privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்தி13 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய் !

13 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய் !

-

13 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யும் வரை போராட்டம்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு

lawyers-barred-by-bar-council-demo-posterமதுரையில் ஊழல் நீதிபதிகளை அம்பலப்படுத்தி தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் 2015 செப்டம்பரில் பேரணி நடத்தினர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, எந்தவித விசாரணையும் இல்லாமல், அகில இந்திய பார்கவுன்சில் உடனடியாக 13 வழக்கறிஞர்களை தொழில் செய்ய தற்காலிக தடை விதித்தனர்.

கடந்த ஓராண்டாக மேலாக கர்நாடக மாநிலத்தில் 13 வழக்கறிஞர்கள் மீதான விசாரணை நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணையின் பொழுது பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் மீது சுமத்திய எந்த குற்றச்சாட்டையும் பருண்மையாக நீருபிக்க முடியாவிட்டாலும், தாங்கள் முன்கூட்டியே எழுதி வைத்த தீர்ப்பான ஐந்து வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்ய வாழ்நாள் தடையும், எட்டு பேருக்கு மூன்றாண்டுகள் தடை என்பதை அறிவித்துள்ளனர். இந்த தண்டனை என்பது தூக்குத் தண்டனைக்கு இணையானது.

lawyers-barred-by-bar-council-demo-3பல பத்தாண்டுகளாக நீதிபதிகளின் ஊழல்கள் அனைவரும் அறிந்த ரகசியமாய் இருந்தாலும், 1947-க்கு பிறகு எந்த நீதிபதியும் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டதில்லை. நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்களே இப்பொழுது அம்பலப்படுத்திவிட்டார்கள். இதை இப்படியே விட்டுவிட்டால், நீதிபதிகளின் ஊழல்களை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்துவார்கள் என்பதற்காகத்தான், அனைவருக்குமான எச்சரிக்கையாகத்தான் இப்படியொரு அநீதியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

வழக்கறிஞர்களின் உரிமைகளை பறிக்கும் இந்த அநீதியான தீர்ப்பை கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (MHAA) தலைமையில் வழக்கறிஞர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் 28-09-2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

lawyers-barred-by-bar-council-demo-4ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொண்ட வழக்கறிஞர்கள் பலரும் இந்த அநீதியான தீர்ப்பை கண்டித்து பேசினார்கள். சென்னை உயர்நீதிமன்ற சங்கத்தின் செயலர் வழக்கறிஞர் அறிவழகன் பேசும் பொழுது, “இந்தத் தீர்ப்பு மிகவும் அநீதியானது. இந்தப் போராட்டம் ஒரு துவக்கம் தான். வழக்கறிஞர்கள் மீதான தடையை நீக்கும்வரை போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்” எனப் பேசினார்.

  • கர்நாடக பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை உத்தரவால் மதுரை வழக்கறிஞர்கள் ஐவருக்கு தொழில்புரிய வாழ்நாள் தடை!
  • எட்டு பேருக்கு மூன்றாண்டுகள் தடை!
  • அகில இந்திய பார்கவுன்சிலே!
  • அநீதியான உத்தரவினை ரத்து செய்!
  • வழக்கறிஞர்களின் உரிமைகளை பறிக்காதே!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் : வழக்கறிஞர்கள்,
தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க