Friday, October 18, 2019
முகப்பு செய்தி பொறுக்கி சிம்பு - அனிருத்திற்கு செருப்பு மாலை - சாணி அடி !

பொறுக்கி சிம்பு – அனிருத்திற்கு செருப்பு மாலை – சாணி அடி !

-

செக்ஸ் பாடகன் சிம்புவிற்கு செருப்பு மாலை – சாணி அடி !

செக்ஸ் பாடகன் சிம்புவையும் பக்கவாத்தியம் அனிருத்தையும் கண்டிக்கும் வகையில், தி,நகர் மாசிலாமணி தெருவில் உள்ள சிம்பு வீட்டின் முன்பாக முற்றுகை ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணிக்கு பெண்கள் விடுதலை முன்னணி சார்பில், தோழர் விசாலாட்சி தலைமையில் நடைபெற்றது, அதில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

protest-against-simbu-aniruth-3

சிம்புவின் வீட்டிற்கு செல்வதற்கு நான்கு வழிகள் இருந்ததால் காவல் துறை நம்மிடம், “மேடம் எந்த இடத்தில் பண்ண போறீங்க, நாம ஒரு understand-ல் பண்ணலாம்.” என்று சரியான இடத்தை சொல்ல சொல்லி காலையில் இருந்தே தொந்தரவு பண்ண தொடங்கி விட்டார்கள்.

தோழர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து சென்று ஆர்ப்பாட்டம் செய்வது என்ற முடிவுடன் சென்ற போது காவல்துறை நமக்கு முன் பெரும்படையுடன் சிம்புவின் வீட்டை காவல் காக்க தொடங்கியிருந்தது.

முற்றுகையிடச் சென்ற தோழர்களை வீட்டிற்கு சற்று முன்னே தடுத்து நிறுத்தியது காவல்துறை. உடனே தோழர்கள் முழக்கம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிம்பு – அனிருத் படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்தும், மாட்டு சாணியை கரைத்து பாலிதீன் கவரில் அடைத்து அவர்களது புகைப்படங்களின் மீது ஊற்றியும் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது, சிறு குழந்தைகள் உள்பட அனைவரும் சாணி அடித்ததை பொறுக்க முடியாத காவல்துறை தோழர்களிடம் “மேடம் பேட்டி கொடுத்துவிட்டு சீக்கிரம் முடித்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சத் தொடங்கியது. 45 நிமிடங்கள் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தோழர் அமிர்தா பத்திரிக்கைகளுக்கும் – ஊடகங்களுக்கும் அளித்த பேட்டியில், “இந்த சமூத்தையே சீரழிக்கும் விதமாக இவர்கள் இசையமைத்து பாடியுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம், மேலும் மழை வெள்ளத்தில் தங்களுடைய வாழ்வையே இழந்து தமிழகம் நிற்கும் சமயத்தில் இப்படி ஒரு ஆபாசமான பாட்டை வெளியிடுவது இவர்களுடைய வக்கிரபுத்தியை காட்டுகிறது, மேலும் மூடு டாஸ்டாக்கை என்று பாடினால் நடு இரவில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யும் இந்த அரசு, பெண்களைப் கேவலப்படுத்தி பாடினால் பாதுகாக்கிறது. கலை – சினிமா என்பது சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும், மாறாக பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் படங்களையும் பாடல்களையும் வெளியிடும் யாராக இருந்தாலும் எங்களுடைய கடுமையான எதிர்ப்பையும் போராட்டத்தையும் தொடந்து செய்வோம்” என்று பேசி முடித்தார்.

ஆர்ப்பாட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த மக்களை ஒரு போலீஸ் அதிகாரி விரட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் “ஏன் சிம்பு என்ன பெரிய தேசிய பக்தி பாடலையா பாடிவிட்டார்? உங்க வீட்டு பெண்கள் அதை கேட்டுவிட்டு நிம்மதியாக தெருவில் நடந்து போக முடியுமா?” என்று ஒரு தோழர் சொன்னபோது அந்த காவல் அதிகாரி தலை குனிந்து கொண்டார்.

தகவல்,
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை – 98416 58457

 1. கல்லூரி மாணவர்கள் பெரும் திரளாக வந்து போராட்டம் பண்ணியிருந்தால் ஆபாச நாயகர்களுக்கு செருப்படி விழுந்தாற்போல் இருக்கும்.

