Friday, December 9, 2022
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்நீதிபதிகள் ஆண்டைகளா ? திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள் !

நீதிபதிகள் ஆண்டைகளா ? திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள் !

-

நீதிபதிகள் ஆண்டைகளா ? அவர்களின் அடிமைகளா நாம் ?

பொதுக்கூட்டம்

12.08.2016 வெள்ளி, மாலை 5 மணி, உறையூர் கடைவீதி, திருச்சி.

தலைமை:
தோழர் காளியப்பன்
பொருளாளர், மக்கள் அதிகாரம்

சிறப்புரை:
வழக்கறிஞர் பாலன்
பெங்களூர் உயர்நீதிமன்றம்

வழக்கறிஞர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

***

திரு.மு.அன்பழகன்
முன்னாள் துணை மேயர்
தி.மு.க. மாநகர செயலாளர், திருச்சி

திரு.திருச்சி வேலுச்சாமி
செய்தி தொடர்பாளர்
காங்கிரஸ், தமிழ்நாடு

தோழர் இந்திரஜித்
மாநில குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திருச்சி

வழக்கறிஞர் பார் வேந்தன்
மாநிலச் செயலாளர், வழக்கறிஞர் அணி
விடுதலை சிறுத்தைகள் கட்சி, சென்னை

வழக்கறிஞர் சகாபுதீன்
இணை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, திருச்சி

ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி

அலை அலையாக அணி திரள்வீர் !

144x60-inches

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321

 1. நீதி ‘அரசர்’ கள்

  நீதிபதிகள் எல்லாம் இப்போது விளம்பர பிரியர்களாக மாறிவிட்டனர். சரவதிகாரிகள் போல் சொன்னது நடக்க வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். அராஜகம் செய்கின்றனர் என்றார் ஒரு வக்கீல் நண்பர். இன்றைய சூழ்நிலையில் வக்கீல் வேறு எப்படி சொல்வார் என்று தோன்றியது.
  ஆனால் சென்னை பிராட்வேயில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை அங்கிருந்து இருந்து எடுத்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கும் நீதிமன்றத்தின் போக்கு கொஞ்சம் முகம் சுளிக்கத்தான் வைக்கிறது.
  அதிலும் செப்.9ம் தேதிக்குள் அதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று இ்ப்போது உத்தரவிட்டுள்ளனர். பிராட்வேயில் இருக்கும் சட்டக்கல்லூரியை அகற்ற வேண்டும் என்பதில் தமிழக அரசு ஆர்வமாக இருக்கிறது. காரணம் சத்தியமாக புரியவில்லை.
  அதற்காக ஒரு குழுவை அமைத்தது. அந்தக்குழுவுன் அமைத்த காரணத்தை கச்சிதமாக பரிந்துரையாக சொன்னது. கல்லூரியை அகற்றவிட வேண்டும் என்று.
  அரசின் விருப்பம் தெரிந்ததும் உடனடியாக வழக்குகள் தொடரப்பட்டது. எதிர்த்தும் வழக்குகள் சென்றன. நீதிமன்றம் ஆதிக்க உணர்வில் செயல்படுகிறது என்பதற்கு உதாரணமாக கல்லூரியை அகற்ற வேண்டும் என்றது.. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்தான் இப்போது அதிகம் சட்டம் படிப்பதும் முக்கிய காரணம் என்று சொல்லத் தேவையில்லை.
  தலைமை நீதிபதி சொன்னார், ‘உலகத்திலேயே நீதிமன்ற வளாகத்தில் சட்டக்கல்லூரி செயல்படுவது சென்னையில்தான்.அதனால் அகற்ற வேண்டும் என்கிறார். சட்டம் படிப்பவனுக்கு அதுதான் வசதி என்ற அடிப்படை அறிவுக்கு கூட மக்களுக்கு இல்லாததால் யாரும் கணடுக்கொள்ளவில்லை.
  இந்த முடிவை வக்கீல்கள் , அவற்றின் சங்கங்கள் கண்டுக் கொள்ளவில்லை. மாணவர்களை கண்டுக் கொள்ளவில்லை. இன்ற அவர்களுக்கு ஆப்பு வைத்து விட்டனர நீதிபதிகள்.
  சட்டக்கல்லூரியை ஆதரிப்பவர்கள் சொல்லும் காரணம் மாணவர்கள அடிக்கடி போராட்டம் நடத்தினால் போக்கவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிமை புத்தி தலைதூக்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் போராடுவதெல்லாம தேச துரோகம்.
  அதிலும் சட்டக்கல்லூரி மாணவர்களும், வக்கீல்களும் ஈழத்தமிழர பிரச்னையில் காட்டியத் தீவிரம்தான் இன்று சட்டக்கல்லூரி பிரச்னைக்கும்், வக்கீல்களின் சங்கடத்திற்கும் காரணம்்.
  நீதிமன்றத்தில் எவ்வளவு வழக்குகள் இருக்கின்றன. ஆனால் நீதிமன்றத்தில் ஹெல்மெட், சிவாஜி சிலை தவிர வேறு இருப்பதாக தெரியவில்லை.
  முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூட நீதிபதிகள வரம்பு மீறலை கண்டித்துள்ளார. சட்டங்களின் படி தீர்ப்பு சொல்வதை விட புதிய சட்டஙகளை உருவாக்க நீதிபதிகள் ஆசைப்படுகின்றனர்.
  இது மிகவும் ஆபத்தானது. நீதிபதிகள நியமனத்தில் ஒரு நீதிபதி அழுகிறார். இன்னொரு நீதிபதி பிரதமர் உரையை குறை சொல்கிறார். மோடி அரசியல்வாதி. நீதிபதி ஒரு அரசியல்வாதியை, அரசு நிர்வாகியை வெளிப்படையாக விமர்சனம் செய்தால் அவர் தீர்ப்புகள்
  கேள்விக் குறியாகாதா?
  இவர்கள் நீதிபதிகளை தேர்வு செய்கிறார்கள. 300க்கு மேல் காலியிடங்கள் இருக்கும் போது எதற்கு வெறும 70களல் தேர்வு செய்து அரசின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டும். மொத்த காலியிடங்களுக்கும் நீதிபதிகளை தேர்வு செய்ய வேண்டியதுதானே இவர்களை யார் தடுத்தார்கள்.
  இப்படி யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் மீது அவமதிப்பு வழக்கு ஆளும் அரசியல்வாதிகளுக்கும் நீதிபதிகளுக்கும் அப்புறம் என்ன வித்தியாசம்தான் இருக்கிறது?ர

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க