privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழகமெங்கும் விவசாயிகளிடம் நம்பிக்கையூட்டும் மக்கள் அதிகாரம் - படங்கள்

தமிழகமெங்கும் விவசாயிகளிடம் நம்பிக்கையூட்டும் மக்கள் அதிகாரம் – படங்கள்

-

விவசாயியை வாழவிடு ! விவசாயியின் அழிவு சமூகத்தின் பேரழிவு ! என்ற முழக்கத்தின் கீழ் வருகின்ற  ஆகஸ்ட் 5, 2017 அன்று தஞ்சையில் மக்கள் அதிகாரம் சார்பில் மாநாடு நடைபெறவுள்ளது. அதையொட்டி தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் தோழர்கள் தங்களது பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். அந்த பிரச்சார இயக்கத்தின் படங்கள் இங்கே இடம்பெறுகின்றன. விவசாயத்தை வாழவைக்க தஞ்சைக்கு திரண்டு வாரீர்…

மக்கள் அதிகாரம் தோழர்கள் புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகில். ஆக.5 சனி தஞ்சை, திருவள்ளுவர் திடலில் நடக்கும் விவசாயியை வாழவிடு மாநாட்டிற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்யும் படங்கள்

கும்மிடிபூண்டியில்…. விவசாயியை வாழவிடு மாநாட்டு பிரச்சாரம்…

மக்கள் அதிகாரம் சார்பில் புள்ளம்பாடியில் நடைபெற்ற மாநாட்டு விளக்கப் பொதுக் கூட்டம்!

தஞ்சை பேருந்து நிலையத்தில்…
மாநாடு பிரச்சார சுவரொட்டி.

விவசாயியை வாழவிடு மாநாட்டு அழைப்பிதழை திருப்பூர் பகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுப்பராயன் அவர்களிடம் மக்கள் அதிகாரம் தோழர்கள் அளிக்கின்றனர்.

விவசாயியை வாழவிடு ! மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்ட பிரச்சாரத்தின் போது உடுமலைப்பேட்டையில்…

விவசாயியை வாழவிடு மாநாட்டு அழைப்பிதழை முன்னாள் மேயர் செல்வராஜ் அவர்களிடம் மக்கள் அதிகாரம் தோழர்கள் அளிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள கிராமங்களில், மக்கள் அதிகாரம் தோழர்கள் “விவசாயிகளை வாழவிடு” என்ற இயக்கத்தை ஒட்டி, பிரச்சாரம் செய்த பொழுது…….”போன வருசத்துக்கு முந்தின வருசம் நெல்லு வெள்ளாமை செய்த பொழுது.. 180 மூட்டை எடுத்தேன். ஒரு மூடை ஆயிரம் ரூபாய்க்கு தான் விலை போனது. பெருச எதுவும் மிஞ்சல! விவசாயியின் நேரடி குமுறல்.

போன வருசம் வீட்டுல உள்ள நகையை அடகு வைச்சு, என் சொந்த நிலத்திலையும், குத்தகைக்கு நிலம் எடுத்தும் விவசாயம் பண்ணேன். விவசாய கூலி வேலை செய்ற பெண்களுக்கு 350 கூலியும், ஆண்கள் 500 கூலியும் கொடுக்கமுடியல! ரவ்வும் பகலுமா நிலத்தில குடும்பமே உழைச்சோம். வர்தா புயல் எல்லாத்தையும் நாசம் பண்ணிருச்சு! மூடை ஆயிரத்து நானூறு விலை போனது! விவசாயம் செஞ்சததுக்கு கடன் தான் பலனா மிஞ்சுச்சு!

இனி குத்தைக்கு நிலம் எடுத்து விவசாயம் பண்ணக்கூடாதுன்னு வீட்டில் ஒரே சண்டை. இப்ப என் நிலத்துல மட்டும் விவசாயம் பண்றேன். மிச்ச நேரத்துல கூலி வேலைக்கு போறேன்.

சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே அவர் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டியது!

கம்பம் சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரம்…

விவசாயியை வாழவிடு!
விவசாயியின் அழிவு, சமூகத்தின் பேரழிவு ! கரூர் சுவரெழுத்து

திருப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரம்………

விவசாயின் பிரச்சனை, எங்களுடைய பிரச்சனை —— போக்குவரத்து தொழிலாளர்கள்.

சென்னை சுற்றியுள்ள கிராமங்கள்…

 

 

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் விவசாயியை வாழவிடு மாநாட்டின் சுவர் விளம்பரம்.

திருச்சியில்……மாநாடு பிரச்சாரம்
லால்குடி விவசாயி

அப்பா, அம்மா இல்லாத ஒருவரை நாற்பது வருடங்களுக்கு முன்னாடி களியில் வெல்லம் போட்டு, நெய் ஊத்தி இந்தக் கையாள உருட்டி கொடுத்து வளத்தேன், ஆனா இன்னைக்கி கம்பையும் காண களியவும் கான இப்போ ரேசன் அரிசிய தின்னுகிட்டு கிடக்கிறோம் இதான் எங்க நிலைமை?

மக்கள் அதிகாரம் தோழர்கள் சென்னை மின்சார ரயிலில் ஆக.5 சனி தஞ்சை, திருவள்ளுவர் திடலில் நடக்கும் விவசாயிகளை வாழவிடு மாநாட்டிற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்யும் படங்கள்

மக்கள் அதிகாரம் தோழர்கள் சென்னை போரூர் சிக்னலில் ஆக.5 சனி தஞ்சை, திருவள்ளுவர் திடலில் நடக்கும் விவசாயிகளை வாழவிடு மாநாட்டிற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்யும் படங்கள்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
_______________________

இந்த புகைப்படப்பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா!
விவசாயிகளது போராட்டத்தின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி