Sunday, August 14, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க அப்பாடக்கர் ஜெத்மலானிக்கு ஆப்பு ! வாய்தா ராணிக்கு வாய்தா !

அப்பாடக்கர் ஜெத்மலானிக்கு ஆப்பு ! வாய்தா ராணிக்கு வாய்தா !

-

வாய்தா ராணி என்பது 18 வருசம் அம்மா கஷ்டப்பட்டு உழச்சி வாங்கின பட்டம். எப்பிடியெல்லாம் ரூம் போட்டு யோசிச்சி கலர் கலரா காரணம் சொல்லி வாய்தா வாங்கினாங்க!

jethmalani-vandu-jayaதமிழ் மொழிபெயர்ப்பு வேணும், செராக்ஸ் காப்பி சரியில்லை, பில்டர் காப்பி சரியில்லை, வயிறு சரியில்லை..! இவுங்க அடிச்ச அடியில நீதிபதியெல்லாம் தெனாய்ஞ்சில்ல போனாய்ங்க. வாய்தா சப்ஜெக்டை வச்சி மட்டுமே நூறு பேர் பி.எச்டி பண்ணலாமே.

அப்பேர்ப்பட்ட வாய்தா ராணிக்கு டக்குன்னு பெயில் கொடுத்துட்டா மரியாதையா இருக்குமா? ஆனா ரெண்டு வாய்தாவுக்குள்ளேயே ர.ர க்களுக்கு மூச்சு வாங்குது. 7-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வச்சவுடனே, இது அநியாயம், அக்கிரமம், அநீதின்னு கத்துனாங்களாம் தமிழ்நாட்டுலேர்ந்து போன அம்மா வக்கீலுங்க.

ஜெத்மலானி முந்தாநாள் லண்டன்லேர்ந்து ஒரு லா பாயின்டை எடுத்து விட்டாரு. தண்டனை பத்து வருசத்துக்கு உள்ளே இருந்தால், அரசு தரப்பு கருத்தை கேட்காமலேயே பெயில் கொடுக்கலாம்னு சி ஆர்பிசி யில இருக்குதாம். அரசு தரப்பை விசாரிக்காமலேயே குற்றவாளியை விடுதலை செய்யலாம்னு கூட சிஆர்பிசி யில எங்கனா இருக்கும். பார்ப்பானுக்கும் பணக்காரனுக்கும் மனுநீதியில இல்லாத பரிகாரமெல்லாம் சிஆர்பிசி யில இருந்தாகணுமே!

ஜெத்மலானிதான் பெரிய அப்பாடக்கராச்சே. முந்தாநாள் நீதிபதி குன்ஹாவை தாக்குன மாதிரி, நேத்து லைட்டா நீதிபதியை மிரட்டிருக்காரு. “நீதிமன்றத்தை மிரட்டுற மாதிரி பேசற வேலையெல்லாம் வச்சுக்காதீங்கன்னு” திருப்பி கொடுத்திருக்காங்க ரத்னகலா.

இன்னைக்கு காலையில் வழக்கு வந்திருக்கு. “வழக்கின் முக்கியத்துவம் கருதி 7-ம் தேதி ரெகுலர் கோர்ட்டுல விசாரிக்கட்டும்”-னு வாய்தா போட்டு விட்டுட்டாங்க. உடனே, “இன்னிக்கி சாயங்காலமே வேற நீதிபதி விசாரிக்கணும்”னு தலைமை நீதிபதிக்கு ர.ர க்கள் பெட்டிசன் கொடுத்தாங்களாம். “வேண்டாப்பா. தலைமை நீதிபதியையும் டென்சன் பண்ணி காரியத்தை கெடுத்துராதீங்கப்பா. பெட்டிசன வாபஸ் வாங்குங்க” என்றாராம் ஜெத்மலானி.

ஏற்கெனவே புதுக்கோட்டை செசன்ஸ் நீதிமன்றத்தில் பிரேமானந்தா வழக்கை நடத்தும்போது நீதிபதி பானுமதியை இதே மாதிரி மிரட்டி, பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வாங்கிக் கொடுத்தவர் ஜெத்மலானி. பெரிய்ய வக்கீல்.

“வாங்கடா, வந்து பாருங்கடா, இதுதாண்டா அட்ரஸு. வண்டு முருகன், கைதி நெம்பர்- 7402 , பரப்பன அக்கிரகாரா ஜெயில், பெங்களூரு” ன்னு சொல்லி, வம்பிழுக்கிறாரு. அம்மாவுக்கு வெயிட்டா எதுனா வாங்கிக் கொடுக்காம வுடமாட்டாரு போல!

