Tuesday, November 29, 2022
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதில்லைக் கோயில்: இறுதிக் கட்டப் போராட்டம்! ஆதரவு தாரீர் !

தில்லைக் கோயில்: இறுதிக் கட்டப் போராட்டம்! ஆதரவு தாரீர் !

-

ன்பார்ந்த தமிழ் மக்களே,

போராடி மீட்டெடுக்கப்பட்ட தில்லைக்கோயில், மீண்டும் தீட்சிதர்களின் பிடிக்கே சென்று விடாமல் தடுக்கும் பொருட்டு, உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்தின் மக்கள் மன்றத்திலும் விடாப்பிடியாகப் போராடி வருகிறோம்.

சுப்பிரமணிய சாமி, உச்சநீதிமன்றம்
ஜெயலலிதா அரசும், சுப்பிரமணிய சாமியும், தீட்சிதர்களும் இணைந்த பார்ப்பனக் கூட்டணிக்கு எதிராகப் போராட உங்களை அறைகூவி அழைக்கிறோம்.

ஜெயலலிதா அரசு கோயிலிலிருந்து அறநிலையத்துறை அதிகாரியை வெளியேற்றப் போகிறது என்று சுப்பிரமணியசாமி அறிவித்தவுடன், திங்கள்கிழமை காலை சிவனடியார் ஆறுமுகசாமியுடன் எமது வழக்குரைஞர்களும் உறுப்பினர்களுமாக 30-க்கும் மேற்பட்டோர் தில்லைக் கோயிலுக்குள் சென்றனர். “தில்லைக்கோயிலை தமிழக அரசு தீட்சிதர் வசம் ஒப்படைத்தால் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியபடியே உயிர் துறப்பேன்” என்று அறிவித்தார் ஆறுமுகசாமி. கொட்டும் மழையில் அவர் வழிபாடு தொடங்கியது, போராட்டமும்  தொடங்கியது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு தோழர்கள் சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுச் சொத்தான கோயிலை தீட்சிதரின் தனிச் சொத்தாக மாற்றுவதற்கு அறநிலையத்துறை ஆணையர் தீட்சிதர்களோடு சேர்ந்து நடத்தும் கூட்டுச் சதியை இப்போராட்டம் கேள்விக்குள்ளாகியது. ஆணையரிடமிருந்து பதில் இல்லை. போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டங்களின் விளைவாக அரசாணையை திரும்பப் பெறும் தனது சூழ்ச்சியை மறைத்துக் கொண்டு சுப்பிரமணிய பிரசாத் என்ற கூடுதல் அட்வகேட் ஜெனரலை நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது தமிழக அரசு.

ஆறுமுகசாமி போஸ்டர்“தமிழக அரசு வாதாடியது” என்று கணக்கு காட்டுவதற்காக அவர் நேற்று பதினைந்து நிமிடம் நேரம் நீதிமன்றத்தில் பேசினார். அவ்வளவுதான். ஆனால்  “TN Justifies appointment of E.O for Chidambaram temple” என்று தலைப்பு போட்டு இந்து நாளேட்டில் இன்று செய்தி வெளி வந்திருக்கிறது. தீட்சிதர்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு காட்டியதைப் போல ஒரு நாடகம்!

நேற்று முழுவதும் தீட்சிதர்களுக்கு எதிராக சத்தியவேல் முருகனார் சார்பில் மூத்த வழக்குரைஞர் துருவ் மேத்தா வாதாடியிருக்கிறார். நேற்று மாலை ஆறுமுகசாமியின் சார்பில் காலின் கன்சால்வேஸ் தனது வாதுரையைத் துவக்கியிருக்கிறார். இன்று நீதிமன்றம் இல்லை. நாளை வழக்கு விசாரணை தொடர்கிறது. காலின் தனது வாதத்தை தொடர்வார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஒரு வழக்குரைஞர் குழு டெல்லியில் முகாமிட்டு மூத்த வழக்குரைஞர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்றி வருகிறது.

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, “தமிழக அரசு நிர்வாக அதிகாரியை வாபஸ் பெறா விட்டால், நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்” என்று சுப்பிரமணியசாமி இந்து நாளேட்டிற்கு பேட்டியளித்திருக்கிறார். இதனையொட்டி சாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரவிருக்கிறோம்.

ஜெயலலிதா அரசும், சுப்பிரமணிய சாமியும், தீட்சிதர்களும் இணைந்த பார்ப்பனக் கூட்டணிக்கு எதிராகப் போராட உங்களை அறைகூவி அழைக்கிறோம்.

திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்று கொண்டவர்களும், கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாகக் கூடாது என்ற அக்கறை கொண்டவர்களும், ஆலயத் தீண்டாமையை எதிர்ப்பவர்களும், தமிழ் வழிபாட்டை ஆதரிப்பவர்களும் தமிழக அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் சுயமரியாதைப் பாரம்பரியத்தையும், தமிழ் உணர்வையும் எதிர்த்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகனும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்களும் வெற்றி பெறுவதை நாம் அனுமதிக்க கூடாது.  கோயிலை இந்து அறநிலையத்துறையின் வசம் ஒப்படைப்பதற்கு ஆதரவாக சாத்தியமான வழிகளில் எல்லாம் குரலெழுப்புங்கள் என்று அனைவரையும் கோருகிறோம்.

பெற்ற வெற்றியைப் பறி கொடுத்து விடக்கூடாது என்பதற்காக, பெரும் தொகையைக் கடன் வாங்கி,  வழக்கை முன்னெடுத்துச் செல்கிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். செலவுகளை சமாளிப்பதற்கு வழக்கு நிதி கோருமாறு டில்லியிலிருந்து கோரிக்கை அனுப்பியிருக்கிறார் வழக்குரைஞர் ராஜு.

கீழ்க்கண்ட எமது வங்கிக் கணக்கிற்கு வழக்கு நிதியை அனுப்பி விட்டு, மின் அஞ்சல் வாயிலாக விவரத்தை தெரிவிக்கவும். நீங்கள் அனுப்பும் நன்கொடைக்கு ரசீது அனுப்பப்படும்.

நன்றி.

வினவு

—————————–

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE : 044- 23718706.
செல்பேசி : அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876
__________________________________

வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

 1. பெரியார் பிறந்த மண் என்று பெருமைகொள்பவர்கள், பெரியாரை உரிமை கொண்டாடுபவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள்? கம்யூனிஸ்ட் கொள்கையை கொண்ட ம.க.இ.க தோழர்கள் தனித்து நின்று போராடுகிறார்கள். ஆனால் நாத்திகத்தையும், பார்ப்பன எதிர்ப்பையும் முதன்மை கொள்கையாக கொண்ட திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகள் என்ன வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? இது வெட்கக்கேடான விசயம்.

  மற்றொரு பக்கம் தமிழ்தேசிய அமைப்புகள் அனைத்தும் இரண்டு வாரங்களாக மூச்சு கூட விடுவதில்லை. இந்த தமிழ்தேசிய மண்ணாங்கட்டிகள் ம.க.இ.க தோழர்களை அவதூறு செய்வது என்றால் முன்டியடித்துக்கொண்டு நிற்பார்கள்.

 2. சு.ப.உதயகுமாரிடம் ம.க.இ.க தோழர்கள் கேள்வி கேட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது இன்னும் பதிலளிக்கவில்லை. உதயகுமார் கடிதம் எழுதிய இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் தோழர்கள் அவருக்கு பதிலளித்துள்ளனர். ஆனால் அந்த அவதூறை மகிழ்ச்சியுடன் தனது பத்திரிகையில் எடுத்து பிரசுரம் செய்துகொண்ட தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சி என்கிற பேரீச்சம் பழத்திற்கு கூட விலை போகாத காரைப் போன்ற ஒரு கட்சியை வைத்துக்கொண்டிருக்கும் பெ.மணியரசன் என்கிற இனவெறியருக்கு தோழர்களின் பதிலை எடுத்துப்போட மனம் இல்லை. தோழர்கள் செய்யும் அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாத இனவெறியர்கள் கேலவமான முறையில் அவர்களை அவதூறு செய்கிறார்கள்.

