Monday, April 12, 2021
முகப்பு செய்தி ஜெயேந்திரன் - நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !

ஜெயேந்திரன் – நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !

-

.பி அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளா நடந்து வருகிறது. பார்ப்பன இந்து மதத்தின் பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஒன்று இந்த கும்பமேளா. தெற்கை விட வடக்கில் அதிகம் காலூன்றியிருக்கும் இந்த நம்பிக்கையின் படி இலட்சக்கணக்கான மக்கள் ‘புனித’மும் சாக்கடையும் சங்கமிக்கும் கங்கையில் நீராடி வருகின்றனர்.

இதை ஒட்டி அலகாபாத் ரயில்நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். மதம் சார்ந்த கூடுதல்களில் இப்படி மக்கள் இறப்பது ஆண்டுதோறும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் மக்களை இப்படி நெரிசலில் சாகவிடும் உத்திர பிரேதேச அரசு சாமியார்களுக்கு மட்டும் சகல ஏற்பாடுகளையும் விஸ்தாரமாக ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த வகையில் மைனர் நித்தியானந்தாவும், கேடி ஜெயேந்திரனும் கங்கை கரையில் 10வது மற்றும் 12ஆவது செக்டர்களில் முகாம் அமைத்து கங்கை ஆற்றை அழுக்காக்கி வருகின்றனர்.

சாதாரண மக்கள் எல்லாம் கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்று நம்புகின்றனர். ஆனால் பாவத்தையே தொழிலாகக் கொண்ட நித்தியும், ஜெயேந்திரனும் அப்படி குளித்து ‘போகுமளவு’ பாவங்களை கொஞ்சமாக செய்தவர்கள் அல்ல. ஒருவேளை இவர்கள் குளித்ததால் கங்கையை நிரப்பும் பாவம் மற்ற அப்பாவிகளை தொற்றிக் கொள்வது உறுதி.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி மாலை நான்கு மணிக்கு ஜெயேந்திரன் பக்தர்கள் புடை சூழ நித்தியானந்தாவின் முகாமிற்கு சென்றிருக்கிறார். வாசலில் நின்று வரவேற்ற நித்தி அவரை அழைத்துச் சென்று தங்க சிம்மாசனத்தில் அமரவைத்து தானும் மற்றொரு தங்க நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
நித்தியானந்தன் - ஜெயேந்திரன்

ஜெயேந்திரனை வாழ்த்தி பேசிய நித்தி தனக்கும் சங்கர மடத்திற்கும் 10 ஆண்டுகளாக தொடர்பு இருப்பதாகவும், இடையில் சில விஷமிகள் அந்த உறவை சீர்குலைக்க முயன்றதாகவும், இனி ஆச்சாரியரின் ஆசீர்வாதத்தோடு இனிமையான உறவு தொடரும் என்றார். இதற்கு பதிலளித்துப் பேசிய ஜெயேந்திரன் நித்தி மற்றும் நித்தியானந்தா தியான பீடத்தின் தொண்டினை வாழ்த்தி பேசியிருக்கிறார். இந்த சந்திப்பை இருவரும் பரஸ்பரம் முதுகு சொறியும் வண்ணம் பேசிய பேச்சினை மட்டும் எடிட் செய்து நித்தி தரப்பு வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.

மதுரை ஆதீன விவகாரத்தில் நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவை சேர்த்து பேசிய ஜெயேந்திரன் மீது நித்தி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். பின்பு இரண்டு கேடிகளும் சமாதானமாகி வழக்கை வாபஸ் பெற்றனர். ஒருவேளை அந்த உடன்படிக்கையின்படிதான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறதோ என்னமோ?

அந்த வீடியோவில் இரண்டு கேடிகளும் யோக்கியன் போல முகத்தை வைத்துக் கொண்டு பேச முயன்றாலும் முடியவில்லை. நித்தி பேசும் போது ஒரு உள்குத்தை வெளியிட்டார். அதன்படி ஜெயேந்திரனிடம்தான் சில விஷமிகள் தன்னைப் பற்றி தகாதது சொல்லி தப்பான அபிப்ராயம் ஏற்படுத்தியிருக்கிறார்களாம். யாரந்த விஷமிகள்? சங்கரமட மேனேஜர் மகாதேவனா, சோ ராமசாமியா, ஆடிட்டர் குருமூர்த்தியா, இல்லை இந்து ராமா?

