Wednesday, September 27, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயாவின் மன உறுதிக்கு வெற்றி – முதுகு சொறியும் தினமணி

ஜெயாவின் மன உறுதிக்கு வெற்றி – முதுகு சொறியும் தினமணி

-

சொத்துத் திருட்டு வழக்கில் தீர்ப்பு வந்ததும் அ.தி.மு.க அடிமைகள் சாலைகளில் குத்தாட்டம் போட்டனர். ஊடக அடிமைகளோ தலையங்கங்களில் எழுத்தாட்டம் போட்டனர். அதில் தினமணியின் வைத்தி முதன்மையானவர். இன்றைய தலையங்கத்தின் (12-05-2015) இறுதியில் அவர் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை பாருங்கள்.

தினமணி வைத்தி தலையங்கம்
முதன்மை ஊடக அடிமை தினமணி வைத்தியின் எழுத்தாட்டம்

“இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவைக் குற்றவாளியாக்கித் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து 29-09-2014-ல் வெளியான “தினமணி’ தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததை இங்கே மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

“ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு. மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை” என்பதுதான் அது.

இப்போது அதில் இன்னொரு வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று அவர் சரித்திரம் படைக்கக் கூடும்!”

ஜெயாவை பாராட்டி தினுசு தினுசான வார்த்தைகளில் அபிசேஷகம் செய்து விளம்பரங்கள் வெளியிடுவது அ.தி.மு.க அமைச்சர்களின் உயிராதாரமான விசயம். அடுத்து ‘அம்மா’ முதல்வர் ஆகும் போது சிவப்பு விளக்கு பதவி கிடைக்குமா, துரத்துமா எனும் வலியை அவர்கள் போல எவரும் அனுபவிப்பதில்லை. இதன் பொருட்டு பலர் கோடம்பாக்கம் கவிராயர்களை வாடகைக்கு அமர்த்தி வார்த்தை அலங்காரங்களை உருவாக்கி அம்மா கண் காதுகளில் படுமாறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

ஆனால், அறிவில் மற்ற மக்களை விட அவாள்கள் ‘மேலானவர்கள்’ என்று ஆண்டவனும், வேதங்களும், ஸ்மிருதிகளும் அறிவித்திருப்பதால் ஜெயா துதியில் பார்ப்பனர்கள் அதை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. வைத்தி அதை அசால்ட்டாகவே நிரூபித்திருக்கிறார்.

தினமணி வைத்தி
அறிவில் மற்ற மக்களை விட அவாள்கள் ‘மேலானவர்கள்’ என்று எட்டு காலத்தில் நிரூபித்திருக்கும் வைத்தி.

தமிழகத்தில் ஒருவர் அதிக முறை முதல்வராகி சாதனை படைக்க வேண்டுமென்றால் அவர் அதிக முறை ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு பின்னர் நீதியை அதே ஊழலால் விலைக்கு வாங்கி மீண்டும் முதல்வரானால் ஐந்து முறை என்ன ஐம்பது முறை கூட முதல்வராக மாறலாம்.

அது கூட பரவாயில்லை, கருணாநிதியின் சாதனையை சமன் செய்யும் ஜெயா விரைவில் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆறாவது முறையும் முதல்வராகி சாதனை படைப்பார் இல்லை சரித்திரம் படைப்பார் என்று எழுத வேண்டுமென்றால் நெஞ்சை நக்கும் கலையில் வைத்தி அவர்கள் உலக சரித்திரமே படைத்து விட்டார் என்றே கூறலாம். இனி அறிவற்ற அ.தி.மு.க அமைச்சர்கள் இந்த வார்த்தைகளை சுட்டு விளம்பரங்களை வெள்ளமென ஓட விடுவர்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா சுட்டிக்காட்டியிருந்த அனைத்து அம்சங்களையும் நீதிபதி குமாரசாமி தனது 919 பக்க தீர்ப்பில் தெளிவாக, மறு ஆய்வு செய்து, விரிவாக அலசி, விவரங்களுடன் கூறியிருக்கிறாராம். முக்கியமாக இது ஏனோதானோ என்று எழுதப்பட்ட தீர்ப்பு அல்லவாம். தீர்ப்பு வந்து, குமாரசாமியின் 919 பக்கங்களை படித்து கூடவே குன்ஹாவின் ஆயிரத்து சொச்சம் பக்கங்களையும் படித்து ஆய்வு செய்து வைத்தி தீர்ப்பளித்திருக்கிறார் என்றால் அவரது மேதா விலாசம் லேசானதல்ல.

