ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆசியளிக்கும் தமிழ் ஃபேஸ்புக் ! மகிழ்ச்சி !

18
5

ரஜினி எனும் காரியவாதி, சந்தர்ப்பவாதி, பார்ப்பனிய மதவாதி, கோமாளி எல்லாம் அரசியல் பேசுவதும், அதை கறிக்கடையை சுற்றி வரும் கால பைரவர்கள் போல ஊடகங்கள் நாக்கைத் தொங்கப் போட்டு சுற்றி வருவதிலும் இருந்து தெரிகிறது, இந்த ‘சிஸ்டம் சரியில்லை’ என்று! தமிழ் ஃபேஸ்புக்கில் மக்கள் கருத்துக்கள் சில….

Arul Ezhilan

ஜெயலலிதா என்ற நபர் உயிரோடு இருந்தவரை ரஜினி பெட்டிப் பாம்பாக அடங்கி அஞ்சி கிடந்தார்.அருகில் இருந்த கோபாலபுரமும் கருணாநிதியும் இல்லை என்றால் அப்படியே நசுக்கி கஞ்சா கேஸ் போட்டிருப்பார் ஜெயலலிதா..!

____________________

Villavan Ramadoss

மண்டபத்துலயும் சிஸ்டம் சரியில்லை. ஒரிஜினல் ஓனர் லதா பாட்டியோட ஒரு போருக்கு தயாராகுங்க தலைவரே….

//உங்களுக்கெல்லாம் கெடா வெட்டி கறிசோறு போடணும்ணு எனக்கு ஆசைதான் ஆனா இங்க ராகவேந்திரா மண்டபத்துல சைவ உணவுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு – ரஜினிகாந்த்.//

____________________

Aazhi Senthil Nathan

இன்றைக்கு நியூஸ் 18 விவாதத்தில், ரஜினி பேசிய காட்சி முடிந்தவுடன், குணசேகரன் முதலில் என்னிடம் தான் கேட்டு விவாதத்தைத் தொடங்கினார். “சங் பரிவார் என்கிற குடும்பத்தில் மற்றுமொரு அமைப்பாகவே அவரது அமைப்பு இருக்கும்” என்று கூறினேன். இதுதான் என் முதல் கருத்து. மாலனும் ஜி.சி.சேகரும் அடுத்தடுத்து அப்படி இல்லை என்று சொல்வதற்கான வேலையில் இறங்கினார்கள்.

ஐயோ பாவம், அவர்கள். தமிழிசையும் அர்ஜூன் சம்பத்தும் நாராயணனும் உடனடியாக என் உதவிக்கு வந்தார்கள். நான் சொன்னக் கருத்தை உறுதிசெய்தார்கள். ஆர் கே நகர் தோல்விக்குப் பிறகு தங்களுக்கு பலம் தேவைப்படுகிறது, அந்த பலத்தை ரஜினி அளிப்பார் என தமிழிசை நம்புகிறார். இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் ரஜினி பின்னால் செல்லும் என்கிறார் சம்பத்.

ரைட்டு. இனிமேல் ரஜினியை பாஜகவின் மறைமுக ஆதரவைப் பெற்றவர். பாஜகவின் பினாமி என்றெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக ரஜினியின் அமைப்பை இந்துத்துவ அமைப்பு என்று சொல்லி வேலையைச் செய்யவேண்டியதுதான்.

2018 இல் மேலும் ஒரு முனையில் யுத்தம் வெடிக்கிறது. தட்ஸ் ஆல். பாத்துக்கலாம்.

ஆனால் ரஜினியின் இந்த நகர்வு நமக்கெல்லாம் நிறைய வேலையைக் கொடுத்திருக்கிறது. அவருக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறதோ அந்த அளவுக்கு அது மக்களின் தோல்வியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் அத்தனை நியாயஸ்தர்களும் தமிழருவி மணியன்களும் இப்போது ரஜினி பக்கம் வருவார்கள். மாலன்களும் சேகர்களும் என மிகப்பெரிய ரஜினி மீடியா படை இன்றே உருவாகிவிட்டது. மீடியாவுக்கு 2018 முழுமைக்குமான பிரேக்கிங் நியூஸ் கிடைத்துவிட்டது. மீம்ஸ் இன்டஸ்ட்ரியின் வளர்ச்சி பல மடங்காக இருக்கும்.

