தமிழகமெங்கம் மாட்டுக்கறி திருவிழா
மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்!
சென்னை
ஜூன் 1, மாலை சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல் பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பில் மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது. திரளான தோழர்களும் அப்பகுதி உழைக்கும் மக்களும் உற்சாகத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். முழக்கமிட்டவாறு மாட்டுக்கறியை வினியோகிக்க ஆரம்பித்தவுடன் காவல் துறை மாட்டுக்கறியை பறிக்க முயன்றது. அப்பகுதி மக்கள் இருங்க சார் எல்லாருக்கும் இருக்கு, அவசரப்படாதீங்க என அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் மக்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் கறியும் கையுமாக கைது செய்யப்பட்டு சேத்துப்பட்டு சமுதாய நலக் கூடத்தில் அடைக்கப்பட்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை, தொடர்புக்கு – 91768 01656.
_____
நெல்லை
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாகவும், மோதிப்பார் என்று ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு சவால் விட்டும் நெல்லையில் மக்கள் அதிகாரத்தால் 01 ஜூன் 2017 அன்று நடத்தப்பட்ட மாட்டுக்கறி திருவிழா !
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மாவட்டம்.
_____
கரூர்
மாட்டுக்கறிக்கு தடை விதித்த மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இந்தியா முழுவதும் பலத்த எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது. மாட்டுக் கறிக்கு தடை, மாடுகளை விற்க கட்டுப்பாடு போன்ற கெடுபிடியால் தமிழமே போராட்டக் களமாகியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி-யில் வளாகத்தில் மாட்டுக்கறி விழா நடத்தப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். அதில் பங்கேற்ற மாணவர் சூரஜ் என்பவர் (அம்பேத்கர் பொரியார் வாசகர் வட்ட உறுப்பினர்) தனியாக இருந்தபோது, ஐ.ஐ.டி வளாகத்துக்குள் RSS – ABVP ஆகிய மதவெறி அமைப்புகளைச் சேர்ந்த வட இந்திய மாணவ வெறியர்கள் கும்பலாக சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனை கண்டித்து ஐ.ஐ.டி -க்கு எதிரில் பொரியார் திராவிட கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஐ.ஐ.டி.யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது தமிழக காவல்துறையைச் சேர்ந்த காவலர், போராட்டத்தில் கலந்து கொண்ட பு.மா.இ.மு.வைச் சேர்ந்த மாணவி ஒருவரின் கையை முறித்துள்ளனர். மற்றும் பு.மா.இ.மு-வைச் சேர்ந்த மாணவரின் இடுப்பு எலும்பை அடித்து உடைத்துள்ளனர். இதனை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
மாட்டுக்கறிக்கு தடைவிதித்தற்கு எதிராக கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலத்தின் முதலமைச்சர்கள் மத்திய அரசை கண்டித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்திலோ பா.ஜ.க. -வின் பினாமியான எடப்பாடி தலைமையிலான ஆட்சி மாட்டுக்கறி பிரச்சனைக்கு எதிர்ப்போ மறுப்போ தெரிவிக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. பா.ஜ.க. தமிழிசை சௌந்தர்ராஜன்,எச். ராஜா, மற்றும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் போன்ற காவிக் கூட்டங்கள் மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தி வருகின்றன. இதற்கிடையில் RSS -ன் ஆசிபெற்ற ராஜஸ்தான், கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாட்டுக்கறி தடை உத்திரவிற்கு ஆதரவாகவும், மாட்டை வெட்டினால் ஆயுள்தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்றும் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்து வருகின்றனர்.