தினமணி வைத்தி
பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் வாதிட்டதை விட பல படிகள் மேல் சென்று வாதிடும் வைத்தியின் மாமாத்தானம் பளிச்சிடுகிறது. (தினமணியின் 2-ம் பக்கம்)

கட்டுமானச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றை நீதிபதி குமாரசாமி சரியாக மதிப்பீடு செய்திருக்கிறார் என்றும், மிச்சமிருக்கும் 8.12% கூடுதல் சொத்துக்களை பழைய நீதிமன்ற தீர்ப்புகளின் படி பிரச்சினை இல்லை என்று அவர் கண்டுபிடித்ததையும் வைத்து வாதாடுகிறார் வைத்தி. வளர்ப்பு மகன் திருமணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியாகட்டும், நல்லி சில்க்ஸ் பட்டுக்களாகட்டும், பந்தி பரிமாறிய தமிழக போலிசாகட்டும்…ஊரே காறித்துப்பிய ஒரு கொள்ளைக் கூட்ட திருமணத்தின் செலவு சரியாக மதிப்பிடப்படவில்லை என்றால் அது இன்னும் அதிகமாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி குறையுமா?

திருமணச் செலவுகளை சாதாரணமாக பெண் வீட்டாரே செய்வார் என்றெல்லாம் போங்காட்டம் ஆட முடியுமென்றால் எதற்கு சுற்றி வளைக்க வேண்டும்? மைசூர் ராஜ வம்சத்தில் தொடர்புடைய ஒரு உயரிய ஐயங்கார் குடும்பத்தில் பிறந்து, மேன்மக்கள் படிக்கும் சர்ச்பார்க் கான்வெண்டில் படித்த செல்வி ஜெயலலிதா அவர்கள் ஊழல் செய்திருக்கவே வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டால் முடிந்தது விசயம். ஏற்கனவே வெண்மணி படுகொலை வழக்கில் கொலைகார பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடுவை அப்படித்தான் விடுதலை செய்தார்கள்!

ஜெயா தரப்பு முன்வைத்த பல்வேறு சதி வாதங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்திருக்கிறார் குமாரசாமி. அதிலொன்று ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி வருமானம் பெற்றதான கணக்கு. ஒரு விவசாயி ஓராண்டில் ஒரு கோடி வருமானத்தை பெற வேண்டுமென்றால் அங்கே கஞ்சா மட்டுமே விளைவிக்கப்பட்டிருக்க வேண்டும். இதல்லாமல் அரிசி, கரும்பு, கத்திரிக்காய் எல்லாம் எங்கே ஒரு கோடி வருமானத்தை தர முடியும்?

அரசுத்தரப்பின் குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் தீர்ப்பு, அரசுத் தரப்பே இல்லை என்பதை வசதியாக பயன்படுத்தியிருக்கிறது. பவானி சிங்கின் நியமனம் தவறு, அவரது வாதங்களை கணக்கில் கொள்ள வேண்டாம், ஒரு நாளில் புதிய அரசு வழக்குரைஞர் வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் குமாரசாமிக்கு தோதாக எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்திருந்தது.

காரித்துப்பும் தினமணி வைத்தி
ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றெல்லாம் நம்பிக் கொண்டிருப்போரின் முகத்தில் இந்த தீர்ப்பு மட்டுமல்ல, தினமணி வைத்தியும் காறித்துப்புகிறார்கள்!

இதைத்தான் முந்தைய தலையங்கம் ஒன்றில் “பவானி சிங் நியமனம் தவறு என்றாலும் புதிய விசாரணை தேவையில்லை” என்று உச்சநீதிமன்றம் கூறியதை வைத்தி அவர்கள் கொண்டாடியிருப்பார். அவரது தொலை நோக்கு அவ்வளவு ஆழமானது.

எனினும் இது அரசியல் ரீதியான பழிவாங்கும் வழக்கு என்று எகிறும் வைத்தி, இனி இத்தகைய பழிவாங்குதல்களை தடுக்கும் பொருட்டு புதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பொங்குகிறார். பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கறிஞர்கள்  வாதிட்டதை விட பல படிகள் மேல் சென்று வாதிடுகிறாரே வைத்தி அங்குதான் அவரது மாமாத்தானம் பளிச்சிடுகிறது.

இந்த தீர்ப்பு அ.தி.மு.க தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும், அரசியல்சாரா சாமானியத் தமிழ் மக்களுக்கும் நிம்மதி பெருமூச்சையும் அளித்திருப்பதாக கூறுகிறார் வைத்தி. விட்டால் தமிழகத்தில் உள்ள ஆடு, மாடு, கொசு, குப்பைகள் கூட அம்மா விடுதலைக்காக ஏங்கி வந்தன என்பார் போலும்!