மதுரை ஆதீனப் பதவியை வாங்குவதற்காக ஓரிரு கோடி ரூபாய்களும் மேலும் சில ‘சப்களைகளும்’ செய்த நித்தி இங்கே ‘பரமாச்சாரியாவை’ குஷிப்படுத்த என்ன செய்தார் என்பது தெரியவில்லை. சங்கர ராமன் கொலை வழக்கு, மற்றும் அனுராதா ரமணனது வாக்கு மூலம் போன்றவை அம்பலமானாலும் ஐயரென்பதால் ஜெயேந்திரனை விட்டுக் கொடுக்காத பார்ப்பனர்கள் இப்போது என்ன சொல்வார்கள? சங்கர மடம் மற்றும் நித்தியானந்தா தியான பீடத்தின் இந்த இணைப்பினால் இந்து மதத்தின் பெருமை சாக்கடை கங்கைக்கு போட்டியாக நாடெங்கும் ஓடுவது உறுதி.

நித்தியானந்தாவை மட்டும் ஏதோ பேரம் படியவில்லை என்பதால் எதிர்க்கும் இந்து மக்கள் கட்சி போன்ற காமடி பாசிஸ்ட்டுகள் இப்போது ஜெயேந்திரனே ஆதரித்து விட்டபடியால் மேல் கீழ் வாய்களை மூடிக்கொள்வது உறுதி. எனில் சங்கபரிவாரங்களின் சங்கரமட அடிமைத்தனத்தை விளக்கத் தேவையில்லை. மைனரும், கிரிமினலும் இப்படி சந்திப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் வெட்கம் கெட்டு பல பக்தர்கள் இவர்கள் பின்னால் இன்னமும் ஓடுவதுதான் மானக்கேடு.

அதிமுகவைக் கவனித்து தமிழ்நாட்டில் பிரச்சினை ஏதும் வராமல் பார்த்துக் கொண்ட நித்தி இப்போது ஜெயேந்திரனை கவனித்ததன் மூலம் கர்நாடகா, ஏன் இந்தியாவெங்கும் கூட பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளும் பாக்கியம் பெற்றவராகிறார். இனி இந்து மத சாமியார்கள் எவரும் கொலையோ சல்லாபமோ செய்தால் எந்தப் பிரச்சினையுமில்லை என்பதாக இந்த இரண்டு கேடிகளும் முன்னுதாரணமாகி விட்டனர். இதனால் இவர்கள் ‘இந்துக்கள்’ மத்தியில் எதையும் இழக்கவில்லை என்பது முக்கியம்.

நித்தி படுக்கையறை எபிசோட் நாறிய போது வினவில்

என்ற உரையாடலை வெளியிட்டோம். இந்த கும்பமேளா சந்திப்பிலும் அவர்கள் என்ன பேசியிருக்கக் கூடும் என்பதை அந்த உரையாடலை வாசிப்பதின் மூலம் நீங்கள் அறியலாம். படியுங்கள் !

 1. என்னையும் அந்த ஜோதியில் சேர்த்து விடுஙள்….
  கொஞசநாள் சந்தோசமாக போகட்டும்….

 2. அவனுங்க எக்கேடோ போகட்டும்….நீ ஏன்யா அவனுங்க பின்னாடி விளக்கு புடிச்சிக்கிட்டே போறே???
  நித்தியாநந்தா ஒரு கோடி ரூபா நன் கொடை குடுத்தா வேணாம்னா சொல்லுவே??

  • தம்பி அவனுங்க எக்கேடோ போகட்டும் அது நமக்கு பிரச்சனை இல்ல ஆனா ஊருக்கு புத்திமதில சொல்றானுங்க நம்பலால அத பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாது ……. சரீங்க சார் அதெல்லாம் இருக்கட்டும் உங்களுக்கும் அவனுங்களுக்கும் என்ன லிங்க்கு ஏன் அவனுங்களுக்கு வக்காளத்து வாங்குரீங்க அத மொதல சொல்லுங்க. . . . . .