நமக்குத்தான் வேலை அதிகம். மீம்ஸோடு முடங்கிவிடக்கூடாது, விவாதமேடைகளோடு நின்றுவிடக்கூடாது. செய்வோம். வச்சு செய்வோம்.

___________________

Deepa Lakshmi

காசு சேரும் வரை கம்யூனிசம்,
கல்யாணமாகும் வரை நாத்திகம் பெண்ணியம்,
அரசியல் கைகூடும் வரை சமூகநீதி,
சினிமாவில் வெற்றிப்படியாய் மட்டுமே இலக்கியப் பணி,
இப்படிப் பல ஆண்டுகளாய்த் தங்களின் ஆளுமையை நிறுவப் பயன்பட்ட கொள்கைகளை அவரவர் தனிப்பட்ட நியாயங்களுக்காகக் காற்றில் பறக்க விடும்போது…
நாடி தளர்ந்த பின் ‘ஆன்மிக அரசியல்’ பண்ண வரும் ரஜினிக்கு மட்டும் வரவேற்பு குறைந்து விடுமா என்ன?

🙂

Personal integrity matters, whatever you choose to blabber.

_____________

வாசுகி பாஸ்கர்

இதில் ரஜினி சொல்லும் ஆன்மீக அரசியல் எப்படியானதாக இருக்குமென்கிற புனைவுகளை அவர்தம் ரசிகர்கள் எத்தனை விதமாய் எடுத்துரைத்தாலும், ரஜினியின் பால் தாக்ரே வுடனான தொடர்பு, சிவ சேனா, பாபா, வட நாட்டு சாமியார்கள், பாஜக தொடர்பு என்று இவையெல்லாம் கண்முன் வந்து போவது மிக யதார்த்தமான ஒன்றே.” ரஜினி என்கிற புனித மனிதனை இப்படியாக சந்தேகப்படுவதா?” என்று வாதம் வைக்குமளவு எந்தவிதமான தெளிவான வரலாறும் கடந்த காலத்தில் இல்லை. ரஜினி தான் சார்ந்த ஹிந்து மதத்தின் ஒரு தீவிர பக்தியாளர் என்பதாக தான் அவர் செயற்பாடுகள் நமக்கு சொல்கிறது. ஒருவர் மற்ற மதங்களை பற்றி எதுவும் அவதூறாக சொல்ல வில்லை என்பதற்காகவே அதை எல்லோருக்குமானதாக எடுத்துக்கொள்ள இயலாது.

மதங்களையும், கடவுளர்களையும், எந்த வடிவத்தில் உள்ளே கொண்டு வந்தாலும் அது ஆதிக்கம் செலுத்தும் என்பதால் தான் பெரியார் கடவுளை சமூக சீர்திருத்தத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். உலகம் முழுக்க மக்களாட்சிக்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டபோது மதங்களின் தலையீடு இல்லாதிருப்பதே எல்லோருக்குமான அரசியல் சட்ட வடிவமாக முன் வைக்கப்பட்டது. அதுவே மதச்சார்பற்ற தன்மை என்று அங்கீகரிக்கப்பட்டது.

ஆகையால் ரஜினி; ஹிந்து மதத்தின் பிரதிநிதியாக இருந்துகொண்டு சாதி, மதமில்லாத ஆன்மீக அரசியல் என்று சொன்னாலும், ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் எந்த வகையிலும் நேரடி தொடர்பு இருக்கக்கூடாது என்பது தான் மதசார்பற்ற நிலை. மத ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டி, ஒரு அரசு அலுவலுகத்தில் எல்லா மத விழாக்களையும் கொண்டாடுவதை விட, எதையும் கொண்டாட கூடாது என்று தடை விதிப்பதே, அந்த இடம் எல்லோருக்குமான இடமாக கருதப்படும். நாத்திகர்கள், ஆத்திகர்கள், பன் சமூகத்தவர் என்று வாழும் ஒரு தேசத்தில், ஆன்மீக குறுக்கீடு இல்லாததே எல்லோருக்குமானதாக நிலைப்பாடாக இருக்க முடியும். பக்தி என்பது கட்டில் சமாச்சாரங்களை விட தனியறையில் இருப்பதே நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை சேர்ப்பதாக இருக்கும்.