  தமிழ் மொழி, தமிழ் தேசியம் என்றெல்லாம் பிதற்றும் இந்த கும்பலும் தீட்சித பார்ப்பன கும்பலுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்பதை நினைவுபடுத்தவே இதை இங்கு கூறினேன்.

 3. ”கோயில் கொள்ளையரின் கூடாரமாகிவிடக்கூடாது”

  என்று பராசக்திக்கு வசனம் எழுதியவரின் கட்சிக்காரர்கள் ஏன் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்???

  பெரியாரின் வாரிசுகள்,அவர் சேர்த்துவைத்த சொத்துக்களுக்கு மட்டுமே வாரிசுரிமை வைத்து

  கொண்டுள்ளார்கள்.அவரின் இன்றியமையா சொத்தான பகுத்தறிவுக்கும், பார்ப்பனிய எதிர்ப்புக்கும்

  ஏன் இவர்கள் நன்றி கொன்றவர்களா உள்ளார்கள்?பகுத்தறிவு பகலவன் இவர்களை இருளிலா

  வைத்துச்சென்றார்??இவர்களா தமிழர்களுக்கு தளபதி??? இவர்களை மக்கள் மன்றத்தில்

  தோலுரிப்போம்.

 4. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும்,
  என்னால் இயன்ற அளவுக்கு நான் நிச்சயம் உதவுவேன்:
  ஒருமுறை எனது மனைவியுடன் கோவில் உள்ளே
  சென்றபோதுதான் தீட்சதர்களின் கொள்ளைக்கூடாரமாக
  சிதம்பரம் கோவில் இருப்பதை கண்டேன்:
  வருத்தம் இல்லை…எனது வருத்தமெல்லாம்,சேர,சோழ,பாண்டிய
  மரமண்டைகள் மீதுதான்…பூணூல்கள் பிழைக்க கேனப்பயல்கள்
  எவ்வளவு தூரம் சென்றும் கொள்ளை அடித்து கட்டியவை….
  ஆனால் பாருங்கள்..நமது தமிழ் வாத்தி(யார்) இந்த பண்டாரங்களை வானுயர புகழ்வதை….

  • நாயுடு, சேர,சோழ,பாண்டியர்களை கேனப்பயல்கள் என்றும் மரமண்டைகள்,பண்டாரங்கள் என்றும் கூற நீ யார்? உன்னைக்கு அந்த உரிமையை தந்தது யார்? தமிழ் மொழியை,பண்பாட்டை,நாட்டை காத்தவர்களை உன்னை போன்ற அரைவேக்காடுகள் திட்ட சொல்லி வேடிக்கை பார்க்கும் இன்றைய தமிழந்தான் நீ கூறிய அனைத்தும்.

   • குறைந்த பட்சம் ஏதாவது கோணி ஊசி தொழிற்சாலையை
    உங்களது சேர,சோழ,பாண்டிய பன்னாடைகள் விட்டுசென்றனவா?

    இவர்கள் போற்றி வளர்த்ததும் பூணூலை…பூமிக்குள் மண்ணோடு புதையவும் இதே பூணூல்கள்தான் காரணம்!

    இவர்கள் துனை இல்லாமலேயே தமிழ் வாழ்ந்தது,இப்போதும் வாழ்கிறது!
    வேண்டுமானால் பெரு உடையார் கோவிலின் மதிலில் என்ன எழுதி உள்ளது?
    வேசிகளுக்கு இவ்வளவு பொருள் கொடுத்தது,வீடு ஒதுக்கிக் கொடுத்தது..சரி…தேவார நாயனார்…
    நீங்கள் லோக குருவின் வாரிசுகளில் ஒருவரா?

    • சீதாபதி, வரலாறு 10வது வரையாவது படித்து இருக்கீர்களா இல்லையா? இன்று தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள்,நீர்பாசன கட்டமைப்புகள்,ஆறுகள் யார் ஏற்படுத்தியது? நீரும் உம்ம வம்சாவளியுமா? இவைகளை தூர்வாரும் யோக்யதை கூட இன்று உள்ள எந்த அரசுக்கும் இல்லை.வீரானம் ஏரி தெரியுமா? உலகில் முதல் அனைகட்டு ஆகிய கல்லனையை யார் கட்டியது? இவை எல்லாம் இல்லை என்றால் தமிழ்நாடு என்றொ பாலைவனம் ஆகி இருக்கும். மூவேந்தர்கள் கோனூசி கூட செய்யவில்லையா? ஊசி செய்ய தெரியாதவனா இந்தியாவிலேயே முதல் கப்பற்படை அமைத்து கடல்கடந்து வெற்றிபெற்றான். தமிழ்தானாக வளர்ந்ததா? அப்ப சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தது உங்கள் முப்பாட்டனா?

     • எனது கேள்வி இன்னமும் ஆதங்கத்தில்தான் …
      இப்போதும்கூட,உலகில் உள்ள தமிழர்கள் தெருவுக்கு தெருவு
      கோவில் கட்டி தனது பெயரையும் செதுக்கி கடவுளோடு கடவுளாக
      வாழ ஆசைப்படுவது உண்மையில்லையா?
      கல்லனை:ஆய்வு செய்யப் படவேண்டிய தலைப்பு:
      கல்லனை கட்ட இலங்கையிலிருந்து எத்தனை ஆயிரம்,ஆயிரம்
      தமிழர்களை அடிமையாக ஓட்டி வந்தான்: எத்தனை பேர் மாண்டனர்?
      கரிகாலன்,கல்லனை கட்டினான்:ரொம்ப நல்லது: மற்ற மா மன்னர்கள் எந்த எந்த துறைமுகங்களை கட்டினார்கள்:
      ஈட்டியும்,சுளிக்கியும் அரிவாள்-இவைகள் அனைத்துமே அவர்களின் படைப்புகள்தான் சந்தேகமில்லை:பதம்பார்த்ததும் பெரும்பாலும் அப்பாவி பொதுமக்களை!
      ஒரத்தநாடு,தென்னமநாடு,சூரக்காடு,பட்டுக்கோட்டை எல்லாமே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம்:சரி:இவர்கள் படையேடுத்தது யார் மீது?
      ஆங்கூர்வாட்: கட்டிடக்கலையின் அற்புதம்: பணம் எங்கேயிருந்து வந்தது?
      திருவாஙூகுர் சமாஸ்தானம் எப்படி கொள்ளையிட்டு,பத்மநாப சாமி கோவிலில் குவித்து வைத்ததோ அதைபோல ஒவ்வொரு மன்னனும் ஒருவனை ஒருவன் தாக்கி கொள்ளை அடித்ததுதான்:சொல்லப்போனால்,சேரன் பொண்டாட்டியை,சோழனும்,சோழன் பொண்டாட்டியை
      பாண்டியனும் லவட்டிகொண்டு போய்..அப்புறம் என்ன, ஊர் மக்கள் தாக்கப் பட்டு சொத்திழந்து,ஊர் ஊராக அலைந்ததுக்கு நானா காரணம்?
      10 ஆவது வரை வரலாறு படித்தால் போதுமா மகனே?