அரசாங்கம், நீதிமன்றம், காவல்துறை போன்றவை காவி கும்பலுக்கு பல்லக்கு தூக்கும் வேலையை செய்து வருகின்றனர். எனவே மாட்டுக்கறிக்கு விதித்துள்ள தடைஉத்தரவை திரும்ப பெறவேண்டும், ஐஐடி யில் உள்ள RSS – ABVP உள்ளிட்ட மதவாத அமைப்புகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
சூரஜ்ஜை தாக்கிய மணீஷ் உள்ளிட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஜுன்-01-2017 அன்று மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் மாட்டுக்கறி விழா போராட்டம் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக இன்று கரூரில் மக்கள் அதிகாரம் சார்பாக புதிய பேருந்து நிலையம் எதிரில் காலை 11.00 மணிக்கு மாட்டுக்கறியை தடுப்பது யார்?… மோடி அரசே மோதிப்பார்… கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கரூர், தொடர்புக்கு – 97913 01097
_____
விருத்தாச்சலம்
சென்னை ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 01.06.2017 அன்று விருத்தாச்சலத்தில் மாட்டுக்கறி திருவிழா நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
_____
மதுரை
கடந்த 01.06.2017 அன்று சென்னை ஐ.ஐ.டி மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மாடுகள் விற்பனையைத் தடை செய்ததைக் கண்டித்து ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
மதுரை.
_____
திருச்சி
மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! என திருச்சியில் 01.05.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது. இதில் திரளான மக்களும் தோழர்களும் கலந்து கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.
_____
தருமபுரி
சென்னை ஐ.ஐ.டி மாணவர் தாக்கப்படதைக் கண்டித்தும். மாடு விற்பனை மற்றும் மாட்டுக்கறி ஆகியவற்றின் மீதான தடை பற்றியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மக்கள் மத்தியில் நேற்று (01.06.2017) பிரச்சாரம் நடத்தப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி.
(ஏனைய ஊர்களில் நடந்த போராட்டச் செய்திகள் – படங்கள் திங்களன்று (5.6.2017) வெளியிடப்படும்)
இவர்கல் சொல்லும் இந்த மாட்டுகரிஉன்னும் பொராட்டத்தில் தமிலர்கல் யாரும் இல்லை என்பது தெலிவாகிரது. தமிலர்கலின் புனிதநூலான திருக்குரலில் தெலிவாக குரிப்பிடப்பட்டுல்லது புலால் உன்னக்கூடாது என்ரு. 20 குரலில் வல்லுவர் இத்னை வலியுரித்துல்லார்.
(எலுத்து பிலைக்குநான் பொருப்பில்லை- வினவு தலம் அப்படி உல்லது)
மு.நட்ராயனுக்கு அங்கிங்கெனாதபடி அத்தனை இடமும் ப்ற்றிக் கொண்டு எறிகிறது.பாவம் எதைஎதையெல்லாமோ சொல்லிப்பார்த்து கடைசியில் திருக்குறளையும் துணைக்கு வைத்துக்கொள்கிறார்.திருவள்ளுவர் சொல்கிற புலால் என்பது மாட்டுக்கறி மட்டும்தான் போல.அவருக்கு நெருக்கமான பிஜேபி அரசும் மாட்டுக்கறியை உண்ணக்கூடாது என்று வெளிப்படையாய் சொல்ல முடியவில்லையே..உலகில் அதிகப்படியான மாட்டுக்கறி ஏற்றுமதி நாடாக இந்தியா இந்த அரசாங்கத்திலும் கோலோச்சுவதற்க்கும் விளக்கம் சொல்ல முடியவில்லையே…ஆடு கோழி முட்டை மீன் புலால் உணவில் சேராதா என்பதற்க்கும் மு.நாட்ராயனிடம் பதில் இல்லையே…புலால் உணவை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கொள்கை இருந்தால் தெம்பும் தைரியமும் திராணியும் இருந்தால் நாட்ராயன் மணிகண்டன் ராமன் போன்றோர் அவர்களின் கொள்கை சகோதரர்களையும் திரட்டிக்கொண்டு அவர்களுக்கு இணககமான இந்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டியதுதானே..அஞ்சாநெஞ்சன் அம்பாத்தாறு இஞ்ச் எதையும் செய்யும் துணிவு உள்ளவர்தானே புலால் உணவு அனைத்தையும் தடை செய்து காட்டட்டுமே….கொஞ்சமும் நடைமுறைக்காகத துப்புகெட்ட கொள்கை கோட்பாடுகளை வைத்துக்கொண்டு ஏனய்யா இப்படி கேவலப்பட்டு அவமானப்பட்டு…இதில் வெட் க்கத்தை துடைத்துக்கொண்டு நக்கல் வேறு.
“(எலுத்து பிலைக்குநான் பொருப்பில்லை- வினவு தலம் அப்படி உல்லது)” ha ha ha….. May be you are new to VINAVU.