Sunday, December 5, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க புதிய தலைமுறையைத் தாக்கிய இந்து முன்னணி - தீர்வு என்ன ?

புதிய தலைமுறையைத் தாக்கிய இந்து முன்னணி – தீர்வு என்ன ?

-

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமரனை, அந்த தொலைக்காட்சி நிலையத்தின் வாயிலிலேயே வைத்து, இந்து முன்னணி, பாரதிய ஜனதா காலிகள் 30 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கி, அவருடைய கேமராவையும் உடைத்திருக்கின்றனர். தற்செயலாக அங்கு வந்த பத்திரிகையாளர் தியாகச்செம்மலும் பொதுமக்கள் சிலரும் குறுக்கிட்டுத் தடுத்து அவரைக் காப்பாற்றியிருக்கின்றனர்.

புதிய தலைமுறை பத்திரிகையாளர் தாக்குதல்
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமரனை, அந்த தொலைக்காட்சி நிலையத்தின் வாயிலிலேயே வைத்து, இந்து முன்னணி, பாரதிய ஜனதா காலிகள் 30 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கி, அவருடைய கேமராவையும் உடைத்திருக்கின்றனர்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, “பெண்களை தாலி பெருமைப்படுத்துகிறதா, சிறுமைப்படுத்துகிறதா?” என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருப்பதாக அறிவித்து அதற்கான விளம்பரத்தை அத்தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. உடனே, இந்து முன்னணியினரும் பாஜகவினரும் அந்த தொலைக்காட்சி நிர்வாகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று மிரட்டியிருக்கின்றனர். நேற்று மாலை பத்துக்கும் மேற்பட்டோர் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் மிரட்டியிருக்கின்றனர். இருப்பினும் பிரச்சினையை எதிர்பார்த்து போலீசு பாதுகாப்பையும் கோரிப் பெற்றிருக்கின்றனர்.

ஆனால் தாக்குதல் நடந்தபோது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றனர். அடித்த இந்து முன்னணி தலைவர்கள் சிலர் போலீசு பாதுகாப்பு பெற்றவர்கள். அவர்கள் போலீசு பாதுகாப்புடன் இந்த ரவுடித்தனத்தை நடத்தியிருக்கிறார்கள்.

இது குறித்து சைதாப்பேட்டை உதவி ஆணையர், இணை ஆணையர் ஆகியோரிடம் நேரில் சென்று புகார் செய்தபோது, தங்களை அவர்கள் ஒருமையில் ஏசியதாகவும், “நீங்கள் ஏதாவது கான்ட்ராவர்சியலாக ஒளிபரப்புவீங்க, அதுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்கறதுதான் எங்க வேலையா?” என்றும் திமிராகவும் அலட்சியமாகவும் பேசியதாக தியாகச்செம்மல் கூறுகிறார். தற்போது வேறு வழியின்றி பத்து பேர் மீது போலீசு ஒப்புக்கு வழக்கு பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதல் மூலம் இந்து வெறியர்கள் சொல்லவருவது என்ன?

இந்து முன்னணி மிரட்டல்
“தாலியைப் பற்றிப் பேசக்கூடாது என்றால் எதிர்ப்பு காட்டாமல் இணங்க வேண்டும்”

“அவள் எதிர்ப்பு காட்டாமல் இணங்கியிருந்தால் அனாவசியமாகச் செத்திருக்க வேண்டியதில்லை” இது பி.பி.சி ஆவணப்படத்தில், குற்றவாளி முகேஷ் பேசும் வசனம். இதையேதான் இந்து வெறியர்களும் சொல்கிறார்கள்.

அவர்கள் “தாலியைப் பற்றிப் பேசக்கூடாது என்றால் எதிர்ப்பு காட்டாமல் இணங்க வேண்டும்” “பகுத்தறிவு பேசக்கூடாது என்றால் அதற்கும் இணங்க வேண்டும்.”

இல்லையென்றால் தபோல்கரையும் பன்சாரேவையும் செய்ததைப்போல கொலை செய்வார்கள்.

நிர்பயாவும் தபோல்கரும் பன்சாரேவும் எதிர்த்து நின்றார்கள். நாம் எதிர்த்து நிற்கப் போகிறோமா, அல்லது இணங்கி அடங்கிப் போகப்போகிறோமா என்பதுதான் கேள்வி.

முதலாவதாக, இது இந்துமதவெறி பாசிஸ்டுகள் நாடு முழுவதும் நடத்தி வரும் வெறியாட்டத்தின் ஒரு அங்கம். அதிலும் குறிப்பாக, தமிழ் நாட்டிலிருந்து பகுத்தறிவு, சுயமரியாதையுணர்வு, தமிழ் உணர்வு ஆகிய அனைத்தையும் துடைத்து ஒழிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இந்து வெறி பாசிஸ்டு அமைப்புகள் வேலை செய்து வருகின்றன.

மாதொருபாகன் பிரச்சினையில் ஒரு எழுத்தாளரை தாக்கினார்கள். இங்கே ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர்களையே தாக்கியுள்ளார்கள். அதிகாரத்தில் இருந்தால் கொலை செய்திருப்பார்கள். எனவே, “இந்து அமைப்புகள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் பயங்கரவாதிகள். ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானவர்கள்” என்று நாம் பிரகடனம் செய்ய வேண்டும். அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். இதனை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று மட்டும் கூறுவது தவறு.