      • ராமதாஸ் கோதண்டராமன் சீதாபதி அவர்களின் பெயரில் ஒருபகுதி கூட தமிழ்மண்ணுக்கு உரியதல்ல, இவரது பெயரைப்போலவே ஐவரும் தமிழரல்ல, அதனால் வேண்டுமென்றே தமிழ்மன்னர்களை இழிவு படுத்துகின்றாரோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. 🙂

       சேர, சோழ, பாண்டியர்கள் ஒன்றும் ஏனைய இனத்தவர்களின் அரசர்கள் செய்யாத எந்தக் கொடுமையையோ அல்லது ஒருவரும் செய்யாத புதியா அட்டூழியங்களையோ அல்லது அநியாயங்களையோ செய்யவில்லை, மற்ற நாட்டு மன்னர்களுடன் ஒப்பிடும் போது அவர்கள் அவர்கள் உயர்வாகத் தான் தெரிகிறார்கள். இக்கால சோஷலிச, பெரியாரிச, முற்போக்கு சிந்தனைகளின் அடிப்படையில் அக்கால ஆட்சியாளர்களை கணிப்பிடுவது வெறும்முட்டாள்தனம். உதாரணமாக இக்காலத்தில் ஒருவரை யானையால் மிதித்துக் கொல்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, ஆனால் அது அக்காலத்தில் சாதாரணமாக வழக்கத்திலிருந்த தண்டனை. அக்கால வழக்கப்படி, சட்டங்களின் படி மன்னன் நடந்து கொண்டான், அந்த அடிப்படையில் அவன் கொடியவன் என்று நாங்கள் அவனைத் தூற்றினால் அது எவ்வளவு முட்டாள் தனமோ அது போன்றது தான் தமிழ் மன்னர்கள் factory கட்டவில்லை computerஐக் கண்டு பிடிக்க ஊக்குவிக்கவில்லை என்பதும்.

       அக்கால வழக்கப்படி தமது புகழை நிலை நாட்டவும், போரில் தாம் செய்யும் கொலைகளின் விளைவாக அடுத்த பிறப்பில் தாம் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்றும் பயந்த தமிழ் அரசர்கள் தமது செல்வத்தைக் கொண்டு கோயில்களைக் கட்டினார்கள். அதில் மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கினார்கள். இன்று உலகம் வியக்கும் தமிழர்களின் தொழில்நுட்ப, கட்டிட, சிற்ப கலைகளை ஊக்குவித்தார்கள். இதே காரணத்துக்காக, அதாவது தமது பாவங்களைப் போக்கத் தான் ஐரோப்பிய அரசர்களும் வானளாவிய தேவாலயங்களைக் கட்டினார்கள். அக்காலத்தில் ஐரோப்பாவில் சாமானியர்களின் நிலை, தமிழ்நாட்டை விட மோசமானது, அதற்காக இன்று எந்த ஐரோப்பியரும் தமது மன்னர்களை வசை பாடுவதில்லை, அவர்கள் கட்டிய தேவாலயங்களை, அவர்கள் மாளிகைகளை தமது பாரம்பரியச் சின்னங்களாக பெருமையுடன் பராமரிக்கிறார்கள்.

       இன்று தமிழ்நாட்டில் இவ்வளவு சாதிப்பிரிவும், பார்ப்பனர்களின் ஆளுமையும், தமிழர்கள் தமது நிலமிழந்து கொத்தடிமைகளாக இருப்பதற்கும் மூவேந்தர்கள் காரணம் அல்ல, சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை தமிழரல்லாதார் ஆண்டதால் வந்த வினை. அவர்கள் தான் தமிழர்களின் நிலங்களைப் பறித்து, தமது நாட்டிலிருந்து தமிழ்மண்ணுக்கு குடியேற்றப்பட்ட ரெட்டிகளுக்கும், நாயுடுகளுக்கும் வழங்கினார்கள். இன்றும் தமிழ்நாட்டுக் கிராமப் புறங்களில் தமிழர்களை விட ரெட்டிகள், நாயுடுகள் போன்ற தமிழரல்லாத சாதிகள் நிலச்சொந்தக்காரர்களாக காணப்படுவதற்கும் இது தான் காரணம். யாழ்ப்பாண வெள்ளாளர்கள் கூட விஜயநகர ஆட்சியில் தமது நிலங்களை இழந்த தமிழ்நாட்டுப் பிள்ளைமார்களும், முதலியார்களும் தான் அங்கு குடிபெயர்ந்தனர் எனவும் கூறுவர்.

       • போரில் செய்த கொலைகளுக்கு பரிகாரமாக கோயில் கட்டினார்களா?
        ஆகவே,ஜெயேந்திரனும் விரைவில் கோவில் கட்ட ஏற்பாடு செய்யலாம்:ஜீரனோத்தரண கும்பாபிசேகத்துக்கு,குடும்பத்துடன் சென்று ஐயன் அருள் பெறுக!

        நீங்கள் போற்றிப் புகழும் சேர,சோழ,பாண்டிய”உத்தமர்களைக்” காட்டிலும், களப்பிறர்கள் காலம் மிகவும் சிறந்தது: எந்த கோவிலுக்கும் அவர்கள் பணத்தை விரையம் செய்து குடமுழுக்கு செய்யவில்லை:
        கோவில் கட்டியதால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு?
        கோவிலில் பெரிய மணியை அடிக்க,தோட்டத்தில் பூ பறிக்க,கழுத்து வலியுடன் (பூனூல்களையும் சேர்த்து சுமக்க) “சாமி” தூக்க,”சாமி” பள்ளியறைக்கு வந்து தூங்கிய பின்பும்,கொட்ட கொட்ட விழித்திருந்து கோவிலையும்/சாமியையும் காவல் காக்க: ஆகா என்ன மாதிரியான வேலை வாய்ப்பு

       • எனது பெயரில் தமிழ் வாசனை இல்லாமல் போனதற்கு
        நான் காரணமல்ல:
        “தமிழ் வாசனை”யுடன் உள்ள பெயரில் உள்ளவர்களை விட
        எனது பங்களிப்பு எப்போதும் அதிகம்தான்:
        உங்களது திருப்திக்காக, எனது பெயரை
        உத்தம் சந்து காந்தி என்று மாற்றிக்கொள்ள முடியாது

       • //ராமதாஸ் கோதண்டராமன் சீதாபதி அவர்களின் பெயரில் ஒருபகுதி கூட தமிழ்மண்ணுக்கு உரியதல்ல, இவரது பெயரைப்போலவே ஐவரும் தமிழரல்ல, அதனால் வேண்டுமென்றே தமிழ்மன்னர்களை இழிவு படுத்துகின்றாரோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. //

        அய்யா! ராமதாஸ் கோதண்டராமன் சீதாபதி அவர்களின் ஆதங்கத்தில் நியாயமிருக்கிறது! அந்தக்கால தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் சகோதர சண்டையிட்டு மக்களை துன்புருத்தியதே அதிகம்! தமிழ் மற்றும் தமிழன் மீது அக்கறையை காண்பிக்க, கடந்த கால காட்டு மிராண்டிதனமான செயல்களை நியாயபடுத்த வேண்டாம்!

        //சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை தமிழரல்லாதார் ஆண்டதால் வந்த வினை. அவர்கள் தான் தமிழர்களின் நிலங்களைப் பறித்து, தமது நாட்டிலிருந்து தமிழ்மண்ணுக்கு குடியேற்றப்பட்ட ரெட்டிகளுக்கும், நாயுடுகளுக்கும் வழங்கினார்கள். // இதுவும் தவரான கருத்து! சேர, சோழ, பாண்டியர்கள் ஒன்றும் ஏனைய இனத்தவர்களின் அரசர்கள் செய்யாத எந்தக் கொடுமையையோ அல்லது ஒருவரும் செய்யாத புதியா அட்டூழியங்களையோ அல்லது அநியாயங்களையோ செய்யவில்லை என்பதும், தமிழன் அப்போதும், இப்போதும், தங்களுக்குள் சண்டையிட்டு அழிவதைநியாயப்படுத்தாது! யாழ்ப்பாண வெள்ளாளர்கள் கூட விஜயநகர ஆட்சியில் தமது நிலங்களை இழந்த தமிழ்நாட்டுப் பிள்ளைமார்களும், முதலியார்களும் தான் அங்கு குடிபெயர்ந்தனர் எனவும் கூறுவதும் ராஜபக்ஷேவுக்கு வேண்டுமானால் உதவக்கூடும்! உண்மை அதுவல்ல! ராஜராஜசோழனே தெலுங்கன்தான்! ஆதிக்க ஆசையினாலேயே மதுரை, திருவனந்தபுரம் மற்றும் நீலகிரி மக்களிடம் கொடூரமான போர் தொடுத்தான்! அவனது கொள்ளையில் கட்டியதுதான் தஞை பெரிய கோவில்! முழுக்க முழுக்க பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, தமிழரின ஒற்றுமைக்கு வேட்டு வைத்தவன்! எந்த மலையாள யானைப்படையால் வெற்றிநாயகன் ஆனானோ அதே மலையாள மற்றும் மதுரை படையால் அவன் வம்சமும் அழிந்தது! தஞ்சையை இழந்து ஊர் ஊராக திரிந்து, கடைசியில் சிற்றரசராக இருந்தனர்! அவர்கள் தெலுஙகர்களாக இருந்தாலும் தமிழ்பற்றும், இறைபற்றும் கொண்டு இருந்ததற்கு காரணம் , அவர்கள் மணந்த தமிழ் பெண்திலகங்கள்! பக்தை வந்ததும் வீரமும் அழிந்தது! இவர்களை அண்டி பிழைத்த ஒட்டுண்ணிகள் , விஜயனகரம் சென்றனர்!

