Wednesday, January 26, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் தூத்துக்குடி : தேவர் சாதி வெறியை எதிர்த்த PRPC தோழர் அரிராகவன் கைது !

தூத்துக்குடி : தேவர் சாதி வெறியை எதிர்த்த PRPC தோழர் அரிராகவன் கைது !

-

தூத்துக்குடியில் தேவர் சாதிவெறியர்களை அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டிய PRPC தோழர் அரிராகவன் கைது! ஆதிக்க சாதிவெறிக்கு ஒத்தூதும் அதிகார வர்க்கம்!

டுமலையில் தலித் இளைஞர் சங்கர், தேவர்சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் 18 &19.03.16 ல் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. பொதுவாக ஆணவக்கொலை என்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வரும் சூழலில் குறிப்பாக தேவர்சாதி வெறியை அம்பலப்படுத்தி நம் அமைப்பு மட்டுமே சுவரொட்டி ஒட்டியது. அதிலும் அரசு வேலைக்கு கெஞ்சும்போது பிற்பட்ட சாதியாக பம்மி பதுங்குவதையும், ஊருக்குள் தாழ்த்தப்பட்டவர் களிடம் மட்டும் சத்ரியனாக அருவா தூக்குவதையும் அம்பலப்படுத்தி, இந்த சாதிவெறியர்களுக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்யும்படி வலியுறுத்தி முழக்கம் வடிக்கப்பட்டிருந்தது.

PRPC-Poster

இது வன்முறையை தூண்டும் விதமாகவும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாகவும் இருப்பதாக கூறி மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் சிவபெருமாள், தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். உடனே களமிறங்கினர் ‘ஆய்’வாளர் சுரேஷ்குமார் தலைமியிலான சட்டத்தின் காவலர்கள்! இதற்கு பின்னால் இருந்து தாசில்தாரும் கண்காணித்துள்ளார். என்னே கடமை உணர்ச்சி!

இப்படித்தான் சுவரொட்டி ஒட்டிய 19.03.16 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் PRPC மாவட்ட தலைவர் தோழர் அரிராகவனின் வீட்டுக்கு வந்தது போலீசு படை. என்ன விசயம் என்று விசாரித்த தோழர் அரி தான் கைது செய்யப்படுவதை உடனே தோழர்களுக்கும், சக வழக்குரைஞர் களுக்கும் தகவல் தந்தார். அவரை கைது செய்த தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்,தோழரிடம் “போஸ்டரை யார் யார் ஒட்டினீர்கள்? எங்கு அச்சிட்டீர்கள்” என்று கேட்டார். “நான் மட்டும்தான் ஒட்டினேன்; மற்ற விசயங்களை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்” என்று காவல்துறையின் விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அரிராகவன். போலீசோ “நான் ஒட்டவில்லை” என்று கூறினால் போதும் விட்டுவிடுகிறோம் என்று ஆசைகாட்டியது.

கைது செய்யப்பட்டது சனிக்கிழமை என்பதால் எப்படியாவது “உள்ளே தள்ளிவிடுவது” என்று சதியுடன் செயல்பட்டது அதிகார வர்க்கம். வேண்டுமென்றே தாமதப்படுத்தி இரவு 7.00 மணிக்குமேல் நீதிபதியின் வீட்டிற்கு தோழரை கொண்டு சென்றனர்.

கைதைக் கேள்விப்பட்டு சனி இரவிலும் சுமார் 30 வழக்கறிஞர்கள் தோழர் அரிக்கு ஆதரவாக அணிதிரண்டு நீதிபதியைprpc-ariragavan-arrested-4 முற்றுகையிட்டனர். அதில் தூத்துக்குடி பார் கவுன்சிலின் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துவிட்ட நம் அமைப்பு வழக்கறிஞர்களும் அடக்கம்.

காவல்துறையினர் குற்றம் சாட்டும் ஒருவரை (7 ஆண்டுகளுக்கு உட்பட்டு தணடனை தரக்கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் பட்சத்தில்) நீதிமன்றக்காவலில் வைக்க நினைத்தால் அதற்கான விளக்கத்தை தரவேண்டும். அப்படி எதையும் போலீசார் முன்வைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி வழக்கறிஞர்கள் விளக்கும்போது நீதிபதியின் செல்போன் ஒலித்தது. உடனே எழுந்து சற்று தள்ளிச்சென்று “அவர்கள்தான் வந்திருக்கிறார்கள்” என்று யாருக்கோ விளக்கிவிட்டு வந்தார்.

வழக்கறிஞர்கள் வாதத்தை தொடர்ந்தனர். “வழக்கறிஞராக 13 ஆண்டுகளாக இதே கோர்ட்டில் வாதாடிவரும் அரிராகவன் பலவேறு சமூகப் பிரச்சினை களுக்காக தொடர்ந்து போராடிவருபவர். மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் பிரதிநிதியும் கூட. இவரை நீதிமன்றக்காவலில் அடைக்க எந்த அவசியமும் இல்லை. ஏற்கனவே சுவரொட்டிக்கான ஆதாரம் உங்கள் வசம் உள்ளது. சாட்சியாக இருப்பது VAO., போலீசுதான். இவர் இவர் எந்த ஆதாரத்தை அழிக்கப் போகிறார்? எந்த சாட்சியை கலைக்கபோகிறார்? இல்லை தலைமறைவாகத்தான் போகப் போகிறாரா?” என்று போலீசின் நோக்கத்தை தோலுரித்தனர். வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் சுரேஷ்குமார் தேவர் சாதியை சேர்ந்தவர். ஆனால் தோழர் அரியோ சம்மந்தப்பட்ட இரண்டில் எந்த சாதியையும் சேர்ந்தவரல்ல. பொதுநலனுக்காகவே இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளார் என்று காவல்துறையை குறிப்பாக குற்றம் சாட்டினர். இது குறித்த அர்னேஷ்குமார் வழக்கின் தீர்ப்பு உதாரணத்தையும், வழிகாட்டுதலையும் சுட்டிக்காட்டினர்.