இரண்டாவதாக, ஊடக முதலாளிகள்.

மோடி - பச்சமுத்து
தமிழகத்தில் முகவரியே இல்லாத பாரதிய ஜனதா கட்சிக்கு முகவரி ஏற்படுத்திக் கொடுத்து, மதவெறிக் கருத்தை பிரச்சாரம் செய்ய மேடை அமைத்துக் கொடுப்பதில் முதலிடம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குத்தான்.

இந்தத் தாக்குதல் பற்றி புதிய தலைமுறை நிர்வாகத்தின் நிலை என்ன? இந்து முன்னணியும் பாஜ.க வும் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக புதிய தலைமுறையின் செய்தியறிக்கை கூறுகிறது. அடுத்த செய்தியாக, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராசன் மகளிர் தினம் கொண்டாடியதும், அவருக்கு வீரவாள் வழங்கப்படும் காட்சியும் காட்டப்படுகிறது.

“அடுத்தமுறை தாக்க வரும்போது கையில் வாளோடு வருக” என்று அழைக்கிறார்களா? திரு பச்சமுத்து பல தொழில்கள் நடத்துகிறார். கல்வி நிறுவனங்கள், பேருந்து, தொலைக்காட்சி ஆகியவற்றுடன், ஒரு கட்சியும் நடத்தி வருகிறார். அவருடைய கல்வி நிறுவனங்களில் பாஜக வினருக்கு டிஸ்கவுன்ட் கிடைக்கிறதோ இல்லையோ புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாராளமாக ‘டிஸ்கவுன்ட்’ கிடைக்கிறது. தமிழகத்தில் முகவரியே இல்லாத பாரதிய ஜனதா கட்சிக்கு முகவரி ஏற்படுத்திக் கொடுத்து, மதவெறிக் கருத்தை பிரச்சாரம் செய்ய மேடை அமைத்துக் கொடுப்பதில் முதலிடம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குத்தான்.

ஆனால், தாலி பற்றிய இந்த விவாதத்தை நடத்தக்கூடாது என்று இந்து வெறியர்கள் உத்தரவிட்டவுடனே, ஒரு சிறிய எதிர்ப்புக் கூட காட்டாமல் அதன் ஒளிபரப்பை நிறுத்துவதாக முடிவு செய்து விட்டார்கள். அடி வாங்கிய பிறகாவது ஒளிபரப்பியிருக்கலாம்.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தை செந்தில்குமார் படமெடுத்த காரணத்தினால் தாக்கினார்களாம்.

ஒரு தொழில் நிறுவனம் என்ற அடிப்படையிலான கவுரவம் கூட அந்த நிர்வாகத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களின் ஆதாயத்துக்காக ஊழியர்களும் மானங்கெட்டவர்களாக இருக்க வேண்டுமா, அடி வாங்கவேண்டுமா என்பதுதான் கேள்வி.

புதிய தலைமுறை மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும் இன்றைக்கு இதுதான் நிலை. சன் டிவியில் ஒரு பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை நடந்தபோது, ஆகப்பெரும்பான்மையான ஊடகங்கள் அதனை கட்டுப்பாடாக இருட்டடிப்பு செய்தததை நாம் அறிவோம். தற்போது புதிய தலைமுறை ஊழியர் மீதான தாக்குதல் செய்தியையும் மற்ற ஊடகங்கள் இருட்டடிப்பு செய்திருக்கின்றன.

“இந்து அமைப்பினர் முற்றுகைப் போராட்டம்” என்று தலைப்பிட்டு “தமிழ் தி இந்து” நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தை செந்தில்குமார் படமெடுத்த காரணத்தினால் தாக்கினார்களாம். ஆர்ப்பாட்டத்தை படமெடுத்ததாகவே இருக்கட்டும், அதற்காக ஏன் தாக்கவேண்டும், போலீசு என்ன செய்தது என்ற கேள்விகளைக்கூட அந்த நாளேடு எழுப்பவில்லை. மற்ற ஊடகங்களோ, இந்த செய்தியைக் கூட வெளியிடவில்லை.

போலீசின் அணுகுமுறை
மூன்றாவது பிரச்சினை – போலீசின் அணுகுமுறை பற்றியது.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் என்ன செய்வது? ‘பத்திரிகை சுதந்திரத்தை’ காப்பாற்றுவதைப் பிறகு பார்ப்போம்.  தங்கள் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்குக்கூட பிரஸ் என்ற அடையாள அட்டையையோ, தமது நிர்வாகத்தையோ அவர்கள் நம்பியிருக்க முடியுமா? முடியாது என்பதைத்தான் அடுத்தடுத்து நடைபெறும் பல சம்பவங்கள் காட்டுகின்றன. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஒரு சங்கமாக சேருவதன் மூலம் மட்டும்தான் தங்களையும், தங்கள் தன்மானத்தையும் கருத்துரிமையையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மூன்றாவது பிரச்சினை – போலீசின் அணுகுமுறை பற்றியது.