__________________

Arul Ezhilan

ரஜினி 25 -இது ரஜினியோட 25 ஆண்டுகால சினிமா பணியை கொண்டாடும் விதமாக தலைப்பு வைத்து நடத்தப்பட்ட விழா. இதை நடத்தியவர் லதா ரஜினிகாந்த். மொத்தமாக அந்த விழாவை வைத்து ரசிகர்களிடம் இருந்து வசூலித்தது அளவில்லா தொகை. ரஜினி தொப்பு, ரஜினி கீ செயின், ரஜினி படம் என ஒவ்வொன்றிலும் பணம் பார்த்தார் லதா ரஜினிகாந்த்.

__________________________

Raja Rajendran

ஆன்மீக அரசியல் என்றால் என்ன ?

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடைபெற்ற சிலை ஆய்வின்போது, பழைய சோமாஸ்கந்தர் சிலையிலும் தங்கம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

பழைய சிலையிலும்…. என்றால் என்ன அர்த்தம் ?

அதாகப்பட்டது மகா ஜனங்களே, புதிய சிலை செய்யப்போவதாய்ச் சொல்லி சுமார் 100 கிலோ (ஹல்லோவ் 100 கிராம் இல்ல) தங்கத்தை வசூலித்துவிட்டு ( என்று வைத்தால் பக்தாள்களிடம் பெறப்படும் நன்கொடை ஒய் ) புதிய சிலையில் அட்லீஸ்ட் சேர்க்க வேண்டிய 5 . 75 கிலோ தங்கத்தைக் கூடச் சேர்க்காமல் அமுக்கிட்டன்.

நன்னா கவனிக்கோணும். யாராரெல்லாம் இதற்கு உடந்தை என்று சிலை கடத்தல் தடுப்பு போலிசார் 9 பேரை எஃப் ஐ ஆரில் சேர்த்திருந்தும், ஒரே ஒரு கைது நடவடிக்கை கூட இல்லை. ஏனாம் ? அதாம்லே அரசியல், ஆன்மீக அரசியல்.

சரி. டுபாக்கூருங்க புது சிலையிலத்தான் தங்கத்தை அடிச்சிருக்கன், நம் முன்னோர்கள் ஒன்றும் மொடா முழுங்கிகள் கிடையாதே ? போக, பழைய சிலையில் 87 கிலோ தங்கம் நிச்சயம் கலந்திருக்காக்கும் என ஸ்தபதி அரசுக்குச் சொல்லியிருக்க, ச்சுரண்டிப் பாத்தா ஒரு கிராம், யெஸ் மகாஜனங்களே ஒரே ஒரு சொட்டு கிராம் தங்கம் இல்லை.

இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தங்கம் தோராயமா 25 – 26 லட்சம்ன்னு வச்சா, 87 கிலோவுக்கு என்ன வரும் ? நேக்கு அவ்ளவா கணக்கு வராது, நான் குமாரசாமி ஸ்டூடண்ட். நீங்க சொல்லுங்கோ.

2001-ல முகமது அலின்னு ஒரு ஸ்ட்ரிக்ட் போலிஸ் ஆப்பிஸர். அடையாறு மேம்பாலத்து மேல நின்னு தூணச் சுரண்டிப் பாத்துட்டு, சிமெண்ட்ல மண் ஜாஸ்தின்னு கருணாநிதிய நடு ராத்திரி போய்க் கைது பண்ணா.

இங்க என்னடான்னா குவிண்டால் கணக்குல தங்கத்தை அடிச்சும், இன்னும் ஆராய்ஞ்சுண்டு கிடக்கா. ஏன் ?

