privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசிறையில் தோழர்கள் மீது தாக்குதல் - பு.மா.இ.மு கண்டனம்

சிறையில் தோழர்கள் மீது தாக்குதல் – பு.மா.இ.மு கண்டனம்

-

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

தமிழ்நாடு | 9445112675

                                                               கண்டன அறிக்கை                                               06.08.2015

___________________________________________________________________________

டாஸ்மாக்கை நொறுக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது சிறையிலும் கொலைவெறித்தாக்குதல்!

ஜெ அரசே! உன் அடக்கு முறைக்கு பணியமாட்டார்கள் மாணவர்கள்!

மாணவர்களே ! டாஸ்மாக்கை மூடுவோம் ! வகுப்பறையை புறக்கணிப்போம்!

வீதிக்கு வாருங்கள் !

டந்த ஆகஸ்டு 3-ம் தேதி டாஸ்மாக்கை எதிர்த்து எமது பு.மா.இமு தோழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் போராடினார்கள். அவர்கள் மீது போலீசார் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை தொலைக்காட்சிகள் மூலமாக நாடே பார்த்தது. மேலும், கைது செய்த மாணவ, மாணவிகளை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து காக்கிச்சட்டை போலீசாருடன் உளவுத்துறை போலீசாரும் இணைந்து இருப்பு பைப்புகளால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இதையெல்லாம் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தும்போது மாணவர்கள் நீதிபதியிடம் விரிவாக கூறியிருக்கிறார்கள். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி இனி இந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், புழல் சிறைக்கு கொண்டு சென்றதும் அதாவது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட பின்பு சிறைத்துறை போலீசார் மீண்டும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மாணவர்களை சிறை வளாகத்திற்குள் அழைத்துச் சென்ற போது, ராதாகிருஷ்ணன், இளவரசன், முத்துமணி, இஸ்ரேல் ஆகிய போலீசு குண்டர்கள் மாணவர்கள் போட்டிருந்த உடைகளை கழட்டி நிர்வாணமாக்க முயற்சித்துள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்தவுடன் உடையை கிழித்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ‘’அரசை எதிர்த்துப் போராடினால் நகத்தைப் பிடுங்கியும், உடல் உறுப்புகளில் ஊசியால் குத்தியும் சித்திரவதை செய்வோம்’’ என்று உளவியல் ரீதியான தாக்குதலையும் நடத்தியிருக்கின்றனர் சிறைத்துறை போலீசார். இந்த அடக்குமுறைகளை எதிர்த்து சிறைக்குள் மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்துகிறார்கள்.

இதேபோல் கோவை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட எமது தோழர்களையும் சிறைக்குள் வைத்து தாக்கியுள்ளனர். தோழர்களை மூன்று தனித்தனி சிறையில் அடைத்து அடக்குமுறையை ஏவியுள்ளனர். தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக எவ்வளவு போராட்டங்கள் நடந்தாலும் அவற்றை அடக்கிவிட்டு டாஸ்மாக் கடைகளை நடத்தாலாம் என்ற மனோபாவத்துடன் செயல்பட்டு வரும் ஜெயா அரசு டாஸ்மாக்குக்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்கள் மாணவர்கள் என்பதால்தான் சிறைத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டு இப்படியொரு கொலைவெறித்தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பாசிஸ்டுகளின் அடக்குமுறைகளுக்கு எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பினரோ, மாணவர்களோ ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் நாட்டையே உலுக்கிய மாணவர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கிய மாணவர்கள் இந்த ஜெயலலிதாவின் பாசிச அரசின் கொடூர அடக்குமுறைக்கு களத்தில் பதிலடி கொடுப்போம்!

மாணவர்களே!
டாஸ்மாக்கை மூடுவோம் !
வகுப்பறையை புறக்கணிப்போம்!
வீதிக்கு வாருங்கள் !

தோழமையுடன் த. கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு,தமிழநாடு.

jaya police 700 pix

chennai highcourt  demo 6

chennai highcourt  demo 5