Thursday, April 15, 2021
முகப்பு செய்தி ஒரு வரிச் செய்திகள் – 11/10/2012

ஒரு வரிச் செய்திகள் – 11/10/2012

-

செய்தி: நாடு முழுவதும் டெங்கு பரப்பும் கொசுக்களை அழிக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் எல்லை மீறிய டெங்கு கொசு பிரதமர் வீட்டுக்குள்ளும் நுழைந்திருக்கிறது.

நீதி: நாட்டையே கடிச்சு வைக்கும் இந்த மன்மோகன் கொசுத்தொல்லையையே 20 வருடங்களாக தாங்க முடியலடா நாராயணா, அதுக்கு எதுவும் மருந்து இல்லயா?

___________

செய்தி: கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு மேலும் 1 மாதத்துக்கு நீட்டிக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீதி: நாட்டை முன்னேத்துறேன்னு அணுவுலையை அமைக்கிறாங்களே அது நம்ம நாடில்லைன்னு தெரிஞ்சு போச்சு

___________

செய்தி: காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கப் பட்டுள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எப்பொழுதும் தொழிலாளர்களுடைய போராட்டங்களை ஆதரிப்பவர்கள் நாங்கள் என்று பதிலளித்தார் கருணாநிதி.

நீதி: அந்நிய முதலீட்டை அனுமதித்த அரசிலும் பங்கு – அதை எதிர்க்கும் தொழிலாளிகளின் போரட்டத்திலேயும் பங்கு . இதுதான் கருணாநிதியின் போங்கு!

__________

செய்தி: தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கி லிருந்து தன்னை விடுவிக்குமாறு,மத்திய அரசை மிரட்டும் விதமாகவே, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்குவது போன்று நாடகமாடி, பின் அதிலிருந்து பின் வாங்கும் நடவடிக்கையை, மாயாவதி மேற்கொண்டுள்ளார் என, அவருக்கு நெருங்கிய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீதி: மத்திய அரசை மிரட்டும் நிலையில் இல்லாத போதிலும், சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடித்து, சட்டத்தை செருப்பாக அணிந்திருக்கும் வாய்தா ராணியிடம் மாயாவதி டியூஷன் எடுத்துக்கொள்ளலாம்

___________

செய்தி: ” பஞ்சாப் சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று பெறும் என, நினைத்தேன்; ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை,” காங்., பொதுச் செயலர் ராகுல், விரக்தியுடன் கூறினார்.

நீதி: ஜனநாயக இநிதியாவை ஆளும் மன்னர் குடும்பத்தின் இளவலின் விரக்தியை காவியமாக வடிக்க காங்கிரசின் இலக்கிய அணி முடிவு

__________

செய்தி: சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய 6 நடுவர்களையும் அவர்கள் மீதான விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

நீதி: விசாரனை கமிஷன் முடிவு எப்படி இருக்கும் என்று சூதாட கைகள் ரெடி!

__________

செய்தி: “உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்த, பிரதமர் தலைமையில், தேசிய முதலீட்டு வாரியம் (என்.ஐ.பி.,) அமைக்க வேண்டும்’ என்ற, மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் முடிவுக்கு, மத்திய அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, ஜெயந்தி நடராஜன், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “சிதம்பரத்தின் முடிவை ஒப்புக் கொண்டால், அதிகாரம் முழுவதும், என்.ஐ.பி.,க்குச் சென்று விடும். அமைச்சர்கள், செல்லாக்காசாகி விடுவர்’ என, அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

நீதி: இனி கமிஷன் முழுவதும் செட்டி நாட்டு சிதம்பரத்திடம் போய்விடும் என்பதால் பங்காளிகள் பங்குக்கு சண்டை

__________

செய்தி: தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்தவர் இந்தப் பேரவையின் தலைவராக ப. தனபால் பொறுப்பேற்றுள்ளார் என்று தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா பேசினார்.

நீதி: 180டிகிரியில் வளைந்து கூழைக்கும்பிடு போடும் அடிமை வேலையை எந்த மானமுள்ள உழைக்கும் மக்களும் ஆராதிக்க மாட்டார்கள்!