  • சரியாகச் சொன்னீர் நண்பரே!!.இவர்களைப்போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு இந்த மாதிரியான கில்மா விஷயங்களைவிட்டால் வேறுவழி. இவர்கள் முதல்ல விளக்குத்தூக்குவதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான காரியங்களில் கவனம் செலுத்தட்டும்.

 3. இந்த பெண் பித்தன் ஜெயேந்திரன் செய்த காம களியாட்டங்கள் உலகறிந்தவை. இவரது சிஷ்யரின் தம்பி மற்றும் ரகு என்ற காமகொடூரர்களினால் பள்ளி குழந்தைகளை எல்லாம் சீரழித்ததை நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளின் வாயிலாக மக்கள் அறிந்திருக்கிறார்கள். இதில் முத்தாய்ப்பாக இவர்களினால் சங்கரராமன் என்ற பார்பணனும் கொலையும் செய்யப்பட்டார். இதெல்லாம் நாடறிந்ததே. ஆனால் இன்று வரை இவர்களுடைய ஒரு முடியை கூட புடுங்க முடியவில்லையே நம்ம ஊரு நீதி மன்றங்களால் ? இனி புடுங்கவும் முடியாது என்பது இங்கு எல்லோருக்கும் தெரியும். ஜெயேந்திரரே இயற்கையாக இறந்தால் மட்டும் தான் இந்த வழக்குக்கு முடிவு உண்டு. இதை பற்றி எந்த கமலும் , மணிரத்தினமும் படம் எடுக்க துணியவில்லையே. இதை ஒரு முஸ்லீம் இயக்குனர் நடிகர் அமிர்கான் படமாக எடுத்தால் என்ன நடக்கும் இந்த நாட்டில் ? குற்றம் செய்த ரிசானாவிற்கு வரிந்துக்கட்டும் அறிவு ஜீவிகள் இந்த அநியாயங்களுக்கு இப்படி வரிந்துகட்டி நின்றார்களா ? ரிசானாவின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தலை வெட்டு நடந்தது. சங்கரராமனை இப்படித்தானே வெட்டித்தள்ளினார்கள் ஒரு காரணமும் இல்லாமல். அறிவு ஜீவிகள் இதற்கு ஏன் வளைச்சி வளைச்சி கட்டுரைகள் எழுதவில்லை ? இந்த கொலை அவர்கள் கண்களுக்கு கொலையாக தெரியவில்லையா ? ஒரு வேலை இயற்கை மரணமாக தெரிகிறதோ ? இந்த வழக்கு நடக்குற லட்சணத்தை பற்றி அரேபியா நாட்டு அறிவு ஜீவிகள் விமர்சனம் செய்தால் இங்கு என்ன நடக்கும்? இந்திய நாட்டு முஸ்லீம்அறிவு ஜீவிகள் விமர்சித்தால் என்ன நடக்கும் ? இந்த ஜெயேந்திரரை மாற்று மதக்காரன் நான் விமர்சிப்பதால் அம்பிகளுக்கு எப்படி ரத்தம் கொதிக்கும் ? இதையே பாப்புலரான கமல் ஆஸ்கர் விருதுக்காக அமெரிக்கனின் கால் கழுவ மற்றொரு மதத்தின் மீது பொய்யாக விமர்சித்து கருத்தாக மக்களின் மத்தியில் விதைக்கும் போது ( எளிதாக மக்களிடம் சேர்ந்துவிடும் )இதே அம்பிகளுக்கு சந்தோஷத்தில் ரத்தம் குதிக்கிறதே ? குதூகலிக்கிறதே … ? பெரியார் சொன்ன கருத்துக்களை காயிதேமில்லத் சொல்லி இருந்தால்… ? ஆனால்….. நடுநிலைவாதிகள் என்று சொல்லிக்கொண்டு (ஒரு சிலரை தவிர)இஸ்லாம் என்ற வட்டத்திற்கு வெளியில் இருந்து கொண்டு முஸ்லீம்களை மட்டும் பிராண்டுவதேன்.. விவாதம் செய்ய கூட துணிவில்லாமல் ? அந்ததந்த பகுதிகளின் பிரச்சனையை நியாய அநியாயங்களை நடுநிலையோடு நோக்காமல் இஸ்லாம் தான் காரணம் என்று ஒட்டுமொத்தத்திற்கும் இஸ்லாத்தை பொருப்பாக்குவதேன் ? (நியாயமான காரணங்களுக்காக) 600 பேரை கொன்றவனை வில்லனாகவும், (அநியாயமான காரணங்களுக்காக) 6 இலட்சம் பேரை கொன்றவனை கதாநாயகனாகவும் அம்பிகளும், அம்பிகளின் ஊடகங்களும், கமல்களும், மணிரத்தினங்களும், உலகமும் கொண்டாடுவதேன் ?