குடியரசு தின விழாவில் தண்டிக்கப்பட்ட கிரிமினலின் படத்துக்கு வரிசையில் நின்று போலீசு அதிகாரிகள் சல்யூட் அடிப்பதை தமிழகத்திலும், மோடி ஆட்சியின் கீழ் கொலைக்குற்றவாளிகள் வரிசையாக விடுவிக்கப்படுவதை தேசிய அளவிலும் பார்க்கிறோம். இந்த சூழலில், யாரேனும் ஒரு போலீசு அதிகாரி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முயற்சித்தால், அதைத்தான் நாம் அதிசயமாகப் பார்க்கவேண்டும்.

இந்து முன்னணி அட்டகாசம்
கார்ப்பரேட்டுகளுக்கு “சிங்கிள் வின்டோ சிஸ்டம்” கொண்டு வந்த மோடி, பெண் உரிமையைப் பாதுகாப்பதற்கும் “சிங்கிள் வின்டோ” கொண்டுவரவிருப்பதாக மகளிர் தினத்தன்று காலையில் அறிவித்தார்.

முதலிரண்டு பிரச்சினைகள்தான் நாம் முதன்மையாக கவனம் செலுத்தவேண்டியவை என்று கருதுகிறோம். போலீசு கடமை தவறிவிட்டது என்பதை முதன்மைப்படுத்துவது ஊடக முதலாளிகள் குற்றத்தை பின்னுக்குத் தள்ளுவதற்கே பயன்படும். எனவேதான், “பத்திரிகையாளர்களே உடனே சங்கமாக ஓரணியில் திரளுங்கள்” என்று கோருகிறோம். இது ஊதிய உயர்வுக்கோ, பணிப் பாதுகாப்புக்கோ அல்ல. உங்கள் உயிரையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு!

டாஸ்மாக்கை வைத்து பெண்களின் தாலி அறுத்துக் கொண்டிருக்கிறார் அம்மா. அம்மாவின் இயற்கையான கூட்டாளிகளான இந்துவெறியர்கள், புனிதமான தாலியை அகற்றுவதாக பகுத்தறிவாளர்கள் மீது குற்றம் சாட்டி, பெண் உரிமைக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு “சிங்கிள் வின்டோ சிஸ்டம்” கொண்டு வந்த மோடி, பெண் உரிமையைப் பாதுகாப்பதற்கும் “சிங்கிள் வின்டோ” கொண்டுவரவிருப்பதாக மகளிர் தினத்தன்று காலையில் அறிவித்தார். சொல்லி முடிப்பதற்குள் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு வந்து விட்டார்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகள் – மோடி குறிப்பிடும் சிங்கிள் வின்டோ அவர்கள்தான்.

________________________________

பின்குறிப்பு: டிசிஎஸ் ஆட்குறைப்பிற்கு பின் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கம், ஐ.டி துறை ஊழியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அணிதிரட்டி வருகிறது. அந்த நம்பிக்கையையும், சுயமிரியாதையையும் பத்திரிகையாளர்கள் அடைய வேண்டாமா? பத்திரிகையாளர்களுக்கான தொழிற்சங்கம் கட்டுவோம்!

பத்திரிகை நண்பர்களே உடன் தொடர்பு கொள்ளுங்கள்!
vinavu@gmail.com      /      97100 82506

 1. ஊடகத்தினர் மீது தாக்குதல்: வன்மையாக கண்டிக்கிறேன்!

  புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது இந்துத்துவ சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தி, அங்குப் பணிபுரியும் ஊழியர்களையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். பெண் செய்தியாளர் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர்.

  சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவவாதிகளின் அராஜகப் போக்கைக் கண்டிக்கிறேன். கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

  -பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ,
  பொதுச்செயலாளர்,
  குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

 2. இந்து முன்னணி காதலர் தினத்தில் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க நாய் – கழுதை திருமணத்தில் தாலி இல்லாமல் நாய் சங்கிலியா பயன்படுத்தினார்கள் ?

 3. கருத்துரிமைக்கு எதிரானாவர்கள் முஸ்லிம்கள் என்று குதியா குதித்த அம்பிகள் / ஆர்.எஸ்.எஸ் காலிகள் இப்ப எங்கே? வந்து கருத்து சொல்லுங்க பார்ப்போம்.

 4. தாக்கியவர்களை முதலில் இந்து பயங்கரவாத அமைப்புகள் என்றார்கள். பிறகு சமூக விரோதிகள் என்றார்கள். மாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் என்றார்கள். அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று கூட எதிர்காலத்தில் சொல்லலாம். புதிய தலைமுறை நிறுவனம் மீது இருக்கும் ஆத்திரத்தைக் காட்டிலும் அதில் பணிபுரியும் குணசேகரன், ஜென்ராம், வேங்கடப்பிரகாஷ், தியாகசெம்மல் மற்றும் சிலர் மீது தான் தங்கள் கோபத்தை காவி கும்பல் அடைகாத்து உள்ளனர் என்று தெரிகிறது.