        • நான் சொல்ல வந்ததும் அதுதான்:
         பக்தி வந்ததும்,வீரம் போயிற்று:மானம் இழந்தனர்:
         நாடிழந்தனர்: எல்லாம் எவரால்?
         பூணூல்தானே?
         நாம் போராடவேண்டியது சு.சாமியிடம்:
         ஆனால், என்னை பிழிந்து காய வைக்க
         தமிழ் இனமே ஒன்று கூடுவதை வருத்தத்துடன்
         காண்கிறேன்!

         • தமிழர்களின் எதிரிகள் சு.சாமி போன்றவர்கள் தான். ஆனால் தமிழரல்லாத தமிழர்களின் எதிரிகள் எப்படா தமிழர்கள் அடித்துக் கொள்வார்கள் என்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்களைப் போன்ற தமிழர்கள் நேரம் காலம் தெரியாமல் சில பழைய விடயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். இப்பொழுது தமிழர்களுக்கு தேவை ஒற்றுமை, எங்களிடையே உள்ள வேறுபாடுகளையும், நடந்து முடிந்த கசப்பான நிகழ்வுகளையும் மறந்து, சாதி, மத வேறுபாடின்றி ஒன்று பட வேண்டும். உதாரணமாக, பார்ப்பனர்களிடம் எத்தனை பிரிவுகள் உண்டு. ஆனால் இன்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள பிராமணர்கள் அனைவரும் தீட்சிதர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக உண்மையைத் திரித்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். பல பார்ப்பனர்களும் அந்தக் கட்டுரைகளை ஆதரித்து பின்னூட்டம் இடுகிறார்கள். அவர்கள் அகில இந்திய அளவில் மட்டுமல்ல உலகம் முழவதும் மக்களின் ஆதரவை தீட்சிதர்களுக்கு பெற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் தமிழர்கள், இந்த இணையத்தளத்தில் கூட ஒற்றுமையைக் காட்ட முடியாமல் ஆளுக்காள் அடிபடுகிறோம். அதைத் தொடங்கி வைத்தவர் நீங்கள். அதனால் மற்றவர்கள் உங்களை பிழிந்து காய வைப்பதில் தவறில்லை. 🙂

        • //ராமதாஸ் கோதண்டராமன் சீதாபதி அவர்களின் பெயரில் ஒருபகுதி கூட தமிழ்மண்ணுக்கு உரியதல்ல//
         Is u r name viysan is a tamil name?

       • //இன்று தமிழ்நாட்டில் இவ்வளவு சாதிப்பிரிவும், பார்ப்பனர்களின் ஆளுமையும், தமிழர்கள் தமது நிலமிழந்து கொத்தடிமைகளாக இருப்பதற்கும் மூவேந்தர்கள் காரணம் அல்ல, சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை தமிழரல்லாதார் ஆண்டதால் வந்த வினை. //

        wHEN TEMPILS ARE BUILT IN tAMIL NADU THEN CAST BASED SOCIETY ALSO DEVELOPED BY BRAMINS WITH SUPPORT FROM chola kings!!

        but u start blaming other people for your [our] mistake!!!!

       • //இன்று தமிழ்நாட்டில் இவ்வளவு சாதிப்பிரிவும், பார்ப்பனர்களின் ஆளுமையும், தமிழர்கள் தமது நிலமிழந்து கொத்தடிமைகளாக இருப்பதற்கும் மூவேந்தர்கள் காரணம் அல்ல, சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை தமிழரல்லாதார் ஆண்டதால் வந்த வினை. //

        What a lie u r telling!!!

        The cast based Tamil socity was developed even before chola kings!!

        This idiot chola kings suppressed native Tamil people like dalits and supports Bramin people!!

        In the name of Tamil and Tamil culture u too try to suppress native people of tamil nadu

     • எனது முப்பாட்டன் யாரும் இங்கே இல்லை:
      தமிழ் பெயருடன்,தென் ஆfரிக்காவில், திரிகிறார்கள்:
      தில்லையாடி(வள்ளியம்மை)யில் இருந்த பெரும்பாலோர்,தரங்கம்பாடியிலிருந்து
      கப்பல் மூலமாக (பிழைப்பு தேடி) போய்விட்டார்கள்:
      நான் எந்த “சங்கமும்” வைக்காமல்,தமிழை வளர்க்கிறேனோ, இல்லையோ;தமிழை
      அவதூறு செய்வதில்லை!

      எவனாவது எழுதிக் கொடுத்தால் தன் பெயரில் வெளியிடும் மன்னர்களில் எவன் ஒசத்தி?

    • //குறைந்த பட்சம் ஏதாவது கோணி ஊசி தொழிற்சாலையை
     உங்களது சேர,சோழ,பாண்டிய பன்னாடைகள் விட்டுசென்றனவா?//

     கல்லனை அமைத்தவன் யார்?

     • தென் கிழக்கு ஆசியா முழுதும் சோழ புலிக்கொடி பறந்திருக்கின்றது…

      அங்கோர் வாட் கோவில் பார்த்திருக்கிறீர்களா?

      சோழ மாமன்னர்கள் கட்டிய வாய்க்கால் அறிவீர்களா?

      கம்பன் வாழ்ந்த காலம் அறிவீர்களா?

      • வீரன், கர்நாடகாவில் வள்ளுவனுக்கு சிலை வைக்கமுடியாது அவ்வளவு எதிர்ப்பு ஆனால் ஒரு பொது தளத்தில் ஒரு நாயுடுவால் தமிழ் மன்னர்களை பன்னாடைகள்,கேனப்பயல்கள்,மரமண்டைகள்,பண்டாரங்கள் என்று பேசமுடிகிறது.அதுதான் திராவிட மாயை.

       • கட்டிய கோவில்கள் இருக்கிறது:
        அவர்களின் தொழிற்சாலைகள் ஏதேனும் எங்கேயாவது உள்ளதா?
        இதில் மாயை,மந்திரம் எதுவும் இல்லை!

        • //அவர்களின் தொழிற்சாலைகள் ஏதேனும் எங்கேயாவது உள்ளதா?//

         யப்பா….தாங்க முடியலயே

         • வீரன், எழுத்தாளர் ஜெயமோகன் நக்கலாக சொன்னார் ராஜராஜ சோழன் காலத்தில் ஏன் பின் நவீனத்துவம் இல்லை என்றறெல்லாம் கேக்ககூடாது என்று.சீதாபதி கேட்டே விட்டார்.18ம் நூற்றான்டில் தொழிற்புரட்சி ஏற்பட்டு அதன் பிறகுதான் உலகெங்கும் தொழிற்சாலைகள் ஏற்பட்டது.13ம் நூற்றான்டின் இறுதியில் முடிவுக்கு வந்த மூவேந்தர் ஆட்சியில் ஏன் தொழிற்சாலை இல்லைன்னு அண்ணன் கேக்குறார்.இதுல 10ம் வகுப்பு வரை வரலாறு படிச்சா போதுமான்னு வேற கேக்குறார் பாருங்க அங்க நிக்கிறாரு அண்ணன்

          • வரலாறு முக்கியம் மகனே!
           காந்தி தாத்தா சுதந்திரம் வாங்கினார்
           “மாமா” நேரு இந்தியாவை “செதுக்கினார்”
           அத்தை மகள் இந்திரா, “மிசா” கொண்டு சனனாயகம் தழைக்க உதவினார்:
           அப்புறம்…தியாகத் தெரு விளக்கு,தமிழனின் ஒட்டு மொத்த கருமாதி செலவையும்
           ஏற்றுக் கொண்டார்!
           எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை: ராச ராசன் விட்டு சென்றதை,நீங்கள் நிறைவேற்றலாம்…..