  • நானும் ஒரு அம்பி தான், என் ரத்தம் கொதிக்கவில்லை. உங்கள் கூற்று உண்மை. அனால் ஒரு தவறான தகவலையும் (பள்ளி குழந்தைகள்) சேர்த்து தந்துள்ளீர்கள். இஸ்லாமியர்களை ஒட்டுமொத குற்றவாளிகளாக பார்பதினால் உண்டான கோபம் என்று நினைக்கிறேன். ஆதிக்க பார்பனர்களை எதிர்த்து நடு நிலைமை கொண்டு வர நீங்களும் உங்கள் மதத்தில் இருக்கும் குற்றங்களையும் தட்டி கேட்க வேண்டும். ஒவ்வொருத்தரும் அவரவர் மத குறைபாடுகளை எதிர்த்தால் தான் இது போன்ற டுபாகூர் பார்டிகளுக்கு உரைக்கும். அதுவரை நாமெல்லாம் சண்டை போட்டுக்கொள்ளவேண்டியதுதான்.

  • சரியான தகவல் யூசூப்

   வாழ்த்துக்கள் கருத்துக்களுக்குதான் அதன் வலி தெரியும்

   ராஜா நரசிம்ம விவேக்
   தஞசை

 4. yousuf,

  neenga dhaalarama vimarsikkalam.aana neenga vimarsanam panna mudiyathungra situationa uruvaaki kondathum neengale thaan,PJ solraaru islamum matra madhangalum vera vera,sondha madhatha thaan vimarsanam pannalam aana vera aalu seyya kodaathunnu.indha isolation neengale uruvaaki kondathu thaan,ithukku mela idhula onnume illa.

  neenga enga edhiri,vinavu kooda enga munnadi ninnu pesura edhiiri thaan,periyar kooda ethiri thaan, aana kamal maniratnam jayendran,vijayendran ellam throgi.

  thuppakila ulla mudhal thotta eppavume thorgikku thaan.

  other wise,i dont think those 2 saamiyars did child molestation and all,but there are many politicians who ll be doing that also.

  adhu yaaru nyayama 600 pera konna nallavan,6 latcham pera aniyayama konna villain?

  pudhusa udhir ellam podureenga?

 5. நித்யானந்தாவின் சேவை மகத்தானது- ஜெயேந்திரர் புகழாரம்!!
  திங்கள், 11 பிப்ரவரி 2013( 19:50 IST )
  http://tamil.webdunia.com/newsworld/news/national/1302/11/1130211043_1.htm

  அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் உள்ள நித்யானந்த தியான பீடத்திற்கு காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார்.

  கும்பபுரியில் உள்ள நித்யானந்த தியான் பீடத்தையும், பரமஹம்ச நித்யானந்தரையும் நேரடியாக சந்தித்துப் பேசினார். பரமஹம்ச நித்யானந்தர் ஜெயேந்திரரை பாரம்பரிய முறைப்படி வரவேற்றார்.

  “நித்யானந்த பீடம் பல வருடங்களாக பல ஊர்களில் உலகப் புகழ்பெற்று ஆசிரமங்கள் அமைத்து பல பணிகளை சீரும் சிறப்புமாக செய்து வருகிறது. அப்படிப்பட்ட மாபெரும் ஸ்தாபனம் இது.

  யோகங்கள், தியானங்கள், ஸ்தோத்திரங்கள் மற்றும் பல பணிகளை செய்து உலகிற்கு பல சேவைகளைச் செய்து வருகிறது.

  பரமஹம்ச நித்யானந்த சுவாமிகள் மற்றும் அவரின் இந்த உலகளாவிய இயக்கமான நித்யானந்த தியானபீடமும் உலகிற்கு செய்து வரும் சேவைகள் மிகவும் மகத்தானது.

  நித்யானந்த சுவாமிகளுக்கும், தியானபீடத்திற்கும் நான் என்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறேன். இந்த தியானபீடமும், நித்யானந்த சுவாமிகளும் மேலும் மேலும் புகழ்பெற்று விளங்கவேண்டும் என்று எல்லா வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”

  என்று ஜெயேந்திரர் கூறினார்
  நித்யானந்தா, ஜெயேந்திரர், காஞ்சி, கும்பமேளா

 6. இந்து மதம் என்பது அகில உலகத்திலேயே இந்தியா, நேப்பாளம் ஆகிய இரண்டு நாடுகளில் (மட்டும் தான்) பெரும்பாண்மை மதம். இந்த இரண்டு நாடுகளும் உலக நிலப்பரப்பில் வெறும் 2.5% மட்டுமே. உலகில் உள்ள பெரும்பாண்மை நாடுகள் கிறிஸ்த்தவ அல்லது முஸ்லீம் பெரும்பாண்மை நாடுகளே. சுருங்க சொன்னால் இவ்வுலகின் மிகப்பெரிய மத அடையாளம் ஆபிரகாமிய மத அடையாளம் தான். ஒருவர் இந்தியாவை விட்டு வெளியே போனால் கிறிஸ்த்தவ அல்லது இஸ்லாமிய பெரும்பாண்மை நாட்டில் தான் கால் வைக்க வேண்டி வரும். விதி விலக்காக சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் புத்த மத அடையாளத்தை கொண்டவையாக இருந்தாலும் இதனால் எந்த அரசியல் ரீதியான ஆதரவினையும் இந்து மதம் (ஏன் இந்தியாவே கூட) எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் புத்த மதம் இந்தியாவில் தோன்றியிருந்தாலும் மேற்கண்ட நாடுகளில் அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாறிய வடிவம் தான் பின்பற்றப்படுகிறது (உதாரணமாக ஜப்பானில் அம்மண்ணுக்கு உரித்தான ஜென் வடிவ புத்தமே பின்பற்றப்படுகிறது. அதற்கும் இந்து மதத்துக்கும் அல்லது இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). மேலும் இந்துக்கள் எனப்படுவோர் சிறுபாண்மையினராக வாழும் பாக்கிஸ்தான், அப்கானிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, மலேசியா ஆகியவற்றில் அவர்களுக்கு என்ன விதமான மரியாதை கிடைக்கிறது என்பது விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். பாரசீக மொழி அகராதியில் இந்து என்றால் திருடன் என்றே பொருள் கூறப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் தியானம், யோகாசனம், ஆயுர்வேதம் ஆகியவற்றை இந்து மதத்தில் இருந்து பெறுவதை விட புத்த மதத்தில் இருந்து பெறுவதையே வெள்ளை இனத்தவர் விரும்புகிறார்கள். ஆக இந்து மதம் மட்டுமல்லாது அதை பின்பற்றுபவர்களும் இந்த ஆபிரகாமிய உலகில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே!. இதையெல்லாம் மறைக்கும் விதமாகத்தான் இந்து மதம் உலக மதங்களுக்கு எல்லாம் தாய் என்று இந்த இந்து மதவெறி அரை டவுசர் கா(லி)வி கும்பல் வாய் கூசாமல் கப்சா விட்டு வருகிறது. மேற்காசியாவில் தோன்றிய ஆபிரகாமிய மதங்களுக்கும் அப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் எல்லையில் தோன்றிய இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? சுருக்கமாக சொன்னால், அரசியல் ரீதியாக பார்க்கும் போது இந்து மதமானது இந்த உலகில் இரண்டே இரண்டு நாடுகளில் மட்டுமே இருக்கிறது. கிறிஸ்த்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்தியாவில் வேண்டுமானால் சிறுபாண்மையினராக இருக்கலாம். உலகளவில் அவர்கள் தான் பெரும்பாண்மையினர். ஆகையால் இந்தியாவில் இந்து மனுதர்ம வெறி கும்பல் ஒரு கிறிஸ்த்தவனை தாக்கும் போது அது இவ்வுலகின் 126 கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஒரு இஸ்லாமியனை தாக்கும் போது அது 50 இஸ்லாமிய பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் கல்வி, பொருளாதாரம், சமூக வளர்ச்சி, தொழில்நுட்பம், இராணுவ வலிமை ஆகியவற்றில் மிகவும் முன்னேற்றம் அடைந்து உலகையே கட்டுப்படுத்துபவை. இந்தியா பயன்படுத்தும் பெட்ரோலியத்தில் கணிசமான அளவு அரபு நாடுகளில் இருந்து வருபவை. இஸ்லாமிய மத அடையாளம் கொண்ட இந்த அரபு நாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் நாலாவித தொழில்களிலும் இருந்து கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த இந்தியர்கள் அனுப்பும் அன்னிய செலாவணியை நம்பி இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன (குறிப்பாக கேரளம்). பல கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் (குறிப்பாக மேற்கத்திய நாடுகள்) மத சார்பற்றதன்மை (Secular) தன்மை கொண்டவைகளாக உள்ளன. சில இஸ்லாமிய பெரும்பாண்மை நாடுகளும் பிற மத விவகாரங்களில் நீக்குப்போக்கு தன்மை கொண்டவைகளாக உள்ளன. ஆகையால் தான் இவ்வுலகில் இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகள் இந்து பெரும்பாண்மை நாடுகளாக சொல்லிக்கொண்டு காலம் தள்ள முடிகிறது. இந்தியாவை சேர்ந்த பல லட்சம் பேர் உலகின் ஏனைய பகுதிகளில் பணி புரியவோ (குறைந்த கூலிக்காவது) அல்லது குடியிருக்கவோ முடிகிறது. இந்தியாவில் இருக்கும் இந்து மத வெறிக்கும்பல் பின்பற்றும் அரசியலையும் அவர்களின் மத சிறுபாண்மையினரை தாக்கும் பாணியையும் அனைத்து ஆபிரகாமிய நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்தால் இவ்வுலகில் இந்துக்களும் இந்து மதமும் சுத்தமாக துடைத்தெறியப்படுவது மட்டுமன்றி இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகளும் பேரழிவுக்கு ஆட்படும். மேலும் இந்து மதவெறி கும்பலின் ஆபிரகாமிய மதங்களுக்கு எதிரான துவேஷத்தால் கிறிஸ்த்தவர்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் ஆபிரகாமிய மதங்கள் உலகளவிலானவை. இந்தியாவில் பெரும்பாண்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் தங்கள் பங்கு குறித்து தற்போது தான் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். இந்த மக்களின் உரிமைக்கான உணர்வினை திசைதிருப்ப தான் இந்துத்துவ அரசியல் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது.

