ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, தமிழ்நாடு
மாணவர்களுக்கு ஓர் அறைகூவல்!
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும்……….
போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும் …..
சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து பேரணி –
சென்ட்ரல் தென்னக ரயில்வே அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்
நாள்: 28.3.2013, நேரம்: காலை 11.00
அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் ஒரு ஏமாற்று!
இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணையே சரியான மாற்று!
ஈழத்தமிழின மக்களின் தன்னுரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்!
என்ற அடிப்படையில் 80-களின் மாணவர் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்க தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி 28.3.2013 அன்று காலை 11.00 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அருகில் இருந்து பேரணியாகச் சென்று சென்ட்ரல் தென்னக ரயில்வே அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
கடந்த 15 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் திரளாக அணிதிரண்டுவர வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.
இவண்
கணேசன், ஒருங்கிணைப்பாளர்
9566149374
தகவல் : ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி
மாணவ போராளிகளுக்கு வாழ்த்துகள்!
இப்போராட்டத்தினூடாக, தமிழர்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களான ‘அடிமை’ச் சீமான், ‘மானங்கெட்ட’ நெடுமாறன், ‘புழுதிப் புயல்’ வைகோ போன்ற கழிசடைகளின் சந்தர்ப்பவாதங்களையும் துரோகங்களையும் அம்பலப்படுத்தி அவர்களை அரசியல் அரங்கை விட்டே அகற்ற வேண்டியது இம் மாணவப் போராளிகளின் கடமையாகும்.
பாசிச ஜெயலலிதா என்ன கீழறுப்பு செய்தாலும், இழவு வீட்டில் போதை தலைக்கேறி குத்தாட்டம் போடும் குடிகாரர்களைப் போல,குத்தாட்டம் போட்டு ஜெயலலிதாவின் பாசிசத்துக்கு, புனித ஒளிவட்டமிடும் இவர்களின் அரசியலே மிகவும் ஆபத்தானது; தமிழர்களுக்கு எதிரானது.
செம்பியன் கருத்தை ஆதரிக்கிறேன்
திரு செம்பியன்,திரு சிவகுமார் ஆகியோரின் கருத்தை ஆதரிக்கிறேன்.
தாத்தா அரசு தான் காரணம், இல்லை அம்மா சொன்னது தான் காரணம் என ஈழத்த்தில் வாக்கு அரசியல் நடத்தும் கடைந்தெடுத்த பிழப்புவாத பொறுக்கி அரசியல்வாதிகளின் முகத்திரை கிழித்தெறிந்து இந்த சந்தர்ப்பத்தில் அவர்களையும் அவர்களின் கைத்தடிகளாக திருமா, சீமான், சைகோ போன்ற அல்லக்கைகளையும் துடைத்தெரிய வேண்டும்…
செம்பியன் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்! மாணவர்களே! சுயமாக சிந்தியுஙகள்! பிழைப்பு வாதிகளை விமரிசிக்க தயங்காதீர்கள்! மாறுபட்ட கருத்தையும் ஆராய்ந்து உண்மையை உணருஙகள்! தமிழக அரசியல் சாக்கடை ஏடுகளை அப்படியே நம்பி விடாதீர்கள்! புதிய தலைமையை உருவாக்குஙகள் ! உஙகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவோரை தோலுரியுங்கள்! வாழ்த்துக்கள்!