privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஎன்டிசி தொழிற்சங்க தேர்தல் - புஜதொமு அறைகூவல் !

என்டிசி தொழிற்சங்க தேர்தல் – புஜதொமு அறைகூவல் !

-

உரிமைக்காக போராடுவது தன்மானம்!

பணத்திற்கும், பொருளுக்கும் சுயமரியாதையை இழப்பது அவமானம்!

ன்புக்குரிய என்.டி.சி மில் தொழிலாளர்களே!

தமிழகத்தில் உள்ள ஏழு என்.டி.சி மில்களிலும், தொழிலாளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு 30/5/2014 அன்று நடைபெற உள்ளது. கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் வழக்கு தொடராமல் இருந்திருந்தால் என்.டி.சி. வரலாற்றில் தேர்தல் என்பதே வந்திருக்காது.

இந்நிலையில் தொழிலாளர்களுக்கு பணம், சாராயம், பிரியாணி, வேட்டி-சேலை என ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் வாரி வாரி வழங்கி வருகின்றன. தங்களுடையை கொள்கையையும், கோரிக்கையையும் கூறி ஓட்டுக் கேட்காமல் காசு கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கும் காரியவாத, பிழைப்புவாத தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் புறக்கணிக்க வேண்டுகிறோம்.

தொழிலாளர்களுக்கு இலவசங்களைக் கொடுத்து கேவலப்படுத்துகின்றன ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள்.

தற்சமயம் 10 லட்சம், 20 லட்சம் செலவு செய்வதன் நோக்கம் பின்பு சில கோடிகளை சுருட்ட வேண்டும் என்பதற்காகத்தானே. ஒருவேளை இவர்கள் வென்றால், நாளை சென்று நமது உரிமைகளைத், தேவைகளைப் பற்றிக் கேட்க முடியுமா? கேட்டால் 5,000/- கொடு, 10,000/- கொடு என்பார்கள். “காசு வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப் போட்டீர்கள்” என்ற இழிவுபடுத்துவார்கள்.

இதையெல்லாம் நாம் கற்பனையில் பேசவில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் பணம் கொடுத்தவர்கள் தேர்தல் முடிந்து மக்கள் உரிமைக்காகப் போராடும் போது இப்படித்தான் பேசுகின்றனர் என்பதை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

தொழிலாளர்களாய் இருந்து பின்பு முதலாளிகளாய் மாறிய தொழிற்சங்க தலைவர்களிடம் நாம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? கேம்பஸ் கூலி, மாங்கல்யத் திட்டம், தினக்கூலி போன்ற அடிமைத் தனங்களை தொழிலாளங்களிடையே புகுத்தியவர்கள் ஓட்டுக்கட்சி சங்கங்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவர்களெல்லாம் ஓட்டை விலைக்கு வாங்கி நாட்டை விற்கும் துரோகிகள்!

வேலைப்பளு ஒப்பந்தம், சம்பள உயர்வு, தினக்கூலி தொழிலாளர்களை நிர்ப்பந்தப்படுத்துவது, கேன்டீன் உணவுப் பொருள் விலையேற்றத்தைத் தடுப்பது… என தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளைப் பெற்றுத்தர எந்த சங்கம் களத்தில் நிற்கிறது? யார் போர்க்குணமாக போராடி உரிமைகளைப் பெற்றுத் தருவார்கள் என சிந்திக்க வேண்டும்.  கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்தான் போராட்டங்களை முன்னெடுத்து சிறை சென்றிருக்கிறது என்பதை நினைவில் வைக்க வேண்டும். அதை விடுத்து 10 நாள் செலவுக்கு காசு கொடுப்போரிடம் நமது எதிர்காலத்தை ஒப்படைக்கலாமா? இது கண்ணை விற்று சித்திரம் வரைவதற்கு ஒப்பானதுதானே!

என்.டி.சி. வரலாற்றில் கொத்தடிமை முறைக்கு எதிராக ஸ்டேன்ஸ் மில், ரங்கவிலாஸ் மில், சின்னியம்பாளையம் தியாகிகளின் உயிர்த்தியாகத்தை நினைவு கூர வேண்டும். என்.டி.சி 7 மில்களேனும் தற்சமயம் இருக்கிறதென்றால் அது நமது முன்னோர்கள் உயிரைக் கொடுத்து பெற்ற பலன். இந்தப் பலனை, நம் முன்னோர்களின் தியாகத்தை பணத்திற்காக ஓட்டுக்கட்சிகளிடம் அடகு வைக்கலாமா?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

என்.டி.சி தொழிலாளர்களின் பிரச்சினைக்காகவும், முன்னாள் ED திருட்டுப்பயல் சொக்கலிங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராகவும், சமூகப் பிரச்சினைகளுக்காகவும் போராடுகிற சங்கம் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கமே.

  • என்.டி.சி தொழிலாளர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் ஒட்டுமொத்த அங்கீகாரம் பெற்றிட!
  • கேன்டீன் விலையேற்றத்தை தடுத்திட !
  • சட்டவிரோத லே-ஆப்பை முறியடிக்க!
  • 480 நாட்கள் வேலை செய்தவர்களை நிரந்தரப்படுத்திட!
  • பஞ்சு, நூல்விலை உயர்வுக்கு காரணமான ஏற்றுமதி மற்றும் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்திட!
  • உள்நாட்டு உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் தடையாய் இருக்கிற தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கையை முறியடிக்க!

பஞ்சாலை தொழிலாளர் சங்கத் தேர்தல்

எண் 10-ல் பெருவாரியாக வாக்களிப்பீர்!

வாக்களிப்பீர் 10

தொடர்புக்கு : விளவை இராமசாமி
9629730399 – கோவை மாவட்டம்

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்
இணைப்பு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF)