privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் 23/06/2014

ஒரு வரிச் செய்திகள் 23/06/2014

-

செய்திகள்செய்தி: திமு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பாக கோவையில்,  கருணாநிதி பிறந்தநாளையொட்டி 12 மற்றும் 10-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “தி.மு.க. சார்பில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தான் எனக்கு பெருமை அளிக்கிறது”.

நீதி: பேரன் பேத்தியெடுத்து தாத்தாவானாலும் இளைஞர் அணி தலைவராக நீடிக்க முடியுமென்றால், பரிசு வாங்கும் மாணவர்கள், பரிசு கொடுக்கும் தலைவர்களாக எப்போதும் ஆக முடியாது. இது பெருமையா, சிறுமையா?
________

செய்தி: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராட்டி, குஜராத்தி, போஜ்புரி, மலாய் ஆகிய மொழிகளில் 128 படங்கள் டைரக்டு செய்து சாதனை புரிந்தவர் ராம நாராயணன் (வயது 66), சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தவர். பலனளிக்காமல் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

நீதி: திராவிட இயக்கத்தின் சிங்கமென உலா வந்த எம்.ஆர்.ராதா போன்ற கலைஞர்கள் வாழ்ந்த தமிழ் சினிமா உலகில், அம்மன் விரதம், ஆடு சபதம் என மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுத்து, படம் எடுத்த இராம நாராயணன் போன்ற கலைஞர்களை உருவாக்கிய திமுகவிற்கு யார் சிகிச்சை அளிப்பது?
________

செய்தி: நடிகர் விஜயின் 40-வது பிறந்தநாளை  கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு பரிசாக கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. மேலும் விஜய்யின் பிறந்தநாளை உலகமெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் விமர்சசையாக கொண்டாடி வருகின்றனர்.

நீதி: கத்தியை பாத்தா சாது, குத்துனா உயிர் லேது, உறையில் இருந்த கத்தி ஊரை ஆள வருகிறது என்று எந்த பஞ்ச் டயலாக்கும், முத்திரை முழக்கமும் இல்லாத இந்த வெறும் போஸ்டரை பார்த்தால் என்ன தெரிகிறது! தலைவா ரிலீஸில் அம்மாவுக்கு பயந்து ஓடியவர் இன்னும் நிற்கவே இல்லை!
_________

செய்தி: சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை தயாரித்துள்ளதாகவும், அது இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

நீதி: பணத்தை பகிராமல் பட்டியலை மட்டும் பகிர்ந்தால் பட்டை நாமம் நமக்கு, சாதனை பட்டம் மோடிக்கு!
_________

செய்தி: பாராளுமன்ற தேர்தல் செயல்பாடு பற்றிய புகாரை தொடர்ந்து மாநில விவசாய அணி செயலாளரும் எம்பியுமான, கே.பி.ராமலிங்கம் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து பேசியவர் “தி.மு.க.வில் இருந்து என்னை தற்காலிகமாக நீக்கி இருப்பதாக அறிவித்து இருப்பது எனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுகிறேன்” என்று கூறினார்.

நீதி: பிழைப்புவாதத்தில் தனி ராஜ்ஜியத்தை நடத்தி வரும்  திமுக எனும் கட்சியில் இருப்பதோ, தேர்தலில் தோற்பதோ, ஏற்படுத்தாத அவமான உணர்ச்சி, கட்சியிலிருந்து நீக்கப்படும் போது ஏற்படுகிறது என்றால் எது மானம், எது அவமானம்?
___________

செய்தி: “இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. ஆனால் இந்தி மொழியை விரும்பி படிப்பதை யாரும் எதிர்க்கக் கூடாது” என்று மத்திய கனரக தொழில்கள் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நீதி: பாபர் மசூதி இடிப்பை நாங்கள் ஏற்கவில்லை, ஆனால் ‘இந்துக்கள்’ விரும்பி இடித்து ராமர்கோவில் கட்டினால் அதை யாரும் எதிர்க்கக் கூடாது என்பது புரிந்தால் இதுவும் புரியும்! பொன்மொழிகளை உதிர்ப்பதற்கு முன்பு பொருத்தமானவர்களிடம் பொருளகராதி அறிந்து கொண்டு பிதற்றுவது பொன்னாருக்கு நல்லது.
________