 2. ஐயோ பாவம் சிம்பு — நானும் ஐயோ பாவம் தான், போயும் போயும் சிம்புவுக்கு ஆதரவு தெரிவிக்கற நிலைமை. தம்பி சிம்பு அப்படி என்ன தப்பா சொல்லிட்டாருன்னு புரியல்ல? எண்டா பசங்களா லவ்வு லவ்வுன்னு திருஞ்சிட்டு, அப்புறம் லவ் ஃபெயில்யுருன்னு அலையிறீங்க, ஒனக்குன்னு ஒருத்தி வருவாடா, அவளோட மகிழ்ச்சியா வாழுங்கடா — அப்படித்தானே பாடியிருக்காரு? நல்ல அறிவுரைத்தானே இது? அந்த பாட்டில ஒரு கெட்டவார்த்தை இருக்கு, ஆமா, ஆனா, உங்களுக்கெல்லாம் பிடிக்காதுன்னுதான் அதை பீப் பண்ணிட்டாரே, அப்பொறம் என்ன? எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது சிம்பு கிடைச்சாரு உங்களக்கு ….. திட்டி தீர்த்துக்கொள்ளுங்கள் …. உங்கள் கோபம் சிம்பு போன்றவர்கள் மட்டும்தான் பலிக்கும்….

 3. நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்……இத்தனை வருடங்களாக ஆபாச இரட்டை அர்த்த வசனங்கள் பாடல்கள் உங்கள் மனதை உறுத்தாத காரணம் என்ன?

  எங்கே இந்த நிமிடம் முதல் அனைத்தையும் மாற்றிக் காட்டிவிட்டு அப்புறம் இவற்றைச் செய்யுங்கள் பார்க்கலாம்?

  • Comrade Mano, You have said it rightly. haven’t any one witnessed village karahattam, kuravan kuraththi program? Entire village is present, particularly in Madurai, Thajavur,and pudukottai. These program are so called cultural uplifting and displaying traditional value events. Children from the age of 2 to grant man of 90’s are present, both men and women. Some times the chief guest is a female.

   The vulgar language used and the sensual dance performed are too ugly. But I have never seen or heard any organization came forward to condemn this kind of program or stop. I do not justify these two individuals. But I am sadden with the open Hippocratic display of my people.

   Anpudan Divya

 4. அவன் லெவலுக்கு அவன் பொருக்கிதனம் பன்றான் உன் லெவலுக்கு நீயும் பொருக்கிதனம் பன்ற வேற விதத்துல அவ்வளவுதான், நக்மா கிறிஸ்தவ மதத்துல செர்ந்தப்ப எவ்வளவு அசிங்கமா பேச முடியுமோ அவ்வளவு அசிங்கமா பேசுன அப்புறம் என்ன மயித்துக்கு பெண் உரிமை அப்பிடினு முழங்குற உன்ன செருப்பால அடிக்க ஆள் இல்லனு நினைச்சுகிட்டியாடா ஈர வெங்காயம் …

  • ஜோசப் சுட்டிக்காட்டும் வினவு-நக்மா ஆபாசம் இது தான் போலிருக்கின்றது ….

   1.அன்னை தெரசா போன்ற சமூக ஊழியர்களையும், கலைக்டர் பக்கிள் துரை போன்ற அரசு நிர்வாகிகளையும் கண்ட இந்திய மக்கள், கிறிஸ்து மார்க்கவாதிகளின் “உன்னைப் போல் பிறனையும் நேசி” என்ற இயேசு மார்க்கத்தை விரும்பித்தழுவினார்கள். ஆனால், இன்றைய நிலையில் கிறிஸ்துமார்க்கம் என்பது கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கும் மிகப் பெரிய இழிவுத் தொழிலாகிவிட்டது!

   2.ஏழைகளுக்கு இரங்கச் சொன்ன இயேசு வழியை விட்டுவிட்டு, ஏழை எளியோரை ஏமாற்றிக் காணிக்கை பெற்று, கோடிஸ்வரன்களாகும் ‘திருட்டுத் தினகரன்’ வழியில் போய்விட்டார்கள், கிறிஸ்துவ ஊழியக்காரர்கள் என்று பெயர் சொல்லிக் கொள்கிறவர்கள்.

   3.கிறிஸ்துவ ஊழியம் என்பதே இந்திய ஏழைப் பாமரக் கிறிஸ்துவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதும், கூடும் கூட்டத்தைப் படம் எடுத்து மேல்நாட்டுப் பணக்காரக் கிறிஸ்துவர்களிடம் காட்டிப் பணக் கொள்ளை நடத்துவதும்தான் என்றாகிவிட்டது!

   4.எல்லோரையும் நோய்களிலிருந்து விடுவித்து ‘அற்புத சுகம்’ கொடுப்பதாக ஏமாற்றி – மோசடி செய்து, கோடி கோடியாகச் சம்பாதித்துக் குடும்பத்தாரை வாழவைத்தத் திருட்டுத் தினகரன், பல நோய்கள் பீடிக்கப்பட்டு சாவுநாள் வருவதற்கு முன்பே ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற கிறிஸ்துவ வாக்கியத்துக்கு ஏற்ப செத்துப் போனான்!

