Thursday, January 28, 2021
முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது !

டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது !

-

டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது ! விடாதே !
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு !

டெல்லியை அடக்கினால் அச்சப்படும் அடங்கிப்போனால் நம்மை விரட்டும் !

 • தமிழகத்தின் மாணவச் சமூகமே, பிடி இருகட்டும், டெல்லியின் கொம்பை பிடி விடாதே இம்முறை மோடியின் பொய், பித்தலாட்டத்திற்கு ஏமாறக்கூடாது. சென்னை மெரினா முதல் தென்குமரி வரை காளையில் பற்றியத் தீகாட்டுத்தீயாக தமிழகத்தின் உரிமைக்காக டெல்லியைப் பொசுக்கட்டும். சிறைபட்டது காளை மட்டுமல்ல, காவிரி மட்டுமல்ல, கல்வி உரிமை மட்டுமல்ல, தமிழர் பண்பாடு மட்டுமல்ல மொத்த தமிழினமும்தான். டெல்லி ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் உரிமைப் போராட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
 • 7 கோடி மக்களின் பிரதிநிதிகளான தமிழக எம்.பி.க்களை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். காவிரியை தடுத்த மோடியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம், செய்யாத குற்றத்திற்கு டெல்டா விவசாயமே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளது. எந்த சட்டமும் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒரே இரவில் செல்லாது என 100 கோடி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடியால், ஜல்லிகட்டு நடத்த முடியாதா? செத்துப்போன மொழியான சமஸ்கிருதத் திணிப்பு பள்ளிகளில் சி.பி.எஸ்இ. பாடத்திட்டம் திணிப்பு: தமிழக மாணவர்களை நடுத்தெருவில் நிறுத்த நீட்தேர்வு.
 • திராவிடத்தை அழிப்பேன் என சூளுரை. பெரியார் சிலை இடிப்பு. தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க மீத்தேன், ஷேல்கேஸ், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை போன்ற அழிவுத்திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தில் குவிப்பது எதிர்த்துப் போராடினால் தேசத்துரோக வழக்கு. டெல்லி கோர்ட்டில் ரவுடித்தனம் செய்த பாஜக வக்கீல் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஊழலுக்கு எதிராகப் போராடிய தமிழக வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி என போராடியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் மத்திய பாதுகாப்பு படை.
 • இல்லாத சரஸ்வதி நதியை தேட 100 கோடி ஒதுக்கிய மோடி அரசு, உலக வரலாற்றை திருப்பிப்போடும் – தமிழர்களின் தொண்மையை நிருபிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சியை தடுக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி பாபர் மசூதியை இடித்தார்கள் கடலுக்கடியில் ராமர் பாலம் என்று கூறி சேதுகால்வாய் திட்டத்திற்கு தடைவிதித்தார்கள். தமிழர்கள் போராடினால் ஆட்சியைகலைப்பேன் என அச்சுறுத்துகிறார்கள்.
 • சொந்த பந்தங்களோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய பொங்கல் நாள் போர்க்களமாக மாற்றியது அதிகார வர்க்கத் திமிரின் உச்சக்கட்டம். நம் ஊரில் வந்து நம்மாட்டை விடாதே என வாடிவாசலை மறித்து அடிப்பதும் கைது செய்வதும், கணக்கெடுப்பதும், மிரட்டுவதும் – என்ன நடக்கிறது? தமிழகத்தில் பிஜேபி. ஆட்சியா அல்லது அடிமைகளின் ஆட்சியா?
 • உச்சநீதிமன்ற உத்திரவுகளை தினம்தோறும் மீறுவது இந்த ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ் அதிகாரிகள்தான். தீர்ப்புகளை குப்பைக் காகிதமாக கருதுவது மத்திய – மாநில அரசுகள்தான். காலம் காலமாக ஜல்லிகட்டு நடத்தும் மக்களை பார்த்து கட்டப்பஞ்சாயத்து நீதிமன்ற உத்திரவிற்கு கட்டுப்படு என சொல்லும் தகுதி, அருகதை இவர்களுக்கு கிடையாது. வாழ்வுரிமைகளை நசுக்கி, வாழ்வாதாரங்களை அழித்து தமிழர்களை மிதிக்கும் டெல்லியின் காலை முறிக்காமல் விடக்கூடாது.

Front

உச்சநீதிமன்றதீர்ப்பை…

 • காவிரியில் கர்நாடகா மதிக்கவில்லை, முல்லைப் பெரியாரில் கேரளா மதிக்கவில்லை, மனித பிரமிடு கூடாது என்ற உத்திரவை மகாராஷ்டிரா மதிக்கவில்லை, நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசே மதிக்கவில்லை. ஜல்லிகட்டில் தமிழகத்தை கட்டுப்படுத்த என்ன அருகதை இருக்கிறது?
 • சுப்பிரமணியசாமி, தமிழன் கட்டிய சிதம்பரம் கோவிலை தீட்சதர்களுக்குக் கொடு என சொன்னான், உச்சநீதிமன்றமும் கொடுத்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ்நாட்டில் மட்டும் கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்.
 • ஜல்லிக்கட்டு தொன்மையான தமிழர் பண்பாடு என்கிறோம். கம்ப்யூட்டரில் விளையாடு என தமிழினத்தை கேலி பேசுகிறார் டெல்லி நீதிபதி தமிழனுக்கு இழைக்கும் அநீதி – மோடியும், உச்சுக்குடுமி மன்றமும் சொல்லும் மனுநீதி. பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, தமிழின் தொன்மை, பகுத்தறிவு, திராவிடக் கொள்கை களில் தமிழகம் அடையாளமாக நிற்கிறது. இதனால் உச்சநீதிமன்றம், டெல்லி மத்திய அரசு, வட இந்திய ஊடகங்கள் அனைத்திற்கும் தமிழ்நாடு என்றாலே ஒரவஞ்சனைதான், வேப்பங்காய்தான்.
 • தமிழர்கள் மீது நடத்தப்படும் தொடர் அடக்குமுறை விளைவினால் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து இன்று காளை மூலம் டெல்லி மீது சீறிபாய்கிறது.

டெல்லி அரசின் உயிர்நிலை வசமாக மாட்டிக் கொண்டது. இம்முறை மாணவர்களின் குறி தப்பாது !

காளையில் பற்றிய தீ தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லியைப் பொசுக்கட்டும் !

Back

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. 99623 66321.

 1. தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே மத்திய அரசில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினருக்கு எப்போதும் இளப்பம் தான். தமிழ்நாடு கடைக்கோடியில் இருக்கும் மாநிலம் என்பதும் ஒட்டுமொத்த இந்தியாவில், தமிழ்நாட்டின் நிலப்பரப்பும் அதன் மக்கள் தொகையும் பத்து சதத்துக்கும் கீழ் உள்ளதும் இயற்கையான காரணங்கள். ஆனால் இவற்றை விட முக்கியமான காரணம் நம் மக்களின் யோக்கியதையும் மாநில அரசியல்வாதிகளின் கடைந்தெடுத்த சுயநலமும் தான். தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் எதிராக இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் சதிகளை அறிவுஜீவி தளத்தில் எதிர்கொள்ள திறமையான அறிவுஜீவி புலம் ஒன்று தமிழகத்தில் கட்டி எழுப்பப்படவே இல்லை. இன்றைக்கும் தமிழகத்தில் மெத்தப்படித்தவர்கள், வெளியுலகம் தெரிந்தவர்கள், உலக நிலவரத்தை அனுசரித்து நடப்பவர்கள், உலகப்புகழ் பெற்ற துறைசார் வல்லுனர்கள் யார் என்றால் அது பிராமணர்கள் தான். ஆனால் தமிழகத்தில் திராவிட அரசியல் மேலோங்கியிருப்பதால் இந்திய அரங்கிலும் உலக அரங்கிலும் தமிழ்நாட்டுக்காக பிராமணர்கள் செயல்படுவதில்லை. எதிராகவே செயல்படுகிறார்கள். திராவிட இயக்கம் செய்த மிகப்பெரிய தவறு என்னவெனில் தமிழுணர்வு கொண்ட சர்வதேச தரம் வாய்ந்த அறிவுஜீவி புலத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளில் கட்டி எழுப்பாதது தான். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் தமிழர்கள் பாதிக்கப்படுவதற்கு இது இன்னொரு காரணம். மாநிலத்தையும் மக்களையும் சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளை பற்றி கவலைப்படாமல் ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை கதைகளை பேசி சாதி உணர்வை மிதமிஞ்சி தூண்டுவது கடைசி காரணம்.

  • //இன்றைக்கும் தமிழகத்தில் மெத்தப்படித்தவர்கள், வெளியுலகம் தெரிந்தவர்கள், உலக நிலவரத்தை அனுசரித்து நடப்பவர்கள், உலகப்புகழ் பெற்ற துறைசார் வல்லுனர்கள் யார் என்றால் அது பிராமணர்கள் தான்//.

   Athavathu in other words “KOOTI KODUPPAVARKAL”

   • அவர்கள் கூட்டிக்கொடுக்கிறார்களோ இல்லையோ. நம்மை காப்பாற்றிக்கொள்ள உலக அளவில் பேர் சொல்லும்படியான அறிவாளிகளை நாம் உருவாக்கித்தான் ஆக வேண்டும். மலையாளிகளை போன்ற ஒரு கற்றறிந்த மக்களை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். கேரளாவுக்கு எதிரான எந்த சதியையும் உலகின் எந்த அறிவுஜீவி தளத்திலும் எதிர்கொள்வதற்கு மிகுந்த கல்வியும் உலக அறிவும் கொண்ட மலையாளிகள் உண்டு. கேரளாவில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களில் ஓணத்துக்கு அளிக்கப்படும் விடுமுறையை ரத்து செய்ய யோசிக்கத்தான் முடியுமா?
    சண்முகம் மாதிரியான ஆட்களுக்கு ‘புரட்சி’ என்னும் பெயரில் ரகளை செய்வதை தவிர மற்ற எல்லாமே கூட்டிக்கொடுப்பது தான்.

    • பெரியசாமி அவர்களின் கருத்தோடு உடன்படுகிறேன்.ஒரு குறிப்பிட்ட வகையானை சாடிக்கொண்டே இருப்பதைவிட,அவன் சூழ்ச்சி தந்திரத்திற்க்கு பலியாகி வதைபட்டு நோவதைவிட அவன் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் வேலையையும் அதற்க்கான ஆயத்தங்களையும்தான் துரிதப்படுத்த வேண்டும்.பெரியார் காலத்திலிருந்து இதே பஜனையைத்தான் நாம் பாடிக்கொண்டிருக்கிறோம்.அவன் வேறு வேறு வடிவம் எடுத்து என்னென்ன வகையிலெல்லாம் நம்மை பிரித்துவைத்து ஆதிக்கம் செலுத்த வேண்டுமோ அந்தந்த வகையிலெல்லாம் தன்னை நிலைநிறுத்தி கொண்டிருக்கிறான்.நாம் தொடர்ந்து பாப்பான்…பாப்பான்…என்று பாடிகொண்டே இருக்கிறோம்.முதலில் வரம்பு மீறிய கேளிக்கை பொழுது போக்கிலிருந்து தமிழன் விடுபட வேண்டும்.கீழ்த்தரமான் சினிமா கேளிக்கைகளில் நம்மை மூழ்க வைத்ததில் திராவிட இயக்க அரசியல் வாதிகளுக்கு மிகமுக்கிய பங்குண்டு.அறிவு பின்புலம் அழிந்து போனதற்க்கும் அதுதான் காரணம்.திராவிட இயக்க துவக்க சிந்தனை சிறப்பாகத்தான் அமைந்தது.முழுக்க முழுக்க சமூகநீதியின் அடித்தளத்தில் அமைந்தது திராவிட இய்க்க எழுச்சி.ஆனால் அதனை அடுத்தடுத்த கட்டத்திற்க்கு நகர்த்தும் கொள்கைவாதிகள் நீர்த்து போனார்கள்.பதவி மோகம் அவர்களை தட்டையாக்கி விட்டது.ஓட்டரசியலுக்கு வராத திக விற்க்கு அந்த பொறுப்பும் வாய்ப்பும் இருந்தும் அவர்க்ளும் அரிச்சுவடி பாடத்தைதான் இன்றும் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.இதுபோக கருணாநிதியையும் துதிபாடவேண்டும்.ஜெயலலிதாவையும் சமூகநீதிகாத்த தேவதையாக்க வேண்டும்.அடிப்படை கொள்கைக்கே வேட்டுவைக்கிற அவர்களின் அரசியல் நிலைபாட்டை “நாங்களும் கண்டிக்கிறோம் பேர்வழி “என்று லேசாக முமுனுப்பார்கள்.இன்னும் பலமடங்கு முன்னுதாரணமாய் வந்திருக்க வேண்டிய மாநிலம் சிக்கி நின்று போனதற்க்கு நீர்த்துப்போன திராவிட இயக்க தலைவர்களின் பங்கு இருக்கத்தான் செய்கிறது.

    • அறிவு தளத்தில் பார்பனர்களை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தை முன்னெடுக்க விரும்பும் பெரியசாமி அவர்கள் தமிழ் நாட்டின் வரலாற்றை ஆதியில் இருந்து இன்று வரையில் சரியாக அவதானிக்கவில்லை என்பதனை நிருபிகின்றார். சங்க இலக்கிய காலத்தில் இருந்து 1950கள் வரையில் தமிழ் நாட்டின் அறிவுத்தளத்தை அரசர்களின் துணையுடன் ஆளுமை செய்தது பார்பனர்கள் தான். அவர்கள் ஆளுமை செய்த இந்த இருபது நுற்றாண்டுகளில் தமிழ் நாட்டுக்காக பார்பனர்கள் என்ன சாதித்துக்கொடுத்தார்கள் என்பதனை முதலில் பெரியசாமி பட்டியல் இடட்டும் … அதன் பின்பு பார்ப்னனர்கள் தமிழ் நாட்டுக்கு செய்யவேண்டிய வரலாற்றுக் கடமைகளை 1950களுக்கு பின்பு வந்த பெரியாரின் திராவிட கொள்கை முன்னெடுப்புகள் எப்படி சீர்குலைத்தது என்றும் பட்டியல் இட்டும்…. அவற்றுக்கு பதில் அளிக்க நான் தயாராக இருகின்றேன்.

  • தமிழ் மக்கள் தமிழர்களாக ஒருங்கிணைய இருக்கும் முதன்மையான தடையே தமிழ் மக்களுக்குள் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் என்பதனை இறுதியான காரணமாக கூறும் பெரியசாமி அவர்களின் இந்த கருத்து தமிழ் நாட்டின் வரலாற்றை திரிக்கும் செயலாகத்தான் எனக்கு படுகின்றது….அறிவு தளத்தில் முன்மையாக பார்பனர்கள் இருந்தார்கள் பிற சாதிக்காரர்கள் அறிவற்று இருந்தார்கள் என்ற இவரின் கருத்தை எப்படி நாம் புரிந்துக்கொள்ளலாம் என்றால் கடந்த இருபது நுற்றாண்டுகளில் அரசர்களின் அரவணைப்பில் வாழ்ந்த பார்பனர்களின் கருத்தாக்கங்கள் அரசியல் தளத்தில் மேலோங்கி இருந்தது என்றும் மக்களிடம் உறவாடிய மக்களிடம் சமுக நற் சிந்தைனையை பரப்பிய சித்தர்களின் ,வள்ளுவர்களின், சமணர்களின் கருத்தாக்கங்கள் அரசர்களால் புறம் தள்ளப்பட்டது உறுதியாக கூறமுடியும்…

   • பெரியசாமிக்கு நல்லபதிலை கூறி உள்ளீர்கள் செந்தில்குமரன். பெரியசாமியின் பதிலில், பார்ப்பனர்களுக்கு இரத்தத்தில் இயல்பாகவே அறிவு கலந்து இருக்கிறது என்றும் ஏனைய சாதி மக்களுக்கு அறிவில்லை என்ற புளித்து போன சரக்கே இருக்கிறது.

  • திரவிட அரசியலுக்கு முன்பு பார்பனர்கள் தமிழக மக்களுக்கு என்ன கத்தை கட்டினார்கள் என்பதை திருவாளர் பெரியசாமி கூறினால் நலமாக இருக்கும்?

