முகப்புஉலகம்அமெரிக்காஅண்ணா ஹசாரேவுக்கு பங்குச் சந்தை - வித்யா பாலனுக்கு தள்ளுமுள்ளு !!

அண்ணா ஹசாரேவுக்கு பங்குச் சந்தை – வித்யா பாலனுக்கு தள்ளுமுள்ளு !!

-

ண்ணா ஹசாரே கடந்த 19-ம் தேதி நியூயார்க்கில் நடந்த இந்தியா தின பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக நடந்த அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தால் கவரப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவரை இந்த பேரணியில் கலந்து கொள்ள அழைத்திருந்தனர்.

வித்யா பாலன்
நியூயார்க்கில் பாலிவுட் நட்சத்திரம் வித்யா பாலன் கலந்து கொண்ட இந்திய சுதந்திர தின கொண்டடாட்டங்கள். (படம் : நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

ஆண்டு தோறும் இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி நடத்தப்படும் இந்தியா தின கொண்டாட்டங்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு குடிபெயரும் இந்தியர்கள் இந்தியாவுடனான தமது தொடர்புகளை கோயில்கள், பரத நாட்டியம், இந்திய உணவு இவற்றின் மூலம் பராமரித்துக் கொள்வது போல, தேசபக்தியை புதுப்பித்துக் கொள்ள ஆண்டு தோறும் இந்தியா தினம் நடத்தி இந்திய பிரபலங்களையும் அழைக்கின்றனர்.

கடந்த 35 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்விற்கு வழக்கமாக அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஏ ஆர் ரஹ்மான், ராஜ் கபூர், ஷாரூக் கான், ஹேம மாலினி, மாதுரி தீட்சித் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களும் அனில் கும்ப்ளே, சுனிதா வில்லியம்ஸ் போன்ற பிரபலங்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த முறை அண்ணா ஹசாரே அழைக்கப்பட்டிருக்கிறார். கூடவே பாலிவுட் நட்சத்திரம் வித்யா பாலன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார், சின்னத் திரை நட்சத்திரம் ராதிகா ஆகியோரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

சரத் குமார், ராதிகா
சரத்குமார், ராதிகா அணிவகுப்பில் கலந்து கொண்டார்கள். (படம் : நன்றி கலாட்டா டாட் காம்)

அண்ணா ஹசாரேவுடன் கை குலுக்கி அவரது போராட்டத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில் வித்யா பாலன் தனது ரசிகர்களுக்கு கொடுத்த பறக்கும் முத்தத்தால் ஏற்பட்ட தள்ளுமுள்ளை சமாளிக்க போலீஸ் மிதமான பலபிரயோகம் செய்ய வேண்டி வந்திருக்கிறது. ஊழலுக்கு எதிர்ப்பு, கவர்ச்சிக்கு ஜே என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என அமெரிக்காவிற்கு வாக்கப்பட்ட இந்தியர்கள் எடுத்துச் சொல்கின்றனர் போலும்.

பேரணி நடந்த அடுத்த நாள், 20-ம் தேதி (திங்கள் கிழமை) காலை நியூயார்க்கின் டைம் சதுக்கத்தில் உள்ள நேஸ்டாக் பங்குச் சந்தையை மணி அடித்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் அண்ணா ஹசாரே கலந்து கொண்டிருக்கிறார். நேஸ்டாக் என்பது உலகின் முதல் மின்னணு பங்குச் சந்தை. நியூயார்க் பங்குச் சந்தைக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பங்குச் சந்தை.

அண்ணா ஹசாரே
அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வலர் குழுவின் சார்பில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கும் அண்ணா ஹசாரே நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் ஓய்வு எடுக்கிறார். (படம் : நன்றி தி இந்து)

அண்ணா ஹசாரேவை விமர்சித்து “நான் ஏன் அண்ணாவாக விரும்பவில்லை” என்று கட்டுரை எழுதிய அருந்ததி ராய் 2011-ம் ஆண்டு அமெரிக்கா போன போது மக்களின் சேமிப்புகளை சூறையாடி பல லட்சம் மக்களை வேலையும் வீடும் இழக்கச் செய்து தெருவில் நிறுத்திய நிதி நிறுவனங்களை எதிர்த்துப் போராடிய வால் வீதி போராட்டக்காரர்களை சந்தித்தார். ஆனால் இப்போது அமெரிக்காவில் பயணம் செய்யும் அண்ணா ஹசாரேவோ அந்த நிதி நிறுவனங்களின் மெக்காவான அமெரிக்க பங்குச் சந்தையில் மணி அடித்து ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுகிறார். ஊழலின் ஊற்று மூலமான பன்னாட்டு நிறுவனங்களின் கருவறையான இந்த பங்குச் சந்தையை துவக்கி வைப்பதில் அவருக்கு வெட்கமோ, சூடோ, சுரணையோ எதுவுமில்லை.