கட்சிக்காரர்களின் மகிழ்ச்சி தமது கொள்ளையையும், உள்ளூர் மாமூலையும் தொடர்வதற்கு அம்மாவின் கண்டிப்பான தலைமை வேண்டும் என்பதோடு தொடர்புடையது. மக்களின் நிம்மதி “ஒருவேளை ஜெயா குற்றவாளி என்று தீர்ப்பு வந்திருந்தால் மேற்கண்ட கூட்டம் நடத்தும் அட்டூழியங்கள் நடந்திருக்குமே” என்று நினைத்து பார்ப்பதோடு தொடர்புடையது.

ஜெயாவின் மன உறுதிக்கும், அவரது விடுதலைக்காக பிரார்த்தித்த தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி என்று வெட்கமே இல்லாமல் எழுதுகிறார் வைத்தி. கிட்டத்தட்ட இதே வார்த்தைகள்தான் ஜெயாவின் அறிக்கையிலும் இருக்கிறது. அதன்படி வைத்திதான் அம்மாவின் கோஸ்ட் எழுத்தாளரா தெரியவில்லை. அல்லது பாம்பின் தடம் பாம்பறியும் தத்துவத்தின் படியும் சரிதான்.

இது போக இன்றைய தினமணியில் அ.தி.மு.க அமைச்சர்கள், மேயர்கள் என்று பலர் ‘அம்மா’ விடுதலைக்கு ஆர்ப்பரித்து அளித்திருக்கும் விளம்பரங்கள் ஏராளம். அந்த வகையில் வைத்தியின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பவுன் பரிசு பெறுகிறது. எனினும் இது அந்த பத்து சதவீத பிரச்சினைக்குள் கூட வராது. எல்லாம் சட்டப்பூர்வமாகத்தான்.

சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பனருக்கு ஒரு நீதி என்பதே மனுவின் வருணாசிரம நீதி. மனுதர்மம் இப்போது இல்லை, நீதிமன்றம் நடுநிலைமையானது, ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றெல்லாம் நம்பிக் கொண்டிருப்போரின் முகத்தில் இந்த தீர்ப்பு மட்டுமல்ல, தினமணி வைத்தியும் காறித்துப்புகிறார்கள்!

 

 1. வினவு, கொஞ்சம் பாப்கார்ன் எடுத்துட்டு வா! கொரிச்சுண்டே பேசலாம்! குருவி படத்தயாரிப்பு செலவு எவ்வளவு இருக்கும்? அந்த பணத்துல நாலு கல்யாணம் பண்ண முடியாது?

  • அதிமுக தானே ஆட்சியில் இருக்கிறது, சொத்துக்களில் தவறு இருந்தால், உள்ளே தள்ளு. யார் தடுத்தது, வாயாலே வடை சுட வேண்டாம் .

   • மோடி மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கலாகவில்லை. அவர் உத்தமரா? ஜெயேந்திரன் மீது போப்பட்டது பொய் வழக்கா? 2001-06 காலகட்ட ஜெ ஆட்சியில் ஊழல் ஏதும் நடக்கவில்லையா? தினகரன் அலுவலகத்தை அதன் ஊழியர்களே பொழுது போகாமல் எரிதுக்கொண்டனரா?

 2. Super
  //சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பனருக்கு ஒரு நீதி என்பதே மனுவின் வருணாசிரம நீதி. மனுதர்மம் இப்போது இல்லை, நீதிமன்றம் நடுநிலைமையானது, ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றெல்லாம் நம்பிக் கொண்டிருப்போரின் முகத்தில் இந்த தீர்ப்பு மட்டுமல்ல, தினமணி வைத்தியும் காறித்துப்புகிறார்கள்!//
  When are we going to realize this.

 3. திருமணச் செலவுகளை சாதாரணமாக பெண் வீட்டாரே செய்வார் என்றெல்லாம் போங்காட்டம் ஆட முடியுமென்றால் எதற்கு சுற்றி வளைக்க வேண்டும்? மைசூர் ராஜ வம்சத்தில் தொடர்புடைய ….

  என்ன தொடர்பு -?

 4. கொள்ளைக்காரி தவரு செய்து விட்டார்.
  19 ஆண்டுக்கு முன் கொள்ளைக்காரிமீது வழக்கு தொடரப்பட்ட உடனே தினமணி வைத்தியை அழைத்து சட்டம் படிக்க வைத்திருந்தல் 5ஆண்டுகளில் தினமணி வைத்தி சட்டம் படிப்பை முடித்து நீதிமன்றத்தில் வழக்காடி கொள்ளைக்காரியையும் கூட்டலிகளையும் விடிவிதுருப்பார் அப்படி செய்துருந்தள் இந்த வழக்கு 5,6ஆண்டுகளில் முடிவுக்கு வந்துருக்கும்.

  கொள்ளைக்காரி முலைக்கு இது எட்டவில்லை.

  ஏக்கருக்கு 1கோடி வருமானம் வந்தை நம்புகிறார் ஏன்றல் குமாரசாமி நியாமான நீதிபதியகதான் இருப்பர் அம்மா சத்தியம நம்புகப்ப.