   5.இயேசு பிரசிங்கித்தார் என்றால் அவர் இந்தத் திருடர்களைப்போல் காணிக்கை வாங்கி, குடும்ப டிரஸ்ட்டுகள் அமைத்து கோடிஸ்வரனாகவில்லை என்பதை கிறிஸ்துவர்கள் சிந்திப்பார்களாக!

   Ref:

   https://www.vinavu.com/2009/10/06/nagma-hallelujah/

   இப்பொது நாம் உணர்ந்து இருக்கலாமே என் ஜோசப் ஆதரங்களை ஆபாசம் என்று வசைபாடுகின்றார் என்று.!

  • Mr Band James Band தமிழனுக்கு எதிரா எவன் சதி செய்கின்றான் என்று கனடாவில் இருந்து வந்து கண்டுபிடித்து சொல்லுங்க பாஸ். விசாலா , சரத்தா, நாசரா, சிவகார்திகேயனா ? யாரு பாஸ் அந்த தமிழ் ரத்தம் ஓடாத சதிகாரன்?

  • Mr Band Alice வியாசன் உடை ரீதியாக கூட தமிழ் முஸ்லிம்கள் அரபுமயமாகபடுகின்றார்கள் என்று அதிகமாக பீல் பண்ணிய உங்கள் Tamil மனது தானா

   ” RAP பாடல்களில் பாலியலை தூண்டும் வரிகளும், பச்சை பச்சையாக உடலுறைவையும், பாலியல் உறுப்புக்களையும், என்பவற்றை விவரிக்கும் பாடல் வரிகளும் இல்லாத பாடல்களே இல்லையென்றே கூறலாம். இந்த விடயத்தில் RAP பாடகிகளும், ஆண் பாடகர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல. சிம்புவும், அமெரிக்க RAP பாடல்களையும், அந்த பாடல்களுக்கும், பாடகர்களுக்குமுள்ள மவுசையும் பார்த்து, அப்படியான பாடலைத் தமிழில் இயற்றினால் என்னவென்று நினைத்து அந்தப் பாடலை இயற்றியிருக்கலாம்.”

   என்று உங்கள் கட்டுரைyil கூறி சிம்புவுக்கு aapaasa ஆதரவு தருகின்றது. என்ன கொடுமை வியாசன் இது? இதற்கு பெயர் தானே பச்சை-green தமிழனை சிம்புவை அமெரிக்க மயம் ஆக்குவது என்பது? இது சரியா?

 5. அய்யா இனியன் நீங்க சொல்லுறது எல்லாம் உண்மைதான் நக்மாவின் சினிமா பிரபலத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்துறா மாறி மோகன் சி எஸ் ம் பயன்படுத்தி காசு சம்பாதிச்சாறு ஏத்துகிறேன் இதுல எந்த தயக்கமும் இல்லை ஆன ________நெருக்கமா இருந்தாக அப்பிடினு பக்கத்துல இருந்து விளக்கு பிடிச்சவன் மாறி எழுதினான் பாத்த்யா அதத்தான் பொருக்கிதனம் என் கிறேன் மத்த ப்டி சிம்புகோ மோகன் சிஸ் கோ வக்காளத்து வாங்க வில்லை பிரியுதா…

  • அடப்பாவிகளா உங்க கட்டுரைல உள்ள வாசகத்ததான நானும் சொன்னேன் எனக்கு கோடு போட்டாச்சு உனக்கு யாரு கோடு போடுறது ….

  • Joseph , you and Vinavu can only know what have been written by Joseph in the blank. With out knowing this no one can answer you. வினவு கட்டுரையில் இருந்து அதில் உள்ள ஆபாசத்தை கோடிட்டு காட்டுவதில் உமக்கு என்ன பிரச்சனை? வினவு கட்டுரையில் ஆபாசம் இருந்தால் காட்டலாமே!

   // ஆன ________நெருக்கமா இருந்தாக அப்பிடினு பக்கத்துல இருந்து விளக்கு பிடிச்சவன் மாறி எழுதினான் பாத்த்யா அதத்தான் பொருக்கிதனம் என் கிறேன் //

   • //அத்தகைய நடிகை நக்மாவோடுதான் “இயேசு ஊழியம்” செய்வதாகச் சொல்லி, கிறிஸ்துவர்களை ஏமாற்றும் மோகன் சி.லாசரஸ் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் “ஊழியம்” செய்திருக்கிறார்கள்!

