Thursday, February 27, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் மே நாள் பேரணி - புகைப்பட வீடியோ

மே நாள் பேரணி – புகைப்பட வீடியோ

-

தமிழகத்தை குலுக்கிய புரட்சிகர அமைப்புகளின் மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் பற்றிய புகைப்பட வீடியோ

2. புதுச்சேரியில் பேரணி – ஆர்ப்பாட்டம்

மே நாள்! முடிவில்லா வேலை நேரத்தை 8 மணி வேலை நேரமாக மாற்றி அமைத்தது மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள தொழிலாளர்களை வர்க்கமாக இணைத்து எவ்வாறு போராட வேண்டும் என்பதை தொழிலாளி வர்க்கத்திற்கு கற்றுக் கொடுத்த நாள்!

பாட்டாளி வர்க்க ஆசான்கள்
உலகெங்கும் உள்ள தொழிலாளர்களை வர்க்கமாக இணைத்து எவ்வாறு போராட வேண்டும் என்பதை தொழிலாளி வர்க்கத்திற்கு கற்று கொடுத்த நாள்!

மே நாளில் காலை முதலே தாங்கள் இயங்கும் இணைப்பு சங்கங்களில் கொடியேற்றி மே நாள் தியாகிகளுக்கு வீர வணக்கத்தைச் செலுத்திவிட்டு அத்தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி அறிவிக்கப்படாத பேரணியாகப் புறப்பட்டு மேதினப் பேரணி துவங்கும் புதுச்சேரி, புதுசாரம், ஜீவா சதுக்கத்திற்கு பல முனைகளிலிருந்தும் தொழிலாளர்கள் ஒன்று கூடத் துவங்கினர்.

மே தின பேரணி - புதுச்சேரி
தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி அறிவிக்கப்படாத பேரணியாகப் புறப்பட்டு தொழிலாளர்கள் ஒன்று கூடத் துவங்கினர்.

மே நாள்  அந்தந்த காலத்தின் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்திக் கொண்டிருக்கிறது. 8 மணி நேர வேலை நேரம் என்பதை உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் அரசியல் கடமையாக தொழிலாளி வர்க்கம் உணர்ந்ததன் அடிப்படையில் தான் அக்கோரிக்கை உலகக் கோரிக்கையாக வலுப்பெற்றது. இன்று உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் நாட்டு அரசுகளின் கார்ப்பரேட் அடிமைத்தனத்திலிருந்து தம்மை மீட்டெடுப்பதற்கும், நொறுங்கி விழும் அரசுக் கட்டமைப்பை வீழ்த்தி தமக்கான அதிகார அமைப்புக்களை நிறுவவதற்குமான வரலாற்றுக் கடமையைக் கோருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதை உணர்த்தும் வகையில், மே தினம் தற்போது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதைப் பறை சாற்றும் முழக்கப் பதாகைகள் விண்ணை முட்ட எழத் துவங்கின. செஞ்சட்டை அணிந்த இளந்தோழர்கள் முதல் முதுபெரும் தோழர்கள் வரை தங்களது வர்க்க உணர்வால் ஒன்றி சாலையின் ஓரத்தில் நின்ற அழகு சமூக அக்கறைக்கு வயது வித்தியாசம் தடையல்ல என்பதற்கு கட்டியம் கூறுவதாக இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சரியாக காலை மணி 10.40-க்கு புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களுடன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களுடன் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் பறையிசையுடன், கம்பீரமாகத் துவங்கியது மே நாள் பேரணி.

மே தின பேரணி - புதுச்சேரி
“பாசிச மோடிக்கு மாற்று, மற்ற ஓட்டுக் கட்சிகள் அல்ல”