செய்தி: ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜா (வயது 42). பெயிண்டரான இவரது மகள் நந்தினி, பிளஸ்–2வில் 1170 மதிப்பெண் பெற்று, மருத்துவ கட்–ஆப் 197.5 மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரிகளின் படிக்க முடியவில்லை. காரணம், இந்திய அரசின் மருத்துவ படிப்பு சட்டதிட்டங்களின்படி தமிழ்நாடு மற்றும் பிறமாநிலங்களை சேர்ந்த இந்திய மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க முடியுமாம்.

நீதி: ஈழத் தமிழ் அகதிகளுக்கு ஒரு மருத்துவப் படிப்பில் கூட அனுமதி மறுக்கும் சட்டம், சிங்கள அதிகாரிகளுக்கு மட்டும் பாதுகாப்பு மிகுந்த இந்திய இராணுவக் கல்லூரிகளில் பயிற்சி கொடுப்பது எப்படி?
________

செய்தி: குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் பயணம் செய்வதற்காக 9 பேர் அமரும் வகையில் சூப்பர் கிங் ஏர் பீச் கிராப்ட் 200 என்ற ரகத்தைச் சேர்ந்த சுமார் ரூ 100 கோடி மதிப்புள்ள ஜெட் விமானத்தை வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நீதி: இனி வட குஜராத், சவுராஷ்ட்ரா, கட்ச் பகுதிகளில் உள்ள 17 மாவட்ட மக்கள், குடிநீருக்காக அலையும் அவஸ்தையை வானத்தில் பறந்தவாறே ஆனந்தி படேல் ரசிக்கலாம்.
________

செய்தி: அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா திரையரங்கம் வரிசையில் விரைவில் வருகிறது அம்மா தேயிலைத் தூள். இதற்கான இறுதிக் கட்டப்  பணிகளில் டான்டீ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நீதி: சிறு விவசாயிகளை காப்பற்றுவோம் என அறிமுகப்படுத்தப்பட்டு, ரேசன் கடையில் விற்க்கப்படும் ஊட்டி டீயே இதுவரை இந்துஸ்தான் லீவர் ஏகபோகத்தை ஒன்றும் செய்யவில்லை எனும் போது, அம்மா டீ எதற்கு, யாருக்கு?
_______

செய்தி: இயற்கை எரிவாயு விலையை உயர்த்துவது குறித்து பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

நீதி: அந்த ஆலோசனையின் உண்மையான பெயர், “அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் சதி”
_______

செய்தி: டில்லியில் ஆட்சி பொறுப்பை அரைகுறையாக விட்டுச் சென்றதற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரும் கேஜ்ரிவால், மீண்டும் ஒரு வாய்ப்பளித்தால்  5 ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம் என்று கூறி உள்ளார்.

நீதி: மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரசு சம்மதிக்க வேண்டும். அதனால் காங்கிரசின் காலில் ரகசியமாக விழும் கேஜ்ரிவால் மக்களிடம் மட்டும் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறார். கைப்புள்ளையின் கருணை!
________

செய்தி: கருப்புப் பணம் பதுக்கியவர்கள் தொடர்பாக அரசுக்கு தகவல் எதுவும் இது வரை வந்து சேரவில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளளார்.

நீதி: தகவலே வரவில்லை என்றாலும் ஜெட் விமானத்தை எடுத்து கொண்டு ஸ்விஸ் பறக்கும் மோடி, வரும்போது மூட்டை மூட்டையாக கருப்புப் பணத்தை எடுத்து வருவார் என்ற விளம்பரம் எல்லா ஊடகங்களிலும் ஓடுகிறதே!
________

செய்தி: கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த விஜயகாந்த் சென்னை திரும்பியதும், கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், தேர்தல் தோல்விக்கு காரணமான சிலரை, ‘களையெடுக்க’ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நீதி: பயிரே இல்லாத வயலில் களைகளை எடுத்து யாரைக் காப்பாற்ற போகிறார் இந்த லூசு கேப்டன்?
_________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க