    நட்சத்திர ஓட்டல் நெருக்கம் காரணமாக, நாலுமாவடி கிராமத்துக்கும் நக்மாவை அழைத்துப் போய் “அல்லேலூயா” பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.//

    இதையெல்லாம் அசிங்கம் இல்லை என் கிறீர்களா நக்மாவையும் ஓட்டல் மட்டுமே கோடு போட்டு அழிச்சிருக்கான் இது நாத்திகம் ராமசாமி எழுதினது நாங்க சாத்வீகம் கந்தசாமிகள் எங்களுக்கெளம் அதுக்கெளம் தொடர்பு இல்லனு கூட புளுகலாம் யாரு கேக்க போறா அனா எனக்கு ஏன்டா கோடு போட்டிக கேனப்பயலுகளா அப்பிடின்றதுதான் என் கேள்வி பிரியுதா இனியன் …

    • கட்டுரையை படித்த உனக்கு இதெல்லம் தெரியல அப்பிடினு நடிக்காத எந்த அளவுக்கு இசுலாமுக்கு செம்பு தூக்கனுமோ தூக்குங்க ஆனால் உன்மை ஒரு போதும் உறங்காது எமாளி பெண்களுக்காக வருந்துகிறேன் அய்யோ ஒரு குழந்தையை வைத்துக்கொண்டி ஆர்பாட்டம் செய்கிறார் ஒரு சகோதரி அம்மா இனியும் ஏமாளி ஆகாதே என்று உரைப்பதை தவிர ஒன்றும் சொல்ல எனக்கு புரியவில்லை…

 6. P.Joseph , பதறிய காரியம் சிதறியே போகும், ஆத்திரகாரருக்கு புத்தி மட்டு என்பதனை நிருபிகின்றிர்கள். மீண்டும் ஒருமுறை கட்டுரையை படியுங்க அப்ப தான் உங்கள் தவறான பார்வை சரிபடும் :

  இந்த நோயாளி லாசரஸ்தான் மற்றவர்களுக்கு சுகம் அளிப்பதாகச் சொல்லி, காசடித்துக் கொண்டிருக்கிறார்! பாமரக் கிறிஸ்துவர்களும் கோடி கோடியாகக் காணிக்கை தந்து கொண்டிருக்கிறார்கள்! மோகன் உல்லாச வாழக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  கூடும் கூட்டத்தை வீடியோ படம் எடுத்து, வெளிநாடுகளில் கொண்டு போய் கிறிஸ்துமதப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி, அங்கிருந்தும் பெரும் தொகையைப் பெற்றுக் கொள்கிறார், மோகன் சி.லாசரஸ்!

  “”””””இவர் அண்மையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெரும் பணக்காரர்களுக்கென்று, அற்புத சுகமளிக்கும் ஜெபக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்கு ஆபாசச் சினிமா நடிகை நக்மா என்பவரையும் அழைத்து வந்திருந்தார்.”””””””

  நடிகை நக்மா ஆபாசத்தொழில் செய்வதில் புகழ் பெற்றவர். அடிக்கடி அரபு நாடுகளுக்குப்போய் பணம் சம்பாதித்து வருவார். இந்தியாவில் குற்றம் செய்து விட்டு, அரபுநாடுகளில் பதுங்கிக்கொண்டிருக்கும் பலரோடு, நடிகை நக்மா தொடர்புள்ளவர் என்றெல்லாம் கூடப் பத்திரிகைச் செய்திகள் வந்ததுண்டு!

  அத்தகைய நடிகை நக்மாவோடுதான் “இயேசு ஊழியம்” செய்வதாகச் சொல்லி, கிறிஸ்துவர்களை ஏமாற்றும் மோகன் சி.லாசரஸ் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் “ஊழியம்” செய்திருக்கிறார்கள்!

  “”””நட்சத்திர ஓட்டல் நெருக்கம் காரணமாக, நாலுமாவடி கிராமத்துக்கும் நக்மாவை அழைத்துப் போய் “அல்லேலூயா” பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.””””

  சினிமா நடிகைகளை நேரில் காண்பதில் பாமர ஆசை கொண்ட கிராமத்து மக்கள், ஆயிரக்கணக்கில் கூடி, நடிகை நக்மாவின் ‘அல்லேலூயா’ ஆட்டத்தைக் கண்டு களித்திருக்கிறார்கள்.