          • A king like chola only supporting bramin culture so that he developed temples and only bramin people are allowed inside the karpa grakam and dalit people are not allowed even inside the temple. why?

           DO U SUPPORT THIS FOOLISH KINGS?

        • சீதாபதி, எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.நீ 1ப்பு வரலாறு கூட படிக்கல போல.மூவேந்தர்கள் ஆட்டோ மொபைல் தொழிற்சாலை அமைக்கலன்னு வருத்தபடுறியா? தொழிற்புரட்சி எப்ப ஏற்பட்டுச்சுன்னு வீட்ல கேளு.அப்புறம் கல்லனையை நீ ஆராய போரியா செம காமடிதான்.கரிகாலன் எப்ப இலங்கை மீது படையெடுத்தான்? அங்கேருந்து 1000 அடிமை தமிழர்களை வேறு கூட்டி வந்தானம்.கரிகாலன் சங்க காலத்தை சேர்ந்த சோழ அரசன்.சங்க காலத்தில் அடிமை முறை இல்லை.ஆப்ரிக்காவில் உள்ளது உன் முப்பாட்டன்னு எனக்கு தெரியும் ஆனா தமிழ் பேரொடுன்னு புளுகாதே.தமிழன் தன் சொந்த நாட்டில் அடிமையானதும்,அடிமையாய் நாடு கடத்தபட்டதும் வ்ந்தேறிகள் ஆட்சியில்தான்.

         • நான் வரலாறு படிக்கவில்லை:
          நீங்கள் முடிந்தால்,
          தமிழ்நாட்டு போர்க்களங்கள்: படியுங்கள்:
          எழுதியவர்: பன்மொழி புலவர் அப்பாதுரை பிள்ளை:
          எனக்கு கோவிலில் “காவடி” தூக்குபவர்களைப் பற்றி கவலை இல்லை:
          அடுத்த தலைமுறையும்,காவடி தூக்கினால்,தீவட்டி சுமந்தால்….குடும்பம்
          நல்ல பொருளாதாரத்துடனும்,”புண்ணியத்துடனும்” இருக்கும்: மிச்சம் மீதி சொத்து இருந்தால் இருக்கவே இருக்கு காஞ்சி சங்கர மடம்:எழுதி வச்சிட்டுப் போகலாம்!

       • இவ்வளவு ஆக்ரோசமாக பேசும் நீங்கள்,
        எத்தனை பேர், தில்லையாடி அருனாசலம் பாடல்களுக்கு
        முக்கியத்துவம் கொடுத்தீர்கள்?
        அருனாசலத்துக்கு பூணூல் மட்டும் இருந்தால்….
        தியாகராயர் கீர்த்தனைகள் பின் தள்ளப் பட்டிருக்கும்:
        நமது வரலாறு மிகவும் வலி மிகுந்தது: பூணூலின் சூழ்ச்சியால்
        நம்மைக் குப்புற தள்ளி குழி பறித்தது…குழியில் இருந்து எத்தனை பேர்
        மீண்டோம்? எவ்வளவு பேர் மாண்டோம்?
        ஒரு நாயுடுவால்….சேர சோழ பாண்டியர் களைத் தோலுரிக்க முடியும் என்றால் மிகவும் சந்தோசம்: உங்கள் மொழியில் சொல்வதென்றால்: சுண்ணாம்பு காளவாயில் போட்டாலும்,எனது வேலையை(விழிப்புனர்ச்சியை) செய்வேன்!

        • பின் குறிப்பு: தில்லையாடி அருனாசலம் நாயுடு அல்ல!
         பிள்ளைவால்

         • மற்றுமொரு திருத்தம்! அவர் தில்லையாடி அல்ல! தில்லைவிடங்கன் அருணாச்சலம் பிள்ளை!

          • மன்னிக்கவும்!
           தில்லையாடியில் அருணாச்சலக் கவிராயர், தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை, சீர்காழி முத்து தாண்டவர் இவர்களே தமிழ் இசை மும்மூர்த்திகள்!

          • அருனாசசலம் பிறந்தது தில்லையாடியில்:எனது தந்தை
           வாழ்ந்த தெருவில்:அவர் கல்வி பயின்றது,தருமபுரம் ஆதீன மடத்தில்:
           பின்னால் காசுக்கடை வைத்து மாயுரத்தில்(மயிலாடுதுரையில்) வாழ்ந்தார்:
           இவரது புலமையின் காரணமாக,சீர்காழியில் தங்கி பாடல்கள் இயற்றினார்:

           ஏன் பள்ளி கொண்டீரய்யா,ரங்கனாதா(கொஞ்சும் சலங்கை) இவரது பாடல்:
           போதுமா?இன்னும் தகவல்கள் வேண்டுமா?
           ஒரு சமயம்,ஆதினம் ஆக இவருக்கு வழி இருந்தது:மறுத்துவிட்டார்:காரணம் தெரியவில்லை!

        • தமிழ் இசையை அழித்து தெலுங்கு சமஸ்கிருத இசையாகிய கர்நாடக இசையை வளர்த்தது தமிழ் மன்னர்களா? தெலுங்கு வந்தேறிகளா? அப்புறம் நீங்கள் சேர,சோழ,பாண்டியர்களை என்னத்தை தோலுரித்து கிழித்தீர்? அவங்க ஏன் அய்.டி கம்பெனி ஆரம்பிக்கலைன்னு கேக்குறதுதான் ஒங்க ஊர்ல தோலுரிப்பா?

      • ஊரை கொள்ளடித்து தினமும் 1000 பேருக்கு அமுது படைத்த 12 ஆழ்வார்களில் ஒருவனான
       திருமங்கை ஆழ்வார் யாருக்காக இதைச் செய்தார்?
       108 “திவ்ய” தேசமும் இப்படிக் கண்ணீர் கதைகளில் வடித்தவைதான்:
       உங்களுக்கு கோவில், பக்தி இவையெல்லாம் பூணூல்களுக்கு உடலை சற்றும் அசைக்காமல்
       பிழைப்பை ஏற்படுத்தி கொடுத்தவைதான்:
       வேண்டுமானால், தஞ்சைவாணன் கோவை படியுங்கள்: உண்மையை உணருங்கள்:உணர்ச்சிப் பெருக்கு: நஷ்டம் நமக்குத்தான்!

      • வீரன் தம்பி:
       ராச ராசனின் காலத்தில் பூணூல்களுக்கு வரி கிடையாது:தாழ்த்தப்பட்டவர்களுக்கு? அதிக வரி!
       பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கம்/தேவதாசி முறை மற்றும் பூணூல்களுக்கு சதுர்வேதி மங்களம் தந்து, நமக்கு மங்களம் பாடினான்:கோவிலின் அடி வரிசையில்(அழிக்க முடியாத நிலையில்) எழுதியுள்ளான்:
       நான் சொல்ல வந்தது இதுதான்:
       எவனொருவன் பூணூல்களால் ஆட்டுவிக்கப் படுகிறானோ அவன் இந்த சமுதாயத்துக்கு சிறந்த சேவையை செய்ய முடியாது:
       பூணூல்களுக்கு வக்காலத்து வாங்கி சேவை செய்வது சரியா?

   • //தமிழ் மொழியை,பண்பாட்டை,நாட்டை காத்தவர்களை உன்னை போன்ற அரைவேக்காடுகள் திட்ட சொல்லி வேடிக்கை பார்க்கும் இன்றைய தமிழந்தான் நீ கூறிய அனைத்தும்.//

    Hello gentilman

    which is Tamil culture? What kind of culture your kings are developing?

