Monday, October 26, 2020
முகப்பு செய்தி கொலைகார அமித் ஷா விடுதலை !

கொலைகார அமித் ஷா விடுதலை !

-

amit_shah
ஒரு கொலைகாரனின் மனதை இன்னொரு கொலைகாரன்தான் புரிந்து கொள்வான்

ள்ளிக் குழந்தைகளை சுட்டுக் கொன்ற பாக் தாலிபான்களை உலகமே கண்டித்தது. ஆனால் பேருந்தில் பயணம் சென்ற அப்பாவி சொராபுதீன் ஷேக்கை கொலை செய்த பாஜக கும்பல்தான் இங்கே நாட்டை ஆள்கிறது.

‘பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்த சொராபுதீன், குஜராத்தின் முக்கிய பாஜக தலைவர்களை கொலை செய்ய திட்டமிருந்தார்’ என்று குஜராத் போலிஸ் திட்டமிட்டபடி ஒரு பொய்க்கதையை அதுவும் எந்த ஆதாரமோ, தடயங்களோ இல்லாமல் அவிழ்த்து விட்டிருந்தது.

மோடியின் போலிஸ் சொன்னால் ஊர் உலகம் அப்படியே நம்ப வேண்டும், நம்புவார்கள் என்பதால் அப்படி தெனாவெட்டாக அடித்து விட்டிருந்தார்கள். பிறகு பல்வேறு ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் இந்த போலி என்கவுண்டர் கொலை வெளிச்சத்திற்கு வந்து சிபிஐ வழக்கு போட்டது.

2005-ல் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை எனும் மிருகங்கள் சொராபுதீனை இப்படி நயவஞ்சமாக கொன்றதை நேரில் பார்த்தவர் துளசி பிராஜபதி. ‘இவர் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிவிட்டார்’ என்று கதை கட்டி 2006-ல் அவரை சுட்டுக் கொன்றார்கள் இந்த பாவிகள்.

இந்த இரு வழக்குகளிலும் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு உண்டென சிபிஐ குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து அவர் 2010-ல் கைது செய்யப்பட்டு அமைச்சரவையிலிருந்து விலகினார். ஆனால் ஒரு கொலைகாரனின் மனதை இன்னொரு கொலைகாரன்தான் புரிந்து கொள்வான் என்பதற்கிணங்க மோடி அவரை விடுவிக்கும் வேலைகளை விட்டுவிடவில்லை.

2012-ல் மும்பைக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில் அமித் ஷா மற்றும் 18 காவல் துறை அதிகாரிகள் மீது சிபிஐ 2013-ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் இந்த கொலை தொடர்பாக அமித் ஷா பேசியிருந்த தொலைபேசி தகவல்களையும் தாக்கல் செய்திருந்தது. இருந்தும் என்ன பயன்? பேய் ஆண்டால் பிசாசுதானே நீதி வழங்கும்?

இறுதியில் இவ்வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி எம்.பி.கோசாவி, ‘அமித் ஷா குற்றவாளி என்பதற்கான சிபிஐயின் அனுமானங்களை ஏற்க முடியாது’ என்று அவரை விடுவித்திருக்கிறார். அனுமானங்களை விடுங்கள், நேரடி ஆதாரங்களையே தாக்கல் செய்திருந்தாலும் இந்த கோசாவி அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. பாஜக ஆட்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே மோடிக்கு அஞ்சி நடுங்கும் போது சிபிஐ டம்மி பீசுகளெல்லாம் எம்மாத்திரம்?

சிபிஐ விலைக்கு வாங்கப்பட்டுவிட்டதாக கூறியிருக்கும் சொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன் ஷேக், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக கூறியிருக்கிறார். உயரோ, உச்சமோ எல்லா நீதிமன்றங்களும் பாஜக கொலைகாரர்களின் பாக்கெட்டில் என்றாகிவிட்ட நிலையில் அவரது நீதிக்கான போராட்டத்திற்கு யார் இருக்கிறார்கள்?

இந்த வழக்கில் வேண்டுமென்றே கொலைகாரன் அமித் ஷாவை விடுவிக்கும் முயற்சியை சிபிஐ ஆரம்பத்திலிருந்தே செய்து வந்திருக்கிறது. இதில் காங்கிரஸ், பாஜக ஆட்சி எனும் பேதமில்லை. அதிகார வர்க்கம், போலிஸ் முழுவதும் இந்துமதவெறியின் பிடியிலிருக்கும் போது பாஜக எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதுவே நடந்திருக்கும்.