 7. ஒரு அணியின் கீழ் நாம் சேர்கிறோமா இல்லையா என்பது விஷயமேயில்லை. நம்மை நாமே சிறுமைப்படுத்துவதை முதலில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.இந்துத்துவா அமைப்புகளைக் குறித்துத் தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் வேண்டுமானால் அது தங்களின் கருத்து சுதந்திரம் எனக்கொண்டாலும்,மதம் குறித்தும் நீங்கள் சொல்லிருக்குக் கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பது ஒரு இந்துவாக என் கடமை. தாங்கள் பாரசீகம் படித்து அதில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது சத்தியமாக இங்குவரும் பலருக்கும் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. தாங்கள் ஒரு இந்து என்றால் தங்களின் தாயாரையே நீங்கள் தேவிடியா எனச் சொல்வது போன்றது இங்கு நீங்கள் மதம் குறித்து உதிர்த்திருக்கும் கருத்துக்கள் என்றால் அது மிகையாகாது. எத்தனை நாடுகளில் யார் பெரும்பான்மை என்பது விஷயமேயில்லை. இந்தியாவில் கூட சிறுபான்மையினருக்கு ஆதரவாகத் தான் அரசாங்கமே செயல்படுகிறது பெரும்பான்மை மக்களை அவர்கள் ஒருபொருட்டாகக் கூடமதிப்பதில்லை.பாகிஸ்தானிலும்,வங்கதேசத்திலும் சிறுபான்மை இந்துக்கள் படும் வேதனைகள் சொல்லிமாளா.மொகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இடிக்கப்பட்ட இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் எண்ணிலடங்கா!,இன்றும் தாய்லாந்தில் சொர்ணபூமி விமான நிலையத்தில் இந்துக்களின் சிற்பவேலைப்பாடுகளை நிறுவியுள்ளனர்,கம்போடியாவில் தான் உலகின் மிகத்தொன்மையான இந்துக்களின் ஆலயம் உள்ளதாக வரலாற்று ஆய்வளர்கள் கூறுகின்றனர்.மெசிக்கோ நாட்டின் தேசியக்கொடியில் கற்றாழைச் செடியின் மீது கருடன் பாம்பைக் கவ்வியபடி உள்ள சின்னம் இன்றளவும் உள்ளது.எங்கள் புனிதமான பாரத மண்ணிற்கு என எத்தனையோ பெருமைகள் இருக்கிறது.அவையெல்லாம் எங்கள் மதத்தினால் ஏற்பட்டவை. நீ இந்து மதத்தின் தோற்றம்,வளர்ச்சி குறித்து இங்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.இயேசு பிறப்புக்கு முன் இருந்த கிறிஸ்தவ மதம் பற்றியும்,கி.பி.6ம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றிய இஸ்லாம் பற்றியும் உன்னைப்போல் அதிமேதாவிகள் தான் இங்கு விளக்கவேண்டும்.