  • அய்யா பெரிய சாமி பார்ப்பன அறிவி ஜீவிகளின் ஆங்கில பம்மாத்துகளை நீங்கள் வியந்தேத்துவதே வினோதமாக இருகிறது இது கடவுள் நம்பிக்கையை விட மோசமானது ஆங்கிலேயர் ஏல்லாறும் அறிவிஜீவிகள் என்று நினைக்க வேண்டாம் அவர்களிலும் எளிய மக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு பெரியார் அம்பேத்கர் போன்றவர்களின் எளிமையான கருத்துகலே சென்றடையும் எனென்றால் பொய்களை பேசவே அலங்காரமும் அறிவிஜீவிதனமும் தேவை உண்மையை பேச எந்த அலங்காரமும் அறிவிஜீவித்தனமும் தேவை இல்லை இருந்தாலும் பார்ப்பன அறிவு ஜீவிகள் அலஙாரமாக ஆங்கிலத்தில் பேசி எமாற்றுகிரார்களே என்ற ஆதங்கம் நியாயமானதே அதுக்காக எல்லாரையும் பார்ப்பனன் போன்று நடிக்க சொல்லுவது நியாயமானதா

 2. Please this guys comment on this Nagarkoil Aravindan Neelakandan Pillai’s article
  https://www.vinavu.com/2017/01/20/live-updates-tamilnadu-jallikattu-vs-delh/#tab-comments

  *********************************************************************************
  Avatar
  Vijayaragavan Chakrapani • 8 hours ago

  Excellent article, Aravindan Anna !

  As a person born in Kaveri delta, I too support Jallikattu, for its cultural, ecological and social relevance. But as you rightly said, everyone is missing one very important point , which is also being overlooked by govt and media during this agitation.
  These youth who shout anti-India, anti national party slogans are our future voters in Tamil Nadu. All those nationalists, and patriotic Tamils who live now, are probably 45+, and will die in next 20 years. Tamil population between 30-45 are busy running behind money, unaware of their cultural values.
  Youth between 15-25 are now being misguided by separatists, with an alternate version of TN history, that challenges the very sovereignty of our nation.
  To be blunt, we are in danger of electing someone as idiotic as Seema/ Naam Tamilar in future.
  This is the reality. It is time Govt Of India wakes up. This might pave way as a spark for a secession movement sometime in future. None of us would want TN to turn into another Kashmir.
  During Dravidian secession movement struggle, there were no social network to spread false ideologies this fast. Also there was this one bold leader against anarchy, Mrs.Indira Gandhi.
  But now, or sometime in future, if any such protests pops up, can any Indian PM tackle it ?
  It is time the Indian Govt strategically starts eliminating Tamil nationalist leaders.

  Please read the last 10 lines. He wants to eliminate young Tamizh leaders. Please share this to as many people as possible.
  ****************************************************************************************

  • நிறைமதி(பூரன்சந்திரன்) ஐயா ,பெரியசாமி அவர்களின் கருத்துகள் மிக சரியானவை என்றால் இதுகாறும் கடந்த இருபது நுற்றாண்டுகளாக தமிழ் நாட்டில் நிகழ்ந்து உள்ள சமுக அவலங்களுக்கு , சாத்திய ஏற்றத்தாழ்வுகளுக்கு பார்பனர்களின் வருணசிர தர்மங்கள் அன்றி வேறு எதனை காரனமாகக்காட்டப்போகின்றீர்கள் தமிழ் ஐயா? நீங்கள் பார்பனர்களை அறிவு தளத்தில் முன்னிருத்தி முன்னெடுக்கும் தமிழ் தேசியம் என்பது திரு மா.பொ.சி அவர்கள் முன்னெடுத்த தமிழ் தேசியம் இறுதியில் எப்படி காஞ்சி சங்கரசாரியாரின் பார்பன இந்து பண்பாட்டுடன் ஒட்டி உறவாடி அடிபணிந்ததோ அதுபோன்று தான் உங்கள் கருத்தாக்கம் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றது ஐயா….. !

 3. திரு செல்வம் , இங்கு பெரியசாமியோ, அல்லது அவரின் கருத்துக்கு உடன்படும் நிறைமதியோ, மீரானோ யாரும் நாம் வைக்கும் எதிர்கருத்துக்கு பதில் அளிக்கமாட்டார்கள்…இவர்கள் அனைவரும் தமிழ் தேசியத்தையும் அதன் உள்ளார்ந்த தனித்து இயங்கும் மொழியியல் மற்றும் பண்பாட்டு கூறுகளையும் பார்பனிய இந்து பண்பாட்டு தளத்திடம் அடகு வைக்கும் அடிமைத்தனமான கருத்தக்கங்க்களை மட்டுமே கக்குவார்களே தவிர உணமையான தமிழ் தேசியம் என்பது பார்பனிய இந்து பண்பாட்டுக்கு எதிரானது என்பதனை உணர்ந்தும் உணராதது போன்று தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்…. இதில் இவர் நிறைமதி என்கின்ற திரு பூர்னசந்திரன் வேறு எமது தமிழ் ஆசிரியர்…. ! அதிலும் இவர் ஹிந்துத்துவாகளால் எதிக்கபட்டு இந்தியாவில் இருந்து விலக்கிக்கொள்ப்பட்ட வென்டி டானிகரின் “இந்துக்கள் :ஒரு மாற்று வரலாறு” (The Hindus : AnAlternative History- பெங்குவின் பதிப்பகம்)என்ற நூலை தமிழ் மொழியில் மொழி பெயர்த்தவர்! தன் மூளையை கழற்றிய வைத்து விட்டு மொழிபெயர்ப்பு வேலையை செய்துவிட்டு மீண்டும் எடுத்து சொருகிக்கொள்வாகளோ என்னமோ தெரியவில்லை இவர் போன்றவர்கள்! என்னத்த சொல்ல!

  • இந்துக்கள் : மாற்று வரலாறு என்ற புத்தகத்தில் இந்திய சமூக அடுக்குமுறையில் ஒடுக்கப்பட்டிருந்த தலித்துகள் மற்றும் பெண்களின் தரப்பிலிருந்து இந்திய வரலாற்றை ஆய்வு செய்து முன் வைத்திருக்கிறார் வெனடி டோனிகர். அந்த புத்தகத்தை மொழி பெயர்ப்பு செய்த திரு பூர்ணசந்திரன் (நிறைமதி)அவர்களுக்கு பார்பன இந்துமத பண்பாட்டு கூறுகள் பெண்களுக்கு, தலித் மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல ஒட்டுமொத ஒடுக்கப்பட்டும் இந்திய தேசிய இனங்களுக்கும் எதிரானது என்ற எளிய உண்மை கூடவா இவருக்கு புலப்படவில்லை!

  • செந்தில்குமரன்,நிதானமிழந்த பார்பண வெறுப்பை முதலில் விடுங்கள்.இந்த வெறுப்புதான் பெரியசாமி என்ன சொல்ல வருகிறார் என்பதையே காது கொடுத்து கேட் காமல் ஆக்கி விடுகிறது.பார்ப்பணனுக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறது என்றா அவர் சொல்கிறார்?பார்ப்பண சூழ்ச்சிக்கு இதுவரை ஆட்சியில் இருந்த திராவிட இயக்கங்கள் எடுத்த மாற்று நடவடிக்கைகள் என்ன?”சுயவிமர்சன கண்ணோட்டத்திற்க்கே நாங்கள் தயாரில்லை.அதைப்பற்றி பேசினாலே காதையும் கண்ணையும் மூடிக்கொண்டு பேசுபவனை பார்ப்பண பக்தன் என்று கதை கட்டுவோம்” என்றால் இது என்ன வகை பார்வை?காலம் முழுக்க பார்ப்பாணை கறித்துக்கொட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.அவன் இதையெல்லாம் துடைத்து தட்டிவிட்டு “போங்கடா வெளக்கெண்ணைகளா” என்று போய்க்கொண்டே இருக்கிறான்.முதலில் பெரியாரைப் பற்றிய அசல் புரிதலை இன்றைய சமூகத்திற்க்கு திராவிட இயக்கங்கள் கொண்டு சேர்த்திருக்கிறதா? பெரியார் என்றால் கடவுளை திட்டியவர் கடவுளை எதிர்த்தவர்-இதுதான் பார்ப்பணியம் மிக சாதுர்யமாய் இன்றைய சமூகத்திற்க்கு பெரியாரை கொண்டு சேர்த்திருக்கிறது.இந்த சூழ்ச்சி தெரியாமல் திராவிட இயக்கங்களும் அதையேதான் பிராதான படுத்தி மேடைபோட்டு கிச்சுகிச்சு மூட்டுகின்றன.அதிகாரத்தை வைத்திருக்கிற திராவிட இயக்கங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எவ்வளவு கீழாகவும் இறங்க தயாராயிருக்கின்றன.உங்களைப் போன்றவர்கள் அதற்க்கும் சல்ஜாப்பு சொல்லி நியாயப்படுத்துவீர்கள்.ஒரு பக்கம் பார்ப்பான் பார்ப்பான் என்று கூவவேண்டியது.இன்னொரு பக்கம் அவனுக்கு ஆதரவாகவே அவனுடைய அத்தனைக்கும் பக்கபலமாய் பல்லிலிக்க வேண்டியது.எவ்வளவு அற்ப்புதமான தெளிவான பார்பணீயத்தை நசுக்க கூடிய பெரியாரிய கருத்துகள் இருக்கினறன.இவையெல்லாம் பெரியாரியர்களால் முன்னெடுத்து செல்லப்பட்டனவா?குறைந்த பட்சம் இன்றைய திராவிட முன்னேற்ற கழகத்தினருக்காவது இவைகள் தெரியுமா?பெரியார் அவர் கால்த்தில் வைத்தவைகளே தெரியாது எனும்போது அந்த சிந்தனையை அடிப்படையாய் வைத்து இவர்கள் இந்த காலத்திற்க்கு ஏற்ப எப்போது முன்னேறி வருவது?அதனால்தான் திமுக தொண்டன் பூ குளிக்கிறான்(தீ மிதிக்கிறான்)கருணாநிதி அதை கண்டிக்கிறார்.ஆக அரிச்சுவடியே தெரியாமல் பெரியாரின் இளவல்கள்.இதை சுட்டி காட்டினால் நாங்கள் பார்ப்பண அடிமைகள்.ஒருவனை கருவிகொண்டிருப்பதினால் நாம் வளர முடியாது.அவனும் வீழ்ந்து விட மாட்டான்.பார்ப்பாண் அரைநூற்றாண்டிற்க்கும் மேலாக இந்த பாவ்லாக்களை பார்த்து விட்டான்.அதை புரிந்து கொண்டு இதை எப்படி எதிர் கொண்டு தன்னை நிலைநிறுத்துவது என்று அவன் தெளிவாய் பாதை வகுத்து போகிறான்.அவன் பன்னெடுங்கால்ம் மூளையைக் கொண்டு சூழ்ச்சி செய்து பழகியவன்.உங்கள் விரலைக் கொண்டே உங்கள் கண்ணை குத்தும் தந்திரம் தெரிந்தவன்.நீங்கள் இன்னும் பார்ப்பான்…பார்ப்பான் என்று ஜெபமாலையை உருட்டிக்கொண்டு இருங்கள்.

   • ஒருவன் திமிரெடுத்து போய் பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும் என் கிறான்.அதை கேட்டும் தமிழன் வாயில் மண்ணள்ளி போட்டுக்கொண்டு இருக்கிறான்.அவனை சாணியை கரைத்து மூஞ்சியில் ஊற்றியிருக்க வேண்டாம்.ஆனால் “இது பெரியார் மண் பெரியார் மண் “என்று பீத்திக்கொண்டு திரிந்தால் போதும்.ஆக கொள்கை அளவிலும் எந்த ஒரு பற்றும் இல்லை.உணர்ச்சி அளவிலும் எந்த சொரணையும் இல்லை.இதை ஒருவன் புரிந்து வேதனையோடு குறிப்பிட்டால் அவனையே பெரியாருக்கு எதிரியாக்கி பார்ப்பாண் பக்கத்தில் தள்ளிவிட வேண்டும்.கொஞ்சம் நிதானமாய் புரியுங்கள் தோழரே..

   • மீரான் : //பார்ப்பணனுக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறது என்றா அவர் சொல்கிறார்?//

    பெரியசாமி : // இன்றைக்கும் தமிழகத்தில் மெத்தப்படித்தவர்கள், வெளியுலகம் தெரிந்தவர்கள், உலக நிலவரத்தை அனுசரித்து நடப்பவர்கள், உலகப்புகழ் பெற்ற துறைசார் வல்லுனர்கள் யார் என்றால் அது பிராமணர்கள் தான்.//

    • “பார்ப்பணன் மெத்தபடித்தவனாக” அனைவரையும் அடக்கி, தான் மட்டும் மெத்தபடித்தவனாகத்தானே பார்பணன் இருக்கிறான்.அதனால்தானே பாதிக்கப்பட்ட நமக்கு இடஒதுக்கீடு கேட் கிறோம்.”வெளியுலகம் தெரிந்தவர்கள்” உண்மைதான்..அக்காலம் தொட்டே ஆள்வோரின் வலக்கரமாய் இருந்து வெளியுலகம் தெரிந்தவனாய்தான் இருக்கிறான்.நம்மை மாடு மேய்க்கவும் சாக்கடை கழுவவும் அதிகபட்சம் விவசாயம் செய்யவும் வணிகவும் செய்யவுமே வைத்தான்.”உலக நிலவரத்தை அனுசரித்து நடப்பவர்கள்” இதிலென்ன சந்தேகம் பிரிட்டிசானுக்கும் அவந்தான் அதிகாரி.சுதந்திர இந்தியாவிலும் அவன் தான் அதிகாரம் செலுத்துகிறான்.ஆதிக்கம் செலுதியவனுக்கு அருகிலும் இருந்தான் அவன் போன பிறகு அவனிடம் அடிமையாய் இருந்தவன் ஆட்சிக்கு வந்தபிறகு இவனுக்கும் அருகில் இருந்து தன்னை தக்கவைத்து கொள்கிறான்.இதுவும் ஒரு அனுசரிப்புதானே..இந்த அளவிற்க்கு பன்னெடுங்காலங்களாக தொடர்ந்து மேல்மட்ட கூட்டத்தோடே ஒட்டிக்கொண்டு கிடப்பவன் “துறைசார் வல்லுனனாக” இருப்பது ஆச்சர்யமில்லையே? இருக்கிற எதார்த்தத்தை சொல்லும் பொழுது ஏன் கோபம் வருகிறது செந்தில்குமரன்? ஒருவன் நமக்கு பிடிக்காதவனாக இருக்கலாம் அவன் கொள்கைகள் குழிபறிக்கும் குள்ளநரித்தனமானதாக இருக்கலாம்.அடுத்தவனை ஏய்த்து முதுகில் ஏறி வாழ்வதே பிழைப்பாக கொண்டதாக இருக்கலாம்.எப்படியோ அவனிடம் இப்போது சரக்கு இருக்கிறதா இல்லையா? பார்ப்பணியத்தை பாராட்டி யாரும் நற்சான்றிதழ் வழங்கவில்லை.பார்ப்பணியம் வென்றிருக்கிறதா இல்லையா?நாம் அதனிடம் தோற்றிருக்கிறோமா இல்லையா? பார்பணீயம் நம்மை சூழ்ந்து வளைத்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து முக்கால் நூற்றாண்டு காலம் ஆன பின்பும் அதன் பிடியிலிருந்து நம்மால் விடுபடமுடியாமல் இருக்கிறதா இல்லையா? இந்த எதார்த்தமே என்னுடைய ஆதங்கம்.சொகுசாய் வாழும் வெள்ளைதோல் பார்ப்பணன் ஆக உயர்ந்தவன் என்பது என்னுடைய எண்ணமல்ல.பெரியசாமியும் இந்த கருத்தில்தான் சொல்லியிருப்பார் என்றே நம்புகிறேன்.

     • மீரான்,
      1.திராவிட அரசியல் மேலோங்கி இருந்ததால் தான் பார்பனர்கள் தமிழ் நாட்டுக்காக செயல்படுவது இல்லை என்ற கருத்தை முன்வைகின்றார் பெரியசாமி…. அதற்கான என்னுடைய பதிலை நீங்கள் படித்து இருப்பீர்கள் என்று நினைகின்றேன்… ஆனாலும் அந்த விவாதத்தில் இருந்து விலகி சென்று கொண்டு இருப்பது நீங்களும் பெரியசாமியும் தான்… மீண்டும் வேண்டுமானால் என்னுடைய வாதத்தை இங்கு பதிவு செய்கின்றேன்… முடிந்தால் பதில் அளியுங்கள்….