    Fully idiotic and foolish and Dalith people suppressing culture—–your king are developing!

    In Tamil Nadu Cast based society was developed by these so called kings.

    ARE U SUPPORTING THESE KINGS AND CULTURE???

    • செந்தில் குமார், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதும் தமிழ் பண்பாட்டில் இருந்து உருவாகி வந்த சிந்தனைகள்தான், ஏனென்றால் இலக்கியம் என்பது மக்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி. முன்முடிவுகள் ஏதுமின்றி சங்க இலக்கியங்களை வாசித்து பாருங்கள் உண்மைப்புரியும்.இன்று நாம் காணும் இறுக்கமான சாதிகட்டமைப்பு தெலுங்கு மரபு சோழன்[முதலாம் குலோத்துங்கன்]ல் தொடங்கி நாயக்கர் ஆட்சில் உச்சத்தை அடைந்தது.வரலாற்றின் அந்த காலத்தில் உலகில் எங்கு மக்களாட்சி நிலவியது,எங்கு சோசலிசம் நிலவியது என்று கூறினால் மேற்கொண்டு விவாதிக்கலாம். அதுசரி தமிழ் உங்களுக்கும் நீச மொழிதானா?

     • //.இன்று நாம் காணும் இறுக்கமான சாதிகட்டமைப்பு தெலுங்கு மரபு சோழன்[முதலாம் குலோத்துங்கன்]ல் தொடங்கி நாயக்கர் ஆட்சில் உச்சத்தை அடைந்தது.வரலாற்றின் அந்த காலத்தில் உலகில் எங்கு மக்களாட்சி நிலவியது,//

      See thevaranaya…,

      [1]If u believe in your own words then why are u supporting the culture which was polished by idiotic kings like chola?
      [2]If I telling temples should be converted into schools and science education should be provided in Tamil language then where will u have pain with in u?[3]What is wrong in this temple to school conversion?
      [4]By supporting that Hindu culture inside and outside temple you only against working class Tamil people and scientific Tamil language
      [5]yes it is not a religious language but it is a scientific language.[Even a 6 month baby start telling Tamil letters by own. So it is a natural language for our people]
      [6]In the name of Tamil culture all u guys are suppressing working tamil people.THIS IS OUR TIME[COMMUNIST] TO TAKE THE LANGUAGE ISSUE AND CULTURAL ISSUES TO DO TOP DOWN CHANGE IN IT.
      [7]First of all u do little bit action to change this cast bast tamil society than only start blaming people like me.

      • செந்தில் பாய் நீங்கள் என்னதான் தமிழ் பெயரில் வேசம்கட்டி வந்தாலும் உங்க கொண்டையை மறைக்க முடியலேயே. 1.சோழ பேரரசில் வாரிசு இல்லாநிலை ஏற்பட்ட போது முதலாம் ராஜேந்திரன்[கி.பி.1012-1044] மகள் வழி பெயரன் [அம்மங்கா தேவி மகன்] முதலாம் குலோத்துங்கன்[கி.பி.1071-1122] சோழ பேரரசை கைபற்றினான்.அவன் வெங்கி நாட்டை சேர்ந்தவன்.நான் தெலுங்கு சோழன் என்று குறிப்பிட்டது அவனைதான் 2.கோயிலை மாத்திடலாம் சர்ச்,மசூதியை,என்ன செய்யலாம்? 3.இந்து தத்துவ மரபில் தமிழர்களின் பங்கு கனிசமாக உண்டு.உதாரணம் சாங்கியம். 4.அய்யா ஆங்கிலத்திலேயே எழுதிரிங்களே தமிழ் நீசபாசையான்னு கேட்டேன் வேறொன்னும் இல்லை.

      • 30வருடங்களுக்கு மேலாக இடது சாரிகள் ஆண்ட மேற்கு வங்கத்தில்தான் தலித்மக்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது.கம்னிஸ்டுகள் உழைக்கும் மக்களை காப்பார்கள் என்பது நல்ல தமாசு.

     • //அதுசரி தமிழ் உங்களுக்கும் நீச மொழிதானா?//

      We communist people never discriminate the language of native people. We support Not only Tamilan and Tamil language also support all other languages and all other race people and their rights.

      [1]We are the communist born in Tamil Nadu so we are having love with my language.
      [2] Our leader Lenin is a communist and he born in Russia so he love his language.
      [3] Marx is a father of Communist ideology who born in German so he love his language.
      [4] Angels from England and he speaks and writes in English.

      But this language barriers will not and can not stop us to work together for working class.

      Hello sir mind it…

      “For communist people like us The language is a tool for fighting for gaining the economical,political and cultural rights of working class”

      “But you religious people–the language is a drug like abbin and you guys are getting happiness through the useless religious davarama songs and vadas. Through all this garbage songs in to bin and think about a common man ”

      “Singing Davaram or vada will not eleminate the problems of working class but through them away into ditch will make us to think about the SOCIAL CHANGE”

 5. இன்று வெளிவந்துள்ள தினகரன் நாளிதழில் 8ஆம் பக்கத்தில் புகைப்படத்துடன் வந்த செய்தி … பார்பன பாசிஸ்ட் பொறிக்கி ஜெயலலிதாவின் அடிவருடிகளான ஆ.தி.மு.க பொறிக்கிகள்(ஓம் சக்தி சேகர் ) அவனுடைய ஆதரவாளர்களும் தில்லை கோவில் விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவின் முகமூடியை கிழித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை-கடலூர் 100 அடி சாலையில் துண்டு பிரசுரம் விநியோகித்து கொண்டிருந்த நமது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்..

 6. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே உதவுங்கள்!

  தில்லைச் சிதம்பரத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உள்ள பாரம்பரிய தொடர்புகளையும் எமது முன்னோர்கள் எவ்வளவு பக்தியுடன் சிதம்பரம் கோயிலுடன் தமது தொடர்புகளை இடையறாது பேணி வந்தார்கள் என்பதையும் உணர்ந்து, தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் தேவாரங்களைப் பாடவும், கோயில்களில் எல்லாம் உயர்ந்த கோயிலாகிய தில்லைச் சிதம்பரத்தில் இடையூறின்றி தமிழ் ஒலிக்கவும், கோயில் தமிழர்களின் கைகளில் தொடர்ந்திருக்கவும் போராடும் தமிழர்களுக்கு உங்களால் இயன்றளவு நன்கொடையை நல்கி அவர்களை ஆதரியுங்கள். இது புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில் கட்டுவதை விட சிறந்த திருப்பணியாகும்.

  http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post.html

  • //இன்று தமிழ்நாட்டில் இவ்வளவு சாதிப்பிரிவும், பார்ப்பனர்களின் ஆளுமையும், தமிழர்கள் தமது நிலமிழந்து கொத்தடிமைகளாக இருப்பதற்கும் மூவேந்தர்கள் காரணம் அல்ல, சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை தமிழரல்லாதார் ஆண்டதால் வந்த வினை. //

   Hello viysan what a lie you r telling!!!

   In Tamil nadu only dalith people are land less. But all u vellalars[all types] are having land in big size.

   Why are u lieing this matter?

  • You guys are showing your cast pride in Yazpanam against dalit.

   Now u guys are coming to Tamil Nadu for the same reason!!