  ஏக்கருக்கு 1கோடி வருமானம் வர அளவுக்கு ஏன்ன பயிர் செய்தர்கள்
  சந்தன கட்டைய?
  செம்மரம?
  கஞ்சவ?

  கட்டுமானச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றை நீதிபதி குமாரசாமி சரியாக மதிப்பீடு செய்திருக்கிறார் என்றும், மிச்சமிருக்கும் 8.12% கூடுதல் சொத்துக்களை பழைய நீதிமன்ற தீர்ப்புகளின் படி பிரச்சினை இல்லை என்று அவர் கண்டுபிடித்ததையும் வைத்து வாதாடுகிறார் வைத்தி///
  ஓட்டுக்கு பணம் கொடுத்த செலவுகளை வைத்தி கணக்கில் எடுத்தர்ன 8.12% கூட கணக்கில் இருக்கதே அப்படியானால் அம்மா ஆட்டோக்கு கூட பணம் இல்லாமல் இருந்துருப்பார்களே.

  வைத்தி சார் அம்மாக்கு ஆட்டோ செலவுக்கு ஒரு 50ரூபாய் கொடுத்து விடுங்க சார்.

 5. எம்ஜிஆர் ——–க்கு தந்த சொத்துக்கள்னு வேலைய சுளுவா முடிச்சிருக்கலாம்.

 6. என்னய்யா மன உறுதி?
  பண உறுதி தான் வெற்றி பெற்றது.
  இது ஒரு கருப்பு நாள்.

  • கற்றது கையளவு ,

   எனவே நீதிமன்றம் என்ற அரசின் ஒரு கட்டமைப்பு சீழ் பிடித்து நாறுவதை ஏற்கின்றிர்கள் அல்லவா கற்றது ? ஆமாம் இதற்கு மாற்று என்ன ? வினவு கோரும் அரசின் கட்டமைப்புகளை அடித்து நொறுக்காமல் தீர்வு இல்லை என்பது உண்மை தானே ? வினவு தெளிவாக கூறும் ஆளும் அருகதையற்ற கட்டமைப்பை வீழ்த்துவோம், மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம் என்ற முழக்கம் மிக சரியானது தானே கற்றது கையளவு ?

   • ஆதவன்,

    நீதிமன்றம் என்ற அரசின் ஒரு கட்டமைப்பு தற்போது தள்ளாடியபடி இருப்பதை ஒத்து கொள்கிறேன். இதற்கு தீர்வு மக்களிடமே உள்ளது. ஆனால் மக்களோ ஊழல் செய்பவர்களுக்காக ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்கள், கோவிலுக்கு போகிறார்கள், விரதம் இருக்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்க விடயம். மக்களிடையே விழிப்புணர்ச்சி இல்லை என்பது தான் இதற்கு காரணம். இதற்கு தீர்வு என்பது மக்களிடம் இது பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது தான். தனி ஒரு மனிதனாகவோ, அல்லது ஒரு சிறு குழுவினராலோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஒட்டு மொத்த பொதுமக்களுக்கு ஜனநாயக சீர்குலைவை பற்றி தெளிவாக எடுத்துரைத்து ஊழல்வாதிகளையும் பாசிசவாதிகளையும் ஆதரிப்பதை நிறுத்த செய்ய வேண்டும். இதற்கு முதல் படி, மக்கள் நலம் பற்றி அக்கறை உள்ளவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். மக்கள் பேராதரவை பெற வேண்டும். முதல் படியாக ம.க.இ.க இதில் ஈடுபட்டு மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்க முயற்சிக்கலாம்.

    • கற்றது அவர்கள் நீதிமன்றம் என்ற அரசின் ஒரு கட்டமைப்பு தற்போது தள்ளாடியபடி இருப்பதை ஒத்து கொள்கின்றார். அதனுடன் மக்களோ ஊழல் செய்பவர்களுக்காக ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்கள், கோவிலுக்கு போகிறார்கள், விரதம் இருக்கிறார்கள் என்றும் தெளிவாக கூறுகின்றார். நன்றி.வாழ்த்துக்கள் கற்றது.

     ஆனாலும் சில நீங்கள் நம்பும் சில விடையங்கள் என்னுடைய மனதுக்குள் உறுத்துதலை ஏற்படுத்துகின்றன கற்றது. ______________________________________________________________

     • வினவு நீங்கள் தடை செய்த என் கருத்துகளால் நான் கூற வந்த கருத்துகள் சிதைக்கப்படுவதை கவனத்தில் கொண்டிர்களா ?