AmitShah-Uddhav
மும்பை கொலைகாரர்களுடன் குஜராத் கொலைகாரன்

முதலில் அமித் ஷாவை முக்கிய குற்றவாளி என்று கூறிய சிபிஐ பின்னர் அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் என பத்தோடு பதினொன்றாக மடை மாற்றியது. கடைசி இரண்டு நாள் விவாதங்களில் சிபிஐ சார்பில் இளநிலையில் உள்ள சாதா வழக்கறிஞரே பதினைந்து நிமிடங்களில் வண்டு முருகன் பாத்திரத்தை ஏற்று முடித்து வைத்தார். ஒரு கொலைகாரனை எவ்வளவு சாதாரணமாக விடுதலை செய்கிறார்கள் பாருங்கள்!

சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை குறித்து பல்வேறு விவரங்கள், உண்மைகள் அனைத்தும் ஊடகங்களில் வெளிந்திருக்கின்றன. இது போக உ.பி முசாபர் நகர் கலவரத்தில் அமித் ஷா எப்படி தலைமை ஏற்று நடத்தினார், அவரது வெறிப்பேச்சிற்காக தேர்தல் கமிஷனே கொஞ்ச காலம் செல்லமாக கண்டித்தது இவை அனைத்தும் சமீபத்திய வரலாறு.

ஆனால் என்ன? குஜராத்தில் இருந்த அமித் ஷாவை உ.பிக்கு அனுப்பி தற்போது டெல்லியில் பாஜக தலைவராகவே மாற்றிவிட்டார் மோடி. இப்போது நீதிமன்றங்கள், சிபிஐயை வளைத்து வழக்கிலிருந்தும் விடுவித்திருக்கிறார்கள்.

ஆக இந்தியாவில் ஒரு அப்பாவி முசுலீமை கேட்பார் கேள்வியின்றி கொலை செய்யலாம், கொன்றவர்கள் எதிர்ப்பாரின்றி நாடாளலாம், எவரும் கேட்க முடியாது என்றால் இங்கே இருப்பது ஜனநாயகமா இல்லை மதவெறியின் காட்டுமிராண்டித் தனமா?

தமது உறவுகளை இழந்து வாடும் ஒரு இசுலாமிய இளைஞனுக்கு இந்த நாட்டின் நீதி அமைப்புகள் நீதி வழங்கவில்லை என்றால் அவன் தனது இயலாமையை போக்கிக் கொள்ள என்ன செய்வான்?

பதில் தெரிந்தவர்கள் குற்ற உணர்வு கொள்ளுங்கள், குற்ற உணர்வு கொண்டவர்கள் இந்து மதவெறி பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு அணி திரளுங்கள்!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. “தமது உறவுகளை இழந்து வாடும் ஒரு இசுலாமிய இளைஞனுக்கு இந்த நாட்டின் நீதி அமைப்புகள் நீதி வழங்கவில்லை என்றால் அவன் தனது இயலாமையை போக்கி கொள்ள என்ன செய்வான்?”

  இதை தான் பா.ஜ.கவும் அதன் அமைப்புகளும் எதிர்பார்க்கிறார்கள்

 2. “பள்ளிக் குழந்தைகளை சுட்டுக் கொன்ற பாக் தாலிபான்களை உலகமே கண்டித்தது.” But Vinavu???
  So, what are you coming to say? Is condemning the taliban activities are wrong?

 3. என்ன வினவு இப்படி பச்ச மண்ணா இருக்கீங்க ! அதிகாரத்துல உள்ளவன் எவ்வளவு கொலை வேண்டுமானாலும் பண்ணலாம். எந்த மொள்ளமாறித்தனமும் பண்ணலாம் எவ்வளவு வேண்டுமானலும் கொள்ளையடிக்கலாம். எவ்வளவு சொகுசா வேணுமின்னாலும் வாழலாம். நம்ம நாட்டோட சாபக்கேடு. ஆனா என்ன செய்வது அப்பாவி நடுத்தர ஏழைமக்களுக்கு நீதி கிடைக்காது. அவர்கள் சின்ன தப்பு பண்ணினாலும் கடும் தண்டனை உண்டு. இதெல்லாம் சகஜம். ஆனால் இனி முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு கேடு காலம் தான். அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகள், ஆபத்துகள் அவர்களுக்கு கெடுதல் செய்ய சதிகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன.

 4. Dear katrathu kaiyalavu don’t blame other countries first think about our country between 1996 to till date more than 5000 Muslims killed in India.except Kashmir. We forgot you blame Pakistan why you not blame now poto in north east now they killed 100 peoples. I thick in you are supporter of Hindu killers.