      என்னுடைய பதில் பின்னுட்டம் 1.3.1.2 : “”சங்க இலக்கிய காலத்தில் இருந்து 1950கள் வரையில் தமிழ் நாட்டின் அறிவுத்தளத்தை அரசர்களின் துணையுடன் ஆளுமை செய்தது பார்பனர்கள் தான். அவர்கள் ஆளுமை செய்த இந்த இருபது நுற்றாண்டுகளில் தமிழ் நாட்டுக்காக பார்பனர்கள் என்ன சாதித்துக்கொடுத்தார்கள் என்பதனை முதலில் பெரியசாமி பட்டியல் இடட்டும் … அதன் பின்பு பார்ப்னனர்கள் தமிழ் நாட்டுக்கு செய்யவேண்டிய வரலாற்றுக் கடமைகளை 1950களுக்கு பின்பு வந்த பெரியாரின் திராவிட கொள்கை முன்னெடுப்புகள் எப்படி சீர்குலைத்தது என்றும் பட்டியல் இட்டும்….””

      பெரியசாமி : //தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் எதிராக இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் சதிகளை அறிவுஜீவி தளத்தில் எதிர்கொள்ள திறமையான அறிவுஜீவி புலம் ஒன்று தமிழகத்தில் கட்டி எழுப்பப்படவே இல்லை. இன்றைக்கும் தமிழகத்தில் மெத்தப்படித்தவர்கள், வெளியுலகம் தெரிந்தவர்கள், உலக நிலவரத்தை அனுசரித்து நடப்பவர்கள், உலகப்புகழ் பெற்ற துறைசார் வல்லுனர்கள் யார் என்றால் அது பிராமணர்கள் தான். ஆனால் தமிழகத்தில் திராவிட அரசியல் மேலோங்கியிருப்பதால் இந்திய அரங்கிலும் உலக அரங்கிலும் தமிழ்நாட்டுக்காக பிராமணர்கள் செயல்படுவதில்லை//

      • செந்தில்குமரன் நான் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன்.சமீப காலங்களில் திராவிடம் திராவிட இயக்கங்களின் பங்களிப்பை முற்றிலும் புறக்கணிக்கிற சில அரசியல் கருத்துகள் உருவாகி இருக்கிறது.ராமதாஸ் சீமான் போன்றவர்களும் இன்னும் சில தீவிர தமிழ் தேசியம் பேசக்கூடியவர்களும் திராவிடம் என்ற வார்த்தையையே எதிர்க்க கூடியவர்களும் கூட இருக்கிறார்கள்.பெரியாரையே நிந்தனை செய்யக்கூடிய தமிழ் தீவிரவாதிகளையும் நான் பார்க்கிறேன்.நான் அந்த பட்டியலில் உள்ளவனல்ல.திராவிட இயக்க கொள்கைகளால் அதன் பங்களிப்பால் பயனடைந்த கோடிக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் என்ற நன்றியுணர்ச்சி எனக்கு எப்போதும் உண்டு.நான் சமீபத்திய திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளை ஆதங்கத்தோடுதான் விமர்சிக்கிறேனே அல்லாது காழ்ப்போடு உமிழவில்லை.பைத்தியக்காரத்தனமாய் உணர்ச்சி வசப்பட்ட தமிழ் பற்றை தமிழ் கிறுக்கை நான் எப்போதும் ஆதரிப்பதில்லை.இதில் நான் பெரியாரின் மிகத்தீவிர ஆதரவாளன்.தந்தைபெரியார் ஒருபோதும் தமிழ் கிறுக்கு பிடித்து அலையும் கூட்டத்தை ஆதரித்ததாக நான் காணவில்லை.இன்னும் சொல்லப்போனால் “தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தேன் “என்று சொன்ன கருணாநிதியை கிண்டலடித்துதான் பேசுவதாக நான் படித்தேன்.அவர் ஒரு ஆகச்சிறந்த சமூகநீதி வைத்தியன்.அவரின் வாரிசுகள் அவரின் சிகிச்சை முறையை இந்த சமூகத்திற்க்கு செய்வதாக தெரியவில்லை.அவரை பூஜை அறையில் வைத்து பூட்டும் வேலையைத்தான் செய்து வருகிறார்கள்.இது பார்ப்பணீயத்திற்க்கு துணை போகிற காரியமாகத்தான் இருக்கிறது.பார்ப்பண எதிர்ப்பை ஒரு மந்திரமாக உச்சத்திரித்து கொண்டிருக்கிறார்களே ஒழிய பார்பணியத்தின் போக்கும் சூதும் அறிந்து அதை முறியடிக்கும் வேலையை செய்வதகாக தெரியவில்லை.இதுவே என் வாதத்தின் சாரம்.இது அல்லாத போட்டி திராவிட அரசியலை நான் பேசவில்லை.

       • மீரான் இந்த விவாதத்தில் உங்களுக்கும் பெரியசாமிக்கும் உள்ள வேறுபாட்டை அருமையாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்… பெரியசாமி அவர்கள் தமிழ் தேசியம் பேசிக்கொண்டே பெரியாரையும் அவரின் கொள்கைகளையும் இழிந்துரைப்வர்… நீங்கள் அப்படிபட்டவர் இல்லை என்பது உங்கள் பின்னுட்டங்கள் முலம் நான் முன்பே அறிவேன். திராவிட இயக்கங்களின் மீதான உங்களின் விமர்சனங்களும் மிக சரியானவை தான். நீங்கள் திராவிட இயக்கங்களை அவற்றின் குறைகளை சுட்டிக்காட்டி விமர்சிப்பதிலும் பெரியசாமி திராவிடகொள்கைகளை முற்றிலும் புறக்கணித்து பார்பனர்களின் துணையுடன் தமிழ் தேசியம் வென்றடைய குறுக்கு வழியினை தேர்ந்து எடுப்பதிலும் பாரிய வேறுபாடுகள் உள்ளது தானே? உங்களின் இந்த பின்னுட்டத்தை முழுமையாக ஏற்கின்றேன்…நன்றி

     • 2. மீரான் உங்களுடைய அடுத்த கேள்வி பார்ப்பணனுக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறது என்றா அவர்(பெரியசாமி) சொல்கிறார்? என்பது… அதற்கான பதிலையும் அவரின் வாதத்தில் இருந்தே உங்களுக்கு எடுத்து கொடுத்து இருகின்றேன்…. ஆம் அப்படி தான் அவர் கூறுகின்றார் என்று..பெரியசாமி : .// இன்றைக்கும் தமிழகத்தில் மெத்தப்படித்தவர்கள், வெளியுலகம் தெரிந்தவர்கள், உலக நிலவரத்தை அனுசரித்து நடப்பவர்கள், உலகப்புகழ் பெற்ற துறைசார் வல்லுனர்கள் யார் என்றால் அது பிராமணர்கள் தான்//
      ஆம் அப்படி தான் அவர் கூறுகின்றார் என்று உங்கள் பின்னுட்டத்தில் நீங்களும் மிக விரிவாக விளக்கம் கொடுத்து விளக்கியுள்ளீர்கள்! நன்றி…

    • படிப்புக்கு பேர் போன அய் அய் டி எல்லாம் அவா கையிலதான் செந்தில் குரமரன் 50 கும் மேற்ப்பட்ட ஆய்வு கட்டுரைகளை கணிதத்தில் சமர்ப்பித்த வசந்தா கந்தசாமி என்ற பேராசியர் என்னை பார்பனர் இல்லை என்பதால் உதவி பேராசிரியராகவே வைத்து இருக்கிறார்கள் என்று பேசி கோர்ட் ல கூட கேஸ் போட்டார் இதுதான் பார்ப்பபன அறிவு ஜீவித்தனம் ஏமாற்றும் அறிவு ஜீவி தனத்தை புகழ்வது வேடிக்கையாக இருக்குது பார்ப்பனுக்கு மட்டும்தான் அறிவு இருக்காம் விவசாய வேலை செய்யுறதுக்கு கூட அறிவு வேண்டும் நெல்ல பக்குவமா உற வச்சு அத சாக்குல கட்டி முளை விட வைக்கனும் நாத்தாங்காலுக்கு உழுது தொழியாக்கி பசுந்தளைகளை போட்டு அடி உரமாக்கி அதுல முளைச்ச நெல்ல பாவனும் திடிர்னு மழை வர்ற மாரி இருந்தா நற்றங்கால் ல தண்னி தேக்கனும் இல்லன மழை விழுந்து நெல்லின் முளை ஒடிந்து போகும் நாற்றை பக்குவமா பாதுகாத்து சரியான சமயத்துல புடுங்கனும் ரெம்ப முளைச்சுட்டா நாற்று புடுங்கும் போது வேறு அருந்து போகும் நம்மாளு படிக்காதவர்தன் குத்த வச்சு உங்காந்து ரெண்டு கைய்யயும் வீசி நாத்த புடுங்குவார் கைய நாலு தடவ அப்பிடி இப்பிடி வீசுனா மாறிதான் தெரியும் கையில ஒரு கட்டு நாத்து வேரோட இருக்கும் அதுக்கும் அறிவு வேண்டும் இல்லயா மெத்த படித்த பார்ப்பான ஒத்த நாத்த வேறொட புடுங்க சொல்லுங்க அப்ப தெரியும் யார் அறிவாளினு தென்ன மரத்துல ஏற அறிவு வெணும் ,மீன் பிடிக்க கூட நுன் அறிவு வெண்டும் ,சிற்றுளியால் சிலை செதுக்க அறிவோடு பொருமையும் வேண்டும் ,எந்த தொழில் செய்தாலும் அதுக்கு அறிவு அவசியம்

     தி இந்துவில் இங்கிஸிலில் மொக்கை போடுவதுதான் அறிவு என்று சிலர் நினைப்பதை வைத்து அறிவே அதிர்ச்சி அடைந்து இருக்காம்

     • உன்மைய சொல்லனும்னா அறிவு ஜீவித்தனம் என்பதே பொய் படிப்பது மட்டும் அறிவு என்பது மூடநம்பிக்கையே

     • p.joseph,

      உங்களின் விளக்கம் எனது கருத்தாகத்துடன் இணைந்து செல்கின்றது. நன்றி. பின் இணைப்பாக ஒன்றை கூற விரும்புகின்றேன். எனது பள்ளி நாட்களில் பள்ளிக்கு செல்லும் பாதையில் இளநீர்காரர் இனநீரை வெட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துகொண்டே அவர்களிடம் இருந்து (ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து) எண் கணித கேள்விகளை (34* 45=?, 65*23=?……) கேட்டு விடைகளை நொடிப்பொழுதில் அளித்துக்கொண்டு இருப்பார்…. மற்றும் ஒருவர் மாடுகளுக்கு லாடம் அடித்துக்கொண்டே பாகவதரின் பாடல்களை பாடிக்கொண்டுஇருப்பார்… தாங்கள் செய்யும் physical work உடன் மைன்ட்வொர்க்கையும் அவர்கள் இணைத்து செய்துகொண்டு இருப்பார்கள்… இவைகள் எல்லாம் பார்பனர்களுக்கு சாத்தியமா என்று பார்பனர்களை மட்டுமே அறிவாளிகள் என்று புகழும் நபரிடம்(S.Periyasamy) கேளுங்கள்!

      • எனது சொந்த அனுபவத்தை வைத்தே சொல்லுகிறேன் எந்த வேலை செய்தாலும் அதுக்குனு தனி புத்திசாலித்தனம் தேவை பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பனி புரிந்தவன் குறைந்த ஊதியம் அதிக வேலைப்ப்ளுவின் காரணமாக வேலையை விட்டு சொந்த ஊருக்கே வந்து விட்டேன் என் தாயார் வேறு உடல்நலக்குறைவுடன் இருந்ததாலும் வேலையை விட்டு ஊருக்கு வரும் சூழ்நிலை வந்து விட்டது வீட்டில் இருந்து கொண்டு புத்தகங்களை மேய்வது வயல்காட்டுக்கு செல்வது மட்டுமில்லாமல் கிடைத்த வேலை எதையும் செய்வேன்

       எனது மாமா ஒருத்தர் கிணரு வெட்டும் வேலை செய்வார் அவர் அடிக்கடி மருமகனே கிணரு வெட்டும் வேலைக்கு வாங்களே சும்மாதன இருக்கீறுனு கூப்பிடுவார் சரினு நானும் போனென் கொஞ்சம் கடுமையான வேலைதன் காலை எட்டு மணிக்கு மின் தூக்கியில்(கிரேன்) இனணக்கப்பட்ட பெரிய கூடை மூலம் கிணறில் இறங்கி மண் அள்ளி கூடையில் போட்டு அனுப்பினால் கிரேன் அதை தூக்கி மெலே தட்டும் ஒரு நாள் அப்ப்டித்தான் வேலை முடிந்து வேளியெருவதுக்கு நானும் இன்னொரு கக தொழிலாளி யும் கரை ஏறி விட்டோம் கிணற்றுக்குள் இன்னும் 4 பேர் கிணற்றுள் இர்ந்தனர் நாங்க ஏறி வந்ததும் மின்சாரம் தடை பட்டு விட்டது ஆயில் இஞ்சினும் வேலை செய்ய வில்லை இவர்களை எப்படி கரை ஏற்றுவது யோசித்து கொண்டு இருந்தோம்

       கொஞ்ச நேரத்தில் தடை பட்ட மின்சரம் வந்து விட்டது ஆனா அது இருமுனை மின்சாரமாக வந்தது இருமுனை மின்சாரத்தில் கிரேன் இயங்காது அதுக்கு மும்முனை மின்சாரம் வெண்டும் என்ன செய்யுறது எனது மாமா சுத்தமா படிக்காதவர் அவர் சொன்னது ம்ருமவனே போய் பம்பு செட் மோட்டார தூக்கிட்டு வாங்க என்றார் பம்புசெட் மோட்டாரில் இருமுனை மின்டசாரத்தை செலுத்தி கயிறு கட்டி ஓட விட்ட பின்பு மோட்டரின் டெர்மினல் பாக்ஸில் இருந்து மும்முனை மின்சாரத்தை பெற்று கிரேனை இயக்கினார் மின்னியல் படித்த மாணவர்களுக்கு இது தெரியும் ஒரு மின் மோட்டரில் இரு முனை மின்சாரம் மட்டும் குடுத்தால் போதும் அதில் மும்முனை மின்சாரம் மியூச்சுவல் இன்டச்சன் தத்துவப்படி கிடைக்கு

       படிக்கத அந்த வில்லேஜ் ஆள் செஞ்சது சின்ன சாம்பிள்தான் இன்னும் ஏகப்பட்ட அய்டியாக்கள் வண்டி வண்டியா வச்சு இருக்காங்க இத எதுக்கு சொல்லுறென் என்றால் புத்திசாலித்தனம் சாதுர்யம் எல்லார்கிட்டயும் இருக்கு என்பதை விளக்கவே வேனுமென்றால் பெரிய சாமி ஒன்றை சொல்லலாம் அவா எல்லாம் அவா கொள்கையை நன்னா பரப்புரா உங்களுகெல்லாம் அவா மாறி நன்னா சுவீட்டா கிராண்டா பேசத்தெரியலைனு இதுதான் சரியாக இருக்க முடியும் இதுக்கு அவாலெல்லாம் அறிவு ஜீவி கொறிவு ஜீவி என்று பட்டம் குடுத்து புலம்புவது வேடிக்கயாக இருக்கிறது கொஞ்சம் காமடியாவும் இருக்கு

       • இன்னொரு சிறு கதையையும் கதையையும் இங்கு சொன்னால் மிகச்சிறப்பாக இருக்கும் என்று என்னுகிறேன் ஒரு பாங்க் மேனேஜர் தன்னிடம் கடன் கேட்டு விண்னப்பித்து இருக்த விவசாயியிடம் என் கொய்ரி செய்வதற்க்காக போனாறாம் அவர் விண்னபத்தில் நான் விவசாயம் செய்து கொண்டே சிறு தொழிலையும் செய்து வருகிறேன் எனவே என் சிறு தொழிலை நான் செய்வதற்க்கு எனக்கு கடன் உதவி தேவை என்று விண்னப்பித்து இருந்தாராம்