சிமெண்ட் மண் எனில் அது அரசியல். சாமி சிலை அவருக்குத் தங்கம்ன்னு மனுஷா புடுங்கி அமுக்கிண்டா அது ஆன்மீக அரசியல்

______________________

Thiru Yo

முன்பெல்லாம் கட்சி துவங்க கொள்கை, அடிமட்டத்தில் அணிதிரட்டல், கிளைகள் அமைத்தல், போராட்டங்கள், பிரச்சனைகளில் மக்களோடு நிற்றல் அடிப்படை.

இப்போது ஆன்மீக அரசியல் கட்சிகளுக்கு சந்தை ஆய்வு, நிகழ்ச்சி ஏற்பாடு மேலாண்மை, திறமையான நேரடி ஒளிப்பதிவு நிறுவனங்கள், பறக்கிற படப்பிடிப்புக் கருவிகள், அலைபேசி செயலிகள், நாக்பூர் கும்பலின் திட்டம், மயிலாப்பூர் மாஃபியா கும்பலின் ஆதரவு இவை இருந்தால் போதும். போராட்டங்களை, கொள்கைகளை எதிர்ப்பதையும், நிராகரிப்பதையும் வெளிப்படையாக அறிவித்து முடிந்தால் காக்கா பிக்காவென காக்கா குசுபோல சிரிக்க வேண்டும். ஊடகங்களில் நேரடியாக சென்று மாட்டாமல் ஏற்கனவே எழுதி தரப்பட்ட திரைக்கதைகளை மேடைகளில் ஒப்பித்து தப்பித்து ஓடல், மயிலாப்பூர் மாஃபியாக்கள் எழுதித் தருவதை அறிக்கையாக வெளியிட்டல், கண்ட மடங்களில் சாமியார் கும்பல்களின் காலடியில் விழுதல் இவற்றை தொடர வேண்டும். தயிர்வடை தின்று தூக்கத்தில் ஏப்பம் விடுவதைப் போல அவ்வப்போது உளற வேண்டும் அவை தத்துவமாக்கப்படும். ஊடகங்கள் தானாக ஒளிபரப்ப வந்துவிடும்.

___________________

Arul Ezhilan

ரஜினியை எதிர்க்கிறேன் அவர் கன்னடர் என்பதால் அல்ல…
பெரியாரை நேசிக்கிறேன் கிழவன் பலிஜா நாயுடு என்பதால் அல்ல..
சீனிவாசராவை ஏற்கிறேன் அவர் கன்னடர் என்பதால் அல்ல..
காமராஜரை நேசிப்பது அவர் தமிழர் என்பதாலும் அல்ல..
காரணங்கள்தான் முக்கியமே தவிற இனமோ, மொழியோ எனக்கு முக்கியமான ஒன்றல்ல..

___________________

ஜோதிஜி திருப்பூர்

ஆன்மீக அரசியல் என்றால் என்ன?

தீபம் காட்டும் அய்யருக்கு நூறு ரூபாய் போட்டு விட்டு கோவிலை விட்டு வெளியே வரும் போது அங்கே கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து நாடு முழுக்க சோம்பேறிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று நாட்டைப் பற்றி கவலைப்படுவது.

___________________

Ravi Kumar

திரு ரஜினி இன்று ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று ஆசி பெற்றபோது அவரை அறிமுகம் செய்து கடைசியில் சுவாமி சொல்வதைக் கவனியுங்கள்: ” அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்னு ஒப்பனா சொல்லிருக்கார். So called secularism இல்ல”

இதுதான் ரஜினி சொல்லும் மதச்சார்பில்லாத ஆன்மீகம்

______________________

Thiru Yo

அறிவித்த சூட்டோடு ராமகிருஷ்ண மடத்தில் சாமியார்களிடம் சரணடைவு. ராமகிருஷ்ண மடம் எதை வளர்க்கிறது என்பதை சொல்ல அவசியமில்லை.

