Thursday, April 15, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் கருப்புப் பணத்தை பதுக்கும் ரட்சகர் மோடி !

கருப்புப் பணத்தை பதுக்கும் ரட்சகர் மோடி !

-

black money 1து ஒரு காலம். அப்போது பாரதிய ஜனதா தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. குஜராத்தில் இருந்து 56 இன்ஞ்ச் மார்பகம் கொண்ட பயில்வான் ஒருவரை அழைத்து வந்து குஸ்தி களத்தில் இறக்கி விட்டிருந்தது காவி வட்டாரம். பயில்வானின் மார்பகம் மட்டுமல்ல, வாயே 56 இன்ஞ்ச் நீள அகலம் கொண்டது.

ஹரித்வார் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த 15,000 குஜராத்திகளை இன்னோவா காரில் சென்று மீட்டு வந்ததாகட்டும், சீனாவின் பேருந்து நிலையத்தை பெயர்த்தெடுத்து வந்து அகமதாபாத்தில் பொருத்தியதாகட்டும், ஈமு கோழியிடம் தப்பியவர்கள் கூட குஜராத் 56 இன்ச் பயில்வானிடம் தப்ப முடியவில்லை. ஒருவேளை யாருக்காவது சந்தேகம் வந்து விட்டால்? அதற்காக பெந்தேகொஸ்தே சபையின் உத்தி ஒன்றையும் திருடிக் கொண்டனர். ஆப்கோ என்ற நிறுவனத்தை பணிக்கமர்த்தி சில நூறு பேர்களுக்கு கூலி கொடுத்து டிவிட்டர், முகநூல் மற்றும் இன்னபிற சமூகவளைத் தளங்களின் மூலம் தொடர்ந்து ஏமாந்த சோணகிரிகளின் நாடி நரம்புகளில் “வளர்ச்சி” என்ற ஹெராயின் போதையை ஊசி மூலம் ஏற்றி வந்தனர்.

அந்த சமயத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரங்களில் தான் வென்று பதவியேற்றால் நூறே நாட்களில் வெளிநாடுகளில் பதுங்கிக் கொண்டிருக்கும் இந்திய கருப்புப் பணத்தை அப்படியே கோணிப் பையில் போட்டு அள்ளி வந்து விடுவேணாக்கும் என்று முழங்கினார் இந்த பயில்வான்.

சொக்கிப் போனார்கள் நடுத்தர வர்க்க பார்த்தசாரதிகள். பாபா ராம்தேவ் சொன்னது போல் கருப்புப் பணத்தை கொண்டு வந்து நூற்றி முப்பது கோடி மக்களுக்கும் சரிபாதியா பிரிச்சி(!) ஒவ்வொருத்தர் வீட்டுக் கூரையிலும் ஓட்டை போட்டு உள்ளே போடுவார்கள் என்று நம்பி கூரையை பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பொடனியில் ஒரே சாத்தாக சாத்தி தெளி’வைத்துள்ளது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு.

கருப்புப் பணத்தை பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்கள் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் அரசின் சார்பில் பதிலளித்த காங்கிரசு அரசாங்கம், இந்தியா பல்வேறு நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், இந்த நிலையில் இந்திய அரசின் வசம் உள்ள கருப்பு பண முதலைகளின் பெயர் பட்டியலை வெளியிடுவது மேற்படி ஒப்பந்தத்தை மீறிய செயலாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தது.

பொங்கியெழுந்த ஃபேக் ஐடி போராளிகள், ’எங்காளு மட்டும் வரட்டும் பார்க்கலாம் அடுத்த நிமிசமே ஹெலிகாப்டரில் தொங்கிட்டே போயி எல்லா ரூவா நோட்டுக் கட்டுகளையும் அள்ளி எடுத்தாந்திருவாப்ல’ என்று கொளுத்திப் போட்டார்கள். என்ன ஏது என்று யோசிக்காமல் வழக்கம் போல நம் கோயிந்துகள் சிலரும் கூட மேற்படி பொருளாதார அறிஞர் குழாமின் சவடால்களை தலையில் வைத்து நாடெங்கும் சுமந்து திரிந்தனர்.