  • அய்யா இனியன் பிரியுதா இல்ல பிரியாத மாறி நடிக்கிறீங்களா பெண் உரிமைனா என்னனு தெரியாதா ________ நக்மா இருக்கட்டும் தான் திருந்தி யேசுவை போதிக்கிறேன் என் கிறார் மோகன் சி எல் ___________வினவு தளத்தினரோ இல்ல நாத்தம் ராமசாம்யோ பார்த்தார்களா இல்ல விளக்கு பிடித்தார்களா எதுவுமே இல்லாம ஒரு பெண்ணை அசிங்கமாக பேசும் போது சிம்புவை கண்டிக்க மட்டும் தார்மீக உரிமை உங்களுக்கு எங்கிறுந்து வருகிறது சிவப்பு துண்ட போட்டுக்கிட்டா யார வேனா அசிங்கமா பேசலாமா
   /சினிமா நடிகைகளை நேரில் காண்பதில் பாமர ஆசை கொண்ட கிராமத்து மக்கள், ஆயிரக்கணக்கில் கூடி, நடிகை நக்மாவின் ‘அல்லேலூயா’ ஆட்டத்தைக் கண்டு களித்திருக்கிறார்கள்./நக்மா நாலுமாவடில ஆட்டம் போட்டத கண்டதாக அப்பாவி உழைக்கும் கிறிஸ்தவ மக்களையும் ஆபாச விரும்பிக்ள் என்பது போல கொச்சைப்படுதும் உரிமை வினவுக்கு யார் குடுத்தது ….

   • முதலில் இவருக்கு பரிசோதனை தேவை படுகின்றது. சிம்புவின் ஆபாசத்தை ஆதரிக்கும் இவர் , நாத்திகம் ராமசாமியிடம் அவரின் கட்டுரையில் இல்லாத ஆபாசத்தை எதிர்பதாக நாடகம் போடுகிறார். மோகன் சி.லாசரஸ்சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெரும் பணக்காரர்களுக்கென்று, அற்புத சுகமளிக்கும் ஜெபக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்கு ஆபாசச் சினிமா நடிகை நக்மா என்பவரையும் அழைத்து வந்திருந்தார். அதன் தொடர்சியாக நட்சத்திர ஓட்டல் நெருக்கம் காரணமாக, நாலுமாவடி கிராமத்துக்கும் நக்மாவை அழைத்துப் போய் “அல்லேலூயா” பிரச்சாரம் செய்திருக்கிறார்கள் என்று எழுதியுள்ள நாத்திகம் ராமசாமியின் எழுத்து ஓட்டத்தை புரிந்து கொள்ள இயலாத அளவுக்கு இவருக்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் இந்த வாக்கியத்தில் என்ன தவறு என்ன ஆபாசம் காண்கின்றார் இவர்? “சினிமா நடிகைகளை நேரில் காண்பதில் பாமர ஆசை கொண்ட கிராமத்து மக்கள், ஆயிரக்கணக்கில் கூடி, நடிகை நக்மாவின் ‘அல்லேலூயா’ ஆட்டத்தைக் கண்டு களித்திருக்கிறார்கள்.”

    சினிமா நடிகைகள் என்றால் கூடும் கூட்டத்தை பற்றி இவருக்கு தெரியாதா என்ன? நயன்தாராவின் சேலம் திறப்பு விழாவுக்கு கூடிய கூட்டத்தை விமர்சனம் செய்தால் கூட இவர் போன்றவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். …. தக்காளி , வெங்காயம்… வெல்லபூண்டு …

    • நாத்தம் ராமசாமி எழுதுனா அது எழுத்து ஓட்டமாம் சரி என்ன பன்றது நான் கிறிஸ்தவ மதத்த விரும்புவதும் சர்சுகு போவதும் இல்லை ஆனால் பெரும்பாலும் கிறிஸ்தவ மத போதனை மேடைகளி சிறு குழந்தைகளை மட்டுமே ஆடும் படி செய்வார்கள் பெரிய் மற்றும் வயதுக்கு வந்த பெண்களை ஆடும் படி செய்து ரசிப்பதும் இல்லை நிச்சயமாக நக்மா மேடையில் ஆடி இருக்க மாட்டார் ஆடி இருந்தால் கண்டிப்பாக பெரும்பான்மை கிறிஸ்தவ மக்கள் அத ஆதரித்து இருக்க மாட்டார்கள் /தக்காளி , வெங்காயம்… வெல்லபூண்டு …/இதெல்லாம் விக்கும் வியாபாரியா தாங்கள் சொல்லவே இல்லை

     • தக்காளி வியாபாரம் செய்ய கத்துண்டது உங்க கிட்டதான் ஜோசப். வேண்டுமென்றால் உங்க கோபமான old பின்னுட்டத்தை படித்து பாருங்க. அதுல நன்னாவே தக்காளி வியாபாரம் செய்து இருப்பிங்க. அப்புறம் நக்மா பிரசங்கம் மட்டும் தான் செய்தார்களா, இல்ல பாட்டு மட்டும் பாடினாங்களா இல்ல பாடிகிட்டே ஆடினாங்க்லா என்று தெரிந்து கொள்ள you-tube ல் போய் பாருங்க. தெரிந்து கொள்ளலாம். அப்புறமா வந்து பேசுங்க. இன்னும் ஏதாவது ஆபாசம் நாத்திகம் ராமசாமிகிட்ட மிச்சம் இருக்கா ? இருந்தா சொல்லுங்க அம்பி . உங்க மன துர் நாத்தத்தை முதலில் நீக்கிட்டு வந்து அடுத்தவரை பாத்து நாத்தமுனு எழுதுங்க .