ஓராண்டுக்கு முன் (2015-ல்) நம் அலுவலக சுவற்றில் உள்ள பெயர்ப் பலகையை பார்த்துவிட்டு மனித உரிமை என்ற பெயரை பயன்படுத்தியதாக வழக்கு பதிவுசெய்து வைத்திருந்தனர். அந்த காரணத்தையும் போலீசார் இப்பொழுது முன்வைத்தனர். நாம் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்பட்டதையும், அந்த பெயரிலேயே கடந்த காலத்தில் உச்ச நீதிமன்றம் வரை பல வழக்குகளில் வாதிட்டு வருவதையும் விளக்கினர். இப்பொழுது அமைப்பின் பெயரை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் என்று மாற்றி செயல்பட்டு வருவதையும் விளக்கினர்.

நம்தரப்பு வாதங்களை கேட்டபின் “ கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் நான் கன்சல்ட் பண்ணிவிட்டு வந்துடரேன்” என்று கூறிவிட்டு மீண்டும் செல்போனில் பேசியபடி சென்றார். யாரிடம் கன்சல்ட் செய்யப் போயுள்ளார்? அல்லது யாரிடம் உத்தரவு பெற்றுவருகிறார்? இது என்ன நீதிபரிபாலனை? என்று அனைவருமே சந்தேகத்துடன் நீதிபதியின் செயல்பாடுகளை பார்த்தனர். திரும்பி வந்தவுடன் “ரிமாண்ட் பண்ணுகிறேன்” என்று அறிவித்தார்.

வழக்கறிஞர்களோ “நாங்கள் பிணை மனு தாக்கல் செய்கிறோம். இப்பொழுதே பிணை தர 437 CRPC படி உங்களுக்கு அதிகாரம் உள்ளது. செய்யுங்கள்” என்றனர். மீண்டும் செல்போனை எடுத்துக்கொண்டு எழுந்து சென்றுவிட்டு வந்து “பிணை வழங்கமாட்டேன்” என்றார். முன்கூட்டியே எழுதப்பட்ட நாடகத்தின் ஒத்திகையைப்போல இருந்தது இக்காட்சி.

தெருவில் திடீரென முளைத்த போலீசு வாகனங்கள், பைக்குகள், கார்கள்; வீட்டிலிருந்து வாசலையும் தாண்டி கேட்கும் வாதங்கள் என பிரையண்ட் நகர் 4வது தெரு களைகட்டியது. என்ன? என்ன? என்று அனைவரும் நின்று விசாரித்து சென்றவண்ணம் இருந்தனர். நேரம் கடந்து கொண்டிருந்தது.

முடிவாக தோழரின் உடல்நலைக் குறைவை முன்வைத்து மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப உத்தரவிட கோரி மனுதாக்கல் செய்தோம். வேறு வழியின்றி இம்மனுவை ஏற்றுக்கொண்டார் நீதிபதி. இரவு 9.00 மணிக்கு மேல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்தனர். உடனே பரிசோதனைகள் துரிதமாக நடத்தப்பட்டன.

இரவு 1.00 மணிக்கு எக்ஸ்ரே எடுத்ததிலிருந்தே அரசின் வேகத்தையும், விரைவில் சிறைக்குள் தள்ளவேண்டும் என்ற நோக்கத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. தவிர்க்க முடியாமல் சிகிச்சை தொடரவே இரு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிக்க வைத்ததை தாண்டி எதுவும் செய்யமுடியாமல் கையைப் பிசைந்தபடி தவித்தனர் அதிகாரிகள். ஒருவழியாக திங்கள் காலை மருத்துவமனையிலிருந்து சிறைக்கு கொண்டு சென்றனர்.

இந்த கைது ஏன்? அதுவும் ரிமாண்டா? – என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தன்னிடம் கேள்விகேட்ட வழக்கறிஞர்களுக்கு தோழர் அரி நம் நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை முன்வைத்து விளக்கினார். உயர்கல்வித் துறையைப் போலவே நீதித்துறையை பார்ப்பன இந்துமதவெறி அமைப்புக்கள் கைப்பற்ற செய்துவரும் எத்தனிப்புகளையும், உழைக்கும் மக்களை பிளவுபடுத்த சாதிவெறியூட்டுவதையும், இந்தியாவை சுரண்ட இவர்கள் ஆதரிக்கும் பன்னாட்டு கன்பெனிகளையும், எதிர்த்து நிற்பதுதான் காரணம் என்பதை அரசின் இந்த கைதின் மூலம் புரிய வைத்தார்.

நாம் வழக்கு பதிவு செய்தவர் தேவர் சாதியை சேர்ந்தவர் என்று வாதிட்டதால், உடனே தூத்துக்குடியிலுள்ள பிற காவல்நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சுவரொட்டியால் பாதிக்கப்பட்டதாக யாராவது புகார் தந்தனரா? என்று கேள்வி எழுப்பியதால் மறுநாளே தேவர் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் தேவர்சாதி வெறியினர் ASP அருண் சக்தி குமாரிடம் புகார் அளித்துள்ளனர். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று பீற்றிக்கொள்ளும் பத்திரிக்கைகள் இவ்வழக்கு பற்றிய போலீசின் செய்தியையே (வன்முறையை தூண்டும் சுவரொட்டி ஒடியதாக) வெளியிட்டனர். நடுநிலை, பத்திரிக்கை தர்மம் என்பதெல்லாம் ஏமாற்று என்பதை, உண்மையை எழுதும் தகுதியை இழந்துவிட்டதை உணர்த்திக்கொண்டனர் ஊடகவியலாளர்கள். அதேநேரம் தேவர் சாதியினர் தமது புகார் மனுவில் தாங்கள் சாதி மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும், உடுமலையில் நடந்தது ஒரு தனிப்பட்ட நபரின் குடும்ப பிரச்சினையில் நடந்த கொலைதான் என்றும் கூறியுள்ளதை அப்படியே போட்டு தமது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது தினகரன் நாளேடு.

திங்கட்கிழமை நீதிமன்றத்தில் பிணை கிடைத்துவிடும் என்று கணித்த அதிகார வர்க்கம் தோழரை முதலில் தூத்துக்குடி கிளைச்சிறையில் அடைத்தனர். பின்னர் பெயில் கிடைத்தாலும் உடனே வெளியே வரவிடக் கூடாது என்று தாமதப்படுத்தவே பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பினர்.