தற்போது வழக்கு விசாரணையில், பாரதிய ஜனதா அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய முறை. அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் காங்கிரசு அரசு சொன்ன அதே பதிலை வார்த்தை மாறாமல் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்ததோடு கொடுத்த காசுக்கு மேல் “அப்படி தனிநபர்களின் பெயர்களை வெளியிடுவது அவர்களது அந்தரங்கத்தில் தலையிடுவதாகும்” என்றும் கூவியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் இந்த பேச்சு மாத்தை கேள்விப்பட்ட உடனேயே கொந்தளிக்கத் துவங்கியன. #BJPBlackMoneyDhokha (பாரதிய ஜனதா கருப்புப் பண பிராடு) என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களில் மக்கள் பாரதிய ஜனதாவை கூறு கட்டி அடிக்கத் துவங்கினர். உடனடியாக இந்த ஹேஷ் டேக் பிரபலமடைந்தது (Trending).

கவிதை போல் கருத்துக்களை பொழிந்துள்ளனர் மக்கள்..

modi black money“நிலக்கரி திருட்டோ, லோக்பாலோ, தகவல் உரிமைச் சட்டமோ, கருப்புப் பணமோ காங்கிரசும் பாரதிய ஜனதாவும் ஒன்று தான் என்று அவர்கள் எப்போதும் பறைசாற்றி உள்ளனர். ஆனாலும், இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் நாம் சந்தோஷப்படுகிறோமா?” – என்கிறார் மணீஷ். (@manishM20)

”அட ஏன்பா #BJPBlackMoneyDhoka நெ 1ஆக ட்ரெண்டிங்கில் இருக்கிறது? நன்றிகெட்ட மக்கள்! அதான் பி.ஜே.பி நிறைய கருப்புப் பணத்தை மீட்டு வந்து தேர்தலில் செலவழித்ததே?” (@salmanSoz)

”ஏன் பி.ஜெ.பி கருப்புப் பணத்தை மீட்க தயங்குகிறது? ஏனென்றால் அது யாருக்கு சொந்தமானது என்பது அவர்களுக்குத் தெரியும்” (AAP_Gladiator)

“எனக்கு எனது 15 லட்சம் வேண்டும்” yogi scotchynath (@scotchism) (அப்போதைய பி.ஜெ.பி இணைய ஃபேக் ஐ.டி கம்பேனியாரின் கணிப்புப் படி மோடி கருப்புப் பணத்தை மீட்டு வந்த பின் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கவிருக்கும் பங்குப் பணம் ரூ 15 லட்சம் என்று கொளுத்திப் போடப்பட்டது)

”Ab Ki Baar, U-turn sarkaar” (@INCIndia)

”ஆமா.. (கருப்புப் பணம் வைத்திருப்போரின்) பேரைச் சொல்லி விட்டால் முழுப் பக்க விளம்பரங்கள் அளிக்க யார் படியளப்பார்கள்?” (@Mohitraj)

“#BJPBlackMoneyDhoka வை பார்த்து தற்கொலைக்கு முயலும் மோடி பக்தர். பரபரப்பு புகைப்படம்” (@Tapan_dalai)

திருப்பியடித்தல் என்பது ஒரு அழகு. அதிலும் ஏமாந்தவர்கள் திருப்பியடிப்பது என்பது பேரழகு. இங்கே ஏமாந்தவர்கள் ஏமாற்றியவனின் அதே சமூக வலைத்தளம் என்ற ஆயுதம் கொண்டு திருப்பிடிக்கிறார்கள் – கொள்ளை அழகு!