   • வினவு உன் செயல்களை எடுத்துக்காட்ட போய் நான் யேதோ வக்கிர புத்திக்காரன் என்பது போல எனது கருத்துகளில் கோடு போட்டு மறைக்கும் உங்களது செயல் ஈனத்தனமானது நீ உன் கட்டுரையில் வெளிடிட்டுருக்கும் நெருக்கம் என்ற சொல்லை தவிர்த்து வேறு ஏதேனும் அசிங்கமான சொல்லை பயண்படுத்தி இருந்தால் எனக்கு கோடு போட்டது சரி ஆனால் என்னை வேண்டுமென்றே ஆபாச எழுத்தெள எழுதிய ஒருவனாக வினவு வாசகர்கள அறிந்து கொள்ள வேண்டு என்று கோடு போட்டு இருந்தால் உன்னை விட வக்கிரம் பிடித்தவன் அல்ல சிம்பு என்று மட்டும் எனக்கு தோன்றுகிறது அப்பா ஆள விடுங்கடா சாமி…

 7. தந்தி டீவில சிம்புவின் தாயர் பேட்டி கொடுத்துறிக்கிறார் .இதுல ஒரு அசிங்கமான் பாட்ட சிம்பு அவர் வீட்டு கக்கூஸ்ல பாடி அத கூட அவர் ஆதரபூர்வமாக வெளியிடாத பச்சத்தில் அதுக்கு இத்தன எதிர்ப்பு தேவைதான அடுத்தவன் வீட்டு கக்கூஸ எட்டி பாக்குறதே தப்பு அப்புறம் நாறுதுனு அவனே அடிக்க போன என்ன அர்த்தமுனு தெரியல ஒரு வேளை பெண்கள் விடுதலை மின்னனி பேப்பர்ல வரனுமுனு ஆசைப்பட்டு இருப்பாகளோ தெரியல மலிவான விளம்பரதுக்கு கம்மீனிஸ்டுகாரனும் அலைவனுக்ளோ என்னவோ….

  • அடுத்தவன் வீட்டை யாரும் எட்டிபார்க்கவில்லை அவன் வீட்டு கழிவை இன்டர்நெட் மூலம் அவன் வெளியிட்டு விட்டு எதுக்கு இந்த நடிப்பு? சிம்புவின் அம்மா வேண்டுமானால் சிம்புவின் ஆபாச பாட்டுக்கு சிம்புவை உச்சி குளிரலாம். ஆனால் சிம்புவை ஆதரிக்கும் அவனின் ஆபாசத்தை ஆதரிக்கும் விவாத நண்பர்கள் இதுபோன்று ஒருவேளை தன் வீட்டில் ஆபாசமாக பாடினால் அவர்களின் அம்மாக்கள் செருப்படி தான் கொடுப்பார்கள்.

   • உன்ன யாரு இன்டெர்னெட்-ல இந்த பாட்ட கேக்கச் சொன்னது? உனக்குப் பிடிகலைன்னா ஓரமாப்போ!

 8. As much as I support your article on Nagma, I like to point out that such songs are common in many cultures/eras/places etc. If you take Tamil literature, it is there. In English songs, it is there. What is there in the song is nothing illegal. Why people are making a mountain out of mole hill? Thanks for diverting people from flood or other crucial issues. You too played like a puppet of government and corporate media.

 9. அய்யா , ஜோசப் அவர்களே ,

  இலை மறை காயெல்லாம் போயி நேரடியாவே ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி பாடுவதற்கு ஒரு கவிஞன் தேவையா?. எத்தனையோ பேரு rape பண்ணுறான் இவன் பண்ணுன மாட்டும் ஏன் கொதிகிறீங்க என்பது போல உள்ளது உங்கள் பதில் . இந்த பாடலை வைத்து நாளை உங்கள் வீடு பெண்களை கிண்டல் பண்ணினால் பொருது கொண்டு போகும் மன நிலை உங்களுக்கு இருந்தால் உங்கள் வழியை பின்பற்றி நாங்களும் வரவேண்டியது தான் சரி…….