பிறகு அண்ணா ஹசாரே சவுத் கரோலினா மாநில ஆளுநரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக் ஹேலே, டெலாவேர் மாநில ஆளுநரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜேக் மெர்கல் ஆகியோரையும் சந்திக்கவிருக்கிறார். அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்து விட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாவதால், அவர்களது வாக்குகளை திரட்ட அமெரிக்க அரசியல்வாதிகள், அண்ணா போன்றவர்களுடனும் கை குலுக்க வேண்டியிருக்கிறது.

இவ்வாறாக, ராலேகான் சித்தியில் ஆரம்பித்த அண்ணா ஹசாரேவின் ‘ ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம்’, 2011-ன் ராமலீலா உண்ணாவிரத வழியைக் கடந்து இப்போது அமெரிக்க வால் வீதி முதலாளித்துவ நிறுவனங்களிடம் காலில் விழுவது வரை வந்திருக்கிறது.

இந்த கைப்புள்ளையை நம்பி ஏமாந்தோர் இப்போது என்ன சொல்வார்கள்?

 1. அண்ணா….அது எப்படீங்க…10நாள் பச்சை தண்ணீர்கூட ஊத்தாமல்…(hunger strike)
  ,கன்னம் இப்படி
  ஊதிப்போன குஷ்பு இட்டிலிபோல் இருக்கு?
  புஷ் மாமா கடையில் லேகியம் வாஙிகி சாப்பிட்டிங்களா?

 2. ‘கார்பரேட் கம்பெனிகள்’ கேள்விப்பட்டிருக்கிறேன். ‘கார்பரேட் சாமியார்கள்’ கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வரிசையில் இவர் ‘கார்பரேட் சேவகரோ’?

 3. @r.k.seethapathi naidu

  Before making mockary of someone, Could you please elaborate what did you do to the country?

  you are not even ready to remove the caste name while posting on a public forum.

  • Mr.Raman!
   if CHO make a dirty comments on Tamils struggle,u call it a BEST satire:if I retaliate,it is mockery….well it is nothing but double standardness of THREAD parties!
   I do not mind leaving the title NAYUDU:prior to that,pl instruct South Block Kerala bajanai troups to discard their added ones sivasankara(MENON),PM’s advisor.Mr.Pillai: above all,pl.get in touch with Local Election commissioner Mr.IYER @ chennai to leave off the IYER title

   • எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே….
    ஆங்…நாயகன் டயலாக்…

    *அவன நிறுத்த சொல்லு*

    நாயக்க டயலாக் நல்லாத்தான் இருக்கு…

 4. சாதிப் பெயர்கள்,ஆட்டுக்கு தாடிமாதிரிதான்…
  இருந்தாலும்,”னோக்கு” ஏன் மூக்குக்கு மேல் கோபம்!

  னாட்டுக்கு நான் செய்தது இருக்கட்டும்….உங்காத்துல என்ன செய்தீர்கள்?

  பரிகார பூசை,தோசநிவர்த்தி….இதெல்லாம் செய்வதுதான் இந்தியாவுக்கான
  உபகாரமா?

  செய்ததை போஸ்டர் போட்டு விளம்பரம் செய்ய
  நான் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறேன்?

 5. இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு ஏகாதிபத்தியங்களுக்கு பணிவிடை செய்ய ஓடிப்போன துரோகிகள் நாங்களும் நாட்டுப் பற்றாளர்கள்தான் என ஊரை ஏய்க்கிறார்கள்.இந்திய நாட்டையே ஒரே ஒரு லோக்பால் மூலம் கடைதேற்ற வந்ததாக ஏய்க்கும் அன்னா இவர்களுக்கு பொருத்தமான கூட்டாளிதான்.

  • திப்பு,எனது வருத்தமெல்லாம்,,, 60 வருடங்களாக
   நம்மை ஏய்த்து பிழைக்கும் கும்பல்,இன்னமும்
   னம்மை ஏறி மிதிப்பதை எப்படி சகித்துகொள்வது!
   என்ன செய்வது எனது கனவெல்லாம் தனித்தமிழ்நாடு பற்றியே!
   படித்த இளைஜர்களே சோனியாவுக்கு காவடி தூக்கிகொண்டு
   அலைவதைப் பார்க்கும்போது வயிறெல்லாம் எரிகிறது!