        ஒரு வழியாக அந்த பேங்க் மேனேஜர் அந்த விவசாயியின் அட்ரஸை கண்டு பிடித்து அவர் இருப்பிடம் சென்று சேர்ந்தார் அந்த விவசாசி அப்பொழுது தனது தோட்டத்துக்கு தண்னீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தார் பாங்க் மேனேஜர் கேட்டார் ஆமாயா என்ன சிறு தொழில் நீ பன்னுற இங்க தண்னி பாய்ச்சிட்டேனு ,அந்த விவசாயி சொன்னார் அய்யா நான் விவசாயம் பாக்குறேன் அதே நேரத்துல அங்க தெரியுதே பாருங்க அங்க உள்ள கட்டடத்துல ஒரு எண்னை ஆட்டும் செக்கும் வச்சு இருக்கேன் இரண்டையும் ஒரு சேர பார்த்துக்கொள்ளுகிறென் என்றாராம்

        அந்த பாங்க் மேனேஜர் கேட்டாராம் அய்யா அது எப்பிடி முடிய்ம் நீ இங்க இருக்கும் பொது அங்க யாரு வேலை பார்ப்பா ,அதுக்கு அந்த விவசாயி சொன்னாராம் அய்யா ஆட்ட வேண்டிய எண்ணை வித்த நான் செக்குல போட்டுட்டு தண்ணி பாச்ச வந்துடுவேன் என் மாடுகள் ரெண்டும் செக்குல சுத்தி வந்து எண்னை ஆட்டும் நான் வேலை முடிஞ்சு போய் அந்த எண்னையை உரியவ்ர்க்கு குடுத்து காசு பெருவென் என்றார்

        பேங்க் மேனேஜர் கேட்டார் அது எப்ப்டி மாடு வேலை செய்யுறது உனக்கு தெரியும் என்று விவசாயி சொன்னார் அய்யா மாட்டு கழுத்துல நான் மணி கட்டி இருக்கேன் அது சுத்தி சுத்தி வரும் போது மணி ஒழிக்கும் அதை வச்சு நான் தெர்ஞ்சுக்குவென் மாடு வெலை செய்யுதுனு ஒரு வேலை மாடு களைச்சு நின்னா மணி சத்தம் கேக்காது நான் இங்கு இருந்தே குரல் குடுப்பே காகாய் காய்னு அது புரிந்து கொண்டு வேலை செய்யும் என்றார்

        இப்ப மேனேஜர் கேட்டார் அமா எனக்கு ஒரு சந்தேகம் மாடு வேலை செய்யாம ஒரே இடத்துல நின்று கொண்டு தலைய தலைய ஆட்டி மணி சத்ததை எழுப்பினால் உனக்கு எப்படி தெரியும் நீ ஏமாந்து விடுவாயே என்றார்

        அதுக்கு விவசாயிக்கு கோவம் வந்து விட்டது அய்யா சாமி நீங்க லோன் குடுக்கட்டியும் பரவாயில்லை என் மாட்டை இவ்வளவாக அசிங்கப்படுத்தாதீர் அதுக்கு வஞ்சகம் சூதெல்லாம் தெரியாது எனென்றால் அது உம்மைபோன்று கல்லூரியில் எல்லாம் போய் படிக்கவில்லை என்று இதுதான் இங்கு நடக்கிறது இந்த விவாதத்தில் பெரியசாமி நம்மை விவசாயியின் நிலைமையில் வைத்து பார்க்கிறார் அதெ சமயம் அந்த பாங்க் மேனேஜரின் பித்தலாட்டத்தை பிராமனர்கள் அளவுக்கு அறிவு உங்களுக்கு இல்லை என்று சொல்லுபவர்களை பார்க்கிறேன்

        மாட்டை நொட்டை சொல்லுவதுபோல எங்களை நொட்டை சொல்லும் கயவர்களே பார்ப்பனனுக்கு இன்னொறு பூணூல் மாட்டி விட்டு அழகு பாருங்கள்

   • மீரான், முதலில் என்னுடைய பின்னுட்டங்கள் 1.3.1.2 மற்றும் 1.4 ஆகியவருக்கு நீங்களோ அல்லது பெரிய்சாமியோ நேரடியாக, நேர்மையாக பதில் அளிக்க முயலலாம்…. அதன் பின் என்னுடைய நிதானத்தை பரிசோதனை செய்யலாம்…

   • பார்பன பண்பாடு ஆளுமைகளை , அடக்குமுறையை எதிர்ப்பதில் திராவிட கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தோல்வி அடைந்தது என்பதற்காக பார்பனியத்தை எதிர்பதில் வேறு யாருமே முயலக்கூடாது என்று ஆகிவிடாது… முதல் இந்திய சுதந்திர போர் தோல்வியில் முடிவடைந்தது என்பதற்காக இந்திய சுதந்திரத்துக்காக போராரக்கூடாது என்றா நம் முன்னோர்கள் முடிவுகட்டி செயலற்றா இருந்தார்கள்? இல்லையே! தொடர்ந்து போராடி தானே வென்றார்கள்.. சுதந்திரத்தை பெற்றார்கள்….அப்படி பட்ட முன் முயற்சி உடைய பார்வையை விட்டுவிட்டு தமிழ் தேசியத்துக்கு அதனை வென்றடைய பார்பனர்களிடமே மண்டியிட கோரும் பெரியசாமியின் கோரிக்கைக்கு எதிராக கருத்துகளை வைக்கும் போது அதில் என்ன தவற்றை கண்டு பிடித்தார் மீரான் அவர்கள்? சமுகம் இயங்க்கொண்டு தான் இருக்கும்… அதற்கான போராட்டட களங்களும் வேறு வேறு வடிவத்தில் செயல்பட்டுகொண்டு தான் இருக்கும்….

    • பார்பணிய ஆதிக்கத்தை அடக்குமுறையை எதிர்க்க வேண்டும் அதை வேரோடு வேரடி மண்ணோடு ஒழிக்க வேண்டும் என்பதில் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்?அதே வேளை எதிரியை எதிரியின் பலத்தை அசலாக மதிப்பிடுதல் முக்கியமில்லையா?கண்ணை மூடிக்கொண்டு “அவன் என்ன பெரிய இவனா எங்களுக்கு இல்லாததா”என்று வெட்டி ஜம்பம் காட்டிக்கொண்டிருந்தால் நாம்தான் மூக்குடைபட வேண்டும்.மெய்யாகவே அவன் பெரிய கொம்பன் தான்.அவன் முடுக்கி விடுவதில்தான் பல காரியங்கள் இங்கே நடக்கிறது.அதை உணராமல் அவன் பலத்தின் எதார்த்தத்தை எடுத்துச்சொன்னால்,அதை ஒத்துக்கொள்வதற்க்கே மனம் இல்லையென்றால் அவனை அவனின் கண்ணிகளை எங்கே எப்படி முறியடிப்பது?

     • எதிர்களை “அவன் என்ன பெரிய இவனா எங்களுக்கு இல்லாததா”என்று வெட்டி ஜம்பம் காட்டிக்கொண்டிகொண்டு உங்களிடம் விவாதம் செய்தது யார் என்று முதலில் கூறுங்கள் மீரான்… கற்பனை கோட்டையில் நீங்களே கேள்வியை எழுதிக்கொண்டு அதற்கு பதிலையும் நீங்களே கூறிக்கொள்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை… தொடருங்கள் மீரான்…!

   • பார்பனர்கள் பல இடங்கலிச்ல் நுழைந்து விட்டார்க்ள் கம்மூனிஸ்டு இயக்கதில் நுலைந்தார்கள் அவர்கள் நுலைந்த பின்பு கம்மூனிஸ இயக்கமே போலி கம்மூனிஸ்ஸம் உன்மை என்று சிதறிப்போனது அதற்க்கு முன்பே அவர்கள் நுழைந்தது கிறிஸ்தவத்தில் பைபிளை பார்பனியத்துக்கு தகுந்தார் போல மொழி பெயர்ப்பு செய்தார்கள் அவர்கள் நுழையாத இடம் இசுலாம் மட்டுமே இதுக்கு என்ன காரனம் என்றால் இசுலாமும் பார்பனியமும் ஓரே கருத்தைதான் சொல்லுகின்றன என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து இருப்பதால் தான் இதை குரான் மூலமே நிரூபித்தால் மீரான் தூக்கு போட்டு கொண்டு சாக தயாராக இருப்பாரா என்பதே என் கேள்வி

 4. ஐயா அறிவாளிகளே,
  நான் எதையோ சொல்ல வந்தேன். நீங்கள் எதையோ அர்த்தம் செய்து கொண்டு கருத்து பதிவு இடுகிறீர்கள்.
  திராவிட இயக்கத்தினர் அறிவு வறுமைக்கு பேர் போனவர்கள். இன்றைக்கும் வெளியுலகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் தமிழக ஊடகங்கள் யாவும் பிராமனர்கள் வசம் தான் உள்ளன. உதாரணம் “தி ஹிண்டு” என்னும் மவுண்ட் ரோடு மகாவிஷ்னு. இதற்கு உலக அளவிலான வாசகர்களும் செல்வாக்கும் உண்டு. இந்த பிராந்தியத்தில் கருத்து உருவாக்கம் செய்யும் ஊடக தாதா இவர்கள் தான். இந்த பிம்பத்தை வைத்துக்கொண்டு தான் ஈழத்தமிழர் பேரழிவுக்கு துணை போனதோடு அந்த அழிவை வெற்றிகரமாக மறைக்கவும் இவர்களால் முடிந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த திராவிட இயக்கத்தினர் ஏன் உலகத்தால் கவனிக்கப்படக்கூடிய ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையை நடத்த முடியவில்லை? அட ஆங்கில பத்திரிக்கையை விடுங்கள். உருப்படியான ஒரு தமிழ் பத்திரிக்கை? குங்குமம் இருக்கிறதே போதாதா என நினைத்திருப்பார்கள். சில நாட்களுக்கு முன்னர் இந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தை குறித்து இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன். அப்போது சின்னி கிருஷ்னாவின் மனைவி நந்திதா கிருஷ்னாவின் வலைப்பக்கத்துக்கு போனேன். இந்த அம்மாள் ஆங்கிலத்தில் இத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறாரா என வியந்தேன். இந்துத்துவவாதிகள் சமஸ்கிருத மற்றும் இந்தி மொழி வெறி பிடித்தவர்கள். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் நேர்த்தியான ஆங்கில புலமையும் கொண்டவர்கள். இவர்கள் பிரிட்டீஷ்காரர்கள் ஆட்சி முதலே பல டிரஸ்டுகளை ஏற்படுத்தி இந்துத்துவாவை ஊக்கப்படுத்தும் காரணிகளை ஆராய்ந்து அலசி நூல்களாக ஆக்கி பதிப்பித்து வெளியிட்டு வருகிறார்கள். இவர்கள் வெளியிடும் நூல்கள் பெரும்பாலும் நேர்த்தியான ஆங்கிலத்திலேயே உள்ளதோடு வெளியுலகத்தில் “opinion making” வேலையையும் செய்கின்றன. இதன் மூலம் உலக அளவில் தங்களுக்கு என ஆதரவு தளத்தை அறிவிஜீவிகள் மட்டத்தில் ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். இவர்கள் நடத்தும் swarajyamag போன்ற தளங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. அவ்வளவு நேர்த்தி. அத்தனை உழைப்பு. ஆனால் இன்று வரை தமிழகத்தில் பெரியாரின் நூல்கள் நாட்டுடைமையே ஆக்கப்படவில்லை. இதற்கு யார் காரணம்? இந்த திராவிட இயக்கத்தினரின் சினிமாவை எடுத்துக்கொள்ளுங்கள். பராசக்தி பராசக்தி என முழங்குகிறார்கள். ஆனால் அது மேடை நாடகத்தை காமிராவில் பதிவு செய்ததை போல் இருக்கிறது. இவர்களின் இலக்கியம் என்பது உயிரோட்டமே இல்லாத வெற்று அலங்கார வசனங்களை மட்டுமே கொண்டது. இந்தியாவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் தமிழகத்தின் நிலப்பரப்பும் மக்கள் தொகையும் பத்து சதம் கூட தேறாது. அதனால் இந்த மாநிலத்தில் எழும் எத்தகைய வீறு மிகுந்த மக்கள் போராட்டத்தையும் சர்வ வல்லமை மிகுந்த மத்திய ஆட்சியாளர்கள் எளிதில் குழப்பி மிதித்து நசுக்கிவிடுவார்கள். ஆகையால் தமிழகம் தனது வாழ்வுக்கும் வளத்துக்கும் உலக தரத்திலான அறிவுஜீவிகளை தனது கல்வி முறை ஒழுங்கின் மூலம் உருவாக்க வேண்டும். அதன் மூலம் தான் தமிழகத்தின் அறிவுஜீவி புலத்தை பிராமணர்களிடம் இருந்து கைப்பற்ற முடியும். இல்லாவிட்டால் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அறிவுத்துறையில் பிராமணர்களை சேலஞ்ச் கூட செய்ய முடியாது. சும்மா பார்ப்பான், பார்ப்பான் என கத்திக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

  • அண்ணன் பெரியசாமி பார்பன எழுத்துகளை மட்டும் தான் படிப்பார் போலும்! பார்பன எழுத்துகளுக்கு வெளியே வேறு யாரும் வெவரமாக எழுதமாட்டார்கள் என்ற இவரின் பார்பன அடிமை சிந்தனையை மீண்டும் வினவில் பதிவு செய்கின்றார் பெரியசாமி அவர்கள்… மேலும் பார்பனர்களின் எழுத்து வடிவத்தை கண்டு மெய்சிலிர்க்கும் இவர் அந்த எழுத்துகளில் உள்ள உள்ளடக்கம் எப்படி பட்ட கசடாக இருதாலும் அதனை பற்றி கவலைபட மாட்டேன் என்ற கருத்தாக்கத்தை இங்கு மீண்டும் பதிவு செய்கின்றார்.நல்லா வளரப்பிங்க தமிழ் தேசியத்தை பெரியசாமி அவர்களே! எதிரிகளிடமே மண்டியிட்டு தான் தமிழ் தேசியத்தை முன்னேடுக்கனும் என்றால் அது பார்பன பண்பாட்டு ஹிந்து கலாச்சாரமாக இருக்குமா அல்லது தமிழர்களின் தனித்தியங்கும் சுயமான பண்பாடாக இருக்குமா என்று இவரே முடியு செய்து கொள்ளட்டும்……

   //அதன் மூலம் தான் தமிழகத்தின் அறிவுஜீவி புலத்தை பிராமணர்களிடம் இருந்து கைப்பற்ற முடியும். இல்லாவிட்டால் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அறிவுத்துறையில் பிராமணர்களை சேலஞ்ச் கூட செய்ய முடியாது//

  • தமிழ் மக்களை இன அடையாளத்துடன் ஒருங்கிணைக்க உள்ள முதன்மையான தடையே நம் தமிழ் சமுகத்தில் புரையோடி கிடக்கும் சாதியும் அதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும் தான் என்ற அடிப்டையான சிக்கலை மறந்து விட்டு பார்பானர்களின் எழுத்து வடிவ அழகியலுக்கு ஒத்து ஊதுகின்றார் பெரியசாமி அவர்கள்… தமிழ் மக்களை ஒருங்கிணைக்க இவர் குறைந்த பச்ச செயல் திட்டத்தை வடிவமைப்பார் என்றால் அதனை நாம் பாராட்டலாம் ஏற்றுக்கொள்ளலாம் நடைமுறை படுத்தலாம்…. ஆனால் இவர் ` யார் இத்தகைய சாதிய சமுகத்தை அன்றைய ஆட்சியாளர்களின் துணைகொண்டு கட்டி எழுப்பினார்களோ அதே பார்பனர்களிடம் தான் நாம் மண்டியிட்டு தமிழ் தேசியத்தை படைக்க சொல்லுகின்றார்… பெரிய சாமிக்கு தமிழ் சமுகத்தின் எதிரிகள் யார் என்ற விசயத்தில் மிகுந்த குழப்பம் உள்ளது என்றே நாம் முடிவுக்கு வர வேண்டியுள்ளது!