   All this Temples should be converted in to schools and all people should be allowed to learn

   What the hell reason for singing the songs in Tamil and Sanskrit in side the temple!?

   put all the shit davarams and shit vads in to the dust bin and start teaching science in side the temple

 7. … பார்பன பாசிஸ்ட் பொறிக்கி ஜெயலலிதாவின் அடிவருடிகளான ஆ.தி.மு.க பொறிக்கிகள்(ஓம் சக்தி சேகர் ) அவனுடைய ஆதரவாளர்களும் தில்லை கோவில் விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவின் முகமூடியை கிழித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை-கடலூர் 100 அடி சாலையில் துண்டு பிரசுரம் விநியோகித்து கொண்டிருந்த நமது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்..பெரியார் பிறந்த மண் என்று பெருமைகொள்பவர்கள், பெரியாரை உரிமை கொண்டாடுபவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள்? கம்யூனிஸ்ட் கொள்கையை கொண்ட ம.க.இ.க தோழர்கள் தனித்து நின்று போராடுகிறார்கள்

 8. //அன்று ராஜ ராஜ சோழன் முன்னால் கைகட்டி வாய்புதைத்து நின்றனர், ஆனால் இன்று அதே தில்லைச் சிற்றம்பலத்தில் அதே தமிழ்த் தேவாரங்களைப் பாட எதிர்க்கின்றனர். சிற்றம்பலத்தில் தமிழில் தேவாரம் பாட தமிழர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழின், தமிழர்களின் இந்த இழி நிலைக்கு யார் காரணம்?//

  தமிழ் மக்களின் சுய மரியாதையற்ற, தாழ்வு மனப்பான்மையும், சிலரின் விபீஷண அடிமைதனமுமே காரணம்! குயில் முட்டையை காகம் தன் முட்டையென அடைகாத்தலைபோன்று திராவிடம் ஆரியத்தை அடைகாத்து ஆரிய குஞ்சுகளை வளர்த்துவிட்டது!

  • அஜாதசத்ரு, திராவிடன் யார்? தமிழ் நாட்டில் உள்ள மலையாளி,கன்னடன்,தெலுங்கன் மட்டும்தானா? கேரளாவிலோ,கர்னாடகத்திலோ,ஆந்திராவிலோ திராவிடன் என்ற கருத்தை யாராவது ஏற்கிறார்களா? தமிழ் நாட்டில் உள்ள தமிழன் மட்டும்தான் திராவிட புளுகை நம்பி ஏமாறவேண்டுமா?

   • திராவிடர் யார் ஆரியர் யாரென்பதை ஜவகர்லால் நேரு விளக்கமாகவே எழிதி விட்டார்! யார் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உலக சரித்திர அறிக்னர்கள் ஒப்புக்கொண்ட உண்மை! அடாவடிக்காரர்கள் மட்டுமே ஒப்புக்கொள்வதில்லை!

    • //கேரளாவிலோ,கர்னாடகத்திலோ,ஆந்திராவிலோ திராவிடன் என்ற கருத்தை யாராவது ஏற்கிறார்களா? தமிழ் நாட்டில் உள்ள தமிழன் மட்டும்தான் திராவிட புளுகை நம்பி ஏமாறவேண்டுமா?//

     நீங்கள் குறிப்பிட்ட எல்லா மானிலத்தவர்களும்நீதீக்கட்சியிலிருந்து போராடி, பின்னர் தங்கலுக்கு பதவி வந்தவுடன் ஓடியவர்கள் தாம்! மதராஸ் ராஜதானியின் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கே அவர்கள் மொழிவாரி மானிலம் கேட்டு போராடினார்கள், வென்றார்கள்!

     • மொழிவாரி மாநிலம் பிரிக்கும் போது இதே திராவிட புளுகால்தான் தமிழ்நாட்டுக்கு உரிமையான நிலங்களை இழந்தோம்

     • அது அவர் இஷ்டம்! உங்களுக்கு தெளிவு வேண்டுமென்றால் விக்கிபீடியாவில் பார்க்கலாமே!

    • பல சாதி ஒழிப்பாளர் என்று கூறிக்கொள்பவர்கள், அம்பேத்கரின் சிந்தனைகளை பொதுமக்களிடம் சரியான முறையில் சேர்க்கவில்லை…

     என்ன செய்வது…அவர் எழுதியவற்றைப்படித்தால் உண்மையான பகுத்தறிவு வந்து விடுமே…
     அப்படி நடந்தால் பிறறை தூற்றி பொழைப்புநடத்த முடியாதே…

    • திராவிடர் என்பது தனித்த பேரினம் என்பதை மானிடவியல் அடிப்படையில் ஆராய்ந்து நிறுவிய நூல் எதுவும் உண்டா? அல்லது மண்டையோட்டு முறை [கிரனியோ மெட்ரிக்] ஆய்விலோ ,மரபினமுறை[பயோலாஜிகல் ஆந்த்ரோபோலஜி],இனக்குழு ஒப்பாய்வியல்[எத்நோலஜி] ஆய்வு முறையிலோ ஆய்ந்த நூல்கள் உண்டா?

     • அய்யய்யோ…
      நண்பரே…இதெல்லாம் “பகுத்தறிவு”க்கு ஒவ்வாத முறைகள்…

      பகுத்தறிவு என்றால் என்ன:
      1)சாதி ஒழிப்பு இயக்கம் ஆரம்பிப்பது
      2) இந்த இயக்கத்தில் பிராமன ‘சாதி’யில் பிறந்தால் சேர முடியாது..

      1 + 2 = முரன்பாடு (அதாவது “பகுத்தறிவு”)

      • இந்தியாவின் ஆரிய திராவிட இன அடிப்படையான மூலக்கூறுகள் உடல் அமைப்பு அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது! பெரும்பாலும் ஆரியர் என்று அவர்கள் தாங்களே , இட்லர் போல, கூறிக்கொண்டார்கள் ! அவர்களை எதிர்த்து போரிட முடியாமல் அடிமைப்பட்டவர்கள், பெரும்பாலும் தெற்குபகுதிக்கு ஒதுங்கியவர்கள், திராவிடர்கள் என்று ஆரிய ஆதிக்க சாதியினரே கூறினார்கள்! இந்துஸ்தானம் எனும் வடபகுதியும், தெக்காணம் எனும் தென்பகுதியும்,நடுவில் மலையும்,வனமும், கடல்போன்ற கோதாவரி, துஙபத்திராநதிகளும் பிரித்து வைத்ததால், ஆரிய – மஙகோலிய இனக்கலப்பு தென்னாட்டில் அரிதானது! சமீபத்திய ஜீன் அடிப்படையிலான ஆராய்ச்சி தென்னாட்டை பொருத்தவரை அனைத்து சாதியினரும் ஒரே குடும்பத்தை செர்ந்தவராக , ஆப்பிரிக்க இன கூறுகளைக் கொண்டதாக வினவில் ப்டித்தநினைவு! ஆனால் இதை எந்த ஆரியனும் (என்று கூறிகொள்பனும்,முக்கியமாக ஆர் எஸ் எஸ்) ஒத்துகொள்ள வில்லை! தி மு க வை எதிர்க்கும் வினவு அம்பிகள், இதை ஒப்புகொண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஒத்துழைப்பார்களா?

       • அஜாதசத்ரு,நூல் பெயரை கேட்டா நூல் பெயரை சொல்லுங்க அவங்களா சொல்லிகிட்டாங்க டீ கடைல பேசிகிட்டாங்க ஏன் மணி அடிக்கவிடலை அப்பிடின்னு எல்லாம் கேட்டு மழுப்பாதிங்க.

      • //பகுத்தறிவு என்றால் என்ன:
       1)சாதி ஒழிப்பு இயக்கம் ஆரம்பிப்பது
       2) இந்த இயக்கத்தில் பிராமன ‘சாதி’யில் பிறந்தால் சேர முடியாது..//

       எந்த முரண்பாடும் இல்லை! நாங்கள் தனித்த சாதி, பிரமாவின் முகத்தில், பிறந்தவர்கள் என்று அவர்களே ஒதுங்யிருக்கிரார்கள்! அவர்களால் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருக்கும் அதிகார மையங்களை, இதுவரை பத்வி அனுபவிக்காத ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதே திராவிட இயக்கம்! புரியாது போல குட்டையை குழப்பும் பார்பன யுக்தியை நாமறிவோம!

       ஏன் அம்பேத் கர் இயக்கத்தில் சேர்ந்து விட வேண்டியதுதானே! சட்டப்படி வேண்டுமானால் தாழ்த்தபட்ட, பிற்படுத்தபட்ட பெண்களை கலப்பு திருமணம் செய்துகொண்டு பிராமண சாதியை துறக்கலாம்!அல்லது கிருத்துவம், இஸ்லாம் மதத்துக்கு ஏகலாம்!