  குணசேகரன் அக்னி பரீட்சையில் ஹெச். ராஜாவை கண்ட நேர்காணல் முக்கியமானது. ஹெச். ராஜா ஒரு போக்கிரி அரசியல்வாதி என்பதை கூர்மையான கேள்விகள் மூலம் அம்பலப்படுத்தினார்.
  விவாதங்களில் பேச வருகின்ற இந்துத்துவர்களுக்கு எதிராக பேராசிரியர் சுபவீ, அருள்மொழி, அருணன், மனுஷ்யபுத்திரன் என்று வலிமையான மாற்று தரப்பை அழைப்பதும் காவி கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

  புதிய தலைமுறையின் ஊழியர் ஒருவரை தாக்கியிருப்பதன் மூலம் அதில் பணிபுரியும் ஊழியர்களை நிர்வாகம் நெருக்குதலுக்கு உள்ளாக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. வைகோவை கொலை மிரட்டல் விடுத்த உடனே வெளியேறினார். ஆனால், இந்த சம்பவம் பச்சமுத்துவை அசரவைக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

  பச்சமுத்துவுக்கு இதில் உடனடி லாபம் இருக்கிறது. தன் ஊழியர்கள் மீதான தாக்குதல் ஒரு சிறந்த Scoop. எனினும் டைம்ஸ் நவ் அளவுக்கு பச்சமுத்துவால் இதில் ஆதாயம் தேட முடியாது. பாராளுமன்ற தேர்தலில் திமுக தோல்வியை அடுத்து ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வதந்தி கிளம்பியது. தொண்டர்கள் அவரது வீட்டருகே குவிந்தனர். ஸ்டாலினின் நாடகம் என்று டைம்ஸ் நவ் பரபரப்பு செய்தி வெளியிட்டது. ஆத்திரம் அடைந்த சில திமுகவினர் டைம்ஸ் நவ் செய்தியாளர் ஒருவரை தாக்கினர்.

  மாலையில் டைம்ஸ் நவ் நிறுவனத்துக்கு தனது வருத்தத்தை அனுப்பி வைத்தார் ஸ்டாலின். ஷைலாக்கிடம் ஆன்றனியோ வைத்த விண்ணப்பமாக இருந்தது அது. அர்னப் அந்த வருத்த அறிவிப்பை குப்பை கூடையில் வீசுவதாக தெரிவித்தார். ஸ்டாலின் தன் முன்னால் தோன்ற வேண்டும் என்றார்.

  பச்சமுத்துவின் ஊடக அறம் தலைகீழானது. இந்து முன்னணிக்கு பதில் பச்சமுத்துவே மன்னிப்பு கோரலாம். அல்லது பச்சமுத்துவே தாலி வேண்டுமா? வேண்டாமா? என்று நிகழ்ச்சி நடத்த முன்வந்ததை கண்டித்து அறிக்கை விடலாம்.

  எவ்வளவு நாடகமாடினாலும் ஒரு உண்மை மட்டும் பச்சமுத்துவை உள்ளூர உறுத்திக் கொண்டு இருக்கும். அது பாம்புக்கு பால் வார்த்தவன் நிலைமை. பால் வார்த்தவர் என்பதற்காக பாம்பு தான் கொத்தாமல் விடுமா?

  • //ப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று கூட எதிர்காலத்தில் சொல்லலாம். // Already told. My suspicion is that it is a planned drama by RSS and Pachamuthu. The poor scape goat is reporter who got beaten up.

   As per my theory, In Tamil Nadu if RSS group attacks any media whatever be its size will come under very heavy public attack. But Puthiya thalamurai case didn’t happen that way. So it is safe drama com Ploy by Puthiya Thalaimurai and RSS to create a Fascist platform in Tamil Nadu slowly

  • //அர்னப் அந்த வருத்த அறிவிப்பை குப்பை கூடையில் வீசுவதாக தெரிவித்தார். ஸ்டாலின் தன் முன்னால் தோன்ற வேண்டும் என்றார்.
   // same times now when its reporter attacked by Paramilitary forces and RSS group just went ahead as if nothing happened. Same Arnab who acts like a Sori dog in Tea stall infront of Modi Soridog

 5. போலீசு பாதுகாப்பு பெற்றவர்கள். போலீசு பாதுகாப்புடன் இந்த ரவுடித்தனத்தை நடத்தியிருக்கிறார்கள்.

  — சட்டம் தன் கடமையை செய்யும் என்பது இதுதானோ

 6. எல்லாவற்றையும் விட அசிங்கமானது எது தெரியுமா? இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதை ராமதாஸ், வைகோ, பாரிவேந்தர், கோவை ஈஸ்வரன் ஆகியோர் கண்டித்து பேட்டி கொடுத்ததுதான். தமிகழத்தில் அனாதை சொறிநாய் போல தெருவோரமாக, சீந்த ஆளில்லாமல் கிடந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலுக்கு இன்றுவரை பாத பூஜை செய்து, பல்லக்கில் சுமப்பவர்கள் இவர்கள் தான். பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் உள்ளிட்டவர்களை தாக்கி முடமாக்கியது காவி- ஆதிக்கசாதி வெறி கூட்டணிதான். நேற்றுவரை கூட்டு சேர்ந்து கருத்து சுதந்திரத்திற்கு சவால் விட்டவர்கள் தான், இன்று தமது கூடாரத்துக்குள் அடிதடி நடந்தவுடன் கருத்துரிமை பாதிக்கப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த அல்லக்கை _______ அடித்து வீழ்த்தாமல் நமது நேரடி எதிரியை ஒழிக்க முடியாது. எதிரிகளை விட அவர்களைப் பாதுகாக்கும் துரோகிகளே முதலில் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். சூடு, சொரணை மிச்சம் மீதி உள்ள ஊடகத்துறை ஊழியர்களே உங்கள் மானத்தை, உயிரைக் காக்க ஒன்றுபடுங்கள், சொரணையுள்ள அமைப்பாய்த் திரளுங்கள்…