 5. yaan,

  Killing innocents, should be criticized without any inhibitions irrespective of the cast, creed, language, country.
  I condemn the killings, whether it is Muslim, Hindu or Christian or any Religion.

  The same Vinavu had published articles condemning the deaths in Palestine, Iraq, criticized USA and Israel. But becomes silent on the atrocities of Taliban. See how the article started, they just mention the killing of 100s of innocent civilians as just a passing cloud kind of expression and focus the killing of one person who is mentioned as a terror suspect by that government.

  This is clearly one sided.

  Frankly, I dont know whether Mr. Sorabuddin is innocent or not.
  Cant believe fully on Media or Government versions nowadays.

  But the least thing we can do is criticize and condemn the killings of any innocent civilian anywhere in the world.

  An innocent girl is raped in Delhi or in Chennai, the response should not be different.
  An innocent life is taken whether in Kashmir or Srilanka or in Palestine or in Tamilnadu should be different.

  • தமது உறவுகளை இழந்து வாடும் ஒரு இசுலாமிய இளைஞனுக்கு இந்த நாட்டின் நீதி அமைப்புகள் நீதி வழங்கவில்லை என்றால் அவன் தனது இயலாமையை போக்கிக் கொள்ள என்ன செய்வான்?
   பதில் தெரிந்தவர்கள் என்ன செய்யனும் குற்ற உணர்வு கொள்ளனும் அந்த குற்ற உணர்வுலயே குண்டு வெடிப்புகளை நியாப்படுத்தனும் கிகிகி இதுதான் கம்மூனிஸ்டு பாலிஸி சி இல்ல இல்ல வினவு பாலிஸி செத்துப்போன துளசி பிரஜாபதி என்ற இந்துவுக்கு மட்டும் நீதி வழங்கிறுச்சா என்ன இவிங்க சொல்லுற மாறியே மாற்று மதத்தவர்களுக்கு கொடுமை நடக்கும் இசுலாமிய நாடுகளில் மாற்று மதத்தவர் தீவிரவாதிகளாக மாறி விட்டார்களா ஏகப்பட்ட போலி எஙவுண்டர் நடந்தாலும் இசுலாமியனுக்கு நடக்கலாமா தப்பு தப்பு ,ஐ எஸ் ஐ எஸ் அமைப்புக்கு ஆள் எடுக்குறாங்களாம் அதனால இத படுச்சிட்டு அங்க போய் சேர பாருங்க இளைஞர்களே (முஸ்லீம் மட்டும்) என்று வினவு கேட்டுக்கோளுகிறது

 6. தீவிரவாதிகள கமலகாசன் சுட்டுக்கொள்ளச்சொன்னா அட சினிமாலதான்பா அது பாஸிஸம் அனா தீவிரவாதிகள் கொல்லளாம் நம்மெல்லாம் அவன் ஏன் தீவிரவாதியானான்னு யோசிக்கனும் குற்ற உணர்சி கொள்ளனும்
  //தமது உறவுகளை இழந்து வாடும் ஒரு இசுலாமிய இளைஞனுக்கு இந்த நாட்டின் நீதி அமைப்புகள் நீதி வழங்கவில்லை என்றால் அவன் தனது இயலாமையை போக்கிக் கொள்ள என்ன செய்வான்?//
  இப்ப படிச்சு பாறுங்க சரிதான மக்கா… வினவு அய்யா அமித்ஸா விடுதலையை கண்டிப்பதோடு நிருத்தியிருந்தால் போதாதா ஏன் தாலிபான் செஞ்சத கண்டிக்கிறாய் அப்பிடினு கேக்கும் போது உங்க மீது டவுட் வரத்தான் செய்யுது…

 7. எம்ஜியார் காலத்திலும் இது போன்று”என் கவுன்டர்” கதைகள் உண்டு. அதற்க்கு முன்பாக கருணாநிதி
  காலத்தில் அண்ணாமலை பல்கலைகழக உதயகுமாரன் கதை உண்டு.ஸ்டாலின் உதவியாளர் ஒருவர் அண்ணாநகரில், கைகுழந்தையோடு குடும்பத்துடன் தற்கொலை???? செய்த கதையும் உண்டு.சமீபத்தில் 2ஜி காரணமாக ஸ்டாலின் நண்பர் சாதிக் உயிரை விட்ட கதையும் தெரியும். லோக்கல் திராவிட குஞஞுகளே இவ்வளவு ஆட்டம் போடும்போது, தேசிய தாமரை ஆட்டம் மட்டும் எப்படி குறைவாக இருக்கும்.