பிணை மனு மீதான விசாரணை மதியம் 3.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. சுமார் 20 வழக்குரைஞர்கள் அரியின் சார்பில் ஆஜராகினர். நீண்ட வாதப் பிரதிவாதங்களை நீதிபதியுடன் நடத்தினர். முடிவில் எதிர்ப்பார்த்தது போல பிணை வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.

பன்னாட்டு முதலாளிகளின், தரகு முதலாளிகளின் எடுபிடுகளான, ஆதிக்க சாதிவெறியர்களுக்கும் இந்து மதவெறியர்களுக்கும், பாசிச ஜெயாவுக்கும் அடியாட் படையான போலீசு அவ்வளவு எளிதாக நம்மை விட்டுவிடுவார்களா என்ன? சந்தேகத்துடன் விசாரித்தோம். வடபாகம் மற்றும் சிப்காட் போலீசார் தென்பாகத்தினரின் வழியில் தமது பங்கிற்க்கு களமிறங்கினர்.

இப்படி தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனையோ, ஸ்டெர்லைட்டின் அதிகாரிகளையோ இப்படி எந்த போலீசும் உள்ளே தள்ள முயற்சித்ததில்லை. உண்மையில் இவர்களை எதிர்த்த நம் தோழர்களை ஒடுக்கத்தான் அதிகார வர்க்கம் ஆலாய்ப் பறக்கிறது.

ஒரு நீதிபதி பிணை தருகிறார். ஆனால் அதே கட்டிடத்தின் மற்றொரு அறையில் மற்றொரு நீதிபதி இதே குற்றத்திற்காக ரிமாண்ட் செய்ய உத்தரவிடுகிறார். நாளை 22.03.2016 செவ்வாயில் இன்றைய நாடகத்தின் காட்சிகள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து அரங்கேறும். இந்த கட்டமைப்பு தோற்றுவிட்டது. தான் எதற்காக இருப்பதாக சொல்லிக் கொள்கிறதோ அதற்கு எதிர்நிலையாக மாறிவிட்டது. ஆதிக்க சாதி வெறிப்படுகொலைகள் அன்றாட நிகழ்வாகிவிட்ட தென்மாவட்டத்தில் தான் அதை எதிர்ப்பவர்களும், கண்டிப்பவர்களும்தான் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். இந்த காவல்துறையும், நீதித்துறையும் இங்கு எதற்காக இருப்பதாக சொல்லப்படுகிறதோ அதற்கு எதிராகத்தான் செயல்படுகிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?

தோழரை மீண்டும் அடுத்தடுத்த வழக்கில் இருந்து பிணையில் எடுக்கவும், ஆதிக்க சாதிவெறிக்கும், (அ)நீதித்துறை மற்றும் இந்து மதவெறி பாசிசத்திற்க்கும் எதிராக அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கவும் தோழர்கள் முனைந்துள்ளனர்.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி.

 1. சாதிவெறி சிங்கங்களை அதன் குகையிலேயே சந்திப்போம்,உறுமலே வெளியே வராமல் முடக்கி முறியடிப்போம்.பாசிச கொடுங்கரங்களின் நகங்களை வெட்டியெறிவோம்.

 2. பிற்பட்டவர் இட ஒதுக்கிட்டை ரத்து செய்ய கோருவது தான் சாதி வெறி ஆணவ கொலைகளுக்கு தீர்வா? ம க இ க தலைமையின்- மருதையன் உச்சி குடுமி ஆடுகிறதோஎன்ற சந்தேகம் எழுகிறது எல்லா சாதியிலுமே சாதி வெறியர்கள் இருக்க தான் செய்கிறார்கள். அதற்காக இட ஒதுக்கிட்டில் கை வைப்பது தான் தீர்வா? பெரியாரின் பெயரை கூட கூற தகுதி அற்றவர்கள் நீங்களும் உங்கள் அமைப்பும். 80க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் சாதி வேறுபாட்டின் அடிப்டையில்,சாதி வெறியின் அடிப்டையில் தமிழ் நாட்டில் இது வரையில் நடந்து உள்ளது. நக்சல் பாரி அமைப்பு என்று தம்மை பீற்றிகொள்ளும் இந்த ம க இ க அமைப்பு வேடிக்கை தான் பார்கிறதே தவிர சாதி வெறியர்களை அழித்தொழிப்பதில் இறங்கியதாக எந்த விதமான ஆதாரமும் இல்லயே!

  • ஆண்ட பரம்பரை என்று முழங்குபவனுக்கு இட ஒதுக்கீடு எதுக்கு என்று கூறினால் உங்களுக்கு ஏன் பின்னால் எறிகிறது? சரி சாதிவெறியர்களுக்கு எதிராக பம்மியதைத் தவிர நீங்கள் செய்தது என்ன?

   • இட ஒதுக்கீடுக்கு போராடிய பெரியாரிடம் இதனை கூறுங்கள். அவரிடம் கூறும் தகுதி உள்ளதா உங்களுக்கு?. இந்த சாதிய ஆணவ கொலைகளை எதிர்க்க திராணி அற்ற நீங்கள் , அந்த சாதி வெறியர்களை அழித்தொழிக்க சக்தி அற்ற நீங்கள், என்னுடைய பின் பகுதியில் எரிகின்றதா இல்லையா என்ற ஆராச்சியில் ஈடுபடுவது நகைப்புக்கு உரியது. முதலில் இட ஒதுக்கிட்டு பற்றிய உங்களின் புரிதல் என்ன என்பதை விளக்கவும் நண்பரே. மீண்டும் கேட்கின்றேன் .

    #ம க இ க இட ஒதுக்கீட்டை ஆதரிகின்றதா இல்லையா என்பதையாவது விளக்கவும்.

    #பிற்பட்டவர் இட ஒதுக்கிட்டை ரத்து செய்ய கோருவது தான் சாதி வெறி ஆணவ கொலைகளுக்கு தீர்வா?

   • திரு கருப்பன்,

    தமிழ் நாட்டு அரசுக்கு ம க இ க வின் தோழன்மை அமைப்பான மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் விடுக்கும் கோரிக்கை என்ன?