 1. கனிமொழி, ராஜீவ் காந்தி மூணு பேர், அப்சல் குரு இப்படி நெறைய பேருக்கு இந்த அப்பாடக்கர் ஆசாமி ஆஜர் ஆயிருக்காரு!

 2. அம்மாவின் ஆனைப்படி தொடர்ந்து ” அஙேகேயே” இருக்கும்படி
  நாட்டாமை தீர்ப்பை வழஙகலாம்….
  எல்லோரையும் கம்பி என்ன வச்சி….இப்ப கம்பி என்ன வச்சிட்டீங்கலே பரட்டை!

 3. ஊர்ல இருக்குற மொள்ளமாரி முடிச்சவுக்கி கேப்மாரி ரவுடி தாதா எல்லாரும் அணுக வேண்டிய இடம் ராம்ஜெத்மலானி.என்ன போகும்போது பெரிய பொட்டியா கொண்டுகிட்டு போங்க.

 4. ஏண்டாப்பா அம்மு நன்னா ஆகஷி பண்ணிண்டிருந்தா.அது அவாளுக்கு பிடிக்கல.அதான் கேஷ் போட்டுட்டா..இருந்தாலும் பாத்தேள்னா அம்மு இதெல்லாம் தாண்டி வருவா பாக்கறேளா?

 5. ஜெயலலிதா குற்றம் செய்தது உண்மை, அவருக்கு இந்த தண்டனை சரியானது தான் என்றாலும் இப்போதைக்கு இந்த அம்மாவை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு நாதி இல்லை. இது தான் இப்போதைய யதார்த்த நிலைமை. எதிர் முகாமில் இருக்கும் தி.மு.க வோ கற்பனைக்கு எட்டாத அளவு ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம், குடும்பத்தினர் மற்றும் சொந்தபந்தங்களின் அராஜகம், குடும்பத்துக்குள் பல அதிகார மய்யங்கள் மற்றும் அதிகாரப்போட்டி, கட்சியினரின் அராஜகம் ஆகியவற்றால் மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்து நிற்கிறது. அதிமுகவும் இப்போது ஒழிக்கப்பட்டு விட்டால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப பா.ம.க போன்ற சாதி வெறிக்கும்பல்களுடன் கை கோர்த்துக்கொண்டு இந்து மத வெறிக்கும்பல் தயாராகவே இருக்கிறது. தமிழகத்தில் மதவெறி அரசியல் வரவேண்டும், நன்றாக அறுவடை செய்யலாம் என்று தவ்கீத் ஜமாத் போன்ற அமைப்புக்களும் சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவே இந்துத்வா கும்பலிடம் சிக்கிய போதும் மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் தமிழகம் ஆகியவை விதிவிலக்காக இருந்து வருகின்றன. இதற்கு இந்த மாநிலங்களில் இருக்கும் வலுவான பிரதேச கட்சிகளும் இவற்றின் வசீகரமான தலைவர்களும் தான் காரணம் (பெரியார் பிறந்த மண் என்பது மட்டும் காரணம் அல்ல). கொள்கை விளக்க புடலங்காய் பேசித்திரியும் (வினவு உள்ளிட்ட)கம்யூனிஸ்டுகள், தி.மு.க தலைமை, தலித் அமைப்பினர் ஆகியோரை விட தான்தோன்றித்தனமாக சிந்தித்து தான்தோன்றித்தனமாகவும் எதேச்சதிகாரமாகவும் செயல்படும் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி போன்றவர்கள் தான் உண்மையில் தங்களுக்கு ஆபத்தானவர்கள் என்பது இந்துத்துவ கும்பலுக்கு நன்றாக தெரியும். வாஜ்பேய் அரசை கடைசி வரை ஆட்டிப்படைத்து கடைசியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இவர் கவிழ்த்து விட்டதை அவர்கள் இன்னும் மறக்கவில்லை. இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு தன்னை பயன்படுத்திக்கொண்டு விட்டு உடனே கழற்றி விட்டதால் இன்றளவிலும் சுப்பிரமணிய சாமிக்கு ஜெயலலிதா மீது கோபம் உண்டு. எல்லாவற்றுக்கும் சிகரமாக இருப்பது இந்துக்களின் போப்பாண்டவரான சங்கராச்சாரியை ஒரு தீபாவளி தினத்தன்று கைது செய்து சிறையில் தள்ளிய விசயம். இது எந்த இந்துத்துவவாதியாலும் கற்பனை கூட செய்ய முடியாத, சிறிதளவும் ஜீரணிக்க முடியாத ஒன்று. ஆகவே ஜெயலலிதாவால் பாதிப்பென்றால் எல்லாத்ததரப்பினரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