 8. கற்றது, பாண்டியன் வினவில் தலிபான் என்று தேடுபொறி தேடினால் கொட்டிக் கிடக்கும். ஒவ்வொரு கட்டுரையும் அதன் ஆதி மூலத்தோடு தலிபானைச் சாடும். அதாவது மதங்களே இதன் ஊற்றுக்கண், ஏகாதிபத்தியங்கள் இந்த பயங்கரவாதிகளின் புரவலர்கள் என்று ஆதாரத்தோடு சொல்லும். அப்படி இருக்க, குழந்தை படுகொலை பற்றிய வினவின் கட்டுரை ஏற்கனவே இருக்க, வினவின் மெளனம் என்று அளப்பரை எதற்கு ?. இந்துத்துவ அடிவருகளான உங்களுக்கு இதெல்லாம் ஒரு தந்திரம். இல்லாத ஒன்றை சொல்லி விவாத திசை திருப்பி, ஏமாற்றலாம். ஆகாது ஐயர்க்வாள் இது ஆகாது.

  • அதில்லைங்க விசயம். கற்றது, பாண்டியன் ரெண்டு பேரும் இந்து தாலிபான்கள் அதை வெளிப்படையா சொல்ல வெக்கப்பட்டுக்கிட்டுதான் பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குறாய்ங்க.

   • அய்யா அஞ்ஞானி,

    தாங்கள் தயவு செய்து என்னுடைய மற்ற பதிவுகளை, பின்னூடங்களை படித்து விட்டு வரவும்.

    மேம்போக்காக பேச வேண்டாம்.

    • மதங்களை விட்டு தொலையுங்கள், மனிதனாய் மாறுங்கள் என்பதை தானே பல பதிவுகளில் கூறி இருக்கிறேன். தயவு செய்து எல்லா பதிவுகளிலும் எனது கருத்துக்களை பார்த்து விட்டு நான் இந்து தாலிபானா, இசுலாமிய தாலிபானா, கிருத்துவ தாலிபானா, புத்தமத தாலிபானா, யூத தாலிபானா என்று முடிவுக்கு வரவும்.

    • //தாங்கள் தயவு செய்து என்னுடைய மற்ற பதிவுகளை, பின்னூடங்களை படித்து விட்டு வரவும்.

     மேம்போக்காக பேச வேண்டாம்.// Same suggestion. Please read other Vinavu posts on islam

 9. ஆதவன்,

  வினவில் தாலிபான் பற்றிய பதிவுகள் உள்ளது. மறுக்கவில்லை.
  பாகிஸ்தான் குழந்தைகளை பலிகொண்ட அந்த கொலைவெறி பாதகத்தை வினவு எப்படி பதிவிட்டது என்று மீண்டும் படித்து பாருங்கள். அந்த கொலைவெறி பாதகத்தை மேம்போக்காக குறிப்பிட்டு பின் அதனை தொடர்ந்து குஜராத் கலவரம், எப்போதோ நடைபெற்ற வியட்நாம் அட்டூழியங்கள், ஈராக் ஆக்கிரமிப்பு, ஆப்கான், இஸ்ரேல் என்று அனைத்து உலக கொலை பாதகங்களையும் தொட்டு விட்டு, இது பத்தோடு பதினொன்று என்று தற்போதைய கொலைகளின் வழியை நீர்த்து போக செய்ய மிகவும் பிரயத்தனப்படுகிறது.

  போகோ ஹாராம் நிகழ்வுகளுக்கும் அமேரிக்கா தான் காரணம் என்று பதிவிட்டது இதே வினவு தானே.

  தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்த கொலைகள், ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்வுகள் பற்றி மூச்சு, பேச்சு, காணோம்.

  நான் பார்ப்பனனும் அல்ல, அமித் ஷா, மோடி போன்றவர்களின் ஆதரவாளனும் அல்ல. தவறு யார் செய்தாலும் அதை நேரடியாக தவறு என்று சொல்லி தட்டி கேட்க வேண்டும் என்று தான் கேட்கிறேன்.

  வினவு இசுலாமிய தீவிரவாதிகளை சாடுவது எனக்கு என்னமோ, சோ ஜெயலலிதாவை சாடுவது போல போலியாக தான் தோன்றுகிறது. ஜெயலலிதா ஏதாவது தவறு செய்தால் சோ இப்படி தான் செய்வார், கருணாநிதி இதற்கு முன் இவ்வாறு செய்தார், எம்.ஜி.ஆர். காலத்தில் இவ்வாறு நிகழ்ந்தது என்று அனைத்தையும் சேர்த்து குட்டையை குழப்பி, ஜெயலலிதா அப்படி ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை என்று ஒரு பிரமையை உருவாக்குவார். அதே போல தான் வினவும் இசுலாமிய தீவிரவாதிகளின் செயல்களை மயிலிறகால் கண்டிக்கிறது.