      கற்றது ஆதரிக்கும் மக்களை கொன்று குவிக்கும் இந்திய அரசின் இராணுவ கட்டமைப்பை , கற்றது குற்றம் சாட்டும் நீதி மன்ற கட்டமைப்பு உடன் ஒப்புமை செய்து ஊழலுக்கு ஆதரவாக சில மக்கள் ஆதரவு தெரிவிப்பது போன்று கற்றது கொலைகார இந்திய இராணுவத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை கேள்வி எழுப்பி இருந்தேன். அதை ஏன் தடை செய்திர்கள் வினவு ?

      • தமிழ், அருள், ஆதவன் அனைவருக்கும், கட்டுரை கூறும் பொருள் பற்றி மட்டும் விவாதிக்கவும். இராணுவம் குறித்து முந்தைய கட்டுரையில் போதுமான அளவு விவாதித்தாயிற்று. மீண்டும் இங்கே அதையே காப்பி செய்து போடாதீர்கள் என்று கோருகிறோம். தமிழ் அவர்களுக்கு……. ஏற்கனவே நடந்த பழைய வரலாற்றை நினைவு கூர்ந்து கவனமாக செயல்படவும். கட்டுரை தொடர்பற்ற கருத்துக்கள் மட்டறுக்கப்படும்.நன்றி

       • வினவின் கருத்துக்கு உடன்படுகிறேன்.

        ______________

        தற்போது நீதிமன்றத்தின் நீதியின் அவல நிலையை இப்போது பார்ப்போம்.
        கண்டிப்பாக பெரிய அளவில் பணமாற்றம் நடந்து தான் இருக்கும்.
        இந்த வழக்கின் நீதிபதி குமாரசாமி, மற்றும் இதற்கு முந்தைய வழக்கில் மேல்முறையீடு தேவை இல்லை என்று தீர்ப்பளித்த நீதிபதிகளின் குடும்பங்களின் சொத்து விவரங்களை தீவிரமாக ஆராய வேண்டும். தீர்ப்பில் உள்ள குறைகளை தெளிவாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

        இன்னும் சில மாதங்களுக்கு ஆட்சியாளர்கள் இடிப்பாரிலா ஏமரா மன்னன் போல ஆட்டம் போடுவார்கள். கொஞ்ச காலம் அனைத்தையும் பொறுமையாக நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் பதிவு செய்யலாம். இது ஒரு இடைநிலை பின்னடைவு தான். தவறு செய்த நீதிபதிகள் மக்கள் முன் தலைகுனிய வைக்க வேண்டும். ஆதாரங்கள் தேவை அதற்கு.

        இன்னும் சில மாதங்கள் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று கவனித்து பொதுமக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். இந்த பெண்மணிக்கா நாம் அலகு குத்தினோம், தீ மிதித்தோம் என்று அந்த மக்களே தலை குனிய வேண்டும்.

        பார்ப்போம். பொறுத்திருந்து பார்ப்போம். நடக்கும் வேடிக்கைகளை பார்ப்போம்.

       • என் மீது வன்மத்துடன் செயல்பட்டு தவறான கருத்துக்களை வெளியிடும் , அதே நேரத்தில் என் பதிலை தடை செய்யும் வினவை ,அதன் linode.com என்ற சர்வரிலேயே ஊடுருவி என் மீது வினவு வைத்து உள்ள தவறான கருத்துகளை இன்னும் 240 மணி நேரத்தில் நீக்கி காட்டுகின்றேன் . வினவால் முடியும் என்றால் தடுத்துக்கொள்ளட்டும்

        • திருவாளர் தமிழ் என்ற செந்தில் குமரன் பற்றிய விளக்கம்.

         வினவில் மூன்று ஆண்டுகளாக மறுமொழி விவாதங்களில் கலந்து கொண்டு வருபவர் செந்தில்குமரன். எதிர் கருத்து கொண்டிருப்பவர்களை அநாகரிகமாக விமரிசிக்கக் கூடாது எனும் பிரச்சினையில் சில முறை தடை செய்யப்பட்டிருக்கிறார். அதாவது கம்யூனிசத்திற்கு ஆதரவாக வாதிடுவதாக இவர் கூறிக் கொண்டாலும் அதில் சித்தாந்த ரீதியாகவோ இல்லை நடைமுறை ரீதியாகவோ குறைந்தபட்சம் அனுபவமோ இல்லை பக்குவமோ கொண்டவர் இல்லை. இது கூட பிரச்சினை இல்லை.

         ஏனெனில் கம்யூனிசம் தெரியாமல் கூட ஒருவர் கம்யூனிசத்திற்கு ஆதரவாக பேசலாம். அது அபத்தமாக இருந்தாலும் அநாகரிகமாக இருக்கக் கூடாது என்பதே எங்களது நிலை. இதை சுட்டிக் காட்டும் போது ஒவ்வொரு முறையும் திருவாளர் தமிழ் கடுஞ்சொற்கள் பேசி எல்லை மீறி நடந்து கொண்டார்.

