privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமூடு டாஸ்மாக்கை - தொடரும் மக்கள் போராட்டம்

மூடு டாஸ்மாக்கை – தொடரும் மக்கள் போராட்டம்

-

ஓட்டுப்பொறுக்க அரசியல் ரவுடிகள் ! பொறுக்கி தின்ன அதிகாரிகள்!!

shutdown-tasmac-vpm-black-flag-protest-8விழுப்புரம் மாவட்டம் அயினம்பாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த 2-ம் தேதி முதல் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 5-ம் தேதி டாஸ்மாக் கடை எதிரே அமர்ந்து முழக்கமிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள், கிராம மக்கள் அனைவரையும் கடுமையாக தாக்கியது காவல்துறை.

தொடர்ந்து 6-ம் தேதி கடை எதிரே அமர்ந்து போராட்டம் நடத்திய கிராம மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்றது காவல்துறை. விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் இருதயமேரி, “கடையை எங்களால் மூட முடியாது. அதற்கான அதிகாரம் எனக்கு இல்லை. எங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள் கலெக்டரிடம் பேசி முடிவெடுக்கிறோம்” என்று கூறியதால், கோபமடைந்த கிராம மக்கள் “கடையை இன்றே மூடுவது என்றால் மூடுங்கள் இல்லையேல் எங்கள் போராட்டம் தொடரும்” என்று அறிவித்து விட்டு வந்தனர்.

நேற்று இரவு 7 மணி முதல் கிராமத்தில் உள்ள அனைவரின் வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றி விட்டனர். “எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடும் வரை கொடியை அகற்ற போவதில்லை” என அறிவித்து விட்டனர். பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானதால் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர் அதிகாரிகள்.

shutdown-tasmac-vpm-black-flag-protest-5குறிப்பாக அ.தி.மு.க.-ன் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் சிந்தாமணி சேவல் வேலு இன்று கிராமத்திற்குள் ஓட்டு கேட்க வருவதால் அ.தி.மு.க.-ன் அல்லக்கைகளும், அதிகாரிகள் ஆர்.ஐ மற்றும் வி.ஏ.ஓ-க்கள் அன்பழகன், உதயகுமார், பால்ராஜ் ஆகிய மூன்று பேரும் கிராம மக்களிடம் கொடியை எடுக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜை போனில் தொடர்பு கொண்டு “வீடுகளில் கட்டியுள்ள கருப்புக் கொடியை எடுக்க சொல்லுமாறு” கேட்டுள்ளனர். “மக்கள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என போராடி வருகிறார்கள். இது மக்கள் முடிவு” என்று கூறியுள்ளார்.

கிராம மக்களும் கொடியை எடுக்க முடியாது என்று கூறியதும், அதிகாரிகளும், அம்மாவின் அல்லக்கைகளும் வீடு வீடாக சென்று கொடியை பிடுங்கி எறிந்தனர்.

DCCver0077

கிராமத்தின் 3-வது தெருவிற்குள் நுழைந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதும், “யாரைக் கேட்டு கொடியை நட்டீர்கள்” என்று பாய்ந்தார்கள் அ.தி.மு.க.-ன் அல்லக்கைகள். அதற்கு மக்கள், “நீங்களும் தான் கொடி கட்டியுள்ளீர்கள். அதை யாரைக் கேட்டு நட்டீர்கள்” என்று கேட்டதும் அமைதியாகி விட்டனர்.

அதிகாரியோ, “இது தேர்தல் நேரம். இது போல் எதுவும் செய்யாதீர்கள். நாங்கள் டாஸ்மாக் கடையை எடுப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்கிறோம், தயவு செய்து கொடியை கழற்றி விடுங்கள்” என்று நைச்சியமாக கூறினார்.

shutdown-tasmac-vpm-black-flag-protest-6கொதிப்படைந்த மக்கள் “நாங்கள் மழை வெள்ளத்தில் தவிக்கும் போது நீங்கள் வரவில்லை, கடையை மூட சொல்லி நாங்கள் போராடும் போது வரவில்லை, இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீங்கள் வருகிறீர்கள், உங்களால் முடிந்தால் கடையை மூடி விட்டு ஊருக்குள் வாங்க” என்று மக்கள் அதிகாரிகள் முகத்தில் காரி உமிழவே வெட்கமின்றி ஓடிவிட்டனர்.

ஓட்டுக்கேட்டு வந்த தொகுதி வேட்பாளரோ, கிராம மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராததால், வந்த சீக்கிரம் தெரியாமல் திரும்பிவிட்டார்.

இந்த அரசையோ, ஓட்டுக்கட்சிகளையோ நம்புவதனால் டாஸ்மாக் கடைகளை மூட முடியாது. மக்கள் அதிகாரம் தான் கடைகளை மூடும் என்பதில் உறுதியாக நின்று போராடி வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்

may5-shutdown-tasmac-madurai-prpc-poster

shutdown-tasmac-may5-pp-poster

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க