  • பர்கா என்.டி.டி.வி ல. அவுங்களுக்கும் புதியதலைமுறைக்கும் என்ன சம்பந்தம். 🙂

   • புர்கா தேவையானு நிகழ்ச்சி போட முடியுமானு கேக்குறீங்க சரியாத்தான் கேக்குறீங்க பாஸ் அனா அது மாறி ஒரு நிகழ்ச்சி நடத்துறது கஸ்டம்தான் இங்க ,இசுலாம பத்தி பேசுனாலே கொந்தளிக்க பிஜை போன்றவர்களால் வெறியூட்டப்பட்ட கூட்டம் இங்க இருக்கு அவகளுக்கு மட்டும் ஆதரவ பேச கம்மூனிஸ்ட்டு கூட்டனமும் இங்க இருக்க்குது அப்பிடி இருக்கும் போது எப்பிடி பாஸ் முடியும் ,கொஞ்சம் கஸ்டம்தான் _________….

    • //புர்கா தேவையானு நிகழ்ச்சி போட முடியுமானு கேக்குறீங்க சரியாத்தான் கேக்குறீங்க பாஸ் அனா அது மாறி ஒரு நிகழ்ச்சி நடத்துறது கஸ்டம்தான் இங்க ,இசுலாம பத்தி பேசுனாலே கொந்தளிக்க பிஜை போன்றவர்களால் வெறியூட்டப்பட்ட கூட்டம் இங்க இருக்கு அவகளுக்கு மட்டும் ஆதரவ பேச கம்மூனிஸ்ட்டு கூட்டனமும் இங்க இருக்க்குது அப்பிடி இருக்கும் போது எப்பிடி பாஸ் முடியும் ,கொஞ்சம் கஸ்டம்தான் _________….// புர்காவை ஏதோ வினவு ஆதரிப்பது போலவும், அது பற்றிய விவாதங்களை வினவு எதிர்ப்பது போலவும் அறிவு நாண்யமின்றீ ‘ஏசு’ம் சோசப்பு… தாலி பற்றிய விவாதத்தை குண்டு வீசி மிரட்டி தடுத்த ஆர் எஸ் எஸ் பற்றி கருத்து கூறி உங்கள் யோக்யதையை கொஞ்சமேனும் நிரூபிக்கலாமே?

 7. அண்ணன் தென்றல் எங்க போயிட்டாரு காங்கிரஸ்ல சேந்துட்டாரா இல்ல பிஜேபி ல மிஸ்டுகால் ஆயிட்டாரா ஒன்னும் பிரியலயே வியாசன் அனிவர்புட்டி எல்லாம் என்ன ஆனாங்க பா யாராவது கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பா வினவு படிக்கவே பிடிக்கல இவங்க எல்லாம இல்லாம..,சிஸ்டர் ரபெக்க மேரி மட்டும் அப்பப்ப தலைய காட்டுராங்க…

  • தம்பி யோசேப்பு சலாம்!

   பயணத்தில் இருந்த பொழுது திரிசூலம் பக்கம் எல்லாம் பலதடவை வந்தோம். ஆனா பயபுள்ளய தான் காணோம்! இப்பதான் திரும்பவும் கூட்டுக்குள்ள உட்கார்ந்திருக்கேன். இங்க அறிவியல் சோதனைன்னு கொலயா கொல்றாய்ங்க! அதான் லேட்டாயிருச்சு! சரி விசயத்திற்கு வருவோம்.

   \\காங்கிரஸ்ல சேந்துட்டாரா இல்ல பிஜேபி ல மிஸ்டுகால் ஆயிட்டாரா ஒன்னும் பிரியலயே\\

   எப்படி பிரியும்? தேர்தல் பாதை திருடர் பாதை; புரட்சி ஒன்றே மக்களின் பாதைன்னு பலதடவை சொல்லியிருக்கோம். இப்ப இன்னொன்றையும் சேர்த்து பரிசீலிக்கவும். இந்த நொறுங்கிய கட்டமைப்பை அள்ளி கடாசிவிட்டு மாற்று அதிகார மன்றங்களை கட்டியமைக்கும் பணியில் உங்கள மாதிரி ஆளுக கைகொடுத்து வேலை செய்றதவிட்டுபுட்டு காங்கிரஸ் பிஜேபின்னு சில்லுண்டிகளைப் பற்றியே பேசுனா என்னாப்பு அர்த்தம்?