 10. ககூஸ்ல இருந்து கூட பாட முடியாத வார்த்தைகளை போட்டுதான் கலைத்துறையில் இருந்து கொண்டு பாடியிருகிறார்கள். வெகு ஜன துறையில் இருந்து கொண்டு இது போன்று செய்வதுதான் இங்கே பிரச்சினையே… ஆண்மிகதுறையும், அரசியல்துறையும் , கலைத்துறையும் அத்தகைய வெகு ஜன துறை என்பதை உங்களை போன்றவர்கள் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்… இது அப்பனும் சுப்பனும் செய்த காரியம் அல்ல . 6 கோடி மக்களையும் அலுக்காமல் சென்று சேரும் கலைத்துறையில் இருந்து கொண்டு செய்து விட்டு இப்போது கதை அளக்கிறார்கள் கக்கூசில் இருந்து பாடினேன் காடியில் இருந்து பாடினேன் என்று.
  கருமத்திலும் கருமம் இந்த கருமத்துக்கு வக்காலத்து வாங்குவது தான்.

 11. //இந்த பாடலை வைத்து நாளை உங்கள் வீடு பெண்களை கிண்டல் பண்ணினால் பொருது கொண்டு போகும் மன நிலை உங்களுக்கு இருந்தால் உங்கள் வழியை பின்பற்றி நாங்களும் வரவேண்டியது தான் சரி…….
  //எங்க வூட்டு பெண்களை மட்டுமல்ல யாரு வீட்டு பெண்களையும் எளிதாக கேலி செய்து பாட ஏராளமான பாடல்கள் சினிமாவில் முன்பே வந்து விட்டன சிம்பு பச்சயா பேசுன வார்த்தய் சொன்னா மட்டும்தான் கோவம் உங்களுக்கு வருமா ஆத்தா ஆத்தோரமா வறியா ,வக்க படப்பு பக்கம் ஒதுங்கலாமுனு பாடுனா கோவம் வராதா அவுங்க அம்மா கல்யாணம் ஆகத பையன் எதோ வாலிப நினைபுல மப்புல உளருனதுனு ஒத்துக்கிட்டாங்களே அசிங்கமான வார்த்தய கூட பீப் சவுண்டு குடுத்து மறைச்சிடாராம் அத அவர் அதிகார பூர்வமாகவும் வெளியிடவில்லை என் கிறார் அப்பிடி இருக்கும் போது அவன் வீட்ட எட்டி பாத்து அந்த அசிங்கத்த கேட்டது யாருனு தெரியாம இப்பிடி சவுண்டு குடுக்குறது சரியா …

  • சிம்புவிடம் இணைய தள இணைப்புக்கு வசதி இல்ல அதனால அவருடைய ஆபாச பீப் பாட்டை வேறு ஒருவர் திருடி யூ டுபில் போட்டாங்களா என்ன? என்னமா ஒளருராறு இந்த மனிதர்!
   //அத அவர் அதிகார பூர்வமாகவும் வெளியிடவில்லை என் கிறார் அப்பிடி இருக்கும் போது அவன் வீட்ட எட்டி பாத்து அந்த அசிங்கத்த கேட்டது யாருனு தெரியாம இப்பிடி சவுண்டு குடுக்குறது சரியா …//