  • அய்யா பெரியன் உங்களை சாமி பெரியசாமி என்று கூப்பிடும் அருகதை உங்களுக்கு இல்லை முதலில் அறிவு என்றால் என்ன என்று விளக்கி விடும் அய்யா அப்புறம் பேசலாம் அறிவுதளத்தில் யார் உசத்தி என்று இந்துவை 500 பேர் படிக்கிறான் பிளே பாயை 5000 படிக்கிறான் அதெல்லாம் அறிவு ஜீவித்தளம் என்றெல்லாம் பேசுவது உமது உரிமை அனால் பார்ப்பனர்கள் மட்டும் அறிவி ஜீவிகள் மற்றவர் எல்லாம் அவாளோட போட்டி கூட போட முடையாது என்று பேசுவது அறிவுடமை அல்ல சரி நான் கேக்குறேன் பெரியசாமி உங்க அம்மா அப்பா எல்லாம் அறிவாளி இல்லை என்று நம்புகிறீர்களா பார்ப்பனின் சோம பான புத்தகதை படித்து விட்டு போதை ஏறி உளறுவது போல உளருகிறீர்கலே உங்களுக்கு அறிவு இருக்கா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது முதலில் அறிவு என்றால் என்ன எனபது குறித்து விளக்கம் அளியும் அப்புறமா அறிவு ஜீவி யார் என்பதை நான் உமது மூளையில் உறைக்கும் படி எடுத்து கூறுகிறேன் அது வரை பார்ப்பான் லட்டு லட்டா பேளுரான் நான் தின்னு பாத்தேன் டேஸ்டா இருந்துச்சு என்று உளரிக்கொண்டு இராதேயும்

 5. பொழுது போக்கு பஞ்சமிக்க பேதைகளின் பாசாங்கு ,இந்த கூட்டத்திற்கும் ஜல்லிக்கட்டுக்கு ,சல்லிக்காசுக்கு கூட சம்பந்தமில்லை -அவர்களுக்கு நாயக,நாயகி பாத்திரங்களை ஏற்று நாடகங்களை நடத்திப்பார்க்க ஒரு வாய்ப்பு ,அனுபவிக்கட்டும் ,உலகெங்கும் வலது சாரிகளின் எழுச்சி ,இடது சாரிகள் ,நாஸ்திக,அரைவேக்காட்டு குஞ்சுகளின் ரகசிய அரிப்புகளுக்கு சொரிந்து கொள்ள ஒரு நிகழ்ச்சி.சாணியை பார்க்காதவனெல்லாம்,ஜல்லிக்கட்டுக்கு உயிரைக்கொடுப்பேன் என்று ஜல்லியடிக்கிறான் மோடியை வசைபாடும் ,வாழா வெட்டிகளுக்கெல்லாம் சோறு போடும் சிறுபான்மை சிங்கினிகள்.வந்ததே யுகப்புரட்சி ”என்று retired சினிமா நடிகர்கள்,கரு பழனியப்பன் ,புரட்சி திலகம் ,தியாகு,(இவனுங்களாம் சோத்துக்கு என்ன பன்றானுங்க?)உருகி உருக்குலைஞ்சி போனானுங்க பாவம்.புகழ் பிச்சைக்கு அலையும் பேதையர்கள்.தமிழர்களெல்லாம் பிரச்சினை என்றால் கடற்கரையில் கூடி கண்ணீர் சிந்துவார்கள் என்ற பிம்பத்தை கூட்டினார்கள்.வெட்கம்.

 6. நடந்தது அறவழிப் போராட்டமென்றாலும் நிறைவடைந்தது வன்முறையில். சிங்கள அரசிற்கும் தமிழக அரசிற்கும் என்ன வித்தியாசமிருக்கிறது? ஒன்றுமில்லை. அறவழிப் போராட்டமென்றாலும் இது வித்தியாசமானது. எப்படி லட்சக்கணக்கான மக்கள் கூடினர் என அனைவருக்கும் வியப்பாக இருக்கிறது. இதில் வியப்புகொள்ள என்ன இருக்கிறது? மக்களுக்கான கோரிக்கையில் மக்கள் இணையாமல்? கருத்து மக்களை பற்றிக்கொள்ளும்போது அது மாபெரும் சக்தியாக உருவாகும் என்ற மார்க்சின் கூற்று மெரினாவில் மீண்டும் உண்மையாயிருக்கிறது. தமிழகம் இந்தியாவிலேயே வித்தியாசனது என்பதை நமது மாணவர்களின் மூலம் மீண்டும் நிரூபணமாயிருக்கிறது. நமது மாணவர்கள் அற்புதமானவர்கள். அந்த 6 நாட்களில் சோசலிச சமூகக் கூறை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டி விட்டுச் சென்றிருக்கின்றனர் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  போராட்டத்தை சிதைக்க நினைத்த விஷமிகள் பிஜேபி, ஏபிவிபி, அதிமுக, மற்றும் போலீஸ் உளவாளிகளே. குறிப்பாக பொன்.ராதா என்ன சொன்னானோ அதையே ஆதி, ரஜினி முதல் பன்னீர் வரை ஒப்புவித்து கொண்டிருக்கின்றனர். துரோகிகள் இல்லாத போராட்டங்கள் இல்லை. துரோகிகளை ஒழிக்காமல் போராட்டங்கள் நிறைவடைந்த்தில்லை. காவல்துறை மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் துடைத்து எறிந்த இப்போராட்டம் மிகப்பெரிய வெற்றியே

  • //சிங்கள அரசிற்கும் தமிழக அரசிற்கும் என்ன வித்தியாசமிருக்கிறது? ஒன்றுமில்லை//

   உண்மைதான் ! இரண்டுமே அண்ணன் டெல்லி அரசுக்கு கட்டுபட்டவை; அண்ணனோ பெரியண்ணன் , உலக போலிசு அமெஇச்ச உளவு துறைக்கு அடிமை! இது தான் குலோபலிஸெஷன், அதாவது அரிசி உன்னுது, உமி என்னது ; கலந்து ஊதி ஊதி தின்னலாம்! அமெரிக்கநாசா பட்ஜெட் குறைவு, இந்திய பட்ஜெட்டில் அதிகரிப்பு; இந்திய ராணுவ பட்ஜெட் அதிகரிப்பு அமெரிக்க, இச்ஸ்ரேல் ராணுவநலனுக்காக,நம் அண்டை வீட்டு காரனுடன் சண்டையிட!நமது பொது சுகாதார, கல்வி பட்ஜெட் குறைவு ; அதானி, அம்பானி, மிட்டால் களின் அன்னிய ‘முதலீடு’ அதிகரிப்பு! பட்ஜெட்டில் விழும் ‘துண்டு’, முதலாளிகளின் ஏப்பம், அதாவது ‘வாராகடன்’!

   அண்டை வீட்டு சகோதரனிடம் சண்டை-அயல்னாட்டு ஆயுத விற்பனைக்கு வாய்ப்பு! யாருக்கும் இஙகே சுதந்திரமில்லை!

 7. அய்யா பெரியசாமி, பெரிய ஆசாமிதான்! தற்போதைய இழினிலைக்கு காரணம் , திராவிட இயக்கம் தான் காரணம் என ‘சாதிக்க’ பார்பன ஊடகங்களை போலவே மிகவும் பிரயத்தன படுகிறார் ! அவருக்கு செந்தில் குமரன் அவ்வப்போது சரியான பதிலளித்தாலும், உண்மையை தெளிவுபடுத்துவது எனது கடமை எனக்கருதிநானும் அரங்குக்கு வருகிறேன்!

  தமிழனின் சரிவு ஆரியர் வருகைக்கு பின்னர் ஏற்பட்டதே! சரித்திரம் திரிக்கப்பட்டதே வரலாறு! குடித்தலைவன் ‘அரசனானதும்’ , இவர்கள் அனுமதியுடன் தான் அரசன் முடி சூட்டி கொள்ள முடியும் என்ற பரப்புரை முட்டாள் மக்களை மயக்கியது உண்மை !நெடிய உருவும், வெளிறிய தோற்றமும் இவர்களை வேற்றுகிரக வாசிகளைப்போல காட்டியது உண்மை!

  பாமர மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்தி , இந்திய துணைக்கண்டம் முழுவதும் ஆதிக்கம் செய்யவும், உழைக்காமல், சூத்திரன் சொத்தை கொள்ளையடிக்கவும் மனுனீதி சட்டம் செய்து கொண்டு , மிதிர பேதம், அடுத்து கெடுத்தல், பெண்களை பயன்படுத்தி அழித்தல் முதலிய ‘அறிவு ஜீவி’ வேலைகளைகொண்டு இந்தியா முழுவதும் ,சமூக பொறுப்பில்லா அதிகாரம் செய்தனர்!

  புத்தர் காலத்தில்தான் பூர்வகுடிகளின் தலைவர்கள் தனிதனி அரச குலங்களாக மாறி, வெற்றி பெற்ற அரசகுலத்தை ,இவர்கள் போற்றி அண்டி பிழைத்தனர் ! இதற்காக இவர்கண்டுபிடித்தவழிதான் ‘ஆடல், பாடல், இசை வழியான வேசி தனங்கள்’ ! இவற்றைகொண்டே ‘குடி தலைவனாக இருந்த அரசனை, ‘கோமகனாக’ முடிசூட்டி , குடிமக்களை சுறண்டி , கோவிலும், கோட்டையையும் கட்ட செய்தனர்!

  எதிர்த்த அரசனை, அவனது மகனை கொண்டே அழித்த செய்தியும் உண்டு! சரித்திரத்தில் இந்த புரொகித கூட்டத்தை எதிர்த்த அறிவார்ந்த வீரர்கள் ஒரு சிலரே; உதாரணம்; டேவிட், சாலொமன் , அசோகன், மகாபலி, கிருஷ்ணன், ராவணன் !

  டேவிடும், சாலமொனும் அங்கிருந்த புரொகிதர்களால் அசுரராக்கப்படவில்லை!

  ஆனால், இந்திய துணைக்கண்ட பூர்வ குடிகள் இவர்கள் சொல்வதையெல்லாம்நம்பி மோசம் போய்கொண்டிருக்கிரார்கள்!

  திராவிட இயக்க சிந்தனை தோன்றிய காலத்திலிருந்தே அது அறிவார்ந்த இயக்கமாகவே இருந்து வருகிறது! அதில் தொய்வில்லை; வளர்ச்சி குறைவாக இருக்கலாம்!

  இந்த அறிவு ஜீவிகளின் கடந்த 70 ஆண்டு ஆட்சியில்,( கட்சி எதுவானாலும் ஆட்சி இவர்களது தானே!), பார்பனீயமும் ஊழலும் தானே வளர்ந்தது!

  இது வெறும் அறிவார்ந்த வளர்ச்சியல்ல , அயோக்கிய வளர்ச்சி! இந்த சீர்கேடு இந்தியா முழுவதுக்குமானது!

 8. சுதந்திர இந்தியாவின் முதல்நிதி மந்தியாக , ஒரு திராவிட கட்சிகாரர் (னீதி கட்சி) இருந்தவரை , ஊழல் தலை காட்டவில்லை! அடுத்து வந்த பார்பனநிதி மந்திரி ஆரம்பித்து வைத்த ஊழல் வர்லாறு பல்கி, பெருகி தற்போது கரை புரண்டு ஓடுகிறது! அவாள் ஊழல்கள் ஊடகமும் கண்டு கொளவதில்லை, உச்சநீதிமன்றமும் கண்டு கொள்வதில்லை ! இந்த திருகு தாளங்களை மக்கள் புரிந்து கொள்ள கூடாது என்று தானே சினிமா, கிரிக்கட்டு, கட் அவுட் அரசியல் ? சின்னம்மாவின் திறமை ஜல்லிகட்டில் தெரிந்து விட்டதே ! இனி தமிழனை ஆள சின்னம்மா-2 இறக்குமதி! ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு அன்னிய படையின் ஒரு பட்டண பிரவேசம் தான்!

 9. சாதாரண தமிழர்களுக்கு இடஒதுக்கீடு போன்ற சில பலன்கள், சலுகைகள் கிடைப்பதற்கு திராவிட இயக்கம் தான் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் ஒட்டு மொத்தமாக, அதுவும் கடந்த அறுபது ஆண்டுகளாக, காணும் போது, திராவிட அரசியலால் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் (அதுவும் உலகளாவிய அளவில்) நன்மைகளை விட மிகப்பெரிய தீமைகள் தான் விளைந்துள்ளன. இந்தத்தீமைகள் ஈழத்தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை (சீமான் உள்ளிட்ட ஒரு கூட்டம் இந்த உண்மைகளை சொல்லி இப்போது அரசியல் செய்து வருகிறது. இவர்கள் என்னென்ன தீமைகளை தமிழர்களுக்கு தேடிக்கொடுக்கப்போகிறார்களோ!). திராவிட இயக்கமானது தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தில் இருந்தும் பொது வாழ்க்கையில் இருந்தும் பிராமணர்களை அப்புறப்படுத்தியது. ஆனால் அப்படி அப்புறப்படுத்தப்பட்ட பிராமணர்கள் சும்மா இருக்கவில்லை. அவர்கள் மாநில அரசை விட பல மடங்கு வலிமையான, ஒட்டு மொத்த இந்தியாவையே கட்டுப்படுத்துகிற, மத்திய அரசிலும் அதன் அதிகாரவர்க்கத்திலும் நீதித்துறையிலும் மிக வலுவாக நிலை கொண்டுவிட்டார்கள். இது அல்லாமல் அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு, பல்தேசிய நிறுவனங்கள், உலகப்பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் சாதித்து உலக அளவில் தங்கள் அதிகாரம், பொருளாதாரம், புகழ் ஆகியவற்றை விரிவாக்கியும் கொண்டார்கள். இதற்காக தாங்கள் திராவிட அரசியலுக்கு நன்றி சொல்வதாக சில பிராமணர்கள் அவ்வப்போது நக்கலடிப்பது வழக்கம். (” ஒரு காலத்தில் உள்ளூரில் இருக்கும் தாலுக்கா ஆபீசில் குமாஸ்த்தா வேலை கிடைத்தால் ஜென்ம சாபல்யம் அடைந்துவிட்டதாக எங்கள் ஆட்கள் நினைத்துக்கொள்வார்கள். அப்படி இருந்த நாங்கள் இன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறோம். நோபெல் பரிசு எல்லாம் வாங்குகிறோம். இதற்கு திராவிட அரசியல் தான் காரணம்”). ஆனால் திராவிட அரசியலால் பயன் அடைந்ததாக சொல்லப்படும் தமிழர்கள் தமிழகத்தை தாண்டி வளரவே இல்லை. ஏன் திராவிட இயக்கமே தமிழகத்துக்கு வெளியே வளரவில்லை. குறைந்தபட்சம் அண்டை மாநிலங்களில் வளர்ந்து இருந்தால் கூட திராவிட உணர்வின் காரணமாக இந்த அளவுக்கு நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் முற்றியிருக்காது. திராவிட இயக்கம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் பழக்கத்தையும் கிணற்றுத்தவளையாக இருக்கும் பழக்கத்தையும் தான் கொண்டது. தமிழ்நாட்டு மக்களுக்கும் இவற்றை தான் கற்று தந்திருக்கிறது. செந்தில் குமரன், அஜாதசத்ரு ஆகிய விளக்கெண்ணைகளின் கருத்துக்கள் இவற்றை தான் மெய்ப்பிக்கின்றன. தமிழ்நாட்டு மக்களும் இன்னொரு முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்த்தப்படுகிறார்களோ என பயமாக இருக்கிறது.

 10. திருவாளர் பெரியசாமி அவர்களே! திராவிட இயக்கத்தை அழிக்க பார்ப்பனர்நடத்தும் மூளைச்சலவை பொய்யுரையையே தாங்களும் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள்! ஆட்சி அதிகாரத்திலிருந்து பிராமணர்களை வெளியேற்றியது திராவிட இயக்கம் என்பதே வடிகட்டிய பொய்! மற்ற சாதியினர் கல்விபெறவும், அரசு பதவி பெறவும் இடையூராகவும், அரசு பதவிகளின் ஆக்கிரமிப்பாளராகவும் இருந்த பிராமணர்கள், காமராஜர் எழுச்சியை தடை செய்ய முயன்றும் பலனளிக்காததாலும், வடக்கே காஷ்மிரத்து பண்டிட்டு களைப்போல, பாதிக்கப்பட்டதாக ஒரு மாயை பிம்பத்தை உருவாக்கி மத்திய அரசில் பதவிகளை பெற்றனர் என்பதே உண்மை!