    ஆணவக்கொலை செய்யும் சாதிகளுக்கு இடஒதுக்கீடை ரத்து செய் என்பது தானே? உண்மையில் இந்த கோரிக்கை எப்படி பட்டதாக இருக்க வேண்டும்? ஆனவக்கொலை செய்பவர்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய் என்று தானே இருக்கவேண்டும். அதனை விடுத்து ஒட்டுமொத்தமாக ஆணவ கொலை செய்தவரின் சாதிக்கே இடஒதுக்கீடை ரத்து செய்ய வேண்டும் என்று கோருவது எந்த வகையில் நியாயம்? ஆணவ கொலை செய்வது யாராக இருந்தாலும் அவர்களுக்கு குற்ற தண்டனை அளிபதுடன் , அவர்களின் அனைத்து சலுகைகளும் ரேசன் கார்டு, விவசாய மானியம், வங்கி கடன் மானியம் , ஆகியவை அனைத்துமே ரத்து செய்யப்பட வேண்டும் என்று கேரிக்கையை முன்வைத்து நாம் போராட வேண்டுமே தவிர குற்றவாளிகளின் சாதியை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்று கோருவது எந்த வகையிலும் சமுகத்துக்கு பயன் அளிக்காது என்பதை நாம் மேலும் ஆய்வோம்.

    நாங்கள் சாதிய எதிர்ப்பு திருமணத்தை செய்து கொண்டவர்கள். பிறப்பால் நான் BC மனைவி தலித் சமுகத்தை சேர்ந்தவர். நாங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டின் சொந்தக்காரர் வன்னிய சமுகதவர். அவர்களின் வருமானம் RS 11,000. கேன்டினின் டீ மாஸ்டராக உள்ளார். வீட்டு வடகை 4,500. மொத்தம் 15,500. அவரின் இரு குழந்தைக்ளும் பள்ளி கல்வியில் 6 வது 10வது வகுப்பில் உள்ளார்கள். மனைவியின் அண்ணன் மூலமாக தான் இந்த வீட்டுக்கு வாடகைக்கு உள்ளோம். வீட்டுக்கு சொந்தகாரரும் , என் மனைவியில் அண்ணனும் பள்ளி பருவ நண்பர்கள். சாதி பாகுபாடு இல்லாமல் தான் வீட்டு உரிமையாளரும் நடந்து கொள்கின்றார். அவரின் குழநத்தைகள் இணைய தள பயன்பாட்டுக்கு, கல்வியில் சந்தேகம் என்று என் மனைவியிடம் தான் உதவிக்கு அணுகுவார்கள். பிரத்தியோகமாக செய்யப்படும் உணவை பகிர்ந்து கொள்வோம். இத்தகைய சமுக நலினக்க நிலையில் தான் சமுகத்தில் பல லச்ச கணக்கான குடும்பங்கள் தமிழ் நாட்டில் வாழ்கின்றன.

    இப்ப சொல்லுங்க பாஸ் ஒட்டு மொத்தமாக ஒரு சாதியின் இடஒதுக்கீட்டை அந்த சாதியை சேர்ந்தவர் ஆணவ கொலை செய்கின்றார் என்பதற்காக ரத்து செய்ய கோருவது நியாயமா? இத்தகைய முட்டாள் தனமான கோரிக்கை எத்தகைய தீய விளைவுகளை ஏற்படுத்தும்? எனவே ஆணவ கொலையாளிகளை சமுகத்தில் இருந்து தனிமைபடுத்தி தேவை பட்டால் அழித்து ஒழிப்பது தான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

    இரண்டாவது கோரிக்கையான ஆதிக்க சாதிகளை தடை செய்ய வேண்டும் என்ற விசயத்தில் நான் முழுவதும் உடன்படுகிறேன்.

    மேலும் விவாதிப்போம் ….

    • நீங்கள் பரிந்துரைப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. அதில் ஒரு சந்தேகம். பொதுவாக ஆணவ கொலை செய்பவர்கள் தங்கள் தனிப்பட்ட வன்மத்திற்காக கொலை செய்வதில்லை. அவர்களது உறவினர்களின் மத்தியில் தலைகாட்ட முடியாது, மரியாதை இருக்காது, சாதி கவுரவத்திற்கு இழுக்க்கு என்ற ஆதிக்கா சாதி கருத்தியலும், சமூகத்தில் கொளரவ குறைச்சலும் தான் இவர்களது மூர்க்கத்திற்கு வித்திடுகிறது.

     நத்தம் காலனியில் திவ்யாவின் பெற்றோர் மட்டும் சென்று வீடுகளை கொளுத்தவில்லை. ஊரே திரண்டு சென்று கொளுத்தியது. பழநியின் தன் உறவினர்கள் முன்னால் எப்படி தலை நிமர்ந்து வாழ் முடியும் என்ற எண்ணத்தில் கொலை செய்கிறார் கவுசல்யாவின் தந்தை.

     கொலை செய்ய தூண்டிய ஆதிக்க சாதி சமூகத்திற்கு என்ன தண்டனை? ஆதிக்கமும் செய்வேன் இடஒதுக்கீடும் வேண்டும் என்றால் எப்படி?

     ஆண்ட பரம்பரைகளுக்கு என்ன டேஷ்க்கு இடஒதுக்கீடு என்ற கேள்வி சரியானதுஇதான். ஆதிக்க சாதி சமூகமும் அதன் சாதி வெறியும் தான் கொலைக்கு காரணம்.இங்கு தேவர் சாதி வெறி. தனிப்பட்ட சின்னசாமியின் வெறியல்ல. தேவர் சாதி வெறி.

     • குறிப்பு: நான் வன்முறை மற்றும் சாதியை எதிர்ப்பவன்.

      திரு மனோஜ் அவர்களே,

      ஏன் எப்போ பார்த்தாலும் ஆண்ட/அடங்கிய ஜாதி என்று ஊதி உடம்பை வளர்க்கிறீர்கள்?

