பணம் யாருக்குப் பிடிக்குமோ அவர்களை எனக்கு பிடிக்காது, போருக்குத் தயாராகுங்கள் என்கிறார் ரஜினி. ரஜினிக்கும் கடவுள் நம்பிக்கை, எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை, அவருக்கும் தாடி, மோடிக்கும் தாடி என்கிறார் தமிழிசை. இந்த மார்க்கெட் போன கிழவனுக்கு வேறு புகலிடம் இல்லை என்பதையும் தமிழ்நாட்டில் மார்கெட் பிடிக்க முடியாத மோடிக்கு வேறு போக்கிடம் இல்லை என்பதையும் தெரிந்து வைத்திருக்கும் ஊடகங்கள் மாலை நேர திண்ணை அரட்டையில் இதை வைத்தே மசாலா அரைக்கின்றனர்.
மூன்று பேர்களில் யார் பெரிய திருடன்? வாக்களியுங்கள்!
ரஜினிக்கு மார்க்கெட் இல்லையா ? நீங்க எந்த ஊரில் இருக்கீங்க சார் ? கபாலி பற்றி உங்களை போன்ற ஆட்கள் தவறான தகவலை சொன்னால் படம் ஓடாமல் போய் விட்டதா ? உங்களை போன்றவர்களின் பொய்களை எல்லாம் தாண்டி கபாலி 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. மார்க்கெட் போன நடிகரின் படத்திற்கு இப்படி வசூல் ஆகும்மா ?
ஒன்று மட்டும் நிச்சயம் அடுத்த தேர்தலிலும் மோடி தான் இந்தியாவின் பிரதமராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
கபாலி வசூல் விவரத்தை ரஜினி சொல்லட்டும் மக.அடுத்த தேர்தல்….மின்னணுவாக்குப் பதிவு எந்திரத்தையும் நஜீம் ஜைதியையும் மறந்து விடாதீர்கள்.ஏணியை மறப்பது இந்துப் பண்பல்ல!
மூன்று பேரும் தான்…..
5 பைசாவுக்கு பெருமானமாகாத படங்களையும் (பாகுபலி, எந்திரன்) மோடியையும் விளம்பர ஏஜெண்டுகள் மாதிரி கொண்டாடுற ஊடகங்கள் தான் பெரிய திருடன்