  பெரியார் பலமுறை முயன்றும் சமூகநீதிக்கொளகையை பெயரளவில்கூட ஏற்றுகொள்ள மறுத்த காங்கிரஸ், மூன்றுமுறை முயன்று தோற்ற பெரியார் , வெளியிலிருந்த வ உ சி, அண்ணாமலை செட்டியார், தியாகராயர், T M நாயர் முதலிய பிராமண அல்லதார் இயக்கத்தினருடன் செர்ந்து போராட முன்வந்தார்!

  பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறினாலும் , காமராஜர் (வைகம் போராட்டத்திலும் இவர் கலந்து கொன்டார்) தொடர்ந்து போராடி சென்னை மாகாண காங்கிரஸ் தலைவரானதும், பின்னர் முதல்வரானதும் சரித்திரம்! பார்பன வெறியர் ராஜாஜி மூடிய 2500 கல்விக்கூடங்களை முன்பேநீதிகட்சி திறந்துவிட்டதுடன், மேலும் 6000 கல்வி கூடங்களும் ஏற்படுத்தப்பட்டன!நீதி கட்சி சென்னையில் துப்புரவு தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுடன் கல்வி கற்க ஏற்பாடு செய்திருந்ததை , காமராஜர் விரிவி படுத்தினார் !

  காமராஜரை பெரியார் ஆதரித்ததால், அவரை சதி செய்து தமிழகத்திலிருந்து தூக்கினர்! பெரியார்நேரடியாக மோதாமல், அவர் இயக்கத்தை பிளந்தனர்! அவாள் ஆதரவுடன் அரசியலுக்கு வந்த அண்ணாவும், பெரியார் வழியில் சென்றதாலும், அண்ணாவிற்கு பிறகும் தி மு க அழிக்கமுடியாத சக்தியாக இருந்ததாலும், எம் ஜி யாரை ஒரு பெண்மணியை கொண்டு பிளாக்மெயில் செய்து பிரித்தனர்! என்றாலும் அவ்வப்போது எம் ஜி யாரின் மனசாட்சி விழித்து கொண்டநிகழ்வுகளும் உண்டு! அதனால் வேற்று சாதியினரைநம்பாமல் ஒரு பார்ப்பன அம்மையாரை கட்-அவுட் ஆக வைத்து கொண்டி திரைமறைவில் ஆட்சி செய்தது பார்பனீயம்! இன்னும் மக்கள் விழிப்புணர்வு பெறாததால் இன்னொரு பார்பன கட் அவுட் ரெடியாகி வருகிறது; தீபா என்ற பெயரில்!

  இப்பொது சொல்லும் அய்யா, யாருடைய பள்ளயத்தை யார் பிடிஙகியது? சுதந்திரத்திற்கு பின் விவசாய பண்ணைகளை விற்று எடுத்து கொண்டு டெல்லிக்கு ஓடியது எந்த ஆட்சியில்? சங்கரமடத்து சொத்துகளுக்கும், அவாள் ஆதரவு பெருந்தனக்காரர்களுக்கும் ஆபத்தில்லாமல்,நீண்டநாள் விளம்பரத்திற்கு பின் கொண்டு வந்த நில சீர்திருத்த சட்டம் ஏன் வெற்றி பெறவில்லை?

  தமிழ்னாட்டில் பார்பனர் செல்வாக்கு செல்லாமலிருந்த காலம், தி மு க வின் கலைஞர் ஆட்சியின் போது தான்! எமெர்ஜென்சியின் போது அவரும் அவர் குடும்பத்தினரும் குறி வைத்தே தாக்கப்பட்டனர்!

  எதிர்த்துநின்று என்றுமே போராடியதில்லை, பார்ப்பனீயம்! மறைந்துநின்றே அம்பெய்துவர்; அதுவும் பெரியாசாமி போன்றநம்மாள் பெயரில்!

 11. பெரியசாமி அவர்களின் கருத்தினை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன். காலத்திற்கு ஒவ்வாத ஒவ்வொன்றையும் களைந்து எறிவது தான் தமிழ் சமூகத்திற்கு நன்மையான ஒன்றாக இருக்கும். அந்த வகையில் ‘திராவிட’ என்கிற தேவையற்ற சொற்பதம் இனி தமிழர்களுக்கு தேவையில்லை. ஒருங்கிணைந்த மதராஸ் மாநிலமாக இருந்த வரை அதற்கான தேவை ஓரளவு இருந்தது, மொழி வாரி மாநில பிரிவினைக்கு பிறகு இனியும் திராவிட பட்டத்தை தலையில் தூக்கி சுமப்பதற்கு தமிழர்கள் ஒன்றும் முட்டாள்களோ அல்லது இளிச்சவாயர்களோ அல்ல. திராவிட என்கிற வார்த்தையை வைத்துக் கொண்டு பிற மாநில(கன்னட,தெலுங்கு,மலையாள) வந்தேறி கூட்டங்கள் அரசியல்வாதியாகவும், சினிமா கூத்தாடியாகவும் இருந்து தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்து போதும்.

  பெரியாரின் கொள்கைகளான பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தல் போன்ற அனைத்தையும் இனி தமிழர்களாகவே இருந்து நாம் முன்னெடுப்போம்.

 12. தோழர் மீரான் அவர்கள்: /பார்பணிய ஆதிக்கத்தை அடக்குமுறையை எதிர்க்க வேண்டும் அதை வேரோடு வேரடி மண்ணோடு ஒழிக்க வேண்டும் என்பதில் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்?/

  தோழியர் ரெபெக்கா அவர்கள்://பெரியாரின் கொள்கைகளான பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தல் போன்ற அனைத்தையும் இனி தமிழர்களாகவே இருந்து நாம் முன்னெடுப்போம்//.

  எனக்கு புல்லரிக்கிறது! ஒரு பக்கம் அண்ணன் பெரியசாமி பார்பன எதிர்ப்பால் தான் தமிழகம் இந்த இழினிலைக்கு , அதாவது தமிழகத்தில் பார்ப்பன அதிகாரமே அற்றுவிட்டது போலவும், அவர்கள் டெல்லி சென்று ‘பலம் ‘ பெற்றுவிட்டதாகவும் சாதிக்கிறார்! மறுபக்கம் தோழர்கள் மீரான் அவர்களும்,ரெபெக்கா அவர்களும் , ‘பார்ப்பன எதிர்ப்பை’ தொடராலாம்-ஆனால் ‘திராவிட’ என்ற சொல்தான் விலக்கப்பட வேண்டியது என்று மயக்(ங்)கு கின்றனர்! ஆரிய கலாச்சார படையெடுப்பில் முதலில் அழித்தொழிக்கப்பட்டது ‘திராவிட’ இன அடையாளம்தான்! உங்களுக்கு பிடிக்கவில்லையெனில், இப்போது உறுதிப்பட்டுவரும் சான்றுகளின்படி, சிந்து சம வெளி (இந்திய-திராவிட) பூர்வகுடிகள் என அழைத்து கொள்ளலாம்! திராவிடம் , இந்துஸ்தானம் என்பது வெவ்வேறுநிலப்பகுதிக்கு அயலவர் இட்ட பெயர்! தமிழர் என்பதே அயலவர் உச்சரிப்பில் ‘திரமிள’ என்றும், ‘திரவிட’ என்றும் ஆனது என்பது ஆராய்ச்சியாளர் முடிவு! ஆரியர்களின் இன ஒழிப்புநடவடிக்கையால் , ஆரிய ஆதிக்கம் மலிந்து, பாமர தமிழ் , அன்னிய மொழியால் சீரழிந்தது! இந்த கலச்சார சீரழைவின் வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு இடங்களில் மயங்கியநிலையே தெலுங்கு,கன்னடம், துளு, கொண்டா, சமீபத்தில் மலையாளம்! மற்றவர்கள் எல்லாம் தமிழன் ஏமாந்தநிலையில் மிளகாய் அரைத்திருக்கலாம், எம் ஜி யார் போல கொடரி காம்பாய் மாறியிருக்கலாம்; அதற்காக நம் மொழி ‘திராவிட’ என்னும் பண்டைய மொழி குடும்பத்தை சேர்ந்தது என்னும் வரலாற்று உண்மையை எதற்கு புறக்கணிக்க வேண்டும்?

  • அடிப்படையிலேயே பெரியசாமியின் கருத்தக்க்துடன் Rebecca Mary அவர்கள் முரண்பட்டாலும் எதோ ஒன்று அவரை “பெரியசாமி அவர்களின் கருத்தினை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன்” என்று அவரை கூற வைக்கின்றது. அது அவர்களின் கவனப்பிழையா அல்லது சந்தர்ப்பவாதமா?

 13. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலியவை ஒரே மொழி குடும்பத்தை செர்ந்தவை என்பதால், தனி தனியே அவர்கள் ‘திராவிடர்கள் அல்ல’ என்பது பார்ப்பன திரிபுவாதம் ,நேர்மையாளர்கள் சிந்தித்து செயல்படுக!

  அண்டைநாடு என ஆதிக்க சக்திகளால் செயர்க்கையாக பிரிக்கபட்ட இலங்கை வாழ் மக்களும், பெரும்பகுதி-தமிழர்களே! ஆரிய கூறான சிங்களமும், ஆரிய் அடிமையாய்போன இலங்கைதமிழும் இந்திய? தமிழனுடன் எப்போது ஒத்து போனது?

  சுதந்திரத்திற்கு முந்தைய ‘தமிழ்னாடு காங்கிரசில்’ செயகுழு உறுப்பினரான இலங்கைத்தமிழர்கள் , சுதந்திரத்தின் போது சிங்கள்வருடன் செர்ந்து கொண்டது ஏன்? தந்தை பெரியாரின் போராட்ட சரித்திரம் படித்தல் மட்டுமே தமிழனின் சரித்திரம் புரியும்!

  • திருஅஜாதசத்ரு உங்களிடம் தொடர்ந்து நான் காண்கிற குறைபாடு,ஒருவரின் கருத்தை படிக்கிற நீங்கள் அவர் ஏதோ நம்மிடம் மாறுபடுகிறார் என்று முதல் இரண்டு வரியிலேயே தெரிந்து விட்டதென்றால் உடனடியாக மறுப்பு எழுத உட் கார்ந்து விடுகிறீர்கள்.திராவிட என்ற சொல்லை நீக்கவேண்டும் என்று நான் எங்கே சொன்னேன்.நான் மிகத்தெளிவாக திராவிடம் என்ற வார்த்தைக்கு எதிராக புது அரசியல் வந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியே விவாதத்திற்க்குள் நுழைகிறேன்.நான் உங்களிடம் வலியுறுத்தி கூறிக்கொள்கிறேன். நாம் முகத்தோடு முகம் பார்த்து விவாதிக்கவில்லை.பல்வேறு மூலைகளில் உட் கார்ந்து எழுத்தால் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.பல நெருக்கடிக்களுக்கிடையில் விவாதிக்கிறோம்.எழுதியதையே திரும்ப திரும்ப எழுவது சோர்வாய் இருக்கிறது.தயவு செய்து கருத்தூன்றி படித்து விட்டு பதிவிடுங்கள்.

 14. /சாதாரண தமிழர்களுக்கு இடஒதுக்கீடு போன்ற சில பலன்கள், சலுகைகள் கிடைப்பதற்கு திராவிட இயக்கம் தான் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை../
  நன்றி பெரியசாமி அவர்களே!நாணல் என்ற புல் ஒரு வலிமை மிக்க அடையாளம் ! பார்பன சடங்குகள் எல்லாவற்றிலும் அது இடம்பெறும்! அதனுடைய இயல்பு என்னவென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்துநெளிந்து , எத்தகைய புயலிலும் தப்பித்து கொள்ளும்! கெஞ்சினால் சிலர் மிஞ்சுவர்; மிஞசினாலோ கீழிறங்கி கெஞசுவர் ! ஆனால் இது தான் இந்திய வரலாற்றின் மிகப்பெரிய தத்துவம்!நண்பரும் திராவிட இயக்கத்தின் ஒரு பங்களிப்பை ஒத்து கொண்டார் எனினும், சம்பந்தமே இல்லாமல், பார்பனரின் ஆங்கில புலமை, அறிவு சார் துறைகளில் முன்னேற்றம் முதலியவை திராவிடருக்கு ஏற்படவில்லையே என அங்கலாய்க்கிறார்!

  தமிழில் ஒரு பழமொழி உண்டு! ‘அரசமரத்தை சுற்றியவுடன் அடிமடியை தடவினாலாம்’ என்று! நண்பருக்கு புரிந்தால் சரி! காமராஜரால் பதவியில் அமர்த்தப்பட்டநெ து சுந்தரவடிவேலு அவர்கள் பள்ளி கல்வி துறை இயக்குனராக இருந்த போது இங்கு ஒரு கல்வி புரட்சியே ஏற்பட்டது! சமீபத்திய விஞ்ஞானிகள் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை எல்லோரும் திராவிட இயக்க காலத்தில் படித்தவர்கள் தாம் !

  காமராஜர் ஆட்சியின்போதெ தமிழனை காட்டிகொடுக்கும் விபீஷண தமிழர்களை பார்பனீயம் உருவாக்கி விட்டது;நண்பர் போன்ற திருகு தாளங்கள் , கொஞ்சம் போதை தெளிந்தெழுந்த தமிழனை மீண்டும் ‘ஆரிய மாயைக்குள்’ அமுக்குகிறதே!

  எமெர்ஜென்சி கொடுமைகளுள் ஒன்று ஓரளவு விடுதலை பெற்ற பத்திரிகை, கருத்து சுதந்திரம் மீண்டும் அடக்கி, ஒடுக்கபடுகிறதே! அரசுக்கு ஊது குழலாய் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்பதே இன்று இந்தியா முழுமைக்கு மானநிலை! வினவும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது அவ்வப்போது வரும் கட்டுரைகளிருந்து அறியலாம்!

  அறிவு ஜீவிகளானநீங்கள் சாதைக்க விரும்பினால் , அதற்காக திராவிட இயக்கத்தை கொச்சைபடுத்தாமலேயே அதை செய்யலாம்! அவ்வாறன்றி, குறை கூறியே பார்பனரிடம் பரிசு பெற விரும்பினால் அவ்வாறே தொடரலாம், கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு, விபீஷணர்கள் எங்களுக்கு புதிதா என்ன?

 15. திராவிட இயக்கத்தை ஒரு “worthy enemy” யாக பிராமணீயமும் அது தாங்கி பிடிக்கும் இந்துத்துவமும் எப்போதும் கருதியதில்லை. திராவிட இயக்கம், அதன் தலைவர்கள், கொள்கைகள் ஆகியவற்றை “nuisance value” கொண்டவைகளாகத்தான் பிராமணீயம் மதிப்பிட்டு வந்திருக்கிறது. அது சரி என நிரூபணமும் ஆகியிருக்கிறது. பிராமணீயம் தனது இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதுவது இஸ்லாம் மற்றும் கிறுஸ்த்தவம் ஆகிய மதக்கோட்பாடுகளையும் கம்யூனிசம் என்னும் அரசியல் கோட்பாட்டையும் தான். திராவிடம் என்னும் கோட்பாடு அதற்கு ஒரு பொருட்டே கிடையாது.

  • பெரியசாமி நீங்கள் முதலில் யார் ? பார்ப்பனிய தரப்பிற்கு ஆதரவாக பேசுகிறீர்களா? அல்லது தமிழர்களுக்கு ஆதரவாகவா? முதலில் அதனை தெளிவு படுத்தி விடுங்கள்.