 12. என்னைப் பொறுத்தவரை இன்றைய (80 களில் இருந்தே) தமிழ் சினிமா என்பது பெண்களை போதைப்பொருளாகவும் காமப்பார்வையாக பார்க்கக்கூடிய பொருளாகவும் மட்டுமே சித்தரித்து வருகிறது . ஒரு சின்ன உதாரணமாக ‘கட்டை’, ‘ஐயிடம்’, ‘பிகரு’ போன்ற வார்த்தைகளை இன்றைய தமிழ் சினிமாக்கள் சர்வ சாதாரணமாக ஒரு பெண்ணைப் பார்த்து கூறிவருகிறார்கள். அதையும் இந்த ஜனங்க (அதுவும் பெண்ணுரிமை பேசுபவர்கள்) திரையில் நகைச்சுவையாக எண்ணி எள்ளி நகையாடுகிறார்கள். அண்ணன் கவுண்டமணி செந்தில் போன்றோர்களின் காலம் வேறு, இன்றைய காலம் வேறு. குறிப்பாக சந்தானம் மற்றும் இன்றைய இளைய தலைமுறை கதாநாயகன் கனவோடு நடிக்கவரும் ஆட்களுக்கு காதல் செய்கிறேன் என்றும் காதல் செய்கிறவர்களை கிண்டல் செய்கிறேன் என்ற பெயரிலும் பெண்களை கிண்டல் செய்யாமலிருக்க வேண்டியதும் இன்றைய காலத்தின் தேவையாகும். எனவே இன்றைய சிம்பு மற்றும் அனிருத்தின் செயல் பாட்டை திருடி விற்றார்காளா இல்லையா என்பது பிரச்சனை அல்ல. பெண்கள் மீது அவர்களுடைய பார்வை என்ன என்பதே பிரச்சனையாகும். எனவே இந்தப் பிரச்னையை ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்படிப் பார்க்கிறான் என்ற கோணத்திலேயே அணுக வேண்டும் என்பது என்னுடைய பார்வை. அதை விடுத்து இந்த பிரச்னையை தமிழ் இனம், தமிழர் இனம், டி. ஆர் தமிழ் பெண்களை தொடாமால் படம் எடுத்தவர் என்றும் மிகுதியாக மேதகு பிரபாகரன் பெயரை சொல்லி திசை திருப்புவதை அனுமதிக்கக்கூடாது. பிரபாகரன் என்பவர் இலங்கையில் தமிழ் இனத்துக்காக போராடியாவர். அவரைப் போய் பெண்களை காமப்பார்வையாக பார்ப்பவர்கள் பிரச்சனையில் இழுப்பது உண்மை பிரச்னையை திசை திருப்பும் நோக்கமாகும். எனவே இந்தப் பிரச்சனையில் தவறிழைத்தது சிம்பு, அனிருத் போன்றோர் மட்டுமல்ல, பணம் கிடைக்கிறது என்பதற்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் (மற்றும் அவர்களுக்கு பணம் கொடுப்பவர்கள்) போன்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தன் உடலையும் காட்டி நடிக்கிறார்களே நடிகைகள் அவர்கள் தான் மிகப்பெரிய காரணிகள் (அவர்களெல்லாம் நடிக்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி ஆபாசமான வசனங்களுடன் படம் பண்ண முடியும்). இறுதியாக தமிழ் மக்கள் என்றுமே ஆபாசத்தை விரும்புபவர்கள் அல்லர். இன்றைய பெரும்பாலான இயக்குனர்களும் நடிகைகளும் தான் தமிழ் மக்கள் ஆபாசத்தை விரும்புகிறார்கள் என்று சொல்லி அதை ஊக்குவிக்கிறார்கள். எனவே பெண்கள் மீதான ஆண்கள் பார்வையை மாற்ற இந்து மதத்தை ஒழித்தால் மட்டும் போதாது, கூடவே சினிமா மற்றும் மதுவையும் சேர்த்து ஒழித்தால் தான் கொஞ்சமாவது பெண்கள் விடுதலையை பேண முடியும். மாதர் சங்கங்களுக்கு புரிந்தால் நல்லது.

 13. சிம்பு ஒரு தமிழ்நாட்டு ஜஸ்டின் பெய்பர்.
  பணம், புகழ், ரசிகர்கள், செல்வாக்கு கிடைத்ததால் கொஞ்சம் போதை அதிகமாகி விட்டது.
  சிம்பு, அனிருத் இருவருமே இதற்கு முன்பு இணையத்தில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்களை கசியவிட்டவர்களே. என்னமோ இந்த முறை மட்டும் இவர்கள் கசியவிடவில்லை, யாரோ திருடி கசியவிட்டிருக்கிரார்கள் என்கின்றனர்.

  இந்த பிரச்சினையில் நாம் அதிகம் கவனம் செலுத்தினால் பின் இந்த வெள்ளப்பிரச்சினையில் அரசின் செயல்படாத நிலையை எளிதில் மறந்து விடுவோம். ஆளும் கட்சியும் இதை தான் எதிர்பார்க்கிறது.
  அதனால் இந்த பிரச்சினையை சட்டத்தின் பால் விட்டு விட்டு ஆக வேண்டிய வேலையை பார்ப்போம்.

 14. குறிப்பாக அனிருத் பாபானை செருப்பால் அடிக்க வேண்டும், ஆசாரம் அனுஷ்டானம் என்று குறிக்கொண்டு இதுதான் தமிழ்பாடல் இதுதான் பண்பாடு போல் உலகதமிழர்களிடம் எளிதில் சென்றடயும் திரைஉடக வாயிலாக
  மிககிழ்த்தரமான பாடல்களை இசைஅமைத்து திரைஉடக விபாச்சாரத்தை நடத்திகொண்டிருக்கும் பார்பனிய ஐயோகியார்களை செருப்பால் அடிப்பது மிககுரைத்த எதிர்வினை அந்த பொறுக்கியின் ஒருபடதைகுட வெளிவராமல் செய்வது மிக அவசியம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க