         எனவே மறுமொழி உரையாடலில் ஜனநாயகமும், கண்ணியமும் நீடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, இவர் வெவ்வேறு பெயர்களில் வந்து மேற்கண்ட முக்தி நிலை அடையும் போது, இவரை தடை செய்திருக்கிறோம். மீண்டும் வேறு பெயரில் அவர் வரும்போது மாறியிருப்பார் என்று எதிர்பார்த்து, தெரிந்தே அனுமதிக்கிறோம். ஆனால்
         அவர் மாறவில்லை என்று தெரிகிறது.

         இராணுவம் குறித்த பதிவு ஒன்றில் பேசியதையே பேசியது சரியில்லை என்று அறிவித்து விட்டு உரையாடல் பெட்டி வசதியை நிறுத்தியிருந்தோம். அது அவருக்கு மட்டுமல்ல இந்தப் பிரச்சினையில் ஆதரித்தும் எதிர்த்தும் பேசிய அனைவருக்கும் பொருந்தும். ஆனல் திரு தமிழ் அவர்கள் மட்டும் வேறு பதிவுகளில் அதையே பேசும் பின்னூடங்களை போட்ட போது வெளியிடவில்லை. அதற்கான விளக்கத்தில் “மேற்கண்ட பழைய வரலாற்றை அறிந்து கொண்டு நடந்து
         கொள்ளுங்கள்” என்று அவருக்கு தெரிவித்திருந்தோம்.

         இதையடுத்து அவர் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டார். மேலே எழுதியபடி பேசப்பட்ட எமது விளக்கத்தை ஏற்காத அவர் வினவு பதிவுகளில் இருக்கும் எமது தோழமை அமைப்புகளின் எண்களை எடுத்து நள்ளிரவில் அழைத்து, தொந்தரவு செய்கிறோம் என்று தெரிந்தே பேசியிருக்கிறார். அனைவரிடமும் இதற்கு நியாயம் பேசும் சாக்கில் அவதூறுகளையும், அநாகரீக மொழிகளையும் காட்டி வருகிறார். தோழர்கள் இதை அனுமதிக்காமல் ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு துண்டித்து வருகின்றனர்.

         தோழர் காளியப்பனிடம் பேசும் போது திருவாளர் தமிழ் அவர்கள் வினவு தளத்தை “ஹேக் செய்து” அவர் குறித்த பின்னூட்டங்களை அழித்து விடப் போவதாக வேறு மிரட்டியுள்ளார். இது சட்டப்படி இணையத் திருட்டு, குற்றம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.

         ஆகவே அவரை மறுசீரமைக்கும் பொருட்டு மீண்டும் மறுமொழிகளில் அவரை தடை செய்கிறோம். இந்தக் காலத்தில் அவர் பொறுமையுடன் முற்போக்கு இலக்கியங்களை படிப்பது, உழைக்கும் மக்களுடம் பேசுவது, பழகுவது, அவர்களிடம் இருக்கும் பணிவு, கூட்டுத்துவம் போன்றவற்றை கற்பது செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

         இது தொடர்பாக அவர் இணையத்திலோ, எமது தோழர்களின் தொலைபேசிகளோ பேசினால் இந்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பேசுமாறு (விளக்க ஆரம்பித்தால் பிறகு நீங்கள் உரையாடலை நிறுத்தவே முடியாது. எனவே வினவு விளக்கத்தை பரிசீலித்து பாருங்கள் என்று சொல்லி விட்டு துண்டிப்பதே சாலச்சிறந்தது)
         கேட்டுக் கொள்கிறோம்.

         நன்றி
         தோழமையுடன்
         வினவு

         பி.குறிப்பு: திருவாளர் தமிழ் அவர்கள், தான் வேறு செந்தில் குமரன் வேறு
         டயானா வேறு இன்ன பிற பெயர்கள் வேறு என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். இது அவரது கருத்து என்பதால் – இனி அவரால் வெளியிடப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் – இங்கே பதிவு செய்கிறோம். மற்றபடி அவர்தான் இவர் என்பது அனைவரும் அறிந்த விசயம் என்பதால் அதை ஒரு பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

         திருவாளர் தமிழ் அவர்கள் பல கட்டுரைகளில் முனைப்புடன் பேசியிருக்கிறார். அவர் அறிந்த வரை நேர்மையாக வாதிட்டிருக்கிறார் என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம்.ஆனால் அவரது கருத்து மறுக்கப்படும் நிலை வரும் போது அவரது ஈகோ அவரது நேர்மையை காலி செய்து அநாகரிக நிலையை அடையச் செய்து விடுகிறது. அதுவே பிறகு அவரது நேர்மறையான புரிதல் மற்றும் விவாத முறையை அழித்து விடுகிறது. சாரத்தில் அவர் சிந்தனை ரீதியாக வளர முடியாத நிலையையும் அடைந்து விடுகிறார்.

