privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மூடு டாஸ்மாக்கை - டேவிட் ராஜ் குடும்பத்தை மிரட்டும் போலீசு !

மூடு டாஸ்மாக்கை – டேவிட் ராஜ் குடும்பத்தை மிரட்டும் போலீசு !

-

கோத்தகிரி

ஜெயா காட்டாட்சிக்கு துணை நிற்கும் போலீஸ், உளவுத்துறை

ஜெயா ஆட்சியில் காவல்துறையின் அத்துமீறல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து வருகின்றது.

ஆள அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு, இதோ ஆள வருகுது மக்கள் அதிகாரம்” என்று அரசு கட்டமைப்பு எதிராக நேருக்கு நேர் நின்று எதிர்த்து போராடும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. “மூடு டாஸ்மாக்கை மூடு” இயக்கம் முதல், மழை வெள்ள நிவாரணப் பணிகள் வரை மக்களிடம் பேராதரவைப் பெற்றது.

இந்நியைலில் கோத்தகிரி பகுதியில் “டாஸ்மாக்கை மூடு” இயக்கத்துக்கான சுவரெழுத்து பிரச்சாரம் நடத்தப்பட்டது. கோவன் கைது, நீதிமன்ற பாசிசம், மழை வெள்ளம் என்று சுவரொட்டி பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. போலீசும் உளவுத்துறையும் இணைந்து சுவர் எழுத்தை அழித்தும், சுவரொட்டிகளை கிழித்தும் வந்தன. திருச்சி மாநாட்டு போஸ்டர்களையும் கழுதை போல தின்றுள்ளன.

கோத்தகிரி முழுவதும் உழைக்கும் மக்கள் தாங்கள் வாழ்வதற்கு ஒரு வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டால், விவசாய பூமி என்று அனுமதி மறுக்கும் அதே நேரத்தில் நீர்நிலைகள், விவசாய பூமி, அரசு புறம்போக்கு என்று காசை வாங்கிக் கொண்டு கான்கிரீட் காடுகளாக மாற்ற அனுமதி கொடுக்கிறது அரசு. லாட்டரி சீட்டு விற்பனை, கந்து வட்டி, மீட்டவர் வட்டி பைனான்ஸ், காடுகள் அழிப்பு, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்பவர்களோடு கூட்டு சேர்ந்து பொறுக்கித் தின்னும் போலீஸ், உளவுத்துறை சமூகப் பணியில் ஈடுபட்டாலும், மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து போஸ்டர் ஒட்டினாலும் பொய் வழக்கு போடுகிறது.

இதற்கு எதிராக கோத்தகி மக்கள் அதிகாரம் அமைப்பு, “ஆள அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு, இதோ ஆள வருகிறது மக்கள் அதிகாரம்” என்று அதிகாரிகளின் அதிகாரத்தை செயல் இழக்கச் செய்து மக்கள் அதிகாரத்தை நிறுவ அறைகூவி அழைக்கிறது.

இவண்
மக்கள் அதிகாரம்,
கோத்தகிரி.

குமரி மாவட்டம்

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக “மூடு டாஸ்மாக்கை” சிறப்பு மாநாடு திருச்சி, தென்னூர், உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. அதற்கு காவல்துறை அனுமதி அளித்திருந்தது. டாஸ்மாக் சாராயக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியதற்காக போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்ட குமரி மாவட்டம் தேமானூரைச் சேர்ந்த டேவிட் ராஜ் (வாள்வீச்சு தேசிய வீரர்) மாநாட்டில் கலந்து கொண்டு நேருரை ஆற்றினார்.

“மாநாட்டுக்கு ஏன் செல்கின்றீர்கள்? டாஸ்மாக் நடத்துவது அரசின் கொள்கை முடிவு, மக்கள் அதிகாரம் அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக போராடுகின்றது. எனவே, அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள்” என்று உளவுத்துறை போலீசார் தொடர்ந்து மாநாட்டு பிராச்சாரத்தில் ஈடுபட்ட பலரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்றும் தொலைபேசி மூலமும் மிரட்டினர்.

திரு டேவிட்ராஜ் வீட்டிற்கு தொடர்ந்து பல நாட்களாக இரண்டு, மூன்று உளவுத்துறை போலீசார் கும்பலாகச் செல்வது, அவரது வீட்டிற்குள் அத்துமீறி சென்று வீட்டில் உள்ளவர்களையும், வீட்டில் உள்ள பொருட்களையும் புகைப்படம் எடுப்பது, டேவிட்ராஜ் உறவினர் வீடுகளுக்கு சென்று விசாரிப்பது என்று சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டனர். மேலும் டேவிட்ராஜிடம் மாநாட்டில் கலந்து கொண்டு பேசக் கூடாது என்றும் மிரட்டினர்.

சட்டப்படி அனுமதி பெற்று நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று மிரட்டுவதும், கலந்து கொள்பவர்கள் வீட்டிற்கு சென்று விசாரிப்பதும் உளவுத்துறை போலீசாரின் சட்டவிரோத நடவடிக்கை என்றும், இவ்வாறு நடந்து கொண்ட உளவுத் துறை போலீசாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவராஜபூபதி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். மேலும், இவ்வாறு வீடுகளுக்கு சென்று விசாரணை செய்யும் உளவுத்துறை போலீசார் மீது நீதிமன்றத்திலும் தனிநபர் வழக்கு செய்ய உள்ளதாகவும், உளவுத்துறை போலீசார் இவ்வாறு நடந்து கொள்ளாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
குமரி மாவட்டம்

பல்லாவரத்திலிருந்து நடை பயணம்

மக்கள் அதிகாரம் அ. தோழர்கள் பல்லாவரத்தில் இருந்து நடைபயணப் பிரச்சாரமாக செங்கல்பட்டு வரை சென்று மக்களிடம் மாநாட்டு பிரச்சாரம் நிதி வசூல் செய்தனர்..

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

வேதாரண்யம் பிரச்சார தட்டிகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
வேதாரண்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க