      இன்று சங்கர் ஜாதி பேரை சொல்லி திட்டிவிட்டானென்று, அரசு அலுவலகம், பணியிடங்கள், பொது இடங்களில் எவ்வளவு பொய் வழக்கு போடுவேன் என்று மிரட்டி காரியம் சாதிக்கும் போக்கு இருக்கிறது தெரியுமா?

      அவ்வளவு ஏன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ண்ன், சாதி பெயரால் உச்சநீதிமன்றம் அவருக்கு பணி மாற்றல் வழங்கியதை, அவரே தாமே முன்வந்து வழக்காக பதிவு செய்து, தடை வழ்ங்கி, அடித்த கூத்து தெரியாதா?

      ஏன் சங்கர் கொலையை தாமே முன்வந்து வழக்காக பதிவு செய்வாரா? மாட்டார்!. ராகுல் / மாயாவதி வருவார்களா? ரோகித் வேமுலாவை போல? மாட்டார்கள்.

      ஆகையால் எதையும் சாதி, சாதி என்று ஊதாதிர்கள்.

      சங்கர் கொலையானது /தேவர் சாதி வெறி/ என்றால், என்ன டேஷ்க்கு உங்கள் சங்கர் படிக்கும் சின்னப்பெண் /தேவர் சாதி/ கவுசல்யாவை லவ் பண்ணி, ஓடிப்போய் கல்யாணம் செய்து, கவுசல்யாவை வேலைக்கு அனுப்பனும்??

      1) சங்கர் தன் தாயை இழந்து, தந்தை கடனாளி ஆகி, விக்னேஷ், யுவராஜ் ஆகியோரை, படித்து, வேலைக்கி சென்று,நல்ல படியாக, கவனிப்பதை விட, என்ன டேஷ்க்கு கவுசல்யாவை ல்வ் பண்ணனும்?? அவசர திருமணம் செய்யனும்??

      2) சங்கர் வீட்டில் தான் 4 ஆண்கள் உள்ளனரே, அந்த கவுசல்யாவை படிக்க வைக்காமல், வேலைக்கு அனுப்பும் இவருக்கு காதல் ஒரு கேடா?

      3) சங்கர் அவர்களுக்கு அதனால் வரும் விளைவுகள் தெரியாட்தா?

      4) சங்கர் அவர்களுக்கு அவர் சமுதாயத்தில் நல்ல பெண்களே இல்லையா காதலிக்க?

      • தொ வந்துட்டாரு நாட்டாம… சொம்ப தூக்கிகிட்டு. அட சீ தூ ……. யாரு யாரை லவ் செய்து திருமணம் செய்து கொள்ளனும் என்று தீர்ப்பு சொல்ல நீ எந்த ஊரு நாட்டாம? சங்கர் யாரை லவ் பண்ணும் என்று அறிவுரை கூற நீ யாரு?… அட சீ தூ…முஞ்சப்பாறு இந்த கருமாந்திரத்தின் முஞ்ச பாரு…. பிணம் தின்னும் கழுகாட்டம் …

      • நீர் வன்முறை மற்றும் சாதியை எதிர்ப்பதன் லச்சணம் தான் உனது பின்னுட்டத்தில் தெரிகின்றதே! ஒரு தலித் இனத்தை சேர்ந்த இளைஞன் யாரை லவ் செய்யனும் , எப்ப லவ் செய்யனும் எ என்று எல்லாம் அறிவுரை கூற நீர் என்ன பெரிய டேஷ் அப்பாட்க்கரா….? முடிகிட்டு போ வாயை! சட்டப்படி திருமண வயதுக்கு வந்த அவிங்க இரண்டு பேருமே திருமணம் செய்து கொள்ள என்ன மயித்துக்கு உன் அட்வைஸ் கேக்கணும்.?

       • 2.1.2.1.1.2 NH45

        //ஒரு தலித் இனத்தை சேர்ந்த இளைஞன் யாரை லவ் செய்யனும் , எப்ப லவ் செய்யனும் எ என்று எல்லாம் அறிவுரை கூற நீர் என்ன பெரிய டேஷ் அப்பாத்கரா….? //

        என் கருத்தானது, முதலில் படியுங்கள், வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுங்கள்
        பின்னர் யாரை வேண்டுமானாலு காதல்/திருமணம் செய்து கஷ்டப்படுங்களேன்?

        இதற்க்காக தான் நம் அண்ணன் திருமா கல்யாணமே செய்வதில்லை. அவர் மிக புத்திசாலி, எதிர்காலத்தில் மோடி, ராகுல் போல உயர்வார். 🙂

        //முடிகிட்டு போ வாயை! சட்டப்படி திருமண வயதுக்கு வந்த அவிங்க இரண்டு பேருமே திருமணம் செய்து கொள்ள என்ன மயித்துக்கு உன் அட்வைஸ் கேக்கணும்.?//

        இதை உங்கள் சங்கரால் அருவாள் ஏந்தியவரிடம் சொல்ல முடிந்ததா?

        இதனால் நான் பயப்படுங்கள், காதலிக்காதிற்கள் என்று சொல்லவரவில்லை.

        முதலில் உழைத்து ஆளாக்கும் பெற்ரோரை காதலியுங்கள், வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை கவனியுங்கள், தங்கள் சமூகத்தில் நலிந்த நபர்கள் முன்னேற
        உதவுங்கள். ஏனனில் உங்கள் திருமா/மருத்துவர் அய்யா/கருணா/பெரியார் யாரும் தங்கள் பிழைக்க, தங்கள் குடும்மம் முன்னேற, இந்த சாதிய தீ அனையாமல் இருப்பார்கள். நன்றாக கவனியுங்கள் அவர்கள் அரசியலுக்கு வரும் போது இருந்த நிலைக்கும் இப்போ இன்னோவா காரில் பவணி என்ன??, குவித்த சொத்துக்கள் என்ன?

        முடிவாக, உன் குடும்பத்தை நீயே காப்பாற்று.

        • உங்கள் திமிர் பேச்சுக்கு பதில் என்ன தெரியுமா?