         எதிரிகளை எதிர்த்து விறுவிறுப்பாக வேலை செய்யும் நேரத்தில் இத்தகைய தொந்தரவுகள் எமது – வாசகர்கள், மற்ற தோழர்களையும் உள்ளிட்டு – நேரத்தை விரயமாக்குகிறது என்பதையும் அறியத் தருகிறோம்.

         • நண்பர் தமிழ் அவர்களுக்கு வினவில் தடை விதித்தது வருத்தமளிக்கிறது. நல்ல மனிதர், கோபம் தலைக்கேறினால் அவரை அவராலேயே கட்டுபடுத்த முடிவதில்லை. மீண்டும் அவருடன் விவாதம் புரிய காத்திருக்கிறேன். இந்த இடைப்பட்ட காலம் அவரை மேலும் மெருகேற்றும் என்று நம்புகிறேன். எப்படியும் மீண்டும் அவர் வேறு ஒரு அவதாரத்தில் வருவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. காத்திருக்கிறேன்.

          • க.கை,

           என்னே உங்களின் பெருந்தன்மை !! வந்தனம்.

           //எப்படியும் மீண்டும் அவர் வேறு ஒரு அவதாரத்தில் வருவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. காத்திருக்கிறேன்.// நான் காத்திருக்கவில்லை !! 🙂

    • நன்றி நண்பர் கற்றது கையளவு. கற்றது கையளவு , பொதுமக்களுக்கு ஜனநாயக சீர்குலைவை பற்றி தெளிவாக எடுத்துரைத்து ஊழல்வாதிகளையும் பாசிசவாதிகளையும் ஆதரிப்பதை நிறுத்த செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறுவது மிக சரியாயினும் , அதே சமையத்தில் நீங்கள் ஆதரிக்கும் இதே அரசின் கொலைகார இராணுவ கட்டமைப்பை பற்றிய உங்கள் ஆதரவு மாறிவிட்டதா அல்லது இன்னும் கொலைகார இராணுவ கட்டமைப்பை ஆதரித்து கொண்டு தான் இருகின்றிர்களா ?நீதிமன்றம் தவிர்த்து வேறு எந்த எந்த அரசு கட்டுமானங்கள் எல்லாம் ஆளும் அருகதையற்ற நிலையில் சீழ் பிடித்து நாறுவதாக உணருகின்றிர்கள் ?

     #பாராளுமன்றம் ?

     #இராணுவம் ?

 7. தமிழகத்தில் ஒருவர் அதிக முறை முதல்வராகி சாதனை படைக்க வேண்டுமென்றால் அவர் அதிக முறை ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு பின்னர் நீதியை அதே ஊழலால் விலைக்கு வாங்கி மீண்டும் முதல்வரானால் ஐந்து முறை என்ன ஐம்பது முறை கூட முதல்வராக மாறலாம்.

 8. எல்லா புகழும் இறைவனுக்கே என்பார் ரகுமான் ! எல்லா பணமும் பார்பனனுடையதே என்று இயம்புவது மனு சாத்திரம்! அரசனிடம் ஆணையிட்டு பொருள் பெற பார்ப்பானுக்கு உரிமை உண்டு! ஸூத்திரன் சொத்தை சொல்லாமலேயே எடுத்துக்கொள்ள ஏகபோக உரிமை உண்டு! பச்சையப்பன் அறக்கட்டளை போல எல்லா பள்ளயங்ப்மோடியின் குஜராத் ஊழலை அம்பலப்படுத்திய அதே சி ஏ ஜி தான் ராஜா வழக்கில் ஊகத்தை பறக்கவிட்டார்! முன்னது பார்பன சார்பு ஊடகங்களால் அடக்கிவாசிக்க பட்டது ! பின்னது பார்பன அரசியலுக்காகவே ஊதி ஊதி விளம்பரப்படுத்தப்பட்டது! பார்பனநரிகளின் ஊளைசத்தத்தில் பகுத்தறிவை இழந்தனர் மக்கள் ! தற்போது குமாரசாமி தீர்ப்பிற்கு பிறகாவது மக்கள் உணருவார்களா?

  • பச்சையப்பன் அறக்கட்டளை போல எல்லா பள்ளயங்களும் அவாளுடையதே! அய் பி எல் சீனு போல, முத்திரைத்தாள் முகமதலி போல பலரை காப்பாற்றிய அம்மா உண்மையில் பாரத ரத்னா தான்! பாரத பிரதமர் ஆகாததுதான் குறை! யார் இந்திரன் ஆனாலும் இந்திரானி ஒருவர்தானாம்! அதுபோல லல்லு சில்லுகள் ஊழலில் சிக்கினாலும், இவரை சிக்கவைக்க முடியாது! இவர்தான் மகராணி ஆயிற்றே! இவர் வீட்டில் இருந்த தங்க ஒட்டியாணம் மைசூர் மகராஜா கொடுத்த அன்பளிப்பாம்! சசிகலா, வெங்கட்ராமன் மனைவியார், உடையார் வீட்டு திருமணநிகழ்ச்சி போட்டோவில் ஒரே மாதிரி ஒட்டியாணத்துடன் காணப்பட்டனரே! அவர்களுக்கும் மைசூர் மகராஜா ஏன் அன்பளிப்பு செய்தார் என்று தெரியவில்லை!