சங்கிகளுக்கு களம் அமைக்கவே பெரியார் நீக்கம், திராவிட இயக்க நீக்கம் ஒரு பிரச்சாரமாக முன்வைக்கப்படுகிறது. அதன் ஒரு பரப்புரை தான் தமிழகம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பின்தங்கியதாக, ஐம்பது ஆண்டு காலத்தில் தமிழ்நாடு கெட்டுப்போனதாக சொல்லப்படுகிற போலி வாதங்கள். அதை செல்பவர்கள் ராஜாஜியின் ஆட்சி பற்றியோ, காங்கிரஸ் காலத்தில் (காமராசர்) தவிர மற்ற ஆட்சிகளில் சில ஆதிக்கச்சாதிகள் தவிர மற்றவர் நிலை பற்றி பேசுவதில்லை.

சங்பரிவாரக் கும்பல் ஏறி வருகிற பெட்டிக்குதிரை ரஜினி. பாஜக கும்பலை சுமந்து வருகிற ரஜினியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய முதுகெலும்பற்ற நடிகர்களை நம்புவது ஆபத்தையும், அழிவையுமே ஏற்படுத்தும்.

_________

_____________

Arumugam Kr

எதுக்காகவும் போராட வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
எதைப்பத்தியும் கருத்துச் சொல்ல வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
யாரையும் விமரிசிக்க வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
சண்டைக் காட்சிகள்ல வேத்தாளு (டூப்பு) போட்டு நடிச்ச பழக்கம் இன்னும் போகலையோ?
அது சரிங்கிறேன்! எல்லாத்துக்கும் வேற ஆளிருக்குங்கையில, ஆள்றதுக்கு மட்டும் வேற ஆளில்லாமயா போயிரும்?

_____________________

Sukirtha Rani

சாதி அரசியல் கொடுமைகளுக்குச் சற்றும் குறைவில்லாதது ஆன்மீக அரசியல். அது காவி பயங்கரவாதத்திற்கே இட்டுச் செல்லும்.

__________________

Yuva Krishna

மதவெறியை எதிர்ப்பது உங்கள் கொள்கையெனில், இயல்பாகவே ரஜினியை எதிர்த்துதான் ஆகவேண்டும். பார்ப்பனீயம் எடுத்திருக்கும் பரிதாபமான ஆயுதம் அவர்.

_______________

Govi Lenin

திருக்குறளை கங்கையில் கரைத்து விட்டு, பகவத்கீதையை தமிழ்நாட்டில் விதைப்பதற்கு பெயர், ஆன்மிக அரசியல்.

_______________

Arul Ezhilan

ராமகிருஷ்ணா மடத்தின் தலைவரை சந்திக்கிறார் ரஜினி. ஒரு சாமியார் சொல்கிறார் //அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்ணு சொல்லியிருக்கிறார். இந்த சோ கால்ட் செக்குலரிடம் இல்ல// என்கிறார் . ரஜினி தலையாட்டி அதை ஆமோதிக்கிறார். திராவிட இயக்கத்தின் ஆன்மாவே மதச்சார்பின்மைதான். ரஜினியின் ஆன்மீக அரசியலில் மதச்சார்புதான் இருக்கும் எனும் நிலையில் கருணாநிதியிடம் அந்த அரசியலுக்கு ஆசி வாங்கச் செல்வது எவளவு பெரிய மோசடி?

//புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வேண்டும், அப்படியே உடல் நலம் விசாரிக்கணும் என்றுதான் ரஜினி தரப்பில் இருந்து கலைஞர் மகள் செல்வியிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஸ்டாலினும் அங்கு சென்றார். ஆனால் ரஜினி திடீரென அரசியலுக்கு வருகிறேன் ஆசி வேண்டும் என்று சொல்ல அது கலைஞருக்கு புரியவில்லை. அவர் யார் கை கொடுத்தாலும் கொடுப்பார். கை கொடுத்தார் அதை ரஜினி ஆசியாக எடுத்துக் கொண்டு ஊடகங்களிடம் பொய் சொல்ல கடைசியில் வாங்கிக் கட்டும் சூழல் உருவானது.

 

 

18 மறுமொழிகள்

 1. ரஜினிக்கு மட்டுமல்ல, RSSன் அப்பட்டமான மதவெறி பதிவுகளுக்கும் பெரும்பான்மை மக்கள் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள்.