       • ஆரிய திராவிட இனம் பற்றி எவர் அறிவியல் பூர்வமான ஆதாரமில்லாமல் பேசினாலும் அது தப்பு தான்…அம்புட்டுத்தேன்…இதில் கொள்கை கிள்கை எல்லாம் இல்லை…

        //இதுவரை பத்வி அனுபவிக்காத ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதே திராவிட இயக்கம்! //

        அதாவது வெறும் அதிகாரத்தைக்கைப்பற்ற நடந்தது…
        ஒடுக்கப்பட்டவர் முன்னேற்றம் என்றெல்லாம் பூ சுற்ற வேண்டாம்….
        கீழவெண்மனி ஏன் நடந்தது? இன்று நாயக்கன்கொட்டை போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன?

        புத்தகத்தில் என்ன எழுதினாலும் இவ்வியக்கம் வெறும் பிராமன எதிர்ப்பு இயக்கமாகவே செயல்பட்டிருக்கிறது…மற்றபடி சொல்லிக்குள்ளும் படி எதுவும் இல்லை…

        //ஏன் அம்பேத் கர் இயக்கத்தில் சேர்ந்து விட வேண்டியதுதானே! சட்டப்படி வேண்டுமானால் தாழ்த்தபட்ட, பிற்படுத்தபட்ட பெண்களை கலப்பு திருமணம் செய்துகொண்டு பிராமண சாதியை துறக்கலாம்!அல்லது கிருத்துவம், இஸ்லாம் மதத்துக்கு ஏகலாம்!//

        நான் என்ன செய்யவேண்டும் என்று நானே முடிவு செய்து செய்தும் உள்ளேன்…
        எந்த இயக்கத்திலும் சேர எனக்கு விருப்பம் இல்லை…அதனால் சேரவில்லை…
        சாதி பார்த்து மனம் முடித்தாலும் மற்றவரை தூற்றாத வரை / தாழ்வாக நடத்தாத வரை அது தனிநபர் சுதந்திரம்…
        மதநம்பிக்கை இல்லாததால் மதம் மாற இயலாது…மற்றவரை தூற்றாத வரை / தாழ்வாக நடத்தாத வரை அது தனிநபர் சுதந்திரம்…

        இதைச்செய் / அதைச்செய் என்று காவி மடத்திற்ற்குச்சற்றும் குறையாமல்நடக்கின்றது திராவிட மடம்…

        திராவிட சித்தாந்தத்தினால் சாதி ஒழிந்ததா? சாதிக்கொடுமை ஒழிந்ததா?

        திராவிட வாசனையே படாத மாநிலங்களிலும் சாதிக்கொடுமை இல்லை…

        இத்துடன் முடித்துக்கொள்கிறேன்…தில்லைக்கொவில் விசயத்திலிருந்து மாறுகிறோம்…

        • //திராவிட வாசனையே படாத மாநிலங்களிலும் சாதிக்கொடுமை இல்லை…திராவிட திராவிட வாசனையே படாத மாநிலங்களிலும் சாதிக்கொடுமை குறைவு என்று வாசிக்கவும்…

         http://ncrb.nic.in/ciiprevious/Data/CD-CII2007/cii-2007/CII_CHARTS07.pdf

         • “பூனை கண்ணை மூடினால்”…..தான் நினைவுக்கு வருகிறது…கொஞ்சமாவது உண்மையை பேசுங்கள்… வ்ந்து குவியும் வட இந்தியர்களை பார்த்தும் ஒன்றுமே தெரியாதது போல் பேசாதீர்கள்…சிந்திப்பீர்….

          • நண்பரே…
           உ பி, ராஜஸ்தான், மபி, ஆந்திரா இங்கு தமிழகத்தைவிட மிக அதிகமாக தலித்களுக்கு எதிரான வன்முறை கேஸ்கள் பதிவாகியுள்ளன…
           பீகாரிலும் அதிகம்…

           தமிழகத்தைப்பற்றி: மகாராஷ்டிரம், குஜராத், ஒரிசாவில் திராவிட அமைப்புகள் இல்லாமலேயே தமிழகத்தை விட குறைவான கேசுகளே பதிவாகியுள்ளன…
           உற்று நோக்கினால் தமிழகத்தில் 2007 ல் நிலமை சற்று மோசமடைந்திருக்கின்றது…

           நான் கூற வருவது இது தான்: திராவிட இயக்கத்தினால் தான் ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை கிடைத்ததைப்போன்று ஒரு மாயை தமிழகத்தில் தோற்றுவிக்கப்படுகிறது…
           பன்டிதர் அயொத்திதாஸர், ரெட்டைமலை சீனிவாசனார் போன்றோர் பெருமை இருட்டடிக்கப்படுகின்றது…

           தில்லைக்கோவிலைப்பற்றி:
           நண்பர் கருப்பன் தந்த லிங்க் பார்த்தேன்… அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக ஏன் காலமாகின்றது என்றே புரியவில்லை…ஆகம விதிகளைப்பற்றி அர்ச்சகர் சங்கத்தலைவரே முன்னுக்குக்குப்பின் முரனாகப்பேசுகிறார்…கேசு கோர்ட்டில் எப்படி நிற்கிறது என்று புரியவில்லை…

           எனது 100% நம்பிக்கை இது தான்: மாறாதது மாற்றம் தான்….அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆதல் என்ன எதிர்ப்பு வந்தாலும் நடந்தே தீரும்…
           இது நடந்தால் கண்டிப்பாக நான் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடத்தில் பிரசாதம் வாங்கிக்கொள்வேன் (நான் பல வருடங்களாக கோவிலுக்குச்செல்வதில்லை)

 9. ஓம் சக்தி ஆரம்பித்திருக்கிறான். அவனுக்குப் பதிலடி கொடுப்பதென்பது இந்த வழக்கில் நாம் வெற்றி பெற்றுக் காட்டுவதுதான். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கரத்தினை வலுப்படுத்துவோம்!

 10. //“தமிழக அரசு நிர்வாக அதிகாரியை வாபஸ் பெறா விட்டால், நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்” என்று சுப்பிரமணியசாமி பேட்டியளித்திருக்கிறார்.//

  இதுதான் பார்ப்பனக்கொழுப்பு என்பது! நீதிமன்றம் என்ன செய்ய இருக்கிறது என்பதை இவாளே எப்படி முன்னதாகவே கூறி மிரட்டமுடிகிறது? உச்சனீதிமன்றம் கூட வெறும் கண்துடைப்பு விசாரணைதான் செய்கிறதா? அல்லது அயோத்தி நீதிபதிகள் போல, கொக்கென்றுநினத்துவிட்டாரா உச்ச மன்ற நீதிபதிகளை?

 11. முன்னாள் (அ தி மு க)அறனிலயதுறை அமைச்சர் வி வி சுவாமினாதன் அவர்களே இன்று கேப்டன் டிவீ யில் பேசியிருக்கிரார், மறைந்த சஙகராச்சாரி, சந்திரசெகரர், கொடுத்தநடராஜர் காலில் அணிவிக்கும் வைர அணிகலன் திருடப்பட்டிருக்கின்றது! அரசர்கள் காலத்திலிருந்து கோவிலுக்கு கொடுக்கபட்ட பணம், நகைகள் மூறையாக கணக்கு வைக்கப்படவில்லை! சொதனையின் பொது கைப்பற்றபட்ட நகைகளும் , தங்கள் சொந்தநகைகள், பாதுகாப்பிற்காக கோவிலில் வைக்கப் பட்டிருப்பதாக சாதிக்கிரார்கள்!

  சதிராட வந்த நாட்டிய பெண்ணை கடத்தி கெடுத்திருக்கிரார்கள்; தட்டிகேட்ட கணவன் கொலை செய்யப்பட்டிருக்கிரான்! சிதம்பரம் போலிசில் புகார் பதியப்பட்டுள்ளது! இவ்வளவிற்கு பிற