 9. உணர்ந்தால் நல்லது.
  உறங்குபவர்களை எழுப்பும் நேரம் வந்து விட்டது.

 10. 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே மிக்க செல்வந்த வணிகராகவும், தஞ்சாவூர் அரசு கருவூலராகவும் இருந்தவர்! பிள்ளை இல்லாத காரணத்தால், பல கோவில்களுக்கு திருப்பணிகள் செய்தது போக, ஏழை மாணவர்கள், பிராமனல்லாதோர், கல்விக்கும் செலவிட உயில் எழுதி வைத்தவர்! சிதம்பரம் கோவிலில் அப்போதே தேவ தாசி சதிர் நிகழ்ச்சிகளை ஒழித்தவர்! ஆனிதிருமஞ்சன வழிபாடு, மாணிக்கவாசகர் முக்தி விழாக்கள் இவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டனவாம்!

  அன்னார் பெயரில் அவர் பிறந்த ஊரான காஞ்சியிலும்,நேசித்த ஊரான சிதம்பரத்திலும் , வசித்த ஊரான சென்னையிலும் கல்வினிலயங்கள் ஏற்படுத்தப்பட்டன! தற்பொது அந்த அறக்கட்டளை தலைவராக பார்பனர் டி என் செஷனை அம்மா அரசு நியமித்துள்ளது! இது போல பல பிளையில்ல சொத்துக்கள் அறக்கட்டளை என்ற பெயரில் அவாள் ஆகிரமிப்பில்!

 11. இப்போது தான் இதை கேள்விப்படுகிறேன் அஜாதசத்ரு. அடுத்தவன் சொத்தை ஆட்டையை போடுவதற்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறதா?

  வேறு எந்தெந்த அறக்கட்டளைகளில் இப்படி பின்வாசல் வழி நுழைந்திருக்கிரர்களோ?

 12. பொதுவாக இந்து அறக்கட்டளைகள், பார்பன மடங்கள், வேத பாடசாலைகளை பின்பற்றி, கோவில்களில் பிராமண சம்ரட்சணத்திற்காகவும், விளக்கு போடவும், கோசாலை, அன்னதானம் செய்யவும் என்று, அரசர்களாலும், அவர்கள் குடும்பத்தினராலும் ஏற்படுத்தபட்டவை! வாழ்னாளில் எவ்வளவு பஞ்சமா பாதகங்கள் செய்திருந்தாலும் இவ்வகை தானங்களால் சுவர்க்கம் உறுதி செய்யப்படுவதாக அய்தீகம்! இந்து அரசர்கள் ஆட்சி முடிந்து போனதால், அரசு அதிகார பதவியிலுள்ளவர்களுக்கும்,நிலச்சுவாந்தாரர்களெளக்கும் பரிவட்டம் கட்டி, டெம்பொரரி அரசராக ஆவாகனம் செய்து, அவர்கள் மூலமாக பல சொத்துக்கள் பார்ப்பன பள்ளயங்களாக்கப்பட்டன! இருந்தாலும் ஒரு சில பிராமணரல்லோதோர், பச்சையப்பமுதலியார், அன்னாமலை செட்டியார், பிட்டி தியாகராச செட்டியார் போன்றோர், ஒரளவு தன்மானம் பெற்று பார்பனரல்லோதோரும் பயனடைய கல்வி அறக்கட்டளைகலள் ஏற்படுத்தினர்! தமிழ்னாட்டில் பக்தியை பரப்பும்நோக்கத்தில் நூற்றுக்கணக்கான சைவ மடங்கள் பார்பன சேவை செய்யும் தருணத்தில், திருச்சிநேஷனல் காலேஜ் டிரஸ்ட், துறையுர் பாப்பம்மாள் டிரஸ்ட், த்ற்போது பச்சையப்பன், செங்கல்வராயன் டிரஸ்டுகள் பார்பனரிடம் போய்விட்டன! மதுரை ஆதினம் முதலிய ஆதினங்கள், காஞ்சி மட அரசியல் வலைக்குள் சிக்குண்டன! இப்போது புரிகிறதா, இந்த தமிழ் தேசியம் பேசும் வேளாளர்கள் ஏன் பார்ப்பானை மிஞ்சிய பக்தர்களாய் இருக்கிரார்கள் என்று?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க