   • பெரியசாமி யார் என்று ஆராய்வதில் என்ன இருக்கிறது?அவர் யாராகவும் இருந்துவிட்டு போகட்டும்.அவர் சொல்ல வருவது ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.”பார்ப்பணர்களை விரட்டிவிட்டு அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்”? என்று திராவிட இயக்கத்தினரை கேட் கிறார்.உண்மையில் பார்ப்பணர்களை யாரும் விரட்டவில்லை.அவர்களாக விலகிப்போனார்கள்.இன்றைக்கு தமிழ்நாட்டில் சில அக்ரகாரங்கள் இருக்கிறது..அதில் பார்ப்பணர்கள் இல்லை.காரணம் மற்ற சமூக மக்கள் அதை நெருங்க நெருங்க அவர்கள் இடம் பெயர்ந்து விடுகிறார்கள்.எனக்குத்தெரிந்து சென்னையில் ஒரு பிராமண அக்ரகார குடியிருப்பில் முதலியார் செட்டியார் முஸ்லிம் கள் கிறித்துவர்கள் என்று கலந்து போனது.வழிநெடுக கூலி தொழிலாளிகளான தலித் மக்கள் இருக்கிறார்கள்.அக்ரகாரம் சமத்துவபுரமாக மாறிப்போனது.பார்ப்பணர்கள் முற்றிலும் எடுபட்டு போய்விட்டார்கள்.ஆக அவர்களை யாரும் விரட்ட வேண்டியதில்லை.அவர்களால் மற்றவர்களோடு இணைந்திருப்பது கடினம்.திராவிடம் அவர்களின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கியதே தவிர ஒரு போதும் வன்முறையால் அவர்களை விரட்டியதில்லை.அதேவேளை பார்ப்பணியம் திராவிடத்தை கொஞசமும் சட்டை செய்யவில்லை என்பது உண்மைதான்.இந்த எதார்த்தம்தான் சிலருக்கு கசக்கிறது.திராவிட இயக்கத்தின் துவக்கம் பெரியாரின் சமரசமற்ற கலகம் பார்ப்பணியத்தை கலங்கடித்திருந்தாலும் இன்றைக்கு அது சூம்பி சுருங்கி வாடி வதங்கி ஈனஸ்வரத்தில்தான் அது முனங்கி கொண்டு கிடக்கிறது.பெரியசாமி சொல்வதைப்போல இஸ்லாம் கிறித்துவம் கம்யூனிஸம் என்ற மூன்றே அவர்களை அச்சுறுத்தும் சவால்கள்.அதை வெளிப்படையாகவே இந்துத்துவம் பிரகடனப்படுத்துகிறது.திராவிட கொள்கை அதன் தனித்துவத்தை இழந்துதான் நிற்க்கிறது.அதற்க்கு, ஆட்சி அதிகாரத்திற்க்கு சமரசமாகிப்போன அதன் தலைவர்களே காரணம்.ஆனாலும் தமிழ்நாட்டில் இஸ்லாம் கிறித்துவம் கம்யூனிசத்திற்க்கு அரணாகி ஆதரவாகி கையோடு கைகோர்த்து நிற்ப்பது இன்றுவரை திராவிடம் தான் என்பதை மறந்தால் அது நன்றி கொன்ற செயலே.ஆனால் அது தன் ஆரம்பகட்ட வீரியத்தை அணையாமல் காத்து வந்திருந்தால் இன்றைக்கு வாய்சவடால் அடிக்கிற நிலைக்கு பார்ப்பணியம் வந்திருக்காது.தயவு செய்து கருத்தூன்றி படித்துவிட்டு பலளியுங்கள்.என்னை எங்கேயாவது பிடித்து தள்ளிவிட்டு விடாதீர்கள்.

    • “அறிவுத்தளத்தில் பிராமணர்களை நாம் எட்டிவிட்டோமா”என்பதுதான் பெரியசாமி தொடர்ந்து எழுப்பும் கேள்வி.அனைத்தையும் தனக்கு சாதகமாக்கி பலநூறு ஆண்டுகள் நமக்கு முன்னே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை சில பத்து வருடங்களாக தயாராண நாம் எட்டிப்பிடிப்பதும் தாண்டிப்போவதும் எப்படி சாத்தியம் என்று எனக்கு விளங்கவில்லை.அதேவேளை பிராமணர் அல்லாத தமிழ்ச்சமூகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுதான் இருக்கிறது.கண்ணுக்கு பெரிதாக தெரியாத ஆரோக்கியமான சிந்தனை மாற்றங்கள் தேசிய அளவில் தமிழ்நாட்டில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.இவையெல்லாம் போதாது.திராவிடம் துவக்கத்தில் ஏற்ப்படுத்திய புரட்ச்சி அதிர்வு தொடர்ந்து காலத்திற்க்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டு அதன் அடிப்படை கொள்கையிலிருந்து வழுவாமல் பின்பற்றப்பட்டிருந்தால் நிச்சயம் இப்படிப்பட்ட விமர்சங்களை சந்திக்க வேண்டி வந்திருக்காது.பெரியசாமியின் விமர்சனத்தை ஒரு எச்சரிக்கையாக நம்மை விரட்டும் சாட்டையாக எடுத்துக்கொண்டால் விட்ட இடைவெளியை நிரப்பமுடியும்.”நீ யார்? பார்ப்பானுக்கு கையாளா? அவன் கையூட்டு தந்தானா?” என்று உடனடியாய் முட்டியை தூக்கிகொண்டு வந்தால் கண்ணை மூடிய பூனை கதைதான்.

   • Rebecca Mary…,அத்தகைய தெளிவு இல்லாமல் தான் இதுவரையில் இந்த கட்டுரை பின்னுட்டத்தில் பெரியுசாமியின் கருத்துகளை முழுமையாக ஆதரித்து பேசிக்கொண்டு இருக்கின்றீர்களோ?

 16. அஜாஹசத்ரு…….

  //அதற்காக நம் மொழி ‘திராவிட’ என்னும் பண்டைய மொழி குடும்பத்தை சேர்ந்தது என்னும் வரலாற்று உண்மையை எதற்கு புறக்கணிக்க வேண்டும்?//

  இதை தமிழர்களாகிய நாங்கள் புறக்கணிக்கவில்லை, இதனை ஏற்றுக் கொண்டதால் தான் கருணாநிதி, எம்ஜியார் தொடங்கி ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் என்று வரிசையாக பல அசிங்கங்களை சுமந்து கொண்டிருக்கிறோம். திராவிட மொழி குடும்பம் என்பதையோ உணர்வால் நாம் திராவிடர் ஆவோம் என்னும் பம்மாத்தையோ கன்னடனிடமும், தெலுங்கனிடமும் போய் சொல்லி பாருங்கள் வாயை உடைத்து தான் அனுப்புவார்கள். நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம், இப்போது என்ன செய்ய வேண்டும் அதற்க்கு. இன்றைய தேதியில் இந்த வாதத்தை வைத்துக் கொண்டு ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ அந்த மாநிலத்திலேயே பிறந்து வளர்ந்த தமிழன் ஒரு வார்டு கவுன்சிலராக கூட போட்டியிட முடியாது. தேர்தலில் போட்டியிடுவது இருக்கட்டும், தமிழர்களின் ஜீவாதார உரிமைகளான பாலாறு, காவிரி முல்லை பெரியாறு என்று மலை போல் பரந்து கிடக்கும் பிரச்சனைகளில், ஒரு சிறு கல்லை கூட நகர்த்த முடியாது. இப்படி எதற்குமே உதவாத திராவிட கோட்பாட்டை இன்னும் தமிழர்கள் ஏன் தங்களின் தலையில் தேவையில்லாத சுமையாக சுமந்து திரிய வேண்டும், பெரியாரை ஏற்றுக் கொண்ட பாவத்திற்காகவா!!!!!!!உண்மை தமிழர்களை சிந்திக்க வேண்டுகிறேன்.

  ஒட்டுமொத்த தமிழர்களும் பெரியாரின் பேச்சை கேட்டு திராவிட நாடு வேண்டும் என்று கோஷம் போட்டு கொண்டிருந்தபோது, இங்கு சென்னையில் பொட்டி ஸ்ரீராமுலு என்கிற வடுகன், உங்களின் ஏமாந்த பாணியில் கூற வேண்டுமானால் ஒரு திராவிடன், ஆந்திரத்தை பிரித்து கொடு, அதுவும் சென்னை நகரத்தோடு சேர்த்து பெயர்த்துக் கொடு என்று கோரி 52 நாட்கள் உண்ணா விரதமிருந்து செத்து போனான், அன்று சென்னையில் இருக்கும் ஒட்டு மொத்த தெலுங்கர்களும் வெகுண்டெழுந்து “மதராஸ் மனதே” என்று தான் கோஷமிட்டு வன்முறையில் இறங்கினார்களே தவிர, திராவிட நாடு என்கிற பெரியாரின் சரக்கை எந்த தெலுங்கனும் மதிக்கவில்லை. தெலுங்கர்கள் மட்டுமல்ல மலையாளி, கன்னடன் என்று யாரும் கால் தூசுக்கு கூட திராவிட நாடு என்கிற கூச்சலை கண்டுகொள்ளவே இல்லை.

  நீங்கள் கூறிய திராவிட மொழி குடும்பம் என்பது உண்மையாகவே இருக்கட்டும், அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இது மட்டுமல்ல, ஆரியர்கள் இங்கு வருவதற்கு முன்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது தமிழ் தான் என்று அண்ணல் அம்பேத்கரே கூறி இருக்கிறார். இன்னும் பல்வேறு நாட்டு மொழியியல், வரலாற்று வல்லுனர்களும் கூறி இருக்கிறார்கள். ஆகவே, இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் பாதுகாப்பாக நாம் ஆவண காப்பகத்தில் வைப்போம். இப்போதைக்கு அதை மட்டுமே நாம் செய்ய முடியும். எப்போது கேரளர்களும், தெலுங்கர்களும், கன்னடர்களும் இத்யாதி இத்யாதிகளும் தங்களை திராவிடர்களாகவும் திராவிட மொழி குடும்பத்தில் தங்களையும் ஒருவராகவும் ஏற்றுக் கொள்கிறார்களோ அப்போது தமிழர்களாகிய நாமும் நம்மை திராவிடர்கள் என்று பெருமைப்பட கூறி கொள்வோம். அது வரை திராவிட இனம் என்று கூறி கொண்டு, உணர்வால் நாம் தமிழராக இருப்போம் என்று பம்மாத்து பேசி கொண்டு தோளில் கை போட நினைக்கும் வடுகர்கள் அனைவரையும் முதலில் ஆந்திர, கர்நாடக அரசிற்கு எதிராக குரல் கொடுக்க வைப்போம், அப்படி அவர்கள் முன் வரவில்லை என்றால், வைக்க வேண்டிய இடத்தில் அவர்களை நாம் தள்ளி வைப்போம். நன்றி.

  கொசுறு:- இன்று பத்திரிக்கையில் வந்த செய்தி, பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அதவது வட திராவிட தேசமான ஆந்திரா மேலும் புதிதாக இரண்டு தடுப்பணைகள் கட்டி தமிழக விவசாயியின் தாலியை அறுக்க போகிறதாம். இதனால் பாலாற்றை மட்டுமே நீர் ஆதாரமாக கொண்ட 50 ஆயிரம் ஹெக்ட்ர் விவசாயம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  மேலும் தகவல்களுக்கு:- http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=277015

  என் மறுமொழியை படித்து விட்டு காரசாரமாக பதில் பின்னூட்டம் போட போகும் திராவிட குளுவான்கள், மேற்படி பாலாறு தடுப்பணை தொடர்பாக என்ன செய்யலாம் என்று உருப்படியான நல்ல யோசனை ஒன்றை கூறி விட்டு வசை பாட துவங்கலாம்.

  • Rebecca Mary …, நீங்கள் வைக்கும் கருத்துகள் Ajathasathru அவர்களுக்கான பதிலாக எடுத்துகொண்டால் கூட பொதுவில் சுய முரண்பாடுகள் முட்டிக்கொண்டு நிற்கின்றது… அதனை குறிபிடுவது எனது வரலாற்றுக் கடமையாக தான் பார்கின்றேன்… என்ன விசயம் என்றால் மொழி அடிப்படையில் நாம் மாநிலங்களை பிரித்துக்கொண்ட போது (தமிழர் ,தெலுங்கர், மலையாளிகள் ) அது சரியானது தானே? அத்தனை தானே தமிழ் தேசியம் பேசுவோரும் ஆதரிகின்றேன்… அதே அடிப்படையில் தெலுங்கு மொழியினர் தனி மாநிலத்துகாக போராடியபோது அவர்களை நாம் எதற்காக வைய(திட்ட) வேண்டும்?

  • Rebecca Mary: நீங்கள் சொல்வது தவறான தகவல். தமிழர்கள் பலர் மற்ற மாநிலங்களில் MLA மற்றும் MPயாக இருக்கிறார்கள், சமீபத்திய உதாரணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கேப்டன் தமிழ்செல்வன் என்பவர் MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடகா, கேரளா என்று நாட்டின் பல பகுதிகளிலும் தமிழர்கள் மக்கள் பிரதிநிதியாக இருந்து இருக்கிறார்கள்.

   • மணிகண்டன், இந்த பம்மாத்து பேச்சையெல்லாம் பல முறை கேட்டு அலுத்து நொந்து விட்டோம். நீங்கள் சொல்வது எனக்கு தெரியாமல் ஒன்றுமில்லை, கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தமிழனை தான் நிறுத்தி ஆக வேண்டும், வேறு வழி இல்லை. அங்கு மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர் தென்னாப்பிரிக்க போன்ற நாடுகளிலும் கூட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழரை தான் நிறுத்துவார்கள். அது வேறு, அதனோடு தமிழ்நாட்டு அரசியலை ஒப்பிட வேண்டாம். இங்கு நிறுத்தப்படும் வேட்பாளர்களில் கிட்ட தட்ட பாதி பேருக்கு மேல் வடுகர்களின் ஆதிக்கம் தான் இங்கு அதிகம். தி.மு.கவில் உள்ள கே.என் நேரு, நெப்போலியன், ஆற்காடு வீராச்சாமி என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கின்றது. மற்றும் பண்ருட்டி ராமசந்திரன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் என்கிற ராமகிருஷ்ண நாயுடு, Vaiko என்று ஒரு பெரிய வடுகர் பட்டாளமே தமிழக அரசியலில் இருக்கிறது, (ம.தி.மு.க , தே.மு.தி.க போன்ற கட்சிகளிலும் உண்டு அது தனி கதை) இவர்கள் அனைவரும் தமிழர்களின் நாட்டில், தமிழர் அதிகம் வசிக்கும் பகுதியில் நின்று தான் தேர்வாகிறார்கள்.

    நீங்கள் சுட்டும் தமிழ்ச்செல்வன் என்பவரும், தமிழர்கள் குறிப்பிட்ட அளவில் அதிகமாக இருக்கும், சியோன் கோலிவாடா SION KOLIWADA (MUMBAI CITY) என்கிற தொகுதியில் நின்று தான் வெற்றி பெற்றார். இதை ஒரு தேசிய பெருமிதமாக சொல்வதெல்லாம் கேவலத்தின் உச்சம். இங்கு வடுகர்களை போன்று கர்நாடகா, ஆந்திரா, கேரளத்திலோ, மஹாராஷ்டிரத்திலோ அவர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய நிலையில் ஒன்றும் தமிழர்கள் அங்கு வைக்க படவில்லை. அதற்க்கு அவர்கள் விடவும் மாட்டார்கள்.

    • சரி கேரளாவில் ஆந்திராவில் கர்நாடகாவில் ஒரு எம்.ஜி.ஆரை போல் கருணாநிதியை போல் மக்கள் நம்பிக்கையை முழுமையாக பெற்ற தமிழ் அரசியல்வாதிங்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். எங்கே போனாலும் அங்கே அந்த மக்களோடு மக்களாக ஒன்றி வாழாமல் அந்த மக்களின் நலனை பார்க்காமல் அங்கேயும் தமிழன்டா என்று திரிந்தால் எப்படி அந்த மக்களிடம் நம்பிக்கை பெற முடியும் ? இங்கே கருணாநிதி தெலுங்கர் என்று சொன்னாலும் அவர் எத்தனை முறை தன்னை தெலுங்கராக முன் நிறுத்தி இருக்கிறார் ? கருணாநிதி தன்னை ஒரு தமிழராக தானே அரசியலில் முன் நிறுத்தி மக்களிடம் வாக்கு கேட்கிறார், நான் தமிழக மக்களுக்கு கடமைப்பட்டவன் என்று தானே அவர் தேர்தலில் சொல்கிறார்… பிரச்னை தமிழ் மக்களிடம் இருக்கிறது மாற்றம் வர வேண்டும் ஆனால் அரசியல்வாதிகள் எல்லோரும் இனவெறியை தூண்டி விட்டு அதில் குளிர்காய பார்க்கிறார்களே ஒழிய மக்களுக்கு தேசநலனுக்கு எது நல்லது என்று யாரும் பார்ப்பது இல்லை.

     எனக்கு என்னமோ மொழிவாரியாக தனித்தனி மாநிலமாக பிரித்தது தவறு என்று படுகிறது அதனால் தான் தேசத்தை மறந்துவிட்டு இனவாதம் தலை தூக்கி இருக்கிறது.

