhmratham is salutation of those great divine tamil Poets
  not for the man sitting in Palankeen.If the Tamilian are self civilized better they Know their own
  basic history.Valuvan,Ilango,Kamban are those among them.This type of Brhmaratham Honours given
  to the NonBrhamin priest SAID KANTHADAI JEER also by SrirangamTemple.

  im the proud tamilwriter from Gujrat.
  SrirangaRavi.

 36. பல வருடங்களாக இந்தியாவில் நான் இல்லை இந்த செய்தியும் அறிய முடியவில்லை நல்ல ஒரு பலன் கண்டுள்ளது சமூகம்,ஆனால் நிச்சயம் இது ஒரு பெரிய சமூக மாற்றமே பெரியார் இருந்து இருந்தால் இதற்க்கு ஒரு பெரிய நிகழ்ச்சியில் பாரட்டியிருப்பார்,

  வாழ்க பணி சிறக்க வாழ்த்துக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க