         சங்கர் பள்ளரா இல்லை அருந்ததியரா என்பதை விளக்கவும் தோழர்களெ ,ஆனந்த விகடன் பத்திரிக்கை சங்கரை அருந்ததியர் என்று சொல்லுகிறது செத்த சங்கர் பள்ளர் என்றால் கொன்றவன் நிலமை கொஞ்சம் சிக்கல்தான் எனென்றால் பள்ளர்களிடமும் அரிவாள் தூக்கும் எக்ஸ்பார்ட் ஆளுக உள்ளனர் கொன்றவன் அதிமுக அரசு இருக்கும் வரை கொஞ்சம் சுதந்திரமாக நடமாடலாம் அப்புறம் அவன் என்ன ஆவானோ தெரியல ஊம் கேமராவில வேற அவிங்க மூஞ்சி பதிவாயிடுச்சு

         by
         p.joseph

         பள்ளர்கள் திருப்பி அடிக்க தயாராக தான் உள்ளார்கள். அத்தகைய நிலை சங்கரின் அருந்ததியர் சமுகத்துக்கு வர வெகு தொலைவில் இல்லை….

     • ஒரு வர்க்க போராளி மக்களை உழைக்கும் வர்க்கம், முதலாளித்துவ வர்க்கம் என்று தான் பிரிப்பனே தவிர உங்களை போன்று ஆண்ட சாதி, அடிமை சாதி என்று எல்லாம் பிரிக்கமாட்டான். இந்த கட்டுரை சுட்டிக்காட்டும் ஆதிக்க சாதிகளான வன்னியன் , தேவன் , நாடான் போன்ற சாதியை சேர்ந்தவர்கள் ஆணவ கொலைகளில் ஈடு படுவார்கள் எனில் அதற்காக அந்த சாதியை சேர்ந்த அனைவருமே ஆதிக்க நிலையில் உள்ளார்கள் என்று பொருள் அல்ல. அவர்களில் பலரும் உழைக்கும் மக்களாக தான் உள்ளார்கள். அத்தகைய உழைக்கும் மக்களின் இட ஒதுக்கிட்டை பறிக்க கோருவது முட்டாள் தனம் மட்டும் அல்ல. அது நயவ்ஞ்சக தனமும் கூட தான்.

      அத்தகைய கயமையான செயலை எவர் செய்தாலும், ம க இ கவாக இருந்தாலும் அது எதிர்க்க வேண்டிய ஒன்று தான். என் கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்க எவருமே முன் வரவில்லை. ம க இ க இட ஒதுக்கீட்டை ஆதரிகின்றதா இல்லையா என்பதையாவது விளக்கவும்.[விரிவான பதில்தேவை ] பிற்பட்டவர் இட ஒதுக்கிட்டை ரத்து செய்ய கோருவது தான் சாதி வெறி ஆணவ கொலைகளுக்கு தீர்வா?[tell yes or no and explain]

      • அனைத்து சாதியிலும் உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள். இடஒதுக்கீடு பொருளாதார அளவுகோலைக்கொண்டு கொடுக்க வேண்டும் என்று கூறவருகிறீர்களா? இங்கு இடஒதுக்கீடு உழைக்கும் மக்கள் என்பதற்காக கொடுகப்படவில்லை. சாதி அளவுகோலைக்கொண்டு கொடுக்கப்படுகிறது.

       அவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுகோலுக்கேற்பவே ஆண்ட பரம்பரை சாதிகளுக்கு எதற்கு இடஒதுக்கீடு. ஆதிக்கம் செய்யும் சாதிகளுக்கு எதற்கு இடஒதுக்கீடு?

       • தலித் இனத்து மனிதர்கள் கூட தான் தங்களை ஆண்ட பரம்பரை என்று கூறிக்கொள்கின்றார்கள். தேவேந்திர குல வெள்ளாளர்கள் கூட தான் பிஜேபி தலைவரை அழைத்து எங்களுக்கு SC இட ஒதுக்கீடு வேண்டாம் நாங்கள் ஆண்ட பரம்பரை என்று மாநாடு போட்டு அறிவிக்கின்றனர். அதற்காக ஒட்டு மொத்தமாக தலித் இனத்துக்கே இட ஒதுக்கீடு வேண்டாம் என்பீர்களா? நீங்கள் சுட்டிக்காட்டும் ஆணவ கொலைகளுக்கும் , ஆண்ட பரம்பரை என்று பிற்றிகொள்ளும் நிலைக்கும் சற்றும் தொடர்பற்றது இடஒதுக்கீடு.. எனவே உங்கள் விவாதம் தவறு

        • சாதி பாகுபாடு இல்லாமல் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீரா என்ற என் கேள்விக்கே பதிலில்லையே?
         பல நூறு ஆண்டுகளாக சாதி திமிர் கொண்டு அரிவாள் தூக்கும் ஆதிக்க சாதியையும் சாதி ஒடுக்குமுறையிலிருந்து ஆசுவாசப்படுத்த ஒரு சில தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை மன்னர் பரம்பரை என்று கூறுவதையும் எப்படி சம்ப்படுத்தமுடியும். முன்னது கொலை செய்கிறது ஆதிக்கம் செய்கிறது, செருப்பு போட்டால் வெட்டுகிறது, இத்யாதி இத்யாதி.

         இரண்டையும் சமப்படுத்த குரூர மனம் வேண்டும். தலித்களின் அமைப்பையும் ஆதிக்க சாதிகளின் அமைப்பையும் இரண்டும் சாதி அமைப்புகள் என்று கூறி சமப்படுத்துவதைப் போல.

         • தலித் மற்றும் பிற்பட்ட மக்களின் சமுக-பொருளாதார முன்னேற்றத்தை மையமாக கொண்டது தான் இடஒதுகீடு தானே தவிர அது ஒன்றும் வர்க சமநிலைக்கான சீர்திருத்த முயற்சி அல்ல. மேலும் …. refer my feedback 2.1.2.1.2.1.2

          //சாதி பாகுபாடு இல்லாமல் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீரா என்ற என் கேள்விக்கே பதிலில்லையே?//

         • பூலித்தேவனின் ஆட்சியில் தலித் அருந்ததியர் சமுகத்தை சேர்ந்த ஒண்டி வீரன் வீர கதை எல்லாம் உங்களுக்கு மறந்தது ஏன் ? நான் அறிந்தவரையில் பிற்படுதப்ட்ட-தலித் மக்களிடையேயான சமுக பூசல்கல் இந்த நூற்றாண்டில் தான் முதன்மை பெற்று இருக்கவேண்டும். பல நூற்றாண்டு சமுக பூசல் என்று எல்லாம் கூற வேண்டிய அவசியம் என்ன?