  இவரின் இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் பெரிய அளவில் ஊழலோ அராஜகம் குறித்த புகாரோ எழும்பவில்லை. கார்ப்பரேட் கும்பல்கள் எரிச்சல் அடையும்படியான சில நடவடிக்கைகளை இவர் எடுத்திருக்கிறார் (இவர் கைதின் பின்னணியில் இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்). காவிரி நீர் பங்கீடு பிரச்சினை, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை ஆகியவற்றில் விட்டுக்கொடுக்காமல் தெளிவான நடவடிக்கைகளை இவர் எடுத்துள்ளார். கச்சத்தீவு மற்றும் ஈழத்தமிழர் இன அழிப்பு விவகாரத்தில் இவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த சிங்கள அரசியல்வாதிகள் இவரை ஆபாசமாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டனர். எல்லாவற்றுக்கும் மேல் போலிசாருக்கு இவர் தலையீடற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளதால் வினவு உள்ளிட்ட நக்சலைட் கும்பல்கள் தலையெடுத்து “மக்கள் புரட்சி” என்ற பெயரில் வன்முறை செய்ய இயலாமல் உள்ளனர் (இதனால் தான் இந்த அம்மையார் மேல் உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம்). ஆகையால் இப்போதைய தமிழக அரசியல் நிலைமையில் ஜெயலலிதா சீக்கிரம் பிணையில் வருவது தான் தமிழ்நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் நல்லது.

  • பெரியசாமி அவர்களே,

   நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.

   சங்கரராமனை கொல்ல ஆள் அனுப்பியது யார்? (இதில் இந்தியாவின் போப் என்று பெருமை வேறு).

   ஜெயலலிதா ஊழலே செய்யவில்லை என்று கூறுகிறீர்களா, இல்லை ஊழல் செய்தாலும் அவரை சட்டப்படி தண்டிக்க கூடாது என்று சொல்ல வருகிறீர்களா?

   18 வருடம் காத்திருந்து கிடைத்த தீர்ப்பு. இது உங்களுக்கு கால தாமதமாக தெரியவில்லை, ஒரு வார சிறைவாசம் உங்களுக்கு ஒரு யுகமாக தோன்றுகிறதோ?

   //அதிகார துஷ்பிரயோகம், குடும்பத்தினர் மற்றும் சொந்தபந்தங்களின் அராஜகம், குடும்பத்துக்குள் பல அதிகார மய்யங்கள் மற்றும் அதிகாரப்போட்டி, கட்சியினரின் அராஜகம்…//

   தங்களுக்கு மறந்து விட்டது என்று நினைக்கிறேன். கீழ்கண்ட வாக்கியங்களை படித்து பாருங்கள்:

   சந்திரலேகா ஆசிட் வீச்சு.
   வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தாக்கு.
   ஆடிட்டர் தாக்கு.
   1௦௦ கோடி வளர்ப்பு மகன் திருமணம்.
   மகாமகம் குளியல் – அப்பாவி மக்கள் மரணம்.
   செரீனா கஞ்சா வழக்கு, சுதாகரன் கஞ்சா வழக்கு
   டெல்லி டீ பார்டி
   புதிய சட்டசபை வளாகத்தை வேண்டுமென்றே மருத்துவமனையாக்கியது
   அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்க முயற்சித்தது

   இதெல்லாம் தங்கள் கண்களுக்கு புலப்படவில்லையா.
   இட்லியும் மிக்சியும் கிரைண்டரும் கொடுத்தால் பொற்கால ஆட்சி என்று ஆகி விடுமா?

   ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் தமிழகத்தை மின்மிகு மாநிலமாக மாற்றுவேன் என்று சூளுரைத்த அந்த மானஸ்தி எங்கே, கொஞ்சம் தேடி பாருங்களேன்.
   கச்சத்தீவை மீட்பேன் என்று சொன்னார்களே, இலை மலர்ந்தால் ஈழம் பலரும் என்றார்களே,
   இப்போதும் இலங்கையில் மீனவர்களை சுடுகிறார்கள், சிறை பிடிக்கிறார்கள். உங்கள் ஜெயா என்ன செய்கிறார். கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் நகலை போல தானே இவரும் கடித போக்குவரத்து நடத்துகிறார்.