 2. பாவம் வினவு எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் கலங்கி போய் இருக்கிறது… நீங்க எவ்வுளவு தான் முயற்சி செய்தாலும் அடுத்த தமிழக தேர்தலில் ரஜினி வெற்றி பெறுவது உறுதி, ரஜினி தமிழகத்தின் முதல்வர் ஆவது உறுதி.

 3. சினிமாவில் எனக்கு பிடித்த hero ரஜினி.
  அரசியலில் எனக்கு பிடித்த கோமாளி ரஜினி

 4. நீங்க வேற சும்மா ஒரு அரசியல் ஸ்டண்ட் … எண்ணூறு காேடிகளை வெட்டியா செலவு பண்ணி எடுக்கிற படம் எந்திரன்2.0 வசூல் மகாபலி மிஞ்ச வேண்டும் எனறால் 1500 காேடிகளை தாண்டனும் .. அதில் இவருக்கு முப்பது சதவீதம் என்றால் 450 காேடி கிடைக்கும் அதற்கு ரசிகர்களின்ஆதரவு அவசியம்.. ஒப்புக்கு இருக்கிற மன்றங்களை ஒருங்கிணைக்க ஆன்மீக அரசியல் என்கிற கப்ஸா… மன்ற ரசிகர்கள் காட்சி என்று அதிக விலைக்கு டிககட் விற்றால்தான் இவருக்கு லாபம் …!

  இவருக்கு ஒருபைசா செலவுவைக்காமல் அத்தனையும் ஏற்று கட்சிக்கு செலவு பின்னால் உள்ள மதவாதிகளும் ..கார்பரேட்டுகளும் தேசிய மதவாத கட்சியும் வரிந்துக்கட்டி ரெடியாக இருக்க … இவர் நாேகாமல் நுங்கு சாப்பிட்டு கல்லாவை நிரப்பிக்க ஒரு தில்லாலங்கடிவேலை … அதனால் பல ஆண்டுகள் தள்ளி வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாேட்டி என்று காது குத்துகிறார் …

  தேர்தல் செலவு வெற்றி.. தாேல்வி என்பதெல்லாம் இவரை நம்புகிற அல்லக்கைகளுக்குதான் … இவருக்கு லாபம் வந்தால் பாேதும் மற்றபடி மக்கள் நலன் என்பது …. சும்மா டயலாக் மட்டுமே …!!!

 5. தலீவா உங்களுக்கே உடம்பு முழுக்க பிரச்சினை.”சிக்கனமா” சிங்கப்பூர் போயி திரும்பி வந்திருக்கீங்க.தொழிலார்கள், மாணவர்கள், வேளாண்குடிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், நெசவாளர்கள்,போக்குவரத்து ஊழியர்கள், பெண்கள்,இப்படி ஒட்டு மொத்த தேசமே செம காண்டுல இருக்குகாங்க.ஊடக மாமாக்கள் வேற உங்கள உசுப்பி விட்டுட்டாங்க.இந்த காவிக்காரங்க இருக்காங்களே சும்மா இறங்குங்க இது “தாமரை” குளம்தான்னு சொன்னா நீங்க யோசிக்க வேணாமா?இப்படி நம்பி வந்து தொபுக்கடீர்னு தண்ணி இல்லாத கிணத்துல குதிச்சுட்டீங்களே! உள்ளேயே நல்லா சம்மணம் போட்டு உட்கார்ந்து கையில பாபா முத்திரையை வச்சிக்கிட்டு கண்ண மூடி “பாருங்க”. மக்கள் “போருக்குத்தான்” தயாராகிட்டு இருக்காங்க. ஒருத்தன் வரமாட்டான் உங்களை காப்பாத்த.வயசானாலும் உங்க இளமையும் ஸ்டைலும் அப்படியேதான் இருக்கு.ஆனாலும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க.”அடி” தாங்குவீங்களா நீங்க?

