privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசெங்குன்றம் அழிஞ்சிவாக்கத்தில் பு.ஜ.தொ.மு உதயம்

செங்குன்றம் அழிஞ்சிவாக்கத்தில் பு.ஜ.தொ.மு உதயம்

-

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் உதயமானது பு..தொ.மு வின் புதிய கிளை

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஹெரன்க்நெக்ஸ்ட் தொழிற்சங்க கிளை
“கும்மிடிபூண்டில ஒரு சங்கம் இருக்காங்கப்பா. முதலாளிகளின் அச்சுறுத்தலுக்கும் ஆசைவார்த்தைக்கும் அடிபணியாம உறுதியா போராடுறாங்க”

முதலாளிகளின் லாப வெறிக்கு துணையாக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ள அரசை கொண்ட (முதலாளிகளுக்கு ஆதரவாக கொடுத்த காசுக்கு மேலே கூவ தயாராக உள்ள அரசை கொண்ட) இந்த கால கட்டத்தில் முதலாளிகளின் கொடூர சுரண்டலுக்கும் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கவும் தங்களை தற்காத்துக்கொள்ளவும் தொழிலாளிகள் தொழிற்சங்கத்தை நோக்கி திரண்டு கொண்டிருக்கின்றனர். அதேபோல தான் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அழிஞ்சிவாக்கத்தில் உள்ள ஹெரன்க்நெக்ஸ்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ஆலையில் தொழிலாளிகளும் தங்கள் உரிமைக்காக சங்கம் வைக்க முடிவு செய்தனர்.

ஆலையை பற்றி
ஹெரன்க்நெக்ஸ்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற இந்த ஜெர்மன் நாட்டு ஆலையின் உற்பத்தி, பூமிக்கு அடியில் ஆழ்துளைகளை போட தேவையான இராட்சத திருகு இயந்திரங்கள் தயாரிப்பது. சென்னையில் தற்போது நடந்து வரும் மெட்ரோ இரயில் பாதை போடும் பணிக்கு பூமிக்கு அடியில் இடப்படும் ஆழ்துளைகளுக்கு இவ்வாலையின் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

தொழிலாளிகளுக்கு உள்ள பிரச்சினை

1. ஒரே ஆலையில் ஒரே மாதிரியான வேலை செய்யும் தொழிலாளிகளில் சிலருக்கு மட்டும் திறமை என்ற பேரில் ஊதிய உயர்வை கொடுத்து மற்றவர்களை ஏங்க விடுவது; பிளவை ஏற்படுத்துவது.

2. இராட்சத இயந்திரங்களில் வேலை செய்யும் இந்தத் தொழிலாளிகளுக்கு அடிக்கடி விபத்துக்களும் காயங்களும் ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் போது தொழிலாளிகளுக்கு உடனே சிகிச்சை அளிக்க முதலுதவி மையம் இல்லை.

3. இவ்வாலையில் உற்பத்தியாகும் இயந்திரங்கள் வேலையிடத்தில் பழுதாகும்போது அதை சரி செய்ய இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் தொழிலாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அப்படி அனுப்பி வைக்கப்படும் தொழிலாளிகளுக்கு பணியிடத்திலோ அல்லது செல்லும் வழியிலோ ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதை ஈடு செய்ய காப்பீடு வேண்டும் எனக் கோரி வரும் தொழிலாளிகள் கருத்தை கொஞ்சமும் காது கொடுத்து கேட்பதில்லை.

இந்த வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்ட சங்கம் வைப்பது தான் தீர்வு என முடிவெடுத்த தொழிலாளிகள் வெளியில் பல சங்கங்களை பற்றி விசாரித்துள்ளனர். சில சங்கங்களிடம் நேரில் சந்தித்து பேசியுள்ளனர் அப்போது ’12 பேருக்கெல்லாம் சங்கம் வைக்க முடியாது’,  “நாங்க சங்கம் வைத்தால் இதெல்லாம் கண்டிஷன்” என சிலர் பயமுறுத்தியுள்ளார். இறுதியில், “கும்மிடிபூண்டில ஒரு சங்கம் இருக்காங்கப்பா. முதலாளிகளின் அச்சுறுத்தலுக்கும் ஆசைவார்த்தைக்கும் அடிபணியாம உறுதியா போராடுறாங்க” என தகவல் கிடைக்க நம்மை அணுகினர்.

பொதுக்குழு கூட்டி சங்கம் என அறிவித்த அடுத்த நாளே முதலாளி இதுவரை இளித்து இளித்து பேசி ஏமாற்றிய முகமூடியை அகற்றி தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்தார். திருமணமாகி 40 நாளே ஆன சங்கச் செயலாளரை கேட்டிலேயே நிறுத்தி, “இனி வேலை கிடையாது வெளியே போ” என்றார். இதை எதிர்த்து உடனே உள்ளே வேலையை நிறுத்தி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்த தொழிலாளிகளை ஆசைவார்த்தை பேசியும் மிரட்டியும் போராட்டத்தை கைவிட வைக்க முயன்றார். தொழிலாளிகள் அன்று மாலை வரை உறுதியாக நின்றனர். இதனால் “பிரச்சினையை பேசி தீர்க்கலாம்” என ஏமாற்றி போராட்டத்தை கைவிடச் சொல்லி வற்புறுத்தியது நிர்வாகம். குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளிகள் என்பதால் சங்கமும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்து போராட்டத்திலிருந்து பின் பின்வாங்கி சட்டபூர்வ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் 24-04-2015 அன்று சங்க பலகை மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் தோழர் கே.எம்.விகந்தர் பெயற்பலகை திறந்து வைத்தார். சங்கத்தின் சிறப்புத் தலைவரும் பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலாளருமான தோழர். ம.சி. சுதேஷ்குமார் கொடியேற்றி உணர்வூட்டி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க