privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க உளவாளிகளே, மன்மோகனையெல்லாம் ஒட்டுக் கேட்கணுமா ?

அமெரிக்க உளவாளிகளே, மன்மோகனையெல்லாம் ஒட்டுக் கேட்கணுமா ?

-

“உங்க எல்லோரையும் ஒட்டுக் கேட்க வேண்டும்” இதுதான் அமெரிக்கா ஆரம்பித்து, பிரிட்டன் முதல் இந்தியா வரை அரசுகளின் ஒரே குரலிலான பாட்டு. “எதற்கு ஒட்டுக் கேட்கிறீங்க” என்று கேட்டால், “அப்பதான் பயங்கரவாதிகள் என்ன பேசிக்கிறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு தடுத்து நிறுத்த முடியும்” என்று சொன்னார்கள்.

ஜேம்ஸ் பாண்ட்பயங்கரவாதிகளை ஒட்டுக் கேட்பதற்காக உருவாக்கிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சொந்த நாட்டு குடிமக்களையும், வெளிநாட்டவர்களையும் உளவு பார்ப்பதோடு, தம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களையும் ஒட்டுக் கேட்பதாக அமெரிக்காவை அம்பலப்படுத்திய ஸ்னோடன், கார்டியன் பத்திரிகைக்கு வெளியிட்ட ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.

2009-ம் ஆண்டு ஏப்ரலில் லண்டனில் நடந்த ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தின் போதும், அதே ஆண்டு செப்டம்பரில் நடந்த நிதி அமைச்சர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்ட அயல்நாட்டு உறுப்பினர்களை பிரிட்டனின் உளவு நிறுவனம் எப்படியெல்லாம் ஒட்டுக் கேட்டது என்ற விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.

எம்ஐ6 உளவாளி ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல பொது இணைய மையங்கள் போல செட் அப் செய்து அவற்றை பயன்படுத்தும் வெளிநாட்டு தூதுக் குழு உறுப்பினர்களின் மின்னஞ்சல்களை படிப்பற்கான மென்பொருளை பொருத்துவது, பிளாக்பெரி தொலைபேசிகளின் பாதுகாப்பு வளையங்களை உடைத்து ஒட்டுக் கேட்பது, தொலைபேசி மெட்டா தகவல்களை பதிவு செய்வது என்று நட்பு நாடுகளின் தலைவர்களையும் வேவு பார்த்திருக்கிறது பிரிட்டன். ஒருவரது மின்னஞ்சலை அவர் படிப்பதற்கு முன்பு அல்லது படிக்கும் போதே மின்னஞ்சல் சேவையின் கணினியில் உளவுத் துறை நேராக படித்திருக்கிறது.

இதன் மூலம் திரட்டிய தகவல்களை உடனுக்குடன் 45 ஆய்வாளர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். உளவுத் துறை தலைமையகத்தில் 15 சதுர மீட்டர் திரையில் யார், யாரிடம் தொலைபேசியில் பேசுகிறார்கள் என்ற தகவல்களை தொகுத்து படமாக காட்டியிருக்கிறார்கள்.

அப்போதைய ரசிய அதிபர் மெட்வடேவின் தொலைபேசி உரையாடல்கள் ரஷ்ய செயற்கைக் கோள் வழியாக நடத்தப்படுவதை ஒட்டுக் கேட்க அமெரிக்க உளவாளிகள் முயற்சித்திருக்கின்றனர். துருக்கியின் நிதி அமைச்சர் முகமது சிம்செக்கையும் அவரது குழுவில் இருந்த 15 பேரையும் ஒட்டுக் கேட்டிருக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கணினி வலைக்குள் புகுந்து லண்டனில் இருக்கும் அந்நாட்டு தூதுவரின் தொலைபேசி சேவையையும் உளவுத் துறை ஒட்டுக் கேட்டிருக்கிறது.

ஆனானப்பட்ட ரசிய வல்லரசுத் தலைவரே ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கும் போது ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட மன்மோகன் சிங்கெல்லாம் எம்மாத்திரம். சரியாகச் சொன்னால் மன்மோகன் சிங் குளிக்கும் போது பாடிய பாடல் கூட அமெரிக்க, இங்கிலாந்து உளவுத்துறையின் கவனத்திற்கு வராமல் போயிருக்காது. ஆனால் அமெரிக்க அடிமை மன்மோகன் சிங் பேசுவதையெல்லாம் ஒட்டுக் கேட்க வேண்டுமா என்ன? இதனால் ஒட்டுக் கேட்பு கருவிகளையே அமெரிக்கா இழிவுபடுத்துவது போல உள்ளதே?