   ஜெயலலிதாவுடன் live-in பார்ட்னராக இருக்கும் சசிகலா, சசிகலாவின் சொந்தங்களுக்கு ஜெயலலிதா ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

   உண்மையிலேயே ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடி மட்டும் தான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

 6. வழக்கு …நடத்துறது …மட்டும் …” ஆமை “…வேகத்துல விடுதலை..கேக்குறது..மட்டும்..” புருஸ்லி “..வேகத்துலியா? வழக்குக்கு..20..வருஷம்..விடுதலை மட்டும்..2..நாள்லியா? விசாரணைக்கு..வா…வா..ன்னு…கூப்புட்டப்போ..போவலை இப்போ..விசாரி..விசாரி..ன்னு…கோர்ட்டுலியே..குடும்பம் நடத்துறீங்க……

 7. தன் வாதத்தால் ஏதும் பிரயோசனம் ஆகாது என்றானதும் அவாவின் விடுதலைக்கு மோடியைநாடுகிறார் இந்த அப்பாடக்கர் ஆசாமி …

 8. //ஜெயலலிதா குற்றம் செய்தது உண்மை, அவருக்கு இந்த தண்டனை சரியானது தான் என்றாலும் இப்போதைக்கு இந்த அம்மாவை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு நாதி இல்லை. இது தான் இப்போதைய யதார்த்த நிலைமை. எதிர் முகாமில் இருக்கும் தி.மு.க வோ கற்பனைக்கு எட்டாத அளவு ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம், //

  பார்பனர்களும், பார்பன தாசர்களும் சொல்லிவைத்தைப்போல ஒரே மாதிரி பிதற்றுகிறீர்களே? எங்கே வகுப்பு எடுத்தார்கள்?

  1.கற்பனைக்கு எட்டாத அளவு ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம்,
  2.குடும்பத்தினர் மற்றும் சொந்தபந்தங்களின் அராஜகம்,
  3.தமிழகத்தில் மதவெறி அரசியல் வரவேண்டும், நன்றாக அறுவடை செய்யலாம் என்று தவ்கீத் ஜமாத் போன்ற அமைப்புக்களும் சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கின்றன.
  4.ஒட்டுமொத்த இந்தியாவே இந்துத்வா கும்பலிடம் சிக்கிய போதும் மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் தமிழகம் ஆகியவை விதிவிலக்காக இருந்து வருகின்றன. இதற்கு இந்த மாநிலங்களில் இருக்கும் வலுவான பிரதேச கட்சிகளும் இவற்றின் வசீகரமான தலைவர்களும் தான் காரணம் (பெரியார் பிறந்த மண் என்பது மட்டும் காரணம் அல்ல).
  5.வாஜ்பேய் அரசை கடைசி வரை ஆட்டிப்படைத்து கடைசியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இவர் கவிழ்த்து விட்டதை அவர்கள் இன்னும் மறக்கவில்லை. இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு தன்னை பயன்படுத்திக்கொண்டு விட்டு உடனே கழற்றி விட்டதால் இன்றளவிலும் சுப்பிரமணிய சாமிக்கு ஜெயலலிதா மீது கோபம் உண்டு.
  6.எல்லாவற்றுக்கும் சிகரமாக இருப்பது இந்துக்களின் போப்பாண்டவரான சங்கராச்சாரியை ஒரு தீபாவளி தினத்தன்று கைது செய்து சிறையில் தள்ளிய விசயம்
  7.இவரின் இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் பெரிய அளவில் ஊழலோ அராஜகம் குறித்த புகாரோ எழும்பவில்லை.
  8.கார்ப்பரேட் கும்பல்கள் எரிச்சல் அடையும்படியான சில நடவடிக்கைகளை இவர் எடுத்திருக்கிறார் (இவர் கைதின் பின்னணியில் இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்).
  9.காவிரி நீர் பங்கீடு பிரச்சினை, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை ஆகியவற்றில் விட்டுக்கொடுக்காமல் தெளிவான நடவடிக்கைகளை இவர் எடுத்துள்ளார்.
  10.எல்லாவற்றுக்கும் மேல் போலிசாருக்கு இவர் தலையீடற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளதால் வினவு உள்ளிட்ட நக்சலைட் கும்பல்கள் தலையெடுத்து “மக்கள் புரட்சி” என்ற பெயரில் வன்முறை செய்ய இயலாமல் உள்ளனர் (இதனால் தான் இந்த அம்மையார் மேல் உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம்).

  அய்யா பெரியசாமி! உண்மையில் பெரிய ஆசாமிதான் நீங்கள்!
  னீங்கள் குறிப்பிட்ட காரணிகல் 1-3 வரை தி மு கவும் கூறலாம் – உங்கள் முதுகு அப்படி!