   ———————————-

   இந்தவிவாதத்திலேயும் அய்யாவோட மதவெறி சிவலிங்கத்த செக்குன்னு நினைச்சு நக்குன மாடு மேனியா சுத்திக்கிட்டே இருக்குது! புர்கா விசயத்த புதிய தலைமுறை மட்டுமல்ல நீங்களும் தான் கேட்கல. வடஇந்தியாவில் இந்துக்களும் இப்படித்தான் திரியிறாய்ங்க!

   பாலியல் வக்கிரம் கொண்ட கிருஷ்ணன் முக்காடு போட்ட யாதவ பெண்களை துணியப் பிடிச்சு இழுத்ததா கர்நாடக சங்கீத கீர்த்தனையே இருக்கு. அதோட முதல் வரி “கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை” இந்த வரிய தொடய தட்டிக்கிட்டே ஆறுதடவை மோகன ராகம் ஆதி தாளம் ஐம்பை மேளத்துல பாடனும். யாராவது வாயத்தொறந்து இந்த கொடுமைய கேள்வி கேட்குறீகளா? அப்ப புதிய தலைமுறை மற்றும் ஆர் எஸ் எஸ்க்கு அஜெண்டா ஒன்னுதான். இத அவய்ங்க செய்ய மாட்டாங்க. ஆனா நாம் இரண்டையுமே எதிர்ப்போம். இது புரியாம இசுலாமியர்களை கேள்விகேட்குமான்னு கேள்விய கேட்டு அம்பலப்படுவது எதுக்கு?

   ————————————

   இப்ப தாலின்ற விசயமே வர்க்கப் பிரச்சனையா மாறிப்போச்சு! ஆதிக்க சாதிகள் நிறைய பேரு தங்ககொடியில தாலிபோடணும் கண்டிசன் போடுறாய்ங்க. ஆறு படத்துல பார்ப்பனிய சிவக்குமாரோட புதல்வன் சூர்யா நமது திரிசாவைப்பார்த்து எந்த ஊர்ல போடுவான் தங்கத்துல தாலி? கயித்துல போட்டாதான் தாலின்னு வசனம் பேசுவாரு. இந்த பார்ப்பனியக் கூத்த ஆதிக்கசாதிகள் செயின் போட்டு மறைக்குதுக. மறுகாலனியாதிகத்துல சுகம் கண்ட வர்க்கங்களுக்குத்தான் செயினு; தெரியுமா? ஆர் எஸ் எஸ் காரன் இந்த சாதிகள எதிர்த்து கேள்வி கேட்பானா?

   ஆக மஞ்ச கயித்துல தாலின்றது ஏழைகளுக்கு போடற கண்டிசன். பார்ப்பனியம் ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு எதிரானதுன்றது இதுலருந்து தெரியுதுல்லயா? அப்ப ஆர் எஸ் எஸ் காலிக தாலி கட்டாயமுன்னு சொல்றப்ப உங்கள மாதிரி ஆட்கள் பிரச்சனைய மதவெறியா மட்டும் திசை திருப்பல. அடிப்படையில உழைக்கிற ஏழைபாளைக்கு எதிராவும் எழுதுறிங்க. இதனால ஆர் எஸ் எஸ் கைக்கூலியா இருக்குறது மட்டுமில்லாம முதலாளித்துவத்து சேவகனாக மாறி நிக்கிறீங்க. இந்தப் பார்வை சரியா யோசேப்பு?

   எங்காத்தா சித்தாளு வேலைக்குப்போயிட்டு வீட்டுக்கு வரும்போது வீட்டுல சுகமா தூங்குற எங்கப்பாவ பாத்து ஒரு வசனம் சொல்லும்! “இவன் செத்தா தாலிய பால்ல போடமாட்டேன்! இவன் கால்ல கட்டுவேன்னு!” ஒடுக்கப்படுற மற்றும் சுரண்டப்படுற பெண்கள் மத அடையாளங்கள துறக்கறது பெரிய விசயமில்ல. அது முஸ்லீமா இருந்தாலும் தான். ஆனா இதை நேர்ல செய்யறதுக்கு முதல்ல நாம வர்க்க அடிப்படையிலே ஒண்ணு திரளனும். அதுக்கு நீங்க ரெடியான்னு முதல்ல சொல்லுங்க.

   • அண்னன் தென்றல்ம நல்லா இருக்கீகலா ,எங்க வேலை பாக்குறீக ஏன் இவ்வளவு கஸ்டம் படுறீக,அண்னன் தென்றல் கிட்ட பேசலாமுனு நினைக்கிறேன் உங்க நம்பர் குடுங்க இல்ல_____ ன்றநம்பருக்க்காவ்து மிஸ்டு கால் குடுங்க நான் உங்க கூட பேசுறேன் ஆமாம் என்ன எதுக்கு திரிசூலத்துல தேடுனிக அண்ணன் பான்டியனுக்கு தெரியுமே நான் எங்க ஊருக்கு வந்துட்டேன் அப்பிடினு அப்புரம் எதுக்குயா திரிசூலத்துல தேடுரிக என் நம்பர் தோழர் பாண்டியனுக்கு தெரியுமே அப்புறனம் என்ன கஸ்டம்…

   • தென்றல்,

    உங்களை மறுபடியும் படிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

    சிறது காலம் புயலுக்குப்பின்னால் அமைதி போலயிருந்தது. நீங்கள் தலையிடும் அளவுக்கு யாரும் பெரிதாகவும் கேள்வி கேட்டுவிடவில்லை என்பதும் கவனித்தில் கொள்கிறேன். புளிஏப்பக்கார்ர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனால் அவர்களின் தலையீடும் குறைந்து விட்டது. அதியமானுக்கு உங்கள் பதில்கள் எப்படி இருக்கும் என்பதை காண ஆவலாக இருந்தேன். ஆனால் உங்களால் வரமுடியவில்லை என்று தெரிகிறது. பரவாயில்லை.

