Monday, January 24, 2022

குழந்தையைக் கொன்ற பெப்சி !

-

கடலூர் மாவட்டத்தில் பெப்சி குடித்த குழந்தை மரணம் !
3 குழந்தைகள் கவலைக்கிடம் !

டந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி 9, 2014) அன்று கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகில் உள்ள சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவர் கடையிலிருந்து இரண்டு 500 மிலி பெப்சி பாட்டில்களை வாங்கியிருக்கிறார். அஞ்சாபுலி என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றுகிறார்.

இரவு உணவின் போது அஞ்சாபுலி, அவரது மனைவி கலையரசி மற்றும் குழந்தைகள் லலிதா (10 வயது), அபிராமி (8 வயது), கவுசல்யா (6 வயது), பரமசிவம் (2 வயது) ஆகியோர் பெப்சியை குடித்திருக்கின்றனர்.

pepsi-death

இரவு சுமார் 10 மணி வாக்கில் குழந்தைகள் வாந்தி எடுக்க ஆரம்பித்திருந்தனர்.  அவர்கள் முதலில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அபிராமி உயிரிந்தாள். மற்ற 3 குழந்தைகளும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

உள்ளூர் காவல் துறை வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குளிர்பானத்தை விற்ற கடையை மூடி சீல் வைத்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி கடை உரிமையாளரும், மொத்த விற்பனையாளரும் கைது செய்யப்பட்டு வடலூரில் உள்ள பெப்சி குடோன் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோக் - பிளாஸ்டிக் கழிவு
கோவையில் வாங்கிய கோக் பாட்டிலில் பிளாஸ்டிக் கழிவு

இந்தியாவில் விற்பனை ஆகும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளில் தாம் பின்பற்றும் சுகாதார நடவடிக்கைகளைக் கூட இங்கே பின்பற்றுவதில்லை. அந்த பன்னாட்டு நிறுவனங்களும் சரி, அவர்களை அனுமதித்து லாபம் சம்பாதிக்க ஏற்பாடு செய்யும் இந்திய அரசும் சரி  இந்திய மக்களின் உயிர் மேற்கத்திய உயிர்களை விட மலிவானவை என்று அலட்சியமாக செயல்படுகின்றனர்.

மேற்கத்திய நாடுகளிலும் பெப்சி,கோக் குளிர்பானங்களின் உள்ளே என்ன கலவை இருக்கிறது என்பதை காப்புரிமை பெயரில் இரகசியமாக வைத்திருக்கிறார்கள். அதனால் வரும் கேடுகள், பக்க விளைவுகள் குறித்து அங்கே பலபோராட்டங்கள் நடந்தாலும் முதலாளிகளின் இலாபத்தை பாதுகாக்கும் அரசுகள் கண்டுகொள்வதில்லை. அமெரிக்காவிற்கே இதுதான் கதி என்றால் இந்தியாவின் கதி அதோகதிதான்.

விரிவான வினியோக பின்னல் மூலமும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்லப்படும்  இந்த குளிர்பானங்களை, பல கோடி ரூபாய் செலவில் திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்களைக் கொண்டு விளம்பரம் செய்து சாதாரண உழைக்கும் மக்களும் வாங்கிக் குடிக்கும்படி தூண்டுகின்றனர்.

நம் நாட்டு மக்களின் பணத்தை மட்டுமில்லை, உயிரையும் பறித்துச் செல்கின்றன பன்னாட்டு நிறுவனங்களும் அவர்களுக்கு துணை நிற்கும் இந்திய அரசும்.

மேலும் படிக்க

டலூரில் பெப்சி குடித்த ஒரு குழந்தை உயிரிழந்து 3 குழந்தைகள் பாதிக்கப்பட்டதைக் கண்டித்து, பன்னாட்டு குளிர்பானங்களை விரட்டியடிக்கக் கோரும் பிரச்சார இயக்கத்தை திருச்சி மாவட்ட புரட்சிகர இயக்கங்கள் முன்னெடுத்துள்ளன.

 • “பெப்சி-கோக்கு மிராண்டா… குடிச்சா பெரியாஸ்பத்திரி வராண்டா”!

  கோலா பூச்சிக்கொல்லி
  பூச்சிக் கொல்லியாக  பெப்சி
 • ஃபுல் பாட்டிலுமே பூச்சி மருந்து கலவைதான்!
 • கரப்பான் பூச்சி, பேண்ட் எய்ட், துருப்பிடித்த ஆணி இருந்த பாட்டில்கள் என்ற அடுக்கடுக்காய் அம்பலமாகுது

உழைக்கும் மக்களே

 • பன்னாட்டு நிறுவனத்துக்கு பகடைக்காயாய் இன்னும் எத்தனை உயிர்கள்?
 • இப்போதே விரட்டியடிப்போம் பன்னாட்டு குளிர்பானங்களை !

சுவரொட்டி

ASD

 

 1. பெப்சி,கோக் முதலாளிகள் மீது ஒரு துரும்பு கூட விழாமல் பார்த்துக்கொள்வார்கள் நமது பொறுக்கித்தின்னி அரசியல்வாதிகளும் புறம்போக்கு அதிகாரிகளும்.வாங்கி வித்தவன்,வினியோகஸ்தர்கள்தான் போட்டுத் தள்ளப்படுவார்கள்.குளிர் பானங்கள் என்ற பெயரில் விஷத்தை விற்கும் அன்னியக் கம்பெனிகளின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும்.அவற்றை விளம்பரப்படுத்தும் அயோக்கியர்களை காறி துப்பவேண்டும்.பன்னாட்டுநிறுவனங்களைநாட்டைவிட்டே துரத்தியடிக்கவேண்டும்.

 2. டாஸ்மாக்குக்கு புகையிலைக்கு மாதிரி இனி.பெப்சி,கோலா குடிக்கும் விளம்பரத்தில் பெப்சி,கோலா குடிப்பது உயிரை குடிக்கும் என்று விளம்பரம் போடவேண்டும்

 3. பன்நாட்டு லாப வெறிக்காக இந்தியமக்களின் உயிரை அடகுவைக்கும் இந்திய அரசுக்கு எடிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்

 4. <<>

  மிகவும் நியாயமான கோபம் ஆனால் இந்த ஒரு குழந்தை மட்டுமல்ல ஒரு ஊரே இந்த கருமத்தை குடித்து செத்தாலும் யாரும் திருந்த போவதில்லை. ஒரு வருஷம் பேச்சு அப்புறம் மீண்டும் விற்பனை ஆரம்பிக்கும். மக்களுக்கு விழிப்புணர்வும் அறிவும் இல்லாத வரை இந்த பன்னாட்டு பன்னாடைகளை ஒன்றும் செய்யமுடியாது. இது ஒரு மெல்லக்கொல்லும் விஷம் என்பதை நம் பிள்ளைகளிடமிருந்தே சொல்லி வளர்க்க வேண்டும். பிரீயா கொடுத்தாலும் குடிக்காத ஒரு மனநிலை மக்களுக்கு வந்தால் போதும் மூட்டை கட்டிக்கொண்டு தலை தெறிக்க ஓடி விடுவார்கள்.

 5. கோக்கும் பெப்சியும் குடித்தால் கேன்சர் உருவாகிறதாம். கூகுல் செய்து பாருங்கள். வினவு இதற்கென ஒரு தனி பதிவு இட்டால் நன்றாக இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க