  4-வது காரணி உண்மைதாந் ஆனால் காரணம் 144 போட்ட எலெக்சன் கமிசனர் தான்! அம்மையார் அல்ல! சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எலெக்சனுக்கு முன் வராமல் பார்த்து கொண்டதற்காக வேண்டுமானால் அம்மையாரின் ‘திறமையை’ மெச்சலாம்!

  5-வது காரணி அம்மாவின் ஆணவம்! வாஜ்பாயியின்நேர்மை! தெய்வம்நின்று கொல்லும் என்பார்கள், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள்! விளைவை அறுவடை செய்கின்றனர்!

  6-வது காரணி: ‘எல்லாவற்றுக்கும் சிகரமாக இருப்பது இந்துக்களின் போப்பாண்டவரான சங்கராச்சாரியை ஒரு தீபாவளி தினத்தன்று கைது செய்து சிறையில் தள்ளிய விசயம்’ – ஒரு கொலை குற்றவாளியை கைது செய்ததில் என்ன குற்றம்? ‘இந்துக்களின் போப்பாண்டவரான…’ பார்பனர்களிலேயே கும்பகோணம் மடத்து பார்பனர் களுக்கு மட்டுமே இவர் ‘குரு’ . மஜாரிட்ட்ய் இந்தியர்களின் சத்துரு!நடுவில் கொஞ்சம் நகைச்சுவை வேண்டியது தான்!

  அதற்கு பிராயச்சித்தம் சங்கராச்சாரி விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்யாமல் விட்டாரே! தில்லை தீட்சிதர் வழக்கு போல! அதற்கு நன்றிக்கடனும் செலுத்தியிருப்பாரே!

  7-வது காரணி: ‘இவரின் இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் பெரிய அளவில் ஊழலோ அராஜகம் குறித்த புகாரோ எழும்பவில்லை ‘ -புகார் எழுப்ப விடால் தானே! புகார் கொடுக்க சென்றவர்கள் மீதெல்லாம் பொய்வழக்கு போட்டால் எவன் புகார் கொடுப்பான்? பத்திரிகைகளுக்கு வாய்பூட்டு! அவா பத்திரிகைகளுக்கு விளம்பர கையூட்டு! பெரியசாமி ரொம்பனாலாக ஊரில் இல்லையோ!

  8-வது காரணி:’கார்ப்பரேட் கும்பல்கள் எரிச்சல் அடையும்படியான சில நடவடிக்கைகளை இவர் எடுத்திருக்கிறார் (இவர் கைதின் பின்னணியில் இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்).’

  அசந்துதான் போய்விட்டேன், வைகுண்டராஜன் மேல் குண்டர் சட்டமும், க்ரானைட் பெரியசாமி வ் வழக்கில் சகாயத்தை ஆதரித்தும், மண்ற்கொள்ளை மாfஇயா வை அடக்கியும் ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுத்து விட்டாரோ?

  9-வது காரணி:’காவிரி நீர் பங்கீடு பிரச்சினை, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை ஆகியவற்றில் விட்டுக்கொடுக்காமல் தெளிவான நடவடிக்கைகளை இவர் எடுத்துள்ளார்’

  அதென்னவோ சரிதான்! கர்னாடகம் தண்ணீர் விடவும் இல்லை, கொடுக்கவும் இல்லை! அம்மா பிரதமருக்கு கடிதம் எழுவது மட்டுமேநடந்தது! இதற்காக அம்மாவிற்கு ஜெயில் தண்டனை தருவார்களா?

  10-வது காரணி:’எல்லாவற்றுக்கும் மேல் போலிசாருக்கு இவர் தலையீடற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளதால் வினவு உள்ளிட்ட நக்சலைட் கும்பல்கள் தலையெடுத்து “மக்கள் புரட்சி” என்ற பெயரில் வன்முறை செய்ய இயலாமல் உள்ளனர் (இதனால் தான் இந்த அம்மையார் மேல் உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம்).’

  இது என்னவோ உண்மைதான்! சுதந்திரம் என்றால் கொஞ்சநஞ்ச சுதந்திரமா? தினமும்நடக்கும் செயின் பறிப்புகள், கதவை உடைத்து திருட்டுகள், எதிர்கட்சி காரர்களை தீர்த்து கட்டுவது , கற்பழிப்பு, ஆசிட் வீச்சு (முதலில் பாதிக்கப்பட்ட சந்திரலேகா என்ற அரசு அதிகாரி) எலாம் காவல் துறையின், தறு, அம்மாவின் ஏவல் துறையின் சுதந்திரத்தை நன்றாகவே பறைசாற்றுகின்றனவே!

  யார் வகுப்பு எடுத்தர்கள் அய்யா? அம்பியா? வெங்கடேசனா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க