தோழர் தனது தலைமை உரையில், “8 மணி நேர வேலை நேரத்திற்கான கோரிக்கையை உலகப் பாட்டாளி வர்க்க ஒற்றுமையுடன் சாதித்துக் காட்டிய நாளை மற்ற சங்கங்கள் போல் கொண்டாட்ட நாளாக அல்லாமல், மே நாளின் அரசியல் கடமையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் போராட்ட நாளாக அறிவித்து ஆண்டு தோறும் நடத்தி வருகிறோம். இன்றைய சூழலில் 8 மணி நேர வேலை நேரம் மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கு காகிதத்தில் இருக்கும் உரிமைகளைக் கூட பறித்து வருகிறது கார்ப்பரேட் கைக்கூலி மோடி அரசு. ஆனால், பாசிச மோடிக்கு மாற்று, மற்ற ஓட்டுக் கட்சிகள் அல்ல. மக்கள் தாமே தமது அதிகாரத்தை நிறுவுவது ஒன்று தான் நம் வாழ்வைப் பாதுகாக்கும் ஒரே வழி. அப்பேற்பட்ட போராட்டத்திற்கு மேதினத் தியாகிகளின் வழியில் வர்க்கமாக ஒன்று சேர வேண்டியது அவசியம்” என்று விளக்கிப் பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பேரணி, விண்ணதிரும் முழக்கங்களுடனும், செங்கொடிகளுடனும், மேதின அரசியலை மக்களுக்கு அறிவிக்கும் பதாகைகளுடனும் புறப்பட்டது. வழிநெடுகிலும், இரு புறத்திலும் மக்கள் நின்று ஒழுங்குடனும், கட்டுப்பாட்டுடனும் நகரும் பேரணியை பார்த்தனர். மேநாளின் அரசியல் கடமையை உணர்த்தும் முழக்கங்கள் மக்களை ஈர்ப்பதாக அமைந்தது. பேரணி துவங்கியது முதல் முழக்கத்தின் வீச்சு சிறிதும் குறையாமல் பேரணி, சுதேசி மில் அருகில் உள்ள ஆர்ப்பாட்ட மேடைக்கு வந்தடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் நந்தா தலைமையில் நடந்தது. அவர் தனது தலைமையுரையில், “மேதினம் என்பது தொழிலாளர்களுக்கான தினம் மட்டுமல்ல; நாளை தொழிலாளிகளாக மாறப்போகும் இன்றைய மாணவர்களின் கடமையும் அதில் அடங்கி உள்ளது. அப்படிப்பட்ட மாணவர்களை தங்களது சமூகக் கடமையை மறக்கடிக்கப்பட்டவர்களாக திட்டமிட்டு பொறுப்பற்றவர்களாய் இந்த அரசு மாற்றி வருகிறது. இந்த விசச் சூழலில் சிக்காமல், மாணவர்கள் தம் மீது சுமத்தப்பட்ட சமூகக் கடமையை தொழிலாளர்களின் தோளோடு தோள் நின்று சாதிக்க வேண்டும்” என்பதை விளக்கிப் பேசினார்.

மே தின பேரணி - புதுச்சேரி
“விசச் சூழலில் சிக்காமல், மாணவர்கள் தம் மீது சுமத்தப்பட்ட சமூகக் கடமையை தொழிலாளர்களின் தோளோடு தோள் நின்று சாதிக்க வேண்டும்”

அடுத்து உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் திருவெண்ணைய்நல்லூர் வட்டார அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், “நம் நாட்டுக்குப் பிரதமராக உள்ளவர், நரேந்திர மோடி அல்ல! அது நரி தந்திர மோடி! பன்னாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்கு விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, தந்திரமான முறையில் கொடுப்பதற்காகக் கொண்டு வரப்படும் சட்டம் தான் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் எனும் பெயரில் உள்ள நிலப் பறிப்பு சட்டம். இந்தச் சட்டம் மட்டுமல்ல, நரி தந்திர மோடியின் அனைத்து செயல்களும் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமை சேவகம் செய்யும் செயல்களே! ” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

மே தின பேரணி - புதுச்சேரி
மேதினம் என்பது தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் தங்களது வாழ்வைத் தீர்மானிக்கும் அரசியலை வரித்துக் கொள்ள வேண்டிய நாள்.

சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தனது உரையில், “தொழிலாளர் நல சட்டத் திருத்தம், நிலப்பறிப்புச் சட்டத் திருத்தம் மட்டுமல்ல, தற்போது புதிதாக மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் வந்துள்ள சட்டமும், ஒட்டு மொத்த சிறு சிறு தனியார் போக்குவரத்தையும், கார்ப்பரேட் மயமாக்குவதன் சதி தான். இதனால், பேருந்து, லாரி, கார், ஆட்டோ போன்ற வாகனங்களை வைத்துள்ள உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவரின் வாழ்வையும் காவு கேட்கும் சட்டம் தான் இது.  அச்சட்டத்தின் சரத்துக்கள்  இவ்வளவு அபாயகரமாக இருந்தாலும், எந்த ஓட்டுக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பதற்குக் காரணம் அவர்கள் அனைவரும் கார்ப்பரேட்டுக்களுக்கு அடிமையாக மாறிவிட்டார்கள் என்பது தான்.

மே தின பேரணி - புதுச்சேரி
“எந்த ஓட்டுக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பதற்குக் காரணம் அவர்கள் அனைவரும் கார்ப்பரேட்டுக்களுக்கு அடிமையாக மாறிவிட்டார்கள் என்பது தான்”

இந்த அரசு தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. எனவேதான், இந்த ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்பும் மக்களுக்குத் எதிரானதாகவும், தேவையற்றதாகவும் நொறுங்கி விழும் நிலையில் உள்ளது. அதைத் தட்டி வீழ்த்திவிட்டு மக்களுக்கான அதிகாரத்தை வழங்கும் அமைப்புக்களை நிறுவி உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் தான் மேதினப் போராட்டம் அர்த்தமுள்ளதாக மாறும்” என்பதை விளக்கி தனது உரையை நிறைவு செய்தார்.

மே தின பேரணி - புதுச்சேரி
புரட்சிகரப் பாடல்கள்

ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே, புரட்சிகரப் பாடல்கள் கூடியிருந்த தோழர்களைத் தட்டி எழுப்புவதாக இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

may-day-puduchery-banners-2தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

தொடர்புக்கு:95977 89801.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க