  • //பாகிஸ்தான் குழந்தைகளை பலிகொண்ட அந்த கொலைவெறி பாதகத்தை வினவு எப்படி பதிவிட்டது என்று மீண்டும் படித்து பாருங்கள். // the killed kids are muslims too. The incident is cruesome but what is the cause is very clearly analysed by Vinavu. You don’t have the real concern to digest that.

  • Cho is responsible for bringing down Jayalalitha govt by bringing Karunanidhi and Moopanaar together. He would always do what’s best for the state / people based on political situation.

 10. // வினவு இசுலாமிய தீவிரவாதிகளை சாடுவது எனக்கு என்னமோ, சோ ஜெயலலிதாவை சாடுவது போல போலியாக தான் தோன்றுகிறது.//

  சிறிதும் நேர்மையற்ற வாதம்.
  https://www.vinavu.com/2013/02/06/islamic-internationalism-a-myth/#tab-comments
  https://www.vinavu.com/2011/05/02/osama-obama/

  இவையெல்லாம், சோ ஜெயலலிதாவை சாடுவது போலவா?

  வினவு மென்மையாக சாடுவதனால் தான், TNTJ போன்ற மதவாதிகள் வினவை கொலைவெறியுடன் கடித்துக் குதறுகிறார்களாக்கும்? https://www.youtube.com/watch?v=jBD-sqI9sPA

  ஏன் இந்து மதத்தைப் பற்றி அதிகம் கட்டுரைகள் வருகின்றன் என்பதற்குப் பல முறை வினவு தோழர்கள் பதில் சொல்லிடிருக்கிறார்கள். அதைத் தேடிப்படியுங்கள். அதை விடுத்து சும்மா ஆர்.எஸ்.எஸ் கூறுவதையே, திரும்பத் திரும்ப வாந்தியெடுப்பது உங்களுக்கும் அழகல்ல.

 11. பகத்,

  ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஷாபிங் மால் சம்பவம்,
  பிரான்சில் நடந்த கொலைவெறியாட்டம் இவற்றை பற்றி வினவு என்ன பதிவிட்டது என்று சொல்கிறீர்களா?

  பாகிஸ்தானில் நடந்த பள்ளி குழந்தைகள் படுகொலையை பற்றி வினவு எப்படி பதிவிட்டது, கொஞ்சம் மீண்டும் அதை படித்து பாருங்கள். பாகிஸ்தானில் ஆரம்பித்து, குஜராத், வியட்நாம், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான், ஈராக் என்று உலகம் முற்றும் சுற்றி வந்து மூக்கை தொட்டது ஏன்?
  நேரடியாக தீவிரவாதத்தை கண்டிக்க என்ன பயம்?

  கிரிக்கெட் என்றால் வினவுக்கு வெறுப்பு. அதே சமயம் பாகிஸ்தானின் அப்ரிடி ஒரு போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்ததை எப்படி புகழ்ந்தார்கள் என்று பாருங்கள், ஒரு சிங்கம் போல சிலிர்த்தாராம், இந்தியாவை வீழ்த்தினாராம், என்ன ஒரு பெருமை.

  இந்து மதத்தில் உள்ள குறைகளை பற்றி நானே பல முறை பதிவிட்டுள்ளேன். என்னை இந்துத்துவாகாரனாக கருத வேண்டாம்.

 12. மத வெறியர்கள் செய்யும் அட்டூழியங்கள் அதற்கு மேலாக சாதிவெறியர்கள் செய்யும் அட்டூழியம் இதற்கெல்லாம் முற்றுபுள்ளி உண்டு. நமது பிற்கால சந்ததிகள் வரலாற்றில் இதை படிப்பார்கள். அந்தகாலம் வரும். இது ஜோசியம் அல்ல ஆதங்கம், மனவேதனை, துக்கம், ஏக்கம். இந்த அநியாயக்காரர்களால் வரும் அழிவை நல்லது என்று நினைக்கும் நயவஞ்சகர்களும் ஒருநாள் அவர்களுக்கே அழிவுவரும்போது கண்டுகொள்வார்கள். அநியாயம் தாண்டவமாடும் ஆனால் வெல்லாது,நியாயம்தான் வெல்லும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க