  • உங்கள் கருத்து ஆர் எஸ் எஸ் வீட்டு கிளிப்பிள்ளை சொல்வது போல் இருந்தது . எவ்ளோ நாளைக்குத்தான் இப்படி ஏமாற்றிக்கொண்டே இருப்பீர்களோ… தங்கள் உரிமைகளுக்காக சுதாரிக்கும் தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களை திசை திருப்ப பார்ப்பனர்களின் இந்த மாற்று மத துவேஷ யுக்தியை அந்த மக்கள் என்று புரிந்துக்கொள்வார்களோ… வினவு போன்றவர்களே உங்கள் யுக்திக்கு விழும் போது பாமரர்களை பற்றி என்ன சொல்வது..

   • நான் ஆர்.எஸ்.எஸ் பற்றி ஒருவரி குறிப்பிடவில்லை. என் மதம் சார்ந்த விஷயங்களைப் பற்றித் தான் குறிப்பிட்டிருக்கிறேனேயொழிய, வேறேதுவும் இல்லை.என் மதத்தைப் பற்றிய தவறான கருத்து பதிவு செய்யப்படும் போது என் தரப்பில் உள்ள கருத்துக்களைப் பதிவு செய்யவேண்டியது ஒரு இந்துவாக என் கடமை அதைத்தான் நான் செய்திருக்கிறேன். ஒரு வேளை நான் ஆர்.எஸ்.எஸ் ஐ ஆதரித்திருப்பதாக நீங்கள் கருதியிருந்தால் என் மதம் காக்க‌ப் போராடும் ஒரு அமைப்பை நான் ஆதரிக்காமல் வேறு யார் ஆதரிப்பது?.ஒரு இஸ்லாமியரும்,கிறித்தவருமா ஆதரிப்பர்.உங்களைப் போன்றோர் ஏன் கிறிஸ்தவ,இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் அக்கிரமங்களைக் கண்டுகொள்வதில்லை என்பது புரியவில்லை.85% சதவீதப் பெரும்பான்மை மக்களின் மத உணர்வு மதிக்கப் பட வேண்டாமா?.ஒரு வளைகுடா நாட்டிலும்,ஒரு ஐரோப்பிய யூனியன் நாட்டிலும் சென்று பாருங்கள் அங்குள்ள அரசு நிர்வாகம் பெரும்பான்மை மக்களைக்காக்க செய்யும் நடவடிக்கைகளை.ஆனால் இந்தியாவிலோ ஓட்டுவாங்கி கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான் சிறுபான்மை மக்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர்.கேட்டால் ஜனநாயகம் என்கிறான்?. மற்ற நாடுகளில் இல்லாத ஜனநாயகமா என்ன?.

  • என்னுடைய மதம் ஏன் என்னை சூத்திரன் என்கிறது?என் சகோதரனை பள்ளன் பறையன் சக்கிலியன் என்று இழிதொழில்களை சுமத்தி ஊரை விட்டு தள்ளி வைத்திருக்கிறது?