    • நீங்கள் சொல்லும் தொகுதியில் தமிழர்கள் மட்டும் அல்ல மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும், மராத்தியர்களும் அதிகமாக இருக்கிறார்கள், அவர்களின் வாக்குகள் இல்லாமல் தமிழ் செல்வன் வெற்றி பெற்று இருக்க முடியாது. வெறும் தமிழர்கள் மட்டுமே வாழும் பகுதி இல்லை அது.

 17. Ajathasathru…, தெலுங்கர்கள் மொழிவாரி மாநில பாகப் பிரிவினையின் போது அளவுகடந்த ஆசையில் சென்னையை கோரிய போது தமிழ் நாட்டின் நலன்களை காக்க நமது முன்னோர்கள் வட தமிழ் நாட்டிலும் (திருத்தணி) போராடியுள்ளார்கள்….அப்போது திராவிட கொள்கையுடையவர்கள் அப்படி பட்ட தமிழ் நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு போராடவில்லை என்பது உண்மை தான்…தென் எல்லையில் மார்ஷல் நேசமணியின் தலைமையில் போராடியபோது திராவிட இயக்கங்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள் என்ற கேள்வியையும் நான் உங்கள் முன் வைக்கின்றேன்….

  • செந்தில் குமரன்! தங்கள் கேள்விநியாயமானதே! ஆனால் போராட்டம் அறிவித்தபோது பார்பனர் உள்ளிட்ட மற்ற உயர்சாதீயினரின் ஆதரவை, கடவுள் மறுப்பாளரான பெரியாரை இணைப்பதால், இழக்க விரும்பவில்லை ம பொ சி ! அதற்கு குல்லுக பட்டர் ராஜாஜியின் ஆலோசணை இருந்திருக்கும்! இலங்கை விடுதலை போராட்டத்திலும் இதேநிலைதான் , ராஜாஜியின் ஆலோசனைப்படிதான்நடந்தது! தி மு க வோ பெரியாரை பிரிந்து கட்சியாக உருவெடுக்கவே காலம்பிடித்தது ! 1952 தேர்தலிலும் போட்டியிடவில்லை ! தனிப்பட்ட முறையில் தி க , பெரியாரின் உடல்நிலை பற்றிய கவலை, வாரிசு உரிமை பற்றி (ராஜாஜி தூண்டுதல் இருக்க கூடும்) கருத்து வேற்றுமை போன்ற தனிப்பட்டநிகழ்வுகளால் பலமிழந்து இருந்தநேரம்! தியாகி சங்கரலிஙனார் உண்ணாவிரதத்தின் போதும் பெரியார் புறக்கணிக்கப்பட்டு இருந்தார், ஆனால் அண்ணா ஆதரவளித்தாக அறிகிறோம்! மேலும் வரலாற்றை அன்னாளைய ‘குடியரசு’ வெளியீடுகளை கொண்டு ஆராயலாம்-மனமிருந்தால் !

   • காமராஜரும் , மாபொசியும் உள்கட்சி பூசலில் வேறுபட்டு நின்ற நிலையில் ராஜாஜியின் ஆலோசனைகளை கேட்டு மாபொசி செயல்பட்டு இருக்க சாத்தியங்கள் இருக்கு… ஒரு நிமிடம் இருங்கள் தமிழ் நாட்டின்வரலாற்றை மீண்டும் refer செய்துவிட்டு விவாதிக்கின்றேன். தமிழ் நாட்டின் எல்லை காக்கும் போராட்டத்தின் போது ராஜாஜி அவர்கள் தான் முதல்வராக இருந்து இருக்கின்றார்.1953 மே மாதத்தில் நடந்த எல்லை காக்கும் போராட்டத்தினை மாபொசி அவர்கள் ராஜாஜியின் வேண்டுகோளின் அடிபடையில் தற்கலிகமாக நிறுத்திவைத்து உள்ளார்.

   • சென்னை மாகாணத்தில் ,தமிழ் நாட்டை சேர்ந்த தெலுங்கர்களே முதலமைச்சர்களாக இருந்து வந்தார்கள்…. 10-04-1952 ல் ராஜாஜி முதல் அமைச்சராக பதவி ஏற்ற உடன் தெலுங்கர்களின் தனி மாநில கோரிக்கை தீவிரமடைந்தது என்று கூட நாம் சிந்திக்க இடம் உள்ளது அல்லவா?

   • 24-3-1954 அன்று குலகல்வி திட்டத்துக்கு ஏற்பட்ட எதிர்பால் ராஜாஜி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவுடன் பெரியாரின் அறிவுரையின் படி காமராஜர் 13-4-1954 அன்று முதல் அமைச்சராக பதவி ஏற்றார்… அதன் பின் காலியாக இருந்த குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் “காமராஜர் பச்சை தமிழர்…., அவர் முதலமைச்சராக இருந்தால் தான் தமிழ்நாடு முன்னேறும் என்று பெரியார் கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.. அதே போன்று ராஜாஜியின் குல கல்வி திட்டத்தை ரத்து செய்த காமஜாருக்கு அந்த தேர்த்தலில் ஆதரவு தெரிவித்த அண்ணா அவர்களும் “குலக்கொழுந்தே ! குணாளா ! “ என்று காமராஜரை பாராட்டி ஆதரவு தெரிவித்தார்…. எனவே அன்றைய நிலையில் தமிழர் முதல்வாராக திராவிட இயக்கமும், தி மு க வும் ஆதரவாக இருந்ததன என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் இருகின்றன… திராவிட இயக்கங்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று யாராலுமே வாதங்களை எடுத்து வைக்க இயலாது…..

   • 1955 ஜனவரி மாதம் தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் 60வது மாநாட்ட்டில் “சோசியலிச பாணி” சமுகத்தை அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை அபுல்கலாம் ஆசாத் முன்மொழிய காமராஜர் அதான வழிமொழிகின்றார்… அதற்கு பின் வந்த ஆணடுகளில் காமராஜர் முதல்வர் பதவியில் இருந்து நடைமுறை படுத்திய மக்கள் நல திட்டங்களை பட்டியல் இட வேண்டுமா என்ன?

 18. இன்று ஜனநாயகம் என்பதை அரசியல்வாதிகள் மிக மிக தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள், மக்கள் நலன் மீது அக்கறை இருப்பதை செயல்கள் மூலம் காட்டாமல் மற்ற இன மக்கள் மீது வெறுப்பை தூண்டி அதன் மூலம் நாங்கள் தமிழர்களின் பாதுகாவலர்கள், கன்னடிகர்களின் பாதுகாவலர்கள், தெலுங்கர்கள் பாதுகாவலர்கள் என்று ஒரு பிம்பத்தை உருவாகிறார்கள், இது ஹிட்லர் வழி, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு இது நல்லது இல்லை.

  மக்களை இனம் ஜாதி மதம் மாநிலம் கடந்து அனைவரையும் இந்தியர்கள் என்று ஒன்றிணைக்க வேண்டும் என்பதை அரசியல்வாதிகளில் இருந்து மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லும் இயக்கங்கள் வரை மறந்து விட்டார்கள். 120 கோடி மக்கள் ஒரே நாடாக வாழ்வது மிக பெரிய சாதனை, 120 மக்களும் தனித்தனி நாடாக இருந்தால் யோசித்து பாருங்கள்… தமிழ் நாட்டிலேயே சேர சோழ பாண்டிய மற்றும் பல குறுநில மன்னர்கள் என்று தினமும் சண்டை சச்சரவுகள் மரணங்கள்.

  நிச்சயம் இனவாதம் மதவாதம் பேசி மக்களிடம் வெறுப்பை தூண்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

  வினவு போன்ற தீவிரவாத (மதவாத) ஆதரவாளர்கள் மீது எனக்கு மிக பெரிய பயமே உள்ளது இவர்கள் நாட்டை நாசம் செய்ய எந்த லெவேலுக்கும் போவார்கள் என்பது மெரினாவில் நடந்த வன்முறையே சாட்சி.

  வினவு போன்றவர்களின் செயல்கள் நியாயமும் இல்லை தர்மமும் இல்லை.

 19. சகோதரி ரெபெக்கா ! உங்கள் புரிதல் தவறானது ! இதை தெரியாமல் செய்கிறிர்களா அல்லது சில பார்பன திரிபுவாதிகளை போல தெரிந்தெ செய்கிறீர்களா?

  1.நாங்களும் திராவிட கட்சிதான் என்று சிலர் பதவிக்கு வரும்வரை கூறிக்கொள்வது, அவர் செயலைபார்த்து உறுதி படுத்த முடியுமா? விலைபோகாததால் எமெர்ஜென்சியை சந்தித்த கருணானிதியுடன், விலை போன எம் ஜி யாரையும், ஆர் எஸ் எஸ் -ன் திட்டப்படிநானும் பெரியார் பக்தை என்றும், எம்ஜியாருக்கு பிரகு உடன் கட்டை ஏற முயன்றேன் என்றும் , சின்ன வீட்டு சென்டி மென்டில் சில சுயநலமிகளின் துணைகொண்டு ஆட்சியை பிடித்து , மத்திய அரசு செல்வாக்கில் , மமதை தலைக்கேரிய பின்நானும் பாப்பத்திதான் என்றநடிகையை , திராவிட கட்சியாளராக ஒப்பிட எப்படி மனம் வந்தது?

  2. பார்பன திமிரில் சில கிரிமினல் குற்றவாளிகளை இஷ்டப்படியெல்லாம் ஆட்டுவித்து, வேசி ஊடகங்களை தான,தண்டங்கள் மூலம் தாசர்களாக்கி நடிகை ஆடிய ஆட்டம் , பின்புல டைரக்ஷன் , ஆர் எஸ் எஸ் என்பதால் தானே சாத்தியமாயிற்று? இல்லையென்றால்,நீதியரசர் சிவப்பா முடித்து வைத்திருக்க வேண்டிய , இந்த போலி திராவிட ஆட்சி 20 வருடங்கள் இழுத்து, இன்னும் பார்பனநூலில் தொங்கிகொண்டிருப்பது அறிவீரா?

  3. பெரியாரின் தனி தமிழ்னாடு கோரிக்கையை முறியடிக்கவே , அன்றைய பார்பன காங்கிரசு இலங்கையை பிரித்ததும், பின்னர் தனி தெலுங்குநாடு கேட்டதும் வரலாறு அல்லவா? பொட்டி ச்றீ ராமுலு மரணத்தை சாக்காக கொண்டு மொழிவாரி மானிலங்கள் பிரிக்கப்பட்டபின்னரும் ,நமது மானிலம் தமிழ்னாடு ஆகாமல், மெட்ராஸ் ஸ்டேட் என்ருதானே இருந்தது, தி மு க பதவிக்கு வந்து மாற்றும் வரையில்?

  4. சரித்தை திரிப்பதைத்தான் எதிர்க்கிறேன் அன்றி, பாலாறு தடுப்பணைக்கும், பவானி தடுப்பணைக்கும் போராடுவதை யார் தடுத்தது? இன்றைக்குநடக்கும் பினாமி ஆட்சியில் போராட்டம் செய்தாலாவது பலன் கிட்டுமா பார்க்கலாம்!

 20. இந்தியாவிலேயே திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு பேர் போன மாநிலங்கிளில் ஒன்று தமிழ்நாடு. தமிழ்நாட்டின் மீதும் தமிழர்களின் கலாச்சாரத்தின் மீதும் உண்மையிலேயே இந்த திராவிட இயக்கத்தவருக்கு அக்கறை இருந்திருந்தால் மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டி இந்த அசிங்கத்துக்கு எப்போதோ முடிவு கட்டி இருப்பார்கள். ஆனால் செய்யவில்லை. மேலும் தமிழ்நாட்டில் எங்களால் தான் கல்வி அறிவு அதிகரித்தது. காலேஜ் கட்டினோம். பல்கலைக்கழகம் அமைத்தோம் என்றெல்லாம் பெருமை பேசினார்களே தவிர கல்வியின் தரத்தை பற்றி யோசிக்கக்கூட இல்லை. இந்த மாநிலத்தின் கல்வித்தரம் பாதாளத்தில் இருப்பதால் தான் தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் கூட (வேலைவாய்ப்பாக இருந்தாலும் கல்வியாக இருந்தாலும்) பிராமணருக்கு அடுத்தபடியாக மலையாளிகளும் ஆந்திரரும் வடஇந்தியருமே கோலோச்சுகிறார்கள். தமிழர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருப்பதால் தான் பொங்கலுக்கு விடுமுறை அறிவிப்பதில் கூட இத்தனை குழப்பம். அகில இந்திய அளவிலான நீட் போன்ற போட்டித்தேர்வுகளை கண்டு நம் மாணவர்கள் அஞ்சுவது எதனால்? இங்கிருக்கும் மோசமான கல்வித்தரத்தினால் தானே? இப்போது சமச்சீர் கல்வி என்னும் ஒரு தண்டம் ஒட்டுமொத்த மாநிலத்தையே பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த சமச்சீர் கல்வியை கண்டு அஞ்சிய புதுவை அரசு தனது பள்ளிகளை சிபிஎஸ்சி பாடத்திட்டத்துக்கு மாற்றிவிட்டது. இந்த சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தி புண்ணியம் கட்டிக்கொண்ட திராவிட ஆட்சியாளரோ தனது பேரப்பிள்ளைகளுக்கு பிராமணர்கள் நடத்தும் பத்மா சேஷாத்திரி பால பவன் (சிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்டது) என்னும் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை என்றவுடன் மாய்ந்து போனாராம். தமிழ்நாட்டு மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பாரம்பரியமாக ஆதிக்கம் செய்த பிராமணர்களோடு போட்டி போட்டு குறுகிய காலத்தில் அவர்களுக்கு சமமாக ஆக முடியாது தான். ஆனால் மற்ற மாநிலத்தவருக்கு சமமாக ஏன் வளர முடியவில்லை? திராவிட இயக்கம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முடிந்துவிட்டது. அது தான் காரணம்.

 21. //தமிழ்நாட்டு மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பாரம்பரியமாக ஆதிக்கம் செய்த பிராமணர்களோடு போட்டி போட்டு குறுகிய காலத்தில் அவர்களுக்கு சமமாக ஆக முடியாது தான். ஆனால் மற்ற மாநிலத்தவருக்கு சமமாக ஏன் வளர முடியவில்லை? திராவிட இயக்கம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முடிந்துவிட்டது. அது தான் காரணம்//.

  மீண்டும் புல்லரிக்கிறது! உண்மையான பெரியார் தொண்டரின் ஆதங்கம் இது என எடுத்து கொள்ளலாமா, பெரிய சாமி அவர்களே? அல்லது இதுவும் ஒட்டி பேசி , வெட்டி பிரிக்கும் வேலையா? இப்போது திடீரென திறந்தவெளி கழிப்பிடத்திற்கு ஏன் செலகிறீர்கள்? 50%மானியத்துடன் தாழ்த்தப்பட்டோர் வீடுகளில் கழிப்பிடம் கட்டி கொள்ளவும், 240 ச அடிக்கு வீடு கட்டி கொள்ளவும் கலைஞர் ஆட்சி திட்டம் கொண்டு வந்ததே? அம்மா ஆட்சியில் அதை விஸ்தரித்து 400 ச அடி என்று சொன்னார்களே (செய்தார்களா?) பெரிய சாமி , பார்பனர் போல தேடி தேடி, ஏதாவது குறை சொல்வதற்காகவே முயற்சிக்கிரார்! ஆனால் , திராவிட இனத்தின் உண்மையான குறை ஒன்று உண்டு; அது ‘விபீஷன சரணாகதி’ தான் ! அதற்காக பெரியாரை கொச்சைப்படுத்த முடியுமா? அவர் தெலுங்கரானாலும், கன்னடரானாலும் , ஏன் பிராமணராகவே இருந்தாலும் அவர் ஒரு ‘மனிதநேய மாணிக்கம்’ ! அம்பேத்கர் மராட்டியர் என் பதனால் அவரின் ‘தலித்திய போராட்டம்’ கொச்சைபடுத்த முடியுமா? மனிதநேயமிக்க சமூக பார்வையாளர்கள், அது மார்க்ஸ் ஆனாலும், மார்கண்டேய கட்ஜு ஆனாலும் , அவரவரவர் கருத்தின் அடிப்படையில் போற்றுவோமாக!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க