   • //எனது வருத்தமெல்லாம்,,, 60 வருடங்களாக
    நம்மை ஏய்த்து பிழைக்கும் கும்பல்,இன்னமும்
    னம்மை ஏறி மிதிப்பதை எப்படி சகித்துகொள்வது//
    சகித்துக்கொள்ள வேண்டாம். போராட வாருங்கள்.

    //என்ன செய்வது எனது கனவெல்லாம் தனித்தமிழ்நாடு பற்றியே//
    அது கனவாகத்தான் கடைசியில் மிஞ்சும்.

    //படித்த இளைஜர்களே சோனியாவுக்கு காவடி தூக்கிகொண்டு
    அலைவதைப் பார்க்கும்போது வயிறெல்லாம் எரிகிறது//
    என்ன செய்ய. பிழைப்புவாதத்தை மாற்றித்தான் ஆகணும்.

    • அப்பாடா எனக்கு கனேசு மாதிரி ஒரு நல்ல போராளி கிடைத்தார்!

 6. @r.k.seethapathi naidu

  சாதிப் பெயர்கள்,ஆட்டுக்கு தாடிமாதிரிதான்

  Seriosly? so people keep caste name and identify themself with caste is just for fun! great!

  ,”னோக்கு” ஏன் மூக்குக்கு மேல் கோபம்!

  You want to prove, You are fighting against a Brahmin and planning to garner support of other readers.

  You also want to divert the attention and justify keeping the caste name

  //னாட்டுக்கு நான் செய்தது இருக்கட்டும்….?//

  So you are an empty vessal.

  //உங்காத்துல என்ன செய்தீர்கள்//

  You also want to divert the attention and justify “Since Raman dint do anything, dont expect anything from me!Nobody can blame me ”

  //பரிகார பூசை,தோசநிவர்த்தி….இதெல்லாம் செய்வதுதான் இந்தியாவுக்கான
  உபகாரமா?//

  You also want to porttrait since Raman could be a Brahmin ,what else could he have done!
  Crappy Brahmins no nothing else that is the point you want to prove.

  //செய்ததை போஸ்டர் போட்டு விளம்பரம் செய்ய
  நான் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறேன்?//

  You sir such a modest person

  //என்ன செய்வது எனது கனவெல்லாம் தனித்தமிழ்நாடு பற்றியே!//

  Ha What good Tamil country is going to solve? If new boundry will solve the problem …

  Grow up gentelman! Bashing oters and a community will be fun but will bring nogood

 7. திரு.ராமன்,?நீங்கள் அன்னாவுக்கு வக்காலத்து வாங்கியதால்தான் இவ்வளவும்….
  னீங்கள் பார்ப்பனர்/(அ) வேறு யாரோ… எனக்கு என்ன ஆகப்போகிறது?
  டாலருக்கு( பழனி டாலர் அல்ல) ஏங்கும் பரமாத்மா நான் அல்ல…
  வேறு ஒரு கட்டுரையில் டாலரை நீங்கள் ஆராதித்த ஆர்வத்தை பொருளாதாரம் படிக்காதபோதிலும்,உங்கள் டாலர் மோகம்…ஆகா அபாரம் ராமன்!
  அமெரிக்காவுக்கு உழைத்து உழைத்து கலைத்து போன பிறகு சாவகாசமாக வாருங்கள்:
  தனித்தமிழ்னாடு பற்றி அதிகமாக பேசுவோம்!

 8. u have mentioned me AN EMPTY VESSOL!
  so what,people like U are rolling stones: rolling stones gathers no mass(ofcourse it is getting polished with dollar sharpness!)
  So.Mr.Raman is very cool that India’s rupee still weakens to the 1=100 level

 9. தனித்தமிழ்னாட்டுக்காக வினவு தளத்தில் போராளிகளை தேடாமல்,சத்தியமூர்த்தி பவனிலும்,அறிவாலயத்திலுமா நான் தேடமுடியும்?

 10. @r.k.seethapathi

  I mentioned if India gives asylum to Snowden, and if USA puts economic pressure on India
  then 1USD will reach 100.

  Where did you infer the information that I wish 1USD has to reach 100 is puzzling me.

 11. ராமன் சார்,உங்களுக்கு என்ன வேண்டும்?

  ரூபாயின் மதிப்பு கீழே சரிவது அமெரிக்கவில் “சேவை” செய்யும் “தேசபக்த்ர்களுக்கு”

  பணமாற்றத்தில் அதிகம் கிடைக்க வாய்ப்புண்டுதானே?
  சரிவு/உயர்வு எது முக்கியம் ராமன் சாருக்கு?
  இந்தியா அமெரிக்காவின் அடிமை தேசங்களில் ஒன்றுதானே?
  அமெரிக்கவின் செல்ல வேலையாட்களில் ஒருவர் நம்மை ஆள்வது உண்மைதானே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க