    • புரட்சிக் குரல் அவர்களுக்கு,

     சார்லி விவாதத்தில் பங்கெடுக்கும் அளவிற்கு முக்கியமான கேள்விகளும் விவாதங்களும் இருந்தன. ஆனால் பயணத்தில் இருந்ததால் விவாதிக்க இயலவில்லை. மேலும் சந்துருவிற்கு பதில் எழுதலாம் என்றிருந்தால் அவர் தனிப்பட்ட துயரில் இருந்தார். தற்பொழுதைய அவரது நெருக்கடி நீங்கிவிட்டதா? அவருக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படுகிறதா என்பதை நாம் கேட்க வேண்டும். அவர் வந்த பிறகு விவாதிப்போம்.

     அண்ணன் அதியமான் அவர்களுடனான விவாதத்தில் தமிழ் மற்றும் திப்பு சிறப்பான முயற்சியை முன்வைத்திருந்தார்கள். கவனிக்க மட்டுமே நேரம் இருந்தது.

     சுசீலா எழுதும் விடயம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அடிப்படையில் நன்றாக எழுதுகிறார். புனைவும் நன்றாக வருகிறது.

     ஜெயமோகன் பின்னூட்டம் எழுதுபவர்களை மிகவும் இழிவாகக் கருதுவார். ஆனால் அரசியல் சார்ந்து விவாதிக்கிற வினவின் வாசகர்கள் ஜெமோ போன்ற சில்லுண்டிகளுக்கு ஒரு போதும் இணையாக மாட்டார்கள். குழு விவாதம் என்பதைத் தாண்டி அரசியல் பங்கேற்பு நமக்கு மிகவும் அவசியம் ஆகும். இந்தவிதத்தில் வினவு நடத்தும் வாசகர் கூட்டங்கள் நமக்கு மேலும் பயனுள்ளவையாக இருக்கும். பங்கேற்க நாம் முயற்சி செய்யலாம்.

     இந்துத்துவ காலிகள் பன்சாரேவை கொலை செய்ததை கண்டித்து வெளியான பதிவிற்குப் பிறகு தாங்கள் புரட்சியின் குரலாக மாறிவிட்டீர்கள் என்று கருதுகிறேன். இதன் காரணம் என்னவென்று தாங்கள் விளக்கினால் எங்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். இது பற்றி நாம் விவாதித்துதான் ஆக வேண்டும். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு Currently Switched off என்பதாக ஒரு விடயம் இருக்க முடியாது. அப்படி இருப்பதை அனுமதிக்கவும் இயலாது. இசுலாமிய மதவெறி, இசுலாமியர்களின் மீதான மதவெறி இரண்டும் அடிப்படையில் வேறு. ஆகையால் நேரம் கிடைக்கும் பொழுது இது பற்றி விளக்குங்கள்.

     நன்றி.

     • நன்றி தோழர் தென்றல் . ஆனால் அது புனைவு அல்ல 100க்கு 100 நிசம். நான், நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை அது. ஏதோ நான் B.Pharm படித்ததால் கீழகரனை ஊரைவிட்டு வெளியே வந்து பிழைத்துகொண்டேன்.படிக்காமல் நிலத்தையே நம்பி இருந்து நிலமிழந்தவர்கள் நிலை தான் கவலை அளிக்கின்றது. என் அண்ணன் [கதையில் வரும் என் பெரியப்பாவின் குமாரன் ] Henry Ford இடம் நிலமிழந்து SRM ல் கடைநிலை ஊழியராக Rs 6,000 க்கு வேலை செய்வதை நினைக்கும் போது வேதனையாக இருகின்றது. புதிய பொருளாதார கொள்கை , லிபரல் capitalism, அந்நிய முதலிட்டுக்கு ஆதரவு என்று போசி ஆதரித்து திரியும் ,நாதரிகளை செருப்பால் அடிக்க வேண்டும் போல் உள்ளது. அவர்கள் ,அந்த நாதாரிகள் நேரில் மாட்டினால் அடிப்பேன்.எங்கள் நிலத்தின் மீது பொருளாதார சூதாட்டம் ஆட இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது. ?
      //சுசீலா எழுதும் விடயம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அடிப்படையில் நன்றாக எழுதுகிறார். புனைவும் நன்றாக வருகிறது.//

     • என்ன தென்றல் அவர்களே? நலமா!!!

      //அண்ணன் அதியமான் அவர்களுடனான விவாதத்தில் தமிழ் மற்றும் திப்பு சிறப்பான முயற்சியை முன்வைத்திருந்தார்கள். கவனிக்க மட்டுமே நேரம் இருந்தது.