__________

செய்தி: மனம்போன போக்கில் பேசி, திட்டமிட்டு பேரவையில் அமளியை உருவாக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், பேரவை உறுப்பினர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.

நீதி: மாற்றுக் கட்சிக்காரனையும் தன் காலில் விழுந்து கும்பிடும் ஜனநாயகக் கடமையை ஆற்றச்சொல்கிறாரா முதல்வர்?

____________

செய்தி: “ஊழல் பிரச்னை தொடர்பாக, தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தால், நாட்டின், “இமேஜ்’ பாதிக்கப்படும். அரசு ஊழியர்களின் நேர்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி, அரசு பரிசீலித்து வருகிறது,” என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

நீதி: அதானே, இனி நிலக்கரி, ஸ்பெக்ட்ரம் ஊழலையெல்லாம் இமேஜ் டாமேஜிங்குன்னு சொல்லி டெலிட் பண்ணிடலாம். இல்ல அதை தடை செய்யறதுக்குண்ணு ஒரு சட்டத்தை போட்றலாம்.

__________

செய்தி: “அரியானாவில் அதிகரித்து வரும் கற்பழிப்புகளை முடிவுக்கு கொண்டு வர, வயதுக்கு வந்த பெண்களுக்கு, சீக்கிரத்தில் திருமணத்தை முடிப்பதே சரியான வழி,” என்று கூறிய, அரியானா முன்னாள் முதல்வர் பேச்சு, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதி: ரேப் பண்றது குற்றமில்லேன்னு அறிவிப்பது மட்டும்தான் பாக்கி… ரெட் லைட் புரோக்கரெல்லாம் அரசியலுக்கு வந்தா இப்படித்தான்.

___________

செய்தி: வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக வேலையில் சேராவிட்டால், நிறுவனத்தை முன்னேற்ற முடியாது’என, “கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு, உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீதி: நிறுவனத்துக்கு சுமையாய் இருந்து முன்னேற்றத்தை தடுப்பது இந்த முதலாளி வர்க்கம்தான்னு, தொழிலாளிக்கு நல்லா விளங்கியிருக்கும்..

//பசுமாடு பாலு குடுக்குது – முதலாளி வேலை குடுக்கறான் –
பசுவுக்கும் முதலாளிக்கும் பச்சைப் புல்ல யாரு குடுக்கறா,
போடா அந்தப் பக்கம் வருது தொழிலாளி வர்க்கம் (ம.க.இ.க பாடல் வரி)//

  1. தலைவா!தலைவா!என்று தூக்கித்தலைக்கு மேல்வைத்து ஆடும்தனிநபர் வழிபாடு.மக்கள்ப்பணம் கணக்குவழக்கில்லாமல் திருடி தான்,தன்னைச்சார்ந்தவர்களை ஒரு தொழில் நிறுவனம் போல நடத்தி,நிர்ணயித்து பொதுநலத்திற்க்கும்,மக்கள்சேவைக்கும்,நல்ல பண்பாட்டிற்க்கும் கலங்கம் ஏற்படுத்துதல்.தமிழகத்தில் 100%த்தில் தி.மு.காவிற்க்கு எத்தனை சதவீத மக்கள் ஓட்டுப்போடுவார்கள் எனப்பார்த்து,இப்பொழுது எவ்வளவு? இனி எப்படி வாய்ப்பு என ஆராய்ந்து தமிழகத்தை விட்டு விரட்டவேண்டும்.ஏன்? ஈழப்படுகொலை,மீனவர்படுகொலை,தமிழகத்திற்கெதிரான திட்டங்களுக்காக,நமது குடும்பம்,உறவினர்,மக்கள் மீண்டும் அழியாமல் தடுக்க உண்மையான உணர்வுபூர்வமாய், வீணாகத்தீக்குழிக்காது செயளில்காட்டவேண்டும்.இதுபோல அ.இ.அ.தி.மு.கவையும் நீக்கவேண்டும்.மக்களிடம் சென்று சொல்லவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க