இது தொடர்பாக 2009 ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் என்ன பேசியிருப்பார் என்பதை த்ரிஷா வீட்டு நாய்க்குட்டியிடம் கேட்டால் கூடச் சொல்லுமே. இதோ அவர் பேசிய உரையாடல்களின் எகஸ்குளூசிவ் பதிவுகள் :

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் :

மன்மோகன், சோனியா காந்தி
“மகனே மன்மோகன், போய் நாட்டை வித்துட்டு வா”
“ஜி, நான் இப்பவே வித்துர்றேன்”

“நமஸ்தே சோனியாஜி. மை லண்டன் சே மன்மோகன் போல் ரஹா ஹூம். யஹாங் பகுத் டண்டா ஹை. தில்லி மே மௌசம் கைசா ஹை? (நமஸ்தே சோனியாஜி. நான் மன்மோகன் பேசறேன். இங்கே ரொம்ப குளிரா இருக்கு. தில்லியில எப்படி இருக்கு?)

நியூக்ளியர் டீல் கேலியே ஒபாமாஜி ஆப்கோ பஹூத் ஷூக்ரியா கர்தே தே. (நியூக்ளியர் ஒப்பந்தத்துக்கு ஒபாமா உங்களுக்கு நன்றி சொன்னார்)

வால்மார்ட் ரீடேல் மே இந்தியா ஆனே கி தையாரி துரந்த் ஹோனா சாஹியே. கமிஷன் சப் பக்கா கர் தியா. (வால்மார்ட் இந்தியாவுக்குள்ளே வர்றதுக்கான ஏற்பாடு சீக்கிரம் நடக்கணும். கமிஷன் எல்லாம் உறுதியாக்கியாச்சு)

ராகுல்ஜி கப் பிஎம் ஆனா சாஹ்தே ஹை, குச் போலா கியா? மை கபி பீ போஸ்ட் சோட்னே தையார் ஹூம். (ராகுல்ஜி எப்போ பிரதமர் ஆக விரும்புறேனு ஏதாவது சொன்னாரா. நான் எப்ப வேணும்னாலும் பதவி விலக தயாரா இருக்கேன்)

அச்சாஜி, மை ஃபோன் ரக்தா ஹூம். தன்யவாத் (சரிஜி, நான் போன் வைக்கிறேன். நன்றி)”

ரிலையன்ஸ் முதலாளி அம்பானியிடம் :

“அம்பானிஜி, ஆப்கே லோக் ஜோ லிக்கே தியா வோஹி யஹாங் மை பாத் கர் ரஹா ஹூம். ஆப் சிந்தா மத் கீஜியே, பெட்ரோலியம் மினிஸ்ட்ரி மே ஆப்கி மர்ஜி கே தரஹ் இந்தஜாம் ஹோகா. அவுர் குச் சாஹியே தோ, துரந்த் மெசேஜ் பேஜியே“ (அம்பானிஜி, உங்க ஆளுங்க என்ன எழுதி கொடுத்தாங்களோ, அதையேதான் நான் இங்க பேசுகிறேன். நீங்க கவலைப்படாதீங்க, பெட்ரோலியம் மினிஸ்ட்ரியில் உங்க விருப்பப்படி எல்லா ஏற்பாடும் நடக்கும். வேற ஏதாவது வேணும்னா, உடனே சொல்லி அனுப்புங்க)

(நன்றி: என்எஸ்ஏ – அமெரிக்கா)

இதை ஒட்டுக் கேட்ட அமெரிக்க – பிரிட்டிஷ் உளவுத் துறை அதிகாரிகள் மன்மோகன் சிங்கின் டிஎன்ஏவை ‘பிரிட்டன்ஸ் டிஎன்ஏ‘ நிறுவனத்துக்கு அனுப்பி அவர் எங்கிருந்து வந்தவர் என்று கண்டு பிடிக்கச் சொல்லியிருக்கிறார்களாம்.