மறுகாலனியாக்கப் பொருளாதாரம் மக்களின் பொருளியல் வாழ்க்கையை சமன் குலைத்து தலைகீழாக புரட்டிப் போட்ட ஒரு சூழலில் இரட்சகனாக இறக்கப்பட்டவர் மோடி. சமூக வாழ்க்கையின் சகல அரங்கிலும் மக்கள் ஏமாற்றமடைந்து அதிருப்தியுற்ற நிலையில் ஆளும் வர்க்கத்தால் தன்னை மீட்பனாக மோடி முன்னிறுத்திக் கொண்டதும் எளிய தீர்வுகளை எதிர்பார்த்த மக்கள் அவரை அவ்வாறாகவே கருதியதும் குப்பையைக் கோபுரத்தில் ஏற்றிவிட்டது.

எனினும், வரலாற்றின் போக்கில் இது விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். நாம் விழித்துக் கொள்கிறோமா இன்னும் கனவுகளிலேயே மூழ்கிக் கிடக்கிறோமா என்பது தான் வருங்காலத்தை தீர்மானிக்கும். மோடி ஒரு மோசடி என்பதை நாம் தாமதமாகவேனும் உணர்ந்து கொள்வதோடு, மோடியும் காங்கிரசும் இன்னபிற ஓட்டுக்கட்சிகளும் மக்கள் விரோதிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பித் தேடும் தீர்வுகள் இவர்களிடம் இல்லை. சரியாகச் சொன்னால் தீர்வுகளைத் தடுக்கும் தடைகளே இவர்கள்தான்!

மராட்டியம், ஹரியானா தேர்தல் வெற்றிகளை காவி கூடாரம் கொண்டாடி வருகிறது. காவியின் வண்ணத்தில் கண்களை இழந்த நடுத்தர வர்க்க ரசிகர்கள் சிலர் இந்த வெற்றியை தங்கள் சொந்த வெற்றியாக மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த இரண்டு மாநிலங்களிலும் நெடுங்காலம் ஆட்சியிலிருந்த காங்கிரசு எதிர்ப்பு அலையில் கரையேறியிருக்கும் பாஜகவின் யோக்கியதை என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புவர்கள், தேர்தல் முடிவுகளை விடுத்து, கருப்பு பண சவுடால்களை பார்க்க வேண்டும். வெறும் சவுடாலை வைத்தே ஒரு கட்சி நாடாள்கிறது என்றால் அது அந்த கட்சியின் தகுதியை அல்ல, அந்த நாட்டு மக்களின் தரத்தை காட்டுகிறது!

 1. வளர்சி என்னும் பொக்கிரி வித்தையை காட்டி நாடாளுமன்றம் சென்ற குரங்கு அடித்தது பல்டி.
  இனி கேடி ரசிகர்கள் இதற்கும் கைகொட்டி ஆரவாரம் செய்வார்கள்.
  ஆடுரா ராமா ஆட்ரா…

 2. இதே போல டீசல் விலை சீரமைப்பு என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் விலையை தாங்களே இஷ்டப்பட்ட நேரத்தில் ஏற்றிக்கொள்ள வழிவகை செய்ததை பெரிய புரட்சி என்றும் நாட்டுக்கு பல கோடி வருமானம் என்றும் இந்த வட இந்திய மீடியாக்கள் பாராட்டி சீராட்டி மகிழ்கின்றன.

  நாட்டுக்கு பல கோடி வருமானம் வருவதற்கு ஏழை பாழைகளிடமிருந்து தான் பறிக்க வேண்டுமா? இந்த தனியார் முதலைகள் NPA என்ற கணக்கில் வங்கிகளில் ஏப்பம் விடும் கோடானு கோடிகளை மீட்க வழி செய்ய வேண்டாமா?

  இதற்கு பின்னூட்டமிடும் சில வாசகர்களும் விலையேற்றம் நாட்டுக்கு பெருநன்மை என்று கூறியபடியே சந்தடி சாக்கில் அப்படியே இட ஒதுக்கீட்டையும் நீக்கினால் நல்லது என்று கொளுத்தி போடுகின்றனர்.

  மத்தியில் ஒரு மோடி ரசிகர் கூட்டம் அந்த ஆள் என்ன செய்தாலும் ஆகா, ஓகோ என்று பாராட்டுகிறார்கள்.
  இங்கே, ஒரு லேடி ரசிகர் கூட்டம் ஊழல் வழக்கில் உள்ளே போய் திரும்பியவரை தெய்வமாக்குகின்றனர்.

  இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.

  • Diesel subsidy is not reaching poor, it goes to Rich middle class . They have all got diesel cars now.
   Thats why congress brought food security bill, having diesel subsidy money in mind.

   I am surprised comrades are not welcoming this move!

 3. எங்கே போகும்? முட்டாள் மக்களுக்கு ஏற்ற ராஜா, ராணிகள்! கூத்து முடிந்ததும் மக்கள் விழிப்பார்கள்! திரு திருவென்று! காலம் மாறினாலும், காட்டுமிரான்டிகள் மாறுவதில்லை போலும்!

  • Gee, after making such mistake in democracy , people can think again and try fix it with another party.

   Look at North Korea and Cuba, Once you made the mistake , fixing it may not be possible.

   • ஐயோ ராமா ராமா,

    நீங்க சொல்றத பாத்தா இந்நேரம் நம்ம அகண்ட பாரதம் பூலோக சுவர்க்கம் போல மாறி இருக்கணும்.65 ஆண்டுகள் ஆச்சு ஆனா எதார்த்தம் அப்படி இல்லையே. இருக்க இருக்க மக்கள் மோசம் போயிட்டு தான் இருக்காங்க. நீங்க சொல்ற மேரி மாத்தி மாத்தி ஓட்டப் போட்டு போட்டு மக்கள் சுண்ணாம்பு ஆனது தான் மிச்சம். கியூபா மற்றும் கொரியாவை இந்தியாவுடன் ஒப்புமைப் படுத்தி தாங்கள் ஆறுதலடைய ஒன்றுமில்லை:(.

    • //மாத்தி மாத்தி ஓட்டப் போட்டு போட்டு மக்கள் சுண்ணாம்பு ஆனது தான் மிச்சம்//

     Again, in democracy you can make “N” number of mistakes..and learn. So far people dint have access to information. Online mainstream paid media polarized people with their hidden agenda. Now that dynamics is changing..

     India will be walking in new landscape with
     1. computerized court
     2. Aadhaar
     3. Right to information
     4. Independent analysis from people on internet

     We will definitely get there …

     • நெலம இருக்க இருக்க மோசமா ஆகிட்டு தான் இருக்கு. அத தான் கேட்டேன். நீங்க என்னன்னா கம்ப்யூட்டர், ஆதார்னு உதார் உட்டுன்னு இருக்கீங்க.

 4. எங்கே போகும்? முட்டாள் மக்களுக்கு ஏற்ற ராஜா, ராணிகள்! கூத்து முடிந்ததும் மக்கள் விழிப்பார்கள்! திரு திருவென்று! காலம் மாறினாலும், காட்டுமிரான்டிகள் மாறுவதில்லை போலும்!

  அன்றே சொன்னது வின்வு!https://www.vinavu.com/2014/06/23/black-money-bjps-turn-to-play-drama/

 5. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு வந்து இந்தியாவின் நேர்மையாக வரி செலுத்தும் மக்களுக்கு பரிசாக கொடுப்போம் என்று மோடி,ராஜ்நாத் சிங்.ராம்தேவ் உள்ளிட்ட நீலச்சாயம் பூசிய காவி நரிகள் ஊளையிட்டன.

  நம்ப சொன்னார்கள் அம்பிகளும்,அனந்துகளும் ,கோயிந்துகளும்.நம்பி வாக்களித்தனர் மக்கள்.

  நம்மள வீட்டுக்குத்தான் அனுப்புறாய்ங்கன்னு நம்பி ஆட்டோவுல ஏறி உட்கார்ந்த வடிவேலுவின் நிலை ஆகிப்போனது மக்களின் நிலைமை.

  ஆட்டோ இப்ப மூத்திர சந்துல போய் நிக்குது.

  • மூத்திர சந்தில் இருந்து புறப்பட்ட ஆட்டோ மூத்திர சந்துக்குத்தானே வரமுடியும் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க