          //பல நூறு ஆண்டுகளாக சாதி திமிர் கொண்டு அரிவாள் தூக்கும் ஆதிக்க சாதியையும் சாதி ஒடுக்குமுறையிலிருந்து ஆசுவாசப்படுத்த ஒரு சில தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை மன்னர் பரம்பரை என்று கூறுவதையும் எப்படி சம்ப்படுத்தமுடியும்//

         • ஆண்ட பரம்பரை என்று எவர் பீர்ரிகொண்டாலும் அது வக்கிரம் தான் என்பது மனோஜ்க்கு ஏன் புரியவில்லை?

          ஆண்ட பரம்பரை என்று எவர் பீற்றிகொண்டாலும் அது வக்கிரம் தான் என்பது மனோஜ்க்கு ஏன் புரியவில்லை? பார்பனர்கள் தெருவில் வன்னியர்கள் செருப்பு போடாமல் நடந்த கதை முந்தைய 75 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தான் இருந்தது. திருவண்ணாமலை போளூர் அருகில் உள்ள கிராமத்தில் பார்ப்னர்களிடம் நிலத்தை குத்தகைக்கு பெற்ற வன்னியர்கள் பார்பனர்களை போன்றே அவர்களுக்கு அடிமையாக அந்த ஊரில் சைவ உணவு உண்ட கதை எல்லாம் கூட தமிழ் நாட்டில் உண்டு. தலித் பெண்கள் வட தமிழ் நாட்டில் மேலாடை அணிய உரிமையுடன் இருந்த போது தென் தமிழ் நாட்டில் நாடார் வீட்டு பெண்கள் திருவாங்கூர் அரசின் ஆளுமையில் மேல் ஆடை அணிய உரிமை அற்று தான் இருந்தார்கள்.

          ஆமாம் மனோஜ் ஒரு தலித் சாதியை சேர்ந்தவர் (உம் தேவேந்திர குல வெள்ளாளர்) சாதி ரீதியாக அவருக்கும் கீழ் உள்ள மக்களிடம் (உம் இருளர்,அருந்ததியர் மக்களிடம் ) தன் சாதிய ஆளுமையை காட்டினார் என்றால் அந்த தலித் இனத்துக்கே இட ஒதுகீட்டை ரத்து செய்ய கூறுவீர்களா ?

       • இன்றைய காலகட்டத்தில் ஆம் ஒவொரு சாதியின் சமுக-நில உடமை நிலையை கணக்கில் கொண்டு தான் இட ஒதுக்கிடு அந்த அந்த சாதியினருக்கும் கொடுக்கபடுகின்றது. சாதிகளும், சாதிய படிநிலைகளும் இருக்கும் வரையில், அவை தமிழ் சமுகத்தில் இருந்து அழிக்கப்படும் வரையில் கண்டிப்பாக தலித் மற்றும் பிற்பட்ட சாதி மக்களை முன்னேற்ற இட ஒதுக்கிடு அவசியம் ஆகின்றது.

        கம்யுனிச ஆட்சியில் கம்யுனிஸ்டுகள் எப்படி இட ஒதுக்கிடு அளிப்பார்கள் என்பதனை ம க இ க வினர் தான் விளக்க வேண்டும்.

      • சரியா சொன்னேள். நம்மவா நெறய பேரு ஒரு வேளை சோத்துக்குகூட கஷ்டப்படுறா. சின்னதுகளைகூட சமையல் வேலைக்கு கூட்டிண்டு போறதுகள். அதுகளுக்கு ஒரு இடஒதுக்கீடு கொடுக்கனும்னு உங்கள மாதிரி சிலர் தான் நெனச்சுபாக்குறா. நீங்க நன்னா இருப்பேள்.

  • /எல்லா சாதியிலுமே சாதி வெறியர்கள் இருக்க தான் செய்கிறார்கள். அதற்காக இட ஒதுக்கிட்டில் கை வைப்பது தான் தீர்வா?/

   சரியான கேள்வி என்.எச் 45. எங்கவா யாரோ செஞ்சதுக்காக நேக்கு இடஒதுக்கீடு கெடக்காம செஞ்சது சரியா? நன்னா கேளுங்கோ.

   • நான் 2.1.1 ல் எழுப்பும் கேள்விகளுக்கு உங்களுக்கு திராணி இருந்தால் பதில் சொல்லுங்க அண்ணாச்சி.

    • நீங்க சரியாத்தானே கேக்குறேள். நம்மவாலேயும் சிலர் அப்படி இப்படித்தான் இருப்பா அதுக்காக ஒட்டுமொத்தமா இடஒதுக்கீடு கூடாதுனா எப்படி? இப்படி நாலு பேர் கேக்க ஆரம்பிச்சாத்தான் சரிவரும். நான் உங்கள சப்போர்ட் பண்றேன்.

     • நான் உங்களுடன் முரண் படுகிறேன்….

      சாதிய ஆணவ கொலையாளிகளை சமுகத்தில் இருந்து தனிமைபடுத்தி தேவை பட்டால் அழித்து ஒழிப்பது தான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

      //நான் உங்கள சப்போர்ட் பண்றேன்.//

      • எல்லா சாதியிலேயும் சாதி வெறியர்கள் இருக்கிறார்கள் என்பதும் அதற்காக இடஒதுக்கீடை மறுக்ககூடாது என்ற உங்கள் கருத்துதான் எனக்கும். பிராமணாளுக்கும் இட ஒதுக்கீடு கொடுங்கோ என்கிறேன். ஏன் முரண்படுறேள்?

       • அம்பி உங்க உச்சி குடிமியை நன்னா தான் ஆட்டறேல்

      • எங்களாவா யாரெல்லாம் சாதி ஆதிக்கம் பண்றாளோ அவாள தனிமைப்படுத்தினுன்டு மத்தவாளுக்கு இடஒதுக்கீடு கொடுங்கோ. சரிதானே.

