privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நிவாரணம் போதாது நீதி வேண்டும் - மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

நிவாரணம் போதாது நீதி வேண்டும் – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

-

க்கள் அதிகாரம் மற்றும் விவசாய சங்க கூட்டமைப்பு சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி 21-12-2015 திங்கள் காலை 10 மணி அளவில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை : தோழர் ரவி, மக்கள் அதிகாரம்

flood-relief-sirkazhi-demo-1கடந்த இரண்டு மாதங்களாக பெய்த தொடர்மழையால் தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சீர்காழி வட்டத்தின் பெரும்பகுதி விவசாயம் அழிந்தும், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று மாதமாக விவசாயத் தொழிலாளர்களும் வேலையில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ இதுவரை நம்மை திரும்பி பார்க்கவில்லை. அவர்கள் தாமாக வந்து பார்க்க மாட்டார்கள். அவர்கள் சட்டையைப் பிடித்து இழுத்து வந்து நடுரோட்டில் வைத்துதான் இனி நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். இது அடையாள ஆர்ப்பாட்டமே ஒழிய தீர்வல்ல.

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 25,000-ம், கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு உதவித் தொகையாக ரூ 15,000-ம், தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 50,000-ம் வழங்க வேண்டும்.

பகுதியில் உள்ள ராஜன் வாய்க்கால், மண்ணியாற்றில் மார்ச் மாதம் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். பாசன வடிகால் வாய்க்காலைத் தூர்வாரி பாசனத்தை முறைப்படுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகளை உடனே நிறைவேற்றா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை இந்த அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.

flood-relief-sirkazhi-demo-5திரு. P.S இராஜேந்திரன், விவசாய சங்கம், புதுப்பட்டினம்

நமது பகுதியை எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. நம்மை இந்த அரசு அலட்சியப்படுத்துகிறது. நமது கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றா விட்டால் வேறுமாதிரியான போராட்டம் நடத்த வேண்டும்.

திரு மனோகர், விவசாய சங்கம், கொடக்கார மூலை

நமது வீட்டில் உள்ள நகை, நட்டு வரை அடகு வைத்து பயிர் செய்தோம். மழை வெள்ளத்தால் அனைத்தும் அழிந்து போய் விட்டது. எங்கள் ஊர் கூட்டுறவு வங்கியில் நகையெல்லாம் இருக்கிறது. அதை இரண்டு முறை உடைத்து திருட முயன்றார்கள். காரணம் இங்குள்ள விவசாயிகள் அவ்வளவு நெருக்கடியில் இருக்கிறோம். எத்தனையோ முறை கலெக்டருக்கும், தாசில்தாரிடமும் மனு கொடுத்து மனு கொடுத்து ஓய்ந்து போய் விட்டோம். இனிமேல் மனு கொடுப்பதால் பலனில்லை என்பதை மக்கள் அதிகாரம் தோழர்கள் சொல்வதுதான் சரி. அதுதான் நமது பாதையாக இனி இருக்க வேண்டும்.

flood-relief-sirkazhi-demo-3திரு மோகன், கொடக்கார மூலை பாசன விவசாய சங்கம்

எங்கள் சங்கத்தின் சார்பாக நாங்கள் கலெக்டர் நடத்தும் எத்தனையோ குறை தீர்ப்பு கூட்டங்களில் கலந்து கொண்டோம். ஆனால், எந்த பயனுமில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில் மக்கள் அதிகார தோழர்களோடு போராடுவோம்.

தோழர் ந. அம்பிகாபதி, மாவட்ட அமைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி

எல்லாருக்கும் சோறு போட்ட விவசாயிகள் இன்று நடுத்தெருவில் வந்து நிற்கிறோம். தொடர்மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் பாதிப்பால் கோடீஸ்வரனிலிருந்து, ஏழை வரை பாதிக்கப்பட்டனர். பெரிய பங்களாவிலிருந்து குடிசை வீடு வரை மூழ்கி சிறுகச் சிறுக சேர்த்த உடைமைகள் அழிந்து, உயிர்ச்சேதமும் ஏற்பட்டது.

flood-relief-sirkazhi-demo-2பணக்காரர்களிலிருந்து ஏழை வரை சோறு சோறு என்று கத்திய அவலத்தைப் பார்த்தோம். அந்த சோற்றை விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த அரசு எந்த உதவியும் செய்யவில்லை. 60 ஆயிரம் ஏரி, குளம் நீர்நிலைகளை நமது முன்னோர் நமக்கு அளித்துச் சென்றதை நாம் காக்கத் தவறிவிட்டோம். 68 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அனைத்தும் அழிக்கப்பட்டு ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதற்கு இந்த அரசு அமைப்பே காரணம்.

காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு நாட்டையும் விவசாயத்தையும் அடகு வைத்து விட்டது. தனியால் கல்வி நிலையங்களும், அரசு கட்டிடங்களும் ஏரி, குளங்களில் கட்டப்பட்டுள்ளன. மோடி அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்குமான அரசுதான். மாநில அரசும், மத்திய அரசும் விவசாயிகளின் குறைகளை தீர்க்கப் போவதில்லை.

இந்த அரசு அமைப்பு ஊழல், லஞ்சம், முறைகேடுகளால் புழுத்து நாறி எதிர்நிலை சக்தியாக மாறி விட்டது. ஆளத் தகுதியிழந்து முரண்பட்டு நிற்கிறது. அதிகார வர்க்கத்தையும், அரசியல் கட்சிகளையும் விரட்டி அடித்து நமது மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும். அதற்கு எடுத்த கூட்டுதான் இந்த ஆர்ப்பாட்டம்

மிலிட்டரி அமிர்தலிங்கம், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு

flood-relief-sirkazhi-demo-4மக்கள் நலனுக்காக பாடிய தோழர் கோவன் அவர்களை இந்த மக்கள் விரோதிகளின் அரசு கைது செய்தது. அந்த அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இன்று விவசாயிகளின், தொழிலாளர்களின் நலனுக்காக நடத்தும் இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைந்துள்ளது. காரணம் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்த பிரிவினரும் ஒன்றாகி உள்ளனர். இது வருங்காலத்தில் நமது ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு வெற்றியாக அமையும்.

திரு சிவபிரகாசம், தலைவர், கொள்ளிடம் ஒன்றிய விவசாயிகள் கூட்டமைப்பு.

எனக்கு 94 வயது இருந்தாலும் நீங்கள நல்லா வரணும் என்று நான் போராடுகிறேன். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பச்சை துண்டு பலமானது என்பதை இந்த அரசு அதிகாரிகள் உணர வேண்டும். மக்கள் அதிகாரம் தோழர்கள் நமக்கு துணையாக உள்ளனர். நாம் யார் என்பதை இந்த அதிகாரிகளுக்கு உணர்த்துவோம். எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

மேலும் கொள்ளிடம் ஒன்றிய விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் செயலர் திரு விஸ்வநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

நன்றியுரை : முருகன், விவசாய சங்களம், மாதானம்.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் அடித்து கலக்கியது போல் விவசாய பயிர் உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

முன்னதாக,

  • நிவாரணம் போதாது நீதி வேண்டும்!
  • வெள்ளப் பேரழிவிற்கு காரணமான முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்…!
  • அனைத்திலும் செயலிழந்து தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பை துயரத்தோடு ஏன் சுமக்க வேண்டும்?

என தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை மாவட்டங்களில் மக்கள் அதிகாரம் சார்பாக சுவரொட்டிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

flood-relief-tnj-poster

தகவல்
மக்கள் அதிகாரம்,
சீர்காழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க