8-7-13 மாலை 6-00 மணிக்கு நெய்வேலி மந்தாரக்குப்பம், நால் ரோடு அருகில் கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புத்தகக் கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. எழுத்தாளர் இமையம் துவக்கி வைத்து முதல் விற்பனையைச் செய்தார். வழக்கறிஞர் மணவாளன் பெற்றுக் கொண்டார்.
நெய்வேலி அனல்மின் நிலையத்தின் சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் இரண்டு ஆண்டுகளாக கீழைக்காற்று வெளியீட்டகத்திற்கு இடம் ஒதுக்காமல் மறுக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமாக என் எல்சியின் இலக்கிய அதிகார வட்டம் முற்போக்கு அரசியலை பரப்பும் கீழைக்காற்றுக்கு அனுமதி மறுத்தது உள் நோக்கம் கொண்டதாகவும், சதி நிறைந்ததாகவும் உள்ளது. இது குறித்து பின்னர் விரிவாக எழுதுகிறோம். எனினும் வாடிக்கையாளர்களின், வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆண்டு மாற்று இடத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் தனது அலுவலகத்தை வாடகை ஏதும் பெறாமல் ஒருவாரத்திற்கு புத்தகக் கண்காட்சிக்கு ஒதுக்கி கொடுத்துள்ளார்.அவருக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நெய்வேலி கீழைக்காற்று சிறப்பு அரசியல் புத்தகக் காட்சி ஜூலை 7 முதல் ஜூலை 14 வரை
கழிவு 10%
சமூக உணர்வும், புதியன அறிய விருப்பும்
ஆர்வமும் உள்ள அன்பான வாசகர்களே!
தமிழகமெங்கும் உழைக்கும் மக்களுக்கும், அறிவார்ந்த
வாசகர்களுக்கும் அறிமுகமான கீழைக்காற்று
வெளியீட்டகம் தற்போது உங்கள் அருகில்.
அரசியல், அறிவியல், வரலாறு, சமூக அறிவு தரும் பலதுறை நூல்கள்,
மனவளர்ச்சிக்கும், மனித வளர்ச்சிக்கும் உதவும், சிறந்த நாவல்கள், கவிதைகள்….
நம் வாழ்வின் நெருக்கடிகளுக்கு காரணமான
சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களை
தெளிவிக்கும் அவசியமான சிறுநூல்கள்.
மார்க்சியம், பெரியார், அம்பேத்கர் சிந்தனை நூல்கள்…அரசியல் பாடல், ஒளிநாடாக்கள்… பத்திரிகைகள்…
அனைத்தும்
ஒரே கூரையின் கீழ்… உங்கள் ஊரில் … வாருங்கள் !
இடம் :
வழக்கறிஞர் S மணவாளன் அவர்கள் அலுவலகம்,
(ராஜன் மருத்துவமனை எதிர்புறம்),
மந்தாரக்குப்பம், நெய்வேலி – 2.
நேரம் :
காலை 10.00 முதல் இரவு 8.30 வரை
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று
10, அவுலியா தெரு,எல்லீசு சாலை,
சென்னை -2
044-28412367
(கீழைக்காற்று) முக்கிய பொறுப்பில் இருப்பவரின் அலைபேசி எண்களை தர முடியுமா?
தோழர்.மணவாளன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.