      சுசீலா எழுதும் விடயம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அடிப்படையில் நன்றாக எழுதுகிறார். புனைவும் நன்றாக வருகிறது.//

      எனக்கெல்லாம் எந்த பாராட்டும் கிடையாதா? உங்களிடம் இருந்தும் மற்ற பொதுவுடைமை சமூகத்திடம் இருந்தும் எவ்வளவோ ஏச்சுக்களும், பேச்சுக்களும் வாங்கிக் கொண்டு என்னால் முடிந்த அளவு என் கருத்துகளை பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.. அதற்காகவாவது 2 வார்த்தை பாராட்டினால் நான் “stalin medal” வாங்கியதை போன்ற பேறு பெற்றவளாவேன்…

      • மத வாதிகளிடம் திட்டு வாங்கினீர்கள் என்றால் நீங்கள் சரியாக சிந்திக்கிறீர்கள் என்று பொருள் .
       இந்த கற்பனா வாதிகளிடம் திட்டு வாங்கினீர்கள் என்றால் நீங்கள் சரியாக சிந்திக்கிறீர்கள் என்று பொருள் .

       ஆகவே உங்களை தென்றல் அதிகம் புகழ்துள்ளார் 🙂

     • தென்றல் அவர்களுக்கு,

      எக்கச்சக்கமாக சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

      அரசியல் பங்கேற்பு நமக்கு மிகவும் அவசியம் என்பதை 100 சதம் ஏற்கிறேன். இது பதிலளிக்க வேண்டிய முக்கியமான கருத்து. இருப்பினும் இதற்கு இணையத்தில் பதிலளிப்பது எனக்கு உகந்ததல்ல.

      புதிய நிலையின் காரணம் முன்னரே சொன்னது தான். இந்நிலை கண்டிப்பாக Currently Switched off கிடையாது. இது என்றென்றைக்குமானது தான். சிம்கார்டையும் போனையும் சேர்த்து நொறுக்கி விட்டேன். புதிய சிம்கார்டையும் புதிய போனையும் வாங்கவேண்டிய தேவை ஏதும் எனது வாழ்நாளுக்குள் எழுந்துவிடாது என்றே நம்புகிறேன். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், எனது உத்தியை தோழர்களின் உத்தியுடன் இணைந்ததாக மாற்றிக்கொண்டேன். தனியாக நிற்பதை விட தோழர்களுடன் நிற்பதே சிறந்தது என்பதை புரிந்து கொண்டேன். தோழர்கள் மதங்களை எப்படி அனுகுகிறார்களோ அதே போன்று நானும் அனுகுவேன். இந்த வழியிலே இஸ்லாமியம் பார்ப்பனியம் போன்ற இயங்களின் அபாயத்தை எதிர்கொள்வதே போதுமானது என்பதை புரிந்து கொண்டேன். இப்போது இந்த விளக்கம் போதுமென்று நினைக்கிறேன். விவாதிக்கலாம்.

      மதத்தின் மீதான வெறுப்பு, மக்களின் மீதான வெறுப்பு இரண்டிற்கும் ஒரு கோணத்தில் பார்க்கும் போது வித்தியாசம் இருக்கிறது. தனது மதத்தின் தீமையைப்பற்றி சிந்திக்காமல் அதை திருத்த முயற்சிக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு வேற்று மதத்தினரின் மீது அவர்கள் வேற்று மதத்தினர் என்பதற்காகவே கொள்ளும் வெறுப்பு அநியாயமானது. இந்த வெறுப்பு அந்தந்த பகுதியில் இருக்கும் ஆளும் வர்க்கத்திற்கு பயன்படுகிறது. இதை கற்பிப்பதும் வளர்ப்பதும் அதே வர்க்கம் தான். இசுலாமியம் பார்ப்பனியம் போன்ற மக்கள் விரோத இயங்களின் மீதான வெறுப்பு அவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றின் படி நடக்கும் மக்களின் மீதான வெறுப்பாகவும் பொதுநலனில் அக்கறையுள்ளவர்களிடம் வெளிப்படுகிறது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.நன்றி.

   • // நமது திரிசாவைப்பார்த்து //

    அப்படி போடு.. போடு.. போடு.. அசத்தி போடு கண்ணால.. இப்படி போடு.. போடு.. போடு.. இழுத்து போடு கையால..

    உன்னோட ஊரச் சுத்த உப்பு மூட்டை ஏறிக்கிறேன்.. உன்னோட கண்ண போத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்.. இந்த நட போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.. இந்த நட போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.. ஏ இந்த நட போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..

    நமது புரட்சி தலைவி திரிசா பேகத்தோட பாட்டு 10 வருசம் ஆனாலும் அந்த செட்டு, மெட்டு, வெட்டுக்காக இப்பவும் நம்பர் ஒண்ணுதானண்ணேய்..

  • ஜோசப் அண்ணா,

   உங்க ஊர்ப்பக்கம் போய்விட்டு நேற்றுத் தான் இங்கு வந்தேன். நீங்கள் தூத்துக்குடி – திருச்செந்தூர் பக்கம் தானே. 🙂

 8. ஜோசப் அவர்களே,
  இந்த லிஸ்ட்டில் என்னை விட்டுடீங்க 🙂

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க