   • நண்பரே இரண்டாம் உலகப்போருக்குக் காரணம் என்னவென்பதை சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால் தெரியும். ஈராக்கில் எத்தனை லட்சம் குர்தீஷ் இனமக்களைக் கொன்று குவித்தான் சதாம் என்பது,இன்று தான் உலகத்தின் பார்வையிலேயே வந்திருக்கிறது.இதற்கெல்லாம் காரணம் ஆதிக்கவெறி தானே தவிர வேறெதுவும் இல்லை. அங்கும் இதுபோன்ற பல உட்பிரிவுகள் உள்ளன. நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என பலவிதமான சாயங்கள் பூசும் அமைப்புகள் உள்ளன.இவற்றையெல்லாம் நாம் அறிவதில்லை, நான் எனது மதம் குறித்து மட்டும் தான் என் கருத்தைப் பதிவு செய்தேனேயொழிய சாதியைப் பற்றிக் குறிப்பிடவில்லை.சாதி என்பது அவரவர் தொழில் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான், அதை ஆங்கிலேயர் தமது சுயலாபத்திற்காக,அவர்கள் செய்த சூழ்ச்சியால் மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய்ந்துவிட்டுச் சென்றுவிட்டனர்.இன்று நாம் நமது இயற்கைவளங்களையும்,செல்வச் செழிப்பையும் இழந்து வறுமையில் உழன்று,சாதியின் பெயரால் உடைந்து நிற்கிறோம்.அது தான் நமது மதத்தை மற்றவர்கள் கேலி செய்யவும்,கிண்டல் செய்யவும் காரணமாகிவிட்டது.இயேசு தோற்றுவித்த மதம் கிறிஸ்தவம்,முகமது நபியால் வழி நடத்தப்பட்ட மதம் இஸ்லாம், ஆனால் இந்துமதம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது இதுவரை தெரியாது,ஆலமரத்தின் ஆணிவேர் எதுவெனத்தெரியாது அதுபோல் தான் இந்துமதம்.ஆதி சங்கரர்,சைவ சமயக்குறவர்கள்,ஆழ்வார்கள்,இன்னபிற புனிதர்களாலும் போற்றி வளர்க்கப்பட்டது அவ்வளவே.உலகில் முதலில் தோன்றிய மதம் இதுவென்றால் அது மிகையாகாது.

 8. பெரிய சாமி நீங்கள் பெரிய உண்மையிலேயே பெரிய சாமிதான்

  நல்ல கருத்து

  ராஜாநரசிம்மா விவேக்
  தஞசை

 9. மதவாதிகள் என்றாலே, மற்றவர் கருத்தை காதில் போட்டுக்கொள்ள கூடாதா என்ன? மதஙகள் கூறும் வாழ்க்கை நெறிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இருக்கவேண்டாமா? விமரிசனங்களுக்கு உட்படாத, விமரிசனங்களை விரும்பாத மதஙகள் காட்டு மிரான்டி மதஙகளாகத்தான் இருக்கவேண்டும்! விமரிசனத்திற்கு அஞசும் எவரையும் மனிததன்மை கொண்டவராக கருதமுடியாது! அர்சு மற்றும் மத தலைமை பீடமான கோவில்களில் எந்த சாதியும் ஆதிக்கம் செலுத்த கூடாது! இதில் மட்டும் பிறப்புரிமை கோருவது ஏன்?

 10. பன்றியும் பன்றிக்குட்டியும் சாக்கடையில் சந்திக்கின்றன! ஆனால், கார்த்திக் அம்பி ரத்தம் கொதிக்கவில்லை என்கிறார்.ஏன் அம்பி? நீங்கள்தான் உங்கள் மதத்தில் இருக்கும் குற்றங்களைத் தட்டிக்கேட்கலாமே? செய்தீர்களா? அல்லது செய்வீர்களா?

  • வீட்டில் இருந்துதான் தான் ஆரம்பிக்க வேண்டும், In progress. I just said that we all have to do it ourselves to our own religion and the ‘current’ beliefs. Like Ajaathasathru says above.

 11. ஜெயேந்திரன் வாயை கங்கையில் கழுவினானாம். பல உயிரினங்கள் இறந்ததாம்.

 12. As you you joker stood by the side with lamps. You fellows do not have anything else to do. Clean your _____ first before talking about others. You fellow spoil industrial atmosphere. Creat probles take money from companies.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க