  • கையில ரத்தம் சொட்டும் வீச்சரிவாளோட அடுத்தவன் தலையில் குடுமியை தேடினால் நீயும் typical பேண்ட பரம்பரையே.

   • சாதிய அடுக்குகளில் எல்லாருமே பேண்ட பரம்பரை தான். தான் சமுக பொருளாதார நிலையில் தாழ்ந்து இருந்தாலும் தன் சாதியை உயர்தி தனக்கும் சமுக-பொருளாதார நிலையில் கீழ் உள்ள சாதிகளை அடக்க முயலும் நிலை தான் சாதிய அடுக்குகளில் இந்த அனைத்து சாதிகளுமே தவிர்க்க இயலாத அம்சம்.

    • தலித்களையும் தலித்களை தாக்கும் ஆதிக்க சாதி வெறியையும் சமப்படுத்தி பார்ப்பதை தவிர கயமைத்தனம் வேறில்லை.

 3. (Please translate in tamil)

  I am dalith,i have partipacated makkal nala koottani valluvarkottam kandana aarpaattam,no body nottell and use word devarcaste sametime periyaarthidal kandana koottam against elavarasan murder thiru and veeramani nottell and use word vanniarcaste and many movement including communist also not mention caste.
  by selvan

  • அது ஒன்றுமில்லை செல்வம் நீங்கள் சொல்லும் ‘கம்யூனிஸ்டு’ முதல் தி.க. அவரை அனைவரும் ஆதிக்க சாதியினரின் மனம் புண்படாமல் சாதி வெறியை எதிர்க்கிறார்களாம்.அதனால்ட்தான் அவர்களின் சாதிப் பெயரை கூறுவதில்லையாம்….

 4. I am dalith,i support only communist ml nexalpari movements/partys. in my life experiance i tell you,dalith people including educational,ambedkar,name of ambedkar movemnents/parts also really didnot demolish,erotic caste and in future also do not demolish,erotic in caste because no policy,no philasaphy,Good party,Good movement.All are reforms and pettion,pray,protest,bargaining finally compromised,most of the people thoughts free education,reservation govt job,free scheme from govt,slavary mind,accepted all panishments,they are asking always free,free do not come agitation ,anti communists thoughts ,Dalith freedom will be get very too long.when will get new democracy under head of the communist ml nexalpari movements then only this problem will be solved it is true.
  By Selvan (Sorry on behalf on writing english)

 5. பிற்படுத்தபட்ட – தலித் மக்களிடையே உள்ள குறைந்த பச்ச சமுக நல்லிணக்கத்தை கூட கொத்தி குதறும் ம க இ க வின் கிழ் உள்ள கோரிக்கை குள்ளநரி தனத்தை வன்மையாக கண்டிகின்றேன்.

  //ஆணவக்கொலை செய்யும் சாதிகளுக்கு இடஒதுக்கீடை ரத்து செய்//

 6. பெயர் குழப்பம் ஏற்பட காரணம் என்ன என்று தெரியவில்லை. அதற்கு நான் காரணம் இல்லை. சரி பரவாயில்லை… என் ஹச் 45 , கிரீஸ் ஆகிய இரு பெயர்களிலும் என் கருத்துகள் வந்தமைக்காக வருந்துகிறேன்… இனி கிருஷ்ணமுர்த்தி என்ற பெயரிலேயே என் பின்னுட்டங்கள் தொடரும்….

 7. சாதி ஆணவக் கொலையாளிகளை தனியாக சமூக தூண்டுதல் இல்லாமல் நடந்து கொண்டவர்கள் எனபது போலவும் , அவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு தரக்கூடாது எனபது போலவும் விவாதம் செல்கிறது .

  இந்த கொலையில் பெண்ணின் தந்தை , உறவினர்கள் கேவலமாக பேசியதால் தான் இத்தகைய முடிவை எடுத்தேன் என்று சமூகத்தின் தூண்டுதலை தெளிவாக கூறி இருக்கிறார் .

  நாம் அண்ணன் தம்பியாக பழகும் பிற கிராமத்தை விட்டுவிடுவோம் . குறைந்த பட்ஷம் , அந்த கிராமத்தில் உள்ள அந்த அனைவருக்கும் இடஒதுக்கீடு தகுதி இழப்பு செய்யப்பட வேண்டும் .

  இப்பொழுது அதே கிராமத்தில் யாரவது நல்லவர்கள் இருந்தால் ? இது போன்ற கொலைகளுக்கு எதிராக கருத்துகளை அவர் ட்விட்டர் அல்லது பேசே புக் இல் கருது பதிவு செய்து இருந்தால் அவர்களுக்கு அளிக்கலாம்

  இட ஒதுக்கீடு என்பதற்கு சாதி சான்றிதழ் மட்டும் துருப்பு சீட்டாக இல்லாமல்

  1. அவர் ஆணவ கொலைகள்/தீண்டாமை நடந்த கிராமத்தை சேர்ந்தவர் அல்ல
  2. ஆணவ கொலைகொலை/தீண்டாமை அங்கீகரித்து பொது சமூக வெளியில் கருது பதிவு செய்தவர் அல்ல
  3. ஆணவ கொலை/தீண்டாமை நடந்த கிராமத்தை சேர்ந்தவர் ஆனாலும் அதை எதிர்த்து கருத்துகளை வெளி இட்டவர்
  4. அவர் கிராமத்தின் கோவிலில் அணைத்து சமூகத்தினரும் சென்று வணகலாம்

  என்பதை கிராம பஞ்சாயத்து தலித் குழு தர சான்றிதழ் தர வேண்டும் . அதன் பிறகே இட ஒதுக்கீடு தர பட வேண்டும் எனபது எனது கருத்து

 8. கடந்த நூற்றண்டில் முன்னெடுக்கபட்டது பிராமணர் அல்லாதோர் அரசியல்.. அதே போல இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் முனெடுக்க படுவது தலித் அல்லாதோர் அரசியல்… விரைவில் பிராமனர்கலுக்கு ஏர் பட்ட நிலையெ உங்களுக்கும் ஏர்படும்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க