 6. ஏற்கெனவே இருக்கும் சிஸ்ட்த்தை வைத்துகொண்டு ஊழல் ஒழிப்பு எனப் பேசுவதெல்லாம் போதை தெளிந்த பின் பேசுபவனின் பிதற்றல் போன்றது. இது கட்டுரையாளருக்கும் தெரியாத ஒன்றல்ல. சோ –தாக்கரே-போன்ற மதவெறியர்களுடனான ரஜினியின் கள்ளக்காதல் தமிழக மக்கள் அறியாத்தல்ல. சொல்லப்போனால் தினகரனின் வெற்றி இந்துத்துவாவாதிகளை மிகுதியாகவே சினம் கொள்ளச் செய்திருக்கிறது. ரஜினியின் அரசியல் பிரவேசம், இடையில் மவுனியாக இருந்துவிட்டு ஆர் கே நகர் மக்களை கொச்சைப்படுத்திய கமலின் அறிக்கை, மற்றும் தொடர்ந்து வாந்தியெடுக்கும் பாஜகவினரின் அறிக்கைகள் இதை தெளிவாக உணர்த்துகிறது.இந்துத்துவா கும்பல் என்னதான் தமிழக மக்களை சுற்றிவளைத்து அடித்தாலும் தமிழக மக்கள் அசரப்போவதில்லை. தமிழக மக்களுக்கென்று நீண்ட நெடிய போராட்ட வரலாறு இருக்கின்றது. ரஜினி போன்ற மொன்னைகளை தூக்கி அடித்துவிடுவார்கள் ஏற்கெனவே விஜயகாந்தை அடிக்கவில்லையா!

  • Vajaykanth entered in to tamilnadu politics and become mental. Now the mylapore mafia screwmoorty put a real mental super star into politics so he will be cured soon. EPS – OPS not able to satisfy screwmoorthy because of their impotency so he satisfy himself with truly impotent kamal boy.

 7. வசந்து
  உண்மை, இந்த கும்பலை பணத்தை கொடுத்தேனும் outsmart செய்த தினகரனை பாராட்டமல் இருக்க முடியவில்லை, அவர் அதிமுக என்னும் எனும் கொள்ளைகூடத்தை மேலும் காவி பிடிக்குள் செல்லவிடாமல் தடுத்தாலே பெரிய சேவை அது. ஆம் தமிழக மக்களை சுற்றி ஒரு காவி மாலை பின்னபடுகிறது. விஜயகாந்தாவது ஊடகவிபசாரிகளை அவ்வப்போது மிரட்டி சிரிப்பு வேடிக்கை காட்டிவந்தார், அவர் இறுதிவரை காமிடி பீசாகவே இருந்துவிட்ட்டார், ஆனால் ரஜினியோ திரிசங்கு நரி, இவருக்குதமிழக மக்கள் கொடுக்கும் அடி அனைத்து காவிகள் மேலும் இறங்கி எழுந்திருக்க முடியாத இடியாக இறங்க வேண்டும்.

  • பாஜக வை சேர்ந்த எஸ்.வி.சேகர் முதல் பெரும்பான்மை மக்களும் வியந்து பேசுவது தினகரனின் தைரியமான பேச்சைத்தான்.அரசியல்வாதிகளை மீம்ஸ் போட்டுத்தாக்கும் இளைஞர்கள் கூட தினகரனின் பேச்சால் ஒரு நிமிடம் அசந்துதான் போகின்றனர்.
   சூப்பர் ஸ்டார் ரஜினியோ, வடிவேலு பாணியில் வலிக்கும்,வேணா,அழுதுறுவேன்,என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.

 8. அது என்னங்க சினிமா காரன் அரசியலுக்கு வரக்கூடாதுங்கிறது???
  மற்றவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே
  உரிமை ரஜினிக்கும் உண்டு.

  அவரது அரசியல் கொள்கையையோ, நடவடிக்கையையோ விமர்சிக்கலாமே தவிர
  அவரை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை
  கிடையாது.
  ஊழல் அற்ற லஞ்ச லாவண்யம் அற்ற வெளிப்படை நிர்வாகம் தான், மனித புனிதர் ரஜினியோட ஆட்சிக்கொள்கை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க